அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/9/12

11/8/12

மா இஞ்சி சாதம்/வாழைக்காய் பொடிமாஸ்/ flax பொடி சேர்த்தவத்தக்குழம்பு,


இது பதினைந்தே நிமிடம் டார்கிட் வைத்து செய்த 
Quilling card .                                                                                       மா இஞ்சி சாதம் ..


                                                                                   


மா இஞ்சி சாதம் கீதா வின் ரெசிப்பி பார்த்து செய்தது 

இது flax seed பொடி சேர்த்த  வற்றல் குழம்பு :))                                                                                  
கீதாவின் பக்கத்தில் இந்த flax பொடி சேர்த்த சாதம் ரெசிப்பி 
பார்த்தேன் செய்தும் விட்டேன் ..கொஞ்சம் அளவுக்கதிகமாக 
பொடி அரைத்து வைத்திருந்தேன் ..
அடுத்த நாள் பூண்டு காரக்குழம்பு aka வத்தக்குழம்பு 
செய்யும்போது இந்த பொடியையும் சேர்த்து செய்தேன் 
ருசி அபாரம் ..
linseed /flax சீட் உடலுக்கும் மிக நல்லது 

இந்த வாழைக்காய் பொடிமாஸ் லக்ஷ்மியம்மா 
குறிப்பு பார்த்து செய்தது 


                                                                                      
எப்பவும் அளவுக்கதிகமா வெந்து குழையும் வாழைக்காய் 
இம்முறையில்நன்கு வந்தது .
லிங்க் கொடுக்க பார்த்தால் blog removed என்று வருகிறது .


இப்ப அடிக்கடி எங்க வீட்டில் சல்மான் டீ aka சுலைமாநீ டீ aka 
கேரள கட்டாஞ்ச்சாய் ..மகி சொன்ன மாதிரியே செய்தது   .                                                              
                                                                                      

கொலாஜில் ....flax பொடி அரைக்கும்போது நான் சிறிது 
வெள்ளை எள் மற்றும் கொஞ்சம் உலர்ந்த தேங்காய் பூ 
Desiccated coconut வறுத்து  சேர்த்து அரைத்தேன் .
யாஹூ முதல் பக்கத்தில் அடிக்கடி spotted என்ற தலைப்பில் 
படங்கள் வருமே அது போல மியாவ் spotted :))))))))


இந்த வின்டரும் .மெலனி /ஹாப்பி /ஜான் /டாலு /விக்கி 
இவங்க வெளியில்தான் இருக்க போறாங்க .                                                                                   
                                                                                     
இது தான் கொள்ளு /HORSE கிராம் 
                                                                                   

இதுதான் ..LINSEED OR FLAX  SEED 
                                                                                     
(Thanks Google )

    Have a great Day ..Cheeeeeeeeers:))))))                                                                     

11/3/12

Craft and Kitchen Corner /தோழிகளின் சமையல் ரெசிப்பிக்கள்

http://artefacts-antiqueimages.blogspot.co.uk/2011/09/free-antique-image-for-personal-use_26.html


 மேலிருக்கும் வலைபூவில் இருந்து பிரிண்ட் எடுத்து க்விலிங் 
முறையில் செய்த படம் .


                                                                                 

தோழிகளின் சமையல் ரெசிப்பிக்கள் 
http://asiyaomar.blogspot.co.uk/2012/10/carrot-fritters.html
இதில் முட்டை சேர்க்கவில்லை 
காரட் போண்டா அல்லது fritters செய்முறை ஆசியாவுடையது 
செய்தமுறை எங்க தானைத்தலைவி அஞ்சா பெண் சிங்கம் 
அதிராவ் அவர்கள் எப்படி வெங்காய பஜ்ஜியை செய்ய வைத்தார்களோ 
அதே மெதட் :))))))இது எங்க வீட்டு நள பாகம் 
                                                                                 
http://asiyaomar.blogspot.co.uk/2012/06/blog-post_04.html   ...
ஆசியாவின் பாசிபருப்பு கறி ...சப்பாத்திக்கு  நல்ல சைட் டிஷ் 
http://sashiga.blogspot.co.uk/2011/07/vengaya-kosu.html

மேனகாவின் செய்முறை பார்த்து செய்த வெங்காய கோஸு 
இட்லி தோசைக்கு மட்டுமல்ல சப்பாத்திக்கும் நல்ல தோழன் 

ஈசி வெஜ் குருமா ..ஹி !!!! நம்ம சொந்த குறிப்பு :))
                                                                         
ஈசி வெஜ் குருமா ..ஹி !!!! நம்ம சொந்த குறிப்பு :))
இதை ஜலீலா அவர்களின் event ற்கு அனுப்புகிறேன் 
தேவையான பொருட்கள் 

frozen mixed vegetables ......2 cups 
துண்டுகளாக வெட்டிய உருளைக்கிழங்கு ஒரு கப் 
இஞ்சி பூண்டு விழுது ...தலா ஒரு தேக்கரண்டி 
ஒரு சிறிய அளவு வெங்காயம் 
ஒரு சிறிய தக்காளி 
உப்பு ...தேவையான அளவு 
விழுதாக அரைத்த தேங்காய் ஒரு மேஜைக்கரண்டி நான் தேங்காயின் அளவை குறைத்து  அதற்குபதில் மூன்று முந்திரிபருப்பு சேர்த்து அரைத்தேன் 
மிளகாய்த்தூள் .....ஒரு தேக்கரண்டி 
தனியா தூள் ...இரண்டு தேக்கரண்டி 
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி 
எண்ணெய் ...ஒரு ஸ்பூன் 
தாளிக்க ...சோம்பு..ஒரு தேக்கரண்டி 
பட்டை /கிராம்பு /ஏலக்காய் ..தலா .இரண்டு 
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ,அலங்கரிக்க 
எலுமிச்சை சாரி அரை தேக்கரண்டி 

ப்ரெஷர் குக்கரில் ..எண்ணெய் ஊற்றி சூடானதும் 
தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக வதக்கவும் 
பின்பு நறுக்கிய வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது 
காய்வகைகள் நறுக்கிய தக்காளி இவற்றை ஒன்றன் பின் 
ஒன்றாக வதக்கவும் 
மசாலா வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி அதில் அரைத்த 
தேங்காய் விழுதையும் சேர்த்து வதக்கி காய்கறிகள் மூழ்குமளவு
நீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் 
வந்ததும் அடுப்பை அணைக்கவும் ...சிறிது நேரம்  ஆவி 
அடங்கியபின் குக்கரை திறந்து எலுமிச்சை சாறு சேர்க்கவும் ..
ருசியான வெஜ் குருமா ரெடி ..சிலர் தயிர் சேர்ப்பார்கள் 
ஆனா இம்முறையிலும் நன்றாகவே வரும் .


மூன்று வேளையும் சப்பாத்தி சாப்பிடும் என் மகளுக்காக
நிறைய சைட் டிஷ் ..இன்னும்வரும் ..:)))