அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/26/12

மீண்டும் பள்ளிக்கு போகலாம் :))) அந்த நாள் ஞாபகம் :)

மீண்டும் பள்ளிக்கு போகலாம் :)))
                                                                                           
                                                                                          
                                                                                       
சில வருஷங்களுக்கு முன் ஒரு சின்ன தேவதை பள்ளிக்கு 
போன நினைவுகள் பிளாஸ்பாக்கில் வந்தது :))   
(இப்ப இந்த பின்னோக்கிய நினைவுகளின்  காரணம் என்னன்னா எங்க குட்டி 
பொண்ணு  secondary  ஸ்கூல் போறா ..அதை பற்றிய விவரம் 
பின்னே வரும் )
தேவதை முதல்நாள் பள்ளி சென்ற அனுபவம் ...


                                                                              
பெங்களூர் அருகில் ஒரு அழகான கிராமத்தில் அப்பாவின் ஜீப்பில் 
அமைதியாக பிரவுன் நிற சீருடையில் முகம் நிறைய பேபி பவுடர் 
போட்டு ,ஆப்பிள்   வடிவ வாட்டர் பாட்டில் தோளில் தொங்க 
அருகில் ,செல்ல பூனை :)))
(பார்த்தீங்களா அப்பவே அதீஸ் எனக்கு நண்பி தான் :)))
மற்றும் ப்ரூட்டஸ் என்ற அல்சேஷன் நாய் உடன் பயணிக்க 
(கன்னுக்குட்டியை ஜீப்பில் ஏற்ற மாட்டேன்னுட்டார் அப்பா)
டவுனிலுள்ள பள்ளிக்கு மிகுந்த சந்தோஷத்துடன் (இல்லாமையா 
பின்ன வீட்டில் தங்கை தரும் அடியில் இருந்து தப்பிக்க இதை 
விட்டா வேறு வழி இல்லையே )சென்றேன் ...

இதோ எங்க வீட்டு பூசார் ....
                                                                    என்னோடு பள்ளி வரும்போது 
இவருக்கு பத்து மாதம் தானிருக்கும் .. பின் எங்களுடன் 
பத்தொன்பது வருடம் இருந்தார் ..அதான் இவர் போட்டோ 
எடுக்க கிடைச்சது ..
சுய flashback அத்துடன் ..........end.


அடுத்த பிளாஸ்பாக் ...நான் எனது பொக்கிஷபெட்டியை திறந்தபோது 
கண்ணுக்கு பட்டது இவை ..இவை பற்றிய நினைவுகள் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்                                                                 
இதோ இந்த படத்தை பார்த்துக்கோங்க 
                                                                           

