அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

8/2/12

Thanks A Bunch :) Quilled Cards /Kokeshi Dollவணக்கம் நண்பர்களே ,நலமாக இருக்கின்றீர்களா :))
இருவருக்கு நன்றி சொல்வதற்காக மற்றும் சந்தோஷத்தை
பகிர்ந்து கொள்வதற்காகவும்  கோடை விடுமுறையில் இருந்து 
கொஞ்ச நேரம் உங்களுடன் பேச வந்திருக்கிறேன் .
                                                                 
                                                           Thanks a Bunch(முன்பு கூறியிருந்தேனே அதே பிஸ்கட் டின் உள்ளிருக்கும் corrugated
paper கொண்டு உருவானவர் இந்த டெடி :)))))

 எனக்கு சன் ஷைன்  ப்ளாகர் விருது கொடுத்திருக்கிறார் 
வை .கோபாலகிருஷ்ணன் அவர்கள் ..
அடுத்தவர் சௌந்தர் ...இவர் என்னையும் எனது சொந்த சமையல் ..
(ப்ளீஸ் நோட் திஸ் பாய்ன்ட்.).குறிப்பான நெல்லிக்காய் ரசத்தையும் 
வலைசரத்தில் அறிமுகம் செய்திருக்கிறார் அவங்க இருவருக்கும்
 நன்றி :))
கிரி மற்றும் மகி இருவருக்கும் வாழ்த்துக்கள் 
நன்றின்னு சொல்லும்போதே மனசுக்குள்ளே பல நினைவுகள் வந்து
சைக்கிள் வீல் சுற்றுவதை போல அந்த நாள் நினைவுகளை தட்டி 
எழுப்பியது மிளகையும் சீரகத்தையும் அரைக்காமல் முழுதாக  
போட்டு ரசம் செய்தது /இலங்கை தமிழர் கடையில் வாங்கிய பட்டூ 
என்கிற காயில் சாம்பார்செய்து கணவரை திக்கு முக்காட
செய்தது 
4 பேர் குடிக்கும் டீக்கு பனிரெண்டு டீ பாக்ஸ் போட்டு எனது 
மைத்துனர்களை மயங்கி விழ வைத்தது ..
இதெல்லாம் சாம்பிள்ஸ் மட்டுமே :))எப்படி இருந்த நான் இப்ப
எவ்ளோ முன்னேரியிருக்கேன் சமையலில் ...
ஊக்குவிப்பார் ஊக்குவித்தால் ...அதுக்கு மேலதெரியல  :))
கலை  ஹெல்ப் .Please:)))

இனி நமது சமையல் குறிப்பு முயற்சிகள் செப்டம்பரில் இருந்து 
தங்கு தடையின்றி வெளிவரும் /தொடரும் என்பதை 
சந்தோஷத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் 


இடைப்பட்ட நேரத்தில் எனது ஆங்கில வலைப்பூவை கவனித்து 
வருகிறேன் அங்கே போட்ட கிராப்ட்ஸ் இங்கே உங்கள் பார்வைக்கும்.
இது kokeshi எனப்படும் ஜப்பானிய பொம்மைகள். லீலா கோவிந்த் 
அவர்கள்செய்த CROCHET பொம்மைகள் பார்த்து நான் 
க்வில்லிங்கில் செய்தது .
2D  Baby Kokeshi Doll and open petal quilled flowers
                                                                               


3D Kokeshi Doll
                                                                             
 மீண்டும் செப்டம்பரில் அனைவரையும் சந்திக்கின்றேன் 
வித விதமான சமையல் குறிப்புகளுடன் :))                                                                 

67 comments:

 1. மிக அழகாக இருக்குது உங்க கைவண்ணம்.2வது டோல் பார்க்க உண்மையான குட்டிபெண் போல் இருக்கிறா.

