அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/11/12

கருப்பு முழு உளுந்து வடை,ரவா லட்டு /old vintage photos

                                                                                               


எங்க வீட்டில் செய்த உளுந்து வடை மற்றும் தேநீர் 
எடுத்துகிட்டு சென்று  கீழே உள்ள கருப்பு வெள்ளை 
படத்தின் மேல் உள்ள லிங்க் பாருங்க ..
 இந்தியா இலங்கை பழைய படங்கள் கூட இருக்கு ..


ஒரு கப் கருப்பு முழு உளுந்தை சுமார் நான்கு மணி
நேரம் நீரில் ஊறவைத்து மின் அம்மியில் அரைத்து ,
சின்ன வெங்காயம் 6சிறு துண்டு இஞ்சி/ கறிவேப்பிலை 
உப்பு தேவையான அளவு ஒன்றிரண்டாக உடைத்த 
மிளகு இரண்டு தேக்கரண்டி ,இவற்றுடன் கலந்து 
வடையாக தட்டி பொரித்து எடுத்தேன் ..


இது ரவா லட்டு ...நான் முதமுதலா செய்தது :))


                                                                                   
                                                                                                    
சொஜ்ஜி ரவா ...ஒரு கப் 
நெய் இரண்டு மேஜைக்கரண்டி ,
சர்க்கரை /சுகர் ..... முக்கால் கப் 
ஏலக்காய்  பொடித்தது ..ஒரு தேக்கரண்டி 
மேக்கப்புக்கு அதான் :)) அலங்கரிக்க 
நெய்யில் வறுத்த முந்திரி ,பாதாம் ,திராட்சை ..
செய்முறை :
வாணலியில் ஒரு மேஜைகரண்டி நெய்யை ஊற்றி அதில் 
மிதமான சூட்டில் ரவையை வாசம் வரும்வரை வறுக்கவும் ..
பிறகு ஆறியபின் மிக்சியில் பொடிக்கவும் (coarse)
சர்க்கரையை மிக்சியில் நன்கு தூளாக பொடி  செய்து 
கொள்ளவும் .
மீதமுள்ள ஒருமேஜைகரண்டி நெய்யை 
சூடுபடுத்தி கொள்ளவும் 
ஒரு தட்டில் பொடித்த ரவை , பொடிசர்க்கரை மற்றும் 
பருப்பு வகைகளை ஒன்று சேர்த்து  கலக்கவும் .
இதில் சூடு செய்த நெய் ,கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி 
உருண்டைகளாக பிடிக்கவும் 

லட்டு ரெடி ...பரம எதிரி ஆக இருப்பின் இரண்டு லட்டு 
தற்காலிக எதிரியாக இருந்தால் ஒன்று மட்டும்போதும் ...
கொடுத்து அன்பை வளர்க்கத்தான் .:))).அவ்வவ் 

:))))))))))))இதில்  டென்னிஸ் கூட விளையாடலாம் ..
                                                                                   

கூகிளில் மகளுக்காக ஒரு விபரம் தேடும்போது இந்த 
அழகான அம்சவல்லிகள் படம் வந்தது படத்தை சுட்ட 
இந்த தளம் கிடைத்தது :))
ஹம்மாடியோ :)) எவ்வளவு பழைய காலத்து படங்கள் ..
1860 இல் எடுத்த படங்கள்லாம் இருக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 
ஜவஹர்லால் நேருவுடன்,ஜாக்குலின் கென்னடி:))) /
பழைய காலத்து திருச்சி மலைக்கோட்டை படம் ..
அந்த காலத்து சேப்பாக்கம் இன்னும் நிறைய இங்கிருக்கு ...

