அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/27/13

பொட்டுக்கடலை உருண்டை

பொட்டுக்கடலை உருண்டை 
                                                                                
தேவையான பொருட்கள் 
                                                                                   

பொட்டுக்கடலை ...2 கோப்பை 
வெல்லம் (Jaggery )... துருவியது 1 கோப்பை 
அரிசி மாவு ......  கால் கோப்பைக்கும் குறைவு .

செய்முறை 


ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை  போட்டு 
அதன் மேல் நீர் மூழ்கும்படி அளவு ஊற்றி காய்ச்சவும் .
பாகு நன்கு தடிமனாக அதாவது அதை ஒரு துளி எடுத்து 
கோப்பை நீரில் போட்டு பார்த்தால் மிதங்க வேண்டும் ..
அந்த பதம் வரும்போது அடுப்பை அணைத்து 
2கோப்பை பொட்டுகடலையை அதில் போட்டு கலக்கவும் .
இப்ப என்னை போல அவசரக்குடுக்கையாக அதில் 
கை வைக்க வேண்டாம் .:))
சிறிது நேரம் ஐந்து நிமிடம் கழித்து கைகளில் .
அரிசிமாவை தடவி,பொட்டுகடலை கலவையை 
சிறு உருண்டைகளாக பிடிக்கவும் .இன்னொரு 
யோசனையும் இருக்கு :)) கலவை ரெடியானதும் ...
ஆத்துக்காரர் கிட்ட கொடுத்து உருண்டை பிடிக்க 
சொல்லலாம் :))
சத்தான பொட்டுக்கடலை உருண்டை தயார் .


அடுத்து ஏதேனும் ஒரு புதிய ரெசிப்பியுடன் சந்திக்கிறேன் :))

தெரிந்துகொள்ள வேண்டியவை .விழிப்புணர்வு.


 ,எங்க ஆலயத்தை சேர்ந்த 75 வயது பெண்மணி  ,
                                                                             

எலும்பு புற்று ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டது ,
மூன்று வருடங்களாக சிகிச்சை பெறுகிறார் ...
இதையெல்லாம் விட அவரது மன உறுதிதான் என்னை 
பிரமிக்க வைப்பது ..மாதமிருமுறை ஆலயம் வருவார் ..,
சுகவீனமாநோருக்கு அவர்கள் இருக்கை அருகில் வந்து 
திருவிருந்து தருவார்கள் ..ஆனால் இவர் அப்படி பெறாமல் 
முன்னால் ஆல்டர் அருகில் சென்றுதான் பெற்றுக்கொள்வார் .
..நோய் வந்துவிட்டதென்று கலங்காமல் //All to God I Surrender//
இது ஒன்றை பிரதானமாக கொண்டே மன உறுதியுடன் 
இருக்கிறார் ,...
யாரேனும் நம் வீட்டிலோ அல்லது தெரிந்த வட்டதிலோ 
இவ்வாறு நோயுற்றவர் இருப்பின் நாம் காட்ட  வேண்டியது 
....அன்பு மட்டுமே பச்சாதாபம் அல்ல என்பது எனது கருத்து .
பரிதாபப்படுவது  அவர்களின் தன்நம்பிக்கையை 
குறைத்து விடும் ...


அம்மா ( ....அதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது .
நம் அனைவருக்குமே முக்கியமாக தெரிந்திருக்க வேண்டிய 
விஷயம் கான்சர் பற்றிய விழிப்புணர்வு  .
அம்மா தனக்கு கான்சர் என்று உறுதி ஆனதும் 
ஒருவருடனும் பேசவோ தான் இருந்த அறையை விட்டு 
வரவோ விரும்பவில்லை மனதால் மிகவும் நொந்து போனார்கள் .
அம்மாவுக்கு வந்தது உணவு குழாய் புற்றுநோய் ..75% பரவியபின்பே கண்டுபிடிக்க முடிந்தது (  ...கீமோ /ரேடியேஷன் /
STAGES ...இவற்றுக்கப்பால் மரணத்தருவாயில் இருக்கும் 
நோயாளிகளின் நிலைமை மிக மிக கொடுமை .மரண வாயிலில் இருப்போருக்கு வெள்நாடுகளில் Hospiceஎனும் மன உறுதிக்கான
 சிகிச்சை வழங்கப்படும் .
எனக்கு விழிப்புணர்வு என்று எழுத யோசனை வந்ததும் 
மனதில் வந்தது இந்த நண்பர்களின் பதிவுதான் .


ரெவரி ..கண்டிப்பாக ஒவ்வொரு40 வயதை தாண்டிய  
பெண்ணும் படிக்க தெரிந்துகொள்ள வேண்டியவை .
மீரா ...COLON புற்று மற்றும் CANCER  SYMPTOMS ..KEEP A WATCH,
           இவர்கள் பதிவு 

அம்மாவுக்கு ஒவ்வொருமுறையும் மெயிலில் ஏதாவது அவர்கள் உண்ண கூடிய சமையல் குறிப்பை தருவார்கள் நம்ம ஜலீலா ..
ஜலீலா ... இங்கு ட்ரீட்மென்ட் எடுக்கும்போது நோயாளிகளுக்கு 
சில உணவு குறிப்புகளை தந்திருக்கார் .

