அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/15/13

உருளை பட்டாணி குருமா

உருளை பட்டாணி குருமா 
                                                                             


                                                                                 
தேவையான பொருட்கள் 


மீடியம் அளவு உருளை கிழங்கு ......... 4....தோலுரித்து வெட்டி வைக்கவும் 
frozen பச்சை பட்டாணி .....................1 கோப்பை 
தக்காளி ........சிறிய அளவில் ..வெட்டியது ................1
வெங்காயம் ................................  1நறுக்கி வைக்கவும் 
இஞ்சி பூண்டு விழுது .............1 ...ஸ்பூன் 
மஞ்சள் தூள் ........ தேக்கரண்டி 
மிளகாய்த்தூள் ......... தேக்கரண்டி 
தனியா தூள், ................. தேக்கரண்டி 
பச்சை மிளகாய் .......2 இரண்டாக நறுக்கியது 
கசகசா ...poppy சீட்ஸ் .வறுத்து எடுக்கவும் ...1 1/2 தேக்கரண்டி 
இதனை 1 மேசைகரண்டி தேங்காய் துருவலுடன் சேர்த்து 
விழுதாக அரைக்கவும் .
ஏலக்காய் /பட்டை /கிராம்பு /சோம்பு .........தாளிக்க  தலா 2
எண்ணெய் .............  1 ஸ்பூன் 
எலுமிச்சை சாறு .............தேக்கரண்டி .
உப்பு ....... தேவையான அளவு 


தாளிக்க கொடுத்துள்ள வாசனை பொருட்களை எண்ணெய் ஊற்றி 
குக்கரில் தாளிக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது ,வெங்காயம் பச்சை மிளகாய் 
ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக எண்ணையில் வதக்கவும் .
,மிளகாய் ,தனியா மஞ்சள் தூள்களை சேர்த்து பிரட்டவும் 
நறுக்கிய தக்காளி ,உருளை பட்டாணி சேர்க்கவும் 
உப்பு அளவு பார்த்து சேர்க்கவும் ..
மூன்று நான்கு நிமிடங்கள் தட்டு போட்டு மூடவும் .
பிறகு விழுதாக அரைத்த தேங்காய் கசகசா கலவையை 
சேர்த்து பிரட்டவும் ..
கிழங்கு மூழ்கும் அளவு நீர் சேர்த்து குக்கரை மூடி ..மூன்று விசில்
வரும்வரை அடுப்பில் வைக்கவும் 
பிறகு அடுப்பை அணைத்து ..ஆவியடங்கினபின் மூடியை திறந்து 
எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
கசகசா சேர்க்க விருப்பமில்லையெனில் அதற்க்கு பதில் தயிர் ஒரு மேஜைகரண்டி காய்களை வதக்கும்போது சேர்த்தால் குருமா 
திக்காக வரும் ..மற்றும் தேங்காயுடன் நான்கு முந்திரி பருப்புகளை 
சேர்த்து அரைத்தாலும் குருமா திக்காக வரும் .

இந்த குருமா சப்பாத்தி ,இட்லி ,தோசை ,இடியாப்பம் இவற்றுடன்
 சாப்பிட நன்றாக இருக்கும் .
எங்க வீட்டில் எப்பவும்போல் சப்பாத்திக்கு சாப்பிட்டோம் .


கசகசா ...poppy சீட்ஸ் .
                                                                       

34 comments:

 1. ஆஹா... அஞ்சு... விடுறேலை எண்டுதான் இருக்கிறீங்க...:)

  அதாவது பதிவுகளைப் போட்டு பிரித்தானியாவில் ஒரு கலக்கு கலக்கப்போறதைச் சொன்னேன்...:)))

  ReplyDelete
  Replies
  1. ஓ.. நன்றி... அஞ்சு...:)

   Delete
  2. என்னை உசுப்பி விட்டதே அதிரா தான் ..இப்ப ஆளைக்காணோம்

   Delete
  3. ஓம் அஞ்சு... இண்டைக்கு முழுதுமே ஆளைக் காணோம்...
   எங்கை போயிட்டாவோ...:0

   Delete
  4. அஞ்சு ங்கை... மற்றது...;)....

   காணோமே.. தேடீட்டேன்...

   Delete
  5. Noooooooooooo.. the first plate is always for meeeeeeeeeee karrrrrrrrrr:)

   Delete
  6. மீ வந்துட்டேன்ன்ன்ன்.... ஆங்ங்ங் அதேதான் அஞ்சு கீப் இட் மேல:).. பிரித்தானியாவில புளொக்ஸ்பொட் ஐ 1 ஆவதா ஆக்காமல் ஓயமாட்டோம்ம்ம்:)..

   Delete
 2. நல்ல ரெஸிப்பி... உருளைக்கிழங்கும் பட்டாணியும் குருமாவுக்கு சூப்பர் கொம்பினேசன். ஆனா கசகசா போடுவது, கடைசியில் எ.புளி விடுவதும் எனக்கு புதுசு.

  செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. Mohn ...என்று ப்ரெட் ப்ரோட்ச்சுன் இல் எல்லாம் கருமை நிறத்தில் இருக்குமே ஜெர்மனில் அதுதான் poppy சீட்ஸ்
   ..நாங்க அதைதான் கச கசா என்போம் ..

   Delete
  2. ஆமா.. கேள்விப்பட்டிருக்கேன். ஆனா சமையலுக்கு இதுவரை பயன் படுத்தியதில்லை.
   வாங்கிச் சேர்த்து செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி அஞ்சு..:)

   Delete
 3. ஆவ்வ் சூப்பர் குருமா. நான் இக்கறி சப்பாத்தி பரோட்டாவுக்கு பெரும்பாலும் செய்வேன், ஆனா அரைப்பதெல்லாம் கிடையாது.

