அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/5/12

Craft and Kitchen corner,quilled Dora பூட்ஸ் !!நினைவுகள் மற்றும் அதிரசம்:))


வணக்கம்  நண்பர்களே :))

இந்த பிறந்த  நாள் வாழ்த்து அட்டை ஒரு நண்பியின் குட்டி மகளுக்கு 
என்று செய்தது .
                                                                             
சொல்லுகிறேன் காமாட்சியம்மா அவர்களின் குறிப்பு பார்த்து செய்த 
அதிரசம்     
                                                                                
                                                                       


சென்று அவர்களின் குறிப்பு பார்த்து 
நீங்களும் செய்து பாருங்க ..நான் முதன் முதலா செய்ததே 
அருமையாக வந்திடுச்சி ..காமாட்சி அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி 

........................................................................................................................................................

பிறந்த நாள் வாழ்த்து அட்டையில் இருப்பது டோரா என்ற கார்ட்டூன் 
காரக்டரும் அதன் பெஸ்ட் நண்பன் பூட்சும் :))

இந்த  பெயர்கள் எல்லாம் விளக்கி சொன்னது எங்க வீட்டு வாண்டு ..
அவ எனக்கொரு படம் காமிச்சா அதை போல க்விலிங் முறையில் 
செய்தேன் ....அந்த பிரண்ட் பூட்ஸ் பார்த்ததும் எனக்கொரு நினைவு 
வந்தது :))) பூட்ஸ் பிரபல பெண் பதிவரின் குரு என்பது அநேகருக்கு 
தெரிந்திருக்கும் .

                                                                     

எல்லாரும் கண்களை மூடி மனதில் டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி
 சுருளை நினைச்சுக்கோங்க ...இப்ப சில வருஷங்கள் பின்னோக்கி 
 போறோம் .
ஒரு கிராமத்தில் நாற்புறமும் சோளக்கொல்லை /கரும்பு /
வெற்றிலை /நிலக்கடலை தோட்டங்களுக்கு நடுவே அமைந்த ஒரு 
வீட்டின் அறையில் ,ஒரு சின்ன தேவதை மரத்தாலான தொட்டிலில் 
அழகா தூங்கி கொண்டிருக்கு :)  அதோட அம்மா சமையல் அறையில் 
இருந்து எதேச்சையாக பெட் ரூமுக்கு வந்தா !!!!!!!! அவங்களுக்கு 
பேரதிர்ச்சி !!!!!
தூளி தொட்டில் ஆடுது ஆனா ஆட்டுபவர் யாரென்று தெரியல 
இன்னும் சற்றே நெருங்கி வந்து பார்த்தால் இவர் கயிறைபிடித்து 
ஆட்டிவிட்டு மரசட்டத்தின் மீது ஏறி அந்த குழந்தையை அப்படியே 
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்காராம் :))
(THANKS GOOGLE )
                                                                             
சில நிமிடங்கள் குழந்தையின் தாய் செய்வதறியாது திகைத்து 
பின் சுதாரித்து பிஸ்கட்மற்றும் சில தின்பண்டங்கள் எடுத்து  
போட எதற்கும் அசையாத அவர் இறுதியில் குழந்தை பக்கத்தில் 
இருந்த பால் பாட்டிலை தூக்கிட்டு மெதுவா போய்விட்டதாம் ..
குழந்தை யாருன்னு தெரிஞ்சிருக்கும் :))..எங்கம்மா இதை எப்பவும் 
நினைவு கூறுவாங்க .
அம்மாவுக்கும் உயிரினங்களுக்கும் அப்படி ஒரு நட்பு .
அடுத்த சம்பவம் சென்ற ஆண்டு துவக்கத்தில் நடந்தது 
எங்க வீட்டுக்கு சென்னையில் வாராவாரம் ஒரு பூட்ஸ் 
கூட்டமே வருகை தருமாம் ..அதாவது எங்க வீட்டை தாண்டி 
ஒரு ஹோட்டல்காரர் வெள்ளிகிழமைகளில் தவறாமல் பூட்ஸ் 
குடும்பத்தாருக்கு இட்லி மற்றும் சில உணவுவகைகளை 
தருவாராம் .
இவை அங்கே விசிட் செய்திட்டு போகும் வழியில் எங்க அம்மா
வீட்டில் தண்ணீர் பறவைகளுக்கென பெரிய   மண் தட்டில் வைப்பாங்க 
அதையும் அருந்தி விட்டு செல்வார்களாம் .அவர்களில் ஒருவர் 
 அங்கே இருந்து அம்மா கையால் சில உணவு சாப்பிட்டு ரிலாக்ஸ்டா 
செல்வார் .அவர் பெயர் ரவி ..அம்மா தான் பெயர் வைத்தார்களாம் .
அப்புறம் சில மாதங்கள் இவர்கள் வீட்டுப்பக்கம் வரவேயில்லை 
போலீசில் ஹோட்டல்காரர் மீது யாரோ கம்ப்ளைன்ட் கொடுக்க ,
அவர் உணவிடுவதை நிறுத்தியதால்  இவர்களும்  வரவேயில்லை ..
பின்பு சமீபத்தில் ரவி மட்டும் வந்திருக்கு எங்க வீட்டுக்கு ..
என் தங்கை நீருடன் உணவு தந்தாளாம் ஆனால் உண்ணாமல் 
ரவி அப்படியே அமர்ந்திருக்கு தங்கைக்கு புரிந்துவிட்டது ,சில நிமிடங்கள் 
ரவி உள் வரை வீட்டினுள் வந்து விட்டு சாப்பிடாமலே  சென்று 
விட்டதாம் ..இந்த ரவியுடன் அம்மா ஒரு புகைப்படம் எடுத்தாங்க ..
எனக்கும்  ஒரு காப்பி அனுப்பி வைச்சாங்க என் மகள் இங்கு ஒருவர்
 விடாமல் பள்ளி ஆலயம் நண்பர் அக்கம்பக்கம்  என்று அனைவரிடமும் 
படத்தை காண்பிச்சா ..பதிவில் இணைக்க வீடு முழுதும் 
தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை ..:(((
விலங்குகள் ஆனாலும் அவற்றுக்கும் அன்புண்டு ..அனைவரிடமும் 
பகிரணும்னு யோசித்தேன் பூட்ஸ் ரவி நினைவுகளை 
(எங்கம்மாவுக்கு குரங்கு என்றழைப்பது  பிடிக்காது )

96 comments:

 1. உங்கள் அதிரஸம் பார்க்கவே சூப்பரா இருக்கு. இனிப்போ இனிப்பு. நாக்கில் நீர் ஊற்கிறது.

