அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

8/29/12

நேந்திரம் பழ பஜ்ஜி &Flower shaped mini Pizza :))

ஓணம் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் .
                                                                                         
நேந்திரம் பழம் இரண்டு நாட்களுக்கு முன் இந்தியன் சூப்பர் 
மார்க்கட்டில் கிடைத்தது ..எனக்கு வீட்டுக்கு கொண்டு வந்து 
வெட்டிப்பார்க்கும் வரை அது நேந்திரம் பழம்தானா ???????? 
என்ற சந்தேகம் வேறு ..:)))
இரண்டு வாழைப்பழங்களில் ஒன்றினை வெட்டி பழம் பொறி 
அதாவது நேந்திரம்பழ பஜ்ஜி செய்தேன் ..இந்த ரெசிப்பி என் 
அப்பாவின் கைப்பக்குவம் .
அப்புறம் மீதமிருந்த வாழைப்பழத்தை ஆப்பிளுடன் சேர்த்து 
ஸ்மூதியாக ப்லன்டரில் அரைத்து குடித்தோம் .இரண்டுமே 
அருமையாக இருந்தது 
ஃபாய்சாவின் ரெசிப்பி பார்த்து செய்த இளநீர் அகர் அகர் ..
நான் சைனீஸ் கடையில் வாங்கிய இந்த டின் இளநீர் சேர்த்து 
செய்தேன் மிக அருமையாக இருந்தது .
நேந்திரம் பழ பஜ்ஜி//   Pazham Pori///

தேவையான பொருட்கள் 
நேந்திரம் வாழை பழம் .... ஒன்று 
மைதா மாவு .....  இரண்டு கப் 
அரிசி மாவு ....  ஒரு ஸ்பூன் 
சர்க்கரை ..... இனிப்பு வேண்டுபவர்கள் தேவையான அளவு 
சேர்த்துக்கொள்ளவும் ..நான் ஒரு ஸ்பூன் சேர்த்தேன் ..
வெனிலா எசன்ஸ் ..... இரண்டு சொட்டு 
மஞ்சள் கலர் ......... ஒரு சிட்டிகை ..
எண்ணெய்...... பொரிப்பதற்கு தேவையான அளவு .
மைதா /அரிசி மாவு /சர்க்கரை இவற்றை நீர் சேர்த்து பஜ்ஜி மாவு 
பதத்துக்கு கலக்கவும் அதில் மஞ்சள் கலர் வெனிலா எசன்ஸ் 
ஆகியவற்றை சேர்த்து மெல்லிய துண்டங்களாக வெட்டிய 
வாழைப்பழங்களை தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும் ..
Flower shaped mini Pizza :))
இது சிநேகிதி ஃபாய்சாவின்  Party Snacks Event  அனுப்புகிறேன் 

                                                                                 

                                                                                           
pastry cutter மலர்  வடிவில் வாங்கியது வீட்டில் இருந்தது ..
நேற்று பிட்சா செய்யும்போது தானாக தோன்றிய யோசனை :))
பிட்சா மாவை தட்டையாக உருட்டியபின் பேஸ்ட்ரி கட்டரால் 
வெட்டினேன் ...பின்பு ஒவ்வொரு மலர் ஷேப்பின் மீதும் 
தக்காளி சாஸ் சிறிது சீஸ் / ஆவியில் வேக வைத்த ப்ரோக்கொலி /
காரட் மற்றும் சிவப்பு சாலட் வெங்காய ,தக்காளி துண்டங்கள் 
மற்றும் ஆலிவ்ஸ் இவற்றால் அலங்கரித்து அவனில் பேக் 
செய்து எடுத்தேன் சிறிய வடிவமாக இருப்பதால் வெறும் சீஸும்
 தக்காளி மற்றும் ப்ரோக்கொலி வைத்து அலங்கரித்தால் போதும் .

