அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/16/13

சப்பாத்தி ரோல் with சிக்கன் மசாலா .

சப்பாத்தி ரோல் with சிக்கன்  மசாலா                                                                                  


                                                                                   
சிக்கன் மசாலா 

தேவையான பொருட்கள் 


 சிக்கன்(எலும்பில்லாதது ) .......... 100 கிராம் மெல்லிய 
                                                                   துண்டுகளாக வெட்டவும் 
1/2  வெங்காயம்  ............... மெலிதாக நறுக்கியது 
சிறிய தக்காளி         .................1        மெலிதாக நறுக்கியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் ..............  1  தேக்கரண்டி
பச்சை மிளகாய் ..............  1  ....விதை நீக்கி சிறிதாக நறுக்கவும் 
சிக்கன் மசாலா தூள் ............... 1 1/2  தேக்கரண்டி 
மிளகு தூள்                    ................ 1  தேக்கரண்டி 
கறிவேப்பிலை ........ஐந்து அல்லது ஆறு இலைகள்     
மஞ்சள் தூள் ............  1 தேக்கரண்டி 
சோயா சாஸ் .......... 1 தேக்கரண்டி .          
உப்பு ..........தேவைக்கேற்றவாறு சேர்க்கவும் 
எண்ணெய் .........    1 ஸ்பூன் அல்லது தாளிக்க தேவையான அளவு .
இங்கே தேக்கரண்டி என்பது எங்க வீட்டில் நான் பயன்படுத்துவது 
ஐஸ் க்ரீம் சாபிடுவோமே அந்த சிறிய அளவு கரண்டி .
அவரவர் விருப்பத்திற்கேற்ப காரம் சேர்க்கலாம் .
செய்முறை 
.அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் 
இஞ்சி பூண்டு கலவை ,கறிவேப்பிலை ,பச்சை மிளகாய் 
ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக மிதமான தீயில் வதக்கவும் .வெங்காயம் வதக்கும்போதே உப்பு சேர்க்கவும் 
பிறகு சிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கனை யும் சேர்த்து 
எண்ணெயில் வதக்கவும் 
பிறகு சிக்கன் மசாலா ,மஞ்சள் தூள்களை சேர்த்து வதக்கவும் 
இப்போது நறுக்கிய தக்காளியை சேர்க்கவும் .
தட்டு போட்டு மூடி விடவும் ..
இவ்வளவும் மிதமான தீயில் செய்ய வேண்டும் .
சுமார் பத்து நிமிடங்கள் கழித்து மூடியை திறக்கவும் 
எண்ணெய் பிரிந்து வரும் இப்போது .சோயா சாஸ் ஊற்றி 
மிளகுதூள் சேர்த்து இறக்கவும் ..
சுவையான மசாலா தயார் .

இது எனக்கு முன்பு எங்கள் தோழி கிரிஜா மெயிலில் அனுப்பிய 
குறிப்பு .அவர் சிக்கனுடன் பச்சை குடமிளகாயும் சேர்க்க சொன்னார் 
விருப்பமானால் நீங்கள் ட்ரை செய்து பாருங்கள் .

தயாரான மசாலாவை சப்பாத்தி சுட்டு அதில் ஒரு கரண்டி இட்டு 
சுருளாக ரோல் போல் மடித்து மீண்டும் கல்லில் ஒரிரு நொடிகள் 
வைத்து பின்பு சூடாக பரிமாறவும் .இது கோதுமை மாவு சப்பாத்தியில் 
ரோலாகவும் ,மைதா மாவு என்றால் கறி  ரொட்டி போலவும் செய்து சாப்பிடலாம் .
சப்பாத்தியை மெலிதாக தட்டிகொள்ளவும் .

                                              ******************************
                                                                             

                                                                             

13 comments:

 1. one recipe a day? cool! Keep rocking!

  ReplyDelete
 2. பதிவில் வர்ற ரெசிபி எல்லாமே ஆரோக்கியமான குறிப்பா இருக்கு. அதிக அளவு மிளகைதான் சொல்கிறேன் ஏஞ்சலின்.. செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ராதா ராணி ..நான் சிறிய கரண்டி தான் பயன்படுத்தறேன் அளவு இந்தியாவில் ஐஸ்க்ரீம் கப்புடன் வருமே .அந்த சிறிய ச்ப்பூன் தான்

   Delete
 3. பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு வசதியான டிபன் ஆச்சே:)

  ReplyDelete

 4. வணக்கம்!

  வலைச்சரம் கண்டேன்! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அஞ்சு!...:)

  நேசன் வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருக்கிறார்.
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete