அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/13/13

Kitchen Corner ...bakery snacks,ஓட்ஸ் கொழுக்கட்டை

வட  இந்தியர்கள் இதைபோன்று ஒரு ஸ்நாக்ஸ் puff pastry sheets
இல் செய்கிறார்கள் ..புரவாலி பிஸ்கட்ஸ் /khari என்று
பெயர் அவர்களின் ஸ்நாக்சுக்கு .அதில் அதிகம் பட்டர் சுவை 
இருக்கும் ..எதோ என்னாலான சிறு முயற்சி :))
ஆனாலும் நான் ஊரில் பெங்களூர் அய்யங்கார் பேக்கரில 
சாப்பிட்ட டேஸ்ட் வரவில்லை ..மாவை பால் சேர்த்து பாக்கெட்டில் 
குறிப்பிட்டபடி பிசைந்து உருட்டி ,நீள் துண்டங்களாக வெட்டி 
ஒன்றன் மீது ஒன்றாக ,வைத்து சிறு துண்டாக வெட்டி முறுக்கி 
ovan இல் வைத்து எடுத்தேன் ..
இன்னும் நன்றாக செய்ய ..மேனகா ,மகி ,ஹெல்ப் பிளீஸ் :))
(அவ்வ்வ்வ் எனக்கேற்பட்ட சோதனை :)) இது வர்க்கி இலையாம் 
பெயர் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் 
உடனே சுட்டிக்காட்டிய மகிக்கு நன்றி 

 இருக்கு ஆனா இல்லை :)))  இப்ப புரிஞ்சிருக்குமே 
நான் இந்த மாவு பாக்கெட் பயன்படுத்தி தான் இதை 
செய்தேன்  .                                              
                                                                                   
ஓட்ஸ் கொழுக்கட்டை 

இந்த ஹெல்த்தி ஓட்ஸ் கொழுக்கட்டை விமிதா ஆனந்தின் 
ரெசிப்பி பார்த்து செய்தேன் ..மிக அருமையாக ருசியாக 
வந்தது ..இந்த லிங்கில் அவர் ரெசிப்பி ..நீங்களும் செய்து 
பாருங்க .                                                                  
ஏதோ அலெக்ஸ் பாண்டியன் ரேட் என்று அதிரா சொன்னாங்க :))
நாங்க தினமும் ஒரு போஸ்ட் போட்டாத்தான் ..எங்களை 
முதல் இடத்தில காட்டுமாம் :)))
அனுபவம் 
சமீபத்தில் ஒருவரால் எனக்கு ஏற்பட்ட அனுபவம் .
 அவருக்கு சில மாதங்களுக்கு முன் colostomy என்ற அறுவை 
சிகிச்சை நடைபெற்றது .அதற்கான bag எப்பவும் அணிய வேண்டிய 
சூழ்நிலை ..இவருக்கு ஒரு குணம் தன்னை பற்றிய அந்த ரகசியத்தை 
அனைவரிடமும் சொல்லி பிறரின் அனுதாபத்தை பெற எப்பவும் ஆவல் 
ஒருவேளை அந்த அறுவை சிகிச்சை அவரது தன்னம்பிக்கையை 
குறைத்து விட்டதோ தெரியவில்லை ..பார்ப்போரிடமேல்லாம் இந்த பிரச்சினையை சொல்லி திரிந்தார் ..என்னிடம் வந்தபோது ..
நான் சொன்னேன் .இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை ..அனைவருக்கும் தெரிய வேண்டியதில்லை என்றேன் ..அப்படியும் திருந்தினார்
 போல இல்லை .உளறல்கள் தொடர்ந்தது ..ஒருமுறை அங்காடியில் 
shelf மறுபுறம் நான் இருப்பது தெரியாமல் இவர் உடல் குறைபாடுகளை 
வேறு இரு பெண்கள் உரையாடி கொண்டிருந்தார்கள் .மனதை 
புண்படுத்தும் விதத்தில் .........

