அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/27/12

Quilling With Jute cord/Christmas Cards.


முள் எலியும் நத்தார் மரமும் :))
 இந்த க்விலிங் சற்றே வித்தியாசமானது 
JUTE FILIGREE ...என்கிறார்கள் .
ஒரு ரஷ்ய வலைப்பூவில் பார்த்தேன் 
அந்த லிங்க் கொஞ்சம் வைரஸ் வருகிறார்போல இருந்தது 
மீண்டும் சரிபார்த்து இணைக்கிறேன் .

இங்கே நான் செய்த முறை ..
இரவு நேரம் படம் கொஞ்சம் கிளியர் இல்லை.


பேப்பருக்கு பதில் சணல் நூலால் செய்த மரம் 

                                                                          
                 விரும்பிய வடிவத்தை ...பிரிண்ட் எடுத்துக்கொண்டு 
அதன் மேல் பிளாஸ்டிக் ஷீட் விரித்து அதன் மேல் சணல் 
நூலை வளைத்து PINCERS உதவியுடன் வெட்டி ஒட்டவும் ..
நான் விரல்களால் தான் சுற்றி ஓட்டினேன் .
முழுது ஒட்டி முடிந்த பின் அழகாக மரத்தை எடுத்தேன் 
..ஆனால் பயன்படுத்தும் Jute  நல்ல ஸ்மூத்தாக இருக்கணும் .
நான் என்னிடம் வீட்டில் இருந்த பழைய நூலை பயன்படுத்தினேன் ..
அது சற்று கடினமாக இருந்தது 
                                                                             

 மரத்தின் அடிப்பாகமும் பழைய ஒரு ஜூட் துணியை வெட்டி ஓட்டினேன் 
பிறகு பிடிக்கலை ..அங்கே பேப்பராலேயே ஒட்டிவிட்டேன் .))


                        CRAFTS  தொடரும் :))                                                                  

10/26/12

Quilled Cards                                                                                          
சமீபத்தில் செய்த இரண்டு quilling வாழ்த்து அட்டைகள் 
இரண்டிலும்  beehive டெக்னிக் பயன்படுத்தியிருக்கிறேன் 
 வீடியோ லிங்க் இங்கே 


http://quilling.blogspot.co.uk/2006/06/free-quilling-pattern-basic-shapes.html

Bee Hive Quilling


                                                                    

வார இறுதியை சந்தோஷமாக கொண்டாடுங்க.                                                                                   
                                                                                      

10/24/12

வெங்காய சமோசா ,Quilled Puppy Card
வெங்காய சமோசா சாலடுக்கு வெங்காயம் வெட்டுபவர் ...சற்று தேவைக்கு அதிகமாக 
வெட்டி வைத்ததால் ...மீதமிருந்ததை சமொசாவாக செய்தேன் 


மைதா மாவு .....தேவையான அளவு பிசைந்து வைக்கவும் ..
இது சமோசா செய்ய .உள்ளே இருக்கும் filling ..செய்ய தேவையான பொருட்கள் 

நறுக்கிய வெங்காயம் .........ஒரு தட்டு அளவுக்கு 
ஒரு முழு வற்றல் மிளகாய் 
மிளகாய்த்தூள் ....ஒரு தேக்கரண்டி 
பட்டை தூளாக்கியது ............ஒரு தேக்கரண்டி 
கறிவேப்பிலை ....ஒரு ஆர்க் 
உப்பு தேவையான அளவு 
புளி ........திரட்சைபழம் அளவு ஊறவைத்து நீரை  வடிகட்டி வைக்கவும் 
விருப்பமானால் சோயா சாஸ் ..ஒரு தேக்கரண்டி ..
சர்க்கரை ....அரை தேக்கரண்டி ...
எண்ணெய் .....வெங்காயம் வதக்க தேவையான அளவு 
செய்முறை 

வாணலியில் ...எண்ணையை ஊற்றி சூடானதும் தீயை குறைத்து 
மிதமான தீயில் வெங்காயத்தை வதக்கவும் 

அதில் நறுக்கிய வற்றல் மிளகாய்உப்பு ,பட்டை தூள் ,
மிளாகாய்த்தூள் கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் 
ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும் 
வெங்காயம் , வெந்து மென்மையாக வரும்போது சர்க்கரை ,புளி  நீர் , 
சோயா சாஸ் இவற்றை சேர்க்கவும் ,  
பின் அடுப்பை அணைத்து கலவை சூடு  ஆறிய பின் 
கலவையை பூரணமாக இட்டு சமோசாவை பொரிக்கவும் 
நான் சமோசா மோல்டில் போட்டு பொரித்து 
எடு(எடுக்க வைத்தேன் )த்தேன் .:)))


இந்த பப்பி பழைய காதித பையை ஷ்ரேடரில் போட்டு வெட்டிய
துண்டுகளில் செய்தது ..