Source Google------->http://www.oldindianphotos.in/search/label/Chennai

Thanks Google ..
                                                                                     


விரைவில் ஒரு புதிய சமையல் குறிப்புடன் வருவேன் :))


ஆஆஆ !!!! யாரது என் தலையில் shot put இரும்பு குண்டால் அடித்தது 
                                        

71 comments:

 1. லட்டு எனக்கா

  ReplyDelete
  Replies
  1. முதல் எலி :))))))))))))welcome

   Delete
 2. ஆகா வடையும்உம்உம்..... லட்டும்டும்டும்:)))
  முழு உழுந்து தோலுடன் வடை.::) சரிசெய்து பார்த்திடுவோம்.
  அதற்கும் தொட்டுக்க என்னமோ பக்கத்தில் இருக்கேஏஏ அதுவும் என்னவாம்....;)))

  அப்புறம் ரவா லட்டு. உங்க உள்ளங்கையில் இருக்கிறதை பார்த்தா அப்படி ஒண்ணும் மண்டை உடைக்கிற மாதிரி தோணலையே. ஸொவ்டாதானே வந்திருக்கும். ஏ....ன்ன்ன்:) பரம எதிரிக்கும், டென்னிஸ் விளையாடுறதுக்கும் எங்கிறீங்க.....

  சரி... சரி. எல்லாம் நல்லாத்தான் வந்திருக்குன்னு படம் சொல்லுது.
  முன்னேஏஏஎற்றம்தேன்:-)))
  வாழ்த்துக்கள் அஞ்சு!!!

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ் அப்ப இது ரெண்டாவது எலியா?:)) ஹா..ஹா..ஹா.. நாம எப்பவுமே உஸார்தான் இந்த விஷயத்தில:).

   Delete
  2. யங் மூன் ...உங்களுக்கு எல்லா லட்டும் தரேன் ..பூசாருக்கு போர்ர்ர்ரமை :)))

   Delete
 3. ஆகா எனக்குத்தான்.
  ரவை லட்டு இங்கு யாரும் சாப்பிடமாட்டேங்கிறாங்க. உங்க முறையின்படி செய்து பார்த்திடவேண்டியதுதான். சொஜ்ஜி ரவை விளக்கம் ப்ளீஸ்.

  நானும் இப்படங்கள் பார்த்தேன்.அஞ்சு. உண்மையிலே காணக்கிடைக்காத படங்கள்தான்.

  ReplyDelete
  Replies
  1. sooji ///என்றுதான் போட்டிருக்கு பாக் மேலே ..
   இருங்க கோபு அண்ணாவிடம் சொஜி பெயர்காரணம் கேட்ப்போம்

   Delete
  2. Sooji and Rawa are Hindi words for Semolina

   Delete
  3. பஜ்ஜி /சொஜ்ஜி ....பெண் பார்க்கும் படலத்தில் தருவாங்க

   Delete
  4. அது சொஜ்ஜி இல்ல, சூஜி!!! :)))))))


   ஏஞ்சல் அக்கா, ஹிந்தியில் ரவையோட பெயர் அதுதான் என்று கண்டுபுடிச்சிட்டீங்க, ஆனா சொஜ்ஜி அல்ல சூஜி என்று கண்டுபுடிக்கலையா? பரவால்ல விடுங்க..நான் எதுக்கு இருக்கேன்,உங்களுக்கு யெல்ப்:) செய்யத்தானே?! ;) ;)


   நம்பினா நம்புங்க, நான் இதுவரை ரவாலட்டு செஞ்சதே இல்லே..டென்னிஸ் வெளாடலாம்னு வேற பயமுறுத்தறீங்க, நீங்களே சாப்புடுங்க..மியாவுக்கும் குடுங்க. மீ கமிங் லேட்டர் யா! :)))))

   Delete
  5. எனக்கு ரவா லட்டு தவிர வேறெந்த அட்டும்:) டெரியாது:)).. ஆனா சொவ்ட்டா இருக்கோணும் லட்டெண்டால்:)) படம் பார்த்து நான் மயங்கிட மாட்டேன் சொல்லிட்டேன்:)

   Delete
  6. ஆஆ :)) மகி சொஜ்ஜி பஜ்ஜி என்று பெண் பார்க்கும் வைபவ நினைவில் எழுதிட்டேன் ..ஆங்கிலத்தில் Sooji

   பூசார் கண்ணில் இது படவே கூடாது....>>> I feel nostalgic.:))

   Delete

  7. //பரவால்ல விடுங்க..நான் எதுக்கு இருக்கேன்,உங்களுக்கு யெல்ப்:) செய்யத்தானே?! ;) ;) //

   மஞ்சள் பூ அமேரிக்கா ரிடர்ன் போல இருக்கு ?????

