அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/22/12

குடம் புளி சேர்த்து செய்த மாசி மீன் (Tuna Fish )குழம்பு .

குடம் புளி சேர்த்து செய்த மாசி மீன் குழம்பு .
                                                                                      

குடம் புளி பற்றி இங்கே பார்க்கவும் 

http://www.kudampuli.com/about_Kudampuli.htmlகுடம் புளி எங்க வீட்டில் அம்மா அடிக்கடி மீன் குழம்பு செய்ய 
பயன்படுத்துவாங்க ..இங்கே குடம்புளி இலங்கை தமிழர் 
கடையில் கிடைத்தது 
சில கேரளா /நாகர்கோவில் உணவு வகைகளும் இலங்கை 
உணவு வகைகளும்  ஒரே முறையில் செய்முறை இருக்கும் ...
பாரதிராஜா அடிக்கடி என் இனிய தமிழ் மக்களேன்னு 
கர்ஜிப்பாரே :))
எல்லாம்  நாகர்கோவில் பக்கம் எடுத்த படங்கள்தான் 
பெரும்பாலும் .
இதுதான் குடம்புளி ..சமையல் செய்யுமுன் பத்து நிமிடம்  நீரில் 
ஊற வைத்து அம்மியில் அரைத்து குழம்பில் சேர்ப்பாங்க .
                                                                                      
                                                                            

தேவையான பொருட்கள் 

வெட்டி சுத்தம் செய்த மாசி மீன் துண்டங்கள் ...மூன்று 
(நான் ALDI மார்கெட்டில் வாங்கினதை மீண்டும் சிறிய 
துண்டங்கலாக்கினேன் )
குடம்புளி  ......5 OR 6 PIECES
மிளகுதூள் ..... மூன்று தேக்கரண்டி
உப்பு .......ஒரு தேக்கரண்டி 
மஞ்சள் தூள் ..ஒரு தேக்கரண்டி 
வினிகர் ...ஒரு ஸ்பூன் 
செய்முறை :
குடம்புளியை ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் சிறிது அளவு நீரில்
 மூழ்குமளவு ஊறவைத்து மிக்சியில் அரைத்துகொள்ளவும் .
இந்த பேஸ்ட் மற்றும் மூன்று தேக்கரண்டி மிளகுதூள்  ,
உப்பு ஒரு தேக்கரண்டி ,மஞ்சள் தூள் சேர்த்து சுமார் 
ஒருமணிநேரம் பிரட்டி வைக்கவும் 
பிறகு இந்த கலவையை ஒரு நான் ஸ்டிக் சற்றே 
ஆழமான கடாயில்அந்த கலவை மற்றும் இன்னும் அரை கப் நீர் 
சேர்த்து வேகவிடவும் 
கவனமுடன் இரண்டு பக்கமும்  மீன் துண்டங்கள்  உடையாமல் 
திருப்பி விட வேண்டும் .ஐந்து ஆறு நிமிடங்களில் இப்படி வரும் 
                                     இதுவரை செய்ததை அப்படியே சாப்பிடலாம் ..
ஆனா எங்க அம்மா இதையே மீன்குழம்பு தாளித்து கொதி வந்ததும் 
தயாரான துண்டங்களை குழம்பில் இறக்குவார்கள் மீண்டும் புளி 
சேர்க்கமாட்டாங்க வெறும் தக்காளி மட்டும் வெட்டி சேர்ப்பாங்க 
நானும் அப்படியே செய்தேன்       .
                                ................................................................................

அடுத்த பதிவு ரவா கிச்சடி ,மா இஞ்சி தொக்கு :))  


18 comments:

 1. அடடா கலக்குறீங்க ஏஞ்சலின்....இதுவரை குடம்புளி பார்த்ததுமில்லை,சமைத்ததும் இல்லை....

