அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/21/13

நான் பப்லு பேசுகிறேன் :))

நான் பப்லு  பேசுகிறேன் :))

                                                                                     


                                                                           
ஒரு நாள் நான் குட்டிபப்பியாக இருக்கும்போது வீட்டை விட்டு  
கொஞ்சம் தொலைவில் எங்க அம்மா சொல் கேளாமல் தனியே
சென்று அங்குள்ள நண்பர்களுடன் விளையாடிகொண்டிருந்தேன் ...
                                                                               

அப்போ திடீரென்று பெரிய பெரிய சத்தம் எல்லாம் கேட்டுச்சு !!!!!
 அந்த பக்கம் போன ஒரு மாமா ...அவர் பிரவுன்  வெள்ளை
 நிறத்தில் இருந்தார் ""
                                                                             
                                                                               
 தீபாவளி நேரத்தில் வீட்டுக்குள் கிடக்காம எதுக்கு வெளியே 
வந்தே பௌ பௌ !! என்று விரட்டினார் .என்னோடு விளையாடி 
கொண்டு இருந்த சீயான் ,கருப்பன் ,குல்லு யாரையும் காணூம்?????                                                                            

எல்லாரும் அவங்க வீட்டுக்கு போயிட்டாங்களோ !!!!!
                                                     

நான் பயந்துகொண்டே நடந்தேன். காதே வலிக்கிற மாதிரி சத்தம் .நெஞ்செல்லாம் பட படன்னு இருந்தது .
அங்கே ஒரு பெரிய காம்பவுண்ட் கேட் திறந்து இருந்ததா நான் 
அந்த வீட்டுதோட்டத்தில் ஒரு ஓரமா உட்க்கார்ந்து கொண்டேன் ..
நிறைய செடிங்க இருந்தது அங்கே ..
.அப்போரெண்டு நெருப்பு குண்டு மாதிரி கிட்ட வந்திச்சு 
அய்யோ பயந்திட்டேன் ஒரு பூனை ..!!!!
                                                                               

கர்ர்ர்னு சொல்லிட்டு போய்டுச்சி 
எனக்கு நெஞ்செல்லாம் பட படப்பு !!!!ரொம்ப பசிச்சிது ..அம்மா சொல் கேக்காம வெளியே வந்தது தப்போ ???

                         நான் அங்கேயே ஒரு ஓரமா தொட்டிகளின் நடுவில் ஒளிஞ்சு 
இருந்தேன் .

இரவெல்லாம் குளிருச்சி ..மழை கூட பெய்தது ம்ம் ஹ்ம் ம் ம் ஹ்ம் 
 இந்த வீட்ல வேற பெரிய நாய்கள் இருப்பாங்களோ சத்தம் கேக்குது ஆனா எட்டி பார்க்க பயம்மா இருக்கு .....அதுக்குள்ளே விடிஞ்சிடுசி ..
நான் அங்கேயே இருந்தேன் ......
அப்போ அங்கே ஒரு அழகான குட்டி அக்கா வந்தாங்க ரெட் 
கலர்லமிடியும் அதே ரெட் கலர்ல சட்டையும் போட்டிருந்தாங்க :))

                                                                                          


எனக்கு அவங்களை பார்த்ததும் ரொம்ப ஹாப்பி :))அங்கே வெளில கிடந்த ஒரு பழைய ஷூவை எடுத்துகிட்டு போய் கொடுத்தேன் அவங்க கிட்ட .                                   

