அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/28/12

வற்றல் குழம்பு ,அஸ்பாரகஸ் /கேரட் பொரியல் &&&& சூப்சுக்காங்காய் aka மினுக்கு வற்றல் குழம்பு 


                                                                                                                    
                                                                                                                 

கோபு  அண்ணா அவர்களின் இந்த பின்னூட்டம் பார்த்ததும் 
செய்து பார்த்த வற்றல் குழம்பு 


//துமுட்டிக்காய் வற்றல் [மினுக்கு வற்றல்] என்று ஒன்று 

அதை இரண்டாக நறுக்கினால் ஒரு ஜோடி ஜிமிக்கி போல 
அழகாக இருக்கும்.

வறுத்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

அதைப்போட்டு வற்றல் குழம்பு வைத்தால் படு சூப்பராக 
சுவையாக இருக்கும். //

மினுக்கு  //மிதுக்கு // சுக்காங்காய் இதில் நான் எதை செய்தேன் என்று 
எனக்கே தெரியாத பட்சத்தில் நான் வெறும் வற்றல் குழம்பு என்றே 
தலைப்பை மாற்றி விட்டேன் 

அஸ்பாரகஸ் /கேரட் பொரியல்
                                                                                   
                                                                                      
தேவையான பொருட்கள் 

அஸ்பாரகஸ்.spears.. ஒரு கட்டு ....சிறியதாக நறுக்கி கொள்ளவும் 
(சுமார் பத்து பனிரெண்டு தண்டுகள் இருக்கும் )
காரட் .......  சிறிய துண்டுகளாக அரிந்தது ....ஒன்று 
வெங்காயம் .... மீடியம் அளவு அரிந்தது.... ஒன்று 
பச்சை மிளகாய் ...... ஒன்று 
தேங்காய் துருவியது ......... ஒரு மேஜைக்கரண்டி 
உப்பு         ..................தேவையான அளவு 

தாளிக்க 
கடுகு ,உளுந்து .....தலா ஒரு தேக்கரண்டி 
எண்ணெய் ......ஒரு ஸ்பூன்  அல்லது தாளிக்க தேவையான அளவு 
கறிவேப்பிலை ..... ஒரு கொத்து 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி 
கடுகு உளுந்து ,வெங்காயம்,கறிவேப்பிலை  பச்சை மிளகாய் 
தாளிக்கவும் பிறகு வெட்டி வைத்துள்ள அஸ்பாரகஸ் ,காரட் 
இவற்றை தாளிக்கவும் அடுப்பை சிம்(இல்)ரன் செய்யவும் .
உப்பு சேர்த்து லேசாக நீர் தெளித்து ஒரு மூடி போட்டு வைக்கவும் 
உப்பு வெங்காயம் தாளிக்கும்போதே சேர்ப்பது நல்லது .
சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து லேசாக கிளறவும் இப்பவே 
வெந்திருக்கும் ...அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி 
மீண்டும் அடிபிடிக்காமல் கிளறவும் .இரண்டு நிமிடங்கள் 
வைத்த பின் அடுப்பில் இருந்து இறக்கவும் ..
சுவையான ஹெல்தி அஸ்பாரகஸ் ,கேரட் பொரியல்  தயார் ..
வற்றல் குழம்புடன் நல்ல டேஸ்டாக இருக்கும் .

அடுத்தது சூப் 
                                                                                       
தேவையான பொருட்கள் 
(இது ஒரு நபர் சாப்பிடும் அளவு சூப் செய்ய  )
அஸ்பாரகஸ் தண்டு ..... நான்கு 
கேரட் ..........அரைத்துண்டு 
உருளைக்கிழங்கு ......சிறிய அளவில் ஒன்று 
சிறு துண்டு வெங்காயம் 
லீக்ஸ் ............துண்டாக நறுக்கியது ........கால் கப் 
Maggi veg soup cube .......ஒன்று 
மிளகுதூள் ....ஒரு தேக்கரண்டி ..
மிளகுதூள் தவிர்த்து அனைத்தையும் ஒன்றாக அடி கனமான 
பாத்திரத்தில் நீர் தேவையான அளவு சேர்த்து மூடி போட்டு வேக 
விடவும் ..ஆறேழு நிமிடங்களில் வெந்து விடும் 
பிறகு potato masher வைத்து வெந்த  காய்களை நன்கு மசிக்கவும் 
பிறகு மிளகுதூள் தூவி பரிமாறவும் ..சூப் கியூபில் உப்பு இருப்பதால் 
நாம் சேர்க்க தேவையில்லை ..விருப்பமானால் சூப்பில் சிறிது 
Quinoa  சேர்த்தும் வேக வைக்கலாம் .
அஸ்பாரகஸ் உடலுக்கு மிகவும் நல்லது அதேபோல்தான் லீக்சும் 
லீக்ஸ் உடலில் உள்ள கழிவுகளை(DETOX) நீக்குமாம் .
Quinoa  ......holland and barrett   ,Tesco இங்கு கிடைக்கின்றது 
   Quinoa  என்பது தினை ...எங்க வீட்டில் லவ் பேர்ட்சுக்கு தினை 
நாட்டு மருந்து கடைகளில் வாங்கி உணவாக தந்திருக்கிறோம் ..
தினையில் பல நல்ல சத்துக்கள் இருக்கு..சென்னையில் காதி
பவனிலும் மாவாக கிடைகிறது ..இங்கே வெளிநாடுகளிலும் 
கிடைகிறது அரைத்து வைத்ததை சப்பாத்திமாவு  பிசையும்போது 
ஒரு அரைக்கப் இதையும் சேர்த்து சப்பாத்தியாக சுட்டு சாப்பிடலாம்  .
thanks Google.for the images       ....
                                                                 ASPARAGUS 
                                                                               Quinoa 
                                                                                 
                                                                         Leeks
                                                                                 
............................................................................................................................

