அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/27/13

Craft and Kitchen Corner /தக்காளி தோசை .சில மாதங்கள் முன்பு மனோ அக்காவின் பதிவில் இந்த படத்தை பார்த்தேன் :)) அப்பவே சேமித்து படத்தை பிரிண்ட் எடுத்து வைத்திருந்தேன் ..அதில் GRAPHICS QUILLING செய்து பார்த்தேன் ..
GRAPHICS QUILLING  எனது முதல் முயற்சி ..இதற்க்கு tool 
தேவையில்லை ,காகித துண்டுகளை ஒவ்வொன்றாக வெட்டி 
pincers இல் பிடித்து வடிவத்தை ஒட்டி நிரப்பனும் .
இலை வடிவத்தை உற்று கவனித்தால் விளங்கும் .
                                                                             
ஒரிஜினல் படத்தில் பெண் தாமரை மலரும் அதில் 
தீபமும் ஏந்தியிருந்தார், நான் அதை மலர் செண்டுகளாக்கி 
விட்டேன் ..                                                                                      

                                                                                                                                                                         

**********************************************
தக்காளி தோசை .


                                                                                
மகியின் பக்கத்தில் சமீபத்தில் இந்த ரெசிப்பி பார்த்தேன் .
சற்றே மாறுதலாக எனது முறைப்படி தக்காளி தோசை செய்தேன் .


தேவையான பொருட்கள் 

புழுங்கல் அரிசி ...........2  கப்
உளுந்து                 ........... 1/4   கப் 
துவரம் பருப்பு   ............  ஒரு ஸ்பூன் 
வற்றல் மிளகாய் ........   2  
இஞ்சி                      ........... சிறு துண்டு 
தக்காளி               .............  4  மீடியம் அளவு .


செய்முறை 

அரிசி தனியாகவும்   உளுந்து மற்றும் துவரம் பருப்பு ,வற்றல் மிளகாய் இவற்றை ஒன்றாகவும்..சுமார் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும் .
தக்காளியை சிறு துண்டுகளாகி மசித்து கொள்ளவும் ..
கிரைண்டரில் முதலில் பருப்புகளோடு ஊறிய வற்றல் மிளகாயை 
தனியே இரண்டு சுற்று விட்டு அரைக்கவும் பின்பு உளுந்து மற்றும் துவரம்பருப்பை கிரைண்டரில் அரைக்கவும் அரைக்கும்போது மசித்த 
தக்காளியில் பாதியளவை சேர்க்கவும் தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை .நன்கு அரைந்ததும்  ஒரு பாத்திரத்தில் வழித்து வைக்கவும் .
அடுத்தது ஊறவைத்த அரிசியை மீதமுள்ள மசித்த தக்காளியுடன் 
சேர்த்து  அரைக்கவும்..
தோசை மாவு பதம் வந்ததும் அரைத்த உளுந்து கலவையை 
இத்துடன் சேர்த்து ஒரு சுற்று விட்டு எல்லாம் ஒன்றாக
கலந்தபின்ஒரு பாத்திரத்தில் வழித்து அத்துடன் உப்பு சேர்த்து 
கலந்து வைக்கவும் 

நான் அரை மணிநேரம் கழித்து தோசைகளாக வார்த்தேன் .மிக அருமையாக வந்தது .
துவரம் பருப்பு சேர்த்தால் தோசை முருகலாவரும் ..
.

கிரைண்டரில் அரைக்கும்போது தான் தனித்தனியே 
அரைக்கவேண்டும் .
மிக்சி என்றால் அனைத்தையும் ஒன்றாகவே அரைக்கலாம் .
..ஆனால் கிரைண்டரில் அரைக்கும்போது சுவையே தனி .

இதற்க்கு தேங்காய் சட்னி அல்லது மிளகாய்பொடி 
நல்ல பக்கத்துணை 
பீர்க்கங்காய் தோல் துவையலும் இருந்தது அத்துடன் 
சாப்பிட நல்ல சுவை .

45 comments:

 1. அஞ்சு...அருமை அருமை...அழகாக இருக்கிறது க்விலிங். பிரமித்துப்போனேன். அழகாக வந்திருக்கிறது வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளமதி

   Delete
  2. Avvvv me the first..

   Very nice qulling Anju.

   Again recipe??? Escapeeeeee:))

   I will come 2moro Anju. Good night and snow kanavukal:)

   Delete
  3. இப்ப எனக்குள்ள உறங்கிக்கிட்டுருக்கிற சமையல் புலியை தட்டி எழுப்பிட்டீங்க :))
   இனி ஒன்லி சமையல் குறிப்புகள் இன் காகிதப்பூக்கள் .
   Good night and snow kanavukal:)//for you ..we don't want snow we've had enough:))

   Delete
 2. படம் கீறி எடுத்தீங்களா? அழகாக வெகு சிறப்பாக இருக்கிறதே... கலர் கச்சிதமாகப் பொருத்தமாய் இருக்கு.

