அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/18/12

Kitty Card மற்றும் கறி ரொட்டி                                            Quilled Kitten:))                                


                                                                 

 நேற்று செய்த க்வில்ட் பூனைக்குட்டி :))
இதில் மூன்று ரிசைக்கில்ட்  பொருட்களை பயன்படுத்தியிருக்கேன் 
பிரவுன் நிற அட்டை சாக்லேட் பாக்ஸின் உட்புறம் 
மங்குஸ்தான் பழத்தின் வெளிப்புற மலர் வடிவம் 
அந்த சின்ன bow  மகளுன் உடையில் இருந்த விலை 
அட்டை யில் இருந்து எடுத்தது .

கறி ரொட்டி 

                                                                        
தேவையான பொருட்கள் 
மைதா மாவு ...மூன்று கப் 
எண்ணெய் ....மாவு பிசைய தேவையான அளவு 
உப்பு ...தேவையான அளவு 

வேகவைத்த பேபி Potatoes ....எட்டு 
வெங்காயம் ...மீடியம் அளவு... ஒன்று 
பச்சை மிளகாய் ....இரண்டு 
கறிவேப்பிலை .....ஒரு ஆர்க் 
மெலிதாக நறுக்கிய லீக்ஸ் .....ஒரு கப் 
மிளகாய்த்தூள் ....ஒரு தேக்கரண்டி 
எலுமிச்சை சாறு ...ஒரு தேக்கரண்டி 
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை ..
இஞ்சி ...ஒரு சிறு துண்டு 
சீரகம் ....ஒரு தேக்கரண்டி 
..மைதா மாவை ..சிறிது எண்ணெய் ,உப்பு நீர் சேர்த்து 
பிசையவும் ..அதனை ஒரு காற்று புகா பாத்திரத்தில் 
மூடி இளைப்பாற விடவும் ...
நான் சுமார் மூன்று மணிநேரம் ரெஸ்ட் எடுக்க விட்டேன் 

ஒரு வாணலியில் எண்ணெய் தாளிக்கும் அளவு ஊற்றி சூடானதும் ,
சீரகம் சேர்த்து வதக்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,
இஞ்சி லீக்ஸ் கறிவேப்பிலை இவற்றை ஒன்ற பின் ஒன்றாக வதக்கவும் 
,மித மான தீயில் அடிபிடிக்காமல் வதக்கவும் ,
தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும் ,
ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாரையும் சேர்க்கவும் ,
பின்பு உருளைகிழங்கை .கையால் நசுக்கி கலவையுடன் சேர்க்கவும் .
எல்லாம் கலந்ததும் அப்படியே இறக்கி வைக்கவும் .
இப்பொழுது ..மைதா மாவு ஒரு உருண்டை எடுத்து மெலிதாக 
உருட்டவும் 
அடுப்பில் கல்லை வைத்து இரு புறமும் லேசா சூடு காட்டி எடுத்து 
வைக்கவும் ..உடனே அதில் உருளை லீக்ஸ் மசாலா கலவையை 
இட்டு மடிக்கவும் .
 இரண்டிரண்டா மடித்து வைத்ததை கல்லில் இட்டு மிதமான 
தீயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும் .
கறி ரொட்டி ரெடி :))
                                                                                       
இந்த குறிப்பை வழங்கியவர் அதிரா ,,
...ஆகவே அதிராவுக்கென செய்த பிங்க் கிட்டி கார்ட் .
......நன்றி .

46 comments:

 1. நலமா ஏஞ்சலின்?

  க்வில்ட் பூனைக்குட்டி அழகு..

  கறி ரொட்டி பசியை தூண்டுகிறது...

  நாங்க இதை தோசையிலும் செய்வோம்...

  டக்குன்னு முடிஞ்சா மாதிரி இருக்கு...

  பிறகு சந்திக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரெவரி <நாங்க அனிவரும் நலம் ..இந்த curry ரொட்டி அதிரா அக்காவின் ரெசிப்பி :))

   தோசை என்றால் மைதா மாவில் தோசையாக சுட்ட்ட ரொட்டி என்று நினைக்கிறேன் ....try செய்வோம் அந்த முறையையும் ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
  2. இல்லை ஏஞ்சலின்...வழக்கமா உள்ளதுலேயே நல்லாயிருக்கும்...