                                                                                                 
           .................................................................................................................................                                                                    


this is for yoga anna :))  அண்ணா நாங்க இதைதான் கொடுக்கா புளி 
or கொர்கலிகாஎன்று சொல்வோம் ...
இதை பற்றி நெட்டில் தேடப்போக .. பழங்கள் பற்றின வலைபூ கிடைத்தது 
 http://fruuits.blogspot.co.uk/2009/06/scientific-synonym-pithecellobium-dulce.htmlஇதன் விதைகளை பிளந்தால் குருத்து ஒரு பக்கம் இருக்கும் 
அதை வைத்து பாசா அல்லது ஃபெயலான்னு சிறு வயதில் 
விளையாடியிருக்கோம் :))  விளையாட்டு பற்றி என் தங்கை 
மகி சரியான விளக்கம் தருவா .:)))

                                                                                    

********************************************************************************************************

101 comments:

 1. அய்!!!பதிவு!நான் தான் முதல்!!!!!!!!!!!!!படிப்போம்.

  ReplyDelete
  Replies
  1. ஆஅ அண்ணா ..பூசார் வருமுன் உங்களுக்கு தான் எல்லாமே

   Delete
 2. அடுப்பை சிம்(இல்)ரன் செய்யவும்.////என்னது,இது "சிம்ரன்" எல்லாம் வர்றாங்க?ஹி!ஹி!ஹி!!!

  ReplyDelete
  Replies
  1. இருங்க இருங்க ,,உங்க பொண்ணு அன்ட் உங்க மருமக வருவாங்க அப்படியே அண்ணிகிட்ட இந்த பின்னூட்டத்தை அனுப்பிட சொல்றேன்

   Delete
  2. அவ்வ்வ்வ்வ் மாமா ...சிமரன் ஆஆஆஆஆஆஅ ....இருங்கோ கருக்கு மட்டை காத்து இருக்கு ...
   அத்தை கிட்ட சொல்லி கொடுக்கிறேன் ...

   Delete


  3. ஹப்பாடி சிம்ரன் பின்னூட்டம் உங்க கண்ணில் படனும்னு வெய்ட் செஞ்சுக்கிட்டே இருந்தேன் ..வெற்றி வெற்றி :))

   Delete
 3. this is for yoga anna :)) அண்ணா நாங்க இதைதான் கொடுக்கா புளி
  or கொர்கலிகாஎன்று சொல்வோம் ...///நாங்கள் கூட இதைத்தான் சொல்வோம்!

  ReplyDelete
  Replies
  1. யோகா அண்ணன் வடிவாப் பாருங்கோ.. இதுதான் கொழும்பில் கிடைக்கும் கொறுக்காப்புளியோ?

   Delete
  2. அஞ்சு.... முன்பு ஹைஸ் அண்ணன் படம் லிங் போட்டவர் அறுசுவையில் கொறுக்காபுளி, வட்ட வட்டமா குட்டிப் பூசனிபோல இருந்துது.. இது வேறை எதையோ சொல்றீங்க?

   Delete
  3. மியாவ் அந்த குட்டி வட்டபுளி குடம்புளி ஸ்ரீலங்கன் கொரக்கா அந்த படம் மாசி மீன் குழம்பு ரேசிப்பில இருக்கு ..இது உரிச்சி அப்படியே சாப்பிடலாம் லிங்க் போய் பாருங்க

   Delete
  4. வடிவாப் பாத்துத் தான் சொன்னனான்!அதோட கோணல் புளி எண்டும் சொல்லுவம்!பாருங்கோ,கோணல்/மாணலா இருக்கெல்லோ?

   Delete
  5. கொசுறு;;;தமிழ் ஆக்கள் அதிகம் குழம்புக்கு பாவிக்கிறேல்ல!சி........... ஆக்கள் தான் பாவிப்பினம்!

   Delete
  6. அண்ணா எனக்கு ஒரு கை குறையுதுன்னு நினைச்சேன் நன்றி ..மியாவ் அண்ணா சொல்றார் கேட்டுக்கணும் நோ குறுக் கேள்வி :))

   Delete
  7. தங்கை தடுமாருரர் எண்டால் அண்ணன் அங்கே தாங்கி பிடிப்பார் அல்லோ ...

   Delete
 4. Replies
  1. உங்க தங்கச்சிக்கு மட்டும் பிரெச்ஞ்ச சொல்லிகொடுங்கோ ...நான் கெஞ்சி கதறி கேட்டாலும் சொல்லி கொடுக்கதிங்கோ மாமா

   Delete
 5. மினுக்கு வற்றல் குழம்பு ,அஸ்பாரகஸ் /கேரட் பொரியல் &&&& சூப்.////அத்தனையும் அருமை!என்ன மெனக்கெடத்தான்.....................ஹி!ஹி!ஹி!!!கொடுக்காப் புளிக்கு நன்றி!

