அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/14/13

Fish Bun

Fish Bun a.k.a .Maalu BUN 


மாலு என்றால் மீன் ..(உபயம் A .E .மனோகரனின் சுராங்கனி 
பாட்டில் இருந்து கற்று கொண்டது ):)))


இந்த ரெசிப்பி லிங்க் தந்து உதவியது 
அன்பு தம்பி மணி ...
இது எனது முதல் முயற்சி மீன் விருப்பமில்லாதவர்கள் 
உருளைகிழங்கு கிரேவி அல்லது முட்டை கிரேவி சேர்த்து 
இதனை செய்யலாம் .வானதியும் கறி பன் ரெசிப்பி தந்திருக்காங்க. 
எனக்கு தனியே ஈஸ்ட் வாங்கி சேர்த்து பிசைவது சரிவருவதில்லை 
இந்த ஹோவிஸ் மாவில் எல்லாம் கலந்திருப்பதால் மிக 
சுலபம் ,ஹோவிஸ் மாவில் ஈஸ்ட் சேர்த்த மாவையே வாங்கவும் .
                     முதலில் மாவை பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ளபடி 
பிசைந்து .ஈர துணியால் மூடி வைத்து விட்டேன் .சுமார் இரண்டு மணிநேரம் ரெஸ்ட் எடுக்க விட்டேன் .
இந்த நேரத்தில் ...மீன் கலவை உள்ளே Fillingசெய்ய தயாரித்து 
வைத்து கொண்டேன் .

கட்லட் மிக்சிங் செய்வது போலவே அத்துடன் அரை தக்காளியும் சேர்த்தேன் .

தேவையான பொருட்கள் 
TUNA CHUNKS ...1  டின் .....தட்டில் எடுத்து உதிர்த்து  வைக்கவும்                                             
வெங்காயம் ....பெரியது ஒன்று சிறியதாக நறுக்கி கொள்ளவும் 
பச்சை மிளகாய் .......3  ......மெலிதாக நறுக்கவும் 
சிறு துண்டு இஞ்சி .......மெலிதாக நறுக்கவும் .
மீடியம் அளவு தக்காளி ...... 1  ..மெலிதாக நறுக்கவும் 
வேக வைத்த உருளை கிழங்கு .......5   ...

 உப்பு ........தேவையான அளவு 
எலுமிச்சை சாறு ....1 தேக்கரண்டி 
மிளகு .............போடி செய்தது 1 தேக்கரண்டி 
கரம் மசாலா தூள் ....1 தேக்கரண்டி     
எண்ணெய் ...... வதக்க தேவையான அளவு 
செய்முறை 


ஒரு அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்
 இஞ்சி பச்சை மிளகாய் ,மீன் கலவை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும் 
பின்பு உப்பு அளவாக சேர்க்கவும் அத்துடன் கரம் மசாலா மிளகுதூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டவும் அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சை சாறு ஊற்றி பிரட்டவும் பின்பு அத்துடன் 
வேக வைத்து வெட்டிய கிழங்கைமீன் மசாலா கலவையுடன் பிரட்டவும் .
இப்ப பன் உள்ளே வைக்க STUFFING தயார் 
மாவு இப்ப தயாராக இரண்டு மடங்கு உப்பி இருக்கும் மாவை ஓங்கி ஒரு குத்து விடவும் .(வானதி சொன்ன மாதிரியேசெய்தேன் )
பின்பு மீடியம் அளவு உருண்டைகளாக எடுத்து தட்டி அதனுள் மீன் கலவையை வைத்து மூடி ..பேக் செய்ய வேண்டும் .bake செய்யும் முன் 
ஒரு முட்டை மஞ்சள் கருவை  நன்கு கிண்ணத்தில் அடித்து வைத்து இந்த பண்களின் மேல் ப்ரஷால் மேக்கப் போடுவது போல் தடவி..(இது தான் BUN ஷைனிங் ஆகவும் பிரவுன் நிறமாகவும் வர காரணம் ).. பின்பு 
OVAN ஐ முச்சூடு செய்து மேல் தட்டில் வைத்து 25 நிமிடங்கள் பேக் செய்தேன் ..
டெஸ்ட் அண்ட் டேஸ்ட் செய்த .கணவரும் மகளும் மிக ருசி என்றார்கள் ...:))
...................................................................................இன்று இரண்டு போஸ்ட் போட்டிருக்கேன் 
இது மற்றும் quilling டுடோரியல் :))

27 comments:

 1. ஆஹா கலக்குறீங்க ஏஞ்சலின்...

