அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/3/12

Craft and Kitchen Corner /தோழிகளின் சமையல் ரெசிப்பிக்கள்

http://artefacts-antiqueimages.blogspot.co.uk/2011/09/free-antique-image-for-personal-use_26.html


 மேலிருக்கும் வலைபூவில் இருந்து பிரிண்ட் எடுத்து க்விலிங் 
முறையில் செய்த படம் .


                                                                                 

தோழிகளின் சமையல் ரெசிப்பிக்கள் 
http://asiyaomar.blogspot.co.uk/2012/10/carrot-fritters.html
இதில் முட்டை சேர்க்கவில்லை 
காரட் போண்டா அல்லது fritters செய்முறை ஆசியாவுடையது 
செய்தமுறை எங்க தானைத்தலைவி அஞ்சா பெண் சிங்கம் 
அதிராவ் அவர்கள் எப்படி வெங்காய பஜ்ஜியை செய்ய வைத்தார்களோ 
அதே மெதட் :))))))இது எங்க வீட்டு நள பாகம் 
                                                                                 
http://asiyaomar.blogspot.co.uk/2012/06/blog-post_04.html   ...
ஆசியாவின் பாசிபருப்பு கறி ...சப்பாத்திக்கு  நல்ல சைட் டிஷ் 
http://sashiga.blogspot.co.uk/2011/07/vengaya-kosu.html

மேனகாவின் செய்முறை பார்த்து செய்த வெங்காய கோஸு 
இட்லி தோசைக்கு மட்டுமல்ல சப்பாத்திக்கும் நல்ல தோழன் 

ஈசி வெஜ் குருமா ..ஹி !!!! நம்ம சொந்த குறிப்பு :))
                                                                         
ஈசி வெஜ் குருமா ..ஹி !!!! நம்ம சொந்த குறிப்பு :))
இதை ஜலீலா அவர்களின் event ற்கு அனுப்புகிறேன் 
தேவையான பொருட்கள் 

frozen mixed vegetables ......2 cups 
துண்டுகளாக வெட்டிய உருளைக்கிழங்கு ஒரு கப் 
இஞ்சி பூண்டு விழுது ...தலா ஒரு தேக்கரண்டி 
ஒரு சிறிய அளவு வெங்காயம் 
ஒரு சிறிய தக்காளி 
உப்பு ...தேவையான அளவு 
விழுதாக அரைத்த தேங்காய் ஒரு மேஜைக்கரண்டி நான் தேங்காயின் அளவை குறைத்து  அதற்குபதில் மூன்று முந்திரிபருப்பு சேர்த்து அரைத்தேன் 
மிளகாய்த்தூள் .....ஒரு தேக்கரண்டி 
தனியா தூள் ...இரண்டு தேக்கரண்டி 
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி 
எண்ணெய் ...ஒரு ஸ்பூன் 
தாளிக்க ...சோம்பு..ஒரு தேக்கரண்டி 
பட்டை /கிராம்பு /ஏலக்காய் ..தலா .இரண்டு 
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ,அலங்கரிக்க 
எலுமிச்சை சாரி அரை தேக்கரண்டி 

ப்ரெஷர் குக்கரில் ..எண்ணெய் ஊற்றி சூடானதும் 
தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக வதக்கவும் 
பின்பு நறுக்கிய வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது 
காய்வகைகள் நறுக்கிய தக்காளி இவற்றை ஒன்றன் பின் 
ஒன்றாக வதக்கவும் 
மசாலா வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி அதில் அரைத்த 
தேங்காய் விழுதையும் சேர்த்து வதக்கி காய்கறிகள் மூழ்குமளவு
நீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் 
வந்ததும் அடுப்பை அணைக்கவும் ...சிறிது நேரம்  ஆவி 
அடங்கியபின் குக்கரை திறந்து எலுமிச்சை சாறு சேர்க்கவும் ..
ருசியான வெஜ் குருமா ரெடி ..சிலர் தயிர் சேர்ப்பார்கள் 
ஆனா இம்முறையிலும் நன்றாகவே வரும் .