  ReplyDelete
 6. திரும்பவும்ம் மீ லாண்டேட் பிபோர் பூஸ் :)) காமாட்சி அம்மாவுக்கு கை அகல பார்டர் பொடவை தேடுறாங்களா இல்லே யுரோ மில்லியன் ஜாக்க்போட் நமக்கு அடிக்கணுமுன்னு வேண்டுறாங்களா அஞ்சு ??

  ReplyDelete
  Replies
  1. ஹையோ ஜஸ்ட்டு மிஸ்ட்டூஊஊஊஊஊஊஉ:)) ஒரு செக்கந்தான் வித்தியாசம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
  2. //ஹையோ ஜஸ்ட்டு மிஸ்ட்டூஊஊஊஊஊஊஉ:)) //

   ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ :))

   Delete
 7. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)) அதாவது யோகா அண்ணனுக்கு அடுத்ததா மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ:)) இது எப்பூடி?:)

  ReplyDelete
 8. சுக்காங்காய் aka மினுக்கு வற்றல் குழம்பு
  ///

  கீரிஈஈஈஈஈஈஈஈ கம் இமீடியட்லி:))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர் மியாவ் :))also known as aka

   Delete
 9. வற்றல் குழம்புக்கு வற்றல் இங்கே வாங்கினீங்களா அஞ்சு? எனக்கு இது என்னன்னே தெரியல. எவ்ளோ விஷயம் எல்லாம் தெரிஞ்சு வெச்சு இருக்கீங்க அஞ்சு ( இதுக்கு பூஸ் வந்து குமுறுவாங்க பாருங்க :))

  ReplyDelete
 10. அப்படியே இங்கே அனுப்புங்க அஞ்சு. இதெல்லாம் கிடைத்தால் செய்துபார்க்கிறேன். நீங்க நல்லா முன்னேறிட்டீங்க அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. ஹையூ!!! எனக்கு ரொம்ப ஷையாக இருக்கு ..எல்லாம் அக்காஸ் ஜலீ,ஆசியா என் தங்கைஸ் கீதா கிரி மகி மேனகா எல்லாரும் தான் காரணம் ..

   Delete
 11. //Leeks//
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இனி நான் உருளைக்கிழங்கு.. பச்சைமிளகாய் எல்லாம் படம் பிடிச்சுப் போடப்போறேன்:).

  ReplyDelete
  Replies
  1. //இனி நான் உருளைக்கிழங்கு.. பச்சைமிளகாய் எல்லாம் படம் பிடிச்சுப் போடப்போறேன்//

   அனேகமா அஞ்சு உங்களுக்காகத்தான் படம்ம்ம் போட்டு இருப்பாங்க இல்லேன்னா நீங்க டவுட்டு :)) கேப்பீங்களே? இந்த தடவை மை டர்ன் :))

   Delete
  2. well done giri :))சரியா கண்டுபிடிச்சதுக்கு உங்களுக்கு ரெண்டு பாக்கெட் சுக்காங்காய் வத்தல் அனுப்பிடறேன்

   என்னை குழப்பி நான் இனி சமையல் பதிவே போட விடாம செய்ய பூசாரின் சதித்திட்டம் ..பாருங்க கொருக்காபுளி லின்கோடு கொடுத்ததும்
   அது இது இல்லைன்னு ..:))))))

   Delete
 12. Asparagus எங்க வீட்டில் யாருக்கும் புடிக்காது ஆனா இதே மாதிரி பொரியல் ரன்னர் பீன்ஸ் போட்டு பண்ணுவேன்.

  Quinoa இங்கே வந்து தான் இது பத்தி தெரியும். எங்க வீட்டில் இதை எப்படி செஞ்சாலும் புடிக்கல. இப்போ சமீபத்தில் கீதா அச்சல் ரெசிபி பார்த்து தோசை செஞ்சேன். பையன் கூட யம்மி ன்னு சாப்புட்டான். கிரிஸ்பி ஆ வருவதற்கு கொஞ்சம் கடலை பருப்பு அவங்க சொல்லி இருந்த அளவு படி போட்டு செஞ்சேன். அருமையா இருந்தது. அடுத்து Quinoa வில் இட்லி பொடி ட்ரை பண்ண போறேன்

  ReplyDelete
 13. //கீரிஈஈஈஈஈஈஈஈ கம் இமீடியட்லி:))//  பூஸ் ஒய் ஆர் யு காலிங் மீ?

  ReplyDelete
  Replies
  1. இல்ல இல்ல நான் கூப்பிடல்ல:)) அது பை மிசுரேக்கூஊஊஊஊஉ:)))... நீங்க வேர்க்கைப் பாருங்கோ பொஸ் ஏசிடப்போறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   கூப்பிட்டா ஓடிவந்து அஞ்சுட சட்டையைப் பிடிச்சு:)) 4 கேள்வி கேட்கிறதை விட்டுப்போட்டு:).. ஆ யூ கோஓஓஓஓஓஓஓஓஓஒலிங் மீ யாம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

   Delete
  2. //4 கேள்வி கேட்கிறதை விட்டுப்போட்டு:).. ஆ யூ கோஓஓஓஓஓஓஓஓஓஒலிங் மீ யாம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))//

   அஞ்சு இங்கே வந்து பூச என்னன்னு கேழுங்கோ :)) ஹீ ஹீ

   Delete
  3. /கீரிஈஈஈஈஈஈஈஈ கம் இமீடியட்லி:))//


   அது ஒண்ணுமில்லை கிரி மியாவ் மல்லிகே இட்லி சுடபோராங்கலாம்:)))))))))))))))))