   Delete
 2. க்வில்ட் கார்ட் மிக அழகு....கறி ரொட்டி இப்பவே சாப்பிட தோனுது!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேனகா ...உங்க ரெசிப்பி ருமாலி ரொட்டியை சுட்டும் இதே போல செய்யலாம் என்று நினைக்கிறேன் ..try செய்து பார்ப்போம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   Delete
 3. அருமையான க்வில்ட் கார்ட் & கறி ரொட்டி:))

  சூப்பரா இருக்கு அஞ்சு! எப்புடிதான் ரிசைக்கில்ட் பொருட்களை பயன்படுத்தி இப்புடி கார்ட் செய்யுறீங்கன்னு வியப்பா இருக்கு. நானும் அடுத்ததாக உங்களை மாதிரி செய்ய முயற்சி செய்யோணும்.

  அழகா இருக்கு பூனைக்குட்டி;) மங்குஸ்தான் பழத்தோலினையும் வெகு நேர்த்தியா வெட்டி இருக்கீங்க அஞ்சு;))
  அழகா இருக்கு கார்ட். வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க பிரதான சிஷ்யை :)) நான் மங்குஸ்தான் பழங்களை வாங்குவதே இந்த மலர் வடிவத்தை வெட்டி எடுக்கதான் :))) அந்த நிறம் அழகோ அழகு

   Delete
 4. கறி ரொட்டி சூப்பரா இருக்கே. நல்ல கோல்ட் கலரில் ஐயோ! கண்ணைப் பறிக்குது அஞ்சு;))
  இப்பவே நல்ல ஒரு ரீயுடன் சாப்பிட தோணுது;)

  மாவுக்கு நீர் விட்டு குழைத்ததாக எழுதியிருக்கிறீங்க. வெந்நீர், கொதிநீர், குளிர்நீர் எதுன்னு எழுதியிருந்தா ரொம்ப ஹெல்ப்பா இருக்கும்:))

  // மூன்று மணிநேரம் ரெஸ்ட் எடுக்க விட்டேன்// மாவுக்கும் ரெஸ்ட்டா;((
  பாவம் அதுக்கு என்ன பாடத்தில எந்த சப்ஜெக்ட்ல ரெஸ்ட்டோ:))))
  வாசிச்சு சிரியோ சிரின்னு சிரிச்சேன்.

  நல்லா வந்திருக்கு ரொட்டி. அவசியம் செய்து பார்க்கணும். அசத்துறீங்க. வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. //மாவுக்கு நீர் விட்டு குழைத்ததாக எழுதியிருக்கிறீங்க. வெந்நீர், கொதிநீர், குளிர்நீர் எதுன்னு எழுதியிருந்தா ரொம்ப ஹெல்ப்பா இருக்கும்:))//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. உந்த மூண்டையும் கலந்தால் ஒரு நீர் கிடைக்கும்:) அதை விட்டுக் குழையுங்கோ..:)

   Delete
  2. // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. உந்த மூண்டையும் கலந்தால் ஒரு நீர் கிடைக்கும்:) அதை விட்டுக் குழையுங்கோ //

   ஓ! அதென்ன?... அதைச்சொன்னா நல்லதெல்லோ:)
   அதிவிட்டுட்டு நீங்க கொதிக்கிறமாதிரி கிடக்கூஊஊ;)))))

   Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. உந்த மூண்டையும் கலந்தால் ஒரு நீர் கிடைக்கும்:) அதை விட்டுக் குழையுங்கோ //

   நன்றி இளைய குருவே :))

   Delete
 5. ஆஆஆஆஆஆஆ
  அல்லோரும் தள்ளி நில்லுங்கோ.. அது எனக்குத்தான் பூஸ் கார்ட்டாம்ம்.. சூப்பர் அஞ்சு தாங்ஸ்..

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ரர் மியாவ் :) இருக்கு ..ஏன் doubt ஆமாம் மியாவ் அந்த கார்ட் உங்களுக்கேதான் ...ஸ்பெஷலா பிங்க் கலரி செய்தேன்

   Delete
 6. கறிரொட்டி கலக்கல்.. உள்ளுக்குள்ள கறி:) இருக்குதுதானே?...