  தொட்ரும்


  [முதல் அதிரஸம் நான் தானோ? எனக்குத்தானோ?]

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் உங்களுக்கேதான் ..தாரளமாக எடுத்துக்கோங்க :))

   Delete
 2. வாழ்த்து அட்டை அருமை. அதில் அந்தக்குரங்கார் ஜோர் ஜோர்.
  அதிரஸத்தை தூக்கிட்டுப்போய்விடப்போறார். ஜாக்கிரதை. ;)))))

  ReplyDelete
  Replies
  1. ஆங்கில வலைப்பூவிலும் அனைவரும் ரசித்தது பூட்சைதான்

   Delete
 3. //குழந்தை யாருன்னு தெரிஞ்சிருக்கும் :))..எங்கம்மா இதை எப்பவும் நினைவு கூறுவாங்க.//

  ஆஹா, எங்கள் நிர்மலா பிறக்கும் போதே, ஹனுமனால் தொட்டிலை ஆட்டும் பாக்யம் பெற்றவள்! ;)))))) என்பதை நினைக்கும் போது, எனக்கே ஓர் வால் முளைத்தது போன்ற பரவஸம் ஏற்படுகிறது.

  அதனால் தான் உங்களை எல்லோரும் அஞ்சு எனச் செல்லமாகக் கூப்பிடுகிறார்களோ? ; ))))))

  ReplyDelete
  Replies
  1. ”அஞ்சு” என்பது என் கொப்பிரைட் பெயர்:) நான் தான் அஞ்சுவுக்குப் பெயர் சூட்டினனான்.. அதுக்கு ஏதும் பரிசுதர விரும்பினால் இப்பவே தாங்கோ கோபு அண்ணன்:).

   Delete
  2. அதிரா,எனக்கே எனக்காக நான் அதிரஸங்களை புக் செய்து விட்டேன்.

   “உனக்கே உனக்காக” வேண்டுமானால் இங்கே வாருங்கள். எடுத்துக்கொள்ளுங்கள்.

   http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html
   உனக்கே உனக்காக

   Delete
  3. இல்ல கோபு அண்ணன் எனக்கு அதிரசம் வாணாம்ம்.. ஏற்கனவே “அதி” என்னிடம் இருக்கெல்லோ:) அதனால அந்த டோராக் கார்ட்டைத் தரச் சொல்லுங்கோ..

   ஓ புதுப்பதிவோ வருகிறேன்ன்ன்ன்.. தெரிவித்தமைக்கு மியாவும் நன்றி.

   Delete
  4. உனக்கே உனக்காக கலக்கல் படிச்சு பின்னூட்டியும் விட்டேன்ன்..

   Delete
  5. http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html

   athira October 5, 2012 6:47 PM
   உனக்கே உனக்காக கலக்கல் படிச்சு பின்னூட்டியும் விட்டேன்ன்..

   அங்கு நீங்க விட்ட பின்னூட்டிக்கு நான் பக்கம் பக்கமாக பதில் கொடுத்துள்ளேன் ..... பார்த்தீங்களா?

   பார்க்காட்டி உடனே போய் பாருங்க!
   அப்புறமாச் சொல்லுங்க ... எப்படீன்னு !

   அன்புடன்
   கோபு அண்ணா

   Delete
 4. ஆஆஆஆஆஆஆ இம்முறையும் கோபு அண்ணனுக்கு அடுத்து:) மீதான் 1ஸ்ட்டூஊஊஊஉ:).

  ReplyDelete
 5. //வீட்டில் தண்ணீர் பரவைகளுக்கென பெறிய மண் தட்டில் வைப்பாங்க அதையும் அருந்தி விட்டு செல்வார்களாம் //

  நிர்மலா, இரு தவறுகள் உள்ளன. திருத்தி விடவும்.

  [1] பரவை=தவறு பறவை=சரியான சொல்
  [2] பெறிய=தவறு பெரிய==சரியான சொல் {BIG]

  vgk

  ReplyDelete
  Replies
  1. றீச்சர்ர்ர்ர்ர் ஓடிவாங்கோ அஞ்சு ஸ்பெல்லிங் மிஸ்ரேக் விட்டிட்டாஆஆஆஆஆஆஆ:)

   Delete
  2. ரொம்ப தாங்க்ஸ் அண்ணா ..கரெக்ட் செய்திட்டேன்

   அதிராவ் கர்ர்ர்வ்

   Delete
  3. எங்கட தொடர்பு எல்லைக்கும் வெளிலதான் நிற்கிறா.. ஆனா வதனப்புத்தகத்தில் ஆடு மேய்ப்பதாக:).. ஹையோ சொல்லிடாதீங்கோ.. ஒரு ஃபுளோல வந்திடிச்சி:)) நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்திருக்கு:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சு கன்னியாகுமரில கலக்க விடுங்கோ.. என் இப்பதிலை:)).. பிறகு றீச்சர் படிச்சாவோ நான் பீஸ் பீஸ் தேன்:) இது வேற பீஸ்:)

   Delete
  4. //வதனப்புத்தகத்தில் ஆடு மேய்ப்பதாக:)..//

   அருமையான வார்த்தைகள்.
   FACE BOOK க்கு தூய தமிழா? ;)

   ஆனாலும் ஆடு மேய்ப்பதாகவா?
   ஆமையல்லவா மேய்ப்பதாக எனக்குச் செய்தி வந்திச்சு.

   //பிறகு றீச்சர் படிச்சாவோ நான் பீஸ் பீஸ் தேன்:)

   இது வேற பீஸ்:)//

   ஆஹா, என்னவெல்லாம் ஜாலியோ ஜாலியாக எழுதிறீங்க? இவ்வளவு நாளா நான் மிஸ் பண்ணிட்டேனே! ;(((((

   Delete
 6. டோராவும் மங்கியாரும் சூப்பர்..

  ReplyDelete
 7. அதிரசம்..(சீனி அரியதரம்) சூப்பராக வந்திருக்கு, ஆனாலும் ஒரு டவுட்டூ? சொவ்ட்டாக வரேல்லையோ அஞ்சு?.. சிலது பஞ்சுமாதிரி இருக்கும். ஆனாலும் பர்க்க அயகக:) இருக்கு.

  நான் இது சுட்டிருக்கிறேன்... கெளரி விரதத்தை நிறைவு செய்வதற்காக... எமது பல்லுடையாமல் காப்பாற்றியது அந்த கெளரியம்மாதான்:)). இருந்தாலும் சுட்டிட்டமில்ல:).. அதுதானே முக்கியம்.

