அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/22/12

மா இஞ்சி தொக்கு ,ரவா கிச்சடி

மா இஞ்சி தொக்கு 

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/21857121                                                                           
எங்க சிட்டியில் ஒரு கடையில் மட்டும் அனைத்து வட இந்திய 
பாகிஸ்தானிய உணவு வகைகள் கிடைக்கும் ..
மேனகா மா இஞ்சி குழம்பு போட்டபின் என் கணவரை 
மா இஞ்சி வாங்கி வர சொன்னேன் வாங்கி வந்தார் !!!!!!!!!!!! 
AWWWWWWWWW ...ஒரு கிலோ :))
கொஞ்சத்தை ஊறுகாயாகவும் மீதியை தொக்கு குழம்பு 
என செய்தேன் .

தொக்கு செய்ய தேவையான பொருட்கள் 
அரைக்க 
மா இஞ்சி ...தோல் நீக்கி சிறிய துண்டாக துருவியது ..ஒரு கப் 
சிவப்பு வற்றல் மிளகாய்    .... நான்கு 
உப்பு ..... தேவையான அளவு 
புளி... சிறிய கோலி அளவு .
மிளகு ,சீரகம் ...தலா அரைத்தேக்கரண்டி .

தாளிக்க 
நல்லெண்ணெய் ...ஒரு கரண்டி 
கடுகு ...ஒரு தேக்கரண்டி 
உளுந்து ...ஒருதேக்கரண்டி 
பெருங்காயத்தூள் ...ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை ...சிறிதளவு 
அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது நீர் சேர்த்து மையாக 
மிக்சியில் அரைக்கவும் ..
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து 
பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து அதில் அரைத்த 
விழுதை சேர்க்கவும் மிதமான தீயில் அடுப்பை வைத்து 
எண்ணெய் பிரிந்து வந்தபின் இறக்கவும் ..அருமையான தொக்கு 
,தயிர் சாதம் பொங்கல்,ரவா கிச்சடி  போன்றவற்றிற்கு 
நல்ல சைட் டிஷ் ..

ரவா கிச்சடி..
                                                                                     
வறுத்தSOOJI ரவை ....ஒரு கப் 
பூண்டு மற்றும் மா இஞ்சி ,
சேர்த்து அரைத்த பேஸ்ட் ...இரண்டு தேக்கரண்டி 
மீடியம் அளவு வெங்காயம் ....ஒன்று நறுக்கியது 
பச்சை மிளகாய் ...இரண்டு 
தக்காளி...ஒன்று .நறுக்கியது 
கடுகு ,ஏலக்காய்,பட்டை ...தேவையான அளவு 
கறிவேப்பிலை .கொத்தமல்லி இலை..தேவையான அளவு 
மஞ்சள் தூள் ...ஒரு தேக்கரண்டி 
உப்பு ....தேவையான அளவு 
நீர் ..இரண்டு கப் 
எலுமிச்சை சாறு ..ஒரு தேக்கரண்டி ..
தாளிக்க ...ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் 
இறக்கும் போது சேர்க்க ஒரு ஸ்பூன் நெய் 
அலங்கரிக்க முந்திரி ,பாதம் பருப்பு ...OPTIONAL 

செய்முறை ..

வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு ,ஏலக்காய்,
பட்டை ஆகியவற்றை  வறுக்கவும் அத்துடன் வெங்காயம் 
,பச்சை மிளகாய் ,இஞ்சி  பூண்டு விழுது .தக்காளி ,மஞ்சள்தூள்
 உப்பு ஆகியவற்றை வதக்கவும் ..பின்பு இரண்டு கப் நீர் 
சேர்த்து கொதிக்கவிடவும் 
கொதி வந்ததும் ,,,,,இப்பதான் முக்கியமான இடம் ... கணவரை 
வறுத்த ரவாவை கொஞ்சம் கொஞ்சமாக வாணலியில்கொட்ட 
சொல்லவும் அந்நேரம் மனைவியர் மெதுவாக கரண்டியால் 
ரவையை கிளறனும் ..(எங்க வீட்டில் நான் எப்பவும் ரவையை 
கொட்டுவேன் கணவர்தான் கிளறுவார் ..நாம ரிஸ்க் எடுக்க மாட்டோமே :))
சட்டென்று ஒரு மூடி போட்டு மூடிடனும் இல்லைஎன்றா கிச்சடி தெளித்து ஹோகையாதான் ...கலக்குபவர் முகம் மற்றும் உடைகளை  
சொன்னேன் :))
பிறகு இரண்டு மூன்று நிமிடத்தில் அடுப்பில் இருந்து இறக்கவும் .