   Delete
 14. சூப் நல்லாயிருக்கு ஆனா எனக்கு கொஞ்சம் தடிப்பாக இருந்தால்தான் பிடிக்கும்.. இது ரசம்போல இருக்கு. நான் இபடிச் செய்துபோட்டு, காண்ட் மிக்ஸியால அடிச்சு எடுப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆனா எனக்கு கொஞ்சம் தடிப்பாக இருந்தால்தான் பிடிக்கும்..//

   thats puree miyaav:}}}}}}}}}

   Delete
 15. பூஸ் நான் வசந்த கால நதிகளிலே முழு பாட்டும் டிவி யில் பார்த்து இருக்கேன். நானும் தேம்சுக்கு வரேன் பட் நான் ரஜினி நீங்க கமல் ஓகே :))

  ReplyDelete
  Replies
  1. ஓக்கே ஆனா என்னைத் தள்ளக்கூடாது:)) ஏனெண்டால் எனக்கு நீச்சல் தெரியாது:)) ஹையோ ஹையோ:)).. எங்க போனாலும் அடிக்கிறாங்க முருகா.. நான் பழனிக்கே வந்திடுறேனே முருகா:))

   Delete
  2. கிரி சீக்கிரம் போங்க எனக்கு உடனே பாக்கணும் :))

   Delete
 16. //Quinoa என்பது தினை ..///
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ரெஸ்கோல கிடைக்குதா அஞ்சு?:) இனிமேல் பாருங்கோ விளையாட்டை:)) நான் வாங்கி அரைச்சு பிடிக்கொழுக்கட்டை செய்யப்போறேன்ன்ன்ன்ன்:))

  ReplyDelete
 17. உங்க ட வீட்டில இருக்கிற‌""ரன பீன்ஸும், ஸ்னோ பீஸும்..,கபேஜ் இலையும், பீஸும்"" எல்லாம் போடுங்கோ அதிரா.

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்வ்வ்வ் நான் சூப் செய்து படமும் எடுத்து வச்சிருக்கிறேன் அம்முலு.. விரைவில் எதிர்பாருங்கோ..:)

   Delete
  2. அப்படிதான் நல்லா அடிங்க உருட்டுங்க அம்முலு

   தினையில் கொழுக்கட்டை செய்யபோராங்கலாம் பூஸ் :)))))))

   Delete
 18. ok lunch over will be back later!! Poos behave please :))

  ReplyDelete
  Replies
  1. கீரி ஜொள்ளிட்டா.. பிகேவ் பிலீச்ச்ச்ச்ச் என:)) பெரியவங்க சொல்லுக்கு நான் மரியாதை கொடுப்பேன் சொல்லிட்டேன்ன்ன்ன்.. அஞ்சூஊஊஊஊஊஊஉ நானுக்கும் லஞ் ஓவர்:)))

   Delete
 19. //தேவையான பொருட்கள்
  (இது ஒரு நபர் சாப்பிடும் அளவு சூப் செய்ய )//

  மகீஈஈஈஈஈஈஈ ஓடிவாங்க என்னா முன்னேற்றம்... அளவெல்லாம் சொல்லீனம் ஆட்கள்:))

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் அந்த வாழைபழ ஓட்டீ பார்த்த எஃபேக்ட் தான் :))

   Delete
 20. செய்முறை விளக்கங்களுக்கு நன்றி... வீட்டில் குறித்துக் கொண்டார்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க தனபாலன்

   Delete
 21. அன்புத்தங்கை நிர்மலா,

  வணக்கம். நான் நலம். நீங்க எப்படி இருக்கீங்க! செளக்யமா?

  //கோபு அண்ணா அவர்களின் இந்த பின்னூட்டம் பார்த்ததும்
  செய்து பார்த்த வற்றல் குழம்பு//

  நிர்மலா, நான் சொன்ன துமுட்டிக்காய் அல்லது மினுக்கு வற்றல் என்பது வேறு. நீங்க செய்து பார்த்த வற்றல் குழம்பு வேறு.

  நான் சொன்னதை நீங்களே எழுதியிருக்கீங்க ... பாருங்கோ:

  //துமுட்டிக்காய் வற்றல் [மினுக்கு வற்றல்] என்று ஒன்று

  அதை இரண்டாக நறுக்கினால் ஒரு ஜோடி ஜிமிக்கி போல
  அழகாக இருக்கும்.

  வறுத்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

  அதைப்போட்டு வற்றல் குழம்பு வைத்தால் படு சூப்பராக
  சுவையாக இருக்கும். //

  நீங்கள் வைத்துள்ள வற்றல் குழம்பு என்பதில் மிதப்பவை எனக்குப் பிடித்த ஜிமிக்கிகள் போல இல்லையே!

  ஏதேதோ பெரிசு பெருசாக ஒட்டியாணம் போலல்லவா மிதக்க விட்டுளீர்கள்!!

  [ஒட்டியாணம் என்றால் என்னவென்றும் சொல்லி விடுகிறேன். அந்தக்காலத்தில் பெண்கள் இடுப்பில் அணியும் ஓர் ஆபரணம். இப்போது பரத நாட்டியமாடும் பெண்கள் மட்டும் இடுப்பில் இதை பெல்ட் போல அணிகிறார்கள்]

  தொடரும்......