                                                             

அவங்க வீட்டுக்குள்ளபோய் சட்டைல ஒளிச்சு பிஸ்கட்டும் 
பிரட்டும் கொண்டு வந்து தந்தாங்க ..ரொம்ப பசியா ..நான் சாப்பீட்டென் ,,இப்படியே கொஞ்ச நாள் நாங்க யாருக்கும் தெரியாம மீட் பண்ணிப்போம் ..ஒரு நாள் அக்காவோட அம்மா எங்களை பார்த்துட்டாங்க அன்னிக்கு ரொம்ப மழை செடியெல்லாம் மூழ்கி போச்சு தண்ணில ..அக்கா எனக்காக ரொம்ப கெஞ்சி  கேட்டு  வீட்டு வெராண்டாவில் கொஞ்சம் பிளேஸ் கொடுத்தாங்க .அவங்க வீட்ல ஏற்க்கனவே நிறைய உயர்ரக நாய்கள் இருந்தாங்க அவங்களோட நானும் இப்ப பிரண்ட்ஸ் ஆகிட்டேன் .

எனக்கு அக்காவை ரொம்ப பிடிக்கும் அக்கா கடைக்கு போனா 
நானும் போவேன் .அக்கா எந்தெந்த கடைக்கு போவாங்கன்னு
 எனக்கு தெரியும் அவங்க சிவப்பு பை எடுத்தா பேக்கரி ..
கூடை எடுத்தா மார்க்கெட் ரிக்ஷால போனா க்ரோசரி ..எனக்கும் அக்காவுக்கும் ஒரு ஒற்றுமை ரெண்டு பேருக்கும் ரோட் கிராஸ் செய்யவே தெரியாது :)ஆனா என் எய்ம் எப்படியாவது 
அக்காவுக்கு முன்னாடி கடைக்கு போய் நிக்கணும் .
அக்கா வீட்டுக்கு வந்ததும் அம்மாவை திட்டுவாங்க என்னை 
வெளியே விட்டதுக்கு .அவங்க கடைக்கு போவதை பற்றி 
பேசுவதை கேட்டுக்கொண்டே இருப்பேன் அவங்க புறப்படுமுன் 
இயற்கை அழைப்பு காரணம் காட்டி ஐந்து நிமிடம் முன்னே 
வீட்டை விட்டு கலாட்டா செய்து வெளியே செல்வேன் .
இல்லனா அக்கா ரூமுக்குள்ள பூட்டி விட்டு கடைக்கு 
போவாங்க .
                                               
                                   காலேஜுக்கு போகும்போது பஸ் ஸ்டாண்ட் 
போவேன் ..கண்டக்டர் கெட்ட man என்னை பஸ்ல விட மாட்டன் ..இல்லைன்னா அக்கா கூட துணைக்கு நானும் போவேன் ..
அக்கா கல்லூரி முடிச்சு வேற பெரிய படிப்புக்கு போனாங்க
 அப்ப ட்ரெயினில் போக ஆரம்பிச்சாங்க ..நான் விடுவேனா ..
ஸ்டேஷன்  வரைக்கும் போவேன் தினமும் .
அக்கா என்னை வெளியே விடகூடாதின்னு சொல்வாங்க 
ஆனா நான் கதைவைஎல்லாம் கடிச்சு போடுவதை தவிர்க்க 
அம்மா திறந்து விடுவாங்க ..

                                             அவங்க ட்ரெயின் வர்ற நேரம் கூட 
எனக்கு தெரியும் சரி நேரத்துக்கு கதவை பிராண்டுவேன் ..
மரத்துகள்கள் கொட்டி சிதறும் .உடனே அம்மா என் தொல்லை 
தாங்காம கதவை திறந்து விடுவாங்க :)
எனக்கு அக்கான்னா ரொம்ப பிடிக்கும் ..
அக்காவுக்கு 15 வயதிருக்கும்போது இங்கே வந்தேன் ..இப்போ நாள் வேகமாக ஓடிபோச்சு ..!!! அக்காவுக்கு கல்யாணமாம் !!! நானும் போவேனா அக்கா வீட்டுக்கு ..??? 
அக்காவுக்கு நிச்சயமெல்லாம் நடந்தது என்னை ரூமில் கட்டி வச்சிட்டாங்க 
நான் அக்கா பின்னாலேயே சுற்றுவதால் .....((
அக்காவுக்கு திருமணம் முடிந்தது எல்லாரும் அக்காவை ஏர்போர்டில் கொண்டு விட்டாங்க ..அக்கா ஊருக்கு போய் இறங்கினதும் போனில் கேட்ட கேள்வி //அம்மா பப்லு  நல்லா இருக்கானா ,அவனை பத்திரமா பார்த்துக்கோங்க ..வெளில விடாதீங்க .