..எனக்கு கோபம் வந்தது ஆனால் நிதானமாக யோசித்தபோது 
தானே தன விஷயத்தை  வெளிக்காட்டி பிறரின் அனுதாபத்தை 
பெற முற்பட்ட அந்த நண்பி தான் கண்டனத்துக்குரியவர் என்று
 புரிந்து கொண்டேன் சுய புத்தி இல்லாவிடில் சொல் புத்தியாவது 
வேண்டும் ..வேலியில் போகும் ஓணானை எடுத்து காதில் 
போட்டுக்கிட்டு குத்துதே குடையுதே என்றால் :))
................................................................................................................................................
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் .

51 comments:

 1. தானே தன விஷயத்தை வெளிக்காட்டி பிறரின் அனுதாபத்தை பெற முற்பட்ட அந்த நண்பி தான் கண்டனத்துக்குரியவர் என்றுபுரிந்து கொண்டேன் சுய புத்தி இல்லாவிடில் சொல் புத்தியாவது வேண்டும் ..//

  அருமையாகச்சொல்லியிருக்கிறீகள்..
  யதார்த்தமாக பேசுவது , சிறிது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பூதாகாரமான பிரச்சினையாக வெடிக்கும் அபாயம் இருக்கிறது ..

  எனவே எப்போதும் அளவோடு பகிர்ந்துகொள்வது நலம் ..

  ReplyDelete
  Replies
  1. முதலில் வருகை தந்து முத்தான கருத்துக்களை சொல்லியிருக்கீங்க அக்கா .மிக்க நன்றி .

   Delete
 2. Angel Akka, this is not ootti varki...this is Iyengar bakery snacks! :) looks good though! Will come again later!

  ReplyDelete
  Replies
  1. Thanks Mahi ,come soon ...i need your help .:))

   Delete
 3. // இருக்கு ஆனா இல்லை :))) இப்ப புரிஞ்சிருக்குமே
  நான் இந்த மாவு பாக்கெட் பயன்படுத்தி தான் இதை
  செய்தேன் .// என்ன கிட்னியோ?:) ஆவ்வ்வ்வ் உதையெல்லாம் பப்ளிக்கில் சொல்லப்பூடாது அஞ்சு:)

  ReplyDelete
 4. //இன்னும் நன்றாக செய்ய ..மேனகா ,மகி ,ஹெல்ப் பிளீஸ் :))
  // ஹா..ஹா..ஹா... அமெரிக்கா பிரித்தானியாவுக்கு யெல்ப் பண்ணப்போகுதே:)..

  ReplyDelete
 5. //
  Your comment will be visible after approval.

  //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கொமெண்ட் போடப்போட வெளியே வந்தால்தான் இன்னும் போடோணும் என ஆவல் வரும்.. அஞ்சு திறந்துவிடுங்க:) நான் வேணுமெண்டால் மெஷின் கன்னோடு காவல் இருக்கட்டோ?:) ஏதாவது ஏடாகூடமாக பின்னூட்டம் வந்தால்ல்.. எரிச்சிடுவேன்ன் பிரித்தானியாவை...:) அவ்வ்வ்வ்வ் மீ இப்பவும் கட்டிலுக்குக் கீழ.

  ReplyDelete
  Replies
  1. எடாகூடமேல்லாம் வராது :)) ,,கண்களுக்கு ஒய்வு கொடுக்க இப்படி அடிக்கடி மாடரேஷன் வச்சிடறேன்

   Delete
 6. ருவிஸ்டர் நல்லா இருக்கு ஆனா பொரிச்சிருந்தால் சூப்பராக இருக்குமோ இன்னும்.. என ஓசிக்கிறேன்ன்:).

  ReplyDelete
  Replies
  1. அதிஸ் நீங்க பொரிச்சு புது பெயர் சூட்டி போடுங்க :))
   நான் இதுக்கே பேர் என்னான்னு தவிச்சிட்டிருக்கேன்

   Delete
 7. வணக்கம் அக்கா! நலமா இருக்கிறீங்களா? இந்தக் கொழுக்கட்டை எனக்குத்தானே? :)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மணி உங்களுக்கே தான் .