........................................

வந்தபின் கவலைபடுவதை விட வருமுன் காப்போம் .


பின்குறிப்பு 
மேலுள்ள படத்தை இணைக்கும்போது மிகுந்த 
குற்ற வுணர்வு ஏற்பட்டது .அதில் போதகர் அருகில் நிற்பது 
எனது மகள் .ஆலய பாடகர் குழுவில் இருக்கிறாள் .அம்மா
 பல  முறை அவள் அங்கி அணிந்திருக்கும் படத்தை கேட்டாங்க .
.படம் எடுக்கும் சூழ்நிலை அமையவில்லை ..
எடுத்த போதோ  பார்க்க அம்மா இல்லை (

2/26/13

Quilling ...Tutorial /Graphics Quilling

இது அதிராவுக்காக அவசர அவசரமாக செய்த 
டுட்டோரியல் :))                                                                                     
                                                                                     
தேவையான பொருட்கள் :
மலர் ,இலை,செய்ய வண்ண தாள்கள் ,ஓட்டும் பசை ,
pincers ,இது காகிததுண்டுகளை கவனமாக பிடித்து ஓட்ட 
நான் கையால் தான் செய்தேன் ..செய்முறைக்கு பிடித்து காட்டி 
உள்ளேன் .

இதைபோன்ற சற்று தடிமனான flash கார்ட் போன்ற அட்டைகள் 
கிராபிக்ஸ் quilling செய்யும் புதியோருக்கு உகந்தது .
நன்கு செய்ய கற்றுக்கொண்ட பின் மற்ற quilling தாளிலேயே 
செய்யலாம் .
நான் எங்கு எப்போது இவ்வாறான கலர் தாள்களை கண்டாலும் விடுவதில்லை :)))
பார்க்லேஸ் வங்கி போனா அழகிய நீல நிறதாள்கள் ஷெல்பில் 
இருக்கும் :)) 


                                                                                     

                                                                                       
இவை எங்கள் ஆலயத்தில் இருந்து எடுத்தவை .
இந்த தாள்களை பேப்பர் ஷ்ரெட்டரில் போட்டு வெட்டி 
எடுத்து கொள்ளவும் .

                                                                           
வேறொரு அட்டையில் மலர் வடிவம் இரண்டு இலைகளுடன் 
பென்சிலால் வரையவும் ..மிகவும் அழுத்தமாக வரைய வேண்டாம் .
ஓட்டும்போது காட்டிகொடுக்கும் .
பிறகு மலர் இதழ் வடிவம் அதே அளவுக்கு வெட்டி கொலாஜில் 
காட்டினார்போல வளைத்து க்ளூ போட்டு ஒட்டவும் 
பிறகு இதழின் உட்பக்கம் சிறு துண்டுகளாக வெட்டி வளைத்த 
காகிதத்தை இடை செருகலாக நுழைத்து ஒட்டவும் .
அளவு எல்லாம் ஒரே அளவாக வெட்ட வேண்டியதில்லை 
வெளிப்புறம் மட்டும் ஒரே அளவாக இருக்கும்படி பார்த்துக் 
கொள்ளவும் .
இலைகளையும் அவ்வாறே செய்யலாம் .இன்னொரு முறையிலும் 
இலைகளை செய்யலாம் .இலை வடிவம் வரைந்து நடுவில் 
ஒரு நேர் நரம்பு பின்பு பக்கவாட்டில் இலை வடிவம் போலவே 
தாள்களை வெட்டி ஓட்டலாம் .

                                                                     


அடுத்து மகரந்தம் சற்று பெரிய அளவில் மஞ்சள் தாள் எடுத்து 
பல்லுகலாக ஓரத்தை வெட்டி சுருட்டி மலரின் நடுவில் 
வைக்கவும்   .

நான் செய்த அன்னப்பறவைகள் இம்முறைதான் ..அதற்க்கு 
நீள அளவு காகித துண்டுகள் பயன்படுத்தினேன் 

                                                                   

                                                                                   

                                                                                         
                                                                   
                                                                                               
                                                                               
பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் 
மிக்க நன்றி ...             .2/23/13

Quilling


இங்கே ஒரு சில வலைபூ லிங்க் தந்திருக்கிறேன் அதில் விதம்விதமாக quilling
டுட்டோரியல் இருக்கிறது .சிறுவர் /beginners அனைவருக்கும்
உகந்தது பார்த்து பயன் பெறுங்கள் .
http://increations.blogspot.co.uk/

http://www.origami-resource-center.com/quilling-instructions.html

http://www.auntannie.com/DecorativeCrafts/Quilling/

http://quilling.blogspot.co.uk/2006/09/free-quilling-patterns.htmlஉங்களுக்கு படங்கள் தேவை என்றால் இமேஜசில்
எம்பரோய்டரி டிசைன்ஸ் எடுத்து அந்த வடிவில்
செய்யலாம் .
மிக முக்கியமான விஷயம் ..டிசைன்ஸ் காபிரைட் உள்ளதா 
அல்லது இலவசமாக தரவிறக்கம் செய்யலாமா என்பதையும் 
கவனித்து செய்யவும் 

....