                                                                 ஐ லவ் யூ அக்கா !!!
                                                                                  


                                                         
****************************************************************************
இத்துடன் முடித்துக்கொள்கிறேன் .சகோதரி அம்பாளடியாள் 
அவர்களின் இந்த  பதிவை படித்ததும் எங்க வீட்டில் நான் 
வளர்த்த ஜீம்மி நினைவு வந்தது பதிவுக்காக பப்லு என பெயர் 
மாற்றம் செய்து பகிர்ந்து கொண்டேன் உங்களுடன் .
எழுதியவை அனைத்தும் உண்மை சம்பவம். அல்சேஷனும் 
டாபர்மேனும் இருந்தாலும் என்மேல் அளவில்லா அன்பை 
பொழிந்தது இந்த ஜிம்மி மட்டும்தான் .

இயல்பாகவே எனக்கு மிருக ஜீவன்களிடம் பிரியமுண்டு அப்படியே எனக்கு கிடைத்த நண்பர்களும் அமைந்ததில் ரொம்ப சந்தோசம் அதிலும் பெரிய சந்தோசம் ஒரு பூனையும் எங்கள் நட்பு வட்டத்தில் இருப்பது .:))

41 comments:

 1. அஞ்சு, உண்மை தான். வளர்ப்பு பிராணிகளை விட்டுப் பிரிவது கொடுமைதான். பூனையாவது பரவாயில்லை. நாய்கள் மிகவும் அன்பாக இருக்கும். பிரிந்து போனால் ஏங்கிப் போய்விடும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வானதி முதல் வருகைக்கும் அழகான கருத்துக்களும் நன்றி ..இந்த மாதிரி நிறைய சம்பவம் இருக்கு ...ஜிம்மியின் படம் ஊரில் இருக்கு ,,அடுத்த முறை எடுத்து வரணும் ..

   Delete
 2. ennaku pets valathu palakamillai.. ungal post ai padikum pooluthu jimmi en koodavey irupathu poola iruku..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Faiza..
   இன்னும் நிறைய பேர் இருக்காங்க எழுதணும் அவங்கலபற்றியும்
   ராமு ஜெயா ,பாப்பு ,சீசர் ஷெரில் ,பெஞ்சி ,விக்கி ,வின்னி ,பரட்டை ,பொம்மி :)) செம்பா

   Delete
 3. நிறுத்தி நிதானமாக முழுவதும் படித்தேன். ரஸித்தேன். குட்டி நாய் பப்லு பேசுவது போலவே எழுதியிருப்பது மிகவும் அருமை. காட்டியுள்ள அத்தனைப்படங்களுமே அழகாக உள்ளன.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்து வாசித்ததற்கும் மிக்க நன்றி கோபு அண்ணா

   Delete
 4. உண்மைதான் ஏஞ்சல்.மனிதரைவிட மிருகங்களோடு பழகுவது மனதிற்கு இதம்.புரிந்துகொள்கிறது எம் உணர்வுகளை.ஆனால் அவர்களில் வாழ்காலம் எங்களை விடக் குறைவானதால் வளர்க்கவும் அவர்களைப் பிரிவதும் கொடுமயாக இருக்கிறது !

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஹேமா நீங்க சொல்வது உண்மைதான் ..எனவேதான் நான் இங்கே மகள் எவ்ளோ அடம் செய்கிரா நாய்குட்டி வேணுமென்று ,ஆனா எனக்கு விருப்பமில்லை ..அதுங்களை பிரியும்போது அது ரொம்ப வலி..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 5. அஞ்சு...ரொம்பவே அனுபவிச்சு அனுபவிச்சதை அப்படியே எழுதியிருக்கீங்க...