  ReplyDelete
  Replies
  1. மியாவ் :)) இதுதான் முதன்முறை அடுத்தமுறை இன்னும் அருமையா வரும்னு நினைக்கிறேன் :))

   Delete
  2. ஆனாலும் பூசாரின் கண் ரொம்ப ஷார்ப் :))

   Delete
  3. athira October 5, 2012 5:05 PM
   //அதிரசம்..(சீனி அரியதரம்) சூப்பராக வந்திருக்கு, ஆனாலும் ஒரு டவுட்டூ? சொவ்ட்டாக வரேல்லையோ அஞ்சு?.. //

   நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க!

   //சிலது பஞ்சுமாதிரி இருக்கும். ஆனாலும் பர்க்க அயகக:) இருக்கு.//

   பஞ்சு மாதிரி இருப்பது தான் மிருதுவாக சுவைக்க நல்லா இருக்கும். ஓரத்திலெல்லாம் இது முறுகலா இருக்கு ... அது சுத்தப்படாது ... ஆனாக்க பூசாரின் ஷார்ப் கண்ணே சொல்வது போல பார்க்க அழகா இருக்கு. பார்த்தால் பசி தீரும்.

   //நான் இது சுட்டிருக்கிறேன்... கெளரி விரதத்தை நிறைவு செய்வதற்காக... எமது பல்லுடையாமல் காப்பாற்றியது அந்த கெளரியம்மாதான்:))//

   பல்லு உடைஞ்சாத்தான் என்னங்க? என்னுடைய பதிவு
   “பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?”
   உடனே போய்ப்பாருங்க.

   இணைப்பு இதோ:

   http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html


   //இருந்தாலும் சுட்டிட்டமில்ல:).. அதுதானே முக்கியம்.//

   அதே அதே ... சபாபதே ! ;)))))

   அன்புடன்
   கோபு அண்ணா

   Delete
  4. அதிரசம் நீங்க சொல்லியிருக்கும் செய்முறை விளக்கியிருக்கும் விதம் அப்பப்பா !!!!!!!!!! இதை வாசிக்குபோது நீங்க சொன்ன முறைப்படி செய்ததை சாப்பிட ஆசை வரது ..
   நான் எனது செய்முறையில் சில பிழைகள் விட்டிருக்கேன்
   rawஅரிசி ..இங்கே அவ்வளவு தரம் என்று சொல்ல முடியாது
   நெக்ஸ்ட் ...வெல்லம் ..இரண்டு விதமான வெல்லத்தை கலந்து செய்தேன் ..ஒன்றில் அளவு குறைந்ததால் ..
   நான் பொரித்தது ஊருறங்கும் இரவு பதினொன்றரை வாக்கில் ..:))
   அடுத்தது நல்லெண்ணெய் /நல்ல நெய் இரண்டும் எனது செய்முறையில் இல்லை ...கிடைத்ததை வைத்து செய்தாயிற்று :))))))

   நீங்க எவ்வளவு அருமையா அதிரசம் பற்றி சொன்னது இனிப்பு சாபிடாத எனக்கே அவ்வளோ ஆசையாக இருக்கு:PPPP :)

   Delete
  5. அச்சச்சோ.. என் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவொரு பதிவு வச்சிருக்கிறாரே கோபு அண்ணன்.... வருகிரேன்ன்.. மின்னல் வேகத்தில:)

   Delete
 8. பூட்ஸ் பிரபல பெண் பதிவரின் குரு என்பது அநேகருக்கு
  தெரிந்திருக்கும் .//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் லேட்டா வாறேன் மிகுதி படிக்க.. இப்போ போகோணும் நான்:).

   Delete
  2. //பூட்ஸ் பிரபல பெண் பதிவரின் குரு என்பது அநேகருக்கு
   தெரிந்திருக்கும் .// ஹா ஹா இது தான் சூப்பர் அஞ்சு கீப் இட் அப். நான் இங்கே மங்கி வேர்ல்ட் போன போதும் இப்படித்தான் குருவின் படத்தை எடுத்து என் பதிவில் போட்டேன்.

   Delete

  3. கிரி:)) நமக்கு வரலாறு முக்கியம் இல்லையா :))

   Delete
 9. //ஒரு சின்ன தேவதை மரத்தாலான தொட்டிலில்
  அழகா தூங்கி கொண்டிருக்கு :) //

  ஆஹா! கற்பனை செய்து பார்த்தேன். நிர்மலா குட்டியூண்டு குழந்தையாக வாயில் இரண்டு விரல்களைச் சூப்பிக்கொண்டு.

  சூப்பரோ சூப்பர் ஏஞ்சல் தேவைதை தான். ;)))))

  ReplyDelete
  Replies
  1. //சூப்பரோ சூப்பர் ஏஞ்சல் தேவைதை தான். ;)))))//

   சாரி. இங்கு எனக்கும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிவிட்டது.

   சூப்பரோ சூப்பர் “ஏஞ்சல் தேவதை தான்”. என்பதே சரி.

   Delete
  2. ஹா..ஹா..ஹா... அதிரசம் சாப்பிட்ட எபக்டூஊஊஊஊஉ:)) ரங்கு ஸ்லிப்பாகி:), ஸ்பெல்லிங் மிசுரேக்கா வருதுபோல:)).. இதுக்குத்தான் நான் வாணாம் எனக்கு என புத்தியாகச் சொல்லிட்டேன்:)) . உஸ்ஸ் மருதமலையான் என்னைக் காப்பாற்றிட்டார்:).

   Delete
  3. //athira
   ஹா..ஹா..ஹா... அதிரசம் சாப்பிட்ட எபக்டூஊஊஊஊஉ:)) ரங்கு ஸ்லிப்பாகி:),//

   அட அது ரங்கு இல்லீங்க..... டங்ங்கு [நாக்கு]
   அதிரசம் சுவைக்க நாக்கு முக்கியமோல்யோ?

   தேவதை என்பதை தேவைதைன்னு எழுதிப்புட்டேன்.
   தேவை தேவதைன்னு எழுதிப்புட்டேனோன்னு யாரும் என்னை வதைக்கக்கூடாதோல்யோ? அதனால் கரெக்‌ஷன் சொல்லிப்புட்டேன்.

   ஆமாம் ... என் ”தேடி வந்த தேவதை” படிச்சிருக்கேளோ? படிக்காட்டா உடனே போய்ப் படியுங்கோ. ரொம்ப கிக்காகும் உங்களுக்கு.....