இது சிறு குழந்தைகள் அழாமல் இருக்க அழுகையை நிறுத்த 
உபயோகிக்கும் dummies.
மேலும் குழந்தைகள் கை சூப்பாமல் தடுக்கவும் பயன்படும் 
எல்லாருமே தராங்கலேன்னு நாங்களும் தெரியாத்தனமா ...
.!!!!!!!!!!!!!!!!!!!!!! கொடுத்து பழக்கி விட்டுவிட்டோம் ..
அவளும் அமைதியாக உறங்குவா ..பாதிதூக்கத்தில் மெதுவா 
கழட்டி வைப்போம் ..ஆனா கொஞ்ச நேரம் கழித்து பார்த்தா அவ 
வாயில் இது இருக்கும் ..பிறந்து ஒரு வாரத்திலேயே இந்த 
அமர்க்களம் கலாட்டா எல்லாம் .
சில நேரத்தில் வாயில் இருந்து எடுக்க முடியாதபடி 
இறுக பிடிச்சுப்பா..இல்லையென்றால் அழுவாள் ..இப்படியே 
ஒரு வயதுக்கு முன் ஊருக்கு கொண்டு சென்றோம் ..நம்மூரில் 
எல்லாரும் ஒரே திட்டு .......பற்கள் முன்னே வரபோகுது ,
மூச்சு அடைபடும் என்று எல்லாருமே திட்டினாங்க ..எங்களால் 
இந்த பழக்கத்தை நிறுத்த முடியல ..ஒன்றரை வயது இருக்கும் ...
தாங்க முடியாமல் நான் அவள் தூங்கியபின் கத்திரிகோல் எடுத்து 
அந்த ரப்பர் பகுதியை வெட்டி எடுத்து விட்டேன் ::(((
நடு இரவு உறக்கம் கலைந்து எழும்பியது குட்டி தேவதை !!!!!!!!!!!!!
அரை குறை மழலையில் கேட்ட்க நான் வில்லங்கமான சிரிப்புடன் 
அந்த டம்மிசை தந்தேன்  !!!!!!!!!!!!!!
ஒரு சத்தம் வீரிட்டு அழுதா பக்கத்து வீட்டு ஆட்கள் வந்து கதவை 
தட்ட ஆரம்பித்தாங்க .அப்போ நடு இரவு ..ஆபத்துக்கு பழைய 
எக்ஸ்ட்ரா டம்மி கூட இல்லை எங்களிடம் ..
கணவர் ஒரு முறை karrrrrrrrr முறைத்தார் ..ஓடினேன் நேரே 
கெல்லருக்கு (cellar)   அது ஒரு நவம்பர் மாதம் கடுங்குளிர் அங்கே 
பழைய பெட்டிகளை குடைந்து ஒரு பழைய  டம்மி 


                                                                            

  இந்த சிவப்பு நிறம் 
பிறந்த வுடன் பயன் படுத்தியதை எடுத்து வந்து நீரில் அலசி வாயில் 
வைத்தேன் ,,அது வரை non stop அழுகை ஜெர்மனிலிருந்து பார்டர் 
பிரான்ஸ் வரைக்கும் கேட்டிருக்கும் அவ்வ்வ்வவ்வ்வ்வவ் ..

இந்த டம்மிஸ் பயன்பாடு மூன்று வயது வரை விடாமல் 
தொடர்ந்தது ..இப்ப நல்லா பேச ஆரம்பித்து விட்டாள் குட்டி பெண் .
.ஆனா வாயில் டம்மிஸ் எப்பவும் :))
ஏதாவது செய்து அவள் அதை தொடாதபடி செய்யனும்னு ஒரு 
குறிக்கோள் எனக்கு ..அவ்வாறே செய்தேன் .... வெற்றி கிட்டியது 
என்ன செய்தேன் என்று யாராவது யூகியுங்களேன் :)))))))))
இது எங்கள் மகள் சிறு பிள்ளையாக இருந்தபொழுது நடந்த சம்பவம்  
................................


பதிவில் சிறு பெண் பூனை மற்றும் நாய்குட்டியுடன் இருக்கும் படம் 
வின்டாஜ் இமேஜஸ் .vintage  images.
இவற்றில் சிலவற்றை  இலவசமாக பிரிண்ட் செய்து பயன்படுத்தலாம் 
அவ்வாறு பிரிண்ட் எடுத்து அதில் க்விளிங் செய்ததுதான் நம் ஜெய் மற்றும் கலைகுட்டிக்கு செய்த வாழ்த்து அட்டைகள் . ஐடியா உபயம் எனது சிஷ்யை :))
மேலும் நிறைய அழகிய படங்கள் இருக்கு இங்கே சென்று பார்க்கவும் 
எனது மகளின் புவியியல்  நோட்டிர்க்கு அட்டை போட படங்களை 
இங்கிருந்துதான் பிரிண்ட் செய்தேன் .


61 comments:

  1. என்ன செய்து ஏஞ்சலை டம்மிஸ்ஸை மறக்கச்செய்தீர்கள்.....சொல்லாமலே முடித்து விட்டீர்களே? ஒரு வேலை என்னைப்போலவே ஒரு பதிவை குறைந்து ஐந்து பாகமாக எழுதி 'மரணமொக்கை' போட வேண்டும் என்று 'பயங்கரதிட்டம்' தீட்டிவிட்டீர்களா? :) :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வரலாறு தம்பி :)))...ஆனா யாராச்சும் ஒருத்தராவது ஊகிக்கிராங்கலான்னு பார்த்து பின்னூட்டத்திலேயே சொல்லிடறேன்..