மீதமான மைதா மாவை மெல்லிய சப்பாத்தியாக சுட்டு ,வெட்டி 
எண்ணையில் வதக்கிய ஸ்ப்ரிங்  அனியன்ஸ் ,லீக்ஸ் பெரிய பச்சை
 மிளகாவ் வெங்காயம் இவற்றை சேர்த்து சில்லி ரொட்டி 
 செய்திட்டேன் :))அடுத்த சமையல் குறிப்பும் விரைவில் வர்ர்ர்றும் :)))))))


10/18/12

Kitty Card மற்றும் கறி ரொட்டி                                            Quilled Kitten:))                                


                                                                 

 நேற்று செய்த க்வில்ட் பூனைக்குட்டி :))
இதில் மூன்று ரிசைக்கில்ட்  பொருட்களை பயன்படுத்தியிருக்கேன் 
பிரவுன் நிற அட்டை சாக்லேட் பாக்ஸின் உட்புறம் 
மங்குஸ்தான் பழத்தின் வெளிப்புற மலர் வடிவம் 
அந்த சின்ன bow  மகளுன் உடையில் இருந்த விலை 
அட்டை யில் இருந்து எடுத்தது .

கறி ரொட்டி 

                                                                        
தேவையான பொருட்கள் 
மைதா மாவு ...மூன்று கப் 
எண்ணெய் ....மாவு பிசைய தேவையான அளவு 
உப்பு ...தேவையான அளவு 

வேகவைத்த பேபி Potatoes ....எட்டு 
வெங்காயம் ...மீடியம் அளவு... ஒன்று 
பச்சை மிளகாய் ....இரண்டு 
கறிவேப்பிலை .....ஒரு ஆர்க் 
மெலிதாக நறுக்கிய லீக்ஸ் .....ஒரு கப் 
மிளகாய்த்தூள் ....ஒரு தேக்கரண்டி 
எலுமிச்சை சாறு ...ஒரு தேக்கரண்டி 
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை ..
இஞ்சி ...ஒரு சிறு துண்டு 
சீரகம் ....ஒரு தேக்கரண்டி 
..மைதா மாவை ..சிறிது எண்ணெய் ,உப்பு நீர் சேர்த்து 
பிசையவும் ..அதனை ஒரு காற்று புகா பாத்திரத்தில் 
மூடி இளைப்பாற விடவும் ...
நான் சுமார் மூன்று மணிநேரம் ரெஸ்ட் எடுக்க விட்டேன் 

ஒரு வாணலியில் எண்ணெய் தாளிக்கும் அளவு ஊற்றி சூடானதும் ,
சீரகம் சேர்த்து வதக்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,
இஞ்சி லீக்ஸ் கறிவேப்பிலை இவற்றை ஒன்ற பின் ஒன்றாக வதக்கவும் 
,மித மான தீயில் அடிபிடிக்காமல் வதக்கவும் ,
தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும் ,
ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாரையும் சேர்க்கவும் ,
பின்பு உருளைகிழங்கை .கையால் நசுக்கி கலவையுடன் சேர்க்கவும் .
எல்லாம் கலந்ததும் அப்படியே இறக்கி வைக்கவும் .
இப்பொழுது ..மைதா மாவு ஒரு உருண்டை எடுத்து மெலிதாக 
உருட்டவும் 
அடுப்பில் கல்லை வைத்து இரு புறமும் லேசா சூடு காட்டி எடுத்து 
வைக்கவும் ..உடனே அதில் உருளை லீக்ஸ் மசாலா கலவையை 
இட்டு மடிக்கவும் .
 இரண்டிரண்டா மடித்து வைத்ததை கல்லில் இட்டு மிதமான 
தீயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும் .
கறி ரொட்டி ரெடி :))
                                                                                       
இந்த குறிப்பை வழங்கியவர் அதிரா ,,
...ஆகவே அதிராவுக்கென செய்த பிங்க் கிட்டி கார்ட் .
......நன்றி .