  பிராணிகளிடம் அது பூனையோ நாயோ ஆடோ மாடோ எதுன்னாலும் அதுகளுக்கும் பாசம் நிறையவே மனிதரிடமும் உண்டு. என்ன பாவம் பேசத்தெரியாதவை. ஆனால் நாமும் பாசமாக அவற்றுடன் பழகுவதை அவை உணர்ந்துவிட்டால் மனிதரை விட நம்முடன் பாசமாக இருப்பவை இவைதான்.

  அதன் பிரிவு உங்களை எவ்வளவு பாதித்திருக்கும்மென்று புரிந்து கொள்கிறேன். நல்ல பாசப் பகிர்வு அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..பப்லூ தான் என் பிரிவை ரொம்ப மிஸ் பண்ணிருக்கும் அதனால்தான் (

   Delete
 6. பப்லு என்ன சொல்லறதுன்னு பார்க்க வந்தேன். மிக அழகாக எழுதியிருக்கீங்க பப்லுவோட பார்வையில உங்க கதைய. ரசித்துப்படித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமா .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
   சில விஷயங்கள் மறக்கவே மாட்டோம் ..அப்படித்தான் பப்லூவும் ..

   Delete
 7. அழகான நட்பு வட்டம் ..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா :)) எங்க நட்பு வட்டம் ரொம்ப பெரிசு நிறைய நாலுகால் ஆட்கள் இருக்காங்க .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 8. Replies
  1. வாங்க சாதிகா :)) பப்லு இதுக்கும் மேலே லூட்டி அடிச்சிருக்கு நானும் கூட சேர்ந்துதான் :)
   அதனால் தான் சந்தோஷத்தை மட்டும் எழுதினேன் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 9. அருமையான கதை! குட்டிப்பசங்களுக்கு மிகவும் பிடிக்கும்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
   எல்லாரும் குட்டி பிள்ளைகளாகவே இருந்தால் எவ்ளோ சந்தோஷமா இருக்கும் ..கவலையற்ற பிராயம் தானே அது

   Delete
 10. ஜீவராசிகளின் அன்பினை அருமையாக பதிவு செய்து இருக்கின்றீங்க அஞ்சலின் அக்காள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நேசன்

   Delete
 11. எழுதி இருக்கும் விதம் அருமை அஞ்சு. ரசித்துப் படித்தாலும் கண்களில் நீர் - எங்கள் ஷெரீனை விட்டுவிட்டு வந்த நினைப்பு. ;(

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இமா .... இன்னும் நிறைய விஷயம் இருக்கு ஆனா இப்ப கொஞ்சம் எழுதி முடிச்சதும் பழைய நினைவுகள் அப்படியே கண் முன் வருது ..அதான் பாதிலேயே நிறுத்திட்டேன் .

   Delete
 12. ஏஞ்சல் அக்கா, கலக்கிட்டீங்க போங்க! :) முதல்ல பப்லு- என்ற பேரைப் பார்த்ததுமே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! ;) ஏன்னா என் (அக்கா) மகனோட செல்லப் பேர் அதுதான். இப்ப ஐயா வளர்ந்து காலேஜ் போவதால அதிகமா கூப்டறதில்லை! ;)

  உங்க பப்லு வீட்டை விட்டு வந்தது, பொருத்தமான படங்கள், // அந்த பக்கம் போன ஒரு மாமா ...அவர் பிரவுன் வெள்ளை
  நிறத்தில் இருந்தார் ""// இதெல்லாம் க்யூட்! :) அழகா எழுதியிருக்கீங்க!ஒரு பப்பி நிஜமாவே பேசினமாதிரி இருந்தது. குட் ஜாப்!