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ரர் மியாவ் :) இருக்கு ..ஏன் doubt

   Delete
 7. ரெஸ்கோவுக்கு இப்பத்தான் பிடுங்கிய.. மண் ஒட்டியபடி பேபி பொட்டாட்டோ கொண்டு வந்து குமிச்சிருந்தினம் ஆசையில அள்ளி வந்திட்டேன், அவித்து, உரித்து, அப்படியே வெட்டாமல், வெங்காயம் வதக்கி தண்ணிக் குழம்பாக வைக்க சூப்பரோ சூப்பர்ர்..

  ReplyDelete
  Replies
  1. // இப்பத்தான் பிடுங்கிய.. மண் ஒட்டியபடி பேபி பொட்டாட்டோ //
   இப்படியானதெண்டால் தோலை நல்ல தேய்ச்சு கழுவீட்டு அப்பிடியே அவிச்சு வைக்கலாம். தோல் உரிக்கத்தேவையில்லை. அப்படியே செய்யலாமென எங்களின் பக்கத்துவீட்டு இங்கத்தை நாட்டுப் பாட்டி சொல்லி செய்யுறனான். நல்லா இருக்கும்.
   ஆனால் நல்ல பிரஷ் பாவிச்சு தேய்ச்சு கழுவோணும்:)

   Delete
  2. இளமதி :)//
   ஆனால் நல்ல பிரஷ் பாவிச்சு தேய்ச்சு கழுவோணும்// :))அது fruh கிழங்கு ..அதான் மண்ணுடன் வரும் ..ஆனா இது சிறிய சிறிய பட்டன் மஸ்ரூம்ஸ் அளவுதான் இருக்கும் பேபி பொடேட்டோஸ் ..
   தோலுடன் சமைத்து சாப்பிடலாம் ..

   Delete
  3. இந்த கிழங்கு கழுவி வெள்ளையா இருந்தது ..அதான் ஈசியா வேக வைத்தேன்

   Delete
 8. கறி ரொட்டி நல்லா இருக்குங்க...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி தனபாலன்

   Delete
 9. யூவார் க்ரேட்... ரொம்ப அழகாக இருக்கு.

  ReplyDelete
 10. Great card n interesting recipe... First time here, when u get time do visit mine...

  Event: Dish name starts with P

  ReplyDelete
  Replies
  1. Thanks for your visit and lovely comments akilaa ..
   (Event)hmm interesting shall come there

   Delete
 11. அருமையான கைவண்ணத்திற்கும்

  சுவையான ரொட்டிக்கும் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா

   Delete
 12. பூனைக்குட்டி கார்ட் ரொம்ப அழகாக இருக்கு. கறி ரொட்டி செய்முறையும் சுவை.இப்படி ஏதாவது செய்தால்தான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.நன்றி angelin .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமா ..என் மகள் சப்பாத்தியில் வெரைட்டியா எதை செய்தாலும் சாப்பிடுவா

   Delete
 13. பூஸ் சூப்பர் அஞ்சூஸ். அதுவும் பிங்க் பூஸ். ;)
  எனக்கு ஒரு டசின் பூஸ் க்றிஸ்மஸ் கார்ட் பார்சல் ப்ளீஸ்.

  மங்குஸ்தான்... முதலும் எங்கயோ ஒட்டி இருந்தீங்கள் என்ன! நல்ல ஐடியா.

  கிழங்குரொட்டி... யமி. எனக்கு டீச்சிங் கிடைச்ச ஆரம்பகாலம் நினைப்பு வருது. வெள்ளைமணல் சந்தியில ஒரு கடை, அங்க வாங்கிறதுக்காகவே செபா கட்டிவைக்கிற சாப்பாட்டை மறந்து ;) விட்டிட்டுப் போயிருவன். ;)

  ReplyDelete
  Replies
  1. இமாஆ... யு மீன்(இது வேற மீன்;) ) உப்புவெளி வெள்ளைமணல் சந்தீஈஈஈ......:)
   தெரிஞ்ச மாதிரி கிடக்கூஊஉ;)))

   Delete
  2. பூஸ் சூப்பர் அஞ்சூஸ். அதுவும் பிங்க் பூஸ். ;)
   எனக்கு ஒரு டசின் பூஸ் க்றிஸ்மஸ் கார்ட் பார்சல் ப்ளீஸ்.