  ReplyDelete
  Replies
  1. இல்லையில்லை :)) இது அதுதான் ஜிமிக்கிதான் குழம்பில் ஊறிவிட்டது :))நெல்லைக்கை பச்சடியில் கூட போட்டேனே அதுதான் ..பாக்கெட்டில் சுக்காங்காய் என்றிருந்தது

   // பரத நாட்டியமாடும் பெண்கள் மட்டும் இடுப்பில் இதை பெல்ட் போல அணிகிறார்கள்]//

   yes yes !!!!! i know netri sutti ,vangi ,thalaipillai raakodi

   Delete
  2. //yes yes !!!!! i know netri sutti ,vangi ,thalaipillai raakodi//

   ஆஹா, இதெல்லாம் நல்லா சூப்பரா தெரிந்து வைத்துக் கொண்டுள்ளீர்கள்! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

   //மினுக்கு //மிதுக்கு // சுக்காங்காய் இதில் நான் எதை செய்தேன் என்று எனக்கே தெரியாத பட்சத்தில் நான் வெறும் வற்றல் குழம்பு என்றே தலைப்பை மாற்றி விட்டேன்//

   குழம்பு விஷயத்தில் குழம்பிப்போய் விட்டீர்களோ? அல்லது நான் ஏதாவது குழப்பி விட்டுட்டேனோ?

   தெளிவு ஏற்பட தெளிவான ரஸம் வைப்பது எப்படி? என ஒரு பதிவு போடுங்கோ. எல்லாம் சரியாகி விடும். இன்னொரு பதிவும் தேறிவிடும். ;)))))

   Delete
 22. 3]
  அடுத்த படத்தில்

  அஸ்பாரகஸ் + கேரட் பொரியல் என்று காட்டியுள்ளது படத்தில் பார்க்க அழகாகத்தான் உள்ளது. ஆனால் அதன் கீழே கடைசியில் என்ன சொல்லியுள்ளீர்கள் பாருங்கோ:

  //சுவையான ஹெல்தி அஸ்பாரகஸ் ,கேரட் கூட்டு தயார் .. வற்றல் குழம்புடன் நல்ல டேஸ்டாக இருக்கும்.//

  மேலே தாங்கள் கூறியிருப்பது: பொரியல்
  கீழே அதையே கூறியிருப்பது: கூட்டு

  அது எப்படி? பொரியலா? கூட்டா?

  எதுவாக இருப்பினும் நிர்மலா ... எனக்கு இந்தக் கூட்டணிகளே பிடிப்பதில்லை. எல்லாக் காய்கறிகளையும் சேர்த்து செய்யும் [பொதுவாக அனைவரும் விரும்பும்] அவியலை நான் தொடவே மாட்டேன், தெரியுமோ? அது ஏன் என்று என் “உணவே வா .. உயிரே போ” என்ற பதிவினில் விளக்கியுள்ளேன்.

  இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html

  எந்தக்காய்கறியையும் தனியே செய்ய வேண்டும். ஒன்றுடன் ஒன்று கூட்டணி அமைக்கக் கூடாது. அதில் ஒரு சில காய்கறிகள் மட்டுமே உங்கள் கோபு அண்ணாவுக்குப் பிடிக்கும். பல காய்கறிகள் பிடிக்காது.

  அதுவும் தாங்கள் சொல்லியுள்ள அஸ்பாரகஸ் என்பதை கோபு அண்ணா கேள்விப்பட்டதே இல்லை.

  அடுத்தது சூப் என சூப்பராக படத்துடன் செய்முறை எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள்.

  [ஆனால் இந்த சூப் என்பதையும் கோபு அண்ணா ஏனோ விரும்புவது இல்லை.]

  தொடரும்......

  ReplyDelete
  Replies
  1. poriyal/koottu அடாடா ..நான் கவனிக்கலை ...சரி செய்யறேன்

   இது என்னவென்றால் இந்த ஆஸ்பாரகஸ் தனியே செய்த என் மகளுக்கு பிடிக்காது கலர்புல்லா இருக்கட்டுமேன்னு காரட் சேர்த்தேன்

   Delete
  2. //poriyal/koottu அடாடா ..நான் கவனிக்கலை ...சரி செய்யறேன் //

   ஓ.கே. நன்றி. இவற்றையெல்லாம் சமைத்த களைப்பில், பதிவு இட்டதால் கவனிக்கத் தவறியிருக்கலாம். தவறுகள் தவறாமல் என் கண்களில் பட்டுவிட்டது. ;) It is OK.

   //கலர்புல்லா இருக்கட்டுமேன்னு காரட் சேர்த்தேன்//

   எதுவுமே கலர்ஃபுல்லாக இருந்தால் தான் அனைவருக்குமே பிடிக்கும். ;)))))

   அதுவும் குழந்தைகளுக்கு என்றால் கேட்கவே வேண்டாம்.

   Delete
  3. அனைத்து கருத்துக்களுக்கும் மிக்க நன்றிஅண்ணா ...உங்கள் உணவே வா பதிவினை படித்ததில் இருந்துதானோ என்னவோ வித விதமாக சமைக்கக் ஆசை வருகுது :))

   Delete
 23. 4]

  ASPARAGUS, Quinoa, Leeks என்று வரிசையாக படத்தில் காட்டியுள்ளீர்கள். அவையெல்லாம் என்னவென்றே எனக்குத் தெரியாது, நிர்மலா. இதுவரை பார்த்ததில்லை, கேட்டது இல்லை, சாப்பிட்டதும் இல்லை, சாப்பிட விரும்பவும் இல்லை, உங்கள் கோபு அண்ணா.

