அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/20/13

தோசை உப்புமா :))

வணக்கம் நண்பர்களே :))
இன்று தோசை உப்புமா செய்தேன் சாப்பிட்டுக்கொண்டே 
எங்க ஊர் கொஞ்சம் பார்த்து ரசியுங்கள் 
எங்கே பார்த்தாலும் வெள்ளை நிறமா இருக்கு :))
                                                       
                                                           தோசை உப்புமா 


                                                                                    


                                                                                   
                                                                                    
                                                                                   
                                        இன்னும் பனிபொழிவு நிற்கவில்லை .

                                                                                 
தோசை உப்புமா அப்படியே இட்லி உப்புமா போலதான் 

காலையில் சுட்டு மீதமான மூன்று தோசைகள் இருந்தன 
அவற்றை சிறு துண்டுகளாக கத்தியால் நறுக்கி வைக்கவும் 
மீடியம் அளவு வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும் 
காய்ந்த மிளகாய் ,கடுகு உளுந்து கறிவேப்பிலை இவற்றை 
எண்ணெயில் தாளித்து வெங்காயத்தையும்,
மல்லி இலைகளையும்  சேர்த்து வதக்கவும் 
 பிறகு துண்டு செய்து வைத்துள்ள தோசையை சேர்த்து பிரட்டவும் 
உப்பு அளவு பார்த்து சேர்க்கவும் .உப்பை வெங்காயம் 
தாளிக்கும்போதே    சேர்க்கவும்      (குறிப்பு உபயம் அதிரா ).

உப்புமாவை மெதுவாகஅடிபிடிக்காமல்  பிரட்டவும் .
நான் அதில் இரண்டு தேக்கரண்டி இட்லி மிளகாய் பொடியையும் 
சேர்த்து இறக்கினேன் ,வெகு அருமையாக இருந்தது .      .          ..26 comments:

 1. அதிரா குறிப்பா! அவ்!!! அப்ப.. தொடர்பதிவு! சூப்பர்!
  ம்.. எது மீந்தாலும் உப்புமா பண்ணுறோம்.

  ஸ்னோ!! உப்புமா!! ;D

  பனிப்பொழிவு படங்கல் கலக்குது.

  ReplyDelete
  Replies
  1. idli தோசை சப்பாத்தி எல்லாமே துண்டு செய்து வெங்காய தாளிதத்துடன் :PPPP

   இமா இன்னும் இங்கே ஸ்நோ பொழியுது ..ட்ரிக்சிய விட்ட கண்டுபிடிக்க கஷ்டம் எல்லாமே வெள்ளை

   Delete
 2. அட, தோசை உப்புமாவா? ஏஞ்சல் அக்கா,கலக்கறீங்க போங்க! :)

  தோசை ஆறிப்போனாலே எனக்கு சாப்பிடப் புடிக்காது. வரவரன்னு ட்ரையா இருக்கற மாதிரி ஃபீலிங்க்! சூடாச் சாப்பிடும்போது தோசையின் சுவையே அலாதிதான்..மீந்து போனா முதல்ல வேஸ்ட்டா போகும், இப்ப ஜீனோ வந்தபிறகு அவருக்கு mood இருந்தா தோசையச் சாப்பிடுவார். ;) தோசை உப்மா நல்ல ஐடியா.

  ஆமா,தோசை எப்படி உங்கூர் பனியைப் போலவே வெண்மையா இருக்கு? வழக்கமான தோசைதானே அல்லது புதுவிதமான தோசையா ஏஞ்சல் அக்கா?

  பனி பார்க்க ரொம்ப அழகாஆஆஆஆ இருக்கு, என்ஜாய்! எங்களுக்கு இந்த வருஷம் குளிர் கொஞ்சம் அதிகமானதுக்கே தாங்கமுடியல, ரொம்ப போர்! அவ்வ்வ்! இப்ப வெதர் 70-80F வந்தாச்சே! :))))

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி :))தோசை :))))நான் பயன்படுத்தும் இட்லி அரிசியை பொறுத்து வெள்ளை அல்லது பொன்னிறமாக வரும் .ஷரன் ப்ராண்ட் /தஞ்சாவூர் ப்ராண்ட் என்றால் பொன்னிறமாக வருது வேறு வகையென்றால் இப்படி வெள்ளி நிறமாக வரும் .

   ஆனா உப்புமா செய்தா சூப்பர் டேஸ்ட்

   Delete
 3. super recipe. Enjoyed the photos.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வானதி பிசியாக இருந்தாலும் வருகை தந்ததற்கு மகிழ்ச்சிப்பா ..பூசார் தான் நீங்க இல்லாம ஒரே கலாட்டா ..வந்து கொஞ்சம் கவனிச்சிட்டு போங்க

   Delete
  2. பூஸார் சும்மா சவுண்டுதான் ஹிஹி....பயம் வேண்டாம். இந்த கிழமை long week end அதனால் தான் கொஞ்சம் நேரம் கிடைத்தது. கமன்ட் போடாவிட்டாலும் பதிவுகள் படிப்பதுண்டு.