மூன்று வேளையும் சப்பாத்தி சாப்பிடும் என் மகளுக்காக
நிறைய சைட் டிஷ் ..இன்னும்வரும் ..:)))


36 comments:

 1. வாவ்...... சூப்பர்.....:)
  முதல்ல க்விலிங் அதுதான் எனக்கு. எப்பவும் போலவே
  இதுவும் அழகா, தெளிவா அருமையா இருக்கு.

  சிம்பிள் ஆனா சிறப்பா இருக்கு அஞ்சு!

  வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. இப்ப எதுக்கு இங்கின கர்ர்ர்ர்ர்ர்.....:)))

   Delete
  2. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே மாதிரி கர்ர்ர்ர் :)வரும் முன்னே மியாவ் வரும் பின்னே :)))))))

   Delete
 2. க்வில்லிங் மிக அழகு!! குறிப்பை செய்த பார்த்தமைக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்...சப்பாத்தி சைட் டிஷ் நிறைய எதிர்ப்பார்க்கிறேன்..என் மகளும் உங்க மகள் போல ஒரு சப்பாத்தி விரும்பி....

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலான வீடுகளில் இந்த சப்பாத்தி அராஜகம் தானா :))
   வாங்க மேனகா ,,தினமும் ஒரே அட்டகாசம் என் பொண்ணு

   இன்னும்நிறைய இருக்கு வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

   Delete
 3. தோழிகளின் சமையல் ரெசிப்பிக்கள்.....
  ஒவ்வொண்ணா பார்க்கிறேன்.
  நல்லாவே செஞ்சிருக்கீங்க:) படங்களே கண்ணைக் கவருதே!

  அதென்ன குட்டீஈஈ எழுத்தில இது எங்க வீட்டு நளமாகம்னு போட்டிருக்கீங்க...கர்ர்ர்ர்ர்:)

  அதுதான் ச்சும்மா கோல்ட் கலரில கிறிஸ்பியா அசத்தலா இருக்கு. செஞ்சவங்களுக்கு எங்க வாழ்த்துக்கள்!!! சொல்லீடுங்க..:)

  ReplyDelete
  Replies
  1. அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி யங் மூன் ..பாராட்டுக்களை சொல்லிடறேன்

   Delete
 4. ஹாஆ.. உங்க
  //ஈசி வெஜ் குருமா ..ஹி !!!! நம்ம சொந்த குறிப்பு //

  அதுகூட ம். நல்லா இருக்கே..;)

  சமையல் க்வீன் இல்லையோ நீங்க.:) நடக்கட்டும்ம் அரசாட்சி..:))

  வாழ்த்துக்கள் அஞ்சு!!!
  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சமையல் க்வீன் இல்லையோ நீங்க.:) நடக்கட்டும்ம் அரசாட்சி..:))//


   சே சே :)) சமையல் இளவரசி ஆக கூட தகுதி இல்லை எனக்கு ....எதோ மற்ற தங்கைகள் குறிப்பு பார்த்து கொஞ்சம் முன்னேற்றம்

   Delete
 5. ஈசி வெஜ் குருமா-சூப்பர்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தனபாலன் ..நம்ம ரெசிப்பி ட்ரை செய்து பார்க்க சொல்லுங்க வீட்டில் :))

   Delete
 6. 3 times chappaathi...// same blood...

  Yummy...Enzoy Angelin...

  ReplyDelete
  Replies
  1. அடடா ரெவரி வலைச்சரத்தில் கலக்கப்போறார் என அறிஞ்சேன்ன்.. மறந்தே போயிட்டனே... இன்றோடு முடியுதாக்கும்.. முருகா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 மீ...

   பல சோலிகள்.. காலநிலை மாற்றம், மறந்தே விட்டேன்.

   Delete
  2. //3 times chappaathi...// same blood...//

   AWWWWWW :))))))))))உங்க வீட்லயும் இந்த பிரச்சினை இருக்கா ??

   முடியல ரெவரி ...இவளுக்கு ரைஸ் ஆசையே இல்லை அப்படி சாப்பிட்டாலும் ரசம் ரைஸ் என்பாள் ..என் கணவரும் அவளுக்கு சப்போர்ட் இந்த விஷயத்தில் ...