2/21/13

பிறந்த நாள் வாழ்த்துகள் :))))


பிறந்த நாள் வாழ்த்துகள் ..miyaaaaaav:))


பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று மாலை
 துவங்குகிறது :))                                                                               

 புன்னகை அரசி ,பதிவுலக பெண் சிங்கம் :))))))))மின்னல் ,
சமையல் வித்தகி தேம்ஸ் நதியை சொந்தமாக்கி கொண்ட 
தானே புயல் :))sweeeeeeeet 16 சிரி :)தேவி 
 அவர்களுக்கு 22.02.13 .நாளை ,.எத்தினியாவது பிறந்த நாள் ..
என்றெல்லாம் எங்க தலைவியை கேக்க கூடாது :))
எங்கள் அன்பு அதிரா இதே போல் எப்பொழுதும் 
சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறோம் ..                                                                           


                                                                                         

                                                                                   
                                                                               
 இப்படிக்கு  அகில உலக அதிரா ரசிகர் மன்றம் சார்பாக 
                                                                             
வாழ்த்த வயதில்லை எனவே வணங்குகிறோம் 
அதிராவின்  நண்பர்கள் அனைவரும் ..:))

 எதாச்சும் கிப்டு குடுக்கனும்னுநினைச்சேன் ...
ஆலோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன .
இந்த பாடல் அதிராவுக்கு  இந்த தட்டில் இருக்கும் உருண்டைகளை 
இன்று மட்டும் 
அதிராவுக்கு விட்டு கொடுத்திடுங்க :)                                                                             
நட்புக்களே அதிராவுக்கு தர போற பரிசு 
பொருளை செக் அல்லது மணி கிராம் மூலம்
எனக்கு அனுப்பவும் :))
அவரிடம் ரசீது மட்டும் சேர்க்கப்படும்
                                                                                

இந்த சீன் :)) பார்ட்டி முடிந்ததும் :))

                              
                                                                                

2/17/13

Chicken Bun ...Short eats:))

சிக்கன் பன் 


                                                                                

   இம்முறை இந்த ப்ரட் மாவினை பயன்படுத்தி பன் செய்தேன் 
பிரித்தானியா வாழ் தோழிகள் sainsbury's மார்க்கெட்டில் 
இதனை வாங்கலாம் .

                                                                         

                                                                                   
கடந்த முறை மீன் பன் எனது முதல் முயற்சி எனக்கு சரியாக 
மடிக்க வரவில்லை இம்முறை சமோசா மடிப்பது போல 
முக்கோணமாக மடித்து மடிப்புகள் கீழ்பக்கம் வருமாறு 
ட்ரேயில் வைத்து 25 நிமிடங்கள் பேக் செய்தேன் .
இம்மாவில் ஈஸ்ட் கலந்தே வருவதால் நான் மேலதிகமாக 
ஒரு முட்டை சேர்த்தேன் ,,அதனால் பன் மிருதுவாக வந்தது 
இதற்குள் சிக்கன் கலவை ..இந்த குறிப்பில் சப்பாத்தி ரோலுக்கு 
செய்தது அதேபோல் செய்து வேக வைத்து மசித்த 
உருளை கிழங்கு மட்டும் சிக்கன் மசாலா வுடன் சேர்த்து 
பன் செய்தேன் ..கிழங்கு சேர்க்காமலேயே நன்கு வரும் .

                                                                            


எந்த ப்ரட் மாவாக இருந்தாலும் அதில் ஈஸ்ட் சேர்த்திருக்கிறதா என 
பார்த்து வாங்கவும் ..எனக்கு தனியாக வெறும் மாவில் ஈஸ்டை 
வாங்கி சேர்ப்பது சரி வரவில்லை ..இம்முறையில் முட்டை கிரேவி 
மற்றும் வெஜிடபிள் மசாலா சேர்த்தும் பன் செய்யலாம் .
எங்களுக்கு ப்ரட் மா கிடைப்பதால் அதில் செய்தேன் 


இந்த வீடியோவில்மைதா  மாவுடன் வேறாக  ஈஸ்ட் சேர்த்து 
Bun செய்யும் முறை உள்ளது செய்து பாருங்கள் ..


 சிக்கன் மசாலா filling முந்தைய பதிவில் இருக்கிறது .

2/16/13

சப்பாத்தி ரோல் with சிக்கன் மசாலா .