  சமையலிலும் அசத்துங்க.ஹொலிடேயை நல்லா அனுபவிங்க.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அம்முலு

   Delete
 2. ஹை அஞ்சு! விருது பெற்றமைக்கும், வலைச்சரத்தில் அறிமுகமானதிற்கும் அதுவும் என்னையும் கவர்ந்த நெல்லிக்காய் ரச சமையல் குறிப்புடன்:) வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்!

  அஞ்சு பிறக்கும்போதே யாரும் எந்ததுறையாகிலும் திறமையோடு பிறப்பதில்லையே. எல்லாமே பழகப் பழக வந்திடும். அத்துடன் ஊக்கமும் முக்கியமே;)

  அருமையாக இருக்கு நீங்கள் செய்த 2D, 3D Baby Kokeshi க்விலிங் பொம்மைகள். இரண்டுமே மிகவும் தத்ரூபமாக வந்திருக்கு. மற்றும் அந்த பூக்களும் அழகோ அழகு.

  மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அன்பான ஊக்குவிக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி இளமதி

   Delete
 3. அழகாக உள்ளது... பாராட்டுக்கள்...

  தொடருங்கள்... விருதுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிங்க தனபாலன் .நீங்க கைகாட்டி விடாட்டி நாங்க ஃபேமஸ் ஆனது தெரியாமலேயே போயிருக்கும் அதற்க்கு உங்களுக்கு டபுள் நன்றி

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. அருமையான கைவண்ணம்.விருதுக்கு வழ்ழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸாதிகா

   Delete
 6. விருதுக்கு வாழ்த்துக்கள் ஏஞ்சலின்,க்வில்லிங் கார்ட்ஸ் மிக அழகாக இருக்கு...

  ReplyDelete
 7. உங்களின் நெல்லிக்காய் ரசம் செய்து பார்த்தேன்,மிக அருமை...விரைவில் பகிர்கின்றேன்.மிக்க நன்றி ஏஞ்சலின்!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மேனகா

   Delete
  2. Awwww எனக்கு ரொம்ப ஷையா :))இருக்கு i am blushing :))
   மிக்க நன்றி மேனகா

   Delete
  3. ஹ ஹ ஹ ஹ ஹாஆஆஆஆஆஆ அக்கா அக்கா ஆஆஆஆஆஅ சத்தியமா எம்னால சொரி என்னால முறியல ....ராத்திரி ரெண்டு அரை மணிக்கு பெட்ல விழுந்து பிரண்டு பிரண்டு சிரிக்கிறேன் அக்கா ...ஆஆஆஆ ஹ ஹ ஹா ஹா .....

   அய்யாயோஒ அக்கா ...ச்நேக்ஹா மாறி சிரிச்சிட்டு இருந்த என்னை.......நானாம் ...... சிரிக்க வைசிடீன்களே அக்கா ....
   .

   Delete
 8. அன்புள்ள நிர்மலா,

  விருதினை ஏற்றுக்கொண்டதற்கு என் நன்றிகள். வாழ்த்துகள்.

  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

  2D வாழ்த்து அட்டையும், அந்த 3D பொம்மைகளும் அழகோ அழகு. பாராட்டுக்கள். ஒரு மாதம் வெளியூர் பயணமா? பயணம் இனிமையாக வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.

  அன்புடன்
  vgk

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோபு சார்.வெளியூர் போகல்லை உள்ளூரிலேயே அவுட்டிங் ப்ரோக்ராம்ஸ் நிறைய இருக்கு .

   Delete
 9. Hi Akka....

  how are you?! so nice to see your crafts after a long time (I mean I am seeing it after long time :)) )
  As usual awesome crafts.... 3D doll is amazing.....
  Samayal la kooda pala sadhanaigal nadakuthu pola!! :-))
  vazhthukkal akka......
  take care.....

  Regards,
  Prabu M

  ReplyDelete
  Replies
  1. i am fine prabu .thanks for your lovely comments .
   (I mean I am seeing it after long time :)) ) //
   yes i know ... நீங்க நலமா பிரபு .டேக் கேர்

   Delete
  2. am doing good akka :)
   Thank you.... so nice of you...