********************************************************************************************************
கீழே இருப்பதும் இவென்டிற்கு அனுப்பலாம்னு யோசிச்சு 
கைவிட்டுட்டேன் :)) இது கிட்ஸ் பார்ட்டி இந்த ஷேப்பை பார்த்ததும் 
சிறு பிள்ளைகள் கும்மி அடிக்கிற விளையாட்டை விளாடினால்
பார்ட்டியில் கீழே கட்லட்டேல்லாம் சிதறி :))))))
                                                                                      
ஏனென்றால் இதை பார்த்ததுமே என் மகளே இரண்டை எடுத்து 
கும்மி விளாடியதால் பயம் வந்தது .
போட்டோ மட்டும் பார்வைக்கு .OVAL SHAPE வெஜிட்டபிள் கட்லட் 
செய்து சோளமாவில் மற்றும் ப்ரெட் தூளில் முக்கி மெல்லிய 
காபி கலக்க வைத்திருக்கும் குச்சிகளை நுழைத்து தவாவில் 
பொரித்து எடுத்தேன் .
தனியே பொரித்தும் பின்பு குச்சிகளை நுழைக்கலாம் 

முக்கிய குறிப்பு :))காபி ஸ்டிக்ஸ் உபயம் >>>>>>>>>> MCDONALDS

68 comments:

 1. ருசியான ரச்னையான சமையல் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா :) முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி :)

   Delete
 2. நேந்திரம் பழத்தில் பஜ்ஜியா?
  OK OK
  நிர்மலா செய்தால் அதுவும்
  நல்லாத்தான் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க :)) பழம் பொறி என்று கேரளாவில் பிரபலமாச்சே அந்த இனிப்பு பஜ்ஜிதான் இது ....ஆனா சிப்ஸ் தான் நம்ம விருப்ப பதார்த்தம்

   Delete
 3. Nice recipes Angel akka! Flower pizza looks cute! :) I love pazham pori! Nice idea with the coffee sticks! McDonalds is going to sue you soooooooooon! :D :D LOL! ;) ;)

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆ :)) வாங்க மகி ...ஊரில் மயில்களெல்லாம் நலமா ...ஓகே ஓகே நீங்களும் நலமா ..இன்னும் நீங்க பூசாருக்கு மொய் வைக்கலையே ??
   மெக்டானல்ட்ஸ் குச்சி அதீஸ்தான் இப்ப வச்சிருக்காங்க :))
   யாரும் கேட்டா அதீஸ் எனக்கு அனுப்பினதா சொல்லி தப்பிசுக்கறேன் ஹையா :))

   Delete
  2. ஆ... வந்துட்டேன்ன்ன்.. ஆரது குச்சி பற்றிக் கதைப்பது? மக்டொனால்ட்ஸ் ஹெட் ஒபீஸ், அமெரிக்காவில இருக்கு அதன் எம் டி எங்க ரெண்டு விட்ட அண்ணாதான், வேணுமெண்டால் சொல்லுங்கோ.. பெட்டி பெட்டியா அனுப்பச் சொல்றேன்ன்.. குச்சியைத்தான்:).

   Delete
 4. அஞ்சூஊஊஊ!
  சமையல் இப்பதான் கத்துக்கிறேன் என்று சொன்னமாதிரி இருக்கு:)) அதற்குள் இப்படியா? ரொம்ப மேலே மேலே போய்க்கொண்டிருக்கிறீங்க;)
  பார்க்கும் போதே ம். ம். அருமையா இருக்கு.
  இன்னும் மேலே ஏற வாழ்த்துக்கள்;)

  அதுசரீஈஈஈ நேந்திரம் பழம்னு நீங்க சொல்லுறது காயாக இருக்கும்போது பொரியல், வறுவல் சமைக்க பயன்படுவதுதானே. எங்க ஊரிலே அதை கறிவாழைக்காய் என்போம். அதுவா இது:(

  ReplyDelete
  Replies
  1. இது கேரளத்து பழவகை இளமதி ...வெட்டினா ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ..நான்கவேக வைத்துதான் பிரதமன் மற்றும் சும்மாவும் சாப்பிடுவோம் .
   //சமையல் இப்பதான் கத்துக்கிறேன் என்று சொன்னமாதிரி இருக்கு:))//
   எதோ சுமாரா செய்வேன் என்னையும் நம்பி பாய்சா இன்வைட் செய்தாங்க ..சும்மா ட்ரை செய்றேன் :))

   Delete
 5. ஆஆஆஆஆஆஆஆஆ வருகிறேன்ன்ன், இம்முறை எனக்கு எல்லாமே வேணும்.. விரைவில் வாறேன்ன்ன்...