   Delete
  2. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதை நான் பார்க்கல்லியே.... விடுங்கோ விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:)

   Delete
  3. வலப்பக்கம் ஒருவர் இடப்பக்கம் ஒருவர் நாங்க ரெண்டுபேரும் உங்களை தேம்ஸ் அழைச்சிட்டு போறோம் ஓகே அதிஸ்

   Delete
  4. தேம்ஸ்ல தள்ளுறத்திலயே குறியா இருக்கினம் சாமீஈஈஈஈ:) நோ மீ வரமாட்டேன்ன் இண்டைக்கு எங்களுக்கு ஸ்னோஓஓஓஓ.. கோட்டிக்கிடக்கு.. இப்பத்தான் மழை தொடங்குதாக்கும்:).. அதனால நான் வெளியே கால் வைக்க மாட்டேன்ன்:)..

   Delete
 8. //ஓட்ஸ் கொழுக்கட்டை/// நோஓஓஓஓஓஒ உதை ஏற்றுக்கொள்ளமாட்டேன்ன்ன்ன்:) உது என் குயினோவாக் கொழுக்கட்டையைப் பார்த்துச் செய்ததுபோல இருக்கு:)).. தேம்ஸ்கரையில் இருக்கும் கல்லின் மீது சத்தியம்:)

  ReplyDelete
  Replies
  1. நீங்க செய்த கின்வா கொழுக்கட்டை மேலேயே சத்யம் பண்ணுங்க ரெண்டும் ஒண்ணுதான்

   Delete
 9. கொழுக்கட்டை டுவிட்டர்:) ரெண்டுமே சூப்பர்..

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உதுக்குத்தான் சொல்றது சுவீட் 16 பேபியெல்லாம் கதைக்கக்கூடியமாதிரி பெயர் வைக்கோணும் என:).. டுவிட்டராம் டுவிட்டர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   Delete
 10. //ஏதோ அலெக்ஸ் பாண்டியன் ரேட் என்று அதிரா சொன்னாங்க :))
  நாங்க தினமும் ஒரு போஸ்ட் போட்டாத்தான் ..எங்களை
  முதல் இடத்தில காட்டுமாம் :)))/// அது அது அது...:) பிரித்தனியாவோ கொக்கோ:)பொயிங்கிட்டமில்ல:).. ஓயாதீங்க அஞ்சு:) இன்று என்பக்கம் புதுப் போஸ்ட்ட்ட்ட்ட்:)).. வரப்போகுதுன்னேன்ன்:))..

  ReplyDelete
  Replies
  1. இன்னிக்கு நான் வீட்லதான் ..அங்கும் கலக்கிடலாம்

   Delete
  2. அதிஸ் பெரிய காமெடி என்னவென்றால் ..இதன் பேர் ஊட்டி வர்க்கின்னு நினைத்து கொண்டிருந்தேன் ..இது அது இல்லையாம் :))

   Delete
 11. இவருக்கு ஒரு குணம் தன்னை பற்றிய அந்த ரகசியத்தை
  அனைவரிடமும் சொல்லி பிறரின் அனுதாபத்தை பெற எப்பவும் ஆவல் ////

  இது உண்மை அஞ்சு, சிலருக்கு எப்பவும் மற்றவர் ஏதும் சொல்லி ஆறுதல் படுத்தோணும் என விரும்புவினம், அதில் தப்புமில்லை... “என்னதான் மனதை தேற்றினாலும், இனொருவரிடம் சொல்லி அழும்போதுதான் ஆறுதல் கிடைக்கிறதாம் மனதுக்கு” என கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்.

  ஆனா அதை எல்லோரிடமும் எதிர்பார்ப்பது தப்புத்தான்.

  அது ஒவ்வொருவரின் நிலையைப் பொறுத்துத்தானே, நெடுகவும் bag போடவேண்டிவராதே.. சிலருக்கு சில காலம் மட்டும் போட்டால் பின்பு சரியாகிடும்.

  ஏன் அவவுக்கு வீட்டில் ஆறுதல் இல்லையோ?... என்னவாயினும் கவலையான விஷயம்தான், ஆண்டவன் அவவுக்கு அருள் புரியட்டும்...