சப்பாத்தி ரோல் with சிக்கன்  மசாலா                                                                                  


                                                                                   
சிக்கன் மசாலா 

தேவையான பொருட்கள் 


 சிக்கன்(எலும்பில்லாதது ) .......... 100 கிராம் மெல்லிய 
                                                                   துண்டுகளாக வெட்டவும் 
1/2  வெங்காயம்  ............... மெலிதாக நறுக்கியது 
சிறிய தக்காளி         .................1        மெலிதாக நறுக்கியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் ..............  1  தேக்கரண்டி
பச்சை மிளகாய் ..............  1  ....விதை நீக்கி சிறிதாக நறுக்கவும் 
சிக்கன் மசாலா தூள் ............... 1 1/2  தேக்கரண்டி 
மிளகு தூள்                    ................ 1  தேக்கரண்டி 
கறிவேப்பிலை ........ஐந்து அல்லது ஆறு இலைகள்     
மஞ்சள் தூள் ............  1 தேக்கரண்டி 
சோயா சாஸ் .......... 1 தேக்கரண்டி .          
உப்பு ..........தேவைக்கேற்றவாறு சேர்க்கவும் 
எண்ணெய் .........    1 ஸ்பூன் அல்லது தாளிக்க தேவையான அளவு .
இங்கே தேக்கரண்டி என்பது எங்க வீட்டில் நான் பயன்படுத்துவது 
ஐஸ் க்ரீம் சாபிடுவோமே அந்த சிறிய அளவு கரண்டி .
அவரவர் விருப்பத்திற்கேற்ப காரம் சேர்க்கலாம் .
செய்முறை 
.அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் 
இஞ்சி பூண்டு கலவை ,கறிவேப்பிலை ,பச்சை மிளகாய் 
ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக மிதமான தீயில் வதக்கவும் .வெங்காயம் வதக்கும்போதே உப்பு சேர்க்கவும் 
பிறகு சிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கனை யும் சேர்த்து 
எண்ணெயில் வதக்கவும் 
பிறகு சிக்கன் மசாலா ,மஞ்சள் தூள்களை சேர்த்து வதக்கவும் 
இப்போது நறுக்கிய தக்காளியை சேர்க்கவும் .
தட்டு போட்டு மூடி விடவும் ..
இவ்வளவும் மிதமான தீயில் செய்ய வேண்டும் .
சுமார் பத்து நிமிடங்கள் கழித்து மூடியை திறக்கவும் 
எண்ணெய் பிரிந்து வரும் இப்போது .சோயா சாஸ் ஊற்றி 
மிளகுதூள் சேர்த்து இறக்கவும் ..
சுவையான மசாலா தயார் .

இது எனக்கு முன்பு எங்கள் தோழி கிரிஜா மெயிலில் அனுப்பிய 
குறிப்பு .அவர் சிக்கனுடன் பச்சை குடமிளகாயும் சேர்க்க சொன்னார் 
விருப்பமானால் நீங்கள் ட்ரை செய்து பாருங்கள் .

தயாரான மசாலாவை சப்பாத்தி சுட்டு அதில் ஒரு கரண்டி இட்டு 
சுருளாக ரோல் போல் மடித்து மீண்டும் கல்லில் ஒரிரு நொடிகள் 
வைத்து பின்பு சூடாக பரிமாறவும் .இது கோதுமை மாவு சப்பாத்தியில் 
ரோலாகவும் ,மைதா மாவு என்றால் கறி  ரொட்டி போலவும் செய்து சாப்பிடலாம் .
சப்பாத்தியை மெலிதாக தட்டிகொள்ளவும் .

                                              ******************************
                                                                             

                                                                             

2/15/13

உருளை பட்டாணி குருமா

உருளை பட்டாணி குருமா 
                                                                             


                                                                                 
தேவையான பொருட்கள் 


மீடியம் அளவு உருளை கிழங்கு ......... 4....தோலுரித்து வெட்டி வைக்கவும் 
frozen பச்சை பட்டாணி .....................1 கோப்பை 
தக்காளி ........சிறிய அளவில் ..வெட்டியது ................1
வெங்காயம் ................................  1நறுக்கி வைக்கவும் 
இஞ்சி பூண்டு விழுது .............1 ...ஸ்பூன் 
மஞ்சள் தூள் ........ தேக்கரண்டி 
மிளகாய்த்தூள் ......... தேக்கரண்டி 
தனியா தூள், ................. தேக்கரண்டி 
பச்சை மிளகாய் .......2 இரண்டாக நறுக்கியது 
கசகசா ...poppy சீட்ஸ் .வறுத்து எடுக்கவும் ...1 1/2 தேக்கரண்டி 
இதனை 1 மேசைகரண்டி தேங்காய் துருவலுடன் சேர்த்து 
விழுதாக அரைக்கவும் .
ஏலக்காய் /பட்டை /கிராம்பு /சோம்பு .........தாளிக்க  தலா 2
எண்ணெய் .............  1 ஸ்பூன் 
எலுமிச்சை சாறு .............தேக்கரண்டி .
உப்பு ....... தேவையான அளவு 