இறக்கும்போது எலுமிச்சை சாறு பிழியவும் ..விருப்பமானால் 
நெய் ஸ்பூனால் எடுத்து   ஊற்றியும் பரிமாறலாம் ..
............................................................
இதற்கு முந்தைய பதிவு குடம்புளி சேர்த்து செய்த மாசி மீன் குழம்பு   http://kaagidhapookal.blogspot.co.uk/2012/09/blog-post_22.html

66 comments:

 1. மா இஞ்சி ரெசிபி போட்டு கலக்குறீங்க..வாசனை இங்க வரைக்கும் வருது...

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்லாட்டி எனக்கு மா இஞ்சி பற்றி ஒண்ணுமே தெரிஞ்சிருக்காது மேனகா ..உங்களுக்குத்தான் முதலில் நன்றி சொல்லணும்
   இங்கே வந்த நாளில் இருந்து பார்கிறேன் ஆனா ரெசிப்பி தெரியாததால் செய்ததில்லை

   Delete
 2. ஹையோ அஞ்சு! இதென்னதிது ஒரே மாஇஞ்சி ஐட்டமா போட்டு என்னை கவலைக் கடலில் தள்ளுறீங்க. வை திஸ் கொலைவெறி:))))))
  அதுக்கில்லை இந்த இஞ்சியை இங்கினை எங்கை வாங்குறதென்னே தெரியலை. அவ்வ்வ்வ்வ்வ்:(

  எதுக்கு றிஸ்க். அஞ்சு! பேசாம எனக்கொரு கிலோ மாஇஞ்சி வாங்கி பார்சல் ப்ளீஸ்;))))

  மாஇஞ்சி தொக்கு குறிப்பு ரொம்ப சுலபமா இருக்கே. எத்தினை நாளுக்கு கெட்டுபோகாதபடி வைச்சிருக்க முடியும்? மாஇஞ்சி கிடைச்சா... ம்ஹும் கிடைச்சிட்டாலும்..... நீங்க அனுப்பி எனக்கு கிடைச்சுடும் அதை அப்பிடியே தொக்கு பண்ணு வைச்சுடலாமே அதான் கேட்டேன்:))

  ReplyDelete
  Replies
  1. தொக்கு பண்ணி வையுங்க.. மீ கம்மிங்யா:))

   Delete
  2. மாஇஞ்சி தொக்கு குறிப்பு ரொம்ப சுலபமா இருக்கே. எத்தினை நாளுக்கு கெட்டுபோகாதபடி வைச்சிருக்க முடியும்//

   ப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை வைக்கலாம்னு சொன்னாங்க ஒரு ஆன்டி

   Delete
  3. //

   தொக்கு பண்ணி வையுங்க.. மீ கம்மிங்யா:))//

   அஞ்சு அந்த மிளகாய் கூட ரெண்டு கிலோ இருக்குன்னு சொன்னீங்களே அதுல ஒரு பெரிய கை அளவு போட்டு அரைச்சு ஸ்பெஷல் தொக்கு பூசுக்கு பண்ணி வையுங்க பூஸ் இஸ் கம்மிங் யா :))

   Delete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எனக்கு யங்மூன் தருவா ..ஸ்பெஷல் தொக்கு:))

