அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/11/13

பொக்கிஷமான என் பொருட்கள்

பொக்கிஷமான என் பொருட்கள் :))

இது வாலன்டைன்ஸ் தினத்துக்காக செய்தது :))


                                                                                   
சிறுவயது முதல் பாதுகாத்த நிறைய பொருட்கள் அப்பாவின் 
பணி மாற்றம் காரணமாக தொலைத்து விட்டேன் ..அதற்குபிறகு 
நான் பத்திரமாக வைத்திருக்கும் சில பொக்கிஷங்கள் .
இந்த தொடர் பதிவை எழுத அழைத்த வானதிக்கு நன்றி 
காதலர் தினமும் வருவதால் அதற்க்கு பொருத்தமாக 
அமைந்து விட்டது ..:))

இந்த பொக்கிஷத்தின் வயது 15:)
                                                                      


இதோ இந்த தங்க ப்ரேஸ்லெட் கைகடிகாரம் பல 
வருடங்கள் முன் எங்கள் நிச்சயதார்த்தத்திற்கு 
இரண்டு நாட்கள் முன் அதாவது 
ஒரு பிப்ரவரி 14 வேலண்டைன்ஸ் தினமன்று 
விரைவில் என் கணவர் ஆக போகிறவர்  கொடுத்த 
 பரிசு .
அத்துடன் இந்த பைபிள் மற்றும் இந்த பைபிள்
வாசகம் அடங்கிய frame .                                                                                 
..இந்த வாசகம் காதல் படம் பார்த்தவங்க எல்லாருக்குமே தெரிந்திருக்கும் .சில வருடங்கள் முன் சூப்பர் ஹிட் படம் .
இதில் ஆங்கிலத்தில் இருக்கு தமிழில் //நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை ,உன்னை கைவிடுவதுமில்லை //

இன்னும் பத்திரமா வச்சிருக்கேன் அனைத்தையும் 
..இந்த பைபிள் எப்பவும் தனியே செல்வதென்றால் எனது 
கைப்பையில் இருக்கும் . சென்ற வருடம் இந்திய பிரயாணம் 
முடிந்து நான் தனியே வர வேண்டிய சூழ் நிலை ..
மீனம்பாக்கம் ஏர்போர்ட் உள்ளே நுழையும்போது தான் பகீர் 
என்றது ...பையில் பைபிள் இல்லை ..
செக் இனுக்கு குறைந்த நேரமே இருக்கு ..நான் அழ ஆரம்பிததை 
பார்த்து கார் டிரைவர் உடனே மீண்டும் வீட்டுக்கே காரை விட்டார் பயங்கர ஸ்பீட் ..ஓடி சென்று மேஜையில் இருந்த பைபிளை அள்ளி அணைத்து கொண்டபோதுதான் போன உயிர் திரும்பினார் போல் இருந்தது .


இந்த பிள்ளையார் படம் போட்ட ஆயுத பூஜை துணி பை 
எங்க அப்பா நான் கன்சீவ் ஆகியிருந்த நேரம் எனக்கு விருப்பமான பொருட்களை எங்க நண்பர் ஒருவரிடம்  இந்த பையில் சுற்றி இன்னு ம் நிறைய பாக்கேஜ் எல்லாம் செய்து அனுப்பியிருந்தார் ..
அப்பா நினைவா இன்னும் வைத்திருக்கேன் .                                                                          

இவை அம்மா எனக்கு திருமணம் நிச்சயமானதும் அவசர அவசரமா 
கிடைத்த பழைய புத்தகங்கள் இலிருந்து எனக்கு வெட்டி கொடுத்தது 
எல்லாம் சமையல் குறிப்புகள் மங்கையர்  மலர் ,கலைமகள் ,கல்கி 
புத்தகங்கள் இலிருந்து .இதை தந்த பின் அவங்க சொன்னது 
இன்னும் நினைவில் இருக்கு :))

//இதையெல்ல்லாம் பார்த்து படிச்சாவது எங்க மருமகனுக்கு 
ஒழுங்கா சமைச்சு கொடு //                                                                       
இவை மட்டுமன்றி ஓவ்வோர் வருடமும் ஊருக்கு 
போகும்போது அவங்க சேர்த்து வைத்த அவள் விகடன் 
சமையல் இணைப்புகளும் எனக்கு கொடுப்பாங்க 
இதையும் பத்திரமா வச்சிருக்கேன் .


                                                                                     
இவை எங்கள் குட்டி இளவரசி பிறந்ததும் அணிவித்த  baby
body suits மற்றும்   booties .                         

பொக்கிஷமான என் பொருட்களில் நிறைய நினைவுகளையும் 
மனதில் இருத்தி வச்சிருக்கேன் ..

நம் நட்புக்களின் பொக்கிஷங்கள் இங்கே 
வரிசையா ஒவ்வொன்றும் சுவாரஸ்யம் !!!

மணித்துளிகள் ஆசியாவின் பொக்கிஷங்கள் 
கோவை 2 தில்லி ஆதி 
எல்லா புகழும் இறைவனுக்கே ஸாதிகா 

வானதியின்  பொக்கிஷங்கள் என்னை தொடர் பதிவு எழுத அழைத்த வானதிக்கு 
நன்றி .இதை தொடர நான் அழைப்பது .......
முதலாமவர் :)))அறுசுவை அரசர் ...வி .ஜி .கே .
கோபு சார் அவர்கள் .
அடுத்தது 
காவியத் தலைவன் சகோதரர் ரெவரி 
கவிதாயினி ஹேமா 
மதுரகவி   ரமா ரவி 
பிரியசகி அம்முலு ..


அனைவருக்கும் அதாவது காதலித்தவர்களுக்கும் :))
காதலித்து கொண்டு இருப்பவர்களுக்கும் 
இனிமே காதலிக்க போறவங்களுக்கும் 
இனிய முன்கூட்டிய காதலர் தின வாழ்த்துக்கள் .                                                                          
                                                 

71 comments:

 1. நினைவுப் பொருட்கள் அனைத்தும் அருமை...

  நிறைய நினைவுகளையும் சேமித்து வைத்துள்ளது முக்கியம்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன் ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .சரியாக சொன்னீங்க நிறைய நினைவு பொக்கிஷங்களும் இருக்கு

   Delete
 2. Replies
  1. நோ :))செகண்ட் .
   வாங்க மகி

   Delete
 3. Nice post Angel Akka..will come back soon!

  ReplyDelete
 4. வாவ்வ்வ்வ்... சூப்பர்.. காதலர்தின கார்ட். ரொம்ம்ப அழகாக இருக்கு. வெள்ளை அன்னம் அசத்தல். பிரமாதம்.. வாழ்த்துக்கள்.

  உங்களுக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
 5. பொக்கிஷங்கள் ஒவ்வொன்னும் சொல்லும் கதை அடடா கண்ணில நீரை வரவைக்குது. அருமையான நினைவுகள். இத்தனையையும் பத்திரமா பாதுகாப்பா வைச்சிருக்கீங்களே.. ரொம்பப் பெருமையான விஷயம்...

  அசத்திட்டீங்க அஞ்சு..வாழ்த்துக்கள்! உங்கள் மலரும் நினைவுகளும் அருமையாக இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. இன்னும் நிறைய இருக்கு ..பதிவின் நீளம் கருதி குறைத்து விட்டேன் :))

   Delete
 6. அன்புள்ள நிர்மலா,

  வணக்கம்.

  அத்தனையும் அழகோ அழகு தான். படித்து மகிழ்ந்து பரவஸம் ஆனேன்.
  இதோ ஒவ்வொன்றாக கருத்துக்கூறுகிறேன்.

  >>>>>>>

  ReplyDelete
 7. இது வாலன்டைன்ஸ் தினத்துக்காக செய்தது :))

  அன்னப்பறவைகளில் ஒரு ஜோடி. மிகவும் பொருத்தமான அழகான அட்டை தான்.