      Delete
  2. graphics fairy-ல் அழகிய படங்கள் குவிந்து கிடக்கின்றனவே...என்னை போல குழந்தைகளுக்கு உபயோகமான தளம்! :) :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ..ஒவ்வொரு சப்ஜக்டுக்கும் பொருத்தமா வின்டாஜ் படங்கள் ..எனக்கு ரொம்ப பிடிச்சது அதான் பகிர்ந்து கொண்டேன் ..நாமெல்லாம் ஸ்கூலுக்கு பிரவுன் பேப்பர் தான் போடுவோம் ..இங்கே புவியியல் சம்பந்தமான படங்களை ஒட்டி அட்டையாக போட சொல்றாங்க ..

      Delete
  3. அஞ்சு பூஸ் இன்னும்ம் லான்ட் ஆகல போல இருக்கு??? பேயாசம் :)) சாப்புட்ட மயக்கமோ ?????

    ReplyDelete
    Replies
    1. பேயாசம் :)) சாப்புட்ட மயக்கமோ ????? //

      ஹா ஹா உருண்டு புரண்டு சிரிச்சதில் எலும்பு நொறுங்கிச்சு:))

      பூசார் கலர் கலரா அகர் அகர் ட்ரை செய்றாங்களாம்

      Delete
    2. //பூசார் கலர் கலரா அகர் அகர் ட்ரை செய்றாங்களாம் //

      அப்போ அடுத்த வாரம் ஒரு ஜோகம் :)) இருக்குன்னு சொல்லுறீங்க???? :)) இவ்ளோ நம்ம பூச கிண்டல் அடிக்க பூஸ் பாட்டுக்கு ரெயின்போ அகர அகர செஞ்சு என் மூஞ்சியில கரிய பூச போறாங்க :))

      Delete
    3. ஹா..ஹா..ஹா... இந்தக் ஹோல் வேல்ட்டில:) ஆருமே செய்திராத அகர் அகர் செய்யப்போறேன்ன்:).. பூஸோ கொக்கோ?:).

      Delete
  4. ப்ளாஷ் பாக் ரொம்ப நல்லா இருக்கே உங்க தங்கை கிட்டே நீங்க அடி வாங்குவீங்களா? ச்சே பாவம் நீங்க நான் எல்லாம் எங்க அக்கா கிட்டேதான் அடி வாங்கி இருக்கேன் ஆஆவ்வ்வ்



    உங்க பூசார் நம்ம பூஸ் போல நாட்டியா? கர்ர்ர்ர் சொல்லுவாரோ ??

    ReplyDelete
    Replies

    1. கொடுத்து வச்ச அக்கா ..யாருமே எனக்கு அக்காங்க பெரியவங்க சின்னவங்களை அடிக்கலாம்னு சொல்லிதரல(
      எங்க பூஸ் நாட்டி தான் ..ஒருமுறை உறவினர் வந்திருந்தாங்க ..அவங்க பிள்ளை க்றேடிலில் தூங்கிட்டிருன்தது ..இது கொஞ்சம் ஜெலஸ் பூஸ் தூங்கற பிள்ளையை நைசா பெருவிரலில் கடிச்சிட்டு ஓடிவிட்டது ..

      Delete
    2. //கொடுத்து வச்ச அக்கா //

      கர்ர்ரர்ர்ர்

      //யாருமே எனக்கு அக்காங்க பெரியவங்க சின்னவங்களை அடிக்கலாம்னு சொல்லிதரல// அதெல்லாம் ரொம்ப சின்ன வயசில் தான் அடி தடி:)) அப்புறம் எனக்கு அவங்க இன்னொரு அம்மா மாதிரி தான் இருக்காங்க இன்னி வரைக்கும்.

