அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/27/13

பொட்டுக்கடலை உருண்டை

பொட்டுக்கடலை உருண்டை 
                                                                                
தேவையான பொருட்கள் 
                                                                                   

பொட்டுக்கடலை ...2 கோப்பை 
வெல்லம் (Jaggery )... துருவியது 1 கோப்பை 
அரிசி மாவு ......  கால் கோப்பைக்கும் குறைவு .

செய்முறை 


ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை  போட்டு 
அதன் மேல் நீர் மூழ்கும்படி அளவு ஊற்றி காய்ச்சவும் .
பாகு நன்கு தடிமனாக அதாவது அதை ஒரு துளி எடுத்து 
கோப்பை நீரில் போட்டு பார்த்தால் மிதங்க வேண்டும் ..
அந்த பதம் வரும்போது அடுப்பை அணைத்து 
2கோப்பை பொட்டுகடலையை அதில் போட்டு கலக்கவும் .
இப்ப என்னை போல அவசரக்குடுக்கையாக அதில் 
கை வைக்க வேண்டாம் .:))
சிறிது நேரம் ஐந்து நிமிடம் கழித்து கைகளில் .
அரிசிமாவை தடவி,பொட்டுகடலை கலவையை 
சிறு உருண்டைகளாக பிடிக்கவும் .இன்னொரு 
யோசனையும் இருக்கு :)) கலவை ரெடியானதும் ...
ஆத்துக்காரர் கிட்ட கொடுத்து உருண்டை பிடிக்க 
சொல்லலாம் :))
சத்தான பொட்டுக்கடலை உருண்டை தயார் .


அடுத்து ஏதேனும் ஒரு புதிய ரெசிப்பியுடன் சந்திக்கிறேன் :))

50 comments:

 1. அஞ்சு.... ம் அருமையான சத்தான பொட்டுக்கடலை உருண்டை. ஆனா நீங்க சொன்ன விதமிருக்கே....:) அப்பப்பா... எப்புடி இப்புடி யோசிக்கிறீங்க....:)))

  அவசரகுடுக்கையா கையை உடனே வைக்காதீங்கன்னு சொன்னீங்க அது கரெக்ட்...
  ஆனா இரண்டாவது ஐடியா ஸ்...ஸப்பா... மகா கில்லாடிதான் நீங்க...:)

  நல்ல ரெசிப்பி. பகிர்வுக்கு மிக்க நன்றி அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளமதி ..தட்டில் இருந்து ஒரு உருண்டை எடுத்துக்கோங்க @:))`

   Delete
 2. மிகவும் எளிதாக இருக்கிறது... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்

   Delete
 3. ///அடுத்து ஏதேனும் ஒரு புதிய ரெசிப்பியுடன் சந்திக்கிறேன் :))//

  ஆண்டவா இன்னும் ஏன் உலகம் அழியாமல் இருக்குதப்பனே:)))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ..உங்களயெல்லாம் ஒரு வழி பண்ணாம விட மாட்டேன் :))

   Delete
 4. ஏன் அஞ்சு வெல்லம்/Jaggery தான் பாவிக்கோணுமோ? சுகர் பாவிக்கப்பூடாதோ? ஒரு தடவை கச்சானில் செய்து, பிளேட்டில் போட்டு கட் பண்ணினேன்... அது இறுகமாட்டேன் என அடம்பிடிக்கத் தொடங்கிட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. Girija please come here ...i need your help :))

   Delete
 5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தலைப்புக்குக் கீழ போட்டிருக்கோணும் இது அதிராவுக்கு பிறந்தநாளுக்காக செய்து கொடுத்தது, ஆரும் தொட்டிடவேண்டாம்ம்ம் எல்லாம் அதிராவுக்கே என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆரும் மாறிக்கீறி கை வச்சிடப்போகினம் விடமாட்டேன்ன்ன்ன் எங்கிட்டயேவா?:)

  ReplyDelete
 6. /இப்ப என்னை போல அவசரக்குடுக்கையாக அதில்
  கை வைக்க வேண்டாம் .:))/// ஹா.ஹா..ஹா... நல்லாச் சுட்டிட்டுதுபோல:)

