அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/22/12

Quilling மற்றும் ,சமையல் பக்கம் :))

                                                                           
                                                                               
இந்த இரண்டு வாழ்த்து அட்டைகளும் மீள் சுழற்சி செய்த 
பொருட்களை பயன்படுத்தி செய்தது .
                                                            
இரண்டிலும் க்வில்லிங் டூல் உபயோகப்படுத்தவில்லை .
மாறாக பீட் வொர்க் bead work செய்ய பயன்படும் சிறு மர 
உருளையை சுற்றி செய்தேன் .
                                                                                 
முதல் வாழ்த்தட்டையில்  இருக்கும் இலைகளும் மலர்களும் 
ஏசியன் கடையில் வாங்கிய ஊதுபத்தி பாக்கெட் உபயம் 
பாக்கெட் கலர் அழகா இருந்ததால் வாங்கிட்டேன் :))))
அவை இப்ப மலர்களாகவும் இலைகளாகவும் .
அடுத்தது <<<<<<<<<<<<<<

சமையல் பக்கம் 

முதலில் ஒரு இனிப்பு ....மகி உபயத்தில் செய்த கோதுமை 
கச்சாயம்:)))
                                                                                
நன்றி மகி .அவங்கறேசிப்பியில் இருந்து சற்றே மாற்றி 
செய்தேன் 
ஒரு கப் முழு கோதுமை அரைமணிநேரம் ஊறவைத்து 
மிக்சியில் லேசா தண்ணீர் விட்டு அரைத்தேன் .
அதற்க்கு ஒரு முழு அச்சு வெல்லம் சேர்த்து அத்துடன் 
பொடித்த ஏலக்காய் மற்றும் ஒரு ஸ்பூன் அரிசி மாவும் 
சேர்த்து கலந்துசுட்டேன் .
அடுத்த நாள் வெச்சு சாப்பிட எதுவும் மிஞ்சவில்லை .
சுவையோ சுவை !!!!!!!!!!!!!!!
அடுத்தது சோலே பட்டூரா
                                                                                         
ரெசிப்பி பிறகு வரும் .
இது மீராவின் ரெசிப்பி பார்த்து செய்த 
முளைக்கீரை மொளகூட்டல் .


                                                                                    
யார் யாருக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோங்க :))))))))
அதிரா ஏற்க்கனவே சாப்பிட்டதால் அவங்களுக்கு வேணாமாம் .:)))))வார இறுதியை சந்தோஷமா கொண்டாடுங்க .
மீண்டும் சந்திப்போம் .:))))


  

6/18/12

தோழிகளின் QUILLING / ஓமப்பொடி


நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு விஷயம் சந்தோஷத்தை 
தரும் அல்லவா :)))))))) அதுபோலதான் எனக்கும் 

                                                                                          
                                                                                

எனது சில க்வில்ட் படங்களின் பெயரை Google Images  போட்டால் 
தேடும்போது உடனே என் பெயருடன் முதலில் காட்டும் 
QUILLED SQUIRREL AND SQUIRRELS /QUILLED ROBIN /QUILLED SWANS
 QUILLED PERIWINKLE,QUILLED BICYCLE,QUILLED FOR GET ME NOT 
இப்படிஎல்லாமே வருகிறது :))))))))))
இதையெல்லாம் விட இரண்டு பேரால் எனக்கு ரொம்ப சந்தோசம் 
உண்டானது முதலாமவர் தோழி அம்முலு அடுத்தவர் இளமதி 
இவங்க இருவருக்கும் நான்(MY CARDS ) ஒரு INSPIRATION ஆகி 
அவங்க இப்ப ரொம்ப அழகா க்வில்லிங் செய்யறாங்க .
இது அம்முலுவின் க்வில்ட் மெழுகுவத்தி 
                                                                                       

இது இளமதியின் மீன் 
மற்றும்  பூசார்  

                                                                                

                                                                            
எனக்கு ரொம்ப சந்தோசம் .:)))))))))

மிக்க நன்றி தோழிகளே .:)))
நம்மூரில் தாத்தா பூ தாத்தா பூ என்பார்களே ,

Tridax procumbens 
                                                                        thanks Google        
மஞ்சள் நிறத்தில் சிறு வெள்ளை இதழ்களுடன் நகத்தால்
 சுண்டும்போது டக்கென வெட்டுபடும் /காய்ந்த பின் ஊதினால் 
பஞ்சாக பறக்கும் .
அந்த மலர்கள் எடுத்து ஊதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் .
வெளிநாடு வந்த பின்னர் DANDELION மலர்களோடு இதே
 வேலையை செய்ய அதிக ஆசைபட்டு 
                                                                         thanks google    

ஆர்வக்கோளாறால் ஊத முற்ப்பட :((((((((((((
இப்ப அலர்ஜி வந்து தவித்து கொண்டிருக்கிறேன் :))) 

..........................................