      Delete
    3. எங்க வீட்டிலயும்தேன்ன்ன்ன்.. அக்காவுக்கு அடிப்பது நாந்தேன்ன்ன்ன்:)) ஆனா அடிச்ச கையோடு வீர் வீர் என நானே கத்திடுவேன்ன்.. உடனே சத்தம் கேட்டு அம்மா/அப்பா ஓடிவந்து என்னைத்தான் தடவுவினம்... இப்போ நினைக்க பாவமா இருக்கு. அக்கா சரியான அமைதி.... சின்னனிலிருந்து இப்ப வரைக்கும் என்னை + என் கணவர் பிள்ளைகளை நல்லாவே கவனிப்பா.

      Delete
    4. //அடிப்பது நாந்தேன்ன்ன்ன்:)) ஆனா அடிச்ச கையோடு வீர் வீர் என நானே கத்திடுவேன்ன்.. உடனே சத்தம் கேட்டு அம்மா/அப்பா ஓடிவந்து என்னைத்தான் தடவுவினம்...//

      கர்ர்ர் :)))) இனி எங்கேயாச்சும் அப்பாவி பூஸ் என்று சொன்னீங்கன்னா
      உடனே இந்த கமெண்டை அப்படியே காபி பேஸ்ட் செய்திடுவேன்

      Delete
  5. //கன்னுக்குட்டியை ஜீப்பில் ஏற்ற மாட்டேன்னுட்டார் அப்பா)//

    நீங்க பண்ணின அழிச்சாட்டியத்த நெனச்சா உங்க அப்பா மேல பரிதாபமா இருக்கு அஞ்சு:))



    //(பார்த்தீங்களா அப்பவே அதீஸ் எனக்கு நண்பி தான் :)))//

    :))

    ReplyDelete
    Replies
    1. அவர் கதையை கேட்டிங்கனா இன்னும் சிரிப்பீங்க ..அப்பா பள்ளிக்கூடம் போகும்போது குதிரை வண்டி தாத்தா வீட்டில் இருந்ததாம் அதில் அப்பாவின் அக்கா இவருக்கு கிளி கூடுடன் கிளியும் ஒரு கோழி குஞ்சையும் கிண்டர் கார்டனுக்கு கொண்டு போனாங்களாம்

      Delete
    2. ஆஆவ்வ்வ்வ் ஷரன் ஸ்கூலுக்கு போகும் பொது நிபி இருந்தானா?

      Delete
    3. //ஆஆவ்வ்வ்வ் ஷரன் ஸ்கூலுக்கு போகும் பொது நிபி இருந்தானா? //

      ஆமா.. நிபிட அம்மாவின்:)) வயித்தில:)) ஹையோ ஹையோ:))

      Delete
    4. கர்ர்ரர்ர்ர்ர் மியாவ் :)))) இருங்க என் டாட்டர் இன் லா வந்து உங்களை ஓட ஓட விரட்டுவா

      Delete
  6. நலமா ஏஞ்சலின்?

    வீட்டில் எல்லாரும் நலமா?

    மலரும் நினைவுகள் சுகம்...பிள்ளைகள் முதல் நாள் சோகம்,பயம் கலந்த சுகம்..
    .
    அக்டோபர் இறுதியில் மறுபடிவருகிறேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆ ஆ :)) வாங்க ரெவரி ..நாங்க அனைவரும் நலம் அதிரா அக்காவும் நலம் .. .. ...நாங்க அனைவரும் அக்டோபரில் மீட் பண்ணுவோம்

      Delete
    2. // அதிரா அக்காவும் நலம் .///

      அவர் கேட்டாரா?:)) அவர் கேட்டாரா?:))) முடியல்ல நாராயணாஅ முடியல்ல:))

      Delete
    3. //நாங்க அனைவரும் அக்டோபரில் மீட் பண்ணுவோம் //

      எங்கே தேம்சுலையா ?????