  ReplyDelete
  Replies
  1. பூசார் டூ லேட் :)))..
   வேணும்னா நாலு குச்சி இருக்கு எடுத்துக்கறீங்களா

   Delete
  2. 24 மணி நேரம் ஆயிடிச்சு இன்னும் பூசார காணோம்? குச்சின்ன ஒடனே பயந்து போய் குவில்டுக்குள்ள இருக்காங்களோ :))

   Delete
  3. ஆஆஆஆ கீரிட பிளேனும் எனக்கு முன் லாண்டட்டோ?:)) இது எப்பூடி சாத்தியமாகும்?:)

   Delete
 6. எனக்கும் கடைசிப்படத்தில் இருக்கும் சாப்பாடு வேண்டும்!ஹீ

  ReplyDelete
  Replies
  1. ஆஹா !! தாராளமா எடுத்துக்கோங்க நேசன் ..நானே மெக்டானல்ட்ஸ் குச்சியை வச்சிட்டு பயந்துகிட்டு இருந்தேன் ..நீங்கதான் அதுக்கும் பொறுப்பு ஆஆஆ :::::)))ஓகே

   Delete
 7. ஆஹா! சூப்பர்.ஏஞ்சலின் இப்படி இங்கேயே சுத்த விட்டுட்டீங்களே!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியா :)) இன்னும் நேந்திரங்காய் கிடைச்சா உங்க ரெசிப்பி சிப்ஸ்தான் முதலில் செய்யணும் .

   Delete
 8. பழ பஜ்ஜின்னு சொல்லுவாங்க இங்கே,... அருமையாக இருக்கும்! அவ்வப்போது சாப்பிடுவதுண்டு!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தம்பி .ஆமா மிடில் ஈஸ்ட்லயும் கிடைக்குதா ..இப்பதான் இங்கே வர ஆரம்பிச்சிருக்கு

   Delete
 9. பகிர்வுக்கு மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்பாளடியாள்.

   Delete
 10. அஞ்சு சூப்பர்.நானும் இந்த பஜ்ஜி கேரளாவில் சாப்பிட்டிருக்கிறேன்.நல்லா இருக்கும்.ஆனா இதை நேந்திரம்பழத்தில் செய்தால்தான் டேஸ்ட்.இங்கு நான் try
  பண்ணினேன்.சரியாவர‌ல்ல.

  கலக்கிறீங்க பிட்ஸா,கட்லட் என்று.

  போட்டியில வின் பண்ணுங்க.best wishes.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
   நான் செய்தது நேந்திரம் பழத்தில்தான்:)) நீங்க சொல்லும் மற்ற பழம் பெரிய அளவில் ஆப்பிரிக்க வெரைட்டி இது அது இல்லை .
   இங்கே ஒரு ஏசியன் கடை இருக்கு அதில் பருப்பு கீரை என்று சொல்வாங்களே அது மற்றும் தண்டு கீரை எல்லாம் கிடைக்கும் .
   நானும் சந்தேகப்பட்டுத்தான் வெட்டினபிறகு திருப்தியானேன் .

   Delete
  2. அவ்வவ் நான் சும்மா ஐடியாஸ் மட்டும் ஷேர் செய்கிறேன் ..

   Delete
 11. நேந்திரமபழம் பஜ்ஜி சூப்பர் அதனை வித சூப்பர் Flower shaped mini Pizza.. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாதிரி அழகாக இருக்கு thanks for linking this recipe to my event..Expecting more recipes from you

  ReplyDelete
 12. party snacks event லோகோவை உங்கள் ப்ளாகில் இணைத்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாய்சா ..முதலில் லோகோ படம் சேவ் ஆகலை அப்புறம் சரி வந்தது .
   என்னது இன்னும் நிறைய ரெசிப்பியா அவ்வவ்

   Delete
 13. வித்தியாசமா இருக்குங்க... வீட்டில் செய்து பார்ப்போம்...

  நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி தனபாலன்

   Delete
 14. நேத்திரம்பழம் பஜ்ஜி... 'ஏதோ ஒரு பாட்டு' நினைவுக்கு வருகிறது. இரண்டும் பிடிக்கும். படத்துல இருக்கிற பழத்தையா சாப்பிட்டீங்க அஞ்சூஸ்!!! எச்சரிக்கை! அடுத்த வெளியீடு இரட்டையாய் அமையும் அபாயமுள்ளது. ;)))))

  பீட்ஸா சூப்பர் ஐடியா. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  உபயம்லாம் பப்ளிஷ் பண்ணலாமா இப்படி! ;D

