அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/8/12

மா இஞ்சி சாதம்/வாழைக்காய் பொடிமாஸ்/ flax பொடி சேர்த்தவத்தக்குழம்பு,


இது பதினைந்தே நிமிடம் டார்கிட் வைத்து செய்த 
Quilling card .                                                                                       மா இஞ்சி சாதம் ..


                                                                                   


மா இஞ்சி சாதம் கீதா வின் ரெசிப்பி பார்த்து செய்தது 

இது flax seed பொடி சேர்த்த  வற்றல் குழம்பு :))                                                                                  
கீதாவின் பக்கத்தில் இந்த flax பொடி சேர்த்த சாதம் ரெசிப்பி 
பார்த்தேன் செய்தும் விட்டேன் ..கொஞ்சம் அளவுக்கதிகமாக 
பொடி அரைத்து வைத்திருந்தேன் ..
அடுத்த நாள் பூண்டு காரக்குழம்பு aka வத்தக்குழம்பு 
செய்யும்போது இந்த பொடியையும் சேர்த்து செய்தேன் 
ருசி அபாரம் ..
linseed /flax சீட் உடலுக்கும் மிக நல்லது 

இந்த வாழைக்காய் பொடிமாஸ் லக்ஷ்மியம்மா 
குறிப்பு பார்த்து செய்தது 


                                                                                      
எப்பவும் அளவுக்கதிகமா வெந்து குழையும் வாழைக்காய் 
இம்முறையில்நன்கு வந்தது .
லிங்க் கொடுக்க பார்த்தால் blog removed என்று வருகிறது .


இப்ப அடிக்கடி எங்க வீட்டில் சல்மான் டீ aka சுலைமாநீ டீ aka 
கேரள கட்டாஞ்ச்சாய் ..மகி சொன்ன மாதிரியே செய்தது   .                                                              
                                                                                      

கொலாஜில் ....flax பொடி அரைக்கும்போது நான் சிறிது 
வெள்ளை எள் மற்றும் கொஞ்சம் உலர்ந்த தேங்காய் பூ 
Desiccated coconut வறுத்து  சேர்த்து அரைத்தேன் .
யாஹூ முதல் பக்கத்தில் அடிக்கடி spotted என்ற தலைப்பில் 
படங்கள் வருமே அது போல மியாவ் spotted :))))))))


இந்த வின்டரும் .மெலனி /ஹாப்பி /ஜான் /டாலு /விக்கி 
இவங்க வெளியில்தான் இருக்க போறாங்க .                                                                                   
                                                                                     
இது தான் கொள்ளு /HORSE கிராம் 
                                                                                   

இதுதான் ..LINSEED OR FLAX  SEED 
                                                                                     
(Thanks Google )

    Have a great Day ..Cheeeeeeeeers:))))))                                                                     

49 comments:

 1. அஞ்சு!!!!!
  15 நிமிடத்தில்....க்விலிங்.:)
  ம்... கிரேட்.:) அஞ்சுவுக்கு எல்லாமே நொடிப்பொழுதில் சாத்தியமே..;)))

  ReplyDelete
  Replies
  1. கார்ட் ஒவ்வொண்ணிலேயும் உங்க கிறியேற்ரிவிற்ரியே தனிதான்...:)
   எனக்குன்னா இந்தக்க கலருக்கு இது பொருந்துமான்னு யோசிக்கிறதிலேயே பாதிப் பொழுது போயிடும்....:)

   அவசரமா செய்தாலென்ன ஆறுதலா செய்தாலென்ன உங்க ரசனையும் அதை செய்திடுற திறமையும் தனிதான்.
   உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கு அஞ்சு..:)

   Delete
  2. //அஞ்சுவுக்கு எல்லாமே நொடிப்பொழுதில் சாத்தியமே..;)))
   //

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
  3. கியூ வரிசையில எங்கின போகும்... கோல்ட்டூ மீனாக்கள்:)

