அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/13/12

QUILLING Guild U.K ,COMPETITION ...photos


Quilled Peace Dove.
                                                                             
                                                                                     
                             
இந்த வருடம் இங்கிலாந்து QUILLING GUILD சார்பாக நடைபெற்ற 
போட்டியில் எனது மகள் அவள் வயது CATEGORY இல் இரண்டாம் 
பரிசு பெற்றாள் .
ஒவ்வொரு வயதினருக்கும் அவர்கள் க்வ்லிங் செய்யகூடிய 
திறமையையும் அடிப்படையாக வைத்து போட்டி நடைபெற்றது ...
மகள் 10 வயது இலிருந்து 14 வயதினருக்கு உட்பட்ட பிள்ளைகளுடன் 
போட்டியிட்டாள் ..
அவள் மிகவும் பள்ளி வீட்டுபாடம் என்று பிசியாக இருப்பதால் 
வேறு வழியின்றி அவள் படத்தை எனது ப்ளாகில் போட சொன்னா :))

இதை  சாதா A 4 PAPER ,SHREDDER இல் வெட்டி செய்தா 
ஒரு காட்டுக்குள்ள ஒரு சிங்கம் தான் இருக்கணும் என்ற காரணத்தால்
 ஹி !ஹி !!! நான் போட்டியில்  பங்கு பெறவில்லை :)
மேலும் அங்கு வந்திருந்த படங்கள் மற்றும் ப்ராஜக்ட்ஸ் பார்த்தபோது 
நானெல்லாம் எங்கோ !!!!தேம்ஸ் கரையில் ...

சில competition entry படங்கள் உங்க பார்வைக்கு ..
இங்கே 

சுட்ட சோளம் :))சாப்பிட்டுக்கொண்டே படங்களை ரசியுங்கள் .


                                                                              

                                                                                      
                                                                                     

                                                                                       

இந்த மவுஸ் குடும்பத்தை செய்ய ஒரு வருடம் 
எடுத்ததாம் !!

                                                                            Teddy Family     
     நம்ம யாருக்கும் சாக்லேட் வேணாம் :)))))))))))

                                       பூசாருக்கு கொடுத்திடுவோம் :))            
   இந்த ரஷ்ய பொம்மைகள் உலகெல்லாம் சுற்றியிருக்கின்றன :)
ஆஸ்திரேலியா /அமெரிக்க இப்ப இங்கே எல்லா இடத்திலும் இதன் 
உரிமையாளர் போட்டிகளுக்கு அனுப்பியிருக்கார் ..
வெற்றியும் பெற்றன   .   எப்படி இவற்றை செய்தார் என்று இந்த 
இடத்தில சொல்லியிருக்காங்க .காம்படிஷன் நடந்த இடம் 
மாலைவேளையில் வெளிச்ச .குறைவு அதான் படங்கள் 
கிளியர் இல்லை 
                Quilled Babushkas.
                                                                                   

                                                                                     
சில துபாயில் மற்றும் அமெரிக்க ரஷய ,நெதர்லாந்த்
 இருந்து வந்த 
படங்கள் ..எல்லாமே போட்டியில் பங்கு பெறவில்லை அந்த எலி ,கரடி ,
இன்னும் சில, சும்மா டிஸ்ப்ளேயில் வைத்திருந்தாங்க ...     

                           அனைவரும் வார இறுதியை சந்தோஷமா கொண்டாடவும் .                                                              

26 comments:

 1. wow! lovely.
  I 2 made some 3D shapes long ago. don't hav them with me nw & hav no 4tos 2 share. ;(

  These kids r really great. Get ur daughter 2 share it in her blog too Angel.

  Happy weekend to u Angel.

  ReplyDelete
  Replies
  1. நோஓஓஓஓஓஓஒ.. வீக்கெண்ட் முடிஞ்ச பிறகுதான் றீச்சர் வந்து ஹப்பி வீக்கெண்ட்டாம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   Delete
 2. அஞ்சு அருமையோ அருமை. போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற உங்க செல்லமகள், குட்டித்தேவதை ஷரோனுக்கு என் மனமார்ந்த அன்பு முத்தங்களுடன் வாழ்த்துக்கள்!!!

  இத்தனை அழகாக, அற்புதமாக அந்தச் சின்னக்கைகளால் சமாதானப்புறாவை வெகு நேர்த்தியாக செய்திருக்கிறாரே!!!!!!!!!