   Delete

  8. //பூசார் கண்ணில் இது படவே கூடாது....>>> I feel nostalgic.:))//

   கவலைய விடுங்க அஞ்சு. பூசுக்கு வயசாகிட்டே இருக்கு சோ இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது. நீங்க தைரியமா திட்டி கூட பாருங்களேன் :))

   Delete
  9. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சிக் லீவில நிண்டாலும், வாய் குறையுதோ பாருங்கோவன்:)))

   Delete
 4. அஞ்சூஊஊ கறுப்பு வெள்ளைப் படத்தில் நீங்களுமாஆஆ!!!
  அந்தக்குட்டியா கதிரையில் கை ஊனிக்கொண்டு ஸ்டைலா நிக்குறது நீங்கதானா. சொல்லவே இல்லை.
  ரொம்ம்ம்ப அழகுதான் நீங்க.....

  ஐயோ லட்டாலை என் தலையை குறிபார்த்து அஞ்சு எறியுறாஆஆ....
  அதிரா, இமா, அம்முலு காப்பத்துங்க..... ஜெல்ப்ப்ப்ப்ப்ப்ப்:))))))))

  ReplyDelete
  Replies
  1. ஒண்ணு இல்லை லட்டு தட்டோடு :)))

   Delete
  2. உங்களுக்கு ஐ ரெம்ப ஷார்ப் யங்மூன்.ஆனா முறைச்சுக்கொண்டு நிக்கிறா அவாதான் அஞ்சு என்டெல்லோ நான் நினைத்தேன்.


   Delete
  3. இல்ல அம்முலு. அந்தச்சின்னாள்தான்:))

   Delete
  4. ஹையோ ,முறைச்சுட்டு இருப்பது பூஸார் அடிக்கடி கர்ர்ர் சொல்றது மியாவ் தானே :))

   Delete
 5. இந்த வடை நான் செய்திருக்கிறேன்.ஆனா கழுவுவதற்கு சோம்பல் பட்டு வெள்ளை உழுந்துதான். ஆனால் கறுப்பு உழுந்தில் செய்யும் தோசை,வடை நல்ல டேஸ்ட்.

  ReplyDelete
 6. என்னா கொடுமை இது... கறுப்பு உழுந்தை ஊறவிட்டு, கழுவோ கழுவெனக் கழுவி தோல் முழுவதும் நீக்கிப் போட்டு வடை செய்வோம்ம்.. இப்பூடி ஒருநாளும் செய்ததில்லை... இனிச் செய்திட்டால் போச்சூஊ:) சரி எனக்கு இண்டைக்கு வடே வாணாம்ம்.. உடலும் உள்ளமும் நலமில்லை... அது ஓட்டம்(இது ஆங்கிலீசு) சீஸன் அரம்பித்ததன் எபெக்ட்டூஊஊஊ:).. அதனால மீண்டும்வாறேன் மிகுதிக்கு:(...

  ReplyDelete
  Replies
  1. ஆஅஹ் மியாவ் ஆவ் ஆஅவ் :))) ஒரு நாளைக்கு டே டைமில் மட்டும் ஆறு மணி நேரம் தூங்குங்க ஆட்டம் ஓட்டம் எல்லாம் கொண்டாட்டம் ஆயிடும் :))

   Delete
  2. அதீஸ்! லட்டுக்குப் பயந்து ஓடுறா:)))
   அஞ்சு பிடியுங்கோ......:)))

   Delete
  3. இப்படியும் செய்யலாம் அதிரா.நான் கறுப்பு முழு உழுந்தில்தான் செய்து வடை இறுக்கமாகிவிட்டது. பாதியாயின் நிறையதரம் கழுவவேண்டும்.
   இப்போ வெள்ளை உழுந்துதான்.அஞ்சுவின் ரெசிப்பியை முயற்சிக்கவேண்டியதுதான்

   Delete
  4. லட்டுவையா பிடிக்க சொல்றீங்க :)))