   இணைப்பு இதோ:

   http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_14.html

   அன்புடன்
   கோபு அண்ணா

   Delete
 10. அஞ்சூஊஊஊ இது சரியில்லை. நான் பிஸின்னு தெரிஞ்சு கொண்டு அதிரசத்தை இங்கை கொண்டந்து வைச்சூஊஊ எல்லாரும் எடுத்துக்கொண்டு போனாச்சா?
  வெறும் தட்டுத்தான் இருக்கு.......
  நோஓஓஓஓஓ:(((

  இப்ப கொஞ்சம் பிஸி, நானும் லேட்டா வாறேன்ன்ன்;)

  ReplyDelete
  Replies
  1. ஆசை தோசை அப்பளம் வடை. எங்கேயோ போய் தூங்கிப்புட்டு லேட்டா வந்துட்டு, அதிரஸத்தில் பங்கு கேட்க வந்தாச்சு. அதிரஸம் தானே இது என்ன பிரமாதம், என்னிடம் இருக்கு, இல்லாட்டாலும் புதிதாகச் செய்து தருகிறேன்னு ஒரு வார்த்தை .... ஒரே ஒரு வார்த்தை .... அதுவும் வாய் வார்த்தை சொல்லாட்டாலும் ... அங்கேந்து வந்துட்டாங்க ... பங்கு கேட்க.

   இரண்டு பூனைகளுக்கான தகராறில் அப்பத்தை பங்கு போட்டுத்தர ஒரு குரங்கு வந்ததாம்.

   அதுபோல உள்ளது இவங்க குறுக்கே வந்துள்ளது.

   ஏற்கனவே நானும் அதிரா பூனையும் அப்பத்தை அல்ல அதிரஸத்தை பங்கு போட்டுக்கொள்வது பற்றி பேசிகிட்டு இருக்கும் போதே, நடுவில் வந்தாச்சு இந்த இ ள ம தி. ;)))))

   Delete
  2. இல்ல.. அந்த மூண்டில, குட்டியா இருப்பதை யங்மூனுக்குக் கொடுத்திடலாம்:)

   Delete
  3. நான் ஏற்க்கனவே அனுப்பிட்டேன் அவங்களுக்கு

   இங்கிருப்பதை அண்ணாவும் அதிராவும் தைரியமாக சாப்பிடலாம்

   Delete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நேக்கு வாணாம்ம்.. ஏற்கனவே பல்லு ஒருமாதிரி இருக்கு:).

   Delete
  5. கர்ர் மியாவ் நீங்க சாப்பிடாட்டி உங்களுக்கு வயறு வலிக்கும்

   Delete
  6. வயித்துவலி எனக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான், நான் பனடோல் எடுப்பனே:) ஆனா அதிரசம் வாணாம்:) பல்லுக்கு நல்லதில்ல:)) சொல்லிடேன்:)). குருவே என்னைக் காப்பாத்துங்கோ:).

   Delete
  7. // அந்த மூண்டில, குட்டியா இருப்பதை யங்மூனுக்குக் கொடுத்திடலாம்:)//
   ஐயா என்ன சொன்னாலும் அதிரா எனக்கு தராமல் சாப்பிடமாட்டாவே;)
   ரொம்ப தாங்ஸ் அதிரா:)))

   Delete
  8. // நான் ஏற்க்கனவே அனுப்பிட்டேன் அவங்களுக்கு //
   ஐயோ ஏன் அஞ்சு அங்கையே அதிரசம் சுடும்போதே எனக்கும் தந்ததை இங்கு சொன்னீங்க:( அவ்வ்வ்வ்வ்வ்.
   இப்ப அதிராவும் தந்ததை பறிக்கப் போறாஆஆஆ....

   Delete
 11. எதற்கும் அசையாத அவர் இறுதியில் குழந்தை பக்கத்தில்
  இருந்த பால் பாட்டிலை தூக்கிட்டு மெதுவா போய்விட்டதாம் ..
  குழந்தை யாருன்னு தெரிஞ்சிருக்கும் :))//

  புரியுது புரியுது... எங்களைப் பார்க்க மாமா மாமி, அத்தை, அண்ண அக்கா.. பெரியப்பா சித்தப்பா சித்தி இப்பூடி வருவாங்க:) அஞ்சுவைப் பார்த்து பிலெஸ் பண்ண, எங்கட “கிரேட் குரு” வந்திருக்கிறார்ர்...

  கீரி கொஞ்சம் ஓடிவாங்கோ.. அஞ்சுட சூப்பி பொட்டிலைக் கொஞ்சம் வாங்கிக்கொடுக்க யெல்ப் பண்ணுங்க:))

  ReplyDelete
 12. நல்லவேளை வலையுலகில் ஆரும் “ரவி” எனும் பெயரோடு உலா வருவதை நான் காணல்ல:)..

  அஞ்சு உங்கட அம்மாவுக்கும் விலங்குகள் பிடிக்குது.. ஜேசுதாஸ் அவர்களின் பாட்டுப் பிடிக்குது.. பாருங்கோ என்னைப்போலவே இருக்கிறா...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதீஸ் ..நீங்க ம் ஆற்றும் நம்ம இமா மாதிரிதான் அவங்களும் ...ஓட்டின் மேலிருந்து விழுந்த குருவிக்குஞ்சை மற்றும் எலிக்குட்டியை பத்திரமா வளத்து விடுவாங்க

   Delete
 13. ஐயா வந்தாலே பகிர்வு களை கட்டி விடுகிறது... படித்தேன்... ரசித்தேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன் :)) அதிரசம் எடுத்துக்கோங்க ..

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதிரசம் காலியாகி எவ்ளோ நேரமாச்ச்சு:).. விடமாட்டமில்ல:) மூணே மூணை வச்ச்சுக்கொண்டு முப்பது பேருக்குப் புறிக்கிறா:))

   Delete
 14. அஞ்சு கார்ட் அருமையா இருக்கு டோராவும், மங்கியும், அந்த பின்னணிக்காட்சியும் சூப்பர். ரொம்பவே அழகா இருக்கு. நல்ல கலர் காம்பினேஷன். வாழ்த்துக்கள் அஞ்சு.
  பிறந்தநாள் குட்டிக்கு கார்ட் ரொம்பவே பிடிச்சிருக்கும்.