  கடைசி படத்தில் காட்டியுள்ளீர்களே “கொடுக்காப்புள்ளி” என்று ஒரு மலைபோல. அவைகள் எனக்கும் ரொம்ப தோஸ்து நிர்மலா. சின்ன வயதில் எலிமெண்டரி ஸ்கூல் படிக்கும் போதே தோஸ்து தான். ஸ்கூல் வாசலிலே கொட்டிக்கிடக்கும்.

  என்னுடைய “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” என்ற பதிவினில் இந்த என் அந்த நாள் தோஸ்தாகிய “கொடுக்காப்புள்ளி” என்பவனைப் பற்றி நான் ஒருவரி கூட எழுதவில்லை என்பதில் அவனுக்கு என் மேல் ஒரே கோபம் தெரியுமோ?

  இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/03/1.html

  இந்த கொடுக்காப்புள்ளியின் மேல் தோலி சிலவற்றில் ஒரே பச்சையாகவும், சிலவற்றில் பச்சையும் சிவப்புமாக தாங்கள் படத்தில் காட்டியுள்ளது போலவும் இருக்கும்.

  சுருள் சுருளாக நெளிநெளியாக பார்க்கவே அழகாக இருக்கும்.

  மேல் தோலியை நீக்கிவிட்டால் உள்ளே பஞ்சு மெத்தை போல, குட்டியூண்டு இட்லி போல, மெத்துன்னு வெள்ளையாக இருக்கும். அதை மட்டும் தான் சாப்பிட வேண்டும். அதில் சில மிகவும் ஸ்வீட் ஆக ருசியாக இருக்கும். ஒரு சில அது போல ஸ்வீட் ஆக ருசியாக இல்லாமல் மென்னியைப்பிடிக்கும் ... விக்கலை வரவழைக்கும்.

  அதன் உள்ளே கண்ணின் கரு விழிபோல அழகான விதைகள் இருக்கும். அதை சேகரித்து நாங்கள் விளையாடியதும் உண்டு. மேல் தோலியையும், உள் விதைகளையும் நீக்கி விட்டு, இடைப்பட்ட பஞ்சு மெத்தை போன்ற கொடுக்காப்புள்ளி, ருசியாக இனிப்பாக, சாஃப்ட்டாக இருந்தால் நிறையவே திங்கலாம்.

  சிறுவயது நினைவலைகளைச் சிறப்பாக மீட்டுத் தந்துள்ள என் அன்புத்தங்கை நிர்மலாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  பிரியமுள்ள,
  கோபு

  ReplyDelete
  Replies
  1. Quinoa என்ற படத்தைப்பார்த்ததும் இது ’தினை’ அல்லது ’கேழ்வரகு’ போன்ற இரு தானியங்களில் ஏதோ ஒன்றாக் இருக்குமோ என சந்தேகப்பட்டேன்.

   ‘கேழ்வரகு’ என்ற தானியம் தான் ‘ராகி’ என்ற பெயரில் மாவாகவும் கிடைக்கிறது. இதை கொதிக்கும் நீரில் போட்டு, ஒரு கரண்டியால் அடி ஒட்டாமல் கலக்கினால் போதும். கேழ்வரகுக்கஞ்சி ரெடி. இதில் உப்பு+மோர் கலந்து அருந்தலாம். அல்லது ஜீனி மட்டும் கலந்தும் சாப்பிடலாம்.
   மிகவும் ருசியாக இருக்கும். இது சத்துள்ள பானமும் கூட.

   உடம்புக்கு நல்ல தெம்பாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் பலர் இந்தக் கஞ்சியை காலை உணவுக்கு பதிலாக சாப்பிடுவது உண்டு. நானும் இதனை அடிக்கடி அருந்துவது உண்டு. சத்துள்ள உணவு தான்.

   Delete
 24. //அடுப்பை சிம்(இல்)ரன் செய்யவும் //

  ஆஹா! ’சிம்’மில் ரன் செய்யவும் என்பது தான் சிம்ரன் செய்யவுமா?

  நல்லவேளை நான் அவசரத்தில் படித்துவிட்டு, சிம்ரனை எப்படி அழைத்து வந்து செய்வது? [பொரியல் செய்வது] எனக் கவலைப் பட்டேன். ;)))))

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்,ஐயா!கவலையே படாதீங்க.அவங்க(சிம்ரன்)இப்போ சும்மா(பட வாய்ப்பின்றி)தான் இருக்காங்க!ஹ!ஹ!ஹா!!!!!