   Delete
  5. லட்டுவையா பிடிக்க சொல்றீங்க :)))//

   பின்ன பூஸையா?:)) அது உங்களால முடியுமா?:)).. ச்ச்சும்மா ச்ச்ச்சும்மா எல்லாம் ஆசையை வளர்க்கினம்:)) நான் பூஸ் பிடிப்பதைச் சொன்னேன்:))

   Delete
  6. அம்முலு ,,கருப்பு உளுந்து நல்லாவே இருக்கு வடைக்கு நான் கியாரண்டி :))

   Delete
 7. கறுப்பு உழுந்து வடை உடலுக்கு நல்லது. ஆனால் நிறைய எண்ணை இழுக்கும்.
  நான் செய்திருக்கிறேன். வீட்டில் பிடிக்காது.
  பட லிங் பார்க்கிறேன் நன்றி ஏஞ்சலின்.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா ..உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
   ..சும்மா ஒரு முறை செய்து பார்த்தேன் ..நீங்க சொல்வது சரி கொஞ்சம் என்ணெய் குடித்தது ..

   Delete
 8. இளமதி அன்ட் அம்முலு மற்றும் (ஓ)ஆட்டம் அட்டாக் அதீஸ் மூணு பேருக்கும் நல்லிரவு வணக்கம் ..லட்டு கனவுகள் வரக்கடவது

  ReplyDelete
 9. //மின் அம்மி// சூ...ப்பர் அஞ்சூஸ்
  டென்னிஸ் ஐடியா நல்லா இருக்கே!
  //கருப்பு வெள்ளை// முன்பு ஒன்றிரண்டு படங்கள் பார்த்திருக்கிறேன், வேறு இடத்தில். இங்கு இருப்பது நல்ல தொகுப்பு.
  லட்டு... இப்ப வேணாம். ஸ்கூல் தொடன்கினதுக்குப் பிறகு பார்ப்போம். கருப்பு வடை சாப்பிட்டதே இல்லை. கருப்பு தோசை பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அப்பப்ப எனக்கு இப்படி புது வார்த்தைங்க ஒரு ஃப்ளோவில் வரும் இமா :)
   அம்மா எப்பவும் கருப்பு உளுந்தில் மிளகு தட்டி போட்டு வடை சுடுவாங்க ..அந்த நினைவில் செய்தேன் .

   Delete
 10. கருப்புய் வெள்ளை படங்கள் இப்ப காணவே கிடைப்பதில்லே கருப்பு உளுந்துவடை செய்து பாக்கோனும்.ரவா லட்டு என் பக்கமும் இருக்கு பூசார் ரவாலட்டுவத்தான் ப்ந்து பொல பாவிகுரங்களோவிலயாட்டுக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. நீங்க தானே லக்ஷ்மிம்மா அரைத்து செய்யும் முறை சொன்னது ..எனக்கும் நினைவிருக்கு ......பூசார் டென்னிஸ் என்ன கிரிக்கட் கூட விலாடுவார் ...::))))
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

   Delete
 11. காலை வணக்கம்,அஞ்சலின்!அருமை!என்ன,கொஞ்சம் லேட்டாக வந்தாலே இப்படி ஆகி விடுகிறது.யாராவது வடையை "சுட்டு"க் கொண்டு போய் விடுகிறார்கள்!அடுத்த முறை பார்க்கலாம்.ஹி!ஹி!ஹி!!!பழைய கால புகைப் படப் பிரதிகள் ஆச்சரியமூட்டுபவை தான்!

  ReplyDelete
  Replies
  1. ஆஅ வாங்க யோகா அண்ணா ..நலமா .நான் உங்களுக்கு fresh உளுந்து வடை செய்து தரேன் ..இதை அதீசுக்கு கொடுத்துடலாம் ..பழைய படங்கள் அழகுதானே ..நானே சொக்கிபோனேன்
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 12. செய்முறை குறிப்பிற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தனபாலன்

   Delete
 13. போங்க நிர்மலா ...... முதல் வடையும் முதல் லட்டும் எனக்கு இல்லாமல் போயிடுச்சு, மின் தடையால் மெயில் பார்க்க லேட்டாப் போச்சு. வ்டையும் போச்சு ;((((((

  ReplyDelete
  Replies
  1. முதல் வடையும் லட்டும் எனக்கு பிடித்த என் அன்புத்தங்கை அம்முலுவுக்குக் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான். நான் சாப்பிட்டால் என்ன அம்முலு சாப்பிட்டால் என்ன!