  அதிரசம்ம்ம் எனக்கும் ரொம்ம்ப பிடிக்கும். சாப்பிட தொடங்கினால் கையையும் வாயையும் கட்டுப்படுத்துறது கஷ்டம்:(
  நல்லா வந்திருக்கு. பிறகென்ன அசத்துகிறீர்களே:)))

  எங்க ஊரில் சர்க்கரைக்கு பதிலா சுகர் போட்டும் செய்யும் வழக்கமும் இருக்கு. செய்முறை நீங்க குறிப்பிட்ட இவங்க செய்முறை போல அல்ல. உண்மையில் அதுவும் உள்ளே பொஸு பொஸுன்னு பஞ்சுமாதிரி சாப்பிட நன்றாக இருக்கும்.
  பகிர்வுக்கு மிக்க நன்றி அஞ்சு:))

  ReplyDelete
  Replies
  1. அப்படியா இளமதி !! எனக்கு அந்த பொசு பொசு ரெசிப்பி வேணும் ..சொல்லிதரீன்களா :))
   அந்த வெள்ளை நிற அதிரசம் இன்றிரவு செய்யப்போறேன்

   Delete
 15. குட்டி ஏஞ்சலின் கதை நன்றாக இருக்கிறது. கூடவே அம்மாவைப்பற்றியும்.....
  விலங்குகளின் மேலும் உங்கள் அம்மாவின் பாசம். நினைக்கும்போது எனக்கும் மகிழ்வாயும் நெருடலாயும் இருக்கிறது.
  அம்மாவின் பாசத்திற்கு அந்த “ரவி” ஓர் உதாரணம்.
  கருணை உள்ள அந்த அம்மாவின் ஏஞ்சலல்லவா நீங்கள். உங்கள் கருணையும் ஒப்பிடமுடியாதது:)

  ReplyDelete
  Replies
  1. அம்மாவின் பாசத்திற்கு அந்த “ரவி” ஓர் உதாரணம்.
   கருணை உள்ள அந்த அம்மாவின் ஏஞ்சலல்லவா நீங்கள். உங்கள் கருணையும் ஒப்பிடமுடியாதது:)///
   உண்மைதான் அக்கா ....அஞ்சு அக்கா எனக்கு எப்படி சொல்லனும் தெரியல இளமதி அக்கா அழகா சொல்லிட்டாங்க ....

   அக்கா அம்மா இத எல்லாம் பார்த்துட்டே இருக்காங்க அக்கா ...உங்ககூடவே இருன்துட்டு இருக்காங்க ..

   Delete
 16. வணக்கம் அக்கா! ரவி கதை அருமையா இருக்கு! அந்தப் போட்டோவை மறுமுறை தேடி எடுக்க முடிந்தால், எடுத்துப் போடுங்க அக்கா :))

  ReplyDelete
  Replies
  1. வாங்க மணி ..அந்த படம் தேடாத இடமில்லை (..எங்கே மிஸ் ஆகிசோ தெரியல ..எப்படியும் கண்டுபிடிப்பேன் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 17. அக்கா, உங்கள் ப்ளாக்கில் பதில்கள் சொல்வதற்கென்று “சிலரை”:))) சம்பளம் கொடுத்து, வேலைக்கு வைச்சிருக்கிறீங்க போல! நல்ல நல்ல பதில் எல்லாம் போடுகினம்! :)))

  என்ர ப்ளாக்கிலும் பதில் சொல்ல ஆட்கள் தேவை! எவ்வளவு சம்பளம் கொடுத்தால் வருவினமாம்ம்ம்??? :)))

  ReplyDelete
  Replies
  1. அதிரா ஆஆவ் ?? ஏன் எனது தம்பியின் ப்ளாகுக்கு நீங்க போகல்லை கர்ர்ர் ..

   மணி உங்களுக்கு விஷயமே தெரியாதா :)) தேம்ஸ் ரிவர் புகழ் பிரபல பதிவர் டாகுட்டருக்கு படிக்கிறாங்களாம்..கொஞ்சம் பிசி ... அது ஒண்ணுமில்லை படிக்குபோதே பாதிபேரை வைகுண்டத்துக்கு அனுப்பியதால் தற்காலிக தல ...இது வேற தல :))))மறைவு...விரைவில் அங்கே வருவாங்களாம் :))

   Delete
 18. அன்பின் நிர்மலா,

  அப்பமும் அதிரஸமும் பற்றி ஒருசில விஷயங்களை உங்களுக்கு நான் சொல்லியே ஆகணும். தனிப்பதிவு இடலாம் தான். இருந்தாலும் அதில் எனக்கு விருப்பம் இல்லை.

  அப்பம் என்பது கெட்டியாக ஆமை ஓடு மாதிரி இருக்கும். அதை சாப்பிட பற்கள் நல்ல உறுதியாக் இருக்கணும். ஏற்கனவே “பல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா?” வாசித்துள்ளதால் அந்த ரிஸ்க் எடுக்கக் கூடாது. [ஆனாக்க இன்னும் நம் அதிரா அதை வாசிக்க வில்லை ;((((((] அவங்களுக்காக இதோ இணைப்பு:

  http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html
  ”பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?”பகுதி-1/2

  தொடரும்.....

  ReplyDelete
  Replies
  1. எங்கள் பக்கம் ஐயர்மார்கள் கல்யாணங்களில் சீர் பக்ஷணங்கள் என பலவற்றை மிகப்பெரிய சைஸ்களில் வைப்பார்கள். ஒவ்வொன்றிலும் 31, 51, 101 என்ற எண்ணிக்கையில் அவரவர் தேவை+வசதி வாய்ப்புகளுக்குத் தகுந்தபடி வைப்பார்கள்.

   அதில் குஞ்சாலாடு, மைசூர்பாகு, இனிப்புபூந்தி [இது நம் இமாவுக்கு ரொம்பவும் பிடித்தது தெரியுமோ?], தேங்காய்பர்பி, முந்திரிபர்பி, பாதுஷா, ஜாங்கிரி, சோன்பப்டி, மனோரக்கா [மனோகரம்+காய்], தேன்குழல், கைமுறுக்கு 9 சுற்று, 7 சுற்று, 5 சுற்று என இதிலேயே பலவகைகள், அப்பம், அதிரஸம் என ஏராளமான வகையறாக்கள் வைப்பார்கள். இந்த பக்ஷண சீர்வரிசைகள் செய்யவே லக்ஷக்கணக்காக செலவழிப்பவர்களும் உண்டு. கொண்டுவந்து அடுக்கினால் சபை நிறைந்து காணப்படும். இதில் ஜோடிஜோடியாக பருப்புத் தேங்காய் கூடுகள் என வெகுவாக அலங்கரித்து வைப்பார்கள். CONE கூம்பு வடிவத்தில் ஜோராக இருக்கும். அதிலும் 11, 15 என்ற ஒத்தைப்படையில் முடியும் எண்ணிக்கைகள் உண்டு.

   இதையெல்லாம் ஒவ்வொன்றையும் பற்றி தனித்தனியாக தகுந்த படங்களுடான் விளக்கினால் தான் உங்களுக்குப் புரிய வைக்க முடியும். ஒவ்வொன்றும் எவ்வளவு படா.. படா.. சைஸ்ன்னு அப்போ தான் நீங்க பார்த்து வியக்கவும் முடியும்.

   முரட்டு சைஸ் பக்ஷணங்கள், பணியாரங்கள் ..... ;)))))

   தொடரும்.....

