அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

8/27/12

வாழ்த்துகிறோம் :))))

சிரிப்பு மற்றும் கல கல பேச்சாலும் எழுத்தாலும்  அனைவரின் 
உள்ளங்களை கொள்ளை கொண்ட பூசாருக்கு  ஸ்பெஷல் post :))
 இன்று திருமண நாள் கொண்டாடும் எங்கள் அன்புக்கினிய 
தோழி அதிராவும் அவரது கணவரும்  பல்லாண்டு எல்லா சந்தோஷத்துடனும் எல்லா ஆசீர்வாதங்களுடனும்  இருக்க இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம் :)))) 


                                            

இளநீர் அகர் அகர் ஜெல்லி 
Thanks Faiza

 மற்றும் மீன் ஷேப் கட்லட் .

                                    அதீஸ் ஷேர் பண்ணி சாப்பிடனும் ஓகே :)அனைவரும் மறவாமல் மொய்ப்பணத்தை
 $ ,£,€  வாக தரவும் :)))

                                                                                
வாழ்த்தும் அன்புள்ளங்கள் 
அகில உலக அதிரா ரசிகர் மன்றம் :))))))
UK,IRELAND ,SCOTLAND ,FRANCE ,GERMANY,NORWAY ,SWEDEN,
DENMARK ,CANADA ,U.S.A ,AUSTRALIA ,INDONESIA , NEWZEALAND ,
U.A.E ,EMIRATES ,DOHA , Kuwait ,SRILANKA ,INDIA ......

(இன்னும் பல கிளைகள் இருக்கு )
{பொறுப்பாளர்/ காசாளர் }
Angelin.

69 comments:

 1. நிர்மலா,

  நான் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  VGK

  [மொய்ப்பணத்தை பொறுப்பாளர் / காசாளர்
  Angelin அவர்களை நேரில் சந்திக்கும்போது மட்டுமே தருவேன். ஏனென்றால் தொகை மிகவும் அதிகமானது. வேறு வழிகளில் அனுப்பினால் பாதுகாப்பு பத்தாது. ;) ]

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் :)) நீங்க சொல்வதும் சரிதான் :))
   ஆனா அமவுண்டை NRFC அக்கவுன்டிலும் போடலாம் :))

   Delete
 2. அஞ்சு நானும் என் இதயங்கனிந்த இனிய நல்வாழ்த்துக்களை திரு திருமதி அதிரா அவர்களுக்கு உங்களினூடாகவும் கூறிக்கொள்கிறேன்.

  எங்களுக்கு கணக்கு விடாமல் ஒழுங்காக கணக்கு காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில் மொய்ப்பணத்தை நீங்கள் தந்த கணக்கிலக்கத்திற்கு அனுப்பிவிட்டேன்:)))

  பட்சணங்கள் வேறு இல்லையா? சரி அஜெஸ் பண்ணிக்கிறேன்:)))

  மிக்க நன்றி அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :))இளமதி வாங்க ...
   நேற்றே தெரிஞ்சிருந்தா வேறே பட்சணம் செய்திருப்பேன் அகர் அகர் ஜெல்லி சாப்பிடுங்க

   Delete
  2. வாழ்த்து அட்டை இப்போ சேர்த்தீங்களா?
   ம்..ம் அதுவும் இன்ஸ்ரன்ரா உடனே செய்து போட்டு....
   அஞ்சுவா கொக்கா;))
   அருமையா இருக்கு. வாழ்த்துக்கள் உங்களுக்கும்:)

   Delete
  3. இல்லலை !! இளமதி அது ஏற்க்கனவே செய்த ஒரு கார்ட் ..
   நான் கொஞ்சம் பிசி டைம் இருந்தா இரண்டு பூஸ் செய்திருப்பேன் கொஞ்சம் நேரம் பற்றாக்குறை

   Delete
 3. வாழ்த்துக்கள்.தம்பதியினர் பல்லாண்டு வாழ்கவென மனதார வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஆசியா
   அப்புறம் அந்த மொ மொ மிய்யவுக்கு ஏதும் திராம்ஸ் தினார் ..ஓகே ஓகே அப்புறமா பேசலாம் :)))

   Delete
 4. இனிய திருமனநாள் வாழ்த்துக்களை சொல்லவும்.. இளநீர் கடல்பாசி நல்ல வந்திருக்கு.. நன்றி.. மீன் கட்லெட் ஐடியா நல்லா இருக்கு.. Ongoing event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சிநேகிதி .
   அடுத்த போஸ்ட்ல சேர்த்த பொருட்க்கள் எல்லாவற்றுடனும் பதிவிடுகிறேன் .இது பூசார் ஸ்பெஷல் :))சோ அவசரமாக போட்ட போஸ்ட்

   Delete
 5. சகோதரி அதிராவுக்கும், அவரது கணவருக்கும் என்னிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்! இன்றுபொல என்றும் பல்லாண்டு வாழ்க!