   Delete
 4. வெகு ஈசியான குறிப்பாக இருக்கு அஞ்சு. டேஸ்டியா கவும் இருக்கும்போல.
  நானும் டிவியில பார்த்தேன். இங்கு சொல்லத்தேவை
  யில்லை. வெள்ளைவெளேர்தான் கொஞ்சநாட்களா
  பகிர்வுக்கு நன்றி அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்முலு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..
   ரொம்ப டேஸ்டியா இருக்கு செய்து பார்த்து சொல்லுங்க

   Delete
 5. ஏஞ்சலின்,தோசையை நறுக்காமல் 3 மணிநேரம் ப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் கையால் சுலபமாக உதிர்க்கலாம்...நானும் அடிக்கடி இது போல் செய்வதுண்டு,ரொம்ப பிடிக்கும்!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேனகா ...ஈசியா உதிர்க்க ஐடியா ரொம்ப நல்லா இருக்கு ..அடுத்த முறை செய்கிறேன் .வருகைக்கும் கருத்துக்கும் டிப்சுக்கும் நன்றிம்மா

   Delete
 6. அஞ்சு...நலமா?...:)

  தோசை உப்புமா..நல்ல வித்தியாசமான சிந்தனையுடனான குறிப்பு. நான் இப்படி மீந்துபோன சப்பாத்தி, ரொட்டியில் செய்திருக்கிறேன்.

  தோசை மீதமாவதில்லை எங்கள் வீட்டில்...;) இதற்கென தோசை சுட்டு செய்திட வேண்டியதுதான்...:)))

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி ..செய்து பாருங்க ..எனக்கு இட்லி உப்புமாவைவிட இது ரொம்ப பிடிச்சிருக்கு

   Delete
 7. ஸ்நோ...கொட்டு கொட்டென்று இம்முறை கொட்டுகிறது...
  இங்கும்தான்...ஒரே வெள்ளைக் காடாய் வீதி எங்கே நடை பாதை எங்கேன்னு தெரியாத அளவில் கொட்டி இருக்கிறது.

  இங்கு வீட்டுக்கு வெளியே அங்கு குடி இருப்போர் அவரவர் வீட்டு எல்லைவரை கட்டாயம் நடை பாதை உப்புத் தூவி ஐஸ் வழித்து துப்பரவு செய்யவேண்டும். செய்யாவிட்டால் குற்றம் அறவிடுவார்கள்.

  ரொம்ம்ம்பக் கஷ்டமான வேலை...:( கை விறைத்து குத்துமே தாங்கமுடியாது. விரல் நுனிகளில் வெடிப்பு வந்து ரத்தம் கசிந்து வேதனை கொடூரம்.

  அங்கும் உங்கள் பகுதியிலும் இப்படித்தான் என்று நினைக்கிறேன். பார்க்க அழகுதான். ஆனால் படும் வேதனை சொல்லிமாளாது...

  நல்ல பதிவு...பகிர்வுக்கு நன்றி அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. அங்கே துப்புரவு செய்யாவிடில் குற்றம் ..இங்கே நாங்க செய்தா குற்றம் ...
   நாங்க இங்கிலாந்து வந்த ஆண்டு வீட்டின் முன் ஸ்னோவை கிளீன் செய்தப்போ பக்கத்துக்கு வீட்டு நபர் சொன்னார் //துப்புரவு செய்தபின் கிளாஸ் மாறி ஆகிடும் அதில் நடப்போர்வழுக்க் விழுந்தா நாங்கதான் பொறுப்பு என்று கர்ர்ர்ர்

   Delete
 8. வெரி வெரி டேஸ்டி உப்புமா! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சுரேஷ் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும்

   Delete
 9. தோசை உப்புமா பிரமாதமா இருக்கே.....செய்துட வேண்டியது தான்.

  உங்க ஊரே கலக்கலா இருக்கே...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆதி ...எங்க ஊர் இப்ப வெள்ளையா இருக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வெள்ளி நிறம்தான் தெரியுது ..தோசை உப்புமா செய்து பாருங்க ரொம்ப நல்லா இருக்கு

   Delete
 10. தோசை உப்புமா அருமை ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிக்கா

   Delete
 11. அஞ்சு தோசை மிஞ்சிப்போயி அதிரா உப்புமா ஆனதோ?

  ஆஆஆஆஆஆ

  அஞ்சு தோசை இல்லை மூணு தோசை தான்
  அஞ்சுவே சொல்லியிருக்காங்கோ. ;)))))

  பனிப்படங்கள் யாவும் அருமை.

  ReplyDelete
 12. படங்கள் எல்லாம் அருமை. தோசை உப்புமா வித்யாசமாக இருக்கு. தோசை சூடு ஆறிவிட்டால் இப்ப்டி செய்து சுவையாக சாப்பிடலாம் என்று நினைக்கிறேன். நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. எங்கு பார்த்தாலும் வெள்ளை பஞ்சு குமியல்களா இருக்கு இன்றும் நிறைய படமெடுத்தேன் பள்ளி போகும்போது
   தோசை உப்புமா பெங்களூர் ஸ்பெஷல் என்று நினைக்கிறேன் ..ஆனா நல்ல டேஸ்டியா இருக்கு ..கொஞ்சம் மிளகாய் பொடியும் சேருங்க ..டேஸ்ட் சூப்பர்

   Delete
 13. யப்பப்பா..படங்களி பார்க்கவே குளிரடிக்கிறதே.அதற்கு சூடான தோசை உப்புமா செம செம..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சாதிகா இங்கே நேற்று பள்ளிகள் எல்லாம் மூடிட்டாங்க ..இன்னும் ஸ்னோ கரையவில்லை
   எங்கு பார்த்தாலும் வெள்ளை பஞ்சு குமியல்களா இருக்கு

   Delete