   Delete
  2. இவற்றையெல்லாம் செய்ய அந்தக்காலத்தில் கிராமங்களில் கைதேர்ந்த பாட்டிகளும், மாமிகளும் உண்டு. கல்யாணத்திற்கு ஒரு மாதம் முன்பே அப்பளம் இடவும், இந்த பக்ஷணங்கள் செய்யவும், மிகப்பெரிய ஃபாக்டரி போல ஆரம்பித்து விடுவார்கள். ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பார்கள். மனிதநேயம் இருந்த நாட்கள் அவை.

   இப்போதும் ஆங்காங்கே ஒருசில எக்ஸ்பர்ட் மாமிகளும் பாட்டிகளும் உள்ளனர் .... இவர்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்து தங்களிடம் நிறைய சம்பளம் கொடுத்து தக்க வைத்துக்கொண்டுள்ளனர், கல்யாண காண்ட்ராக்டர்கள்.

   திருச்சியில் “நித்ய கல்யாண்” “ஆதிவிநாயகா” “ஜெயேந்திரா” போன்ற பிரபல கல்யாண காண்ட்ராக்ட்காரர்கள் உள்ளனர். இவர்களிடம் இது போன்ற நிறைய திறமைகள் உள்ள மாமிகளும் பாட்டிகளும் உள்ளனர்.

   சரி .... இப்போ அதிரஸத்தை மட்டும் பற்றி தொடர உள்ளேன் .... நிர்மலா ! OK யா?

   தொடரும்....

   Delete
  3. அதிரஸம் என்பது மிகவும் பக்குவமாகச் செய்யணும், நிர்மலா.

   நல்ல தரமான அரிசியாக வாங்கி ஊறப்போட்டு, களைந்து, காய வைத்து, அதை மாவாக இடித்து, சலித்து இதை செய்ய ஆரம்பிப்பதிலிருந்தே நல்ல அனுபவமும் கைப்பக்குவமும் வேண்டும்.

   நல்ல குவாலிடி வெல்லமாக வாங்கி அதில் அழுக்கு எடுத்து சுத்தப்படுத்தி, பாகு காய்ச்சி, சரியான கலவையாக இந்த மாவினில் சேர்க்க வேண்டும். நல்ல தித்திப்பும் இருக்க வேண்டும்.

   இதை நெய்யில் போட்டு எடுக்க வேண்டும். அப்போது தான் அதில் சுவை கூடும். அது மிகவும் மிருதுவாக அமைய வேண்டும். அது தான் இதில் உள்ள மிகப்பெரிய சூட்சுமமும் வெற்றியும்.

   வாயில் புட்டுப்போட்டால் அப்படியே கரையணும். பல் இல்லாத பெரியவர்களும் விரும்பிச் சாப்பிடுவது போல அமையணும்.

   கையால் இந்த மிகப்பெரிய அதிரஸத்தை புட்டால், அப்படியே அது உதிரி உதிரியாக கீழே சிந்தணும்.
   வாயில் போட்டால் கரையணும். நல்ல தித்திப்பாகவும் நெய் மணமாகவும், டேஸ்ட் ஆகவும் இருக்கணும்.

   படத்தில் காட்டுவது எல்லாம் அதிரஸமாகி விடாது. மேலே உள்ள பக்குவம் அமைந்த அதிரஸமே அதிரஸம்.

   நான் எனக்குத் தெரிந்த உறவினர் யார் கல்யாணம் செய்தாலும், பக்ஷண ஆர்டர் கொடுக்கும் போது, எனக்கு என தனியாக நெய்யில் போட்டு எடுத்த மிகப்பெரிய சைஸ் அதிரஸங்களுக்கு [10 to 20 Nos.] சேர்த்தே ஆர்டர் கொடுத்து பணமும் கொடுத்துவிட்டு வந்து விடுவேன், அதே கல்யாண காண்ட்ராக்டரிடம்.

   இது போன்ற குவாலிட்டி அதிரஸத்தில் அவ்வளவு ஒரு ஆசை எனக்கு. அவை சுடச்சுட முதல் நாள் சாப்பிட ஜோராக இருக்கும். பிறகும் ஒரு 10-15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

   இப்போ என் நாக்கில் நீர் ஊறுகிறது, அதை நினைத்து.

   /முற்றும்/

   சுடச்சுட சூடாக என்றதும் ஞாபகம் வருகிறதே ..... என் பதிவு ஒன்று. இணைப்பு இதோ: [அதிராவுக்காக மட்டும்]

   [மொத்தம் 8 பகுதிகள். எட்டுமே நல்ல விறுவிறுப்பு. முக்கியமாக 5 பகுதி அவ்வளவு ஒரு விறுவிறுப்பு. முதல் பகுதியின் இணைப்பு மட்டுமே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.]


   http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html

   ”வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ.!

   புதிய கட்சி ”மூ.பொ.போ.மு.க.”

   உதயம்: பகுதி 1 / 8

   அன்புடன் VGK


   Delete
  4. http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_3486.html
   நல்ல காலம் பிறக்குது

   மேற்படி பக்ஷணங்கள் செய்வதில் எக்ஸ்பர்ட் மாமி ஒருவரைப்பற்றி நான் எழுதியுள்ள கதைக்கான இணைப்பு மேலே கொடுத்துள்ளேன்.

   Delete
  5. http://gopu1949.blogspot.in/2011/11/blog-post.html
   ஜாங்கிரி

   http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html
   பஜ்ஜீன்னா பஜ்ஜி தான் பகுதி 1 / 2

   எப்போதுமே பக்ஷணம் பணியாரம்ன்னு மாமிகளைப்பற்றியே எழுதறேனேன்னு அதிரா நினைக்கக்கூடாது.

   மேலே இரண்டு எக்ஸ்பர்ட் மாமாக்களைப்பற்றியும் எழுதியுள்ளேனாக்கும்.

   அன்புடன்
   VGK

   Delete
  6. அண்ணா நான் பெரும்பாலும் இனிப்பு பதார்த்தங்கள் தவிர்ப்பேன் ஆனா
   உங்க பின்னூட்டத்தில் சொல்லியிருக்கும் பட்சணங்கள் ..ஆஹா
   அனைத்தையும் சாப்பிடனும் போல இருக்கு :)

   Delete
 19. எல்லாரும் பொல்லாத குழப்படிக் கூட்டமாக இருக்கினம். ஆளில்லாத நேரம் என்ன கதை என்னைப் பற்றி!! ;)) முதலிருந்து வாசிச்சிட்டு வாறன் பொறுங்கோ.