   Delete
 7. மேலிருக்கும் வலைபூவில் இருந்து பிரிண்ட் எடுத்து க்விலிங்
  முறையில் செய்த படம் .////

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் போய்ப் பார்த்தேன் அழகிய படங்கள்.. குயில்:) செய்ய இலகுவான...

  எனக்கொரு டவுட்டு:)).. நீங்க செய்யும் இந்த கார்ட்ஸ் எல்லாம் சாதாரண கடையில் வாங்கும் கார்ட்சின் அளவேதானா? அப்போ இந்த குயிலிங்கிலான பூக்கள் எல்லாம் அவ்ளோ குட்டியாவா இருக்கும்? நான் கலர் கலரா பேப்பர் சேர்த்து வச்சிருக்கிறேன்ன்... ஒருநாளைக்கு பாருஞ்கோவன்.. வலையுலகமே...கண்ணில இமை தொடப்போகுது என் குயில் கார்ட் பார்த்து.

  ஜொள்ள மறந்திட்டேன்ன் சூப்பர்ர்.. அஞ்சு...

  ReplyDelete
  Replies

  1. மியாவ் எல்லாம் சின்ன சைஸ் கார்ட்ஸ் தான் ..
   சிலநேரம் வைட் A 4 CARD வாங்கி மடித்தும் செய்வேன் ..கலைக்கு செய்தது அந்த முறை
   இந்த ரெடிமேட் கார்ட்ஸ் WORKS இல் வாங்கினேன்

   Delete
 8. செய்தமுறை எங்க தானைத்தலைவி அஞ்சா பெண் சிங்கம்
  அதிராவ் அவர்கள் எப்படி வெங்காய பஜ்ஜியை செய்ய வைத்தார்களோ
  ///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இன்னும் கொஞ்சம் “அடைமொயி” சேர்த்திருக்கோணும்:)..

  ReplyDelete
  Replies
  1. கவலைபடாதீங்க ..அடுத்த போஸ்ட்ல வெறும் அடைமொழி மட்டும் இரண்டு PARAGRAPH :))))))))))

   Delete
 9. அதே மெதட் :))))))இது எங்க வீட்டு நள பாகம் ///

  சத்தியமா இது எனக்குப் புரியவேயில்லை:).. யங்மூன் விளங்கப் படுத்தியிருக்காட்டில் எனக்குப் புரிஞ்சிருக்காமலேஏஏஏஏஏஏ பொயிருக்கும்:))..

  அதுதான் சொன்னனே.. மீ சுவீட் 16 ஆக்கும், நேரடியாச் சொன்னால்தான் எதுவுமே புய்யும்:).

  ReplyDelete
  Replies
  1. நளபாகம் சரி:), ஆனா கத்தி காட்டி மிரட்டி ஒண்ணும் செய்ய வைக்கலியே?:)).. இல்ல ச்ச்சும்மா ஒரு டவுட்டு:)).. அதுக்காக அனுபவம் பேசுதாக்கும் எனக் கொடி தூக்கிடக்கூடா ஆரும்.. ஜொள்ளிட்டேன்ன்ன்:).

   Delete
  2. // நளபாகம் சரி:), ஆனா கத்தி காட்டி மிரட்டி ஒண்ணும் செய்ய வைக்கலியே?:)).. இல்ல ச்ச்சும்மா ஒரு டவுட்டு:)).. அதுக்காக அனுபவம் பேசுதாக்கும் எனக் கொடி தூக்கிடக்கூடா ஆரும்//

   ஹ்ம்..இங்கின எல்லாரும் தங்கள்ட அனுபவத்தைதான் பேசிக்கிறாங்க.
   அதில நீங்க மட்டும் விதி விலக்கோஓஓஓ..;)))
   அங்கை வந்து நீங்க என்னமாதிரி மிரட்டி உருட்டி வேலை வாங்குறீங்கன்னு கேட்டாத்தான் தெரியும் சேதி...:)))

   Delete
  3. //நளபாகம் சரி:), ஆனா கத்தி காட்டி மிரட்டி ஒண்ணும் செய்ய வைக்கலியே?:)).. இல்ல ச்ச்சும்மா ஒரு டவுட்டு:))..//


