அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/17/12

Craft corner &ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள்

                                               
மார்க் அன்ட் ஸ்பென்சரில் வாங்கிய டிடோக்ஸ் டீ 
பெட்டியினை ஒரு புக்மார்க் ஆக மாற்றியிருக்கிறேன் .
அந்த பெட்டியின் ஒரு பக்கம் அழகா இருந்தது அதில் 
க்விலிங் செய்தேன் .
அடுத்த புக் மார்க் ஒரு ஓம் வடிவ பிள்ளையார் .
ஒரு கிளிப் ஆர்ட் பார்த்து செய்தது 

                                                                                       


ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் 

மாங்காய் இஞ்சி 
மாங்காய் இஞ்சி குழம்பு ..மேனகாவின் குறிப்பு பார்த்து செய்தது 
                                                                        


பழு பாகல் வதக்கல்  காமாட்சி அம்மா அவர்களின் குறிப்பு 
பார்த்து செய்தது .

                                                                            
இரண்டுமே கேரளா  மாட்டா  அரிசி சாதத்துடன் அருமையான 
காம்பினேஷன் :pp :pp
                                                                                 
                                                                             
இதோ க்ரிட்ஸ் இட்லி .மற்றும் பூண்டு சட்னி
 பூண்டு சட்னி கீதா ஆச்சல் 
குறிப்பு  பார்த்து செய்தது .

க்ரிட்ஸ் பற்றிய குறிப்புகளுக்கு அங்கே பார்க்கவும் 
இங்கே ஆசிய நாட்டு கடைகளில் East End வகை பருப்புகள்
 பிரசித்தம் .ஒரு கடையில் தற்செயலாக பார்த்தேன் வெள்ளை 
நிற சோள ரவை .வாங்கி செய்தும் விட்டேன் .
                            
இந்தாங்க நேந்திரங்கா  சிப்ஸ் சுட சுட செய்தது ..:)))மகளுக்கு பள்ளி துவங்கி விட்டது பள்ளிக்கூட அனுபவங்கள் 
நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொள்ள இருக்கு ..
சுட சுட விரைவில்  பகிர்கிறேன் :))

 அதுவரை Cheeeeeeeeeeers:))))))))))

48 comments:

 1. நாங்க இதை எல்லாம் பார்த்திட்டமில்ல:)

  அதென்ன அஞ்சு மெயிஸ் மீல்ல இட்லி செய்தீங்களோ? புரியல்லியே....

  ReplyDelete
  Replies
  1. yes yes yes அதீஸ் கீதாவின் லிங்கில் பாருங்க ...படம் போட்டா வாங்க ஈசியா இருக்கும்னு போட்டேன்

   Delete
 2. //பழு பாகல் வதக்கல் //

  நாங்கள் இதை சுண்டங்காய் எனச் சொல்வோம்ம்... வதக்கி குழம்பு வைத்தால் சுவையோ சுவைதான்ன்ன்..

  சுண்டங்காய் கால் பணமாம், சுமைகூலி முக்கால் பணமாம் எனச் சொலுவினம் பயமொயி:).

  ReplyDelete
 3. ஆனா சுண்டங்காயின் பருப்பை முழுவதும் நீக்கி விட்டுத்தான் செய்வோம்.

  ReplyDelete
  Replies
  1. Giri !!! come soon i need your help :))))))))

   Delete
  2. ஆஆஆஆ ஜாமீஈஈ என்னைய காப்பாத்துங்கோ பூஸின் டவுட்டுக்கு ஒரு எல்லையே இல்லையாஆஆஆ ??????? தேம்ஸ் இல் கடைசியில் நம்ம எல்லாம் தான் குதிக்கணும் போல இருக்கு:))

   Delete
 4. கார்ட்ஸ் அயகு.

  ReplyDelete
 5. அதுவரை Cheeeeeeeeeeers:))))))))))///

  Cheeeeeeeeeeers:).