   ஆனால் பாவம் அம்முலு. [பல் என்ன ஆச்சோ பாவம்.]

   Delete
  2. //:))))))))))))இதில் டென்னிஸ் கூட விளையாடலாம் ..//

   இதில் இரண்டு பூனையார் உள்ளனரே!

   ஒன்று நம் அதிராவோ? அப்போ மற்றவர் யாரோ?
   அதிராவே டபுள் ஆக்டோ. இருக்கலாம் இருக்கலாம். ;)

   Delete
  3. www.oldindianphotos.in/search/label/Chennai

   மேற்படி லிங்க் போய்ப்பார்த்தேன் நிர்மலா.

   அதுலே அந்தக்காலத்திலே நாங்க உபயோகித்த கையால் மாவு அரைக்கும் இயந்திரம், அம்மி, ஆட்டுக்கல், உரல், உலக்கை, முறம் எல்லாம் இருக்குதுங்க.

   உலக்கையைப்பற்றி நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.
   ஒரே சிரிப்பாக இருக்கும். எல்லோரும் உடனே போய் படியுங்க. தலைப்பு: சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]

   இணைப்பு இதோ:
   http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html

   படிச்சுட்டு கருத்துச்சொல்லுங்க. அப்போ தான் நான் நாளைக்கு சொஜ்ஜி பஜ்ஜியைப் பற்றி சுவையான மேலும் சில விளக்கங்கள் தருவேன். இப்போ இங்கே ஒரே இருட்டு உள் ளா [உள்=ROOM] இருக்கு

   Delete
  4. //ஆனால் பாவம் அம்முலு. [பல் என்ன ஆச்சோ பாவம்.]//

   கோபு அண்ணன் உங்களுக்குப் புறுணம் தெரியுமோ?:)) அம்முலு இப்போ 4ம் வார்ட்டிலயாம்:)))

   Delete
  5. //லட்டு கிடக்கட்டும் நிர்மலா. அந்த லட்டுவை கையிலே பிடிச்சிருக்காங்களே! அது யாரோட கை நிர்மலா? தெரியாட்டா என் தலை வெடிச்சுடும் போல இருக்கு ;)//

   ஹா..ஹா..ஹா.. நிர்மலா எஸ்கேப்ப்ப்:)) வீடும் பூட்டிக்கிடக்காம்:))...

   Delete
  6. //தொடர்ச்சியாக கரண்ட் கட். இன்வெட்டரில் லேப்டாப்பில் அடித்துக்கொண்டு இருக்கிறேன். கையில் விசிறி, டார்ச் லைட் சகிதம்.//

   ஆ.... கோபு அண்ணன் உங்களின் கடமை உணர்ச்சி பார்த்து புல்லாஆஆஆஆஆஆஆஅ அரிக்குது...... இதுக்காகவே உங்களுக்கு ரவா லட்டுத் தரலாம்:).

   Delete
  7. அது யாரோட கை நிர்மலா? தெரியாட்டா என் தலை வெடிச்சுடும் போல இருக்கு ;)///

   அந்த கை ரவா லட்டு பிடித்தவரின் கை பிடித்தவர் பிடித்த கை :))))))))

   யாருக்காவது புரிகிறதா :)))))))))

   Delete
  8. ஆனால் பாவம் அம்முலு. [பல் என்ன ஆச்சோ பாவம்.]//

   உண்மையில் சிரித்துவிட்டேன் அன்பாய்கொடுப்பதுபோல கொடுத்துட்டு
   என் தலையில் குட்டு ஹா ஹா ஹா :))
   யார் லட்டை கிண்டல் செய்தாலும் அதீசுக்கு மட்டும் அடி விழும் .கார் பூட் சேலில் catapult வாங்கி வந்தேன் ..கூழாங்கல் தேடிக்கிட்டு இருக்கேன் அத்தீஸ் கெட் ரெடி

   Delete
  9. ரவா லட்டு சூட்டோட புடிக்கணும் இல்லேன்னா உதிர்ந்திடுமுன்னு அம்மா சொல்லுவாங்க. அதுதான் நீங்க கை புடிச்சவர் கிட்டே லட்டு புடிக்க சொல்லிட்டீங்களோ ????

