அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/4/13

Egg Stuffed Bread Bun.

சிக்கன் பன் மீன் பன்வரிசையில் முட்டை பன் :))

                                                                               
பன் உள்ளே வைக்க கலவை செய்துகொள்ளவும் 
                                                                   
இந்த முட்டை ரெசிப்பி எங்கள் தோழி கிரிஜா 
எனக்கு முன்பு மெயிலில் அனுப்பியது 
இதே முறைதான் சிக்கன் சப்பாத்தி ரோலிலும் செய்தது தேவையான பொருட்கள் ..... வேக வைத்த முட்டை ....இரண்டு 
வேக வைத்த ...உருளைகிழங்கு ...இரண்டு 

தாளிக்க >>
மெலிதாக நறுக்கிய வெங்காயம் ..மீடியம் அளவு ......ஒன்று 
தக்காளி பேஸ்ட்    ...................     இரண்டு ஸ்பூன் ..
பச்சை மிளகாய் ..விதை நீக்கி இரண்டாக நறுக்கியது.... இரண்டு 
இஞ்சி பூண்டு விழுது ..........   ஒன்றரை தேக்கரண்டி 
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லிதழை 
.சிறிதாக நறுக்கியது ........  சிறிதளவு 
சிக்கன் மசாலா தூள் .....      ஒன்றரை  தேக்கரண்டி 
எண்ணெய் ...........................ஒரு ஸ்பூன்
உப்பு ....தேவையான அளவு 


அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி 
சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் 
ஒன்றாக மிதமான சூட்டில் வதக்கவும் .

எல்லாம் வதங்கி வெந்த நிலை வரும்போது 
முட்டைகளை பாதியாக வெட்டி மற்றும் வேக வைத்த 
கிழங்கையும்  மசாலாவுடன் சேர்க்கவும் .
தேவையானால் நீர் சிறிது சேர்க்கவும் 
நான் சேர்க்கவில்லை .
வெந்த கிழங்கு சேர்ப்பதால் நன்றாக இருக்கும் 
சிறிது நேரம் தட்டு போட்டு மூடவும் ஐந்து நிமிடம் 
பின்பு எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்து 
விடவும் .
இப்போது பன் உள்ளே வைக்க கலவை தயார் 

இப்படி திக்காக இருக்கும் .

                                                                             

என் மகள் தான் stuff செய்தா ,படம் எடுப்பதற்குள் 
கரண்டி போட்டு கொஞ்சம் 
விளையாடியதால் டிஷ் ஓரமெல்லாம் பட்டுவிட்டது :))
                                                             
சுட சுட தயாரான ரொட்டிபன் :))
                                                                           

நான் ஈஸ்ட் சேர்த்த ப்ரெட் மாவில்தான் செய்தேன் .

ஒன்றரை மணிநேரம் பிசைந்து வைத்தமாவு 
                                                                               
  வட்டமான பன் வடிவிலும் செய்யலாம் இப்படி ,

                                                                                  

                                     அடிபாகம் தட்டையாகஉருட்டியபின் 
அதில் முட்டை கலவை வைத்து அதன் மேல் அதே வடிவில் மூடி 
வைத்து ..மேலும் பத்து நிமிடம் கழித்து oven இல் வைத்து பேக் 
செய்யவேண்டும் .

அடுத்த ரெசிப்பி விரைவில் வெளி வரும் :)))

29 comments:

 1. இது ரொம்ப புதுசா இருக்கு..... நிச்சயம் சுவையாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க faiza ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..இந்த stuffing சப்பாத்தி ரோல் மற்றும் இட்லி தோசைக்கும் சைட் டிஷ் ஆகசாப்பிடலாம்

   Delete
 2. Nice buns angel Akka! I like the shape Sharon has made! :)

  But personally I didn't like egg-potato combo! But I like egg buns/puffs & potato stuffed buns/puffs! ;)

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி ...எங்க வீட்டில் நான் முட்டை சாப்பிடுவதில்லை அதனால கிழங்கை மட்டும் எடுத்து போட்டு stuff
   செய்வேன் அதான் டூ இன் ஒன் :))))

   Delete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .மகி எனக்கு ச்வீட் பன் செய்ய ஆசை பாப்போம் உங்க ரெசிப்பி பார்த்து விரைவில் செய்யணும்

   Delete
 3. அருமையா இருக்கு ஏஜ்சலின்.. ஆனா பொறுமை வேணும் இதை செய்ய..:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராதா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .கொஞ்சம் வேலை அதிகம்தான் ஒரே நேரம் மூன்று stuffing செய்து வைத்தும் பன் செய்யலாம்

   Delete
 4. ஆஹா..அருமையாக இருக்கு ஏஞ்சலின்.குட்டிஸுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸாதிகா ..இப்ப மெட்ராசிலும் ரெடிமேட் ப்ரெட் மாவு கிடைக்கும் என்று நினைக்கிறேன் செய்து பாருங்க .
   குட்டீசுக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் அவங்க கைக்கு கொடுத்தா வித விதமா செய்வாங்க:))