தாளிக்க கொடுத்துள்ள வாசனை பொருட்களை எண்ணெய் ஊற்றி 
குக்கரில் தாளிக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது ,வெங்காயம் பச்சை மிளகாய் 
ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக எண்ணையில் வதக்கவும் .
,மிளகாய் ,தனியா மஞ்சள் தூள்களை சேர்த்து பிரட்டவும் 
நறுக்கிய தக்காளி ,உருளை பட்டாணி சேர்க்கவும் 
உப்பு அளவு பார்த்து சேர்க்கவும் ..
மூன்று நான்கு நிமிடங்கள் தட்டு போட்டு மூடவும் .
பிறகு விழுதாக அரைத்த தேங்காய் கசகசா கலவையை 
சேர்த்து பிரட்டவும் ..
கிழங்கு மூழ்கும் அளவு நீர் சேர்த்து குக்கரை மூடி ..மூன்று விசில்
வரும்வரை அடுப்பில் வைக்கவும் 
பிறகு அடுப்பை அணைத்து ..ஆவியடங்கினபின் மூடியை திறந்து 
எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
கசகசா சேர்க்க விருப்பமில்லையெனில் அதற்க்கு பதில் தயிர் ஒரு மேஜைகரண்டி காய்களை வதக்கும்போது சேர்த்தால் குருமா 
திக்காக வரும் ..மற்றும் தேங்காயுடன் நான்கு முந்திரி பருப்புகளை 
சேர்த்து அரைத்தாலும் குருமா திக்காக வரும் .

இந்த குருமா சப்பாத்தி ,இட்லி ,தோசை ,இடியாப்பம் இவற்றுடன்
 சாப்பிட நன்றாக இருக்கும் .
எங்க வீட்டில் எப்பவும்போல் சப்பாத்திக்கு சாப்பிட்டோம் .


கசகசா ...poppy சீட்ஸ் .
                                                                       

2/14/13

Fish Bun

Fish Bun a.k.a .Maalu BUN 


மாலு என்றால் மீன் ..(உபயம் A .E .மனோகரனின் சுராங்கனி 
பாட்டில் இருந்து கற்று கொண்டது ):)))


இந்த ரெசிப்பி லிங்க் தந்து உதவியது 
அன்பு தம்பி மணி ...
இது எனது முதல் முயற்சி மீன் விருப்பமில்லாதவர்கள் 
உருளைகிழங்கு கிரேவி அல்லது முட்டை கிரேவி சேர்த்து 
இதனை செய்யலாம் .வானதியும் கறி பன் ரெசிப்பி தந்திருக்காங்க. 
எனக்கு தனியே ஈஸ்ட் வாங்கி சேர்த்து பிசைவது சரிவருவதில்லை 
இந்த ஹோவிஸ் மாவில் எல்லாம் கலந்திருப்பதால் மிக 
சுலபம் ,ஹோவிஸ் மாவில் ஈஸ்ட் சேர்த்த மாவையே வாங்கவும் .
                     முதலில் மாவை பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ளபடி 
பிசைந்து .ஈர துணியால் மூடி வைத்து விட்டேன் .சுமார் இரண்டு மணிநேரம் ரெஸ்ட் எடுக்க விட்டேன் .
இந்த நேரத்தில் ...மீன் கலவை உள்ளே Fillingசெய்ய தயாரித்து 
வைத்து கொண்டேன் .

கட்லட் மிக்சிங் செய்வது போலவே அத்துடன் அரை தக்காளியும் சேர்த்தேன் .

தேவையான பொருட்கள் 
TUNA CHUNKS ...1  டின் .....தட்டில் எடுத்து உதிர்த்து  வைக்கவும்                                             
வெங்காயம் ....பெரியது ஒன்று சிறியதாக நறுக்கி கொள்ளவும் 
பச்சை மிளகாய் .......3  ......மெலிதாக நறுக்கவும் 
சிறு துண்டு இஞ்சி .......மெலிதாக நறுக்கவும் .
மீடியம் அளவு தக்காளி ...... 1  ..மெலிதாக நறுக்கவும் 
வேக வைத்த உருளை கிழங்கு .......5   ...

 உப்பு ........தேவையான அளவு 
எலுமிச்சை சாறு ....1 தேக்கரண்டி 
மிளகு .............போடி செய்தது 1 தேக்கரண்டி 
கரம் மசாலா தூள் ....1 தேக்கரண்டி     
எண்ணெய் ...... வதக்க தேவையான அளவு 
செய்முறை 