      Delete
    4. ஆமா தேம்ஸ்ல போர்ட்டில:))

      வசந்த கால நதிகளிலே..
      வைரமணி நீரலைகள்...
      நீரலைகள் நீரினிலே நெஞ்சிரண்டில் நினைவலைகள்.... ஆனா கீரியும் கட்டாயம் எம்மோடு போர்ட்டில வரோணும் சொல்லிட்டேன்ன்ன்:))).. அவ அந்தப் பாட்டுக் கட்டம் பார்த்திருக்க மாட்டா:))

      Delete
  7. நான் என் பையனுக்கு டம்மி யூஸ் பண்ணலே. மூணு மாசத்தில் இருந்து ஐந்து ஆறு மாசம் முடியும் வரை தூங்கும் போது கையில் காட்டன் மிட்டேன்ஸ் (mittens ) போட்டு விட்டேன். அவனுக்கு துணி டெஸ்ட் புடிக்காம கை சப்பவே இல்லே. ஆனா ஒரொரு குழந்தையும் ஒரொரு மாதிரி இருக்கும். நல்ல வேளை அவன் அவங்க அப்பா போல அடம் எல்லாம் இல்லே. என்னை மாதிரி இருந்தால் உங்க குட்டி போல கத்தி இருப்பானா இருக்கும்.

    (என் வீ.காரர் ப்ளாக் பக்கம் வர மாட்டார் சோ தைரியமா உண்மைய ஒத்துக்கலாம்:))

    ReplyDelete
    Replies
    1. மூணு மாசத்தில் இருந்து ஐந்து ஆறு மாசம் முடியும் வரை தூங்கும் போது கையில் காட்டன் மிட்டேன்ஸ் (mittens ) போட்டு விட்டேன்.//

      அவ்வவ் கிரி முதல் நாளே என் பொண்ணு மிட்டன்சை தூக்கி போட்டுட்டு தூங்கிடிருந்தா .....எபவும் சொல்வாங்க அப்பாமாதிரி பொண்ணுங்க இருப்பாங்க ..அவ அப்பா மாதிரின்னு நினைக்கிறேன் ..
      என் கணவரும் ப்ளாக் பக்கம் வர மாட்டாரே :)))

      Delete
    2. ஹையோ என் கவலை எல்லாமே எங்கட இரு குட்டீஷும் டம்மியை வாயில வைக்கவே விடமாட்டன் என வெளில துப்பிப் போட்டினம்.. அவர்களை விட எனக்கு அந்த டம்மில சரியான விருப்பம்.. அதை அவர்கள் மூலமா நிறைவேத்துவமே என, கணவர் வாணாம் எனச் சொல்லியும் கேட்காமல் வாங்கி வந்து வாயில வாயில தள்ளிப் பார்த்தேன்ன்ன் ம்ஹூம்.. ஒரு நாளாவது என் ஆசைக்கு சூப்பவே மாட்டேன் என மறுத்திட்டினம்:)))..

      இது பொய் இல்லை நிஜம்.

      Delete
  8. //

    என்ன செய்தேன் என்று யாராவது யூகியுங்களேன் :)))))))))//

    நீங்க என்ன பண்ணீங்கன்னு யூகிக்க முடியல ஆனா சின்ன வயதில் நான் கை சப்பும் பழக்கம் உண்டாம். ஒரு தடவை ஊருக்கு ட்ரெயின் இல் போகும் போது எதிரில் இருந்த ஒரு அங்கள் " எவ்ளோ அழகான பொண்ணு இப்புடி கை சப்பி அசிங்கமா இருக்குதே " அப்படின்னு என்னை பார்த்து சொன்னாராம். அன்னிக்கே நான் கை சப்புறத விட்டுட்டேனாம் அப்படின்னு அம்மா சொல்லி சிரிப்பாங்க. காரட், பீட்ரூட் ,கீரை எல்லாமே சாப்புட்டா தான் அழகா இருக்கலாம் ன்னு சொல்லியே எனக அம்மா இதை எல்லாம் சாப்புட வெச்சாங்களாம். இப்போ சொல்லுங்க யாரு ரெண்டு வயசில் இருந்தே நல்ல பொண்ணுன்னு :))