  ReplyDelete
 6. அது சரி அக்கா, அன்னையர் தினம், குழந்தைகள் தினம் , காதலர் தினம் போல இன்று “பூஸார் தினமா?” அது சரி இன்று நமக்கெல்லாம் பூஸார் என்ன தரப்போகிறார்?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :))
   பொருளாளர் பதவியையே நானா பிடுங்கி எடுத்துக்கிட்டேன் ,வேணும்னா
   இங்க்லன்ட் ஏரியா என்னுது பிரான்ஸ் ஏரியா உங்களுக்கு நாமே சம பங்கு பிரிச்சுப்போம்:))

   Delete
 7. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அதிரா!!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களை அதீசிடம் சேர்க்கறேன் மேனகா .வந்து வாழ்த்தியதற்கு நன்றி

   Delete
 8. மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.இதுபோல் பல்லாண்டு காலம் சிறப்பாக கொண்டாட அக்காவின் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களை அதீசிடம் சேர்க்கறேன் ஸாதிகா .வந்து வாழ்த்தியதற்கு நன்றி

   Delete
 9. தம்பதிகள் பல்லாண்டு சிறப்போடும் சீரோடும்
  நலத்தோடும் வாழ எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களை அவர்களிடம் சேர்க்கறேன் அண்ணா .வந்து வாழ்த்தியதற்கு நன்றி.

   Delete
 10. இன்று திருமண நாள் கொண்டாடும் அன்புக்கினிய
  தோழி அதிராவும் அவரது கணவரும் பல்லாண்டு எல்லா சந்தோஷத்துடனும் எல்லா ஆசீர்வாதங்களுடனும் இருக்க இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம் :))))

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களை அதீசிடம் சேர்க்கறேன் அக்கா .வந்து வாழ்த்தியதற்கு நன்றி

   Delete
 11. அதிராவுக்கும் கணவருக்கும் எங்கள் திருமண வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் சீரும் சிறப்புமாக நோய் நொடியின்றி இன்னும் பல்லாண்டு காலம் எங்கள எல்லாம் ஏய்ச்ச்சுகிட்டு:)) இருக்குமாறு வாழ்த்துகின்றோம்.

  அஞ்சு இன்னிக்கு bank ஹொலிடே இல்லே முன்னமே சொல்லி இருந்தா தாரை தப்பட்டை வெச்சு தூள் கிளப்பி இருக்கலாம் இல்லே? நம்ம பூசாருக்கு மொய் வைக்குற மாதிரியா நாம பழகி இருக்கோம் :)) அதனால என் சார்பா வாழ்த்த மட்டும்ம் சொல்லிடுங்கோ :))

  ReplyDelete
  Replies
  1. ஐ ஐ !!!! கிரி ..நாமெல்லாம் மொய் வக்கிறதாவது:))))
   ஒன்லி கலெக்சன் அன்ட் ஸ்வாஹா :)))

   Delete
  2. முன்னமே சொல்லி இருந்தா தாரை தப்பட்டை வெச்சு தூள் கிளப்பி இருக்கலாம் இல்லே? //

   எனக்கும் இன்னிக்கு காலைல தான் தெரியும் கிரி ..

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எங்களுக்கு நெக்ஸ் மண்டேதான்:).. ஹொலிடே..

   அதுதானே.. மொய் எழுதுறமாதிரியா நம்மட பழக்கம், பேசாமல் ஒரு வைர நெக்லஸ் போட்டிடுங்க கீரி:))

   Delete
 12. இளநீர் அகர் அகர் சூப்பர். வாழ்த்து அட்டையும் அழகோ அழகு. டெம்ப்ளேட் உம் சூப்பர் !

  ReplyDelete
 13. அச்சச்சோஓஓஒ நேக்கு இதைப் பார்த்ததும் ஷை ஷையா வருது:)).. என்ன சொல்ல என்ன செய்ய... லெக்கும் ஓடல்ல காண்ட்டும் ஆடல்ல:)).. அதிலயும்...