   ஒரு சிஷ்யைக்கு க்ளியரா சொல்லிதரணும் ..நீங்க இந்த விஷயத்தை ஏன் முதலில் சொல்லவேயில்ல.... கர்ர்ரர்ர்ர் :))))))))))

   Delete
 10. ஈசி வெஜ் குருமா ..ஹி !!!! நம்ம சொந்த குறிப்பு :))
  /////

  ஹா..ஹா..ஹா.. இதெல்லாம் சொல்லியா புரிய வைக்கோணும் எங்களுக்கு:)) சரி சரி முறைக்காதீங்க.. நான் விரதமெல்லே.. ரொம்ப வயக்கெட்டுப்போயிருக்கிறேன்ன்:)) தாங்காது:).

  ஆனாலும் இந்த வெஜ் குருமா நான் செய்யுறது செய்யுறதுதான்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா செய்யுங்க அதிரா ..இட்லி தோசைக்கும் நல்ல காம்பினேஷன்

   Delete
 11. ஆசியாவின் பாசிபருப்பு கறி //
  மேனகாவின் செய்முறை பார்த்து செய்த வெங்காய கோஸு
  //

  அனைத்தும் ஜூப்பர்.

  ReplyDelete
 12. மூன்று வேளையும் சப்பாத்தி சாப்பிடும் என் மகளுக்காக
  நிறைய சைட் டிஷ் ..இன்னும்வரும் ..:)))
  //

  ஹையையோ முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈ:)) எங்களைத்தான் சமையல் குறிப்புப் போட்டு மிரட்டுறா என்றால்:)) அந்தக் குட்டியையுமா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சிக்கின் பிரட்டல், மட்டின் பிரட்டல், முட்டைக் கொத்து செய்யோணும் ஜொள்ளிட்டேன்ன்:)).. ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல்ல :))

  ReplyDelete
  Replies
  1. அவதான் என்னை மிரட்டறா அதீஸ் :)))
   ஒரு நாள் சப்பாத்தி இல்லன்னா மேடம் முகம் சுருங்கும்

   Delete
 13. Quilled card is Superb!

  Thanks for the veggie recipe collection! All the dishes are delicious!

  ReplyDelete
 14. Quilled card வழக்கம் போல் சூப்பர். சமையலும் அசத்தல்.என் குறிப்பையும் செய்தமைக்கு நன்றி.
  வெஜ் குருமா சூப்பரோ சூப்பர்.

  ReplyDelete
 15. அன்புள்ள நிர்மலா,

  மெயில் கிடைத்த மூன்றாவது நிமிடமே இங்கு ஓடோடி வந்துட்டேன்.

  எட்டிப்பார்த்தால் 30 பேர் மூக்கைப்பிடிக்கச் சாப்பிடுகிறார்ர்கள்.

  அதனால் எனக்கு 31 ஆவது பந்தியில் தான் இடம் கிடைக்கும் போலத்தெரிகிறது.

  அதனால் நான் இன்று உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்.

  பிறகு வருவேன். இங்கு ஒரே இருட்டூஊஊஊஊஊ.

  கரண்ட் வேறு இல்லை. அதனால் வேறு வேலைகளை கவனிக்கப்போறேன்.

  பிரியமுள்ள கோபு

  ReplyDelete
 16. மிக அருமை படங்கள் பார்த்ததும் இப்பவே சப்பாத்தி குருமா கேட்குது.

  ReplyDelete
 17. அஞ்சு, எல்லாமே சூப்பர். இப்பெல்லாம் நான் யார் ரெசிப்பியும் பார்த்து சமைப்பதில்லை. ஒரே பிஸியோ பிஸி. எல்லாமே சூப்பர் ரெசிப்பீஸ்.

  ReplyDelete
 18. க்விலிங் நன்றாக இருக்கிறது. அழகும்.
  ரெசிப்பி பார்த்தேன் மிக்க நன்றி ஏஞ்சலின்.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 19. சப்பாத்தி+குருமா பற்றிய விளக்கமான அழகான பதிவு. பாராட்டுக்கள் நிர்மலா.

  ReplyDelete