10/13/12

QUILLING Guild U.K ,COMPETITION ...photos


Quilled Peace Dove.
                                                                             
                                                                                     
                             
இந்த வருடம் இங்கிலாந்து QUILLING GUILD சார்பாக நடைபெற்ற 
போட்டியில் எனது மகள் அவள் வயது CATEGORY இல் இரண்டாம் 
பரிசு பெற்றாள் .
ஒவ்வொரு வயதினருக்கும் அவர்கள் க்வ்லிங் செய்யகூடிய 
திறமையையும் அடிப்படையாக வைத்து போட்டி நடைபெற்றது ...
மகள் 10 வயது இலிருந்து 14 வயதினருக்கு உட்பட்ட பிள்ளைகளுடன் 
போட்டியிட்டாள் ..
அவள் மிகவும் பள்ளி வீட்டுபாடம் என்று பிசியாக இருப்பதால் 
வேறு வழியின்றி அவள் படத்தை எனது ப்ளாகில் போட சொன்னா :))

இதை  சாதா A 4 PAPER ,SHREDDER இல் வெட்டி செய்தா 
ஒரு காட்டுக்குள்ள ஒரு சிங்கம் தான் இருக்கணும் என்ற காரணத்தால்
 ஹி !ஹி !!! நான் போட்டியில்  பங்கு பெறவில்லை :)
மேலும் அங்கு வந்திருந்த படங்கள் மற்றும் ப்ராஜக்ட்ஸ் பார்த்தபோது 
நானெல்லாம் எங்கோ !!!!தேம்ஸ் கரையில் ...

சில competition entry படங்கள் உங்க பார்வைக்கு ..
இங்கே 

சுட்ட சோளம் :))சாப்பிட்டுக்கொண்டே படங்களை ரசியுங்கள் .


                                                                              

                                                                                      
                                                                                     

                                                                                       

இந்த மவுஸ் குடும்பத்தை செய்ய ஒரு வருடம் 
எடுத்ததாம் !!

                                                                            Teddy Family     
     நம்ம யாருக்கும் சாக்லேட் வேணாம் :)))))))))))

                                       பூசாருக்கு கொடுத்திடுவோம் :))            
   இந்த ரஷ்ய பொம்மைகள் உலகெல்லாம் சுற்றியிருக்கின்றன :)
ஆஸ்திரேலியா /அமெரிக்க இப்ப இங்கே எல்லா இடத்திலும் இதன் 
உரிமையாளர் போட்டிகளுக்கு அனுப்பியிருக்கார் ..
வெற்றியும் பெற்றன   .   எப்படி இவற்றை செய்தார் என்று இந்த 
இடத்தில சொல்லியிருக்காங்க .காம்படிஷன் நடந்த இடம் 
மாலைவேளையில் வெளிச்ச .குறைவு அதான் படங்கள் 
கிளியர் இல்லை 
                Quilled Babushkas.
                                                                                   

                                                                                     
சில துபாயில் மற்றும் அமெரிக்க ரஷய ,நெதர்லாந்த்
 இருந்து வந்த 
படங்கள் ..எல்லாமே போட்டியில் பங்கு பெறவில்லை அந்த எலி ,கரடி ,
இன்னும் சில, சும்மா டிஸ்ப்ளேயில் வைத்திருந்தாங்க ...     

                           அனைவரும் வார இறுதியை சந்தோஷமா கொண்டாடவும் .                                                              

10/11/12

கருப்பு முழு உளுந்து வடை,ரவா லட்டு /old vintage photos

                                                                                               


எங்க வீட்டில் செய்த உளுந்து வடை மற்றும் தேநீர் 
எடுத்துகிட்டு சென்று  கீழே உள்ள கருப்பு வெள்ளை 
படத்தின் மேல் உள்ள லிங்க் பாருங்க ..
 இந்தியா இலங்கை பழைய படங்கள் கூட இருக்கு ..


ஒரு கப் கருப்பு முழு உளுந்தை சுமார் நான்கு மணி
நேரம் நீரில் ஊறவைத்து மின் அம்மியில் அரைத்து ,
சின்ன வெங்காயம் 6சிறு துண்டு இஞ்சி/ கறிவேப்பிலை 
உப்பு தேவையான அளவு ஒன்றிரண்டாக உடைத்த 
மிளகு இரண்டு தேக்கரண்டி ,இவற்றுடன் கலந்து 
வடையாக தட்டி பொரித்து எடுத்தேன் ..