  நல்ல கைவண்ணம்....
  கண்களை கட்டிப்போட்டுவிட்டது...:)

  ReplyDelete
 3. Wow....Dosai looks crisp n perfect...quilling is beautiful.

  Just got up angel akka..will come back again. :)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மகி தோசை ரொம்ப டேஸ்டியாக வந்தது ..தோசை இட்லின்னா முகம் சுளிக்கும் என் மகளே விரும்பி சாப்பிட்டா :))மேடம் தினமும் சப்பாத்தி தான் சாப்பிடுவாங்க

   Delete
 4. Why don't you add the final quilling in a single photo instead of collage? I would love to see the little details in that pleasant lady/the flowers in her hand/ the frame etc..
  Please, Thani photo podunga, podunga, podunga

  ReplyDelete
 5. அஞ்சு..தோசையும் நன்றாகவே வந்திருக்கு. பார்க்கும்போது செய்யத்தூண்டுகிறது.
  ரெஸிப்பிதந்த மகிக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நான் தோசை ருசியில் மயங்கி க்விலிங் படத்தை கவனிக்கலை இளமதி ..ரொம்ப டேஸ்டியாக இருக்கு நீங்களும் செய்து பாருங்க

   Delete
 6. என் கோரிக்கைக்கு செவி சாய்த்து படங்களை இணைத்தமைக்கு மிக்க நன்றீ! :)

  க்வில்லிங் மிக அழகா இருக்கு. அந்தப் பெண்ணின் முகம் தனியாச் செய்திருக்கீங்க என்பதே இந்த படத்தைப் பார்த்துத்தான் தெரியுது. :) சமையல் படங்களை வேணும்னா கொலாஜில் போடுங்க, க்வில்லிங் படங்களை இனிமேல் சிங்கிளாவே போடுங்க, அப்பதான் சிங்கம் மாதிரி இருக்கும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மகி இங்கே இருட்டு நான் படமெடுக்கும்போது முதலில் ஃபிரேமில் போடாம எடுத்தபோ கொஞ்சம் வெளிச்சம் இருந்தது நேற்று frame வாங்கி வந்தேன் அப்புறம் எடுத்த படங்கள் glare அடிச்சி நல்லா இல்லை
   இப்ப இன்னோர் படம் பிரேமில் போட்டதும் இணைசிட்டேன்
   இனி தனியே போடுகிறேன்

   Delete
 7. அஞ்சு..இப்போ தனித்தனியா படம் போட்டது இன்னும் நல்ல விளக்கமா இருக்கு. நல்ல கற்பனை. அருமை.

  உங்க கை வண்ணமே தனிச்சிறப்பு மிக்கதுதான். என் குரு செஞ்சது என்று சொல்லும்போது எனக்கும் ரொம்ம்பவே பெருமையா இருக்கு...:)

  பகிர்வுக்கு மிக்க நன்றி அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. குரு வெல்லாம் இல்லை இளமதி ..நாம் அனைவருமே கற்றுகொள்கிறோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறோம்

   quilling சிலர் செய்வதை பார்த்தா நான் இன்னும் பேசிக் தான்

   Delete
  2. GRAPHICS QUILLING ரொம்பவும் அழகாக உள்ளது.

   தக்காளி தோசை + சட்னி படத்தில் பார்க்கவே ரொம்பவும் ஜோராக உள்ளது. பசியைக்கிளப்புது.

   பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

   Delete
  3. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .அண்ணா

   Delete
 8. ரொம்பவும் அழகாக செய்திருக்கிறீர்கள் ஏஞ்சலின்! அன்பார்ந்த பாராட்டுக்கள்! தோசையும் நன்றாக இருக்கிறது! நானும் தக்காளி தோசை இப்படித்தான் செய்வேன்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ அக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..
   உங்க ப்ளாகில் இருந்து தான் அந்த படத்தை எடுத்தேன் ..எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு ஆனால் சற்றே மாறுதல் செய்து க்விலிங் இல் செய்தேன்

   Delete
 9. அருமையான படம் வரைந்த காட்சிப்படம் வாழ்த்துக்கள் தக்காளி தோசை இனித்தான் செய்து பார்க்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..சீக்கிரம் செய்து பார்த்து சொலுங்க ..தோசை ரொம்ப டேஸ்டியா வந்தது எனக்கு

   Delete
 10. சூப்பர் அஞ்சு. சொல்லவார்த்தையில்லை. அவ்வளவு அழகாக செய்திருக்கிறீங்க. பிரேம்,backround சூப்பரா இருக்கு.

  தக்காளித்தோசை செய்துபார்க்கனும். நல்ல டேஸ்டாக இருக்கும்போல. வித்தியாசமாக இருக்கு செய்முறை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்முலு வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..சீக்கிரம் செய்து பார்த்து சொலுங்க ..தோசை ரொம்ப டேஸ்டியா வந்தது எனக்கு ..இதில் வசதி நாம் அரைத்த உடனே தோசைகளாக வார்க்கலாம்
   கிரைண்டரி செய்யுங்க மென்மையான தோசைகள் கிடைக்கும்

   Delete
 11. மிக அடர்த்தியாக நச்சுறல்போல இருக்கஞ்சு, ஆனாலும் ஒரு சின்ன விண்ணப்பம் அப்படியே முகத்துக்கும் கையுக்கும் செய்திருந்தால் இன்னும் எழுப்பமாக இருக்கும்... இது பாதி மொட்டைபோல தென்படுது முடிஞ்சால் இனியும் முயற்சி செய்யுங்கோவன்.