  ReplyDelete
  Replies
  1. இமா ஆஆஆ நாட்டி இஈஈஈ :))

   Delete
  2. அவ்வ்வ்வவ்வ்வ்வவ்!!!!!:)) எனக்கு இந்த விஷயம் இப்பதான் விளங்குது:))))))))))))))

   Delete
  3. //'ஏதோ ஒரு பாட்டு' நினைவுக்கு வருகிறது//
   yes imma:))
   நீங்க சொன்னவுடன் தான் எனக்கும் அந்த அருமையான பாடல் நினைவுக்கு வருகிறது ...அந்த படமும் ஒன் ஒப் மை ஃபேவரிட் மூவி :))
   repeating giris comment :)))))
   இமா ஆஆஆ நாட்டி இஈஈஈ :))... 1000 times

   Delete
  4. என்ன இமா ஸ்ஸூ வாணுமோ? என்ன சைஷ் எனச் சொல்லுங்கோ வாங்கி அனுப்புறேன்ன்.. விரருக்கோ சமருக்கோ?:))

   Delete
  5. //இமா ஆஆஆ நாட்டி இஈஈஈ :)//

   என்னாது இமா நாட்டியம் பழகுறாவோ? உண்மையாவோ? ஹையோ ஜாமீஈஈஈஈஈ.. இப்பத்தான் கை நோவிலிருந்து மீண்டவ, இனிக் கால் நோ வந்திடப்போகுதேஏஏஏஏ:))...

   அஞ்சு போற வழியில நேத்திரப்பழம் கிடைக்கும், மீயைக் காப்பாத்துங்கோ... மீ ரொம்ப மோசம்ம்ம்ம்ம்ம்:))

   Delete
  6. உண்மை, அதிராட 25வது கலியாண நாளுக்கு ஆடப் போறேன்ன்ன்ன். ;)

   Delete
 15. நேந்திரம் பழ பஜ்ஜி நல்லா இருக்கு அஞ்சு. நான் கேரளா ரெஸ்டாரன்ட் இல் சாப்பிட்டு இருக்கேன். மேலே சிரப் போட்டு கொடுத்தாங்க. ஆனா தனியா சாப்பிட்டா நல்லா இருக்கும்.

  pizza நல்ல ஐடியா. வாழ்த்துக்கள். பூஸ் ஷேப் கட்டர் இல்லையா அஞ்சு?? எங்கயாச்சும் பார்த்தா வாங்கிடுங்க :))

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஐடியாதான் கிரி :) நீங்க எங்காச்சும் பூஸ் ஷேப் கட்டர் பார்த்தா சொல்லுங்க :)) வாங்கி கண் காது மீசை எல்லாம் வச்சு அவனில் சுட்டு அடுக்கறேன் .

   or else i shall try to design one ...
   எவ்ளோ செய்றோம் இந்த பூஸ் ஷேப் கட்டர் செய்ய்துற மாட்டோமா

   Delete
 16. காபி ஸ்டிக் தட்டுபாடுன்னு அன்னிக்கு பிபிசி யில் சொன்னாங்க அஞ்சு :)) இன்னும் சின்னதா ரவுண்டு ஆ கட்லெட் பண்ணி டூத் பிக் இல் வெச்சு செர்வ் பண்ணி இருக்கேன். அந்த மாதிரி ட்ரை பண்ணுங்க அஞ்சு

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அந்த ஐடியா வந்தது ...ஆனா டூத் பிக் குத்தி
   ஹெல்த் அன்ட் சேப்ட்டி இல்லன்னு யாரும் நம்ம மேல கேச போடக்கூடாதே ...குறிப்பா பூஸ் இந்த மேட்டரில் ரொம்ப கிளெவர்:))))

   Delete
  2. ஹையோ சாமீஈஈஈஈஈஈ மீ ஒரு அப்பாஆஆஆஆஆஆஆவி:)))

