அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/26/13

Quilling ...Tutorial /Graphics Quilling

இது அதிராவுக்காக அவசர அவசரமாக செய்த 
டுட்டோரியல் :))                                                                                     
                                                                                     
தேவையான பொருட்கள் :
மலர் ,இலை,செய்ய வண்ண தாள்கள் ,ஓட்டும் பசை ,
pincers ,இது காகிததுண்டுகளை கவனமாக பிடித்து ஓட்ட 
நான் கையால் தான் செய்தேன் ..செய்முறைக்கு பிடித்து காட்டி 
உள்ளேன் .

இதைபோன்ற சற்று தடிமனான flash கார்ட் போன்ற அட்டைகள் 
கிராபிக்ஸ் quilling செய்யும் புதியோருக்கு உகந்தது .
நன்கு செய்ய கற்றுக்கொண்ட பின் மற்ற quilling தாளிலேயே 
செய்யலாம் .
நான் எங்கு எப்போது இவ்வாறான கலர் தாள்களை கண்டாலும் விடுவதில்லை :)))
பார்க்லேஸ் வங்கி போனா அழகிய நீல நிறதாள்கள் ஷெல்பில் 
இருக்கும் :)) 


                                                                                     

                                                                                       
இவை எங்கள் ஆலயத்தில் இருந்து எடுத்தவை .
இந்த தாள்களை பேப்பர் ஷ்ரெட்டரில் போட்டு வெட்டி 
எடுத்து கொள்ளவும் .

                                                                           
வேறொரு அட்டையில் மலர் வடிவம் இரண்டு இலைகளுடன் 
பென்சிலால் வரையவும் ..மிகவும் அழுத்தமாக வரைய வேண்டாம் .
ஓட்டும்போது காட்டிகொடுக்கும் .
பிறகு மலர் இதழ் வடிவம் அதே அளவுக்கு வெட்டி கொலாஜில் 
காட்டினார்போல வளைத்து க்ளூ போட்டு ஒட்டவும் 
பிறகு இதழின் உட்பக்கம் சிறு துண்டுகளாக வெட்டி வளைத்த 
காகிதத்தை இடை செருகலாக நுழைத்து ஒட்டவும் .
அளவு எல்லாம் ஒரே அளவாக வெட்ட வேண்டியதில்லை 
வெளிப்புறம் மட்டும் ஒரே அளவாக இருக்கும்படி பார்த்துக் 
கொள்ளவும் .
இலைகளையும் அவ்வாறே செய்யலாம் .இன்னொரு முறையிலும் 
இலைகளை செய்யலாம் .இலை வடிவம் வரைந்து நடுவில் 
ஒரு நேர் நரம்பு பின்பு பக்கவாட்டில் இலை வடிவம் போலவே 
தாள்களை வெட்டி ஓட்டலாம் .

                                                                     


அடுத்து மகரந்தம் சற்று பெரிய அளவில் மஞ்சள் தாள் எடுத்து 
பல்லுகலாக ஓரத்தை வெட்டி சுருட்டி மலரின் நடுவில் 
வைக்கவும்   .

நான் செய்த அன்னப்பறவைகள் இம்முறைதான் ..அதற்க்கு 
நீள அளவு காகித துண்டுகள் பயன்படுத்தினேன் 

                                                                   

                                                                                   

                                                                                         
                                                                   
                                                                                               
                                                                               
பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் 
மிக்க நன்றி ...             .28 comments:

 1. வணக்கம் அக்கா! நலமா நீங்கள்? இதோ படித்துவிட்டு வருகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மணி ..முதல் கிராபிக் மலர் உங்களுக்கே

   Delete
 2. அஞ்சு... சூப்பர் டுட்டோரியல்....:)
  அழகாக அருமையாக செயல் முறை விளக்கத்துடன் அசத்தீட்டீங்கள்.

  அதிராவுக்கு மட்டுமோ இந்த டுட்டோரியல்...கர்ர்ர்ர்ர்....:)))

  எல்லோருக்கும் பயன்படும். அருமை. இதுபோல இன்னும் இன்னும் தொடர்ந்து தந்து எங்களுக்கு ஊக்கம் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

  மிக்க மிக்க நன்றி அஞ்சு. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஓகே ஓகே :)) நேரமிருக்கும்போது டுடோரியல்ஸ் தருகிறேன் .thanks

   Delete
 3. இது அதிராவுக்காக அவசர அவசரமாக செய்த 
  டுட்டோரியல் :)) ///

  நோஓ நோஒ விடமாட்டம்! விடமாட்டம்! அக்கா ஸ்டாப் திஸ் டுட்டோரியல்/! முதல்ல காசு வாங்குங்கோ அக்கா! அப்புறம் க்ளாஸை ஆரம்பிக்கலாம்! ஏன்னா, க்ளாஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் பணம் தருவாங்கன்னு என்ன நிச்சயம்? :) :)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தம்பி பிரெஞ்சு கிளாசுக்கு இன்னும் fees வரவிஇல்லைதானே :))
   அதிரா ....fees எனக்கு உடனே wire செய்யுங்க அப்புறம்தான் டுடோரியல் கண்ணுக்கு தெரியும் :))

   Delete
 4. அக்கா, நல்ல விளக்கமா / அருமையா சொல்லியிருக்கீங்க க்விலிங் பற்றி - இதை நாம் ( ஆண்கள் ) கற்றுக் கொள்வதால் ஏதேனும் நன்மை உண்டா அக்கா?