  அதிலும் அந்த பெண் அன்னம், வெட்கித்தலைகுனிவது போல உள்ளது சிறப்போ சிறப்பு தான். ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  >>>>>>>

  ReplyDelete
 8. //இதோ இந்த தங்க ப்ரேஸ்லெட் கைகடிகாரம் பல வருடங்கள் முன் எங்கள் நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாட்கள் முன் அதாவது ஒரு பிப்ரவரி 14 வேலண்டைன்ஸ் தினமன்று விரைவில் என் கணவர் ஆக போகிறவர் கொடுத்த பரிசு .//

  அதைப்பார்க்கவே அழகோ அழகாக உள்ளது. எவ்வளவு தூரம் உங்களை வாட்ச் செய்து அன்புடன் அளித்துள்ளார். அவருக்கும் என் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் மறக்காமல் சொல்லிடுங்கோ.

  //அத்துடன் இந்த பைபிள் மற்றும் இந்த பைபிள் வாசகம் அடங்கிய frame //

  இதுவும் மிகவும் மதிப்பு வாய்ந்த பரிசு தான் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது..

  >>>>>>

  ReplyDelete
 9. //மீனம்பாக்கம் ஏர்போர்ட் உள்ளே நுழையும்போது தான் பகீர்
  என்றது ...பையில் பைபிள் இல்லை ..செக் இனுக்கு குறைந்த நேரமே இருக்கு ..நான் அழ ஆரம்பிததை பார்த்து கார் டிரைவர் உடனே மீண்டும் வீட்டுக்கே காரை விட்டார் பயங்கர ஸ்பீட் ..ஓடி சென்று மேஜையில் இருந்த பைபிளை அள்ளி அணைத்து கொண்டபோதுதான் போன உயிர் திரும்பினார் போல் இருந்தது .//

  மிகவும் த்ரில்லிங்கான அனுபவமாக உள்ளது. படிக்கும் எனக்கே போன உயிர் திரும்பி வந்தது போலவே இருக்குது.

  >>>>>>

  ReplyDelete
 10. //இந்த பிள்ளையார் படம் போட்ட ஆயுத பூஜை துணி பை, எங்க அப்பா நான் கன்சீவ் ஆகியிருந்த நேரம் எனக்கு விருப்பமான பொருட்களை எங்க நண்பர் ஒருவரிடம் இந்த பையில் சுற்றி இன்னு ம் நிறைய பாக்கேஜ் எல்லாம் செய்து அனுப்பியிருந்தார் ..//

  தங்கள் அப்பாவின் அன்பும் அதில் நிறைந்து வந்துள்ளது. படிக்கவே சந்தோஷமாக உள்ளது ....... நிர்மலா. ;)))))

  //அப்பா நினைவா இன்னும் வைத்திருக்கேன் . //

  என்றைக்கும் அது தங்களிடமே இருக்கட்டும், அப்பாவின் ஆசீர்வாதமாக !

  >>>>>

  ReplyDelete
 11. //இவை அம்மா எனக்கு திருமணம் நிச்சயமானதும் அவசர அவசரமா
  கிடைத்த பழைய புத்தகங்கள் இலிருந்து எனக்கு வெட்டி கொடுத்தது
  எல்லாம் சமையல் குறிப்புகள் ..மனகையர் மலர் ,கலைமகள் ,கல்கி
  புத்தகங்கள் இலிருந்து .