   Delete
 10. மிக அழகான கைவண்ணம்! பொம்மைகள் வெகு அழகு!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 11. Superb...! :)

  Got some works..will come back soon Angel Akka!

  ReplyDelete
  Replies
  1. Thanks Sis .come when you are free .

   Delete
 12. எப்பிடியிருந்த நீங்கள் இப்பிடியாயிட்டீங்கள் ஏஞ்சல்....சமையல் சிரிப்பு....நானும் சலாட்டை வாங்கிக் கோவா எண்டு வறை செய்தேன்....உதைப்போல கனக்க...இப்ப ஓகே !

  உங்கள் கை வண்ணம் எப்பவும்போல அசத்தல் !

  விடுமுறையா ஒரு மாதம்.சுகமாய் இருங்கோ.சந்திக்கலாம் !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா .இந்த பின்னூட்டம் எல்லாம் கலை கண்ணுக்கு மட்டும் தெரியவே கூடாது :))

   Delete
 13. ஆஹா..ஆஹா.... கலக்கல். அந்த ரெடி பெயார் பிள்லையை எப்பூடி, பள்ளமாக்க்கி எடுத்தீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்ப எது போட்டாலும் ஒழுங்கா ஸ்டெப் பை ஸ்டெப்பாப் போட்டுக் காட்டோணும் எனச் சொல்லியிருக்கிறேன் எல்லோ... இதெல்லாம் சரிப்பட்டு வராது, படம் கீறினதில இருந்து வெட்டி எடுத்ததில இருந்து அனைத்தையும் போடோணும் இனிமேல் சொல்லிட்டேன்....

  இல்லாட்டில் என் போன்ற பேபீஸ்ஸ்(உஸ்ஸ் ஆரது முறைக்கிறது கர்ர்ர்ர்ர்:)) எப்பூடி செய்ய முடியும்? இன்னும் அணிலாரே செய்து முடிக்கவில்லை.

  இப்போ பிளாஸ்டிக் ஸ்பூன் தேடிக்கொண்டிருக்கிறேன், இன்று போன சூப்பமார்கட்டில் இருக்கவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர் மியாவ் ..நான் ஒரு nocturnal crafter .இரவிரவா விழித்து செய்தேன் ... அவசரத்தில் போட்டோ எடுக்கல .நீங்க போய் என் ஆங்கில பக்கமும் பாருங்க சிம்பிளா சொல்லிருக்கேன் .
   hereafter shall try to put step by step instructions :))

   Delete
  2. hereafter shall try to put step by step instructions :))///

   அது...அது அது... எங்கிட்டயேவா?:))..

   Delete
 14. என்னாது செப்டெம்பரில இருந்து சமையல் குறிப்போ?.... ஹையோ.. உடனடியாக பிரித்தானிய நீதிமன்றத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கிறேன்ன்ன்... அஞ்சுவை அல்ல, மகியையும், கீரியையும்:)). எய்தவர் இருக்க, அம்பை நோகலாமோ?:).

  போடுங்கோ போடுங்கோ... நாம் இருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. giri and mahi come and help please

   Delete
  2. நோஓஓஓஓ அவை வரமாட்டினம்... அங்கின என் மெயில் ஐடி கேட்டு.. என்னமோ ஏதோ நடக்குது.. நான் பார்த்திட்டு ஓடி வந்திட்டன்ன்ன்ன்:)).. உஸ்ஸ் தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்:).