   Delete
  10. ஹையோ முருகா நான் இன்னும் லைவ் இன்சூரன்ஸ்ச்சூ எடுக்கல்ல முருகா:).. அதுவரைக்கும் கூழாங்கல்லுக் கிடைக்கக்கூடா முருகா..:)

   Delete
  11. athira October 12, 2012 6:23 PM
   ***தொடர்ச்சியாக கரண்ட் கட். இன்வெட்டரில் லேப்டாப்பில் அடித்துக்கொண்டு இருக்கிறேன். கையில் விசிறி, டார்ச் லைட் சகிதம்.***

   //ஆ.... கோபு அண்ணன் உங்களின் கடமை உணர்ச்சி பார்த்து புல்லாஆஆஆஆஆஆஆஅ அரிக்குது...... //

   பார்த்துங்க .... நல்ல சீப்பாப்போட்டு சொரிந்துக் கொள்ளுங்கோ. நகமோ பல்லோ போடாதீங்கோ.
   அது மேலும் ஆபத்தாகிடும்.

   //இதுக்காகவே உங்களுக்கு ரவா லட்டுத் தரலாம்:).//

   தாங்கோ ப்ளீஸ், வேண்டாம்னா சொல்லப்போறேன். ;)

   அன்புடன்
   கோபு அண்ணா

   Delete
  12. angelin October 12, 2012 10:45 PM
   ***ஆனால் பாவம் அம்முலு. [பல் என்ன ஆச்சோ பாவம்.]*** - கோபு

   //உண்மையில் சிரித்துவிட்டேன்//

   சிரித்ததற்கு நன்றி நிர்மலா.

   //அன்பாய்கொடுப்பதுபோல கொடுத்துட்டு
   என் தலையில் குட்டு ஹா ஹா ஹா :))//

   இல்லை நிர்மலா, ஒரு ஜாலிக்காக மட்டுமே எழுதினேன், உங்க லட்டு பிரமாதம். பார்க்கவே ஜோரா இருக்கு. சுவைத்தால் கேட்கவே வேண்டாம்.

   பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

   Delete
 14. ஆஆஆஆ வழிவிடுங்க வழிவிடுங்க.. என் தலையிடி நலமாகி நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

  சே..சே... ஆருமே என்னை வெல்கம் பண்ணேல்லைப்போலும்:).. சரி இருக்கட்டும் இது என்ன புதுசோ நமக்கு:)).. நாம் வந்த வேலையை ஆரம்பிப்போம்:))..

  ReplyDelete
  Replies
  1. அடுத்ததடவை பெரிய பூசணிக்க சைஸ்ல ஏதாவது ஸ்வீட் செய்யணும் :))

   Delete
  2. உலக்கையைப்பற்றி நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.
   ஒரே சிரிப்பாக இருக்கும். //

   அருமையான விழிப்புணர்வு கதை ...இன்றைய மருமகள் நாளைய மாமியார் அனைவரும் படிக்க வேண்டிய கதை

   Delete
  3. //angelin October 12, 2012 10:29 PM
   ***உலக்கையைப்பற்றி நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.
   ஒரே சிரிப்பாக இருக்கும்.***

   //அருமையான விழிப்புணர்வு கதை ...இன்றைய மருமகள் நாளைய மாமியார் அனைவரும் படிக்க வேண்டிய கதை//

   சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி] என்ற என் பதிவினை தாங்களும் வருகை தந்து படித்து விட்டு, மேலும் ஒரு சில தங்களின் சினேகிதிகளையும், படிக்கச்சொல்லி அனுப்பியதற்கு, மிக்க நன்றி, நிர்மலா.