ஒரு அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்
 இஞ்சி பச்சை மிளகாய் ,மீன் கலவை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும் 
பின்பு உப்பு அளவாக சேர்க்கவும் அத்துடன் கரம் மசாலா மிளகுதூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டவும் அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சை சாறு ஊற்றி பிரட்டவும் பின்பு அத்துடன் 
வேக வைத்து வெட்டிய கிழங்கைமீன் மசாலா கலவையுடன் பிரட்டவும் .
இப்ப பன் உள்ளே வைக்க STUFFING தயார் 
மாவு இப்ப தயாராக இரண்டு மடங்கு உப்பி இருக்கும் மாவை ஓங்கி ஒரு குத்து விடவும் .(வானதி சொன்ன மாதிரியேசெய்தேன் )
பின்பு மீடியம் அளவு உருண்டைகளாக எடுத்து தட்டி அதனுள் மீன் கலவையை வைத்து மூடி ..பேக் செய்ய வேண்டும் .bake செய்யும் முன் 
ஒரு முட்டை மஞ்சள் கருவை  நன்கு கிண்ணத்தில் அடித்து வைத்து இந்த பண்களின் மேல் ப்ரஷால் மேக்கப் போடுவது போல் தடவி..(இது தான் BUN ஷைனிங் ஆகவும் பிரவுன் நிறமாகவும் வர காரணம் ).. பின்பு 
OVAN ஐ முச்சூடு செய்து மேல் தட்டில் வைத்து 25 நிமிடங்கள் பேக் செய்தேன் ..
டெஸ்ட் அண்ட் டேஸ்ட் செய்த .கணவரும் மகளும் மிக ருசி என்றார்கள் ...:))
...................................................................................இன்று இரண்டு போஸ்ட் போட்டிருக்கேன் 
இது மற்றும் quilling டுடோரியல் :))

No tool Flower Tutorial ...Quilling

Flower Tutorial 

                                                                             

இந்த மலர் செய்ய QUILLING TOOL அவசியமில்லை 


தேவையான பொருட்கள் 
மலர் இதழ் செய்ய சிவப்பு நிற பேப்பர் ஸ்ட்ரிப் 
நான் A 4 பேப்பர் ஸ்ரேடரில் போட்டு வெட்டி எடுத்தேன் 
இலைகள் மற்றும் தண்டு செய்ய பச்சை நிற பேப்பர் 
மலரின் நடு பகுதிக்கு ..வெள்ளை அல்லது மஞ்சள் நிற பேப்பர் 


                                                                           

படத்தில் உள்ளது போல ஒரு பென்சில் அல்லது ஏதேனும் 
உருளை வடிவத்தை வைத்து சுற்றவும் 
துவங்குமுன் படத்தில் உள்ளபடி ஒரு துளி பசை ஒட்டி 
சுற்றவும் .முடியும் இடத்திலும் பசையால் ஒட்டி விடவும் 


                                                                               
                                                                                   

ஓரிரு வினாடிகளில் பசை காய்ந்ததும் பென்சில் இலிருந்து 
வட்ட வடிவ இதழை அழகாக வெளியே எடுக்கலாம் .
                                                                                 
  பூவின் இதழ் ஒரு பக்கம் வட்டமாகவும் ஒரு பக்கம் சற்றே
ஷார்ப் ஆகவும் இருக்க ..இதழின் ஒரு முனையை விரலால் 
அழுத்தி பிடிக்கவும் 
                                                                                           
பிறகு மலரின் நடு பகுதிக்கு வெள்ளை நிற தாளினை 
பென்சிளைவிட சிறிய சுற்றளவு கொண்ட பெய்ன்ட் பிரஷ் 
மேல் சுற்றி இதழ் போலவே பசை ஒட்டி எடுக்கவும் .
கீழிருப்பது மஞ்சள் நிறம் .காகிதத்தின் நுனியை ஓரத்தில்  
உருட்டுவது போல செய்து பசையால் ஒட்டியும் செய்யலாம் .

                    
அடுத்தது இலைகள் 
இவற்றையும் வெறுமனே விரல்களாலும் உருட்டலாம் 
அல்லது பிரஷ் மீது சுற்றி இரண்டு முனைகளையும் 
அழுத்தி இல்லை வடிவில் பிடித்து விடவும் 
                                                                                   
பிறகு ஒவ்வொரு இதழையும் அதன் அடிப்பக்கம் 
டூத் பிக் அல்லது கூறிய ஊசி போன்ற உபகரணத்தால் 
பசையை தொட்டு அட்டையில் ஒட்டவும் .

                                                                                              
இதழ்கள் செய்யும்போது அளவு சரியாக இருக்க 
ஒன்றன் மீது ஒன்று வைத்து அளவு சரி பார்க்கவும் .
பச்சை நிற தண்டு பாகம் நேராக ஒட்டு வதை விட 
தேவையான அளவு வெட்டியபின் ரிப்பன் உருவுவிடுவதுபோல
உருவினால் காகிதம் வளைந்தாற்போல் வரும் அதில் பசை
கீழ்பக்கம் தடவி  ஓட்ட அழகாய் வரும் .
வெள்ளை அல்லது மஞ்சள் பகுதிக்கு பதில் 
கிறிஸ்டல் ரைன் ஸ்டோன்ஸ் ஓட்டினாலும் அழகாய் இருக்கும் .

