அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/28/12

வற்றல் குழம்பு ,அஸ்பாரகஸ் /கேரட் பொரியல் &&&& சூப்சுக்காங்காய் aka மினுக்கு வற்றல் குழம்பு 


                                                                                                                    
                                                                                                                 

கோபு  அண்ணா அவர்களின் இந்த பின்னூட்டம் பார்த்ததும் 
செய்து பார்த்த வற்றல் குழம்பு 


//துமுட்டிக்காய் வற்றல் [மினுக்கு வற்றல்] என்று ஒன்று 

அதை இரண்டாக நறுக்கினால் ஒரு ஜோடி ஜிமிக்கி போல 
அழகாக இருக்கும்.

வறுத்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

அதைப்போட்டு வற்றல் குழம்பு வைத்தால் படு சூப்பராக 
சுவையாக இருக்கும். //

மினுக்கு  //மிதுக்கு // சுக்காங்காய் இதில் நான் எதை செய்தேன் என்று 
எனக்கே தெரியாத பட்சத்தில் நான் வெறும் வற்றல் குழம்பு என்றே 
தலைப்பை மாற்றி விட்டேன் 

அஸ்பாரகஸ் /கேரட் பொரியல்
                                                                                   
                                                                                      
தேவையான பொருட்கள் 

அஸ்பாரகஸ்.spears.. ஒரு கட்டு ....சிறியதாக நறுக்கி கொள்ளவும் 
(சுமார் பத்து பனிரெண்டு தண்டுகள் இருக்கும் )
காரட் .......  சிறிய துண்டுகளாக அரிந்தது ....ஒன்று 
வெங்காயம் .... மீடியம் அளவு அரிந்தது.... ஒன்று 
பச்சை மிளகாய் ...... ஒன்று 
தேங்காய் துருவியது ......... ஒரு மேஜைக்கரண்டி 
உப்பு         ..................தேவையான அளவு 

தாளிக்க 
கடுகு ,உளுந்து .....தலா ஒரு தேக்கரண்டி 
எண்ணெய் ......ஒரு ஸ்பூன்  அல்லது தாளிக்க தேவையான அளவு 
கறிவேப்பிலை ..... ஒரு கொத்து 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி 
கடுகு உளுந்து ,வெங்காயம்,கறிவேப்பிலை  பச்சை மிளகாய் 
தாளிக்கவும் பிறகு வெட்டி வைத்துள்ள அஸ்பாரகஸ் ,காரட் 
இவற்றை தாளிக்கவும் அடுப்பை சிம்(இல்)ரன் செய்யவும் .
உப்பு சேர்த்து லேசாக நீர் தெளித்து ஒரு மூடி போட்டு வைக்கவும் 
உப்பு வெங்காயம் தாளிக்கும்போதே சேர்ப்பது நல்லது .
சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து லேசாக கிளறவும் இப்பவே 
வெந்திருக்கும் ...அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி 
மீண்டும் அடிபிடிக்காமல் கிளறவும் .இரண்டு நிமிடங்கள் 
வைத்த பின் அடுப்பில் இருந்து இறக்கவும் ..
சுவையான ஹெல்தி அஸ்பாரகஸ் ,கேரட் பொரியல்  தயார் ..
வற்றல் குழம்புடன் நல்ல டேஸ்டாக இருக்கும் .