  ReplyDelete
 6. பாகற்காய்ல ஏதோ ட்ரை பண்ணிருக்கீங்களே... என்னது அது... நல்லா இருக்கும் போல தெரியுதே? நமக்கு வேற பாகற்காய் புடிச்ச ஐடம்ஸ்..:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க தம்பி ..அது ஒரு வெரைட்டி பாகற்க்காய் மிதி பாகல் என்பார்களே அது போல ஆனா கசக்கவேயில்லை ..கிடைச்சா சமைத்து பாருங்க

   Delete
 7. பதிவு நன்றாக உள்ளது. படங்களும் தெளிவு.
  வாழ்த்துடன் என் வலைக்கும் நல்வரவு கூறுகிறேன்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..இதோ வரேன் அங்கே

   Delete
 8. நன்று

  அறிந்து கொண்டேன் பூண்டு சட்னி

  ReplyDelete
  Replies
  1. பூண்டு சட்னி மிக டேஸ்டுங்க ..வீட்டம்மாவை செய்து தர சொல்லுங்க ..இட்லிக்கு நல்ல காம்பினேஷன்

   Delete
 9. நல்லா தொகுப்பு ஏஞ்சல் அக்கா! ஓம் பிள்ளையார் அழகா இருக்கிறார். :)

  அதிராவ், இது சுண்டங்காய் இல்லை! அது வேஏஏஏஏஏற காய், இது வேற காய்! சுண்டக்காய் போட்டோஸ் மெயில்ல அனுப்புறேன் பாருங்க,ஓகே?

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..சீக்கிரமா வாங்க ஒரு கை குறையுது ..இப்பதான் அகர் அகர் மேட்டர் முடிவுக்கு வந்தது அதுக்குள்ளே பழு பாகல் :))))

   Delete
  2. என்னைக் கொல்லாமல் விடமாட்டாங்க போலிருக்கே முருகா:))

   Delete
  3. //
   என்னைக் கொல்லாமல் விடமாட்டாங்க போலிருக்கே முருகா:))//என்னாது ஊஊஊ இதை நாங்க எல்லாம் சொல்லணும் பூஸ் :))

   Delete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. நான் மாங்காய்க் குழம்பையும் ,பழுபாகல் வதக்கலையும் எடுத்து வச்சிருக்கிறன்.பழுபாகல் விளங்கேல்ல.அதிராவும்,மகியும் பிடுங்குப்படுகினம்...பாப்பம் என்ன முடிவு சொல்லுகினமெண்டு !

  குப்பைக்க போடுறதையெல்லாமெடுத்து எவ்வளவு அழகாக்கிறீங்கள்.பாராட்டிக்கொண்டே இருக்கலாம் ஏஞ்சல் !

  ReplyDelete
  Replies
  1. அது மாங்காய் இஞ்சி ஹேமா ..இலங்கையில் கிடைக்குமா ..
   ஊரில் அம்மா அடிக்கடி செய்வாங்க தொக்கு ஊறுகாய் என்று
   ..இங்கே இப தான் மேனகா ரெசிபி தந்ததால் செய்ய கற்றுக்கொண்டேன் .
   செம டேஸ்டி ...பிள்ளையார் பிடிச்சிருக்கா ..நான் முதன் முதல் செய்தது

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
  2. பிள்ளையார் நல்ல வடிவு ஏஞ்சல்.எல்லாம் செய்றது போலவே எண்டு நினைச்சு சொல்லாம போய்ட்டன்.உங்கட கை வேலையை பொறாமையோட ரசிக்கிற முதல் ஆள் நான் !

   Delete
 12. ஆஆஆஅ அஞ்சு அக்கா

  ReplyDelete
  Replies
  1. அக்கா எப்படி இருக்கீங்க ...

   Delete
  2. நாங்க அனைவரும் நலம் ஷாரனுக்கு ஸ்கூல் துவங்கியாச்சு
   இப்ப ஹைஸ்கூல் போறா ..
   நீ எப்படிம்மா இருக்கிறாய் ..ஊரில் அனைவரும் நலமா ..

   Delete
  3. oooo சூப்பர் அக்கா ...குட்டிஸ் க்கு வயிற்றுக்குல பட்டம்பூச்சி பறக்க ஆரம்பிசிடுச்சா ....