  ReplyDelete
 2. நல்லாயிருக்கு, குடம்புளி உபயோகித்து இருக்கேன், கேரள மீன் குழம்பில் ஆனால் ஊற வைத்து அரைதததில்லை,செய்முறை வித்தியாசமாக இருக்கு!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா ...இந்த முறைல மாசி மீன் மட்டும் தான் நல்லா இருக்கும் மற்று அந்த வீச்சம் வாடை குடம்புளி சேர்ப்பதால் தெரியாது

   Delete
 3. avvvvvvvvvvvvvvvv இது எப்போ போட்டீங்க அஞ்சூஊஊஊஊஊ:))

  ReplyDelete
  Replies
  1. இரண்டும் இன்றுதான் போட்டேன் அதீஸ் .சைவம் அசைவம் இரண்டையும் தனியே போடுவது நல்லதின்னு யோசிச்சேன்

   Delete
 4. மாசி மீன் என்றால் ருனா தானே?
  இலங்கையில் இதை கொறுக்காப்புளி என்போம். சிங்கள மக்களிடையேதான் இந்தப் புளியும் இந்த மீனும் ஃபேமஸ். சூப்பர் எங்களுக்கும் பிடிக்கும். ஆனா நாங்க இந்தப் புளி பெரிசா பயன்படுத்துவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. Yes :))its Tuna ..i bought steaks from ALDI .
   kudampuli is famous in kerala cuisine as well ..they call this as fish tambarind

   Delete
 5. நாங்க “மாசி” என்றால்.. மோல்டீவ் ஃபிஸ் ஐத்தான் சொல்வோம்ம்..(மாசிக்கருவாடு).

  ReplyDelete
  Replies
  1. இது frozen மீன் அதீஸ் ..aldi இல் கிடைக்குது தனித்தனியே பக் செய்து
   இருக்கு ..மீனை காயவைத்து புகை எல்லாம் போட்டு பின் தான் அது கருவாடு

   Delete
 6. அஞ்சு நான் இந்த குடம் புளி இங்கே கேரளா கடையில் பார்த்து இருக்கேன் ஆனா வாங்கினதில்லே. டியுனாவும் டின் பிஷ் தான் வாங்குவேன். குழம்புக்கு சாலமன் இல்லே ஸீ பாஸ் தான். வேற எதுவும் எங்க வீட்டில் புடிக்காது. டியுனா ஆல்டி யில் வாங்கி ட்ரை பண்ணுறேன்

  ReplyDelete
  Replies
  1. நான் மீன் இங்கே வாங்குவதில்லை கிரி ...ஏசியன் கடைகளில் வாங்கினா
   எங்களுக்கு சரிவராது ..இந்த aldi மீன் இப்பதான் ட்ரை செய்தேன் கணவர் சூப்பர்னு சொல்றார்

   Delete
 7. காலை வணக்கம்,தங்கையே!அதிரா சொன்னது போல் ஈழத்தில் இதனைக் கொறுக்காப் புளி என்போம்.அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை,ஆனால் பிஞ்சுக் காய் சாப்பிட சுவையாக இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. இதை கேரளக்கரங்க மீன் புளி என்பார்கள் ..நாங்க கொடுக்காபுளி என்று வேறொரு காயை சொல்வோம் புளியங்காய் போலவே இருக்கும் அதன் வெள்ளை பிங்க் கலந்த பகுதியை அப்படியே சாப்பிடலாம் அதன் கரு நிற விதைகளை உடைத்து பாசா ஃபெயலா என்று விளையாடுவோம்

   Delete
  2. ஓ.....ஓஹோ!பாஸ்,ஃபெயில் விளையாடுறதுக்கும் உதவுதோ,சூப்பர்!

   Delete
 8. அல்டியில மாசிக்கருவாடா.....லண்டன்காரர் முன்னேற்றம்தான்.இங்க அல்டியில இல்லையே!

  எனக்கு கொறக்காப்புளி மணம் பிடிக்கிறதில்லை.கொழும்பு,மலையகப் பக்கத்தில்தான் அதிகம் பாவிப்பார்கள்.ஆனாலும் குழம்பு பார்க்கவே வாய் ஊறுதே !

  ReplyDelete
  Replies
  1. கருவாடு இல்லை ஹேமா பாக் செய்த ஃப்ரோசன் மாசி மீன் துண்டுகள் தான் இருக்கு ..யார் கண்டா கொஞ்ச நாளில் கருவாடும் வரலாம் :))
   அல்டில மீன் செக்ஷன்ல பாருங்க இருக்கும் ..