    ஊ.குறிப்பு : என் மொக்கை ப்ளாஷ் பாக் கேக்குறதுக்கு பத்தி நீங்களே என்ன பண்ணீங்கன்னு பதிவில் சொல்லி இருக்கலாம் :))

    ReplyDelete
    Replies
    1. இப்போ சொல்லுங்க யாரு ரெண்டு வயசில் இருந்தே நல்ல பொண்ணுன்னு :))//
      super flashback :))
      miyav miyaav odivaanga :))

      Delete
    2. ///எவ்ளோ அழகான பொண்ணு இப்புடி கை சப்பி அசிங்கமா இருக்குதே " அப்படின்னு என்னை பார்த்து சொன்னாராம்.///

      அப்பா நாராயணாஆஆஆஆஆஆஆ நான் இன்னும் உயிரோடிருக்கோணுமோ வேணாமோ?:)))... விடுங்கோ என்னை.. தேம்ஸ்ஸ் வெயா ஆ யூஊஊஊஊஊஊஊ:))).

      Delete
    3. //super flashback :))
      miyav miyaav odivaanga :))//

      அகர் அகர் பண்ணிக்கிட்டு இருக்குற பூஸ எதுக்கு இப்போ டிஸ்டர்ப் பண்ணுறீங்க அஞ்சு ?????? எப்படியும் வந்து ஆமா கீரி தான் ரொம்ம்ம்ப நல்ல பொண்ணுன்னு சொல்ல போறாங்க:))

      Delete
    4. //இன்னும் உயிரோடிருக்கோணுமோ வேணாமோ?:)))... //

      இதுக்கு எல்லாம் பதில் சொல்ல நாராயணா இஸ் டூ பிசி:))

      //தேம்ஸ்ஸ் வெயா ஆ யூஊஊஊஊஊஊஊ:)))//

      லண்டன் இல் இருக்கு. போஸ்ட் கோட் வேணுமுன்னா சொல்லுங்க இல்லே சிரமத்த பார்க்காம நானே கூட உங்கள வந்து கூட்டி கிட்டு போறேன் தேம்சுக்கு ஏதோ என்னால முடிஞ்ச சின்ன்ன்னன்ன உதவி மக்களுக்கு :))

      Delete
    5. பெண் மனது மென்மையாம் பூஊஊஊஊஊஊவினது தன்மையாம்ம்ம்ம் எண்டு சொன்ன ஆவரும் இங்கு வந்து பார்க்கட்டும்ம்ம்ம்ம்ம்:))

      Delete
  9. //ஐடியா உபயம் எனது சிஷ்யை :))//

    நல்ல ஐடியா அஞ்சு யாரு சிஷ்யை ஷரன் குட்டியா? படங்கள் எல்லாமே அழகா இருக்கு. ஓகே சி யு லேட்டர்

    ReplyDelete
    Replies
    1. இல்லை கிரி ஷாரன் எனக்கு குரு:)) அவதான் எனக்கு க்விளின்க் செய்றதில் இன்ஸ்பிரேஷன் ..இது வேறொரு சிஷ்யை

      Delete
  10. ரசித்து எழுதி உள்ளீர்கள்... ரசித்தேன்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க ..வருகைக்கும் ரசித்து வாசித்ததற்கும்

      Delete
  11. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே..ரசித்தேன்..இப்போ என் குட்டி பையனும் அதை தான் சூப்பிக் கொண்டு இருக்கான்....இல்லைன்னா ராத்திரியில தூங்க முடியல அப்படி ஒரு கத்து கத்தறான்.....

    ReplyDelete
    Replies
    1. வாங்க மேனகா ..கொஞ்ச நாளானதும் மெதுவா நிறுத்திடுங்க ..
      ஹம்மா நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் நிறுத்துவதற்கு :)

      Delete
  12. இரவு வணக்கம்,அஞ்சலின்!நல்ல சுவையான அனுபவப் பகிர்வு.நாம் கூட பெரிய பொண்ணுடன் கொஞ்சம் கஷ்டப்பட்டோம்.கத்தரிக் கோலால் கத்தரித்து...............ஹி!ஹி!ஹி!!வொர்க் அவுட் ஆச்சு,ஹ!ஹ!ஹா!!!