  ReplyDelete
  Replies
  1. நான் இல்லை நான் இல்லை அ வில் ஆரம்பித்து ராவில் முடியும் அதிரா என்பவர்தான் :)))))))))

   Delete
 20. டோரா ஸ்வீட். ஜீனோவைத்தான் காணோம். ;(
  //அதன் பெஸ்ட் நண்பன் பூட்சும்// ஹ்ம்! அதீஸ்... அது... பூஸ்ட்தானே!! டார்ட்டாய்ஸ் சூப்பர் அஞ்சூஸ். ரசித்தேன்.

  அரியதிரம்... எனக்கு விருப்பம். ஸ்கூல் தொடங்கட்டும் செய்து பார்க்கிறேன். (விருந்தேயானாலும் விருந்தோடு உண்போர் நாங்கள்.) ;)

  ஏதோ என்னைப் பற்றி வதந்தி பரப்புறீங்கள் என்று நினைச்சன். பரவாயில்லை. நல்ல விஷயங்களும் கதைச்சிருக்கிறீங்கள். அதால மன்னிச்சு விடுறன். ;D

  ReplyDelete
  Replies
  1. //பரவாயில்லை. நல்ல விஷயங்களும் கதைச்சிருக்கிறீங்கள். அதால மன்னிச்சு விடுறன்// டீச்சர் ரர்ர்ர்ர் வெயிட் வெயிட் அவசரப்பட்டு மன்னிச்சுடாதீங்க இதோ பூஸ் இன் கமெண்ட் இல் இருந்து உங்க பார்வைக்காக கொஞ்சம் என்னன்னு கேழுங்கோ :)))) ஹீ ஹீ ஏதோ என்னால முடிஞ்ச எல்ப் :))

   //ஹையோ சொல்லிடாதீங்கோ.. ஒரு ஃபுளோல வந்திடிச்சி:)) நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்திருக்கு:))..

   ஹையோ படிச்சதும் கிழிச்சு கன்னியாகுமரில கலக்க விடுங்கோ.. என் இப்பதிலை:)).. பிறகு றீச்சர் படிச்சாவோ நான் பீஸ் பீஸ் தேன்:) இது வேற பீஸ்:)//

   Delete
  2. ஹா ஹா கிரி உங்கள் சேவை கண்டிப்பா தேவை ..
   பூஸ் நிச்சயம் இங்கே இப்ப வர மாட்டாங்க ..டாக்குட்டர் ஆக போறாங்களாம் :))))))

   Delete
  3. நானும் டோறாவுடன் ஜீனோவை செய்யலாம்னு யோசித்தேன் இமா ..என் பொண்ணு சொன்னா பூட்ஸ் மட்டும்தான் டோராவின் பிரண்டாம்
   உங்க ஆசைக்கு ஜீனோ செய்திடறேன் :))

   Delete
 21. அம்மாவின் பாசத்திற்கு அந்த “ரவி” ஓர் உதாரணம்.
  கருணை உள்ள அந்த அம்மாவின் ஏஞ்சலல்லவா நீங்கள். உங்கள் கருணையும் ஒப்பிடமுடியாதது:)///
  உண்மைதான் அக்கா ....அஞ்சு அக்கா எனக்கு எப்படி சொல்லனும் தெரியல இளமதி அக்கா அழகா சொல்லிட்டாங்க ....

  அக்கா அம்மா இத எல்லாம் பார்த்துட்டே இருக்காங்க அக்கா ...உங்ககூடவே இருன்துட்டு இருக்காங்க ..

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. அம்மாவின் பாசத்திற்கு அந்த “ரவி” ஓர் உதாரணம்.
  கருணை உள்ள அந்த அம்மாவின் ஏஞ்சலல்லவா நீங்கள். உங்கள் கருணையும் ஒப்பிடமுடியாதது:)///
  உண்மைதான் அக்கா ....அஞ்சு அக்கா எனக்கு எப்படி சொல்லனும் தெரியல இளமதி அக்கா அழகா சொல்லிட்டாங்க ....

  அக்கா அம்மா இத எல்லாம் பார்த்துட்டே இருக்காங்க அக்கா ...உங்ககூடவே இருன்துட்டு இருக்காங்க ..

  ReplyDelete
  Replies
  1. வாங்க கலை வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் நன்றிடா ...ஆமாம் கலை நான் அப்படித்தான் மனசை தேத்திக்குவேன் .

   Delete
 25. அக்கா உங்க பதிவுல என்னால சரியா கமெண்ட் போட முடியலையே ஏன் ,....ப்லோக்ஸ் ல ஏதும் ப்ரோம்ப்லம் ஆ ..இல்லான ஏன் இணையமா னு தெரியல ..ரீ ரீ அண்ணா ப்லாகில இந்த ப்ரோப்லம் வரல அக்கா ...

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்ளம்(ப்ரோம்ப்லம்)எல்லாம்,அங்க தான்,ஹ!ஹ!ஹா!!!!

   Delete
 26. மாலை வணக்கம்,அஞ்சலின்!மிஸ்சாயிட்டுதே?எனக்கு பிடிச்ச இனிப்புப் பலகாரம்,இது ஒன்று தான்!ஈழ மக்கள் அரியதிரம் என்பார்கள்.தெரிந்து தான்(கிட்டுவது அரிது)அப்படிச் சொல்கிறார்களோ என்னமோ,ஹ!ஹ!ஹா!!!!////குழந்தைப் பருவ நினைவுகள்(அம்மா/அப்பா சொல்வது)அருமையானவை.எங்கள் குழந்தைகளுக்குத் தான் அந்தக் கொடுப்பனவுகள்.................... ஹும்!!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க யோகா அண்ணா ..
   அரியதரம் //பெயர் வித்யாசமா இருக்கு ..அண்ணா ...நான் ஒரு பதிவில் வாசித்தேன் //அடை// அது எப்படி இருக்கும் கிறிஸ்மஸ் டைம் செய்வதினு போட்டிருந்தது அதில் ..எங்கூரில் அடைன்னா பருப்புகள் சேர்த்து செய்வது ..இரண்டும் ஒன்றா ?

   Delete
 27. //விலங்குகள் ஆனாலும் அவற்றுக்கும் அன்புண்டு ..அனைவரிடமும்
  பகிரணும்னு யோசித்தேன் பூட்ஸ் ரவி நினைவுகளை
  (எங்கம்மாவுக்கு குரங்கு என்றழைப்பது பிடிக்காது )//

  வாழ்த்து அட்டையும்,அதிரசமும் சூப்பர்.
  மிக அழகிய அருமையான பகிர்வு.