   Delete
 5. Wow...romba nalla irukku.....feeling like eating it now....:-)

  ReplyDelete
 6. ஆஹா.. சூப்பர் கலக்கல்.. அனைத்து பன்களிலும்(நீிங்க செய்தது) இதுதான் நேக்கு அதிகம் பிடிச்சிருக்கு... ஆனா மீ இப்போ கொஞ்ச நாளா சைவமாக்கும்..:( அவிச்ச முட்டையும் சாப்பிடமாட்டேன்ன் நோஓஓஓஒ மீக்கு வாணாம்ம்ம்..

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு விஷயம் தெரியாதா ...முட்டை சைவம் :)))

   Delete
 7. மா சூப்பரா பொங்கி வந்திருக்கு. இப்படித்தான் அஞ்சு, ஒரு புதுவிதமான சமையல் எமக்கு நன்றாக வந்திட்டுதே எனில் அடிக்கடி செய்யச் சொல்லும்.

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் மணி மீன் பன் ரெசிப்பி லிங்க் தந்ததும் ஒரு காரணம் ...:)))
   எனக்கு இப்ப வித விதமா stuff செய்து பன் செய்ய ஆவலாயிருக்கு :))

   Delete
 8. //அடிகனமான வாணலியில்// எனக்கு இதுக்க்கு தமிழ் வேணும்:) றீஈஈஈஈஈஈஈச்சர் ஓடிவாங்கோ...:).. வியக்கம் பீச்ச்ச்ச்ச்:)..

  ReplyDelete
  Replies
  1. garrrrr :))heavy bottom not stick pan :))

   Delete
  2. ;))))) கனக்க அடி வாங்கி நெளிஞ்சு போன வாணலி எண்டு நினைச்சீங்களோ அதீஸ்!!

   Delete
 9. அஞ்சு... ம்.ம்...:)
  இது நம்ம அதிரா செய்த கறி பண் அது மாதிரிதானே...

  ReplyDelete
  Replies
  1. yes yes:))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இளமதி

   Delete
  2. இது.... எலிபண். ;)

   Delete
 10. மாலை வணக்கம்,அஞ்சு!///போச்சு,போச்சு எல்லாம் போச்சு!பூனை வந்து எல்லாம் சாப்பிட்டுப் போச்சு!ஹி!ஹி!ஹி!!!///நல்லாயிருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா :)) பூனை விரதமாம் ..அதனால் உங்க பங்கு பத்திரமா இருக்கு :))

   Delete
 11. ரொம்ப நல்லாயிருக்கு ஏஞ்சலின்...நீங்க முட்டை சாப்பிட மாட்டீங்களா,ஆச்சர்யமா இருக்கு!!

  ReplyDelete
 12. ஆமாம் மேனகா நான்கைந்து வருடங்களாக முட்டை சாப்பிடுவதை நிறுத்திட்டேன் .நான் அசைவம் சமைப்பேன் கணவருக்கும் மகளுக்கும் .மட்டும் :))

  ReplyDelete
 13. hat-trick buns...-:)

  Are you a Vegetarian then...Surprising....Angelin...

  ReplyDelete
 14. இதை வாசித்ததும் கிட்சன் சூப்பர் ஸ்டாரில் செப் பட் கையை வச்சு மோப்பம் புடிக்கும் காட்சி தான் வந்தது...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :))உண்மைல நானும் அப்படித்தான் ..மீட் வெரைடிஸ் குக்கரில் சமைப்பதால் உப்பு கூட டேஸ்ட் செய்ய மாட்டேன் ....ஒரு சப்பான் பிளாஸ்டிக்ல வச்சிருக்கேன் அதே அளவுதான் எல்லா சமையலுக்கும்
   அதன் வயது 15 :))) ..
   எனாக்கு விருப்பமில்லை ஆனா கணவரும் மகளும் பாவம்தானே :))அதான் அவங்க ஆசைக்கு சமைப்பேன் ..

   கொஞ்ச நாளா மகளும் வெஜ் ஆகப்போறேன் என்று சொல்றா ..இங்குள்ளா குதிரை இறைச்சி கலப்பட காரணமா .
   thats why i always say tested and tasted by my hubby and daughter :))
   சிறு வயதில் சாப்பிட்டேன் அப்புறம் அம்மாவுக்கு தெரியாம நைசா நாய் பூனைக்கு போட்டிடுவேன்
   அப்புறம் திருமணம் ஆனதும் நான்தானே கிச்சனுக்கு ராணி .அப்படியே விட்டுட்டேன் .

   Delete
 15. ஒரு சப்பான் ... spelling mistake பிளாஸ்டிக்ல வச்சிருக்கேன் //

  a plastic spoon :))

  ReplyDelete