  எல்லாஞ்சரி, இப்ப ஏன் ஒரு பப்பி வாங்காம இருக்கீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ....வாங்கணும் மகி ஒரு பப்பி இல்லன்னா பூஸ் வாங்கனும்னு ஷரன் சொல்றா ...பார்ப்போம் யாருக்கு லக் அடிக்குதின்னு ..
   அந்த பப்லு akaஜிம்மி செய்யாத அட்டகாசம் இல்லை ..:)) எங்க வீடு ஒரு மினி zoo மாதிரி இருக்கும்

   Delete
 13. நான் காலேஜ் போகும்போது எங்க வீட்டிலும் ஒரு மோக்லி இருந்தான். அவனும் இப்படியே! வீட்டிலிருந்து பஸ்ஸ்டாப் வரை கூடவே வருவான். மாலை வீட்டுக்கு வரும்போது வழியிலே எதிர்கொண்டு மேல தொத்தி தாவி, கொஞ்சி, ஒரு வழி பண்ணிடுவான். :)

  ReplyDelete
  Replies
  1. அதே தான் மகி ரோடு வேடிக்கை பார்க்கும் இவன் சேஷ்டையை :)

   Delete
 14. நான் நீங்களும் pet வாங்கிட்டிங்களோ என்று நினைச்சேன். உண்மையிலே பப்லு பேசிறமாதிரி இருக்கு.நீங்களும் கதை எழுதலாம் அஞ்சு.அப்படி டாலன்டா எழுதியிருக்கிறீங்க. நன்றாக இருக்கு.1வது படம் அழகான படம். பொருத்தமான படங்கள்.
  எங்க வீட்டிலும் லிஸ்ட் இருக்கு. எழுதலாம்.ஆனா அதை நினைத்தால் கவலையாக இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஆமா அம்முலு ..எனக்கே இப்ப எழுதிட்டு ரொம்ப கவலையாகிப்போச்சு ..அதே நினைவா இருக்கேன் ..என்ன செய்ய மனித வாழ்க்கையே நிரந்தரமில்லாதபோது வாயில்லா ஜீவன்கள் எம்மாத்திரம் .
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 15. நலமா ஏஞ்சலின்?

  வரிக்கு வரி ரசிச்சு எழுதியிருக்கீங்க...

  பக்கத்து வீட்டு நாய்ட்ட மாட்டிய பூனையை காப்பாத்தப்போன அம்மாவை கடிச்சதை பார்த்த அந்த சின்ன வயசிலிருந்து எனக்கு என்னவோ பெட்ஸ் னாலே அலர்ஜி...

  ஆனா பொண்ணு நேர் விரோதம்..பூனை அவளுக்கு அலர்ஜியா இருந்தாலும் அவள் பூனைக்குட்டிகளை பெட் பண்ணும் போது பொறாமை தான் மிஞ்சும்...

  ReplyDelete
 16. நாங்க நலம் ரெவரி .

  எங்க வீடு ஒரு மினி zoo :))அனிமல்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் .
  எனைப்போலத்தான் என் மகளும்

  ReplyDelete
 17. ஆவ்வ்வ்வ்வ்வ் இத்தலைப்பே என் கண்ணுக்கு தெரியவில்லையே அஞ்சு. இப்போதான் பார்த்தேன். சுப்பரா எழுதியிருக்கிறீங்க கண்கலங்குது. மனிதர்கள் மட்டுமில்லை நாய் பூனைகள் கூட, நாம் பிரியும்போது கவலைப்படும் சாப்பிடாமல் இருக்கும்.