   Delete
 17. நேந்திரம்பழ பஜ்ஜி நன்றாக இருக்கு.மற்றவைகளும் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வாங்க காமாட்சி அம்மா ..உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 18. வணக்கம்,அஞ்சலின்!அருமை,பார்க்கும் போதே நாவு.......................!ம்ம்ம்ம்ம்ம்,எல்லாம் இப்போ சாப்பிட்டு முடிந்திருக்கும்.ரொம்பவே மிஸ் பண்ணுறேன் போல?///முக்கிய குறிப்பு :))காபி ஸ்டிக்ஸ் உபயம் >>>>>>>>>> ம்ச்டோனல்ட்ஸ்./////!!!!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க :) அண்ணா ..லேட்டானாலும் பரவாயில்லை ..நான் ப்ரெஷா சுட்டு தரேன் உங்களுக்கு ஸ்பெஷல் .
   உங்க மருமக நெட் சரியாகரதுக்குள்ள நான் ஒரு செட் சமையல் குறிப்பு போட்டு முடிக்கணும் ...தேடி வந்து கலாட்டா செய்வா :)))

   Delete
 19. >>>>>>மக்டோனல்ட்ஸ்<<<<<<MCDONALDS.

  ReplyDelete
 20. பிளவர் ஷேப் பிஸ்ஸா மற்றும் பஜ்ஜி ஊப்பரா இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேனகா :)) ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 21. நான் கண்டு பிடிச்சுட்டேன்ன்ன்ன்:)) உந்த அகர் அக்ர் அஞ்சுவுக்கும் கட்டியா வரேல்லை:) தண்ணி ஜெலியாத்தான் வந்திருக்கு..... மீட சொந்தக் கதை சோகக்கதையை ஒரு பதிவாப் போடப்போறேன்ன்ன்:)) எல்லோரும் டிஷ்யூ எடுத்திட்டு ரெடியா வாங்கோ.. கண் துடைக்கத்தான்ன்..:))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ரர்ர்ர் :))))))) மியாவ் :))
   கட்டியா வராட்டி எப்படி கவிழ்த்து தட்டில்,வைத்திருக்க முடியும் ???????
   அதுவும் அந்த பிங்க் நிற அகர் அகர் ஜெல்லி ஃபலோஊடாவில் நொறுக்கி போட்டு குடிச்சோம்
   //எல்லோரும் டிஷ்யூ எடுத்திட்டு ரெடியா வாங்கோ.. கண் துடைக்கத்தான்ன்..:))//
   pink color please :))))))

   Delete
  2. //தண்ணி ஜெலியாத்தான் வந்திருக்கு..... //

   பூஸ் நான் மகியின் ரெசிபி பார்த்து செஞ்சேன் நல்லாத்தான் வந்திச்சு. நீங்க ட்ரை பண்ணி பாருங்க. தேங்காய் பால் சேர்த்து செஞ்சேன். அஞ்சு நான் ஒரு பாக்ஸ் டிஷ்யு வாங்கி வெச்சுகிட்டு ரெடியா இருக்கேன் :))

   Delete
 22. இளநீரில் அகர் அகரோ? நானும் செய்யோணும்... ஓயமாட்டேன்ன்ன் ஓயமாட்டேன்ன்ன் அகரகர் கட்டியா வருவரை ஓய மாட்டேன்ன்ன்ன்ன்:))

  ReplyDelete
  Replies
  1. பூஸ் மியாவ் போன வருஷம் செய்தப்ப தண்ணியாதான் வந்தது இப்ப நல்லா வந்திருக்கு ....இளநீர் நான் போட்டா பிராண்டே போடுங்க அதுதான் நல்ல டேஸ்ட் :)all the best:))

   Delete
 23. கட்லட்டுக்குள்ள என்ன இருக்கு அஞ்சு?

  ReplyDelete
  Replies
  1. ஒரு காபி கலக்கும் குச்சி :))))))

   Delete
  2. வேணும் பூஸுக்கு. ;))))))

   Delete
  3. பாவம் பூஸ் கீப் இட் அப் அஞ்சு :))

   Delete
 24. நட்சத்திரப் பிட்ஷா சூப்பர்.. வெற்றிபெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. Garrr:)) thats flower shape :)))))awwwww

   Delete
  2. ;))))))) என்ன நடந்துது அதீஸ்!! நலம்தானே!! ;))

   Delete
 25. என்னவோ எல்லாம் செய்து சாப்பிடுங்கோ.நல்லா இருங்கோ வேறென்ன சொல்ல இருக்கு எனக்கு.அதுவும் குச்சில குத்தி....ஸ்டார் மாதிரிச் செய்தெல்லாம்....அழுகைய வருது ஏஞ்சல் & அதிரா !

  ReplyDelete
 26. Angelin akka, பிளவர் pizza ரொம்ப அழகா இருக்கு...

  ReplyDelete