   நான் இருக்கேன் அக்கா ...,,,


   எல்லாரும் நல்லா இருக்காங்க ...ஊருக்கு போய் திரும்பி வேற ஊருக்கு வந்து கொஞ்சம் கஷ்டமா போகுது வாழ்க்கை ...

   Delete
 13. நீங்க எவ்ளோ படம் போட்டு இருக்கீங்க எல்லாத்துக்கும் தனியா தனியா கமென்ட் போட்டு உங்கள புகலனும் னு நினைக்கேன் ...,,,

  ஓகே ஸ்டார்ட் ....


  முதல்ல கார்ட் ரொம்ப அழகா இருக்கு ...உங்க கைல என்ன பட்டாலும் அது அழகா மாறிடும்...

  ReplyDelete
  Replies
  1. தனியா கமென்ட் போட்டு உங்கள புகலனும் னு நினைக்கேன் ...,,//

   யோகா அண்ணா பாத்தீங்களா என் தங்கைக்கு என் மேல எவ்ளோ பாசம்

   Delete
 14. ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் சுவையோ சுவை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா

   Delete
 15. முதலில கிரீட்டிங் கார்ட் உண்மையா அழகா இருக்கு அக்கா ....என்னடா பிரின்ட் அழகா இருக்கார் ....ரொம்ப நல்லா இருக்கார் பிள்ளையார் அப்பா ....யோகா மாமா க்கு ரொம்ப புடிச்சி இருக்குமே ...

  ReplyDelete
 16. மாங்காய் இஞ்சி குழம்பு ..மேனகாவின் குறிப்பு பார்த்து செய்தது
  இந்தாங்க நேந்திரங்கா சிப்ஸ் சுட சுட செய்தது ..:)))/////


  அக்கா இது எல்லாம் செய்தது யார் .....  ReplyDelete
  Replies
  1. அவ்வவ் :))) அண்ணா யோகா அண்ணா ..உங்க மருமகளை நீங்கதான் சரியா கணிச்சு வச்சிருக்கீங்க
   பாராட்டற மாறி பாரட்டிப்புட்டு அவ்வ்வ்வ்

   Delete
 17. அக்கா பளுபாகல் கட்டக் ல நிறைய கிடைக்கும் அக்கா ...டெஸ்டும் நல்லா இருக்கு,..போர்ட்டல் னு சொல்லுவம் ....உருளை கிழங்கும் போர்த்டலும் சேர்த்து பிரை பண்ணி சாப்பிட்ட சூப்பர் ஆஅ இருக்கும் ....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கலை ..அந்த ரெசிப்பி லிங்கில் பாருங்க காமாட்சி அம்மா நேபாளில் கிடைக்கும் பேபி பாகல்னு குறிப்பிட்டு இருக்காங்க

   உருளை சேர்த்து செய்து பார்த்து சொல்கிறேன்

   Delete
 18. அஞ்சு பழு பாகல் உன் கையாலே பண்ணினது. புதுமாதிறியா வேருவிதம் ட்ரை பண்ணுவாயென்று நினைத்தேன். எந்த விதம் செய்தாலும் ருசியாக வருகிறது. இது போட்டல் இல்லை.
  பாகற்காய் வகையைச் சேர்ந்தது. உன்பதிவு பார்த்து ஸந்தோஷம்.
  கிரீட்டிங் கார்ட் அழகாயிருக்கு. மாஇஞ்சி குழம்பு, கார்ன் இட்லி எல்லாம் சூப்பரா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க காமாட்சியம்மா ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
   இதுதான் நான் முதல் முறை பழு பாகல் பார்த்தது ..இனி வெவ்வேறு முறையில் செய்து பார்த்து அசத்தறேன்

   Delete
 19. கார்ட் ரெம்ப அழகு. சொல்லத்தேவையில்லை அஞ்சு.
  அது பாகற்காயா? பார்த்தால் வேறு மாதிரி இருக்கு.
  இட்லி மைஸ்மேல் ல(maismehl) செய்ததா? இங்கு மஞ்சள்தானே கிடைக்கும்.
  எல்லாம் நன்றாக இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்முலு ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..
   நம்ம ஏரியா லிட்டில் ஏசியா:)) எல்லா வட இந்திய வேறைட்டிசும் கிடைக்கும் ,,,நானும் முதன்முதலா இந்த வெள்ளை நிற சோள ரவை பார்த்தேன் ..நினிவுக்கு வந்தது கீதாவின் ரெசிப்பி உடனே செய்தேன் .மஞ்சள் வகையிலும் இட்லி தோசை செய்யலாம்

   Delete
 20. புக் மார்க் அண்ட் பிள்ளையார் ரொம்ப அழகா இருக்கு அஞ்சு. நாளைக்கு விநாயகர் சதுர்த்திக்கு கரெக்ட் டைமிங்.