இது ரவா லட்டு ...நான் முதமுதலா செய்தது :))


                                                                                   
                                                                                                    
சொஜ்ஜி ரவா ...ஒரு கப் 
நெய் இரண்டு மேஜைக்கரண்டி ,
சர்க்கரை /சுகர் ..... முக்கால் கப் 
ஏலக்காய்  பொடித்தது ..ஒரு தேக்கரண்டி 
மேக்கப்புக்கு அதான் :)) அலங்கரிக்க 
நெய்யில் வறுத்த முந்திரி ,பாதாம் ,திராட்சை ..
செய்முறை :
வாணலியில் ஒரு மேஜைகரண்டி நெய்யை ஊற்றி அதில் 
மிதமான சூட்டில் ரவையை வாசம் வரும்வரை வறுக்கவும் ..
பிறகு ஆறியபின் மிக்சியில் பொடிக்கவும் (coarse)
சர்க்கரையை மிக்சியில் நன்கு தூளாக பொடி  செய்து 
கொள்ளவும் .
மீதமுள்ள ஒருமேஜைகரண்டி நெய்யை 
சூடுபடுத்தி கொள்ளவும் 
ஒரு தட்டில் பொடித்த ரவை , பொடிசர்க்கரை மற்றும் 
பருப்பு வகைகளை ஒன்று சேர்த்து  கலக்கவும் .
இதில் சூடு செய்த நெய் ,கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி 
உருண்டைகளாக பிடிக்கவும் 

லட்டு ரெடி ...பரம எதிரி ஆக இருப்பின் இரண்டு லட்டு 
தற்காலிக எதிரியாக இருந்தால் ஒன்று மட்டும்போதும் ...
கொடுத்து அன்பை வளர்க்கத்தான் .:))).அவ்வவ் 

:))))))))))))இதில்  டென்னிஸ் கூட விளையாடலாம் ..
                                                                                   

கூகிளில் மகளுக்காக ஒரு விபரம் தேடும்போது இந்த 
அழகான அம்சவல்லிகள் படம் வந்தது படத்தை சுட்ட 
இந்த தளம் கிடைத்தது :))
ஹம்மாடியோ :)) எவ்வளவு பழைய காலத்து படங்கள் ..
1860 இல் எடுத்த படங்கள்லாம் இருக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 
ஜவஹர்லால் நேருவுடன்,ஜாக்குலின் கென்னடி:))) /
பழைய காலத்து திருச்சி மலைக்கோட்டை படம் ..
அந்த காலத்து சேப்பாக்கம் இன்னும் நிறைய இங்கிருக்கு ...

Source Google------->http://www.oldindianphotos.in/search/label/Chennai

Thanks Google ..
                                                                                     


விரைவில் ஒரு புதிய சமையல் குறிப்புடன் வருவேன் :))


ஆஆஆ !!!! யாரது என் தலையில் shot put இரும்பு குண்டால் அடித்தது 
                                        

10/5/12

Craft and Kitchen corner,quilled Dora பூட்ஸ் !!நினைவுகள் மற்றும் அதிரசம்:))


வணக்கம்  நண்பர்களே :))

இந்த பிறந்த  நாள் வாழ்த்து அட்டை ஒரு நண்பியின் குட்டி மகளுக்கு 
என்று செய்தது .
                                                                             
சொல்லுகிறேன் காமாட்சியம்மா அவர்களின் குறிப்பு பார்த்து செய்த 
அதிரசம்     
                                                                                
                                                                       


சென்று அவர்களின் குறிப்பு பார்த்து 
நீங்களும் செய்து பாருங்க ..நான் முதன் முதலா செய்ததே 
அருமையாக வந்திடுச்சி ..காமாட்சி அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி 

........................................................................................................................................................

பிறந்த நாள் வாழ்த்து அட்டையில் இருப்பது டோரா என்ற கார்ட்டூன் 
காரக்டரும் அதன் பெஸ்ட் நண்பன் பூட்சும் :))

இந்த  பெயர்கள் எல்லாம் விளக்கி சொன்னது எங்க வீட்டு வாண்டு ..
அவ எனக்கொரு படம் காமிச்சா அதை போல க்விலிங் முறையில் 
செய்தேன் ....அந்த பிரண்ட் பூட்ஸ் பார்த்ததும் எனக்கொரு நினைவு 
வந்தது :))) பூட்ஸ் பிரபல பெண் பதிவரின் குரு என்பது அநேகருக்கு 
தெரிந்திருக்கும் .

