அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/27/13

தெரிந்துகொள்ள வேண்டியவை .விழிப்புணர்வு.


 ,எங்க ஆலயத்தை சேர்ந்த 75 வயது பெண்மணி  ,
                                                                             

எலும்பு புற்று ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டது ,
மூன்று வருடங்களாக சிகிச்சை பெறுகிறார் ...
இதையெல்லாம் விட அவரது மன உறுதிதான் என்னை 
பிரமிக்க வைப்பது ..மாதமிருமுறை ஆலயம் வருவார் ..,
சுகவீனமாநோருக்கு அவர்கள் இருக்கை அருகில் வந்து 
திருவிருந்து தருவார்கள் ..ஆனால் இவர் அப்படி பெறாமல் 
முன்னால் ஆல்டர் அருகில் சென்றுதான் பெற்றுக்கொள்வார் .
..நோய் வந்துவிட்டதென்று கலங்காமல் //All to God I Surrender//
இது ஒன்றை பிரதானமாக கொண்டே மன உறுதியுடன் 
இருக்கிறார் ,...
யாரேனும் நம் வீட்டிலோ அல்லது தெரிந்த வட்டதிலோ 
இவ்வாறு நோயுற்றவர் இருப்பின் நாம் காட்ட  வேண்டியது 
....அன்பு மட்டுமே பச்சாதாபம் அல்ல என்பது எனது கருத்து .
பரிதாபப்படுவது  அவர்களின் தன்நம்பிக்கையை 
குறைத்து விடும் ...


அம்மா ( ....அதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது .
நம் அனைவருக்குமே முக்கியமாக தெரிந்திருக்க வேண்டிய 
விஷயம் கான்சர் பற்றிய விழிப்புணர்வு  .
அம்மா தனக்கு கான்சர் என்று உறுதி ஆனதும் 
ஒருவருடனும் பேசவோ தான் இருந்த அறையை விட்டு 
வரவோ விரும்பவில்லை மனதால் மிகவும் நொந்து போனார்கள் .
அம்மாவுக்கு வந்தது உணவு குழாய் புற்றுநோய் ..75% பரவியபின்பே கண்டுபிடிக்க முடிந்தது (  ...கீமோ /ரேடியேஷன் /
STAGES ...இவற்றுக்கப்பால் மரணத்தருவாயில் இருக்கும் 
நோயாளிகளின் நிலைமை மிக மிக கொடுமை .மரண வாயிலில் இருப்போருக்கு வெள்நாடுகளில் Hospiceஎனும் மன உறுதிக்கான
 சிகிச்சை வழங்கப்படும் .
எனக்கு விழிப்புணர்வு என்று எழுத யோசனை வந்ததும் 
மனதில் வந்தது இந்த நண்பர்களின் பதிவுதான் .


ரெவரி ..கண்டிப்பாக ஒவ்வொரு40 வயதை தாண்டிய  
பெண்ணும் படிக்க தெரிந்துகொள்ள வேண்டியவை .
மீரா ...COLON புற்று மற்றும் CANCER  SYMPTOMS ..KEEP A WATCH,
           இவர்கள் பதிவு 

அம்மாவுக்கு ஒவ்வொருமுறையும் மெயிலில் ஏதாவது அவர்கள் உண்ண கூடிய சமையல் குறிப்பை தருவார்கள் நம்ம ஜலீலா ..
ஜலீலா ... இங்கு ட்ரீட்மென்ட் எடுக்கும்போது நோயாளிகளுக்கு 
சில உணவு குறிப்புகளை தந்திருக்கார் .

........................................

வந்தபின் கவலைபடுவதை விட வருமுன் காப்போம் .