   Delete
 3. கிச்சடி குறிப்பு ப்ரமாதம். அதிலையும்
  // (எங்க வீட்டில் நான் எப்பவும் ரவையை கொட்டுவேன் கணவர்தான் கிளறுவார் ..நாம ரிஸ்க் எடுக்க மாட்டோமே :)) //
  இப்படி அவங்களையும் சமையலில் கலந்துக்க வைச்சு சமையல் பண்ணி சாப்பிடுவதும் ஒரு ஆனந்தமே. ஆக கிச்சடிக்கு கிறடிற் உங்க கணவருக்கே:))) எங்களின் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க!!!
  அருமையான பகிர்வு! மிக்க நன்றி அஞ்சு:)

  ReplyDelete
  Replies
  1. நான் எப்பவும் ரவையை கொட்டுவேன் கணவர்தான் கிளறுவார் ..நாம ரிஸ்க் எடுக்க மாட்டோமே :)) //

   :))) ஹார்டஸ்ட் வேலை எல்லாம் நான் செய்ய மாட்டேன்

   Delete
  2. ஓ புரியுது புரியுது.. தெளிவாப் புரியுது:))) எங்கிட்டயேவா:))...
   ஹையோ கறுப்பசாமீஈஈஈஈஈஈஈஈஈ என்னைக் காப்பாத்துங்கோ:)).... சே..கீரியை வேற காணல்ல:) நம்மளுக்கு சப்போர்ட் பண்ணாட்டிலும், கீரி இங்கின இருக்கிறா என்றால் ஒரு தென்பு அவ்ளோதான்ன்ன்:))

   Delete
  3. //சே..கீரியை வேற காணல்ல:) நம்மளுக்கு சப்போர்ட் பண்ணாட்டிலும், கீரி இங்கின இருக்கிறா என்றால் ஒரு தென்பு அவ்ளோதான்ன்ன்:))//

   பூஸ் இப்போ என்ன சொல்லுறாங்க என்னைய நல்லவுங்க ன்னு சொல்லுறாங்களா இல்லே திட்டுறாங்களா ங்கே ங்கே ங்கே :))

   Delete
  4. ஹா....ஹா..ஹா....:)))

   Delete
 4. ஆஆஆஆஆஆ மீ லாண்டட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்:))

  அதாரது எனக்கு முன்னுக்கு வந்து மறைச்சுக்கொண்டு நிக்கிறது:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒ ய்ங்மூனோ.... மா இஞ்சி எண்டதும் எல்லோரும் கீயூ வரிசையில:))) அடிபடுகினம்போல:)).. நில்லுங்க வாறன்...:)).

  ReplyDelete
 5. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீஈஈஈஈ:)) இந்த மாஇஞ்சி என்றால் என்ன? மாங்காயும் இஞ்சியும் சேர்த்து அரைத்த பேஸ்ட்டோ? எனக்குப் புரியல்ல முருகா:)

  ReplyDelete
  Replies
  1. மகி கிளி பேச்சு மயிலாட்டம் இதெல்லாம் கொஞ்சம் விட்டு இங்கே வாங்க

   Delete
  2. எதுக்கூஊஊஊஊஊஊ:)) அவ கொய்யாப்பயம் சாப்பிடுறா:) கொயப்பாதீங்க:).. பிறகு புரக்கேறிடுமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
  3. //இந்த மாஇஞ்சி என்றால் என்ன? மாங்காயும் இஞ்சியும் சேர்த்து அரைத்த பேஸ்ட்டோ? எனக்குப் புரியல்ல முருகா:)//

   நான் இருந்தா தெம்பு ன்னு பூஸ் மேல சொல்லி இருந்தாலும் என்னால முடியல ஜாமிஈஈ முடியல்ல்ல்லே. அஞ்சு நான் இதுக்கு சிரிக்க கூடாது ஆனாலும் பூசுன்றதால சிரிக்காம இருக்கவும் முடியல என்ன பண்ண:))

   Delete
  4. அது வந்து அதிரா,மா இஞ்சி என்றால் ..............................மாஆஆஆஆபெரும் இஞ்சி!(இஞ்சியில பெரிய சைஸ்!)

   Delete
  5. ஹா..ஹா..ஹா... யோகா அண்ணன்.. நல்ல விளக்கம்...
   மா= பெரியது. இன்னொரு கருத்தும் இருக்கு.. மா = குதிரை எல்லோ?:).