    ReplyDelete
    Replies
    1. ஐரோப்பாவில் வாழும் பெரும்பாலானவங்களுக்கு இந்த அனுபவம் இருக்கும் ..நீங்களும் அவதிபட்டீன்களா :))

      இன்னமும் எடுத்து காட்டுவேன் அந்த வெட்டின டம்மியை என் பொண்ணுகிட்ட ..வெட்கப்பட்டு சிரிப்பா

      Delete
  13. angelin......ஜெர்மனிலிருந்து பார்டர்
    பிரான்ஸ் வரைக்கும் கேட்டிருக்கும் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்....!///அடடே!அது உங்க பொண்ணோட அழுகை தானா?ஹி!ஹி!ஹீ!!!!!!

    ReplyDelete
    Replies
    1. அவ்வ :)) நிச்சயமா கேட்டிருக்கும் ....அந்த வெட்டப்பட்ட டம்மியை வாயில் வச்சி ஏதோ வித்யாசம்னு கண்டுகொண்டதும் அவ அலறின அலறல் ...இப்பவும் காதுக்குள்ள எக்கோவா ஒலிக்குது :))

      Delete
  14. //சில வருஷங்களுக்கு முன் ஒரு சின்ன தேவதை \\

    விடுங்க விடுங்க... நான் தேம்ஸ்க்கு போறேன்ன்ன்ன்.. சில வருடங்களுக்கு முன்பு “சின்ன தேஏஏஏஏஏஏஏவதையாமே” நாராயணா... இன்னும் நான் இருக்கோணுமோ?:))

    ReplyDelete
  15. அஞ்சு நான் நாளை மாலை:) தான் வருவென்ன் இது வேற மாலை:).

    இன்று ஹை ஸ்கூல் பேரன்ஸ் மீட்டிங்.. அத்தோடு சில வேலைகள் தொடராக நேரம் போயிட்டுது தலை வேறு டாண்.. டாண் என இடிக்குது... நாளை வருகிறேன்ன்... கீரியை நான் சுகம் விசாரிக்கவில்லை:) எனச் சொல்லிடுங்கோ:)))

    ReplyDelete
    Replies
    1. மாலை:) தான் வருவென்ன் இது வேற மாலை:).//

      ஆமாமா :))) முத்து மாலை

      Delete
  16. // கீரியை நான் சுகம் விசாரிக்கவில்லை:) எனச் சொல்லிடுங்கோ:)))//

    கர்ர்ரர்ர்ர்ர் :))

    //தலை வேறு டாண்.. டாண் என இடிக்குது... //

    பின்னே என்னை சுகம் விசாரிக்க இல்லேன்னா இப்புடித்தான் டாண் டாண் ன்னு இடிக்கும்ம்மம்ம்ம்ம் :))

    ReplyDelete
  17. ரசித்து எழுதி உள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க ..வருகைக்கும் ரசித்து வாசித்ததற்கும்

      Delete
  18. //(பார்த்தீங்களா அப்பவே அதீஸ் எனக்கு நண்பி தான் :)))
    ///

    கீரீஈஈஈஈஈஈஈஈஈ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:)) பிங்கலரிலதான் வேணும்:).

    ReplyDelete
    Replies
    1. ஏன் நானே தரேனே மியாவ் :))

      Delete
    2. மிளகாய்த்தூள் துடைத்த கிச்சன் டிஸ்யூ போதுமா :)))))

      Delete
  19. சின்ன தேவதை...ஏஞ்சலான கதை சுவாரஸ்யம்.திரும்பிப் பார்த்த நினைவலைகளை எங்களுக்கும் சொன்னது நாங்களுமெல்லோ ஒருக்கா திரும்பிப் பாத்திட்டம் எங்களை!