  இவை மட்டுமன்றி ஓவ்வோர் வருடமும் ஊருக்கு
  போகும்போது அவங்க சேர்த்து வைத்த அவள் விகடன்
  சமையல் இணைப்புகளும் எனக்கு கொடுப்பாங்க
  இதையும் பத்திரமா வச்சிருக்கேன் .//

  அம்மாவின் நினைவலைகளை மனதில் தாங்கிக்கொண்டு, இந்தப்பயனுள்ள புத்தகங்களை எவ்வளவு அழகாகச் சேர்த்து வைத்துள்ளீர்கள், என்பதை நினைக்கும் போது, எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது, நிர்மலா. ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 12. //இவை எங்கள் குட்டி இளவரசி பிறந்ததும் அணிவித்த body warmer
  மற்றும் booties .//

  ஆஹா, பொதுவாகக் குழந்தைகள் அணியும், குட்டி மோதிரம், தங்க அரணா, வளையல்கள், கால் கொலுசுகள், காப்புகள், முக்காப்பு, தண்டைகள் போன்றவற்றை, பிறகு அடுத்து பிறக்கும் குழந்தைகளுக்காக சேர்த்து பத்திரப்படுத்துவது உண்டு.

  நீங்கள் முதன் முதலாக அணிவித்த ஆடைகளையும் பத்திரமாக வைத்திருப்பது கேட்கவும், காணவும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  >>>>>>>

  ReplyDelete
  Replies
  1. நான் மகளுக்கு முதல் வாக்சிநேஷன் போட்டப்ப டாக்டர் துடைக்க கொடுத்த பஞ்சை கூட பத்திரமா வச்சிருக்கேன் ..கம்மல் எல்லாம் இருக்கு ...படங்கள் நிறைய சேர்த்தா வாசிக்க கடினம் என்று சாம்பிளுக்கு சிலவற்றை மட்டும் போட்டேன் :))

   Delete
 13. //என்னை தொடர் பதிவு எழுத அழைத்த வானதிக்கு நன்றி .

  இதை தொடர நான் அழைப்பது ....... முதலாமவர் :)))அறுசுவை அரசர் ...
  வி .ஜி .கே .கோபு சார் அவர்கள் .//

  அடடா, நான் மாட்டீஈஈஈஈஈஈஈ.

  நிர்மலாவுக்காக நான் ஏற்கனவே எழுதிய தொடர்பதிவான
  “ஊரைச்சொல்லவா! பேரைச்சொல்லவா!!” மிகுந்த வரவேற்பை பெற்றது. http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

  அதனால் இதையும் ஏற்றுக்கொள்கிறேன். முயற்சிக்கிறேன்.

  அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி.

  அன்புடன் கோபு அண்ணா

  அழகான இந்தப்பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அனைத்து கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா ..
   ஆவலுடன் உங்கள் தொடர் பதிவை எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன் :)))

   Delete
 14. //அனைவருக்கும் அதாவது காதலித்தவர்களுக்கும் :))
  காதலித்து கொண்டு இருப்பவர்களுக்கும்
  இனிமே காதலிக்க போறவங்களுக்கும்
  இனிய முன்கூட்டிய காதலர் தின வாழ்த்துக்கள் .//

  ஆஹா, இதில் நான் எந்த Category இல் வருகிறேன் என எனக்கே ஒன்றும் புரியவில்லை. ;))))) எனினும் அனைத்து Category சார்பிலும் என் நன்றிகள்.

  ReplyDelete
 15. பொக்கிஷங்களாக பொக்கிஷப்பகிர்வுகள் அருமை ..பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜேஸ்வரியக்கா .அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி .

   Delete
 16. Super and interesting things. I have my kids clothes too. I am at work now. Will come back later.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வானதி .இன்னும் நிறைய இருக்கு ..பதிவு நீளமாகிடும்னு ..விட்டுட்டேன்

   Delete
 17. ஆவ்வ்வ்வ்வ் சூப்பர் அஞ்சு. இங்கு எங்களுக்கு வன் வீக் ஸ்கூல் ஹொலிடே அதனால வெளியே போயிருந்தோம் இப்பதான் பார்க்கிறேன்ன்..

  ReplyDelete
  Replies
  1. எங்களுக்கு அடுத்த வாரம் லீவ்

   Delete
 18. முதலாவது அன்னங்கள் சூப்பர்... மிகவும் அழகாக இருக்கு. என் நண்பியின் அனுவசறி வருது இப்படியே ஈ அடிச்ச கொப்பிபோல அன்னம் செய்யலாமா என ஓசிக்கிறேன்..