   Delete
  3. அஞ்சு இதோ வந்துட்டேன் நீங்க தைரியமா குறிப்ப போடுங்கோ கச்சாயம் டிப்ஸ் இல் இருந்தே நான் guarantee . பூஸ் பாவம் நீதி மன்றத்தில் தனியா நிக்கட்டும் என்னைய அவங்க பக்கத்துக்கு அத்தன தடவ போக வெச்சதுக்கு தண்டனையா:)) இன்னும் பதிவு போடலே அஞ்சு. இதுக்கு எல்லாம் சேர்த்து நான் பெரி................ய மெயில் அனுப்பித்தான் கொடுமை :)) படுத்தணும் கொசு மெயில் மட்டும் என் கையில் கிடைக்கட்டும் அன்னிக்கு வெச்சுக்குறேன் கச்சேரிய:))

   Delete
  4. கிரி அக்காவே தைரியமா சமையல் குறிப்பு போடும்போது நீங்களும் போடுங்கோ ....

   Delete
 15. அஞ்சு விருதுக்கு வாழ்த்துக்கள். உங்க சமையல நீங்க ரொம்ம்ம்மம்ப கம்மியா எடை போட்டு இருக்கீங்க. படங்களை பார்க்கும் போதே நீங்க சூப்பர் ஆ சமைப்பீங்கன்னு தெரியுது. கலக்குங்கோ!

  நீங்க சமையல் இல் சொதப்பினதை ஒரு பதிவா போடுங்க இந்த மாதிரி எல்லாம் தப்பு பண்ணலேன்னா தான் அதிசயம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. போட்டுறலாம் கிரி !! இன்னும் நிறைய இருக்கு
   இப்பெல்லாம் எல்லாரும் சமையல் குறிப்பில் படத்துடன் போடறாங்க எவ்ளோ ஈசி .முந்தி ஒரு புக்கில் டி. என் . சேஷனின் மனைவி வற்றல் மிளகாய் சேர்த்து அரைக்கவும் என்று சொன்னதை நான் அப்படியே மனதில் வச்சு மோர் மிளகா வற்றலை சேர்த்து வாழக்காய் TAMBARIND கறி சுமார் ஒரு ரெண்டு வருஷம் செய்திருக்கேன் .அதெல்லாம் ஒரு காலம் .அது சரி அப்ப அங்கயும் நிறைய இருக்கும்போலிருக்கே எடுத்து விடுங்க கிரி

   Delete
 16. டெடி ரொம்ப அழகா இருக்கார். அப்புடியே உங்க அன்பு தங்கைக்கு அதை டெடிகேட் பண்ணிடுங்க.

  பூஸ் பேபி ன்னு சொன்னதுக்கு அப்புறமும் கொந்தளிக்காம எப்புடி இருக்க முடியுது உங்களால அஞ்சு :))

  ReplyDelete
  Replies
  1. Giri that .....that is second infancy :)))ROFL

   Delete
 17. me the last...
  உங்கள் சமையல் ஜாலம் தொடரட்டும்
  உங்களால் பலர் பயன் பெறட்டும்
  சமைக்கவே தெரியாத பலருக்கு வழிகாட்டியாக இருக்கும்
  ஆவலுடன் செப்டேம்பரை நோக்கி ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சிவா ...நம்மால் நாலு பேர் பயனடைஞ்சா சந்தோஷம் .
   உங்களுக்கு ஏதும் டிப்ஸ் வேணும்னா தயங்காம கேளுங்க சிவா

   Delete
  2. அஞ்சு அக்கா டூ யு வான்ட் எனி சிசுவஷன் மியூசிக் ....


   டோண்ட்ட டோன்ட்ட தொன்ட்ட டொய்ங்....


   நாயகண் படத்துல கமலுக்கு போட்ட அதே டோன் தான்

   Delete
 18. வாங்கின விருதுகளுக்கும்
  வாங்க போகும் விருதுகளுக்கும்
  வாழ்த்த வயதில்லை
  இருந்தாலும் வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 19. Vaazthukkal angelin.QUilling endral meel suzharchu endru enge kandu pidithirgal?? allathu athu ningal vaitha peryara?eppadi irupinum nandri "indru oru thagavalukku" :)

  ReplyDelete
  Replies
  1. ஆ வெல்கம் கீது!! டு மை தமிழ் பக்கம் :))