   Delete
  4. ஹாங்:))) பூனையாரின் காதை கடிக்க

   Delete
 2. மா இஞ்சி சாதம், வாழைக்காய் பொடிமாஸ், flax பொடி சேர்த்தவத்தக்குழம்பு, மகியின் சல்மான் டீ...
  அப்பப்பா எல்லாமே நல்ல ருசியான ஐட்டம்ஸ்...:)))

  வாழ்த்துக்கள் அஞ்சு! பகிர்தலுக்கும் மிக்க நன்றி.:)

  ReplyDelete
  Replies
  1. // இந்த வின்டரும் .மெலனி /ஹாப்பி /ஜான் /டாலு /விக்கி
   இவங்க வெளியில்தான் இருக்க போறாங்க //

   ஐயோ பாவம்..குளிருல அப்புடியேஏஏஏ......அவ்..:(
   அப்புடி ஒண்ணும் ஆகிடாதோ????

   Delete
  2. அவங்களுக்கு ஒன்றும் ஆகாது இளமதி ..நாங்க ரெண்டு வருடமுன் உள்ளே எடுத்து வந்ததால் தான் ஒருவர் இறந்தார் ..
   மேற்பாகம் மட்டும் ஐஸ் பிடித்தாலும் நீரின் கீழ்பகுதி ஒன்றும் நடக்காது இவங்களும் சந்தோஷமா இருப்பாங்க

   Delete
 3. ஏஞ்சலின் இப்ப ப்ளாக் சரி ஆயிடுச்சி.கொஞ்ச நாளா ஹாக் ஆயிருந்திச்சி எப்படி ஏன்னு ஒன்னுமெ புரியல்லே. ஒரே பதிவுலயே இவ்வளவு ஐட்டம் கொடுத்தா எப்படி?

  ReplyDelete
  Replies
  1. வாங்க லஷ்மிம்மா ..இப்ப லிங்க் இணைச்சுட்டேன் ..உங்க பிளாக் வெறுமையா இருந்தது ..எங்கே காணோமேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்
   இனி ஒன்றிரண்டு பதிவு மட்டும் போடப்பார்க்கிறேன்

   Delete
  2. லக்ஷ்மிம்மா மீண்டும் ப்ளாக் எதோ ஆகிடுச்சி பாருங்க கொஞ்சம்

   Delete
 4. ஹையோ எனக்கந்த மா இஞ்சி சாதம் அப்பூடியே வேணும்ம்ம்ம்ம்ம்ம்.. அஞ்சு கொஞ்சம் லேட்டாத்தான் வந்து படிக்கிறேன்ன்...

  ReplyDelete
  Replies
  1. நோ ப்ராப்ளம் அதீஸ் ,வேலையெல்லாம் முடிச்சு வாங்க

   Delete
  2. ம்.ஹ்ம்.. இவ்வளோஓ லேட்டா வந்து சாதமாம். அதெல்லாம் அப்பவே முடிஞ்சு போச்.:)
   வேணும்னா சாயா இருக்கு. அதை குடியுங்க..:)))

   Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நேக்கு இஞ்சி சாதம் தான் வாணும்:)).. அஞ்சு எடுத்து எனக்காக ஒளிச்சு வச்சிருப்பா:)

   Delete
 5. 15 நிமிஷத்தில் க்வில்லிங் செய்திருக்கீங்களா,பாராட்டுக்கள் ஏஞ்சலின்!! கலக்கல் ரெசிபிஸ்!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேனகா

   Delete
 6. தேர்ந்தெடுத்து செய்த சமையல் குறிப்புகளும் 15 நிமிடங்களில் செய்த வாழ்த்து அட்டையும் பிரமாதம் ஏஞ்சலின்!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா

   Delete
 7. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தனபாலன்

   Delete
 8. ஹய்யா என்ரை favourite காரக்குழம்பு, வத்தக்குழம்பு நினைத்தாலே பசியெடுக்கிறதே. ஞாபகமூட்டியதற்கு நன்றி அன்ஜெலின். வழமைபோல இண்டைக்கும் சட்டென்று செல்லம்மா காலில விழுந்திடவேண்டியதுதான். செல்லம்மாவுக்கு ரொம்ப நல்லமனசு காலைப்பிடிச்சனென்றால்போதும் மனமிரங்கி கேட்டதெல்லாம் செய்துதந்திடுவா. Bye Anjelin காரக்குழம்போடா ஒருபிடி பிடிச்சிட்டுவந்து அப்புறம் மீதியை எழுதிறன்.

  ReplyDelete
  Replies
  1. பாவம் செல்லம்மா ஆன்ரி:)

   Delete
  2. வாங்க அம்பலத்தார் அண்ணா ..செல்லம்மா அண்ணியின் ரெசிப்பிஸ் கொஞ்சம் பகிருங்களேன் எங்களோடு .அவங்களின் தேங்கா பூ சாதம் எங்க வீட்டில் அடிக்கடி செய்றேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

   Delete
 9. Card சூப்பர் அஞ்சு...

  //இப்ப அடிக்கடி எங்க வீட்டில் சல்மான் டீ aka சுலைமாநீ டீ aka
  கேரள கட்டாஞ்ச்சாய் ..மகி சொன்ன மாதிரியே செய்தது .///

  ஓ அப்பூடியோ? ஆத்தில அல்லோரும் நலம்தானே?:) இல்ல ஜும்மா கேட்டேன்:)

  ReplyDelete
  Replies
  1. இருங்க மெலனியை அனுப்பறேன் உங்க காதை பிடிச்சு கடிக்க :))

   Delete
 10. வருகை தந்து ...பின்னூட்டமளித்த அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உப்பூடி ஒரு வரியில சொன்னால் நாங்க இனிமேல் வரமாட்டோம் ஜொள்ளிட்டோம்ம்.. வேலை மினக்கெட்டு ஓடிவந்து பின்னூட்டம் போடும் நாங்க எல்லாம்... என்ன குட்டிக் கிட்னி வச்சிருக்கிற ஆக்களோ?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. விடுங்கோ மீ கோயிங் டூ தேம்ஸ்ஸ்.. முடியல்ல:)..

   Delete
  2. இரவு உறங்குமுன் பார்த்ததும் போட்டது ...
   இப்ப தனித்தனியாப் பதில் சொல்லிட்டேன் மியாவ்
   //விடுங்கோ மீ கோயிங் டூ தேம்ஸ்ஸ்.. முடியல்ல:)..//

   நான் பதில் சொல்லாட்டி நீங்க நெசம்மா தேம்சுக்கு போவீங்களா அதீஸ்
   அவசரப்பட்டுட்டேனோ :))

   Delete
 11. ரொம்ப சூப்பராக செய்து இருக்கின்றிங்க...அதுவும் 15 நிமிடத்தில்...கலக்குறிங்க...

  மா இஞ்சி சாதம் செய்து பார்த்ததில் மகிழ்ச்சி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா ...மா இஞ்சி சாதம் ரொம்ப டேஸ்டியா இருந்தது கீதா ..அதே மாதிரிதான் லின்சீட் சாதமும்

   Delete
 12. சுவையான சமையல் குறிப்புகள், சிம்பிள் & க்யூட் கார்டு! இந்த flax seed, quiona
  ரெண்டுமே நான் இன்னும் வாங்கவே இல்லை. எல்லா ரெசிப்பியும் நல்லா இருக்கு. சுலைமானி டீ வீட்டில எல்லாருக்கும் புடிச்சுதா? சந்தோஷமா இருக்கு.:)

  ReplyDelete
  Replies
  1. flax seed, //

   அப்பூடின்னா கொள்ளுத்தானே?.... கனியிருப்ப எல்லோரும் காய் கவரீனம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