  ReplyDelete
 19. ஆஹா பொக்கிஷங்கள் அனைத்தும் அருமை.. மகளின் குழந்தை உடுப்பெல்லாம் சேர்த்து வச்சிருக்கிறீங்க சந்தோஷமான விஷயம்.

  எனக்கு சின்ன வயசிலிருந்து நாட்டு நடப்புக்களால் சேர்ப்பதும் பின்பு கைவிட்டு ஓடுவதுமாக இருந்தமையால், சேகரிப்பதில் ஒரு வெறுப்பு, அதனால பெரிதாக சேகரிப்பதில்லை.... இனி எப்ப தொலையுமோ எனும் பயம்... சேகரித்து பின் அது தொலையும்போது ஏற்படும் கவலையைக் காட்டிலும், சேகரிக்காமலே இருப்பது நல்லதென நினைப்பேன்:(.

  அப்படித்தான் என் 18 ஆவது வயதோடு டயறி எழுதுவதையும் நிறுத்திக்கொண்டேன்ன்.. கிட்டத்தட்ட 7 வயதிலிருந்து டயறி எழுதி சேகரித்து வந்ததெல்லாம் ஒரே நாளில் கைவிடவேண்டி வந்ததுதான் காரணம்.

  உங்கள் சேகரிப்புக்கள் அனைத்தும் அருமை.. பத்திரமாக வச்சிருங்கோ.

  ReplyDelete
  Replies
  1. நான் நிறைய சேர்த்து வச்சிருக்கேன் அதீஸ் .இடம் பத்தாது இங்கே பதிவிட

   Delete
  2. அப்படித்தான் என் 18 ஆவது வயதோடு டயறி எழுதுவதையும் நிறுத்திக்கொண்டேன்ன்.. கிட்டத்தட்ட 7 வயதிலிருந்து டயறி எழுதி சேகரித்து வந்ததெல்லாம்//////

   Athira, I think you became emotional and slipped the tongue?! Engada poosar eppavume sweet 16 alle?? :) ;)

   Delete
  3. வெல்டன் மகி :)) இதை காப்பி பேஸ்ட் செய்து எல்லார்கிட்டயும் காட்டனும் இன்னும் எத்தனை நாளுக்கு மேடம் sweeet 16 என்று கதை விட முடியும் ..வான்ஸ் ஓடிவாங்க இதை பாருங்க :))))))

   Delete
 20. அருமையான நினைவுப்பரிசுகள் அஞ்சலின் அக்காள் நீங்கள் கொடுத்து வைத்தவர் !ம்ம்ம் நல்லகாலம் தனிமரம் தப்பி விட்டது:)))))

  ReplyDelete
 21. அருமையான நினைவுப்பரிசுகள் அஞ்சலின் அக்காள் நீங்கள் கொடுத்து வைத்தவர் !ம்ம்ம் நல்லகாலம் தனிமரம் தப்பி விட்டது:)))))

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..நீங்க பிசி என்பதால் விட்டேன்

   :))) அதிரா நோட் திஸ் ...

   Delete
 22. ovvoru pokisamum romba alagaha iruku.. bathirama ungaludan vaithukollavum.. anna paravai super.. naanum try pannuren shape pey varala.. :-( ippa veethil ennaku sinna ponnukum health sari illai.. sari yaana pinbu thodarkuren..

  ReplyDelete
  Replies
  1. வாங்க பாய்சா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..என்ன சந்தேகம்னாலும் கேளுங்க .முதலில் கொஞ்சம் கடினம் பிறகு ரொம்ப ஈசியாக வரும்

   Delete
 23. எனக்கும் பைபிள் மறந்த அனுபவங்கள் உண்டு, எங்கே பிரயாணம் சென்றாலும் பைபிள் என்னோடேதான் பயணிக்கும்...!

  நல்ல நினைவலைகள்...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
   அதுதான் நான் முதல் முறை இவ்வாறு பைபிளை மறந்து வீட்டில் விட்டது .
   நீங்களும் உங்க நினைவுகளையும் பொக்கிஷங்களையும் பகிருங்களேன் ..