                                                                                                             

2/13/13

Kitchen Corner ...bakery snacks,ஓட்ஸ் கொழுக்கட்டை

வட  இந்தியர்கள் இதைபோன்று ஒரு ஸ்நாக்ஸ் puff pastry sheets
இல் செய்கிறார்கள் ..புரவாலி பிஸ்கட்ஸ் /khari என்று
பெயர் அவர்களின் ஸ்நாக்சுக்கு .அதில் அதிகம் பட்டர் சுவை 
இருக்கும் ..எதோ என்னாலான சிறு முயற்சி :))
ஆனாலும் நான் ஊரில் பெங்களூர் அய்யங்கார் பேக்கரில 
சாப்பிட்ட டேஸ்ட் வரவில்லை ..மாவை பால் சேர்த்து பாக்கெட்டில் 
குறிப்பிட்டபடி பிசைந்து உருட்டி ,நீள் துண்டங்களாக வெட்டி 
ஒன்றன் மீது ஒன்றாக ,வைத்து சிறு துண்டாக வெட்டி முறுக்கி 
ovan இல் வைத்து எடுத்தேன் ..
இன்னும் நன்றாக செய்ய ..மேனகா ,மகி ,ஹெல்ப் பிளீஸ் :))
(அவ்வ்வ்வ் எனக்கேற்பட்ட சோதனை :)) இது வர்க்கி இலையாம் 
பெயர் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் 
உடனே சுட்டிக்காட்டிய மகிக்கு நன்றி 

 இருக்கு ஆனா இல்லை :)))  இப்ப புரிஞ்சிருக்குமே 
நான் இந்த மாவு பாக்கெட் பயன்படுத்தி தான் இதை 
செய்தேன்  .                                              
                                                                                   
ஓட்ஸ் கொழுக்கட்டை 

இந்த ஹெல்த்தி ஓட்ஸ் கொழுக்கட்டை விமிதா ஆனந்தின் 
ரெசிப்பி பார்த்து செய்தேன் ..மிக அருமையாக ருசியாக 
வந்தது ..இந்த லிங்கில் அவர் ரெசிப்பி ..நீங்களும் செய்து 
பாருங்க .                                                                  
ஏதோ அலெக்ஸ் பாண்டியன் ரேட் என்று அதிரா சொன்னாங்க :))
நாங்க தினமும் ஒரு போஸ்ட் போட்டாத்தான் ..எங்களை 
முதல் இடத்தில காட்டுமாம் :)))
அனுபவம் 
சமீபத்தில் ஒருவரால் எனக்கு ஏற்பட்ட அனுபவம் .
 அவருக்கு சில மாதங்களுக்கு முன் colostomy என்ற அறுவை 
சிகிச்சை நடைபெற்றது .அதற்கான bag எப்பவும் அணிய வேண்டிய 
சூழ்நிலை ..இவருக்கு ஒரு குணம் தன்னை பற்றிய அந்த ரகசியத்தை 
அனைவரிடமும் சொல்லி பிறரின் அனுதாபத்தை பெற எப்பவும் ஆவல் 
ஒருவேளை அந்த அறுவை சிகிச்சை அவரது தன்னம்பிக்கையை 
குறைத்து விட்டதோ தெரியவில்லை ..பார்ப்போரிடமேல்லாம் இந்த பிரச்சினையை சொல்லி திரிந்தார் ..என்னிடம் வந்தபோது ..
நான் சொன்னேன் .இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை ..அனைவருக்கும் தெரிய வேண்டியதில்லை என்றேன் ..அப்படியும் திருந்தினார்
 போல இல்லை .உளறல்கள் தொடர்ந்தது ..ஒருமுறை அங்காடியில் 
shelf மறுபுறம் நான் இருப்பது தெரியாமல் இவர் உடல் குறைபாடுகளை 
வேறு இரு பெண்கள் உரையாடி கொண்டிருந்தார்கள் .மனதை 
புண்படுத்தும் விதத்தில் .........

..எனக்கு கோபம் வந்தது ஆனால் நிதானமாக யோசித்தபோது 
தானே தன விஷயத்தை  வெளிக்காட்டி பிறரின் அனுதாபத்தை 
பெற முற்பட்ட அந்த நண்பி தான் கண்டனத்துக்குரியவர் என்று
 புரிந்து கொண்டேன் சுய புத்தி இல்லாவிடில் சொல் புத்தியாவது 
வேண்டும் ..வேலியில் போகும் ஓணானை எடுத்து காதில் 
போட்டுக்கிட்டு குத்துதே குடையுதே என்றால் :))
................................................................................................................................................
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் .

2/11/13

பொக்கிஷமான என் பொருட்கள்

பொக்கிஷமான என் பொருட்கள் :))

இது வாலன்டைன்ஸ் தினத்துக்காக செய்தது :))


                                                                                   
சிறுவயது முதல் பாதுகாத்த நிறைய பொருட்கள் அப்பாவின் 
பணி மாற்றம் காரணமாக தொலைத்து விட்டேன் ..அதற்குபிறகு 
நான் பத்திரமாக வைத்திருக்கும் சில பொக்கிஷங்கள் .
இந்த தொடர் பதிவை எழுத அழைத்த வானதிக்கு நன்றி 
காதலர் தினமும் வருவதால் அதற்க்கு பொருத்தமாக 
அமைந்து விட்டது ..:))

இந்த பொக்கிஷத்தின் வயது 15:)
                                                                      