ஓமப்பொடி 


                                                                                  
ரெண்டு கப் கடலை மாவு /அரை கப் அரிசி மாவு ,உப்பு /கொஞ்சம் பெருங்காயத்தூள் /ஓமம் தண்ணீர்(அரைமணிநேரம் ஊற வைத்து 
அரைத்து வடிகட்டிய ஓமம் தண்ணீர்) இவற்றை எண்ணையுடன் 
சேர்த்து பிசைந்து ஓமப்பொடி அச்சில் போட்டு சுட்டு எடுத்தேன் 
கர கர மொரு மொரு என்றிருந்தது .
000000000000000000000000000000000000000000
                                                                                    
இது கலைக்காக .இந்த படங்கள் 
கலை நிபியை பார்க்கலையாம் 
இந்தாங்க கலை சீக்கிரமா வந்து  பாருங்க :))))))))))

நிபிக்கு கூட மலர்கள் என்றால் ஆசை :))))))))


Eligible Bachelor :))))))))))))   LOL:)))))
                                                                                   

மீண்டும் சந்திப்போம் .


Angelin.


6/15/12

Sail Boat quilled card /தந்தையர் தின வாழ்த்துக்கள்


                        
அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் .
                                                                                          
ஒவ்வொருவருக்கும் அப்பான்னா அதிலும் முக்கியமா 
பெண் பிள்ளைகளுக்கு தந்தை என்றால் அதீத பாசம் .
என் மகளுக்கும் அவள் அப்பான்னா அவ்ளோ அன்பு ,.
தந்தையர் தினத்துக்கு மட்டும் இத்தனை காலம் வாழ்த்து 
அட்டை நான் செய்யவில்லை ..இதுதான் நான் செய்யும் 
முதல் வாழ்த்து அட்டை ..
                                                                                     


                                                                         
The greatest gift I ever had came from God :I call him Dad .
Wishing you all the blessings of a Happy Father’s Day.
வார இறுதியை சந்தோஷமா கொண்டாடுங்க .

Angelin.

6/11/12

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ......SIVA

                                                                                    
                                                                                    


மன்னையின் மைந்தன் !!
பதிவுலக சிங்க குட்டி !!!
குடைக்குள் மழையை ரசிக்கும் :))))))))))
எங்கள் அன்பு சின்ன தம்பி
பொன்னியின் செல்வன் 
சிவா அவர்கள் எல்லாஆசிர்வாதத்துடன்    
எப்பவும் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டி 
அவருடைய பிறந்த நாளில் வாழ்த்துமாறு பதிவுலக 
நண்பர்களை கேட்டுகொள்கிறேன் .

சிவா ,அக்காவால் முடிஞ்சது அன்போடு இந்த சைக்கிளை 
அளிக்கிறேன் .
ப்ளு கலர் ரிப்பன் கட்டி ரெடியா இருக்கு .
எடுத்துக்கோங்க .
அப்புறம்  ஒரு சிட்டுவேஷன் சாங் :)))))))))))))சைக்கிள் படத்துக்கு 
பொருத்தமா இந்த பாட்டுதான் கிடைச்சது சிவா 


                                                                      

HAPPY BIRTHDAY SIVA :)))))))))))))))))))
May God Bless You Thambi .


Wishes,Blessings from your beloved sisters /brothers /friends .
6/7/12

காகித ஆமையும்...நிஜ தவளை குட்டியும்


                                       

இந்த க்வில்ட் ஆமைக்குட்டி ஒரு சிறு பெண்ணுக்காய் செய்தது 
அவ ஆமைக்குட்டி வளர்க்கிறாள் :)))))))))
அவளின் ஆன்டி இந்த கார்டை செய்து தரும்படி  கேட்டிருந்தாங்க .
எப்பொழுதும்போல இந்த வாழ்த்து அட்டையிலும் மீள் சுழற்சி 
செய்த காகிதங்களை பயன்படுத்தியிருக்கேன் .


                                                                                     
                கீழே இருப்பவரை தெரிகிறதா ????????
இன்னமும் எங்க  தோட்டத்தில் தான் இருக்கிறார் 
பொண்ணு அவருக்கு பெயர் சூட்டி ஞானஸ்நானம்லாம் 
கொடுத்திருக்கா :)))))))) FROGBERT 

                                                                     

இவரைப்பற்றிய FLASHBACK 

 சென்ற வருடம் என் மகளும் மைத்துனரின் பிள்ளைகளும் 
சேர்ந்து துவங்கிய தவளை பண்ணையில் மிஞ்சியவர் .
இவள் பள்ளி குட்டையில் இருந்தும்  மற்றும் அவர்கள் 
வீட்டு அருகில் இருந்தும் தவளை முட்டைகளை கொண்டு 
வந்து வளர்க்க ஆரம்பித்தாங்க .அவங்க வீட்டில் ஒன்றும் 
இருக்கவில்லை 
ஓடி விட்டன .எங்க வீட்டில் மீன் குளம் இருப்பதால் 
தங்கியிருக்கார் அவர்தான் இவர் :))))))).