  ஒரு தடவை சிக்கின் குருமாவுக்கு கசகசா அரைத்தேன்... அது அளவு கூடியதோ என்னவோ... அன்றோடு குருமா செய்வதையும் விட்டுவிட்டேன்ன்... அதுக்குப் பதில் தயிர் சேர்க்கலாம் எனில் குட் மெதேட்... வில் ட்ரை இட்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதீஸ் :))எங்கே நாலு போஸ்ட்ல ஒண்ணுதான் ரிலீஸ் ஆகிருக்கு ..சீக்கிரம் மற்றதை போடுங்க
   தயிர் சேர்த்து செய்யுங்க நல்லா வரும்

   Delete
 4. நிறைய பேர் ரெசிப்பியினை நீங்க செய்து, படம் போட்டு இருக்கிங்க.. நாளை இந்த ரெசிப்பி செய்து பார்த்து சொல்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஃபாய்சா ..எங்க வீட்ல சப்பாத்திக்கு வித விதமா செய்யணும் ....
   எங்கம்மா எப்பவும் குருமாக்கு கசகசா சேர்ப்பாங்க .அதே முறையில் செய்தேன் ..

   Delete
 5. இது கூட மும்பை சப்பாத்தி வைத்து சாப்பிட சூப்பராக இருக்கும்...!

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் சப்பாத்தி கூட நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்... ஹிஹி...

   Delete
  2. ஆமாம் மனோ @ தனபாலன் .சப்பாத்தி பரோட்டாவுக்கு இது ரொம்ப டேஸ்டி சைட் டிஷ் .

   Delete
  3. தனபாலன் .அது என்ன திண்டுக்கல் சப்பாத்தி உங்க வீட்டில்கேட்டு ரெசிப்பி தாங்களேன் எங்களுக்கு :)

   Delete
 6. ம்ம்...சப்பாத்தி.பரோட்டாவுக்கு அனைவரும் விரும்பும் குருமா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சாதிகா ரொம்ப ருசியான சைட் டிஷ் .வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 7. Nice kuruma! Perfect match for chapathi, poori & Parotta!

  Am not getting white color poppy seeds here. Once I saw black colored poppy seeds, are they poppy seeds angel Akka? Ksakasaa white-color la thane irukkum?

  ReplyDelete
  Replies
  1. ப்ளாக் கலர் நான் ரொட்டி மற்றும் ப்ரெட் இவற்றில் சேர்ப்பாங்க மகி .வெள்ளை மசாலாவுக்கு சேர்ப்பாங்க
   இங்கே எல்லாமே கிலோ கணக்கில் கிடைக்கும் .வாடா இந்தியர் அதிகம் பயன்படுத்தறாங்க ரொட்டிக்கும் நானுக்கும் .

   Delete
 8. மிக்க நன்றி. சுவை பார்த்தபின் தான் இவ் வாழ்த்தை எழுதுகின்றேன். வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. .ருசித்து பார்த்து பின்னூட்டமிட்டதுக்கு மிக்க நன்றி அக்கா

   Delete
 9. நல்லாயிருக்கு ஏஞ்சலின்,இப்பவே சப்பாத்திக்கு செய்யனும் போல இருக்கு...

  மகி,கறுப்பு கலரில் இருக்கும் கசகசாவை பேக்கிங்ல் உபயோகபடுத்துவாங்க..

  உ.ம்// ப்ரெட் மேல எள் தூவுவதை போல கறுப்பு கசகசாவை துவலாம்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேனகா .என் பொண்ணுக்கு இப்படி விதம் விதமா சைடிஷ் சப்பாதிக்குன்னே செய்வேன் .
   இங்கே வட இந்தியரும் பாகிஸ்தானியரும் கசகசாவை நிறையா ரொட்டி நானில் சேர்க்கிறார்கள்

   Delete
 10. கச கசா சேர்த்து குருமா செய்வது தனி ருசிதான்..கச கசாவிற்கு வயிற்று புண்ணை போக்கும் ஆற்றலும் உண்டு.நான் குருமாவில் சேர்ப்பேன்..உங்கள் செய்முறையில் பொருட்கள் அதிகம் உள்ளன.இதை போல் பூரிக்கு செய்து பார்க்கிறேன்.நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராதா ராணி .நான் இம்முறை தண்ணீர் குறைவா சேர்த்து செய்தேன் திக்காக வந்தது ..நான் காரம் குறைத்தே சமைப்பேன் மகளுக்காக .பூரி பரோட்டவுக்கும்மிக நல்ல சைட்டிஷ் .நீங்க சொன்னாற்போல வயிற்ருக்கும் மிக்க நல்லது ..
   இதில் ஒரு ச்வீட் செய்து ..வயிற்று உபாதைக்கு தருவாங்களாம் பாகிஸ்தானியர் .நண்பி ஒருவர் சொன்னார்

   Delete
 11. நல்ல ரெசிபி தந்திருக்கிறீங்க அஞ்சு.ஏனென்றால் எனக்கு சப்பாத்தி,பூரிக்கு சைடிஷ் செய்வது சன்னா மசாலாதான். இது வித்தியாசமாக இருக்கு. செய்துபார்க்கிறேன் அஞ்சு.
  கசகசா கறுப்பு பலூடா,சர்பத்க்கு போடுவது.வைட் (நீங்க படத்தில் காட்டியிருப்பது) என்னிடம் இருக்கு.இதுதானே அரைத்துப்போடுவது.

  ReplyDelete
 12. அருமையான குறிப்பு. இந்த ”ஆலு மட்டர்” சப்ஜியை நானும் சப்பாத்திக்கு செய்வேன்.

  ReplyDelete