   VGK

   Delete
 15. லட்டு அயகாத்தான் இருக்கு, உப்படித்தான் வீட்டிலும் செய்வோம் அஞ்சு.. நான் உந்த விஷப் பரீட்சையில் இறங்கியதில்லை, அதிலும் இனிப்பு என்பதால பெரிசா மினக்கெட மாட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் மிக எளிதா செய்யகூடியதா இருந்தது அதீஸ் ..நானே எக்ஸ்பெக்ட் செய்யல இவ்ளோ அழக டேஸ்டியா வரும்னு

   Delete
 16. //விரைவில் ஒரு புதிய சமையல் குறிப்புடன் வருவேன் :))
  //

  ஹையோ முருகா என்னைக் காப்பாத்துங்கோ மீ எஸ்கேஎப்ப்ப்ப்ப்ப்ப்:)).

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு ஸ்பெஷலா பார்சலில் அனுப்பிடறேன் அதீஸ் ...இதுக்கெல்லாம் ஏன் கடவுள்களை டிஸ்டர்ப் செய்றீங்க :)))0

   Delete
 17. அஞ்சு இந்த வருட ஆரம்பத்தில் நானும் ஒரு சமையல் குறிப்பு போடணுமுன்னு ரொம்ப அப்பாவியா சொல்லிட்டு இப்புடி விதம் விதமா ரெசிபி போட்டு பின்னுறீங்களே? பூஸ் காதில் இருந்து புகை வர்றது உங்களுக்கு தெரியுது :)) .

  ReplyDelete
 18. கருப்பு உளுந்து வடை சாப்பிட்டு இருக்கேன் ஆனா செஞ்சதில்லே. கழுவுறதுக்கு சோம்பல் பட்டுகிட்டு வெள்ளை உளுந்து மட்டும் தான் வாங்குவேன். ரவா லட்ட விட பூந்தி லட்டு தான் எங்க வீட்டு favourite . மகி ரெசிபி பார்த்து பூந்தி லட்டு செஞ்சேன். நல்லா வந்திச்சு. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க

  ReplyDelete
  Replies
  1. ஹையா !! கிரி எப்படி இருக்கீங்க ...பூசார் உங்களுக்கு ஃப்ளூ தந்திட்டாரா ??
   கர்ர்ர்:))மியாவ் .
   எனக்கும் பூந்தி லட்டு செய்ய ஆசைதான் ...ஹப்பி வீட்டிலிருக்கும்போது செய்யலாம்னு நினைக்கிறேன் பூந்தியை பொரிக்க ஆள் வேணுமே :)

   கொஞ்ச நாளுக்கு ஸ்வீட்ஸ் இக்கு புல் ஸ்டாப் வைக்கலாம்னு நினைக்கிறேன் கிரி ...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 19. //  லட்டு ரெடி ...பரம எதிரி ஆக இருப்பின் இரண்டு லட்டு

  தற்காலிக எதிரியாக இருந்தால் ஒன்று மட்டும்போதும் ...

  கொடுத்து அன்பை வளர்க்கத்தான் .:))).அவ்வவ் //  பூஸ் மேல ரொம்ம்ம்ப அன்பை :)) எறிஞ்சு தலை வலியே வந்திடிச்ச்சு போல இருக்கு பாவம்:)  ReplyDelete

 20. //அடுத்ததடவை பெரிய பூசணிக்க சைஸ்ல ஏதாவது ஸ்வீட் செய்யணும் :))//

  //
  விரைவில் ஒரு புதிய சமையல் குறிப்புடன் வருவேன் :))//  ஓ அதுதானா புதிய சமையல் குறிப்பு ஊஊ???? பண்ணுங்க பண்ணுங்க. ஏற்கனவே பூசாரின் பார்ட் ஒன பார்ட் டூ கதை படிச்சு குடும்பத்தோட ஜுரத்தில் இருக்கோம் சோ எப்ப பூசணிக்க சுவீட் ன்னு சொன்னீங்கன்னா பை மிஸ்டேக் என் பக்கம் வராதபடி செப் ஆ இருப்பேன் :))

  ReplyDelete
 21. நல்ல முயற்சி.நன்றி.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

   Delete
 22. angelin October 11, 2012 9:03 PM
  //sooji என்றுதான் போட்டிருக்கு பாக் மேலே ..
  இருங்க கோபு அண்ணாவிடம் சொஜி பெயர்காரணம் கேட்ப்போம்//

  பெண் பார்க்கும் படலத்தில் பெரும்பாலும் இந்த சொஜ்ஜி, பஜ்ஜி + காஃபி தான் தருவாங்க.