அடுத்தது சூப் 
                                                                                       
தேவையான பொருட்கள் 
(இது ஒரு நபர் சாப்பிடும் அளவு சூப் செய்ய  )
அஸ்பாரகஸ் தண்டு ..... நான்கு 
கேரட் ..........அரைத்துண்டு 
உருளைக்கிழங்கு ......சிறிய அளவில் ஒன்று 
சிறு துண்டு வெங்காயம் 
லீக்ஸ் ............துண்டாக நறுக்கியது ........கால் கப் 
Maggi veg soup cube .......ஒன்று 
மிளகுதூள் ....ஒரு தேக்கரண்டி ..
மிளகுதூள் தவிர்த்து அனைத்தையும் ஒன்றாக அடி கனமான 
பாத்திரத்தில் நீர் தேவையான அளவு சேர்த்து மூடி போட்டு வேக 
விடவும் ..ஆறேழு நிமிடங்களில் வெந்து விடும் 
பிறகு potato masher வைத்து வெந்த  காய்களை நன்கு மசிக்கவும் 
பிறகு மிளகுதூள் தூவி பரிமாறவும் ..சூப் கியூபில் உப்பு இருப்பதால் 
நாம் சேர்க்க தேவையில்லை ..விருப்பமானால் சூப்பில் சிறிது 
Quinoa  சேர்த்தும் வேக வைக்கலாம் .
அஸ்பாரகஸ் உடலுக்கு மிகவும் நல்லது அதேபோல்தான் லீக்சும் 
லீக்ஸ் உடலில் உள்ள கழிவுகளை(DETOX) நீக்குமாம் .
Quinoa  ......holland and barrett   ,Tesco இங்கு கிடைக்கின்றது 
   Quinoa  என்பது தினை ...எங்க வீட்டில் லவ் பேர்ட்சுக்கு தினை 
நாட்டு மருந்து கடைகளில் வாங்கி உணவாக தந்திருக்கிறோம் ..
தினையில் பல நல்ல சத்துக்கள் இருக்கு..சென்னையில் காதி
பவனிலும் மாவாக கிடைகிறது ..இங்கே வெளிநாடுகளிலும் 
கிடைகிறது அரைத்து வைத்ததை சப்பாத்திமாவு  பிசையும்போது 
ஒரு அரைக்கப் இதையும் சேர்த்து சப்பாத்தியாக சுட்டு சாப்பிடலாம்  .
thanks Google.for the images       ....
                                                                 ASPARAGUS 
                                                                               Quinoa 
                                                                                 
                                                                         Leeks
                                                                                 
............................................................................................................................

                                                                                                 
           .................................................................................................................................                                                                    


this is for yoga anna :))  அண்ணா நாங்க இதைதான் கொடுக்கா புளி 
or கொர்கலிகாஎன்று சொல்வோம் ...
இதை பற்றி நெட்டில் தேடப்போக .. பழங்கள் பற்றின வலைபூ கிடைத்தது 
 http://fruuits.blogspot.co.uk/2009/06/scientific-synonym-pithecellobium-dulce.htmlஇதன் விதைகளை பிளந்தால் குருத்து ஒரு பக்கம் இருக்கும் 
அதை வைத்து பாசா அல்லது ஃபெயலான்னு சிறு வயதில் 
விளையாடியிருக்கோம் :))  விளையாட்டு பற்றி என் தங்கை 
மகி சரியான விளக்கம் தருவா .:)))

                                                                                    

********************************************************************************************************

9/26/12

மீண்டும் பள்ளிக்கு போகலாம் :))) அந்த நாள் ஞாபகம் :)

மீண்டும் பள்ளிக்கு போகலாம் :)))
                                                                                           
                                                                                          
                                                                                       
சில வருஷங்களுக்கு முன் ஒரு சின்ன தேவதை பள்ளிக்கு 
போன நினைவுகள் பிளாஸ்பாக்கில் வந்தது :))   
(இப்ப இந்த பின்னோக்கிய நினைவுகளின்  காரணம் என்னன்னா எங்க குட்டி 
பொண்ணு  secondary  ஸ்கூல் போறா ..அதை பற்றிய விவரம் 
பின்னே வரும் )
தேவதை முதல்நாள் பள்ளி சென்ற அனுபவம் ...


                                                                              
பெங்களூர் அருகில் ஒரு அழகான கிராமத்தில் அப்பாவின் ஜீப்பில் 
அமைதியாக பிரவுன் நிற சீருடையில் முகம் நிறைய பேபி பவுடர் 
போட்டு ,ஆப்பிள்   வடிவ வாட்டர் பாட்டில் தோளில் தொங்க 
அருகில் ,செல்ல பூனை :)))
(பார்த்தீங்களா அப்பவே அதீஸ் எனக்கு நண்பி தான் :)))
மற்றும் ப்ரூட்டஸ் என்ற அல்சேஷன் நாய் உடன் பயணிக்க 
(கன்னுக்குட்டியை ஜீப்பில் ஏற்ற மாட்டேன்னுட்டார் அப்பா)
டவுனிலுள்ள பள்ளிக்கு மிகுந்த சந்தோஷத்துடன் (இல்லாமையா 
பின்ன வீட்டில் தங்கை தரும் அடியில் இருந்து தப்பிக்க இதை 
விட்டா வேறு வழி இல்லையே )சென்றேன் ...