   Delete
 24. ஏஞ்சல்...இது சரியோ.நீங்கள் என்ர பேரையும் போட்டது சரியோ எண்டு கேக்கிறன்.இவ்வளவு வடிவா எல்லாத்தையும் போட்டோ எடுத்துப் போட்டிருக்கிறீங்கள்.என்னட்ட என்ன இருக்கு பொக்கிஷ்ங்களாய்ப் போட.நினைவுகள் மட்டுமே எப்போதும் கவிதைகளாய் வருது !

  எத்தனை நினைவுகளைப் பொக்கிஷமா சேர்த்து வச்சிருக்கிறோம் ஒவ்வொருத்தரும்.அந்த நினைவுகள்தான் வாழ்வின் உந்துசக்தியா நான் நினைக்கிறன் ஏஞ்சல் !

  ReplyDelete
  Replies
  1. ஹேமா படங்கள் இணைக்கணும் என்றில்லை ..பொக்கிஷமான நினைவுகளை கவிதைகளாக்கி தாங்க ..
   அது போதும்

   Delete
  2. ஹேமா உங்கள் காரை படம் எடுத்துப் போடலாமே? :)

   Delete
 25. இப்ப நான் கொமண்ட் பண்ணினன் காணேல்ல.ஆரோ களவெடுத்திட்டினம்(டெஸ்ட்) !

  ReplyDelete
  Replies
  1. நானும் தம்பியும் இருக்கும்போது யாரும் களவு செய்ய முடியாது ஹேமா ...:)))

   Delete
  2. ஹா ஹா அப்படிச் சொல்லுங்கோ அக்கா!

   Delete
 26. ஆஞ்சலின் நீங்கள் பாதுகாத்து வரும் பொக்கிஷங்களின் அணிவகுப்பு அருமை.சுவாரஸ்யம் பட பதிவாக்கி உள்ளீரக்ள்// baby
  body suits மற்றும் booties .//பார்க்கவே பரவசமாக உல்ளது.இத்தனை குட்டியூண்டு டிரஸ் அணிநத பெண் எவ்வளவு பெரியவளாகி விட்டால் என்பதை நினைக்கும் பொழுது ஏற்படும் தாயின் உணர்வுகள் அலாதியானது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஸாதிகா ..எங்க மகள் இப்பவே என் உயரம் வந்திட்டா ..இவற்றை கட்டும்போது சிரிப்பா .நான் ஒரு பெட்டியில் போட்டு வச்சிருக்கேன் அவளுக்கு பதினெட்டு வயதாகும்போது தருவேன்

   Delete
 27. சூப்பர்ப் அஞ்சு 2 அன்னங்களும்.மிக அழகாக செய்திருக்கிறீங்க.
  அந்த வாட்ச் அழகாக இருக்கு. கலர் மாறாமல் இருக்கு.பைபிளை விட்டுட்டு போனதை வாசித்தபோது கிடைத்ததா,இல்லையா என்ற எண்ணம்தான் முதலில் வருகிறது.
  பொக்கிஷபுதையல்கள் பற்றி நன்றாக எழுதியிருக்கிறீங்க அஞ்சு. பகிர்விற்கு நன்றி.
  ஆவ்வ்வ்வ் கடைசில என்னையுமாஆஆ. அழைப்புக்கு மிக்க நன்றி அஞ்சு.முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்முலு வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .நேரம் கிடைக்கும்போது எழுதுங்க

   Delete
 28. angelin, மிகவும் அழகான பொக்கிஷங்கள். அதன் நினைவுகளையும் சிறப்பாக பகிர்ந்திருக்கீங்க.

  என்னையும் தொடர அழைத்தமைக்கு மிக்க நன்றி. முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .நேரம் கிடைக்கும்போது எழுதுங்க

   Delete
 29. ஏஞ்சலின் நலமா?