  பஜ்ஜியும் காஃபியும் பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.

  சொஜ்ஜிக்கு இப்போ வருவோம்.

  சொஜ்ஜி என்பது பம்பாய் ரவை என அழைக்கப்படும் வெள்ளை ரவையில் செய்யப்படும் கேஸரி தாங்க.

  அந்த வெள்ளையான பம்பாய் ரவைக்குப் பெயர் சொஜ்ஜி அல்லது சோஜி என்று ஏதாவது ஹிந்தியில் இருக்கலாம்.

  தொடரும்.....

  ReplyDelete
 23. இந்த வெள்ளை ரவையை லேசாக பதமாக வறுத்துக்கொண்டு, சர்க்கரைப்பாகில் கலந்து நிறைய நெய் ஊற்றி சூப்பராகப் பக்குவமாகச் செய்யணும். ஏலக்காய்ப்பொடி அதன் தலையில் தூவணும். முந்திரியை பொன்வறுவலாக நெய்யில் வறுத்து அதன் தலையில் போடணும். உலர்ந்த சின்ன சிவப்பு திராக்ஷையையும் நெய்யில் லேசாப்புரட்டி அதன் தலையில் போடலாம். கேஸரிப்பவுடர்ன்னு ஒருசில சிட்டிகை கலக்கணும். செக்கச்சேவேல்ன்னு சூப்பரா கேஸரி பண்ணனும். நெய் அதில் சொட்டச்சொட்ட இருக்கணும். சூடாக சாப்பிடணும்.

  [மஞ்சள் நிறத்தில் நெய்யையே அதிகம் காட்டாமல் [மூட்டு நழுவினவர்களுக்கு மாவு கட்டு போடுவது போல] இருக்கக் கூடாது. அதுக்குபேரு கேஸரி கிடையாது. தித்திப்பு உப்புமா அல்லது வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரையில் செய்த திருவாதரைக் களின்னு வேணா சொல்லலாம்.]

  அதாவது இந்த பஜ்ஜி சொஜ்ஜியைச் சாப்பிட வந்தவர் [பெண் பார்க்க வந்தவர்] லேஸில் கைகழுவி விட்டு கிளம்பிப்போய் விடகூடாது. அவர் கை பூராவும் நெய்யாகவும் நெய் மணமாகவும் இருக்கணும். கையை அவர் நல்லா சபீனா போட்டுக் கழுவிக்கொண்டே அதே வீட்டில் அந்தப்பெண்ணை சைட் அடிச்சுக்கிட்டே இருக்கணும்.

  தொடரும்,......

  ReplyDelete
  Replies


  1. எதை ஹைலைட் செய்வதென்று திக்கு முக்காடி விட்டேன் !!!
   வருகைக்கும் சொஜ்ஜி பற்றிய விளக்கத்திற்கும் மிக்க நன்றி அண்ணா ..

   எவ்வளவு கஷ்டப்பட்டு டைப் செய்திருப்பீங்க அங்கே கரண்ட் கட் என்று கேள்விபட்டேன் ..மிக்க நன்றி ..
   இப்ப கல்யாணம் எல்லாம் இல்லையாமே ??
   எதோ லிவிங் டு கெதர் ...என்று சொல்றாங்க ..அதனால் நோ சொஜ்ஜி பஜ்ஜி ..:))

   Delete
  2. நிர்மலா, இதற்குப்பிறகும் நான் ஒருசில கமெண்டுகள் போட்டிருந்தேன். அவைகளையெல்லாம் காணோமே?
   என்ன ஆச்சுன்னு தெரியலை. அவ்விடம் செக்-அப் பண்ணிப்பாருங்கோ. ஸ்பேமில் இருக்குமோ என்னவோ?

   Delete