  Participate in My First Event - Feast of Sacrifice Event
  http://www.asiyama.blogspot.com/2012/10/my-first-event-feast-of-sacrifice.html

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..
   என்னது இவேன்டா:)) முயற்சி செய்றேன் இயன்ற வரையில் :))

   Delete
 28. அஞ்சு அதிரஸத்தை எல்லோருடனும் பகிர்ந்தது அருமையாக இருக்கு. நன்றாகவும் வருகிறது இல்லையா? கார்ட் நன்ராக செய்திருக்கே! முன்னல்லாம் ஜிப்பின்னு இதைச் சொல்லுவோம்.
  நடந்த கதை எழுதியிருக்கிறாய். மிகவும் டச்சிங்காக இருந்தது.
  ஆஞ்சனேயர்தான் வந்துவிட்டுப்போவதாக மனதில் தோன்றும்.அதிரஸத்தைப் பகிர்ந்ததற்கு பாராட்டுகள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க காமாட்சி அம்மா :)) இது கொஞ்சம் க்ரிஸ்பியா வந்திருக்கு ஆனா கடிக்க மென்மையா தான் இருந்தது .....ரொம்ப நன்றி வருகை தந்ததற்கு ..ரவி மாதிரி நிறைய சம்பவங்கள் எங்க வீட்டில் நடந்திருக்கு ..பகிர்கிறேன் ஒவ்வொன்றா :)

   Delete
 29. அஞ்சு எங்கே ஆரம்பிக்கறதுன்னு தெரியல. நேத்திக்கே வந்து அவசரத்தில் படிச்சிட்டு போயிட்டேன் எப்படியும் நமக்கு அதிரசம் இல்லேன்னு ஏக்கத்துடனே:((

  நான் அதிரசம் எல்லாம் ரிஸ்க் எடுத்ததே இல்லே. ஊருக்கு போகும் போது சாப்பிடுவதோடு சரி. எங்க அம்மா பூஸ் சொல்லி இருக்கும் கௌரி விரதம் கடைசி நாள் அன்னிக்கு அதிரசம் பண்ணி சாமி கும்பிடுவோம்

  ReplyDelete
  Replies
  1. எப்படியும் நமக்கு அதிரசம் இல்லேன்னு ஏக்கத்துடனே:(( //
   நோ நோ அப்படி அழகூடாது :)) நான் இனிமே உங்களுக்கு மட்டும் படத்தை மெய்ல் செய்திட்டுதான் போஸ்டே போடுவேன்

   Delete
 30. வாழ்த்து அட்டை ரொம்ப அழகா இருக்கு அஞ்சு. நான் முன்னே சொன்னது போல் வாழ்த்து அட்டை பண்ணி விற்பனை பண்ணுங்க. நீங்க பண்ணுற மாதிரி கார்ட் எல்லாம் நான் எங்கேயும் பார்த்த தில்லை.

  ரவி அண்ட் அம்மா நினைவுகள் அருமை. உங்க அம்மா அப்பா ரெண்டு பேருமே விலங்குகள் மீது ரொம்ப பிரியமா இருந்திருப்பாங்க போல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஆஆ கிரி :)) இன்னும் விக்கற அளவுக்கு செய்யல கிரி ..சும்மா நண்பர்களுக்கு மட்டும் ஆசைக்கு செய்றேன் ..
   ஆமாம் எங்க வீட்டில் அனைவரும் அனிமல் லவர்ஸ்

   Delete
 31. ;)) பின்னூட்டம் எல்லாம் வாசிச்சாச்சு மக்கள். பூனைதான் அங்க வராதே! கூட மேய்க்கிறவங்கள்தான் ;) சொல்லி இருப்பினம். ;)

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது வேறொன்றறியேன் பராபரமே. சந்தோஷமா இருங்கோ. அனைவருக்கும் இன்றைய நாள் இனிதாக அமையட்டும்.

  ReplyDelete
 32. இங்க மும்பை பக்கம் சீனி போட்டு அதிரசம் செய்வோம் தீபாவளி சமயம். அதுக்கு பேரு அனார்சின்னுவோம். வெல்லம் போட்டு செய்யும் அதிரசம்தான் சூப்பர் சுவையாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க லக்ஷ்மிம்மா .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்க சொன்ன அந்த அதிரசம் தான் இப்ப அடுத்த ட்ரையல் என் வீட்டு கிச்சனில் :))

   Delete
 33. கார்ட் அழகாக செய்திருக்கிறீங்க அஞ்சு.வின்டாஜும் அழகாக இருக்கு.
  அதிரசம்,அரியதரம் சாப்பிடமட்டுமே.செய்ய இன்னும் முயற்சிக்கவில்லை.
  பழைய நினைவுகள் ம்..ம்..ம் நினைத்தால் சிலவேளை சந்தோஷமாக இருக்கும்.எங்க வீட்டிலும் எல்லா பிராணிகளிற்கும் பெயர் வைத்துதான் கூப்பிடுவோம்.நல்லதொரு பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்முலு ...அதிரசம் முடியும் தருவாயில் வந்திருக்கீங்கா
   பரவாயில்லை ..அடுத்தது சுகர் சேர்த்த அதிரசம் :))உங்களுக்குத்தான்

   அந்த பேக் கிரவுண்ட் வின்டாஜ் இல்லை ..அது டிஸ்னி ப்ரின்டபில்ஸ் //எல்லா பிராணிகளிற்கும் பெயர் வைத்துதான் கூப்பிடுவோம்//
   நீங்களும் ஒரு பதிவு போடுங்களேன் பழைய நினைவுகள் இனிமைதானே

   Delete
 34. பல்சுவை பதிவுனா இதுதான்.பார்த்து, ருசித்து ,படித்து ரசிக்க என்று எல்லாவற்றையும் கொடுத்து எங்களை மகிழச்செய்து விட்டீங்க angelin..

  ReplyDelete
  Replies
  1. ரமா :) வாங்க ...இப்பெல்லாம் கொஞ்சம் சமையல் பதிவும் போடறேன் ..
   வருகைக்கும் கருத்துக்கும் நன்ன்றி ரமா

   Delete
 35. Tried to add a comment here yesterday. Somehow, could not post it.

  Adhiram looks beautiful..cannot believe this is the 1st trial angel akka! Good job..kalakkunga!

  No time to read all the comments..you guys enjoy the kummi! :)

  A BIG "HIIIIIIIIIIII" to Ms.Miyaav & Giri and all others! :))))

  ReplyDelete
  Replies
  1. Hi Mahi ,   மகி உங்களுக்கு வெள்ளை அதிரசம் ஸ்பெஷலா செய்து தரேன் ..
   {சாமீ ஈ எஈ ஈ ஈ !!!! பூசார் கண்ணில் இது படவே கூடாது :)))

   Delete
 36. என் மகளுக்காக செய்த கார்ட்டு ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது.. அஜ்ஹரா ரொம்ப எஞ்ஜாய் பண்ணினால்.. ரொம்ப ரொம்ப தாக்ஸ்

  ReplyDelete