   நீங்க சொல்றதைபோல எனக்கு அந்த வாசம் பிடிக்காது ஆனா இப்படி அரைச்சு செய்யும்போது மிளகும் சேர்த்து அந்த வாசனை தெரியவில்லை

   Delete
 9. மிக அருமையான சமையல்......பகிர்வுக்கு நன்றி.....

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 10. ;)))) வாசிப்புப் போட்டு கொமண்ட் போட வந்தால்... ஹா...!!

  ;) பாவம் ஏஞ்சல் நீங்கள். //மீனை காயவைத்து புகை எல்லாம் போட்டு// இல்ல...

  ஏஞ்சல்... எங்கட கதைகள் உங்களுக்கு விளங்காது. ;D மாசிக்கருவாடு என்றால்... மாசி. மாலைதீவுல இருந்து முந்தி வந்ததாம். இப்ப எல்லா இடமும் செய்யுறாங்கள். நாங்கள் நீங்கள் சொல்லுற மாதிரி சமைக்காத டூனாவை மாசி எண்டுறது இல்லை.

  கற்கரையில பெரிய பாரலில், முழு டூனாவை (தலை, வால் வெட்டி சுத்தம் செய்துதான் இருப்பினம் எண்டு நினைக்கிறன்.) கடல்நீர் விட்டு அவித்து... அப்படியே ஒவ்வொன்றாக துணியில் வைத்து 2 பக்கமும் இரண்டு பேர் பிடித்து முறுக்கி வடிய வைப்பினம். பிறகு சாம்பல் பூசி வெயில்ல காய விடுறது. காயேக்க அது 4 கொம்பு மாதிரி வளைஞ்சு பிரிஞ்சு வரும். இதைப் பிறகு சமைக்கத் தேவையில்லை. ஆனால் உடைக்கிறது கொஞ்சம் பாடுதான். சிலநேரம் பாக்குவெட்டி, பாறாங்கத்தி எண்டு தேட வேணும். சின்னவெங்காயமும் சிவப்பு மாசியும் சும்மா சாப்பிடலாம். இப்ப எங்க! எல்லாம் தூளாக்கின மாசிதான் (மோல்டிவ் ஃபிஷ் சிப்ஸ் - MD brand) கிடைக்குது.

  டூனா கருவாடு வேற... சூரன்மீன் கருவாடு. //மீனை காயவைத்து புகை எல்லாம் போட்டு// ம். அதுதான். சூரன் = கிளவாளை என்று நினைக்கிறன். (வெஜிடேரியன் நான், தெரிஞ்ச மாதிரி கதைக்கிறன்.) சூப்பரா இருக்கும். கறுப்புச் சதை மட்டும் எனக்குப் பிடிக்காது.

  செபாவுக்கு ஒரு ஸ்பெஷல் சூரன்கருவாடு செய்முறை தெரியும். எழுதேக்கயே நாவூறுது. :P மீனை 1 செ.மீ அளவு வட்டமாக வெட்டி, கொறுக்கா, மிளகு, கல்உப்பு எல்லாம் தட்டிப் பூசி சீமேந்துப் பையில இறுகச் சுற்றிக் கட்டி அடுப்புக்கு மேல தூங்க விட வேணும். 2 நாளுக்கொருக்கா பேப்பர் மாற்றவேணும். ஆனால்.. அது காயமுன்னம் நாங்கள் முடிச்சுருவோம். பிட்டும் இந்தப் பொரியலும்.. ஆஹா!!

  நாங்கள் (திருமலையாயினும் முன்னோர் மட்டுநகர்) கொறுக்கா மீன்கறிக்கு மட்டும்தான் (கொறுக்கா மட்டுந்தான் மீன் கறிக்கு) சேர்க்கிறது. நீங்கள் கொடுத்திருக்கிற குறிப்பு சிங்களவர் சமையல் அஞ்சூஸ். சாப்பிட்டிருக்கிறன். திறமா இருக்கும். ஏங்க வைக்கிறீங்கள்.

  ReplyDelete