  தலையில் பூவுக்கு மேலெ கொஞ்சம் கறுப்பு முடிபோலவும் போட்டால் மொத்தப் படம் இன்னும் ஜொலிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இது டிஜிடல் கிராபிக் க்விலிங் என்பதால் ஹைலைட் செய்த இடம் மட்டுமே கவில் செய்றாங்க மற்றவர்கள் ..
   ஆனான் உங்க ஐடியாபடி செய்ய நானும் ஒரு படம் எடுத்து வச்சிருக்கேன்

   Delete
 12. தக்காழி தோசை சூப்பர் அதைவிட பக்கத்திலிருக்கும் சட்னிகள் சூப்பரோ சூப்பர். எனக்கொரு டவும், அதெப்பூடி தக்காழி சேர்த்தும் தோசை கலர் மாறாமல் வந்திருக்கு.

  ReplyDelete
  Replies
  1. garrr :))என் கணவரே என்னை எந்த டவூட்டும் கேக்கலை ..அதைவிட எங்க வீட்டு குட்டி எலி கூட டேஸ்டின்னு சொல்லி சாபீடது ..நான் நாலு தக்காளி சேர்த்தேன் அதீஸ் போட்டோவில் லைட்ட வந்திருக்கு

   Delete
 13. எனக்கொரு டவுட் என, மேல் வசனத்தை திருத்திடோணும் வெளியிடமுன்.. சொல்லிட்டன்:))))

  ReplyDelete
 14. அருமை...அழகாக இருக்கிறது..தக்காளித்தோசை super...

  ReplyDelete
  Replies
  1. நல்லடேஸ்டியா இருந்தது தக்காளி தோசை .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Faiza

   Delete
 15. வணக்கம்,தங்கையே!நலமா?நாங்கள் எல்லோரும் நலம்.///அழகான கைவேலைப்பாடு,வாழ்த்துக்கள்.////angelin said;சில மாதங்கள் முன்பு மனோ அக்காவின் பதிவில் இந்த படத்தை பார்த்தேன் :)) அப்பவே சேமித்து படத்தை பிரிண்ட் எடுத்து வைத்திருந்தேன் ..இந்த நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா :)) நமக்கு நேர்மை முக்கியம் .

   Delete
  2. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி .

   Delete
 16. க்வில்லிங் மிக அழகு,,அந்த தக்காளி தோசை தட்டை இந்த பக்கம் அனுப்பிடுங்கோ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேனகா உங்களுக்கு இல்லாததா அப்படியே எடுத்துக்கோங்க ..நல்லடேஸ்டியா இருந்தது தக்காளி தோசை .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 17. கஷ்டமான கைவேலை மிக சிறப்பாக செய்திருகீங்க.எனக்கு இதெல்லாம் எல்லாம் வராது சாப்பிடத்தான் வரும்.அதனால் உங்க குறிப்புப்படி தக்காளி தோசையை பண்ணி பார்த்துக்கறேன்.

  ReplyDelete
 18. GRAPHICS QUILLING looks cute Angelin...and the Podi for the dosa is appealing..enticing..

  ReplyDelete
 19. meeeeeeeeee the firstu........

  Noted Thakkalai Thosai..

  This week break fast ready.....
  thank you very much for sharing anju akkaa.

  ReplyDelete
 20. சூப்பர் செய்முறை, தக்காளி தோசை மிக அருமை.விளக்கம் சூப்பரோ சூப்பர்.

  ReplyDelete
 21. பூக்கொத்துப் பெண் அழகு.
  இதை பல இடங்களில் பல விதமாகப் பார்த்துள்ளேன்.
  அடுத்து நாவில் ஜலம் ஊறுகிறது..தக்காளி தோசைக்கு .நல்லது.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 22. அஞ்சு நான் கூட தோசை முருகலாக வர துவரம்பருப்பு சிறிது போடுவதுண்டு. நன்றாக ரோஸ்டாக வந்திருக்கு தோசை. தக்காளி.ருசிக்கு கேட்பானேன், அருமைதான்.

  ReplyDelete
 23. எனது தளத்தில் Passion On Plate contest வைத்திருக்கிறேன்.. உங்களால் முடிந்த சமையல் குறிப்பினை அனுப்பி போட்டியில் கலந்துக்கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  http://www.en-iniyaillam.com/2013/02/announcing-passion-on-plate-giveaway.html

  ReplyDelete
 24. கிராப்ட் வொர்க் மிக அழகு, கலர் காம்பினேஷன் சூப்ப்ர்

  தக்காளி தோசை நல்ல மொருகலாக இருக்கு

  ReplyDelete