  இந்த விஷயத்தில் ஆர் என்ன கதைச்ச்சாலும் கிண்டல் பண்ணினாலும் வேதனைதான் அஞ்சு... ஆனா கதைப்போர் புரியோணும் நாளைக்கு தனக்கும் இப்படி ஒரு நிலை வந்தாலும் வரலாம் என.. எதுவும் நம் கையில் இல்லையே... இது புரியாமல்தால் அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்கின்றனர் பலர்.

  ReplyDelete
  Replies
  1. ஆறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் சொல்லலாம் ....எதுவாக இருந்தாலும் சில விஷயங்களில் ப்ரைவசி சீக்ரசி இருப்பதுதான் நல்லது .அந்த நபருக்கு குடும்பமே உறுதுணை ஆனாலும் இப்படி அவர் செய்திட்டார்

   Delete
  2. நோஒ ஓஓஓஓ அக்கா சொல்ல வாறது உங்களுக்கு விளங்கேலை அதிரா! சில விஷயங்களை சீக்கிரெட்டாக வைத்திருப்பது நல்லது! எல்லோருக்கும் சொல்லித் திரிவதில் அர்த்தம் இல்லை! இதுதான் அவ சொல்ல வர்ரது!

   Delete
  3. தம்பி சரியா புரிந்து கொண்டீர்கள் .நான் சொல்ல வந்ததே அதைதான் ...Merci :))

   Delete
  4. ஆஆஆஆஆஆ.. அக்காவும் தம்பியும் கூட்டுசேர்ந்திட்டினமே...

   ஓ இப்ப புரிஞ்சிடுத்து.. அது உண்மைதான்... அஞ்சு, மணி...

   Delete
 12. ஓட்ஸ் கொழுக்கட்டை படங்களும் செய்முறையும் அருமை.

  பாராட்டுக்கள்.

  //வேலியில் போகும் ஓணானை எடுத்து காதில்
  போட்டுக்கிட்டு குத்துதே குடையுதே என்றால் :))//

  ;)))))

  ReplyDelete
  Replies
  1. இன்னும் நாலைந்து பழமொழிகள் சேர்த்தேன் ..ஓணான் தான் சூட்டபிளா இருந்தது .அப்படியே சேர்த்திட்டேன் .
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 13. அருமையாக இருக்கு குறிப்புக்கள்...தொடர்ந்து அசத்துங்க..ஏஞ்சலின்..கருத்துப் பகிர்வு சூப்பர்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 14. னான்:) வந்துட்டேன்.

  ஏஞ்சல் அக்கா, இந்த ட்விஸ்ட்டர் பஃப் பேஸ்ட்ரில நானும் செய்திருக்கேன், கோவையில் பேக்கரிகளில் ருசித்தும் இருக்கேன். இங்கே இண்டியன் ஸ்டோரிலும் விற்கிறாங்க. உங்க ஊரில பஃப் பேஸ்ட்ரி மாவு கூட கிடைக்குதா, சூப்பர் போங்க!

  இது bake செய்தாலே சூப்பரா இருக்கும், பூஸுக்கு பொரிக்கணுமாமே? கர்ர்ர்ர்ர்ர்! அதிராவ்,நீங்க பொரிக்கப் போறீங்களா..பிறகு உங்க வீட்டுக் கதவை இடிச்சு ரெட்டைக் கதவாப் போடோணும், பரவால்லயா? ;)

  ஓட்ஸ் கொழுக்கட்டை நல்லா இருக்கு. சீக்கிரம் செய்து பார்க்கிறேன்.  ReplyDelete
  Replies
  1. இந்தியன் ஸ்டோரில் விற்பது khari ,,,ஜீரா crisps ..
   மகி எனக்கு ஊட்டி வர்க்கி படம் பாக்கணும் ..முடிஞ்சா லிங்க் காட்டுங்க

   Delete
 15. ஒரு சிலர் உங்க நண்பியைப் போலதான் இருக்கிறாங்க. என்ன சொல்வது? அனுதாபம் பெறப்போய் இப்படி மூக்குடைபடவேண்டி இருக்கு. எதுவாய் இருப்பினும் எல்லாரிடமும் சொல்வது நல்லதில்லை என்பதை அவர் இனிமேலாவது உணர்ந்தால் சரி.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மகி சரியா சொன்னீங்க

   Delete
 16. ஸ்நாக்ஸ், ஓட்ஸ் கொழுக்கட்டை குறிப்புகள் பிரமாதம்.
  நல்ல நல்ல குறிப்புகள் எல்லாம் செய்து அசத்துறீங்க...