  அருமை அருமை. இதைவிட சொல்ல வார்த்தை தெரியவில்லை எனக்கு.
  குட்டித்தேவதையை மகளாக பெற்ற அன்னையாம் அஞ்சுவுக்கும் என் இதயங்கனிந்த இனிய வாழ்த்துக்கள்!
  குட்டித்தேவதைக்கு எனதன்பினைக் கூறிவிடுங்கள்.

  ReplyDelete
 3. ஏனைய க்விலிங் வேலப்பாடுகளும் ஒவ்வொண்ணும் ஒவ்வொன்றை மிஞ்சுவதாக நன்றாக உள்ளது.

  சுட்ட சோளம். ம். ஆகாஆ... இங்கே இப்ப எனக்கு அந்த வாசனை மூக்கைத்துளைக்குது. ஊர் ஞாபகம்தான் வருகுது. அங்கேயும் இப்படி நிறைய சுட்ட சோளம், சுட்ட கச்சான் இப்படி.
  ம்ஹும் பெருமூச்சுமட்டும்தான் இங்கே:(

  அனைத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி அஞ்சு.
  உங்களுக்கும் வார இறுதி சந்தோஷமாக அமைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. //நிறைய சுட்ட சோளம், சுட்ட கச்சான் இப்படி.
   ம்ஹும் பெருமூச்சுமட்டும்தான் இங்கே:(//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னெண்டு கேட்கிறன்? இல்ல தெரியாமல்தான் கேட்கிறன் கச்சானுக்கும், சோளனுக்கும் எந்த வெளிநாட்டில பஞ்சம்?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இப்போ ஹலவீன் வரப்போகுது இனி சூப்பர் மார்கட் எல்லாம் கச்சான் குவிப்பர்கள்.. நான் அள்ளி வந்து அவனுக்குள்ளும், அவித்தும் சாப்பிடுவனே:)).. ய்ங்மூன் அட்ரசைச் சொல்லுங்கோ அஞ்சுவுக்குத் தெரியாமல்:)) அனுப்பிடறேன்ன்:))

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்:))))
   அதிராஆஆஆ.... சுட்ட சோளம், சுட்ட கச்சான் எண்டால் அவனுக்குள்ள சுடுறேலை.
   நல்ல தகதக எண்டிருக்கும் தணல்ல சுடுறது.
   அதின்ர ரேஸ்ட்டேஏஏ வேற.

   இந்த அவனுக்குள்ள சுடுறது அப்பிடி வராதூஊஊ;))))

   Delete
 4. அப்போது அவசரமாகப் போட்டுட்டு போய்ட்டன். வால், செட்டைகள் செய்திருக்கிற விதம் அருமை. பிடிச்சிருக்கு. ஷெரோனுக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. anaiththum attakaasamaaka ullathu.sharanukku vaalththukal

  ReplyDelete
 6. அருமை அருமை,மகளுக்கு என் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 7. ஆஆஆஆ வழிவிடுங்கோ வழிவிடுங்கோ.. நான் சொக்கலேட் சாப்பிடோணும்:).

  ReplyDelete
 8. //இந்த வருடம் இங்கிலாந்து QUILLING GUILD சார்பாக நடைபெற்ற
  போட்டியில் எனது மகள் அவள் வயது CATEGORY இல் இரண்டாம்
  பரிசு பெற்றாள் .//

  ஷரன் bunny க்கு வாழ்த்துக்கள்!!!.. அடுத்த வருடம் அதிரா ஆன்ரியும் சேர்ந்து பங்குபற்றுவா எனச் சொல்லுங்கோ:).

  ReplyDelete
  Replies
  1. //

   ஒரு காட்டுக்குள்ள ஒரு சிங்கம் தான் இருக்கணும் என்ற காரணத்தால்   ஹி !ஹி//

   மியாவ் இந்த மாதிரி இல்லே நீங்களும் இருக்கணும் என்னதான் திரர்ர்ர்ரமை இருந்தாலும் இப்புடியா சின்ன புள்ளங்க கூட மல்லுக்கு நிக்குறது :))

   Delete
 9. //மேலும் அங்கு வந்திருந்த படங்கள் மற்றும் ப்ராஜக்ட்ஸ் பார்த்தபோது
  நானெல்லாம் எங்கோ !!!!தேம்ஸ் கரையில் ...//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனது தேம்ஸ் அக்ரையை உவ்ளோ சீப்பாக்கிச் சொன்ன அஞ்சுவை.. உடனடியாக பிரித்தானிய நீதிமன்றத்திற்கு ஆஜராகும்படி, மேன்மைதங்கிய, பெருமதிப்புக்குரிய, அன்புக்கும் பண்புக்கும் பாத்திரமான நீதிபதி(அது நாந்தேன்:)) அவர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்.