  //வாழ்த்தும் அன்புள்ளங்கள்
  அகில உலக அதிரா ரசிகர் மன்றம் :))))))
  UK,IRELAND ,SCOTLAND ,FRANCE ,GERMANY,NORWAY ,SWEDEN,
  DENMARK ,CANADA ,U.S.A ,AUSTRALIA ,INDONESIA , NEWZEALAND ,
  U.A.E ,EMIRATES ,DOHA , Kuwait ,SRILANKA ,INDIA ......

  (இன்னும் பல கிளைகள் இருக்கு )
  {பொறுப்பாளர்/ காசாளர் }
  Angelin.//

  இதைப் பார்த்ததும், குல்ட்டையும் இழுத்துக் கொண்டு கட்டிலுக்குக் கீழ போய்ப் படுத்திட்ட்டேன்ன்ன்ன்:)))

  ReplyDelete
 14. எம்மை வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் மியாவும் மியாவும் நன்றி.... அதுக்குப் பரிஷா என்னிடம் இருப்பது “ஷை” மட்டும்தான்:)... என்னால முடியல்ல:)) சரியான ஷையா இருக்கே அஞ்சூஊஊஊஊஊஊஊஊ:).

  ReplyDelete
 15. /// அதீஸ் ஷேர் பண்ணி சாப்பிடனும் ஓகே :)///

  சே..சே.. பிரிக்கிறதில எப்பவுமே எங்கட விட்டில பிரச்சனையே வராது:))) இப்பூடியான உணவெனில் எப்பவும் “எனக்கு 70 உங்களுக்கு30” இதுதான் ரேஷியோ:)).. ஹா..ஹா..ஹா...:))

  மீன் வடிவம், உள்ளே இருப்பதும் மீந்தானே:) இல்ல ஒரு டவுட்டு:).

  ReplyDelete
  Replies
  1. :)))))))))
   டவ்ட் வேணாம் மீன் கட்லேட்தான்

   Delete
  2. இப்ப பார்த்து மகி ஊர்ல மயிலாட்டதை ரசிச்சிக்கிட்டு

   இருக்காங்களே //எனக்கு 70 உங்களுக்கு30” //இதுதான் ரேஷியோ:)).. ஹா..ஹா..ஹா...:))


   இங்க வாங்க மகி

   Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஊரில ஹனிமூன் கொண்டாடப்போன மகியை:) இப்போ எதுக்கு டிஸ்ரேப் பண்றீங்க:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சு எறிஞ்சிடுங்க தேம்ஸ்ல:)) நல்ல பெருநாள்ல ஆரும் ஏசமாட்டினமாம் எனக்குத்தான்:)). அந்த நம்பிக்கையிலதான் இப்பூடியெல்லாம்:))

   Delete
 16. அனைவரும் மறவாமல் மொய்ப்பணத்தை
  $ ,£,€ வாக தரவும் :)))////

  பணமாத்தந்தால் என்ன, செக்காத் தந்தால் என்ன.... எம்மதமும் எமக்கு சம்மததமே:))... இந்த விஷ்யத்தில நான் வெட்கம் ரோஷம் மானம் எல்லாம் பார்ப்பதில்லை, பார்க்கப்பிடாதென அம்மம்மா சொல்லிட்டா:)

  ReplyDelete
 17. மிக்க நன்றி அஞ்சு, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. விஷயம் அறிஞ்ச உடனேயே தலைப்புப் போட்டு வாழ்த்தினமைக்கு....

  அழகான கார்ட்.

  எல்லோருக்கும் எம் தினத்தை அறிவித்த “அஞ்சா நெஞ்சம்” யங்மூனுக்கு ஸ்பெஷல் நன்றி.

  ஏனெனில் ஏற்கனவே பிளாக்மெயில் பண்ணியிருந்தேன் அவவுக்கு, பப்ளிக்கில் சொல்லப்பிடாதென:) அதையும் மீறிச் சொலிட்டா:)

  என்னா தைரியம் அவவுக்கு...:))

  ReplyDelete
  Replies
  1. யங் மூன் :)) நீங்க எதுக்கும் பயப்படாதீங்க :)) நாங்க ஒரு பெரும்படையே இருக்கோம்

   Delete
  2. ஓ வந்திட்டாங்கய்யா வந்துட்டாங்க:)
   வாங்கோ வாங்கோ! சுகமா இருக்கிறீங்களோ?
   நேரில் ஒருதரம் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!

