அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/14/13

No tool Flower Tutorial ...Quilling

Flower Tutorial 

                                                                             

இந்த மலர் செய்ய QUILLING TOOL அவசியமில்லை 


தேவையான பொருட்கள் 
மலர் இதழ் செய்ய சிவப்பு நிற பேப்பர் ஸ்ட்ரிப் 
நான் A 4 பேப்பர் ஸ்ரேடரில் போட்டு வெட்டி எடுத்தேன் 
இலைகள் மற்றும் தண்டு செய்ய பச்சை நிற பேப்பர் 
மலரின் நடு பகுதிக்கு ..வெள்ளை அல்லது மஞ்சள் நிற பேப்பர் 


                                                                           

படத்தில் உள்ளது போல ஒரு பென்சில் அல்லது ஏதேனும் 
உருளை வடிவத்தை வைத்து சுற்றவும் 
துவங்குமுன் படத்தில் உள்ளபடி ஒரு துளி பசை ஒட்டி 
சுற்றவும் .முடியும் இடத்திலும் பசையால் ஒட்டி விடவும் 


                                                                               
                                                                                   

ஓரிரு வினாடிகளில் பசை காய்ந்ததும் பென்சில் இலிருந்து 
வட்ட வடிவ இதழை அழகாக வெளியே எடுக்கலாம் .
                                                                                 
  பூவின் இதழ் ஒரு பக்கம் வட்டமாகவும் ஒரு பக்கம் சற்றே
ஷார்ப் ஆகவும் இருக்க ..இதழின் ஒரு முனையை விரலால் 
அழுத்தி பிடிக்கவும் 
                                                                                           
பிறகு மலரின் நடு பகுதிக்கு வெள்ளை நிற தாளினை 
பென்சிளைவிட சிறிய சுற்றளவு கொண்ட பெய்ன்ட் பிரஷ் 
மேல் சுற்றி இதழ் போலவே பசை ஒட்டி எடுக்கவும் .
கீழிருப்பது மஞ்சள் நிறம் .காகிதத்தின் நுனியை ஓரத்தில்  
உருட்டுவது போல செய்து பசையால் ஒட்டியும் செய்யலாம் .

                    
அடுத்தது இலைகள் 
இவற்றையும் வெறுமனே விரல்களாலும் உருட்டலாம் 
அல்லது பிரஷ் மீது சுற்றி இரண்டு முனைகளையும் 
அழுத்தி இல்லை வடிவில் பிடித்து விடவும் 
                                                                                   
பிறகு ஒவ்வொரு இதழையும் அதன் அடிப்பக்கம் 
டூத் பிக் அல்லது கூறிய ஊசி போன்ற உபகரணத்தால் 
பசையை தொட்டு அட்டையில் ஒட்டவும் .

                                                                                              
இதழ்கள் செய்யும்போது அளவு சரியாக இருக்க 
ஒன்றன் மீது ஒன்று வைத்து அளவு சரி பார்க்கவும் .
பச்சை நிற தண்டு பாகம் நேராக ஒட்டு வதை விட 
தேவையான அளவு வெட்டியபின் ரிப்பன் உருவுவிடுவதுபோல
உருவினால் காகிதம் வளைந்தாற்போல் வரும் அதில் பசை
கீழ்பக்கம் தடவி  ஓட்ட அழகாய் வரும் .
வெள்ளை அல்லது மஞ்சள் பகுதிக்கு பதில் 
கிறிஸ்டல் ரைன் ஸ்டோன்ஸ் ஓட்டினாலும் அழகாய் இருக்கும் .

                                                                                                             

32 comments:

 1. இது ரொம்ப ஈசியா இருக்கே..

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேனகா இன்னிக்கு பூ மற்றும் மீன் பன் உங்களுக்கு தான்

   இது ரொம்ப ஈசி செய்து பாருங்க

   Delete
 2. சூப்பர்.. அஞ்சு!

  ரீச்சர்ன்னா ரீச்சர்தான்..:)
  அழகா ஸ்ரெப் ஸ்ரெப்பா படம் எடுத்துப்போட்டு அசத்திறீங்க. அருமை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. Garrrr :)) நானும் இன்னும் ஸ்டூடன்ட் தான் ..

   Delete
 3. வாவ் ரொம்ப அழாகாக எல்லாருக்கும் புரியும் படி அருமயாக சொல்லியிருக்க்ங்க.. சூப்பர்,, செய்துவிட்டு போஸ்ட் போடுகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சீக்கிரமா போடுங்க faisa

   Delete
 4. க்விலிங் ஐ நீங்க அழகா, சிம்பிளா படங்களுடன் புரியவைத்திருக்கிறீங்க அஞ்சு.ரெம்ப நன்றி.

  ReplyDelete
 5. இத இத இதத்தான் மீ எதிர்பார்க்கிறனான், அதாவது ஸ்டெப் பை ஸ்டெப்பை.... இது சூப்பர்.

  சிம்பிளாவும் கியூட்டாவும் இருக்கு.

  ReplyDelete
 6. அழுத்தி இல்லை வடிவில் பிடித்து விடவும் /////////// றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓடியாங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ:).

  ReplyDelete
  Replies
  1. Garrrrrr:)) egg rotti cancelled for you

   Delete
 7. Thank you quilling teacher. Very nice work.

  ReplyDelete
  Replies
  1. not me vaans :)) poosar is the real teacher ......
   அக்கௌண்டில் instructions பார்க்குமுன்னே பீஸ் கேட்ட டீச்சர் பூசார் தான்

   Delete
 8. Saw this post just now! Nice tutorial and the flower is beautiful! My only problem is I don't have a paper shredder..otherwise I will try it ASAP!! :)

  ReplyDelete
  Replies
  1. மகிம்மா இதற்க்கு ஷ்ரெட்டர் அவசியனு இல்லை ..கிராப்ட் கத்தி மட்டும் இருந்தாலே போதும் 3 ம்ம் ஸ்ட்ரிப்ஸ்
   ஒரே அளவா வெட்டியும் செய்யலாம் ..என் மகள் செய்த மான் குட்டி கையால் வெட்டினதுதான்

   Delete
 9. ரொம்ப ரொம்ப சுலபமாக கற்றுக்கொடுத்து இருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸாதிகா

   Delete
 10. சிறப்பாக இருக்கு angelin.எளிதில் புரியும் படியான படங்கள் மிக அழகு.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமா

   Delete
 11. ரொம்ப அழகா இருக்கு. செய்முறையும் புரியும்படி தெளிவாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஆதி

   Delete
 12. மிகவும் அழகாக உள்ளன. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. தெளிவான விளக்கத்திற்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 14. Step by Step Tutorial and the net result....VVV Good Angelin...

  ReplyDelete
 15. வணக்கம்
  இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.-http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_11.html?showComment=1386724732568#c7005872673239012691

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 16. சுலபமாக அழகாகச் சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள் ஏஞ்சல்.

  ReplyDelete
 17. ஈசியாக சொல்லி தந்துவிட்டீர்கள் ஏஞ்சலின்.

  ReplyDelete
 18. நல்ல ஐடியா.. ரொம்ப ஈசியா செய்துடலாம் போல.. நல்லா இருக்கு ஏஜ்ஜெலின்.

  ReplyDelete