                                                                           
 MY DEAR FRIENDS :
ஊரிலிருந்து உறவினர் வருகை மற்றும் சில பணிகள் நிமித்தம் சில காலம் வலைப்பக்கம் வர இயலாது ..நேரமிருக்கும்போது மீண்டும் சந்திப்பேன் 
ஏஞ்சலின் .


6/5/12

Recycled Quilled Card Toppers மற்றும் நிப்பட் ,ரசித்து ருசித்தரெசிப்பிக்கள்


Card Toppers மற்றும் நிப்பட் ,ரசித்து ருசித்தரெசிப்பிக்கள் 
                                                                                

மாஸ்க் போட்டிருக்கும் பெண் ஒரு விதமான வாழ்த்து அட்டை .
என் நண்பி அனுப்பினார் .கொலாஜில் ஒரு இடம் காலியா இருந்ததால் அந்த படத்தை இட்டு நிரப்பினேன் 
மிக்க  நன்றி  ஆசியா :)))

                                                                                      

இத்தனை நாளும் நான் பாசிபருப்பு கடைந்து செய்வேன் .
ஒரு நாளும் அம்மா செய்வதை போல எனக்கு அந்த டேஸ்ட் 
வரவே வராது 
நம்ம ஆசியா சமீபத்தில் இந்த ரெசிப்பி போட்டிருந்தாங்க 
அப்படியே செய்தேன் ..அம்மாவின் கைப்பக்குவம் அதே ருசி .
மிக்க நன்றி ஆசியா  
இது அரைத்து விட்ட எலுமிச்சை ஊறுகாய் நம்ம மேனகாவின் 
ரெசிப்பி .
சென்ற வாரம் நண்பர் சென்னையில் இருந்து யர்லாந்து வந்தார் 
அவர் கிட்ட  தங்கை அனுப்பிய பார்சலில் இந்த உப்பிலிட்ட 
எலுமிச்சை ஊறுகாய் 

                                                                                   

அனுப்பியிருந்தாள்.அதை மேனகா சொன்ன மாதிரியே செய்தேன் .
தயிர் சாதத்துடன்  செம காம்பினேஷன்  யம் யம் 

                                                                                       

இது நிப்பட் , அல்லது தட்டை அல்லது ஓட்டடை.
                                                                                  
ரெண்டு கப் அரிசி மாவு ஒரு மேஜைகரண்டி வறுத்த கடலை மாவு 
ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் கொஞ்சம் ஊற வைத்த  உளுந்து ,
ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் ,உப்பு, ஒரு ஸ்பூன் பொட்டுகடலை ,
இவற்றை நீர் எண்ணெய் விட்டு பிசைந்து தட்டி சுட்டு எடுத்தேன் .
சூர்யா ஜோதிகா காபியுடன் அதாங்க சன்ரைஸ் காபியுடன் 
அபார டேஸ்ட் .

    என்னுடைய மீள்சுழற்சி card toppers.                                                                          
இந்த வண்ணத்து பூச்சியும் ,Fuchsia மலரும் பழைய காகிதம்
   மற்றும் card file divider இவற்றை வெட்டி கையாலேயே சுற்றி
   க்வில்லிங் டூல் இல்லாமல்  செய்தது .

                                                                                                  
                                                                                      
மீண்டும் சந்திப்போம் :)))))
படித்து அகமகிழ்ந்தேன் .
இப்பதான் செய்தி பார்த்தேன் உடனே இணைத்தேன் 
இந்த சிறு பெண் பற்றிய செய்தி ஹிந்து பேப்பரில் பாருங்க .
இறைவன் அவளை ஆசீர்வதிக்கட்டும் .