  ReplyDelete
  Replies
  1. UAE /ஜோர்டான் பக்கம் நிறைய ஆண்கள் இந்த க்விலிங்க்ல எக்ஸ்பெர்ட்ஸ் .

   பயன்கள் என்று சொன்னால் :))அவசரமா கேர்ள் பிரண்டை பாக்கபோறீங்க அப்போ கார்ட் கடை மூடியிருக்கு
   விரைவா அக்கா ப்ளாகை பார்த்து ஒரு ஹார்ட் அல்லது மலர் செய்து அசத்தலாம் :))பெயரை எழுத்தாக செய்து மொநோக்ரம் வடிவில்தரலாம் .etc
   ....எனக்கு எப்பவும் ஓவ்வொரு QUILLING செய்து பார்த்ததும் ஒரு ஆனந்தம் அந்த மாதிரி சந்தோசம் கிடைக்கும்
   கவிதை எழுதறவங்க படம் வரைவோர்களுக்கு கிடைக்கும் சந்தோஷம்தான் இதிலும் கிடைக்கும்

   Delete
 5. அதிராக்காவிற்கு மட்டும் தானா ஏஞ்சலின் ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரெவெரி :)))

   இந்த மாதம் முழுதும் பிறந்தநாள் கொண்டாட்டம் mummy மாதிரீ :)) அதான் அதிரா ஸ்பெஷல் :))
   சும்மா :) அதிரா இந்த செய்முறை பற்றி கேட்டாங்க அதான் உடனே டுடோர்யலா போட்டு விட்டேன் ..பார்க்கும் அனைவருக்குமே பயன்படுமே .

   Delete
 6. மணி கலாய்ப்பு இங்கயும் தொடருதா?

  ReplyDelete
  Replies
  1. நம்மளோடது ஜாலி ஜாலி க்ரூப் :))))

   Delete
 7. சூப்பர் அஞ்சு. அதிராவுக்கு செய்ததாலே எங்களுக்கும் பிரயோசனப்படுது . நன்றாக படங்களுடன் விளங்கப்படுத்தியிருக்கிறீங்க. நன்றி அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்முலு ..நீங்களும் செய்து பாருங்க இம்முறையில்

   Delete
 8. ஆஹா அருமையான வடிவமைப்பு இந்த பொறுமை எல்லாம் எனக்கு இல்லை அஞ்சலின் அக்காள்! தொடருங்கள் இன்னும் பல படத்துடன்!ஹீஈஈஈஈஈஈ!

  ReplyDelete
 9. ஆவ்வ்வ்வ் வழிவிடுங்கோ வழிவிடுங்கோ.. இது எனக்காக செய்தது.. பிறகேன் எல்லாரும் குறுக்க நிண்ட மறைக்கினம்ம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
 10. அஞ்சு சூப்பரா இருக்கு.. ஆகவும் குட்டியாக செய்திருக்கிறீங்க போல... எனக்கு குட்டியாகவே செய்ய முடியேல்லை கர்ர்ர்:) ஸ்ரெடர் பெரிசூஊஊஊஊஊஊஊஊ ஆக் கட் பண்ணுதே...

  இன்று 2 அன்னமும் நடுவில் கார்ட் தூக்கிப் பிடிப்பதைப்போல, உங்கள் பற்றனையே செய்ய ஆரம்பிச்சுட்டேன்ன்.. ஆனா அடுத்த கிழமைதான் முடிப்பேன்போல இருக்கு:)..

  ReplyDelete
 11. மியாவும் நன்றி அஞ்சு..

  ReplyDelete
 12. வாவ்

  பார்க்க எல்லாமே ஈசியாக தான் இருக்கு.. செய்த பின்பு தான் கஷ்டம் புரிகிறது..

  ReplyDelete
 13. Ennennamo solreenga! Padikka/paarkka easy-yaa thaan irukku! :)

  ReplyDelete
 14. என் பொண்ணிடம் செய்ய சொல்கிறேன்... நன்றி...

  ReplyDelete
 15. மிகவும் அருமை angelin.

  செய்முறை விளக்கம் சிறப்பாக இருக்கு.

  ReplyDelete
 16. வணக்கம்,தங்கையே!நலமா?////அதிராவுக்காகவோ/அதர்வாவுக்காகவோ(ஹ!ஹ!ஹா!!),அழகாக இருக்கிறது!

  ReplyDelete
 17. அருமையான விளக்கம். அழகாக உள்ளது.

  ReplyDelete
 18. நானும் செய்து பார்க்கிறேன் .. சாட் பேப்பரில் செய்யலாம்னு நினைக்கிறேன். நல்ல வருமா ஏஜ்சலின்..

  ReplyDelete
  Replies
  1. செய்து பாருங்க ராதா ..நான் இதில் காட்டி இருப்பது சார்ட் பேப்பர் திக்னஸ் இருக்கு .

   Delete
 19. //இது அதிராவுக்காக அவசர அவசரமாக செய்த
  டுட்டோரியல் :))//

  அதனால் தான் மிகவும் அழகாக அமைந்துள்ளதோ! ;))))) பாராட்டுக்கள்.

  ReplyDelete