  ReplyDelete
  Replies
  1. :))சுடவில்லை :))கையோடு கை உருண்டைச் எல்லாம் ஒட்டிக்கிச்சு

   Delete
 7. //கலவை ரெடியானதும் ...
  ஆத்துக்காரர் கிட்ட கொடுத்து உருண்டை பிடிக்க
  சொல்லலாம் :))///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் வன்மையான கண்டனங்கள்:))) அதென்ன “சொல்லலாம்”?:).... “சொல்லோணும்”:) அப்பூடின்னு சொல்லியிருக்கோணும்:).. மீ எஸ்கேப்ப்ப்ப்.. வித் பொட்டுக்கடலை உருண்டைஸ்ஸ்ஸ்:))...

  ReplyDelete
  Replies
  1. இந்த பூசார் பாருங்க என்னெல்லாம் சொல்லிதராங்க .ஓகே மியாவ் உங்க அட்வைஸ் படி அப்படியே சொல்றேன் :))

   Delete
 8. Never had pottu kadalai urundai...kadalai urundai sappittirukken, but I don't think I will try this after reading your experience angel Akka! That's the only reason I never made rava laddu, u know? ;) :)

  Looks yummm...give this to Athira, but send me the next batch, ok? :)

  ReplyDelete
  Replies
  1. இல்லை மகி இதை பதமா செய்தா ஒட்டாது .நான் gur சேர்த்து செய்தேன் ,,நம்மூர் வெல்லம் சரிவரும்
   ..sure next batch is for you alone :))

   Delete
 9. பொட்டுக்கடலை உருண்டை படத்தில் பார்க்கவே ஜோரா இருக்கு [கடையிலிருந்து வாங்கி வந்தது போல;) ] பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிண்ணா ..நிஜம்மா நான் தான் செய்தேன் :))

   Delete
 10. படத்தை பார்த்தால் அப்படியே எடுத்து சாப்பிடலாம் போல இருக்கு angelin. நல்ல சத்தான குறிப்பு.

  //ஆத்துக்காரர் கிட்ட கொடுத்து உருண்டை பிடிக்க
  சொல்லலாம் :))//

  சரி சரி.....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமா ...சொன்ன மாதிரியே செய்திடுங்க ..நம்ம கைக்கு பாதுகாப்பு

   Delete
 11. செய்யவும் மிக சுலபமாக இருக்கிறது......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 12. எனக்கு பிடித்த பொட்டுகடலை உருண்டை.
  நல்ல யோசனை வேறு சொல்லி கொடுத்து விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசுவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 13. அம்மாடி சூப்பர்,அருமையாக செய்து காட்டிருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 14. ஆஹா...அருமையான ஸ்னாக்ஸ்..

  ReplyDelete
 15. கலவை ரெடியானதும் ...
  ஆத்துக்காரர் கிட்ட கொடுத்து உருண்டை பிடிக்க
  சொல்லலாம் :))//செம ஐடியா:)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சாதிகா :))நம்ம கைகள் பாதுகாப்பா இருக்கணுமே so இந்த ஐடியா

   Delete
 16. நான் அடிக்கடி இந்த உருண்டை செய்வதுண்டு.. வெல்லத்தில் கொஞ்சூண்டு சுக்கு பொடி சேர்த்து செய்வேன். உருண்டை படத்துல பளபளன்னு அழகா இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. சுக்குபொடி !!! சேர்த்து செய்றேன் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி

   Delete
 17. ஆனாக்க..எங்க ஆத்துக்காரர் உருண்டை பிடித்தால் சாப்பிடமட்டும் தான் செய்வாராக்கும்:(

  ReplyDelete
  Replies
  1. அதுக்கும் ஏதாவது ஐடியா கண்டுபிடிக்கிறேன் ஸாதிகா :))

   Delete
 18. எனக்கு செய்ய வராது .. அப்படியே கொஞ்சம் பார்சல் அனுப்பினால் புண்ணியமா போகும் ..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஹைக்கூ இளவரசன் :)) கண்டிப்பா பார்சல் அனுப்பறேன்