இதோ எங்க வீட்டு பூசார் ....
                                                                    என்னோடு பள்ளி வரும்போது 
இவருக்கு பத்து மாதம் தானிருக்கும் .. பின் எங்களுடன் 
பத்தொன்பது வருடம் இருந்தார் ..அதான் இவர் போட்டோ 
எடுக்க கிடைச்சது ..
சுய flashback அத்துடன் ..........end.


அடுத்த பிளாஸ்பாக் ...நான் எனது பொக்கிஷபெட்டியை திறந்தபோது 
கண்ணுக்கு பட்டது இவை ..இவை பற்றிய நினைவுகள் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்                                                                 
இதோ இந்த படத்தை பார்த்துக்கோங்க 
                                                                           

இது சிறு குழந்தைகள் அழாமல் இருக்க அழுகையை நிறுத்த 
உபயோகிக்கும் dummies.
மேலும் குழந்தைகள் கை சூப்பாமல் தடுக்கவும் பயன்படும் 
எல்லாருமே தராங்கலேன்னு நாங்களும் தெரியாத்தனமா ...
.!!!!!!!!!!!!!!!!!!!!!! கொடுத்து பழக்கி விட்டுவிட்டோம் ..
அவளும் அமைதியாக உறங்குவா ..பாதிதூக்கத்தில் மெதுவா 
கழட்டி வைப்போம் ..ஆனா கொஞ்ச நேரம் கழித்து பார்த்தா அவ 
வாயில் இது இருக்கும் ..பிறந்து ஒரு வாரத்திலேயே இந்த 
அமர்க்களம் கலாட்டா எல்லாம் .
சில நேரத்தில் வாயில் இருந்து எடுக்க முடியாதபடி 
இறுக பிடிச்சுப்பா..இல்லையென்றால் அழுவாள் ..இப்படியே 
ஒரு வயதுக்கு முன் ஊருக்கு கொண்டு சென்றோம் ..நம்மூரில் 
எல்லாரும் ஒரே திட்டு .......பற்கள் முன்னே வரபோகுது ,
மூச்சு அடைபடும் என்று எல்லாருமே திட்டினாங்க ..எங்களால் 
இந்த பழக்கத்தை நிறுத்த முடியல ..ஒன்றரை வயது இருக்கும் ...
தாங்க முடியாமல் நான் அவள் தூங்கியபின் கத்திரிகோல் எடுத்து 
அந்த ரப்பர் பகுதியை வெட்டி எடுத்து விட்டேன் ::(((
நடு இரவு உறக்கம் கலைந்து எழும்பியது குட்டி தேவதை !!!!!!!!!!!!!
அரை குறை மழலையில் கேட்ட்க நான் வில்லங்கமான சிரிப்புடன் 
அந்த டம்மிசை தந்தேன்  !!!!!!!!!!!!!!
ஒரு சத்தம் வீரிட்டு அழுதா பக்கத்து வீட்டு ஆட்கள் வந்து கதவை 
தட்ட ஆரம்பித்தாங்க .அப்போ நடு இரவு ..ஆபத்துக்கு பழைய 
எக்ஸ்ட்ரா டம்மி கூட இல்லை எங்களிடம் ..
கணவர் ஒரு முறை karrrrrrrrr முறைத்தார் ..ஓடினேன் நேரே 
கெல்லருக்கு (cellar)   அது ஒரு நவம்பர் மாதம் கடுங்குளிர் அங்கே 
பழைய பெட்டிகளை குடைந்து ஒரு பழைய  டம்மி 


                                                                            

  இந்த சிவப்பு நிறம் 
பிறந்த வுடன் பயன் படுத்தியதை எடுத்து வந்து நீரில் அலசி வாயில் 
வைத்தேன் ,,அது வரை non stop அழுகை ஜெர்மனிலிருந்து பார்டர் 
பிரான்ஸ் வரைக்கும் கேட்டிருக்கும் அவ்வ்வ்வவ்வ்வ்வவ் ..

இந்த டம்மிஸ் பயன்பாடு மூன்று வயது வரை விடாமல் 
தொடர்ந்தது ..இப்ப நல்லா பேச ஆரம்பித்து விட்டாள் குட்டி பெண் .
.ஆனா வாயில் டம்மிஸ் எப்பவும் :))
ஏதாவது செய்து அவள் அதை தொடாதபடி செய்யனும்னு ஒரு 
குறிக்கோள் எனக்கு ..அவ்வாறே செய்தேன் .... வெற்றி கிட்டியது 
என்ன செய்தேன் என்று யாராவது யூகியுங்களேன் :)))))))))
இது எங்கள் மகள் சிறு பிள்ளையாக இருந்தபொழுது நடந்த சம்பவம்  
................................