   ஒரு காலத்தில குதிரைக்கு வச்சதை எல்லாம் இப்போ தேடித்தேடி மக்கள்ஸ் உண்கிறோம்ம்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் 2012 டிஷம்பரைத்தான் ஞாபகப்படுத்துது ஜாமீஈஈஈஈஈஈ:)

   Delete
  2. // அப்பூடின்னா கொள்ளுத்தானே?....//

   இல்லைஐஐஐ......அது வேஏஏற....இது வேஏஏஏற...:))))

   Delete
  3. வாங்க மகி :)) இந்த பூஸை பாருங்க கொஞ்சம் ..நீங்க எவ்ளோ அருமையா படமெல்லாம் போட்டு sprouted horse gram aka கொள்ளு செய்தீங்க
   படமெல்லாம் பார்த்தும் டவுட் கேக்கிறாங்க அவ்வ்வ்வ்

   Delete
  4. இளமதி மியாவுக்காக படத்தை இனைச்சேன் :))

   Delete
 13. நீங்க செய்து பார்த்தது மட்டுமில்லாமல் படங்களையும் எடுத்துபோட்டு எங்களையும் ரசிக்க வச்சிருக்கீங்க angelin நன்றாக இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமா :)) எனக்கொரு பழக்கம் பிறரின் ரெசிப்பியை செய்து உடனே ஷேரும் செய்வேன் அவங்களுக்கும் சந்தோஷமாயிருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
  2. //இது பதினைந்தே நிமிடம் டார்கிட் வைத்து செய்த
   Quilling card .//

   திறமை, அருமை, அழகு .... பாராட்டுக்கள்.

   Delete
  3. மிக்க நன்றி அண்ணா

   Delete
 14. மாஇஞ்சி சாதம், வற்றல் குழம்பு, வாழைக்காய் பொடிமாஸ் எல்லாமே ஜோர் ஜோர், ருசியான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள், பாராட்டுக்கள் நிர்மலா.

  ReplyDelete
 15. வருகை தந்து அனைத்தையும் ரசித்ததற்கு மிக்க நன்றி அண்ணா

  ReplyDelete
 16. அஞ்சு லேட்டா வந்ததுக்கு மன்னிக்கணும். இந்த மா இஞ்சி இன்னும் என் கண்ணில் படல. நான் இங்கே இந்தியன் ஷாப் இல் கேட்டேன் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. ஊருக்கு போகும் பொது வாங்கணும்.

  ரெசிபி எல்லாம் அருமை. 15 நிமிடங்களில் குவில்லிங் கார்டா???? அந்த கார்டை அளவு எடுத்து கட் பண்ணவே எனக்கு 15 நிமிஷம் ஆகும்:))

  ReplyDelete
  Replies
  1. கார்ட் ப்லான்க்ஸ் ரெடிமேடாக கிடைக்குது கிரி அதுமேல கலர் பேப்பர் அட்டை ஒட்டி க்விளிங் செய்தேன்

   Delete
 17. விண்டேர் இல் வெளியில் இருந்தால் அஞ்சு பேருக்கும் ஒன்னும் ஆயிடாதா ?? பூசார் உங்கள வேவு பார்க்க வந்து இருக்காரோ? பார்த்து அஞ்சு சாக்கிரதை :))


  flax சீட் பவுடர் ஆஸ்டா வில் ஓட்ஸ் இருக்கும் செல்ப் இல் இருக்கே அஞ்சு. அதை கூட நீங்க யூஸ் பண்ணலாம்.

  கொள்ளு அண்ட் பிளாக்ஸ் சீட் படம் நம்ம மேட்டம் :)) உக்கு தான் போட்டு இருப்பீங்கன்னு நெனைச்சேன் அதே போல டவுட்டு அம்மணி கேட்டுட்டாங்க :))

  ReplyDelete
  Replies
  1. சரியா கண்டுபிடிச்சிட்டீங்க கிரி :))))))

   Delete