பின்குறிப்பு 
மேலுள்ள படத்தை இணைக்கும்போது மிகுந்த 
குற்ற வுணர்வு ஏற்பட்டது .அதில் போதகர் அருகில் நிற்பது 
எனது மகள் .ஆலய பாடகர் குழுவில் இருக்கிறாள் .அம்மா
 பல  முறை அவள் அங்கி அணிந்திருக்கும் படத்தை கேட்டாங்க .
.படம் எடுக்கும் சூழ்நிலை அமையவில்லை ..
எடுத்த போதோ  பார்க்க அம்மா இல்லை (

23 comments:

 1. வணக்கம் அக்கா! விழிப்புணர்வான விஷயங்கள் சொல்லியிருக்கீங்க! உங்கள் அம்மா பற்றிய குறிப்புப் படித்ததும் கவலையாகிவிட்டது! டோண்ட் வொறி அக்கா!

  ReplyDelete
 2. உண்மையில் எந்த நோயாளியாக இருந்தாலும், அவருக்கு முதலில் தேவைப்படுவது உள ஆரோக்கியமும் உள உறுதியும் தான்! இவை கண்டிப்பாக ஒரு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மணி

   Delete
 3. நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு.

  //அம்மா
  பல முறை அவள் அங்கி அணிந்திருக்கும் படத்தை கேட்டாங்க .
  .படம் எடுக்கும் சூழ்நிலை அமையவில்லை ..
  எடுத்த போதோ பார்க்க அம்மா இல்லை (//

  கேட்கவே மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது. ;(((((

  அதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது .

  அதிகமாக அதையே நினைத்துக் கவலைப்படாதீங்கோ நிர்மலா, ப்ளீஸ்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா யோசித்து ஒன்றும் ஆகப்போவது இல்லை ..
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .

   Delete
 4. அன்பு அஞ்சு...
  காலம் நல்லவர்களை வெகுநாளைக்கு இவ்வுலகில் வாழ இடமளிப்பதில்லை. அவ்வகையில் உங்கள் அம்மாவும் ஆண்டவரிடம் சேர்ந்துவிட்டார். அம்மாவின் நினைவுச்சுமைகளில் உங்களைத் தொலைத்துவிடாதீர்கள். மனதை தேற்றிக் கொள்ளுங்கள்.

  உங்கள் அம்மாவின் ஆன்ம சாந்திக்காக வேண்டிக்கொள்கிறேன்.

  விழிப்புணர்வு பற்றி அருமையாகக் கூறியுள்ளீர்கள். அவசியம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிவைகளே.
  பகிர்வுக்கு மிக்க நன்றி அஞ்சு...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளமதி ..

   Delete
 5. ஏஞ்சலின்...அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டதே...

  Our thoughts n prayers are always with you...

  எனக்கு தெரிந்த பெண்ணுக்கு முழங்கால் அடியில்...முன்பெல்லாம் காலை வெட்டி எடுப்பது மட்டுமே ஒரே மருத்துவமாய் இருந்தது...

  கடந்த வாரம் அவர்
  allograft prosthetic composite மூலம் காலை இழக்காமல் கான்சரை மட்டும் இழந்தார்...

  For every success story there are thousands who are perishing...

  1 in 3 will get active Cancer...and is fast becoming the #1 killer...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ரெவரி அதற்குள் ஒரு வருடம் வேகமாக கடந்து விட்டது ..

   Delete
 6. வந்தபின் கவலைபடுவதை விட வருமுன் காப்போம் //

  It is very true when it comes to Cancer...as literally there is no CURE for Cancer, inspite of all the miracles in many lives.

  We can always try to prevent...

  நிறைய விஷயங்கள் நாம் இலகுவாய் செய்யலாம்...

  என் அம்மாவிடம் அதிகம் சண்டை போட்டது வீட்டில் உள்ள CHEMICALS ஐ வெளியே தூக்கிப்போட சொல்லி தான்...

  குறிப்பாக தரை...பாத்ரூம் சுத்தம் செய்ய உபயோகம் செய்யும் CHEMICALS அனைத்தும் உடன் வெளியே வீச வேண்டும்...

  முடிந்த வரை REFINED சீனி சேர்ப்பதை தவிர்க்கலாம்...