பதிவில் சிறு பெண் பூனை மற்றும் நாய்குட்டியுடன் இருக்கும் படம் 
வின்டாஜ் இமேஜஸ் .vintage  images.
இவற்றில் சிலவற்றை  இலவசமாக பிரிண்ட் செய்து பயன்படுத்தலாம் 
அவ்வாறு பிரிண்ட் எடுத்து அதில் க்விளிங் செய்ததுதான் நம் ஜெய் மற்றும் கலைகுட்டிக்கு செய்த வாழ்த்து அட்டைகள் . ஐடியா உபயம் எனது சிஷ்யை :))
மேலும் நிறைய அழகிய படங்கள் இருக்கு இங்கே சென்று பார்க்கவும் 
எனது மகளின் புவியியல்  நோட்டிர்க்கு அட்டை போட படங்களை 
இங்கிருந்துதான் பிரிண்ட் செய்தேன் .


9/22/12

மா இஞ்சி தொக்கு ,ரவா கிச்சடி

மா இஞ்சி தொக்கு 

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/21857121                                                                           
எங்க சிட்டியில் ஒரு கடையில் மட்டும் அனைத்து வட இந்திய 
பாகிஸ்தானிய உணவு வகைகள் கிடைக்கும் ..
மேனகா மா இஞ்சி குழம்பு போட்டபின் என் கணவரை 
மா இஞ்சி வாங்கி வர சொன்னேன் வாங்கி வந்தார் !!!!!!!!!!!! 
AWWWWWWWWW ...ஒரு கிலோ :))
கொஞ்சத்தை ஊறுகாயாகவும் மீதியை தொக்கு குழம்பு 
என செய்தேன் .

தொக்கு செய்ய தேவையான பொருட்கள் 
அரைக்க 
மா இஞ்சி ...தோல் நீக்கி சிறிய துண்டாக துருவியது ..ஒரு கப் 
சிவப்பு வற்றல் மிளகாய்    .... நான்கு 
உப்பு ..... தேவையான அளவு 
புளி... சிறிய கோலி அளவு .
மிளகு ,சீரகம் ...தலா அரைத்தேக்கரண்டி .

தாளிக்க 
நல்லெண்ணெய் ...ஒரு கரண்டி 
கடுகு ...ஒரு தேக்கரண்டி 
உளுந்து ...ஒருதேக்கரண்டி 
பெருங்காயத்தூள் ...ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை ...சிறிதளவு 
அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது நீர் சேர்த்து மையாக 
மிக்சியில் அரைக்கவும் ..
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து 
பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து அதில் அரைத்த 
விழுதை சேர்க்கவும் மிதமான தீயில் அடுப்பை வைத்து 
எண்ணெய் பிரிந்து வந்தபின் இறக்கவும் ..அருமையான தொக்கு 
,தயிர் சாதம் பொங்கல்,ரவா கிச்சடி  போன்றவற்றிற்கு 
நல்ல சைட் டிஷ் ..

ரவா கிச்சடி..
                                                                                     
வறுத்தSOOJI ரவை ....ஒரு கப் 
பூண்டு மற்றும் மா இஞ்சி ,
சேர்த்து அரைத்த பேஸ்ட் ...இரண்டு தேக்கரண்டி 
மீடியம் அளவு வெங்காயம் ....ஒன்று நறுக்கியது 
பச்சை மிளகாய் ...இரண்டு 
தக்காளி...ஒன்று .நறுக்கியது 
கடுகு ,ஏலக்காய்,பட்டை ...தேவையான அளவு 
கறிவேப்பிலை .கொத்தமல்லி இலை..தேவையான அளவு 
மஞ்சள் தூள் ...ஒரு தேக்கரண்டி 
உப்பு ....தேவையான அளவு 
நீர் ..இரண்டு கப் 
எலுமிச்சை சாறு ..ஒரு தேக்கரண்டி ..
தாளிக்க ...ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் 
இறக்கும் போது சேர்க்க ஒரு ஸ்பூன் நெய் 
அலங்கரிக்க முந்திரி ,பாதம் பருப்பு ...OPTIONAL 

செய்முறை ..

வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு ,ஏலக்காய்,
பட்டை ஆகியவற்றை  வறுக்கவும் அத்துடன் வெங்காயம் 
,பச்சை மிளகாய் ,இஞ்சி  பூண்டு விழுது .தக்காளி ,மஞ்சள்தூள்
 உப்பு ஆகியவற்றை வதக்கவும் ..பின்பு இரண்டு கப் நீர் 
சேர்த்து கொதிக்கவிடவும் 
கொதி வந்ததும் ,,,,,இப்பதான் முக்கியமான இடம் ... கணவரை 
வறுத்த ரவாவை கொஞ்சம் கொஞ்சமாக வாணலியில்கொட்ட 
சொல்லவும் அந்நேரம் மனைவியர் மெதுவாக கரண்டியால் 
ரவையை கிளறனும் ..(எங்க வீட்டில் நான் எப்பவும் ரவையை 
கொட்டுவேன் கணவர்தான் கிளறுவார் ..நாம ரிஸ்க் எடுக்க மாட்டோமே :))
சட்டென்று ஒரு மூடி போட்டு மூடிடனும் இல்லைஎன்றா கிச்சடி தெளித்து ஹோகையாதான் ...கலக்குபவர் முகம் மற்றும் உடைகளை  
சொன்னேன் :))
பிறகு இரண்டு மூன்று நிமிடத்தில் அடுப்பில் இருந்து இறக்கவும் .

இறக்கும்போது எலுமிச்சை சாறு பிழியவும் ..விருப்பமானால் 
நெய் ஸ்பூனால் எடுத்து   ஊற்றியும் பரிமாறலாம் ..
............................................................
இதற்கு முந்தைய பதிவு குடம்புளி சேர்த்து செய்த மாசி மீன் குழம்பு   http://kaagidhapookal.blogspot.co.uk/2012/09/blog-post_22.html

குடம் புளி சேர்த்து செய்த மாசி மீன் (Tuna Fish )குழம்பு .

குடம் புளி சேர்த்து செய்த மாசி மீன் குழம்பு .
                                                                                      

குடம் புளி பற்றி இங்கே பார்க்கவும் 

http://www.kudampuli.com/about_Kudampuli.htmlகுடம் புளி எங்க வீட்டில் அம்மா அடிக்கடி மீன் குழம்பு செய்ய 
பயன்படுத்துவாங்க ..இங்கே குடம்புளி இலங்கை தமிழர் 
கடையில் கிடைத்தது 
சில கேரளா /நாகர்கோவில் உணவு வகைகளும் இலங்கை 
உணவு வகைகளும்  ஒரே முறையில் செய்முறை இருக்கும் ...
பாரதிராஜா அடிக்கடி என் இனிய தமிழ் மக்களேன்னு 
கர்ஜிப்பாரே :))
எல்லாம்  நாகர்கோவில் பக்கம் எடுத்த படங்கள்தான் 
பெரும்பாலும் .
இதுதான் குடம்புளி ..சமையல் செய்யுமுன் பத்து நிமிடம்  நீரில் 
ஊற வைத்து அம்மியில் அரைத்து குழம்பில் சேர்ப்பாங்க .
                                                                                      
                                                                            

தேவையான பொருட்கள் 

வெட்டி சுத்தம் செய்த மாசி மீன் துண்டங்கள் ...மூன்று 
(நான் ALDI மார்கெட்டில் வாங்கினதை மீண்டும் சிறிய 
துண்டங்கலாக்கினேன் )
குடம்புளி  ......5 OR 6 PIECES
மிளகுதூள் ..... மூன்று தேக்கரண்டி
உப்பு .......ஒரு தேக்கரண்டி 
மஞ்சள் தூள் ..ஒரு தேக்கரண்டி 
வினிகர் ...ஒரு ஸ்பூன் 
செய்முறை :
குடம்புளியை ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் சிறிது அளவு நீரில்
 மூழ்குமளவு ஊறவைத்து மிக்சியில் அரைத்துகொள்ளவும் .
இந்த பேஸ்ட் மற்றும் மூன்று தேக்கரண்டி மிளகுதூள்  ,
உப்பு ஒரு தேக்கரண்டி ,மஞ்சள் தூள் சேர்த்து சுமார் 
ஒருமணிநேரம் பிரட்டி வைக்கவும் 
பிறகு இந்த கலவையை ஒரு நான் ஸ்டிக் சற்றே 
ஆழமான கடாயில்அந்த கலவை மற்றும் இன்னும் அரை கப் நீர் 
சேர்த்து வேகவிடவும் 
கவனமுடன் இரண்டு பக்கமும்  மீன் துண்டங்கள்  உடையாமல் 
திருப்பி விட வேண்டும் .ஐந்து ஆறு நிமிடங்களில் இப்படி வரும் 
                                     இதுவரை செய்ததை அப்படியே சாப்பிடலாம் ..
ஆனா எங்க அம்மா இதையே மீன்குழம்பு தாளித்து கொதி வந்ததும் 
தயாரான துண்டங்களை குழம்பில் இறக்குவார்கள் மீண்டும் புளி 
சேர்க்கமாட்டாங்க வெறும் தக்காளி மட்டும் வெட்டி சேர்ப்பாங்க 
நானும் அப்படியே செய்தேன்       .
                                ................................................................................