6/3/12

Quilled Monogram/ பூப்போல இட்லி, தக்காளி சட்னி மற்றும் ஆஸ்பரகஸ் பொரியல்


பிறந்த நாள்  வாழ்த்து அட்டை,
                                                                                     

எங்கள் ஆலயத்துக்கு வரும் ஒரு பெரியவர் அவர் பெயர் ஜோசப் .
அவருக்கு ஆறாம் திகதியன்று எண்பத்து ஐந்தாவது பிறந்த நாள் .
அவருக்கென செய்த வாழ்த்து அட்டை இது.
ஒரு முறை பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன் .
இந்த தாத்தாவின் குடும்ப பெயர் ராஜ்குமார் .வெஸ்ட் இண்டீஸ் 
இலிருந்து இங்கிலாந்து நாட்டுக்கு குடிபெயர்ந்தவர் .
ஆனால் இவருக்கு தனது மூதாதையர் யார் எதுவும் தெரியாது 
ஆங்கிலம் மட்டுமே தெரியும் .பெயரை வைத்து அவர் ஒரு 
தென்னிந்தியராக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன் .
இங்கே வந்தது  முதல் ஒவ்வொரு வருடமும் அவருக்கு 
ஏதாவது பரிசுடன் வாழ்த்து அட்டையும் கொடுப்பது வழக்கம் .
இந்த லிங்கில் monograam செய்முறை  இருக்கு  .
நான் செய்து முடித்தபின்புதான் இந்த லிங்கை 
கண்டுபிடித்தேன் !!!!!!!, இதில்தெளிவா இருக்கு .
நான் பயன்படுத்தியது பழைய நியூஸ் லெட்டர் வர்ண காகிதம் 
அதை பேப்பர் ஸ்ரெடரில்வெட்டி செய்தேன் 
                                                                    


அடுத்தது சமையல் பக்கம் 


                                                                                     

நானும் பூப்போல இட்லி செய்தேனே !!!!!!!!!!!!!
                                                                           
மகி நன்றி .மகி சொல்லிருந்தாங்க ஆமணக்கு விதை சேர்த்து 
இட்லிக்கு அரைச்சா மென்மையான இட்லி கிடைக்குமென்று .
 அந்த மியாவில் இருப்பது ஆமணக்கு விதை முத்துக்கள் .


பூப்போல இட்லி தக்காளி சட்னி மற்றும் ஆஸ்பரகஸ் பொரியல் 
தக்காளி சட்னி அம்மா இப்படிதான் செய்வாங்க 
சிறிதாக நறுக்கிய வெங்காயம்/ஒரு clove பூண்டு /
சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் 
நறுக்கிய மூன்று தக்காளி 
சிறு கொட்டை அளவு புளி
கறிவேப்பிலை கொத்தமல்லி இலைகள் 
சாம்பார் பொடி 
உப்பு தேவையான அளவு 
.........................

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து 
கொள்ளவும் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு 
கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்
இவற்றுடன் புளியையும் சேர்த்து வதக்கவும் 
சாம்பார் பொடி ஒரு டீ ஸ்பூன் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும் 
பிறகு நறுக்கிய தக்காளி மற்றும் மல்லி இலை சேர்த்து மூடி 
வைக்கவும் நான் தண்ணீர் லேசாக தெளித்தேன் ,
குறைந்த சூட்டில் ஐந்து  நிமிடத்தில் வெந்து குழைந்து வரும் 
இட்லிக்கு அருமையான சைட் டிஷ் . 
ஆஸ்பரகஸ் பொரியல் மேனகாவின் குறிப்பு பார்த்து செய்தது 
உடலுக்கு மிகவும் நல்லது .
.............
அன்புடன் 
ANGELIN.


நம்ப வானதியின்  யாமினி எங்கே போனாள் கதையின் செகண்ட் 
ஹீரோயின்  பாத்ததுமே எனக்கு சிரிப்பு .
வான்ஸ் கதையை படித்ததில் இருந்தே 
அப்பவே சொல்லனும்னு இருந்தேன் இப்ப சொல்லிட்டேன் .
என்ன ஆச்சரியம்னா அதே மாதிரி சம்பவம் எனக்கும் 
பள்ளியில் நடந்திருக்கு .
அதிசயமேரின்னு ஒரு பெண் என்னை ரொம்ப BULLY
செய்தா ..ஏழாம் வகுப்பிலேயே .பரீட்சைல பேப்பர் காட்டாட்டி 
தண்டவாளத்தில் தள்ளிடுவேன் என்றெல்லாம் பயம் காட்டுவா.
வான்ஸ் கதையில் நடந்தது  போலவே ஒரு நாள் வீட்டை 
விட்டு ஓடிட்டா ( பாவம் .
அவ ஓடிட்டானதும் எனக்கு அப்ப ரிலாக்ஸ்டா இருந்தது 
இப்ப யோசிக்கிறேன் அந்த பிள்ளைக்கு வீட்டில் எவ்ளோ 
ஸ்ட்ரெஸ் இருந்திருந்தா அந்த வயதில் இப்படி ஒரு 
காரியம் செய்திருப்பா ?/
கண்டிப்பா வானதியின் கதையை படிங்க .
மீண்டும் சந்திப்போம் .