  தேவை இல்லாமல் CT ஸ்கான்,XRAY தவிர்க்கலாம்...

  இப்படி சின்ன சின்னதாய் எவ்வளவோ பண்ணலாம்...

  ReplyDelete
  Replies
  1. சரியாய் சொன்னீர்கள் ..நாங்கள் கெமிகல்ஸ் அதிகம் பயன்படுத்துவதற்கு பதில் வினிகர் சேர்த்த கலவையை பயன்படுத்துவோம் .மேலும் சோடா பை கார்பனேட் வினிகருடன் சேர்த்து க்ளீனிங் செய்ய பயன்படுத்துவோம் .
   இந்த வழக்கம் ஜெர்மனில ஒரு மூதாட்டி சொல்லிய குறிப்பு .ப்ரீசரில் போட்டு ரி ஹீட் போன்ற வற்றை செய்ததில்லை மேலும் மைக்ரோவேவ் எங்க வீட்டில் அழகு பொருள்தான் அன்றே செய்து அன்றே சாப்பிடுவோம் .

   Delete
  2. விழிப்புணர்வு பற்றி அருமையாகக் கூறியுள்ளீர்கள். அவசியம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிவைகளே.

   உங்கள் அம்மாவின் ஆன்ம சாந்திக்காக வேண்டிக்கொள்கிறேன்.


   ivalavu visayam iruka...?

   Delete
  3. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி faisaa ..நிறைய விஷயம் இருக்கு நானும் இதைப்பற்றி விரிவா பதிவிடுகிறேன் ,

   Delete
 7. பாட்டி ஏஞ்சலாய் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்கள் பேத்தியை...

  ReplyDelete
 8. கொஞ்சம் சுவாரஸ்யம் கலந்து கான்சர் தொடர் எழுதிக்கொண்டிருக்கிறேன் ஏஞ்சலின்...ஒரு ஜர்னல் போல...விரைவில் எதிர்பாருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க சந்தோசம் சீக்கிரம் எழுதுங்க ..ஆவலாயிருக்கேன் படிப்பதற்கு

   Delete
 9. நல்ல விழுப்புனர்வு பதிவு பலவிடயங்களை வலியுறுத்தியிருக்கீங்க பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி

   Delete
 10. //நாம் காட்ட வேண்டியது
  ....அன்பு மட்டுமே பச்சாதாபம் அல்ல என்பது எனது கருத்து .
  பரிதாபப்படுவது அவர்களின் தன்நம்பிக்கையை
  குறைத்து விடும் ...//

  மிகச் சரியாக சொல்லியிருக்கீங்க angelin.

  //வந்தபின் கவலைபடுவதை விட வருமுன் காப்போம் .//

  நல்லதொரு விழிப்புணர்வு விஷயம்.

  ReplyDelete
  Replies
  1. ரமா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 11. யாரேனும் நம் வீட்டிலோ அல்லது தெரிந்த வட்டதிலோ
  இவ்வாறு நோயுற்றவர் இருப்பின் நாம் காட்ட வேண்டியது
  ....அன்பு மட்டுமே பச்சாதாபம் அல்ல என்பது எனது கருத்து .
  பரிதாபப்படுவது அவர்களின் தன்நம்பிக்கையை
  குறைத்து விடும் ...//

  நீங்கள் சொல்வது உண்மை, முற்றிலும் சரி.
  அவர்களிடம் அன்பு காட்டி, தன்னம்பிக்கை ஊட்டும் ஆறுதல் மொழி தான் சொல்லவேண்டும்.
  நல்ல விழிப்புணர்வு பதிவு.
  நீங்கள் உங்கள் அம்மாவை இழந்தது போல் நான் என் அக்காவை இழந்து இருக்கிறேன் இந்த கொடிய அரக்கனுக்கு.

  ReplyDelete
  Replies
  1. நிஜம்தான் மேடம் கான்சர் கொடிய அரக்கன் .அரக்கனை வென்றாக வேண்டும் ....வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி

   Delete