  ReplyDelete
 10. அஞ்சு இதில் 1வதாக எது வந்ததென படம் போட்டிருக்கலாமே கர்ர்ர்ர்:))..

  BBQ சோளம் எனக்குப் பிடிக்கவில்லை. கனடாவில் சைஇனீஷ் செய்து வித்தினம், வாங்கினால் பச்சைபோல இருந்துது, சாப்பிட முடியவில்லை.

  அவித்ததுதான் பிடிக்கும். அதிலும் ஊரில் கிடைக்கும் சோளந்தான் சூப்பர். இங்கு சுவீட் கோர்ன் மட்டும்தானே கிடைக்குது, அது ஒரிஜினல் சுவை இல்லை...

  ReplyDelete
 11. // நம்ம யாருக்கும் சாக்லேட் வேணாம் :)))))))))))

  பூசாருக்கு கொடுத்திடுவோம் :)) //
  ஆஆஆஆஆஆஅ என்னா ஒரு தாராள மனது புல்லாஆஆஆஆஆஆ அரிக்குதெனக்கு:)).. சொக்கலேட் பிடிக்காது எனத் தெரிஞ்சு கொடுக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எங்கட வீட்டு லாப் எலி தொடங்கி குட்டி எலிகளுக்கெல்லம் கிலோக் கணக்கில் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளுவினம்.

  எனக்கு சீனிபோடாமல், ரீ அல்லது பிளேன் ரீக்கு சொக்கலேட் சாப்பிடப் பிடிக்கும்.. அதுவும் பாதி.. அல்லது ஒன்று மட்டும்:).

  ReplyDelete
 12. Congratulations for winning the 2nd prize on the Qulling Guild Competition. You are really talented. Well done and keep it up dear. Beware of Athira Aunty apparently she is going to compete with you next year. But I am sure you will win the 1st prize next year!!! (Miyaav:))

  ReplyDelete
  Replies
  1. karrrrrrrrrrrrrrrrr:)..
   First prize 4 Sharon.
   Second prize 4 miyaav:).
   Last prize 4 Anju......:))..

   Ussss mee escapeeeeee:))

   Delete
 13. அருமை மகளுக்கு அன்பு வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
  எல்லாமே மிக அழகாக உள்ளன.

  பிரியமுள்ள
  கோபு அண்ணா

  HEARTY CONGRATULATIONS
  TO MY DEAR SHARAN ;)))))

  GOPU UNCLE

  ReplyDelete
 14. எல்லாம் மிக அருமையாக இருக்கிறது...பகிர்வுக்கு மிக்க நன்றி...

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 15. அருமை. மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்.

  ReplyDelete
 16. அருமை... தங்களின் மகளுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. படங்கள் அருமை, தங்கள் மகளுக்கு வாழ்த்துகள். என் சார்பில் சாக்கலேட் வாங்கிக் கொடுங்கள் இரண்டு அதிகமாக...

  ReplyDelete
 18. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ அஞ்சு அக்கா ....குட்டிஸ் க்கு என்னோட வாத்துக்களும் ....  ரொம்ப அழகா பண்ணி இருக்கா ,....குட்டி பாப்பா பண்ணின மாறியே இல்ல ...அவ்ளோ அழகு .....

  ReplyDelete
  Replies
  1. அவ கொஞ்சம் பிசி இல்லன்னா அவ ப்லாக்லையே போட்டிருப்ப..shall convey your wishes to her .

   Delete
 19. அக்கா நலம் தானே என்ன ஆச்சி .....ப்லாகில ரீ பளை இல்லமா இருக்கீங்க ,...உடல் சுகம் தானே அக்கா ....

  ReplyDelete
  Replies
  1. வாங்க கலை :)))))))நான் உங்க குருவின் ப்லாகோலேயே இருப்பதால் என் ப்ளாகை மறந்தே போயிட்டேன் .#நலமா கலை

   Delete