   நாங்க இங்க ஜாலியா சந்தோஷமா விளையாடும் இடம் நீங்களும் வாங்க
   அடிக்கடி..Recycle =மீள் சுழற்சி எல்லாம் நம்ம மூளைக்கு எட்டாத தமிழ் வார்த்தைகள் நான் இமா கிட்ட இருந்துதான் கற்றுக்கொண்டேன்

   Delete
 20. ஏஞ்சல் அக்கா, லிங்க்-க்கு நன்றி! என் ப்ளாக்ல ஏதோ குழப்பம்..ரீசன்ட் போஸ்ட் மத்த ப்ளாக் டாஷ்போர்டில் அப்டேட் ஆகமாட்டேன்னுது. ஸோ, அதே போஸ்ட்டை மறுபடி பப்ளிஷ் பண்ணிருக்கேன். உங்க 2 கமென்ட்ஸும் பழைய போஸ்டில இருக்குது, சாரி! :)

  இப்ப போட்டிருக்கும் போஸ்ட் உங்களுக்கு டாஷ்போர்டில் அப்டேட் ஆகியிருக்கா என பாருங்க. தடங்கலுக்கு வருந்துகிறேன். மீண்டும் வருவேன். :)

  ReplyDelete
 21. வணக்கம் அஞ்சலின் அக்காள்.
  விருதுக்கும் வலைச்சர அறிமுகத்துக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. அந்த டோல் அழகாய் இருக்கு!

  ReplyDelete
 23. இனிதே வசந்த காலத்தினை இனிதே கொண்டாடி விட்டு வாங்க காத்திருக்கின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நேசன்

   Delete
 24. முதலில், விருதுக்கும் வலைச்சர அறிமுகத்துக்கும் வாழ்த்துக்கள்!

  அடுத்து...பச்சை நிற மையில் 'இலை-மறை காயாக' மறைக்கப்பட்ட உங்க சமையல் எக்ஸ்பெரிமென்ட்ஸுக்கு... அவ்வ்வ்வ்வ்வ்! என்ன சொல்ல எனத் தெரியலே! :))

  அனுபவம் ஒரு நல்ல ஆசான். இப்படியான அனுபவங்களை பலரும் வெளியே சொல்வதில்லை, நீங்க சொல்லிட்டிங்க,அவ்வளவுதான்! :)) தட்ஸ் நைஸ்! ;)

  கரடிப்பிள்ளை:) நல்ல லட்சணமா இருக்கிறார். பொம்மைகளும் வெகு அழகு! இப்படி அழகான திறமைளைக் கொண்ட கைகளுக்கு சமையல் ஒன்றும் பிரமாதமில்லை..கலக்குங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பொன்னான கருத்துக்களுக்கும் நன்றி மகி .
   எல்லாரும் என்னைய உசுப்பி உசுப்பி புதுசு புதுசா சமையல் ட்ரை பண்ண சொல்றீங்க உங்க ஆசையை நிறைவேற்றுகிறேன் :))

   Delete
 25. கை வண்ணம் மிக அழகு ஏஞ்சலின்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி அக்கா .

   Delete
 26. இடுலாம் அநியாயம் அக்கரமம் ...இதைக் கேக்க ஒரு நல்லவங்கக் கூட இந்த ப்லோக்கில் இல்லையா ....ரெண்டு மாதம் விடுமுறை னு சொல்லிட்டு தூசி தட்ட எப்புரி வயலாம் நீங்க ...ரெண்டு மாதம் ஜாலி ஜாலி யா இருக்கலாம் மெண்டு நினைத்தேன் அல்லோ ....

  ReplyDelete
  Replies
  1. அப்படி சொல்லி நீங்க இந்த பக்கம் வராத நேரம் போஸ்ட் போடலாம்னு நன்ச்சேன் :))அவ்வவ் ..
   நம்ம பெருமையா நாமே சொன்னாதான் உண்டு :))

   Delete
 27. விருது வாங்கியமைக்கும் ....