                                                                     

எல்லாரும் கண்களை மூடி மனதில் டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி
 சுருளை நினைச்சுக்கோங்க ...இப்ப சில வருஷங்கள் பின்னோக்கி 
 போறோம் .
ஒரு கிராமத்தில் நாற்புறமும் சோளக்கொல்லை /கரும்பு /
வெற்றிலை /நிலக்கடலை தோட்டங்களுக்கு நடுவே அமைந்த ஒரு 
வீட்டின் அறையில் ,ஒரு சின்ன தேவதை மரத்தாலான தொட்டிலில் 
அழகா தூங்கி கொண்டிருக்கு :)  அதோட அம்மா சமையல் அறையில் 
இருந்து எதேச்சையாக பெட் ரூமுக்கு வந்தா !!!!!!!! அவங்களுக்கு 
பேரதிர்ச்சி !!!!!
தூளி தொட்டில் ஆடுது ஆனா ஆட்டுபவர் யாரென்று தெரியல 
இன்னும் சற்றே நெருங்கி வந்து பார்த்தால் இவர் கயிறைபிடித்து 
ஆட்டிவிட்டு மரசட்டத்தின் மீது ஏறி அந்த குழந்தையை அப்படியே 
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்காராம் :))
(THANKS GOOGLE )
                                                                             
சில நிமிடங்கள் குழந்தையின் தாய் செய்வதறியாது திகைத்து 
பின் சுதாரித்து பிஸ்கட்மற்றும் சில தின்பண்டங்கள் எடுத்து  
போட எதற்கும் அசையாத அவர் இறுதியில் குழந்தை பக்கத்தில் 
இருந்த பால் பாட்டிலை தூக்கிட்டு மெதுவா போய்விட்டதாம் ..
குழந்தை யாருன்னு தெரிஞ்சிருக்கும் :))..எங்கம்மா இதை எப்பவும் 
நினைவு கூறுவாங்க .
அம்மாவுக்கும் உயிரினங்களுக்கும் அப்படி ஒரு நட்பு .
அடுத்த சம்பவம் சென்ற ஆண்டு துவக்கத்தில் நடந்தது 
எங்க வீட்டுக்கு சென்னையில் வாராவாரம் ஒரு பூட்ஸ் 
கூட்டமே வருகை தருமாம் ..அதாவது எங்க வீட்டை தாண்டி 
ஒரு ஹோட்டல்காரர் வெள்ளிகிழமைகளில் தவறாமல் பூட்ஸ் 
குடும்பத்தாருக்கு இட்லி மற்றும் சில உணவுவகைகளை 
தருவாராம் .
இவை அங்கே விசிட் செய்திட்டு போகும் வழியில் எங்க அம்மா
வீட்டில் தண்ணீர் பறவைகளுக்கென பெரிய   மண் தட்டில் வைப்பாங்க 
அதையும் அருந்தி விட்டு செல்வார்களாம் .அவர்களில் ஒருவர் 
 அங்கே இருந்து அம்மா கையால் சில உணவு சாப்பிட்டு ரிலாக்ஸ்டா 
செல்வார் .அவர் பெயர் ரவி ..அம்மா தான் பெயர் வைத்தார்களாம் .
அப்புறம் சில மாதங்கள் இவர்கள் வீட்டுப்பக்கம் வரவேயில்லை 
போலீசில் ஹோட்டல்காரர் மீது யாரோ கம்ப்ளைன்ட் கொடுக்க ,
அவர் உணவிடுவதை நிறுத்தியதால்  இவர்களும்  வரவேயில்லை ..
பின்பு சமீபத்தில் ரவி மட்டும் வந்திருக்கு எங்க வீட்டுக்கு ..
என் தங்கை நீருடன் உணவு தந்தாளாம் ஆனால் உண்ணாமல் 
ரவி அப்படியே அமர்ந்திருக்கு தங்கைக்கு புரிந்துவிட்டது ,சில நிமிடங்கள் 
ரவி உள் வரை வீட்டினுள் வந்து விட்டு சாப்பிடாமலே  சென்று 
விட்டதாம் ..இந்த ரவியுடன் அம்மா ஒரு புகைப்படம் எடுத்தாங்க ..
எனக்கும்  ஒரு காப்பி அனுப்பி வைச்சாங்க என் மகள் இங்கு ஒருவர்
 விடாமல் பள்ளி ஆலயம் நண்பர் அக்கம்பக்கம்  என்று அனைவரிடமும் 
படத்தை காண்பிச்சா ..பதிவில் இணைக்க வீடு முழுதும் 
தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை ..:(((
விலங்குகள் ஆனாலும் அவற்றுக்கும் அன்புண்டு ..அனைவரிடமும் 
பகிரணும்னு யோசித்தேன் பூட்ஸ் ரவி நினைவுகளை 
(எங்கம்மாவுக்கு குரங்கு என்றழைப்பது  பிடிக்காது )