  வாலன்டைன்ஸ் தின அன்னப்பறவை ஜோடி அழகு...

  கூடவே வாழ்த்துக்களும்...

  பொக்கிஷங்கள்...அனைத்தும் உங்கள் இதயத்துக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருப்பவர்கள் நினைவுடன்...

  கடைசில இப்படி கவுத்திட்டீங்களே...தொடரச்சொல்லி...என் பொக்கிசங்கள் உறவுகளே...தடயங்கள் சொந்த மண்ணில்...முடிந்த வரை முயற்சிக்கிறேன் ஏஞ்சலின்...

  அதுவும் அது என்ன காவியத்தலைவன்...ராமராஜன்களுக்குத்தான் இப்படி பேர் வைப்பாங்கன்னு நினைச்சா....ம் ம் ...

  உங்களுக்கும் உங்க ஹப்பிக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரெவரி .மனதில் வைத்திருக்கும் நினைவுகளை பொக்கிஷமான நினைவுகளை எழுதுங்க ரெவரி ..

   இன்னிக்கு காவியத்தலைவன் ..நாளைக்கு வேறொரு டைட்டில் தருவேன் ...
   கவியரசுன்னு தான் போட நினைச்சேன் .diamond pearl கோச்சுப்பார் அதான் :))

   Delete
 30. WOW

  SUPER...

  REALLY SO TOUCHING GIFTS

  ANJUKKA..

  But Me romba chinna Pillaiyakkum..

  so appram paakalam.

  thanks for sharing.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சிவா ..உங்களுக்கு இனி கிடைக்கபோகும் பரிசு பொருட்களை பத்திரமா வைங்க ...:))

   Delete
 31. பொக்கிஷங்களை பொக்கிஷமா வைத்திருப்பது தான் முக்கியம்...அழகான நினைவலைகள்!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேனகா ..நான் மகள் பிறந்த நாளில் இருந்து போட்டோ ஆல்பம் பாத்து வயது வரை செய்தேன் ..வீட்டில் நிறைய சேரவும் வைக்க இடமில்லை ...ஆனாலும் விடுவதில்லை ..ஒன்றிரண்டு பொருளாவது சேர்த்திடுங்க நீங்களும்

   Delete
 32. அழகான பொருட்கள்,அருமையான இடுகை,இதோ ஏஞ்சலின் இதனையும் என் ப்ளாக்கில் இணைத்து விடுகிறேன்...எனக்கு அம்மா தந்த சமையல் குறிப்புக்கள் மீது ஒரு கண்..பத்திரம்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா ...உங்க சீப்பு சூப்பர் ..அம்மாவின் அந்த ரெசிப்பிஸ் தான் பல நேரத்தில் உதவுது .
   அதில் உம்மி அப்துல்லா ஒரு பிரியாணி போட்டிருக்காங்க ..ரொம்ப சுலபமா இருக்கு

   Delete
  2. ஆசியா ஒன்று கவனித்தீர்களா அனைவரின் பொக்கிஷ பொருட்களும் புத்தம் புதிதாய் அப்படியே இருக்கு அதுவே எவ்ளோ பெரிய விஷயம்

   Delete
  3. ஆமாம்.மிக அருமை.மீண்டும் இங்கே வந்ததில் உங்கள் பதிலை பார்க்க முடிந்தது.

   Delete
 33. அனைத்தும் அருமை.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 34. மலரும் நினைவுகளுடன் உங்கள் பொக்கிஷமும் நல்லா இருக்கு.. அந்த வாட்ச் ரொம்ப அழகு.

  ReplyDelete
 35. அக்கா, முதலில் உங்களுக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள்! மாமாவுக்கும் சொல்லிவிடுங்க!

  பைபிள் இல்லாமல் நீங்கள் பட்டபாட்டை எண்ணிப் பார்க்கிறேன்! அந்த கார் ட்ரைவருக்குத்தான் நன்றி சொல்லணும்!

  அப்புறம் பிள்ளையார் படம்! - பார்க்கவே சந்தோசமா இருக்கு!