   இப்போ கீரி சிரிக்கிறாவோ சிரிக்கேல்லையோ?:) எனக்கு நித்திரை போச்ச்ச்ச்ச்சேஏஏஏஏஏஏஏஏஏ:)).

   Delete
 6. //(எங்க வீட்டில் நான் எப்பவும் ரவையை
  கொட்டுவேன் கணவர்தான் கிளறுவார் ..நாம ரிஸ்க் எடுக்க மாட்டோமே :))//

  அதானே பார்த்தேன்ன்.. ரவா கிச்சடி இவ்ளோ நல்லா கிண்டியிருக்கே... இது உண்மையிலயே அஞ்சுதான் கிண்டினாவோ:)) என சந்தேகப் படுமுன்... நல்லவேளை சொல்லிட்டீங்க:)).. படம் பார்த்தாலே எங்களுக்கு மனசில பல்லி சொல்லிடுமில்ல:)).

  ReplyDelete
  Replies
  1. நானும் அடிக்கடி செய்ய மாட்டேன் கிச்சடி உப்புமா எல்லாம் ..இந்த இஞ்சி தொக்கு சாப்பிட மெய்ன் டிஷ் வேணுமே அதான் கிச்சடி செய்தேன் எப்டி என் ஐடியா :))

   Delete
  2. //படம் பார்த்தாலே எங்களுக்கு மனசில பல்லி சொல்லிடுமில்ல:)).//

   படம் பார்த்தா ஏன் பூசுக்கு மனசில பல்லி டாகிங் ?

   Delete
  3. எங்க வீட்டில் நான் எப்பவும் ரவையை
   கொட்டுவேன் கணவர்தான் கிளறுவார்.////சரி,சரி!!!!(ஏன்,உங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறது,ரஸ்க் சாப்புடுற மாதிரி இல்லியா?ஹி!ஹி!ஹி!!!)

   Delete
  4. அவ்வ்:))) ...நான் ஒரு சயன்டிஸ்ட் முதலில் ரிஸ்கின் விளைவுகளை பார்த்த பின் தான் அடுத்த ஸ்டேப் :))

   Delete
 7. கிச்சடி சூப்பர்... ஆனா இதுக்கு சரியான தண்ணி அளவு இருக்கோணும் இல்லையெனில் பிழைச்சிடும் என நினைக்கிறேன்ன்ன்... எனக்கு றவை செய்யும் எல்லா அயிட்டங்களுமே பிடிக்கும்.... உப்புமா ரொம்பப் பிடிக்கும்.... ஆனாப் பாருங்கோ எனக்கு மட்டும்தேன்ன்ன்ன் பிடிக்கும் வீட்டில:(((.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதீஸ் இங்கே நிரு பிராண்ட் சொஜ்ஜி ரவை கிடைக்கும் ஒரு கப் ரவைக்கு ரெண்டு கப் தண்ணீ போடுவேன் ..எனக்கு டிரையா இருந்தா நெஞ்சு அடைப்பது போலிருக்கும் அதா நீர் அளவு கொஞ்சம் அதிகமாவே சேர்ப்பேன்

   Delete
  2. நான்.. உப்புமாவுக்கு.. ஒரு கப்புக்கு 1.5 நல்ல கொதிநீர் விடுவேன்... எனக்கும் ட்ரை பிடிக்காது:)).. ஆனா பீன்ஸ், பீஸ், கரட், கோன்..கடலைப்பருப்பு நிறைய வெங்காயம் இப்படிச் சேர்ப்பது பிடிக்கும்.

   Delete
 8. //கொதி வந்ததும் ,,,,,இப்பதான் முக்கியமான இடம் ... கணவரை
  வறுத்த ரவாவை கொஞ்சம் கொஞ்சமாக வாணலியில்கொட்ட
  சொல்லவும் ///

  அதாவது இங்கு “கொதி” என்பதன் அர்த்தம் மனைவிக்கு “கோபம்” வந்ததும்:))).. அப்பூடித்தானே சொல்றீங்க?:))..