  பாபுலர் சமையல் ராணி பட்டம் (இதுக்கு பேரு தன் கலிகாலம் )

  வாங்க போறமைக்கும் வாத்துக்கள் அக்கா ...

  வாத்துக்கள் வாத்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. Thanks Kalai ..அடுத்ததடவை அக்கா ப்ளாகுக்கு வரும்போது ஆடோக்ரப் புக்கோடு வாங்க ஓகே :))

   Delete
 28. மிளகையும் சீரகத்தையும் அரைக்காமல் முழுதாக
  போட்டு ரசம் செய்தது /இலங்கை தமிழர் கடையில் வாங்கிய பட்டூ
  என்கிற காயில் சாம்பார்செய்து கணவரை திக்கு முக்காட
  செய்தது
  4 பேர் குடிக்கும் டீக்கு பனிரெண்டு டீ பாக்ஸ் போட்டு எனது
  மைத்துனர்களை மயங்கி விழ வைத்தது .///

  ஹ ஹ ஹாஹா இது இதாத்தான் எதிர்ப பார்த்தம் அக்கா எப்புரி இன்னும் என்னன்னே இருக்கோ ...

  மாமா கிட்ட கேட்டா தான் இன்னும் தெரியும் .....பரவாயில்லை அக்கா அப்புடி இருந்த நீங்க இப்பம் எப்படி ஆகிட்டீங்க ....கலக்குறிங்க அக்கா ...கிரேட் .....மல்டி டலேன்ட்டு அக்கா நீங்க ...

  ReplyDelete
 29. கிரி அக்கா ட்ட இறுதி தன் பிஷ் பிறை பண்ண கற்றுக் கிட்டேன்..நல்லா இருஞ்சி ...

  அக்கா உங்கிட்ட இறுந்து நிறைய கட்ட்ருக்கணும் கிராப்ட் சமையல் ன்னு ...

  ஆனா நீங்க சர்பத் செய்து ஜிகர்தண்டன்னு லாம் பண்ணக் கூடாது ...ஓகே வா அக்கா ....

  ReplyDelete
 30. அஞ்சு அக்கா கிரி அக்கா வ கேட்டேன் சொல்லுங்க ...கிரி அக்கா ட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சி அதே மாறி ஜெய் அக்கட்டையும் ...

  அக்கா வேலை ரொம்ப இருக்கு அக்கா அதன் ப்லோக்ஸ் வர முடியல ..சரியா பின்னோட்டம் ..இப்போ பார்த்துட்டு கிளபலம் இருந்தேன் செமையா சிரிச்சிட்டேன் அக்கா கோமேத்ஸ் பார்த்து ....
  ,...
  நீங்க சமையல் ராணி ஆகி என்னையும் உங்களது அடுத்த சாமியல் வாரிசா மக்களுக்கு அதிகாரப் பூர்வா ஆக்கணும் ...தூக்கத்தில ஏதோ உலருறேநோ க்கு கொஞ்சம் ரவுட் வருது .டாட்டாஅக்கா கொஞ்சம் தூங்கி ட்டு வந்து கும்மி அடிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. எல்லார்கிட்டயும் சொல்லிடறேன் .

   Delete
 31. வணக்கம்
  தங்கள் வலைப்பதிவு மிக அருமை
  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
  என்றும் அன்புடன்
  செழியன்.....

  ReplyDelete
 32. அஞ்சு அக்கா.... புதுசா யாரோ மெய்ல் போட்டிருக்கிறாங்க உங்களுக்கு. ;) பாருங்கோ.

  ReplyDelete
 33. சன் ஷைன் பிளாக்கர் அவார்டு பெற்றதற்குப் பாராட்டுக்கள்!!

  ReplyDelete
 34. so interesting blog....happy to follow you

  by
  anuprem
  http://anu-rainydrops.blogspot.in/

  ReplyDelete