  இஞ்சி மாங்காய் குழம்பு இது வரைக்கும் பண்ணினதில்லை. இனிமே மாங்காய் கிடைக்கும் போது பண்ணி பார்க்குறேன். பழு பாகல் இங்கே இந்தியன் ஷாப் இல் பார்த்த தில்லை. நீங்க இருக்கும் பக்கம் நெறைய்ய காய் கெடைக்கும் போல இருக்கு. இனிமே கடைக்கு போகும் போது பார்க்கணும்.

  ReplyDelete
  Replies
  1. அது ஒரு கிளிப் ஆர்ட் பார்த்து செய்தேன் கிரி .

   இன்னும் ஒரு பெரிய புல்லாங்குழல் வாசிக்கும் பிள்ளையார் செய்ய படமெல்லாம் ரெடி செய்தேன் ..டைமே இல்லை

   Delete
 21. நான் கீதா ப்ளாக் பார்த்து பூண்டு சட்னி செஞ்சு பார்த்தேன் அருமையா இருந்தது. அதே போல ரொம்ப புளிச்ச தோசை மாவுக்கும் கார்ன் மீல் சேர்த்து தோசை வார்த்தேன் க்ரிஸ்பியா புளிப்பு தெரியாமல் இருந்தது.

  அடுத்து க்ரிட்ஸ் இட்லி பண்ணனும். இங்கே எங்கயாச்சும் ஈனோ சால்ட் வாங்கி இருக்கீங்களா அஞ்சு ?

  ReplyDelete
  Replies
  1. ஓஓ இங்கே நான் ஒரு பாகிஸ்தானியர் கடைல பாத்தேனே ENO சால்ட் :)))..

   Delete
 22. பிள்ளையார் ரொம்ப அழகா இருக்கார் ஏஞ்சலின்.குறிப்பை செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிப்பா.....

  ReplyDelete
 23. சூப்பர் சூப்பராக சமைத்து அசத்துறீங்க,அருமை.

  ReplyDelete
 24. அஞ்சு! அழகா பிள்ளையாரை பிடிச்சு வைச்சிருக்கீங்க:) அவரோடு பட்டாம்பூச்சியும் நல்லாவே படபடக்குது;))
  இரண்டுமே சூப்பர்! அதுசரி அந்த வண்ணத்துப்பூச்சி இறக்கை beehive ரெக்னிக் தானே. அதுவும் நல்ல அளவா அழகா இருக்கு. டீ பெட்டியிலேயே கார்ட். ம்.ம்:) அதுவும் அஞ்சுவால்தால் முடியும். வாழ்த்துக்கள்!!!

  ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் அத்தனையையும் நானும் ரசித்தேன்..

  மாங்காய் இஞ்சி கேள்விப்பட்டதுண்டு. இதுவரை (ருசி) பார்க்கவுமில்லை:)
  பழுபாகல் அப்டீன்னா என்ன? சாதா பாகல் போலவே வெட்டியபின் இருக்கே. ருசியும் அதேதானா?
  க்ரிட்ஸ் இட்லி நல்லா வந்திருக்கே;)) செய்து பார்க்கணும்.
  நேந்திரங்கா சிப்ஸ் ஓ சூப்பரா இருக்கு. நான் பொரிச்சா அடுத்த அரைமணி நேரத்தில் இஸ்க்கென்று போயிடுது:( சரியாவே வாரதில்லை.

  எல்லாமே நல்லா இருக்கு அஞ்சு. வாழ்த்துக்கள்:)

  ReplyDelete