   Delete
 19. அன்பின் ஆஞ்செலின் - பொட்டுக்கடலை உருண்டை - செய்முறை விளக்கம் அருமை - நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. அன்பின் சீனா ஐயா ..வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 20. வணக்கம்,தங்கையே!நலமா?பொட்டுக்கடலை உருண்டை செய்வது 'பிசுக்கோத்து' விஷயம்!சரி,அது ஏன் ஆத்துக்காரர் கிட்ட குடுத்து உருண்டை பிடிக்கணும்?நாமெல்லாம் என்ன மோட்டுவளையைப் பாத்துண்டு(அடடா,தெரிஞ்சு போச்சோ?) உக்காந்திருக்காப்புல தெரியுதோ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க யோகா அண்ணா ..நான் நலம் ..நீங்கள் நலம்தானே :))..எனக்கு நல்லா தெரிஞ்சிடுச்சி இன்னிக்கு உங்க வீட்டில் பொட்டுக்கடலை உருண்டை செய்யபோறீங்க :))

   Delete
 21. உங்க ப்ளாக்" ற்கு என் வாழ்த்துக்கள் அஞ்சு. உங்க‌ ப்ளாக்கிற்கு 2 வயது (27.2.13). வெற்றிகரமாக நடாத்திக்கொண்டிருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய பதிவுகள் தொடர்ந்து(க்விலிங் & சமையல்) தரவேண்டும்.
  தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்க. ஞாபகம் இருந்தது.அன்று வரமுடியவில்லை.

  ReplyDelete
 22. பார்க்கவே நன்றாக இருக்கு . என்னிடம் பொட்டுக் கடலையும் இருக்கு அஞ்சு செய்யப் போகிறேன் . சும்மாவே சாப்பிடலாம் பொட்டுக்கடலையை. நல்ல பகிர்வு நன்றி.

  ReplyDelete
 23. //அடுத்து ஏதேனும் ஒரு புதிய ரெசிப்பியுடன் சந்திக்கிறேன் :))// ம்.. இதுவே புது ரெசிபியாகத்தானே இருக்கு! ;)


  //அடுப்பை அணைத்து// ம். ;D //2கோப்பை பொட்டுகடலையை அதில் போட்டு கலக்கவும்// யூ மீன்... அணைச்ச அடுப்புல! !!
  //இப்ப என்னை போல அவசரக்குடுக்கையாக அதில்
  கை வைக்க வேண்டாம் .:))// ம். விளங்குது. அடுப்பு சுடும். ஆற நேரமாகும். அதுதானே! வேற யார் மாதிரி வைக்கலாம்!! //ஐந்து நிமிடம் கழித்து// ஓ!! ம். வாசிக்காமல் டவுட் கேட்டிருக்கப் படாது நான்.
  //ஆத்துக்காரர் கிட்ட கொடுத்து // ஹா!!!
  சமீப காலமாக இங்கும் பொட்டுக்கடலை பிரபலமாகிக் கொண்டு வருகுது. கட்டாயம் ட்ரை பண்ணுறன்.

  ReplyDelete
 24. படம் பார்க்கப் பார்க்க ஆசையைத் தூண்டுகிறது அஞ்சூஸ். கட்டாயம் முயற்சிப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க இமா :))பொட்டுகடலை உருண்டைசெய்வது மிக சுலபம் .விரைவில் செய்து பாருங்க

   Delete
 25. இன்றைய வலைச்சரத்தில் இந்த பதிவு. வாழ்த்துக்கள்.
  http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html?showComment=1388105779571#c1927188437863207263

  ReplyDelete
 26. அன்புள்ள நிர்மலா, வணக்கம். இன்றைய 27.12.2013 வலைச்சரத்தில் தங்களின் இந்த பொட்டுக்கடலை உருண்டைகளும் இடம் பெற்றுள்ளன. மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். என் மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

  இன்று காலையில் அவசரமாக ஓர் இடத்திற்குச்செல்ல வேண்டியிருந்ததாலும், திரும்பிவர மிகவும் தாமதமாகி விட்டதாலும், இப்போதுதான் வலைச்சரத்தினைப் பொறுமையாக மீண்டும் படித்து கவனித்துப்பாராட்ட நேரம் கிடைத்தது.

  பிரியமுள்ள கோபு அண்ணா.

  ReplyDelete