  அந்த பைபிள் வாசகங்கள் - அருமை! அதில் வரும் THEE என்றபதன் அர்த்தம் என்ன அக்கா?

  அருமையான நினைவுப் பதிவு அக்கா!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மணி :)) thee என்பது Thee and Thou are formal forms of "you".

   Delete
  2. ஆமாம் தம்பி அந்த பையில் அப்பாவின் அன்பை காண்கிறேன் ..
   கார் டிரைவர் உண்மையிலேயே கிரேட் .என் தங்கை கூட பார்சலில் அனுப்புவத சொன்ன பைபிளை ..
   ஆனா அவர் சமயோசிதமா உடனே வண்டியை திருப்பி பைபிளோடு இங்கிலாந்து வர உதவி செய்தார் .

   thee //பழைய வெர்ஷன் பைபிளில் இருக்கும் வாசகம் இப்ப சுலபமா வாசிக்க you என்றே எழுதுகிறாங்க

   Delete
 36. உங்கள் பொக்கிஷங்கள் அருமை.

  //நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை ,உன்னை கைவிடுவதுமில்லை //
  பைபிள் வாசகம் எனக்கு மிகவும் பிடித்தது.இறை நம்பிக்கையை பலபடுத்தும் வாசகம்.

  http://mathysblog.blogspot.com/2013/02/blog-post_9.html

  நான் பொக்கிஷமாக பகிர்ந்து கொண்ட நினைவுகளை முடிந்த போது பாருங்கள். ஆசியாவின் தொடர் அழைப்புக்கு முதலில் எழுதி அனுப்பினேன்.

  ReplyDelete
 37. //வை.கோபாலகிருஷ்ணன்February 11, 2013 at 5:09 PM

  என்னை தொடர் பதிவு எழுத அழைத்த வானதிக்கு நன்றி .

  //இதை தொடர நான் அழைப்பது ....... முதலாமவர் :)))அறுசுவை அரசர் ...
  வி .ஜி .கே .கோபு சார் அவர்கள் .//

  அடடா, நான் மாட்டீஈஈஈஈஈஈஈ.

  நிர்மலாவுக்காக நான் ஏற்கனவே எழுதிய தொடர்பதிவான
  “ஊரைச்சொல்லவா! பேரைச்சொல்லவா!!” மிகுந்த வரவேற்பை பெற்றது. http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

  அதனால் இதையும் ஏற்றுக்கொள்கிறேன். முயற்சிக்கிறேன்.

  அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி.

  அன்புடன் கோபு அண்ணா

  அழகான இந்தப்பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  -=-=-=-=-=-=-

  angelin February 11, 2013 at 5:28 PM

  //அனைத்து கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா ..

  ஆவலுடன் உங்கள் தொடர் பதிவை எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன் :)))//

  தங்களின் ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பின்படி நான் நேற்றுடன் “என் பொக்கிஷம்” பற்றிய பதிவுகளை எழுதி வெளியிட்டு நிறைவு செய்துவிட்டேன்.

  மொத்தம் பகுதி-1 முதல் பகுதி-11 வரை.

  இறுதிப்பகுதிக்கு லிங்க்: http://gopu1949.blogspot.in/2013/04/11_24.html

  இந்த தொடர்பதிவினை தொடர்ந்து எழுத என்னைத் தூண்டியதற்கு மிக்க நன்றி.

  பிரியமுள்ள கோபு

  ReplyDelete
 38. அடடா! நான் படிக்காத இடுகைகள் நிறைய இருக்கும் போல இருக்கிறதே ஏஞ்சல்!!

  முதலில் வலைச்சர அறிமுக இடுகைகள் படித்து முடிக்கிறேன். பிறகு நீங்களே தேடி இமா வராத இடுகைகளை தனி போஸ்ட்ல லிங்க் கொடுப்பீங்களாம்; இமா வந்து படிப்பேனாம். இப்பவே தாங்க்ஸ். ;)

  ReplyDelete