  மனைவிக்கு கோபம் வந்தால், உடனே கணவன் வாணலியில் றவையைக் கொட்டினால் கோபம் தீர்ந்திடுமோ?:))) ஹையோ என் நித்திரை போச்சே:))).. அஞ்ஞ்ஞ்ஞசூஊஊஊஊஊஊஊஊஊஉ கிளியர் மை டவுட்ட்ட்ட்ட்ட்:))). எங்க மஞ்சள் பூ, லண்டன் அகரகர் புகழ் ஐஸ்வர்யா:)(நான் கீரியைச் சொல்லல்ல:)) ஆரையும் காணம்:))...

  ஐயா குலசாமீஈஈஈஈஈஈஈஈ என்னைக் காப்பாத்துங்கோ:)).. மீ ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)).

  ReplyDelete
  Replies
  1. கொதி//அப்படீன்னா கோபம் என்று அர்த்தமா :)))))))
   அவ்வவ் ஓகே நீர் கொதிததும்னு எழுதிருக்கனுமோ ...கிரி ஜெல்ப் ப்ளீஸ் :))
   ஐயா குலசாமீஈஈஈஈஈஈஈஈ என்னைக் காப்பாத்துங்கோ:))

   WHY WHAT HAPPENED TO Mr,Kailash ,vikki ,krish

   Delete
  2. ஹா..ஹா..ஹ.. இலங்கையில் கோபக்காரரைக் கொதிக்காரர் எனச் சொல்லுவினம்... அவருக்கு கொதி (கோபம்)வந்திட்டுது என்பினம்:))...

   அபச்சாரம்.. அபச்சாரம்:))) எதுக்கு எதிர்ப்பாலாரின் பெயரெல்லாம் அஞ்சு உச்சரிக்கிறா:))))... ஹையோ மீ சுவீட் 16 எல்லோ..:)) ஷை ஷையா வருதூஊஊஊஊஉ:))

   Delete
  3. //மனைவிக்கு கோபம் வந்தால், உடனே கணவன் வாணலியில் றவையைக் கொட்டினால் கோபம் தீர்ந்திடுமோ?:))) //

   பூஸ் அடுத்த தடவை உங்களுக்கு "கொதி " வந்ததும் டாக்டர் எ ரவைய கொட்டி கிளற சொல்லிட்டு பாருங்க உங்க கொதி போயிடிச்சா அப்படின்னு:)) இப்போ டவுட்டு கிளியர் ஆயிடிச்சா போய் நிம்மதியா படுத்து தூங்குங்க BTW என்னைய ஐஸ்வர்யா அப்படின்னு எல்லாம் சொல்லாதீங்க அபிஷேக் தேடி ஓடி வந்திட போறார் :))

   Delete
  4. //ஓகே நீர் கொதிததும்னு எழுதிருக்கனுமோ ...கிரி ஜெல்ப் ப்ளீஸ் :))//

   அஞ்சு கொதி வந்ததும் அப்படின்னா எங்களுக்கு புரியுது இந்த நாட்டி பூஸ் தான் உங்கள கொழப்பனுமுன்னே இந்த மாதிரி ஜாமிஈஈ எல்லாரையும் கூப்பிட்டு கொழப்புறாங்க :))

   //WHY WHAT HAPPENED TO Mr,Kailash ,vikki ,krish //

   கந்தனுக்கும் வள்ளிக்கும் இன்னும் நேர்த்தி கடனை முடிக்கல இல்லே அதுதான் இப்போ டெக்னிக்கா குல சாமீன்னு பூஸ் சமாளிப்பு எந்த சாமியும் சண்டைக்கு வர மாட்டாங்க இல்லே :))

   Delete
  5. அதுதானே கிரி கொஞ்ச நாள் முன்னாள் சிவ பெருமானுக்கும் மேடம் நேர்ந்துக்கிட்டாங்க ..நான் வார்ன் செய்தேன் ஸ்ஸ் பா ...பூ அவர் கழுத்தில் இருக்குன்னு