   Delete
  2. அப்பாடி!... யோகாவே சொல்லிட்டீங்க ... என் கவலை விட்டது. இதுவும் ஒரு யோகம் தான் போலிருக்கு. ;)

   Delete
  3. அதான் ஐயா,பேரிலேயே "யோகம்" இருக்குல்ல:):):):):)::):):):)

   Delete
 25. அப்பப்பா சாப்பாட்டிலும் பார்க்க எல்லோரின் கருத்தும் அசல் சூப், வத்தல் குளம்பு ருசியை விட ருசி. எல்லாம் நல்லலது. சுலபமாகவும் செய்யலாம் நன்றி. நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா ..பின்னூட்டங்கள் எல்லாமே அருமையாக அமைந்ததன் காரணம் கோபு அண்ணா அவர்கள் .தகவல் களஞ்சியமாக நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வதால் எல்லாருக்கும் பயன்

   Delete
 26. சூப்பர்ப்...அந்த மினுக்கு வற்றல் படத்தினை போட்டால் சூப்பராக இருக்கும்..அனைத்து குறிப்புகளும் சூப்பர்ப்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..உங்களுக்காக படத்தை எடுத்து இணைத்தேன் ..சென்னைல தான் வாங்கினேன்

   Delete
  2. இப்போ புதுசா கொடுக்காப்புள்ளிக்கு மேலே இணைத்துள்ளீர்களே அதே அதே அதே அதே தான் நான் சொன்ன ஜிமிக்கி ..... ;))))) துமுட்டி வற்றல் அல்லது மினுக்கு வற்றல்.

   நன்றி.

   நிர்மலா,

   இந்த வற்றலை அப்படியே இரண்டாக வெட்டி [ஜிமிக்கி போல ஆக்கி] எண்ணெயில் லேசாக வறுத்து அப்படியே சாப்பிட்டுப்பாருங்கோ. மொறுமொறுன்னு சூப்பராக டேஸ்டாகவே இருக்கும்.

   பிரியமுள்ள,
   கோபு

   Delete
  3. ஆஆஆ :)) எனக்கு பார்சலில் சுக்காங்காய் என்று வந்தது இதுதான்
   நான் அதில்தான் வற்றல் குழம்பு செய்தேன் ..மீதம் இருந்ததை படம் எடுத்து போட்டேன் ..குழம்பில் ஒட்டியாணம் போல தெரிவது வெங்காயம் என்று நினைக்கிறேன் :))

   சும்மா பொரித்து சாப்பிடவே இது நல்லா டேஸ்ட்

   Delete
 27. பாதி பொருட்கள் எங்க ஊரில் கிடைக்காதே... : (

  இருந்தாலும் போட்டோ பார்த்துட்டே பெருமூச்சு விட்டுக்குறேன் :-)

  ReplyDelete
  Replies
  1. ஆமினா வாங்க ..இப்ப இந்த பொருட்கள் டெய்லி ஸ்பென்சர்ல கிடைக்குதின்னு கேள்விப்பட்டேன் ..லீக்ஸ் தி நகரில் பார்த்தேன் ..
   லீக்ஸ் கிடைச்ச செய்து பாருங்க .வெங்காயத்தாள் போல டேஸ்ட் இருக்கும்

   Delete
 28. படத்தைப் பார்க்கும்போதே குழம்பை சாப்பிடத் தோன்றுது ஏஞ்சலின்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..எனக்கும் வத்தகுழம்பு ரொம்ப பிடிக்கும் :))

   Delete
 29. வித்த்யாசமாக உள்ளது.தேடி தேடித்தான் பொருட்கள் வாங்கி சமைக்கணும்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சாதிகா .அஸ்பாரகஸ் தவிர மற்ற பொருட்கள் சென்னைல திநகர் மார்கட்ல பார்த்தேன் ..அஸ்பாரகஸ் இப்ப சூப் மாகி பிராண்டில் வருவதால் கொஞ்ச நாளில் அங்கும் கிடைக்கலாம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 30. அந்த கேரட் பொரியல் ...சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. சின்ன பிள்ளைங்களுக்கு காரட் சேர்த்தா ரொம்ப பிடிக்கும் .என் பொண்ணும் விரும்பி சாபிடுவா ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 31. ஏஞ்சலின், சமையல் கலையில் சகலகலாவல்லியாகிட்டீங்க, பாராட்டுகள். படங்களைப் பார்த்தாலே நாவூறுது... அதிலும் வற்றல் குழம்பு சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா ...வெக்கம் வெக்கமா வருதெனக்கு :)) ..
   இதையேதான் என் கணவரும் சொல்றார் ...ஹா ஹா

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 32. அஞ்சு:) மலைப்பாய் இருக்குதெனக்கு!!! பறக்கத்தொடங்கீட்டீங்க:))
  வற்றல் குழம்பு ,அஸ்பாரகஸ் /கேரட் பொரியல் &&&& சூப்!!!
  எனக்கும் பிடிச்ச நல்ல நல்ல செய்முறைகுறிப்புகள், படங்களுடன் விளக்கங்கள் அருமை. அதோடு பக்கப்பாட்டுக்கு உங்க கோபு அண்ணனும் பக்கம் பக்கமா விளக்கம்வேறு;)))

  ஸ்..ஸ்..அடடா நான்தான் ரொம்ம்ம்ப லேற்:(
  சரி பரவாயில்லை. அஞ்சூஊஊ பாத்திரம் கழுவி வைக்கேல்லைதானே.
  பசியோடு வந்திருக்கேன், கெதியாய் பரிமாறுங்கோ. ஆ..அங்கை அடியில கிடக்கிறது போதும் எனக்கு:)))

  உங்கள் திறமைகள் வெளிப்படுகின்றது அஞ்சு! வாழ்த்துக்கள்.!!!
  பகிர்தலுக்கும் மிக்க நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க யங் மூன் :)) உங்களுக்கு ஸ்பெஷல் பார்சல் அனுப்பியாச்சு :))
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 33. ஏஞ்சல்....என்னமோ சொல்லிச் சொல்லி படம் காட்டிக் காட்டிச் சமிக்கிறீங்கள்.எனக்கு ஒண்டுமா விளங்கேல்ல.வந்து வாயூறிப்போட்டுப் போறன்.அதோட கொஞ்சம் பிஸி.ஒரு மாதம் ஊர்சுற்றல்,வீடு மாற்றம்.....வேலை,புளொக்கர்,முகப்புத்தகம்.....முடியாமல் களைச்சுக் களைச்சு ஓடிக்கொண்டிருக்கிறன்.இந்தக்கிழமை மட்டுமே.பிறகு 40-50 நாட்களுக்கு தலைமறைவுதான் !