அடுத்த பதிவு ரவா கிச்சடி ,மா இஞ்சி தொக்கு :))  


9/17/12

Craft corner &ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள்

                                               
மார்க் அன்ட் ஸ்பென்சரில் வாங்கிய டிடோக்ஸ் டீ 
பெட்டியினை ஒரு புக்மார்க் ஆக மாற்றியிருக்கிறேன் .
அந்த பெட்டியின் ஒரு பக்கம் அழகா இருந்தது அதில் 
க்விலிங் செய்தேன் .
அடுத்த புக் மார்க் ஒரு ஓம் வடிவ பிள்ளையார் .
ஒரு கிளிப் ஆர்ட் பார்த்து செய்தது 

                                                                                       


ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் 

மாங்காய் இஞ்சி 
மாங்காய் இஞ்சி குழம்பு ..மேனகாவின் குறிப்பு பார்த்து செய்தது 
                                                                        


பழு பாகல் வதக்கல்  காமாட்சி அம்மா அவர்களின் குறிப்பு 
பார்த்து செய்தது .

                                                                            
இரண்டுமே கேரளா  மாட்டா  அரிசி சாதத்துடன் அருமையான 
காம்பினேஷன் :pp :pp
                                                                                 
                                                                             
இதோ க்ரிட்ஸ் இட்லி .மற்றும் பூண்டு சட்னி
 பூண்டு சட்னி கீதா ஆச்சல் 
குறிப்பு  பார்த்து செய்தது .

க்ரிட்ஸ் பற்றிய குறிப்புகளுக்கு அங்கே பார்க்கவும் 
இங்கே ஆசிய நாட்டு கடைகளில் East End வகை பருப்புகள்
 பிரசித்தம் .ஒரு கடையில் தற்செயலாக பார்த்தேன் வெள்ளை 
நிற சோள ரவை .வாங்கி செய்தும் விட்டேன் .
                            
இந்தாங்க நேந்திரங்கா  சிப்ஸ் சுட சுட செய்தது ..:)))மகளுக்கு பள்ளி துவங்கி விட்டது பள்ளிக்கூட அனுபவங்கள் 
நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொள்ள இருக்கு ..
சுட சுட விரைவில்  பகிர்கிறேன் :))

 அதுவரை Cheeeeeeeeeeers:))))))))))

9/3/12

நூறாவது பதிவு :))

எனது நூறாவது பதிவு :))

நன்றி !! நன்றி 
என்னை பின்தொடர்வோர் மற்றும் தவறாமல் ஊக்குவிப்போர் 
மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் 
சிறு விருந்து :))))))))
                                                                                    
                                                                                            
பூரி கிழங்கு மசாலா ..                                                                                                                                                                       
சாதத்துடன் சாப்பிட நெல்லிக்காய் மோர்க்குழம்பு :))
நேந்திரம்பழ பிரதமன் ,ஆப்பிள்,பனானா ஸ்மூதி 
ரோஸ் எசன்ஸ் சேர்த்த அகர் அகர் ஜெல்லி
மாம்பழ ஜூஸ் சேர்த்து செய்த flower shape  ஜெல்லி !
பாசிபருப்பு ,பச்சை நிற லென்டில்ஸ் அதாவது மைசூர் பருப்பு 
வறுத்து சேர்த்த மிக்சர் .


                                                                                


பிடித்தமானவற்றை எடுத்துக்கோங்க :)))

இவற்றிற்கான செய்முறை பிறகு வரும்