இதோ இந்த தங்க ப்ரேஸ்லெட் கைகடிகாரம் பல 
வருடங்கள் முன் எங்கள் நிச்சயதார்த்தத்திற்கு 
இரண்டு நாட்கள் முன் அதாவது 
ஒரு பிப்ரவரி 14 வேலண்டைன்ஸ் தினமன்று 
விரைவில் என் கணவர் ஆக போகிறவர்  கொடுத்த 
 பரிசு .
அத்துடன் இந்த பைபிள் மற்றும் இந்த பைபிள்
வாசகம் அடங்கிய frame .                                                                                 
..இந்த வாசகம் காதல் படம் பார்த்தவங்க எல்லாருக்குமே தெரிந்திருக்கும் .சில வருடங்கள் முன் சூப்பர் ஹிட் படம் .
இதில் ஆங்கிலத்தில் இருக்கு தமிழில் //நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை ,உன்னை கைவிடுவதுமில்லை //

இன்னும் பத்திரமா வச்சிருக்கேன் அனைத்தையும் 
..இந்த பைபிள் எப்பவும் தனியே செல்வதென்றால் எனது 
கைப்பையில் இருக்கும் . சென்ற வருடம் இந்திய பிரயாணம் 
முடிந்து நான் தனியே வர வேண்டிய சூழ் நிலை ..
மீனம்பாக்கம் ஏர்போர்ட் உள்ளே நுழையும்போது தான் பகீர் 
என்றது ...பையில் பைபிள் இல்லை ..
செக் இனுக்கு குறைந்த நேரமே இருக்கு ..நான் அழ ஆரம்பிததை 
பார்த்து கார் டிரைவர் உடனே மீண்டும் வீட்டுக்கே காரை விட்டார் பயங்கர ஸ்பீட் ..ஓடி சென்று மேஜையில் இருந்த பைபிளை அள்ளி அணைத்து கொண்டபோதுதான் போன உயிர் திரும்பினார் போல் இருந்தது .


இந்த பிள்ளையார் படம் போட்ட ஆயுத பூஜை துணி பை 
எங்க அப்பா நான் கன்சீவ் ஆகியிருந்த நேரம் எனக்கு விருப்பமான பொருட்களை எங்க நண்பர் ஒருவரிடம்  இந்த பையில் சுற்றி இன்னு ம் நிறைய பாக்கேஜ் எல்லாம் செய்து அனுப்பியிருந்தார் ..
அப்பா நினைவா இன்னும் வைத்திருக்கேன் .                                                                          

இவை அம்மா எனக்கு திருமணம் நிச்சயமானதும் அவசர அவசரமா 
கிடைத்த பழைய புத்தகங்கள் இலிருந்து எனக்கு வெட்டி கொடுத்தது 
எல்லாம் சமையல் குறிப்புகள் மங்கையர்  மலர் ,கலைமகள் ,கல்கி 
புத்தகங்கள் இலிருந்து .இதை தந்த பின் அவங்க சொன்னது 
இன்னும் நினைவில் இருக்கு :))

//இதையெல்ல்லாம் பார்த்து படிச்சாவது எங்க மருமகனுக்கு 
ஒழுங்கா சமைச்சு கொடு //                                                                       
இவை மட்டுமன்றி ஓவ்வோர் வருடமும் ஊருக்கு 
போகும்போது அவங்க சேர்த்து வைத்த அவள் விகடன் 
சமையல் இணைப்புகளும் எனக்கு கொடுப்பாங்க 
இதையும் பத்திரமா வச்சிருக்கேன் .


                                                                                     
இவை எங்கள் குட்டி இளவரசி பிறந்ததும் அணிவித்த  baby
body suits மற்றும்   booties .                         

பொக்கிஷமான என் பொருட்களில் நிறைய நினைவுகளையும் 
மனதில் இருத்தி வச்சிருக்கேன் ..

நம் நட்புக்களின் பொக்கிஷங்கள் இங்கே 
வரிசையா ஒவ்வொன்றும் சுவாரஸ்யம் !!!

மணித்துளிகள் ஆசியாவின் பொக்கிஷங்கள் 
கோவை 2 தில்லி ஆதி 
எல்லா புகழும் இறைவனுக்கே ஸாதிகா 

வானதியின்  பொக்கிஷங்கள் என்னை தொடர் பதிவு எழுத அழைத்த வானதிக்கு 
நன்றி .இதை தொடர நான் அழைப்பது .......
முதலாமவர் :)))அறுசுவை அரசர் ...வி .ஜி .கே .
கோபு சார் அவர்கள் .
அடுத்தது 
காவியத் தலைவன் சகோதரர் ரெவரி 
கவிதாயினி ஹேமா 
மதுரகவி   ரமா ரவி 
பிரியசகி அம்முலு ..


அனைவருக்கும் அதாவது காதலித்தவர்களுக்கும் :))
காதலித்து கொண்டு இருப்பவர்களுக்கும் 
இனிமே காதலிக்க போறவங்களுக்கும் 
இனிய முன்கூட்டிய காதலர் தின வாழ்த்துக்கள் .