   Delete
 9. //நான் எப்பவும் ரவையை கொட்டுவேன் கணவர்தான் கிளறுவார் ..நாம ரிஸ்க் எடுக்க மாட்டோமே :)) //

  ஆஹா எங்க வீட்டுல இந்த மாதிரி கிச்சடிக்கு ரவை கொட்டனுமுன்னு கேட்டா தலை தெறிக்க ஓடுவாங்க ஏன்னா உப்புமா ரவை ஐடெம் எதுவும் புடிக்காது. கேசரி மட்டும் தான் ரவையில் பண்ண முடியும் ரவை இட்லி கூட கொஞ்சம் கஷ்டம் தான் !

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா !!! செய்றதை சாப்பிடாட்டி மாட்டா அரிசி உடைச்சு ரெகுலரா கஞ்சி போட்ருவேன் அதனால் எங்க வீட்ல வெண்பொங்கல் கிச்சடி உப்புமா இதெல்லாம் ப்ரேக்பாஸ்ட் மென்யூ

   Delete
 10. தொக்கு அண்ட் ரவா கிச்சடி சூப்பர் அஞ்சு. நான் பூஸ் சொன்னது போல காய் எல்லாம் போட்டு கிச்சடி பண்ணுவேன். உங்க மா இஞ்சி பார்த்ததில் இருந்து வாங்கி பண்ணிடனுமுன்னு ஆசையா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. செய்துபாருங்க கிரி இந்த மா இஞ்சி உடலுக்கும் மிக நல்லதாம்

   Delete
 11. ஆஆஆஆஆஆஆஆஆஅ அஞ்சு அக்காஆஅ ஆஆஆஆஆஆஆஅ கிரி அக்கா அதிரா அக்கா ....அல்லாருக்கும் வைக்கம்.....எப்புரி இக்குரிங்கோ ....  அஞ்சு அக்கா பதிவு படிசிபோட்டு வாறன் ...

  ReplyDelete
  Replies
  1. ஆஅ படிக்கபோறியாம்மா...ப ப பயம்மாருக்கே !!

   Delete
 12. என் கணவரை
  மா இஞ்சி வாங்கி வர சொன்னேன் வாங்கி வந்தார் !!!!!!!!!!!!
  AWWWWWWWWW ...ஒரு கிலோ :))/////


  அத்தான் விவரமாதான் வாங்கி வந்திருப்பவர் அக்கா .... உங்களின்ற ட்ரயல் கே அரை கிலோ போயிடுமே ..

  ReplyDelete
  Replies
  1. ஆமாமா நமக்குத்(கலை) தான் டீ கூட ஊத்தத் தெரியாதே????

   Delete
  2. பரவாயில்லை அண்ணா :)) குருவைப்போல சிஷ்யை...
   அதுக்கு தான் ட்ரைனிங் தர நான் கிரில்லாம் இருக்கோம்ல :))

   Delete
 13. எங்க வீட்டில் நான் எப்பவும் ரவையை
  கொட்டுவேன் கணவர்தான் கிளறுவார் ..நாம ரிஸ்க் எடுக்க மாட்டோமே :))////  கிரி அக்கா பார்த்து சமையல் குறிப்பு படிக்கன் படிக்கன் ன்னு சொல்லி நல்லா படிச்சி இருகீங்க ...

  ReplyDelete
 14. காலை வணக்கம்,அஞ்சு!மா இஞ்சி வாங்கிக் கொடுத்ததுமில்லாமல்,கிண்டலையும் தாங்கும் அந்த நல்ல மைத்துனர் வாழ்க,ஹ!ஹ!ஹா!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. ஹஹா மாமா ஆஅ எப்படி இருக்கீங்க ...

   உங்க மைத்துனரின் ஹெட் ரைடிங் அது ...என்ன செய்ய..

   Delete
  2. அவ்வவ் !! இப்பெல்லாம் கலைக்கு இன்டர்நெட் ப்ராப்ளம் இல்லையா அண்ணா யோகா அண்ணா ..??