  ReplyDelete
 2. நாந்தான் பர்ஸ்ட்டா?? பன் எனக்குதான்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேனகா ...உங்களுக்கு தான் இன்னிக்கு மீன் பன்:))

   Delete
 3. ஆஹா... நல்லது ஆனா நான்.. உ.கிழங்குதான் வைச்சு செய்யணும்..:)

  நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி உ கிழங்கில் செய்து பார்த்து சொல்லுங்க

   Delete
 4. Kalakkareenga ponga! Bun looks yum!

  ReplyDelete
  Replies
  1. Thanks mahi...next i am going to try it with vegetables

   Delete
 5. ஆஹா எனக்கும் செய்யனும் என்று ஆசை வருகிறது..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஃபாய்சா ..செய்து பார்த்து சொல்லுங்க ..ஈஸ்ட் சேர்த்த ஹோவிஸ் மாவு வாங்குங்க

   Delete
 6. Super recipe. I am planing to do this recipe tomorrow.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வானதி நான் அடுத்தது நீங்க சொன்னார் போல சீனி சம்பல் சேர்த்து செய்யபோறேன்

   Delete
 7. //
  இன்று இரண்டு போஸ்ட் போட்டிருக்கேன்
  இது மற்றும் quilling டுடோரியல் :)) // avvvvvvvvvvv realy?...

  ReplyDelete
 8. Fish Bun சூப்பரா வந்திருக்குது... உள்ளே பாதி அவிச்ச முட்டையையும் வச்சு செய்யுங்கோ நெக்ஸ் ரைம்.. சூப்பரோ சூப்பராகும்:).. நல்ல கலராகவும் வந்திருக்கு...

  ReplyDelete
  Replies
  1. சமையல் ராணி சொல்லி நான் செய்யாம இருப்பேனா ..அடுத்தது முட்டை சேர்த்து செய்றேன் :))

   Delete
 9. 2சுராங்கனிக்க மாலுக்கணவா என்று பாடல் கேட்டுள்ளேன்.இப்போதுதான் அர்த்தம் விளங்கிற்று.பன் அருமையாக வந்துள்ளது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சாதிகா ,,எனக்கு பேக்கிங் அவ்ளோ சரியா வராது ஆனா இதுதான் முதல்முறை ஆனாலும் அழகா வந்திடுச்சி .இனி அடிக்கடி செய்யணுமாம் ..வீட்டில் உத்தரவு :))

   Delete
 10. really....is't possible to make fish bun.....i didnt know this...amazing....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஹெலன் .இது ஒரு இலங்கை ஸ்பெஷல் உணவு ....ரெசிப்பி பார்த்து முதன் முதலா செய்தேன் ..
   நீங்களும் செய்து பாருங்க

   Delete
 11. டெஸ்ட் அண்ட் டேஸ்ட் செய்த .கணவரும் மகளும் மிக ருசி என்றார்கள் ...:))
  //

  டேஸ்ட் Ok...டெஸ்ட் ?? -:)

  ReplyDelete
  Replies
  1. அது...... அது .........அவங்களை வச்சித்தான் நான் செய்ற உணவுகளை டெஸ்ட் செய்கிறேன் :))

   Delete
  2. :)) நான் பிறருக்கு சாப்பிட கொடுத்து அப்புறம்தான் நான் டேஸ்ட் செய்வேன்
   அதுவும் அசைவம் ஒன்லி டெஸ்டிங் நோ டேஸ்டிங்

   Delete
 12. good. I read this.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 13. ஆஹா ! குறிப்பும் படமும் சூப்பர்.பார்த்தவுடன் சுவைக்கவும்,செய்து பார்க்கவும் தோன்றுகிறது..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியா ..

   Delete
 14. ரொம்ப நல்ல இருக்கு, பன் ஷேப் இப்படி தான் செய்யனுமா அல்லது நீங்க இந்த ஷேப்பில் செய்தீங்களா

  இந்த பதிவை ஓப்பன் செய்து போட எனக்கு 45 நிமிடம் ஆச்சு

  உங்கள் பக்கம் எதுவும் பிராப்ளம் இல்லை
  எனக்கு தான் சில பக்கங்கள் சரி வர ஓப்பன் ஆவதில்லை
  மற்ற பதிவுகளை பார்க்க முடியல
  முடிந்தால் ரீடரில் பார்த்துட்டு மெயிலில் கமெண்ட் கொடுக்கீறேன் அதை இங்கு பதிந்து கொள்ளுஙள்

  ReplyDelete