   Sure Ima:))
   அத்துடன் பிங்க் கலரில் ஒரு பூஸ் :)) பிரித்தானியாவில் இருந்து கார்கோவிலும் அனுப்பிடறேன் இமா .
   மங்குஸ்தான் மலர்வடிவம் நான் நிறைய சேகரிச்சு வச்சிருக்கேன் ..வின்டாஜ் effect கார்ட்சுக்கு நல்லா இருக்கும் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா

   Delete
  3. கிழங்குரொட்டி... யமி.//

   எல்லாம் அதிராவின் கோச்சிங் இமா ..மைதா மாவில் நான் சோடா மாவு எதுவுமே சேர்க்கலை ஆனா நல்லா வந்தது .

   Delete
 14. மரக்கறி ரொட்டி எங்க்ள் ஊரில் ம்ம்!எனக்கு அதிகம் மீன்ரொட்டி பிடிக்கும் தாயகத்தில்!நாவூறுகின்றது பதிவை படிக்கும் போது!

  ReplyDelete
 15. Stuffed பராத்தா செய்துட்டு, கறி ரொட்டி-ன்னு என்னை ஏமாத்த முடியாது,ஆங்!!! :))))

  சூப்பரா இருக்கு ஏஞ்சல் அக்கா, சமையல் ராணி-னு பட்டம் குடுத்துடலாம் போல சமைச்சு அசத்தறீங்க போங்க. பிங்க் பூனையார் க்யூட்டா இருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி :)) குறிப்பு உபயம் அதிரமியாவ் :))

   //சமையல் ராணி-னு பட்டம் குடுத்துடலாம் போல சமைச்சு அசத்தறீங்க //

   நானா ??? :)) அவ்வவ் ..

   Delete
 16. பூனைக்குட்டி ரொம்பவே அழகு.... ரொட்டியும் பிரமாதம். பார்க்கும் போதே பசியை தூண்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Adhi .

   Delete
 17. அஞ்சு லேட்டா வந்ததுக்கு ரொம்ம்ம்ப சாரி. வீக் எண்டு வந்து பார்த்திட்டு கமெண்ட் அப்புறம் போடலாம் ன்னு போயிட்டேன். கறி ஓட்டீ ஜூப்பர் அஞ்சு. உங்க குருவுக்கு வெல் டன் மிதி வெடிக்கு அப்புறம் பார்க்கவே சாப்புடலாம் போல பண்ணி அசத்தி இருக்கீங்க.

  நான் இது ஈஸ்ட் ஹாம் இல் ஒரு கடையில் வாங்கி சாப்பிட்டு இருக்கேன். இது இலங்கை ஸ்பெஷல் ன்னு நெனைக்குறேன். நானும் அப்போ இது போல் செஞ்சு வேலைக்கு எடுத்துகிட்டு போனேன் திரும்பவும் பண்ணனும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா கிரி ..பூசார் எக்ஸ்பெர்ட் ஆகிட்டே வராங்க :)) ..மைதா மாவில் செய்தா நல்லா வருது

   Delete
 18. பூஸ் கார்ட் அழகோ அழகு.


  //Your comment will be visible after approval//


  வாட் இஸ் திஸ் அஞ்சு ? ஒய் ?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிரி ..
   கொஞ்சம் பிசியாக இருப்பதால் ...பதில் கொடுக்க மறந்து விடறேன் ..
   மாடரேஷன் வைச்சா உடனுக்குடன் பதில் சொல்லல்லாம்
   அதான் வைத்தேன்

   Delete
 19. //இந்த குறிப்பை வழங்கியவர் அதிரா ,,
  ...ஆகவே அதிராவுக்கென செய்த பிங்க் கிட்டி கார்ட்.//

  எல்லாமே நல்லா இருக்கு.

  நிர்மலா + அதிரா இருவருக்கும்

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பிரியமுள்ள
  கோபு அண்ணா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .

   Delete