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஹேமா ..அந்த சிறுவயது நினைவுகள் ...திரும்பி அப்படியே பிள்ளைகளாகவே இருந்திருக்கலாமோன்னு ஏங்க வைக்குது

      Delete
  20. அப்பவே உந்த பூஸார் கூட்டோ...இனி ஏது ம் சொல்லேல்ல......அதிரா ...மியாவ்!

    அழுகை நிறுத்தும் அந்த ரப்பருக்கு உள்ள மகிமையைப் பாத்தீங்களோ ஏஞ்சல் !

    ReplyDelete
    Replies
    1. அம்மாடியோவ் இப்ப நினைச்சாலும் குளிரில் கெல்லருக்கு செருப்பு கூட போடாம ஓட வைச்சது அந்த ரப்பர் மகிமைதான்

      Delete
  21. நான் எப்படி அந்த ரப்பர் டம்மியை முடிவுக்கு கொண்டு வந்தேன் என்றா :))

    என் மகளுக்கு இரண்டு வயதில் இருந்தே சில வாசனைகள் பிடிக்காது
    வறுத்தல் பொரித்தல் எங்காவது வாசம் வந்தால் சட்டென மூக்கை பிடிப்பா..தீய்ந்த வாடை சுத்தமா பிடிக்காது ..
    நான் ஒரு நாள் அவ பயன் படுத்தி கொண்டிருந்த டம்மியை எடுத்து மெழுகுவர்த்தி நெருப்பில் வைத்தேன் ,,சிலிகான் ரப்பார் உருகவில்லை ஆனா கருப்பாய் ஒரு தீய்ந்த வாடையுடன் வந்தது ..அதை அப்படியே மேசை மீது வச்சிட்டேன் ..என் பொண்ணு அதை எடுத்து ஒரு தரம் முகர்ந்து பார்த்தா (நான் ஒளிஞ்சிருந்து பார்த்து கொண்டிருந்தேன் )

    மூக்கை சுழித்து ச்சீய் டெர்ட்டி ஸ்மெல் அப்படீன்னு சொல்லி தூக்கி வீசிட்டா !!! பிறகு அவளுக்கு மீண்டும் அதை தொடும் ஆசையே வரல்லை ..அப்படியே மேசை மேல் இருந்தது ..கிட்ட போவா ..பார்த்ததும் ஓடிடுவா ..
    that's how it came to an end :)))))

    ReplyDelete
  22. என்ன தான் பண்ணீங்க...

    ReplyDelete
  23. அவ்வ்! நான் ஊகிக்க முயலவில்லை. இதுவா நடந்தது! ம், எங்கட ஆட்களென்றால்... அதை வாயில வைச்சு எடுத்துத் தந்து "திரும்பவும் எரிச்சுத் தாங்கோ" என்பினம். ;) மூத்தவர் விரல் வாயில வைப்பார். நிற்பாட்ட வேப்பிலை அரைச்சு வைச்சினம். பிறகு வேப்பிலை கேட்கத் தொடங்கினார்.

    ReplyDelete
    Replies
    1. இமா October 6, 2012 9:59 AM
      //மூத்தவர் விரல் வாயில வைப்பார். நிற்பாட்ட வேப்பிலை அரைச்சு வைச்சினம். பிறகு வேப்பிலை கேட்கத் தொடங்கினார்.//

      ஒரே சிரிப்புத்தான் போங்க ! ;)))))

      [அன்பின் இமா, எப்படியிருக்கீங்க? நலமா? சுகமா? உங்களைப்பார்த்து ரொம்ப நாளாச்சு. சமீபத்தில் ஒரு மெயில் கூடக்கொடுத்திருந்தேன். பார்த்தீங்களோ இல்லையோ?

      http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

      இந்த இணைப்புக்குப்போய் ஒரு கருத்து அளிக்கக்கூடாதா?

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      Delete
    2. அன்பின் ஏஞ்சலின் - அருமை அருமை மலரும் நினைவுகள் அருமை - குட்டி தேவதை பள்ளி சென்றா அனுபவம் - டம்மீஸ் பற்றிய விளக்கமான உரை - அனைத்துமே நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      Delete