  ReplyDelete
  Replies
  1. அப்பாடி!கொஞ்ச நாளைக்கு நிம்மதி.

   Delete
  2. ஹேமா ஸ்பார்கள் தான் அஸ்பாரகஸ் ...சுவிசில் கிடைக்கும் செய்து பாருங்க ...வெளிநாட்டு பயணமா ? சந்தோஷமா சென்று வாங்க ஹேமா ..
   என் சமையல் ரசிகை கொஞ்ச நாள் மிஸ் செய்யபோறேன் ..சீக்கிரமே வாங்க

   Delete
 34. கேரட் பொறியல் நல்லா இருந்துச்சு..பகிர்வுக்கு நன்றி...

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 35. எக்ஸ்க்ககீயுஸ் மீ ....

  இது அஞ்சு அக்காளின் ப்ளாக் தானா ....

  இங்க என்ன நடந்து இருக்கு ...

  எல்ல்ளரும் சரியாதான் பேசி இருக்கீங்களா ...அஞ்சு அக்காளின் சமையலுக்கு இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டங்களா ...இப்போவே கண்ணை கட்டி இருக்கு கொஞ்சம் தண்ணிகுடிச்சிட்டு வந்து படிக்கிறேன் ...

  ReplyDelete
  Replies
  1. கண்ண கட்டினா தண்ணி குடிச்சா சரியாயிடுமோ?எல்லாரும் நோட் திஸ் பாயின்ட்!

   Delete
 36. ஹேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய!

  வேத்த்ரி !வேத்ரி !வேத்ரி !!!

  மீ ௱

  ReplyDelete
  Replies
  1. வேத்ரி !வேத்ரி !வேத்ரி !!!////என்ன வேத்ரி யோ?

   Delete
 37. அக்கா உண்மையாவே ரொம்ப பசிக்கு உங்க பதிவை பார்த்தது ...நல்லா பன்னுரிங்க அக்கா ...உங்கள நேருல பார்க்கும் போது உங்க கை புடிச்சி பார்க்கணும் ..உங்க கைக்குள்ள என்ன மஜிக் வைசி இருக்கீங்க ன்னு பார்க்கணும் ...


  ReplyDelete
 38. மினுக்கு //மிதுக்கு // சுக்காங்காய் இதில் நான் எதை செய்தேன் என்று
  எனக்கே தெரியாத பட்சத்தில் நான் வெறும் வற்றல் குழம்பு என்றே
  தலைப்பை மாற்றி விட்டேன் ///


  இதுக்கு நான் எதுமே சொல்லமாட்டிணன்...

  போன தரமே உங்க அண்ணன் எனக்கு போன் பண்ணி நல்லா சமையல் போடுறாங்க எதுக்கு கலாயிக்கிரிங்கனு ...ஒரே பயம் பயமா போயிடுச்சி எனக்கு ...


  .

  ReplyDelete
  Replies
  1. அப்புடீங்களா?ரொம்பப் பயந்து போயிட்டீங்களோ?அம்மனுக்கு நேத்தி வச்சு "நூல்"கட்டுங்க!

   Delete
 39. ரொம்ப மிஸ் பண்ணுறேன் அக்கா உங்க எல்லாரையும் ....நெட் கார்ட் இன்னும் கிடைக்கல அக்கா ...இன்னும் இரண்டு மாதம் கழித்து தான் வருவேன்ஆனா எப்பாவது லீவ் னா வருவேன் அப்புறம் ஒபீசில் நேரம் கிடைக்கும்போது வாறன் ...


  உடம்பை பார்த்துக்கோங்க ..ஷரோன் க்கு ஹாய் சொல்லிடுங்க ...


  ReplyDelete
  Replies
  1. வாங்க கலை ..:)) சந்தேகமெல்லாம் வரக்கூடாது .எப்பெப்ப டைம் கிடைக்குதோ அப்ப வாங்க ..உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க ,நல்லா சாப்பிடுங்க ட்ரை ஒன்லி மை ரெசிப்பிஸ் .:))
   டேக் கேர் .

   Delete
  2. சரி தான்!:):):):):):):)

   Delete
 40. வணக்கம் சகோதரி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_5.html) சென்று பார்க்கவும்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு மிக்க நன்றிங்க சகோ

   Delete
 41. இன்று சமையல் பிரமாதம் ஒரு பிடி பிடிக்க வேண்டியது தான்

  பயந்து போடாதீங்கோ நானேதேன்
  உங்கள்
  ஜலீலாக்கா

  ReplyDelete
 42. அஸ்பராகஸ் தனியாக அல்லது ரோல் மட்டும்தான் சாப்பிட்டு இருக்கிறேன் அஞ்சூஸ். செபா விதம் விதமாக சமைப்பாங்க. உங்கள் குறிப்பைப் பார்க்க ஆசையாக இருக்கிறது.

  ReplyDelete