  ம்.அனுபவப் பகிர்வும் நல்ல ஒரு பகிர்வுதான்...:)
  தொடர்ந்து கலக்குங்கோ.. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி ..கொழுக்கட்டை நல்ல ருசி செய்து பார்த்து சொல்லுங்க

   Delete
 17. அய்யங்கார் பேக்கரில
  சாப்பிட்ட டேஸ்ட் வரவில்லை ..//

  பார்க்க நல்லா இருக்கு ஏஞ்சலின்...ஒரு வேளை PUFF போல FLAKYஆ வரும் என்று நினைசீங்களோ ?

  ஓட்ஸ் கொழுக்கட்டை//

  ஓட்ஸ்ல வேற என்ன சுலபமா பண்லாம்னு தேடிட்டே இருந்தோம்...ட்ரை பண்றோம்...

  ReplyDelete
  Replies
  1. இதே மாதிரி ட்விஸ்ட் செய்த ஒரு க்ரிஸ்பி ஸ்நாக் சாப்பிட்டிருக்கேன் ரெவரி..அதில் flaky ஆக வராது ஆனா பட்டர் குறைவா இருக்கும் ..மெட்ராஸ்ல வர்க்கின்னு தான் கேள்விபட்டிருக்கேன் ..சரி எப்படியோ இது டேஸ் டியாதான் வந்தது ..ஓட்ஸ் கொழுக்கட்டை ரொம்ப ஹெல்தி அண்ட் சுலபம் செய்வது ..அந்த லிங்கில் பாருங்க ..

   Delete
 18. ஆஹா கொழுக்கட்டை எனக்கும் பிடிக்கும்!ஹீஈஈஈஈஈஈஈஈஇ சூப்பர் அஞ்சலின்!ம்ம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க Nesan .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 19. கொழுக்கட்டை டு ட்விஸ்ட்டர்
  ரெண்டுமே சூப்பர்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க Faisa..வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

   Delete
 20. இது இங்கு blätterteig. பேஸ்ட்ரி ஸீட் பிஸ்கட்டா? இதைபோல் இங்கு பேக்கரியில் பார்த்திருக்கேன்.
  நல்ல ஈசி& ஹெல்தி கொழுக்கட்டை. சீக்கிரமே செய்துடலாம் போல.
  செய்துபார்க்கனும்.நல்ல குறிப்புகள் அஞ்சு.நன்றி. நிறைய எழுதி ராங்க் உயர்த்துங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்முலு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
   அந்த மாவில் செய்யலாம் என்றுதான் நினைக்கிறேன் ..ட்ரை பண்ணி பாருங்க

   Delete
 21. ஓட்ஸ் கொழுக்கட்டை என் பெண்ணிற்கு ரொம்ப பிடிக்கும் அவளே இது மாதிரி நன்றாக செய்துவிடுவாள். உங்களுடைய இரண்டு குறிப்புகளுமே மிக சிறப்பு.

  // சுய புத்தி இல்லாவிடில் சொல் புத்தியாவது
  வேண்டும் ..//

  ஆமாம் angelin சிலரை திருத்தவே முடியாது. சொன்னலும் புரியாது தனக்காவும் தெரியாது. சரியாக சொல்லியிருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..கொழுக்கட்டை ரொம்ப டேஸ்டியா வந்தது .
   அனுபவம் .....இனியாவது அவர் கவனமாக இருப்பார் என்று நினைக்கிறேன்

   Delete
 22. ஏஞ்சலின்,வர்க்கி எப்படி செய்வாங்கன்னு தெரியாது ஆனா சுவைத்திருக்கேன்.....அனுபவம் ஒரு நல்ல பகிர்வுதான்..
  ஒட்ஸ் கார கொழுக்கட்டைதான் செய்திருக்கேன்,இதுவும் நல்லாயிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேனகா ..அதன் சுவை அலாதி ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

   Delete