  ReplyDelete
 18. யாழ்ப்பாணத்தில ஒரு பாரிய இடம்பெயர்வு நிகழ்ந்ததெல்லோ,

  அதன்பின்பு பேப்பரில், “பப்பி” எனும் தலைப்பில் ஒரு கதை வெளிவந்திருந்தது... கிட்டத்தட்ட நீங்க எழுதியதுபோலவே ஒரு சரித்திரம், இடம்பெயர்ந்து போன ஊரெல்லாம் அப்பப்பியும் பினாலேயே ஓடிஓடிவந்ததாம், முடிவில்... கடலைக் கடக்க வேண்டிவந்ததால் பப்பியை கப்பலில் ஏத்த முடியாதெனச் சொல்லி விட்டனர், அதனால் வேறு வழியின்றி கடல்கரையிலேயே பப்பியை விட்டுவிட்டு அவர்கள் இங்காலே வந்துவிட்டனர்... அக்கதையை(பேப்பரில்) வெட்டி எடுத்து வைத்திருந்தேன். படிக்கும்போதெல்லாம் அழுவேன். இப்பவும் பாதிப்பேப்பர் எனிடம் இருக்க்கு, பாதி தொலைந்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா ..இதைபோல நிறைய சம்பவங்கள் ..சில கண்ணீரை வர வைக்கும் என்பதால் நான் பகிரவில்லை ,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

   Delete
 19. வணக்கம்,தங்கையே!நலமா?நாங்க எல்லோரும் நலம்.///அருமையா எழுதியிருக்கிறீங்க.கதை சொல்லும் முறை உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.அப்பப்போ ஏன் நீங்கள் சிறு கதை எழுதக் கூடாது?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா ..நாங்க அனைவரும் நலம் ..நீங்க நலமா .
   இது உண்மை சம்பவம் என்பதால் அப்படியே எழுத முடிந்தது ..இன்னும் நிறைய இருக்கு ..சில சம்பவங்கள் கண்ணீரை வரவழைக்கும் என்பதால் எழுத தயக்கம் ..
   மிக்க நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் .

   Delete
 20. அருமை. பப்லூக்கள் வாழ்வின் சுவாரஸ்யங்கள். நானும் நாய் நேசன்தான். செருப்புகளை வாயில் வைத்திருக்கும் பப்பி படம் ரொம்ப அழகு. அது சரி, எங்கள் ப்ளாக்கில் 'மனுஷங்க சுத்த மோசம்' பகுதியை எப்படிப் ப / பிடிச்சீங்க!! நாய் மனம் என்ற தலைப்பில் அதற்கும் முன்னாலேயே ஒரு பதிவு - இரண்டு பாகமாய் - இதே போல இருக்கிறது! நேரமிருந்தால் படியுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. அப்பவே படிச்சு பின்னூட்டமும் தந்தேன் ..திடீரென நினைவு வந்தது ..ஸ்ரீ அண்ணாவும் நம்மைபோலதானே என்று அதான் இந்த கதை லிங்கை இணைத்தேன்

   Delete
 21. 'இந்த மனுஷங்க' பதிவுக்கு நீங்கள் வந்து படித்துப் பின்னூட்டமிட்டீர்கள் என்று தெரியும். நான் சொல்வது அதற்கும் முன் எழுதிய பதிவு(கள்)!

  நாய் மனம் 1 http://engalblog.blogspot.in/2011/02/1.html

  நாய் மனம் 2 http://engalblog.blogspot.in/2011/02/2.html

  :)))))

  ReplyDelete
  Replies
  1. இப்பதான் அங்கும் வந்து இரண்டாம் பாகத்தில் பின்னூட்டமிட்டேன் அண்ணா .

   கமெண்ட் மாடரேஷன் இல் இருக்கும் ..:))

   Delete
 22. இரண்டாம் சுற்று இது. ;)

  //எனக்கும் அக்காவுக்கும் ஒரு ஒற்றுமை ரெண்டு பேருக்கும் ரோட் கிராஸ் செய்யவே தெரியாது :)// இப்போ எப்படி! பழகிட்டீங்க இல்ல!!

  திரும்பவும் ஷெரீன் நினைப்பு. ;((

  ReplyDelete
 23. பூணி இருக்கா நல்லது நல்லது.

  ReplyDelete