   Delete
  3. அது,ஞாயித்துக் கிழமையில ஆபீஸ் போயி டைம் பாஸ் பண்ணுறாங்க!

   Delete
 15. எங்க வீட்டில் நான் எப்பவும் ரவையை
  கொட்டுவேன் கணவர்தான் கிளறுவார் ..நாம ரிஸ்க் எடுக்க மாட்டோமே :))////  கிரி அக்கா பார்த்து சமையல் குறிப்பு படிக்கன் படிக்கன் ன்னு சொல்லி நல்லா படிச்சி இருகீங்க ...

  ReplyDelete
  Replies
  1. மேடம் இதெல்லாம் நீங்களும் குறிப்பெடுத்துக்கலாம் வருங்காலத்தில் பயன்படும் :))

   Delete
 16. இப்பிடியெல்லாம் வெறுப்பேத்தக்கூடாது ஏஞ்சல் சொல்லிட்டன்.சாப்பாடு சொல்லி வெறுப்பேத்துறதோட இந்தமுறை இன்னும் எக்ஸ்ராவா கணவராம்....இந்த அயிட்டத்துக்கு நான் எங்கே போவேன் .......அதிரான்ரா முருகன் எல்லாரும் வாங்கோ.பதில் சொல்லுங்கோ !

  ReplyDelete
  Replies
  1. என்னாதூஊஊஊஊஊஊ நம்மட முருகனைக் கூப்பிடுறீங்களோ? அவர் ஏற்கனவே ரெண்டோட:) நிமிர முடியாமல் தள்ளாடிட்டிருக்கிறாராமே:)..... ஹையோ..ஹையோ... ஹேமாவுக்கு என்னாச்சூஊஊஊஊஊஊ?:))

   Delete
  2. வாங்க ஹேமா :)) ஹெல்த் அண்ட் சேப்ட்டி முக்கியமாச்சே நமக்கு அதான் கணவரை ரவா கிண்ட சொல்லிடுவேன்

   Delete
  3. நம்மட முருகனைக் கூப்பிடுறீங்களோ? அவர் ஏற்கனவே ரெண்டோட:) நிமிர முடியாமல் தள்ளாடிட்டிருக்கிறாராமே://

   ஆமா இல்லாமையா பின்னே ..சிலர் வள்ளிக்கு மட்டும் தங்க வளையல் போடறேன்னு வேண்டிக்கறாங்க :)) அப்ப தெய்வானை சும்மா இருப்பாங்களா .....பாவம்தான் லார்ட் முருகன் நிலைமை !!!!

   Delete
 17. இரண்டு ரெசிப்பியுமே பார்க்க சூப்பராக இருக்கு.சமைச்சு அசத்துறீங்க ஏஞ்சலின்!

  ReplyDelete
 18. அக்கா..அந்த ரவா கிச்சடி..நல்லா இருக்கும் போல தெரியுதே...தம்பிக்கு ஒரு பிளேட் பார்சல் அனுப்பி வைங்க! :)

  டிங் டாங் கூரியர்ல பார்சலை அனுப்பிவைங்க அப்பத்தான் சீக்கிரமா வந்து சேரும் ஹி ஹி ஹி!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா உங்களுக்கு இல்லாததா :)) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தம்பி

   Delete
 19. மிக அருமையான சமையல்......பகிர்வுக்கு நன்றி.....

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க பிரியா

   Delete
 20. உங்கள் பகிர்வுக்கு நன்றி.... இன்னும் நிறைய டிப்ஸ் எழுதுங்க...வாழ்த்துக்கள்...

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

   Delete
 21. இரண்டையும் வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... மிக்க நன்றிங்க...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க தனபாலன்

   Delete
 22. தொக்கு மிகவும் பிடித்து இருந்தது செய்து பார்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

   Delete
 23. கிச்சடி இன்னும் வாயில் எச்சில் ஊறவைக்கின்றது அஞ்சலின் அக்காள்§ சென்னையில் அதிகம் சாப்பிடுவது இதுதான் சப்பாத்தி இல்லாத போது!ஹீ

  ReplyDelete