   //ஏற்கனவே பிளாக்மெயில் பண்ணியிருந்தேன்//
   (என் பக்கம்) ப்ளாக்கருக்கு இது எல்லாம் சகஜமப்பா:)))
   அஞ்சு உடையான் படைக்கு அஞ்சான்:)))))

   இதுக்குமேல வேணாம். இடிவிழும்னு வேற சொல்லியிருக்காங்க.
   நான் எஸ்............

   Delete
  3. நேற்றுதான் அதீஸ் அந்த ஜெல்லி செய்யும்போது c for cat வர மாதிரி ரெயசின்ஸ் போட்டு செய்தேன் அது இன்னிக்கு பயன்பட்டது :))

   Delete
 18. இளமதிAugust 27, 2012 9:33 AM
  வாழ்த்து அட்டை இப்போ சேர்த்தீங்களா?
  ம்..ம் அதுவும் இன்ஸ்ரன்ரா உடனே செய்து போட்டு....
  அஞ்சுவா கொக்கா;))//

  என்னாது பயமொழியை மாத்திட்டாங்களா?:)

  பூசோ கொக்கோ” என்றுதானே இருந்துது:)))

  ReplyDelete
  Replies
  1. அது எப்பவோ பழமொழியை மாத்திட்டாங்களே :) உங்களுக்கு தெரியாதா மியாவ் :))

   Delete
 19. அதிரா தம்பதிகளுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் நீங்க அனுப்ப போற யூரோ ...விற்கும்
   நன்றி நேசன்

   Delete
 20. அன்பு அதிரா உங்களுக்கும்,உங்க கணவருக்கும் என் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. மொய்பணம் பின்புதான் அனுப்புவேன்.
   அஞ்சு உங்க வாழ்த்து ஏற்பாடுகள் ரெம்ப நல்லா இருக்கு.என்ன பிரியாணியும்,அ.கோ.மு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.பரவாயில்லை பூஸார் அஜீஸ் செய்துப்பா.

   Delete
  2. crossed cheque ஆக அனுப்பிடுங்க அம்முலு .
   இல்லன்ன கோல்ட் காயின்/ பார் கூட ஓகே தான் :)))

   //என்ன பிரியாணியும்,அ.கோ.மு //
   அடடா நமக்கு தோணாம போய்டுச்சே அவ்வவ்
   நீங்க பூஸாரை சரியா கணிச்சு வைச்சிருக்கீங்க ஹா ஹா :))

   Delete
  3. angelinAugust 27, 2012 12:31 PM
   crossed cheque ஆக அனுப்பிடுங்க அம்முலு .//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

   Delete
 21. அதிராவுக்கோ...இல்ல பூஸாருக்கோ கல்யாண நாள்....ஏஞ்சல் நீங்கள் சரியா சொல்லுங்கோ....!

  அதிராவுக்கெண்டால் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துக்களோட பூங்கொத்தும் குடுக்கிறன்.அதிரா பிடிச்சுக்கொள்ளுங்கோ.அதுக்காக அவரின்ர கையைச் சேர்த்துக் கிள்ளி வைக்கிறேல்ல....!

  சுகம் விசாரிச்சனீங்க அதிரா...மணி சாப்பாடு தந்தார்.சாப்பாடு நல்ல சாப்பாடுதான்.அதுக்கு முதல் சாப்பாட்டைப் பார்த்துப் பயந்தே வயிறு கலக்கம் 2 நாளா.சத்தியமா முகப்புத்தகப் பக்கம்கூடப் போகேல்ல !

  பூஸாருக்கும் பிடிச்ச நெத்தலிக்கருவாடு பேப்பரில எழுதி மொய்யா வைக்கிறன்.சரியோ !

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா..ஹா..:))
   ஹேமா உந்த மொய்யை, குரொஸ் பண்ணி[angelinAugust 27, 2012 12:31 PM
   crossed cheque ஆக அனுப்பிடுங்க அம்முலு .//] அஞ்சுவிடம் கொடுத்திடுங்கோஓஓஓஓஒ:))...

   Delete
  2. அவ்வவ் ஹேமா ஆஅ .... நெத்திலி கருவாடை பூசாருக்கு அனுப்பிடுங்க
   அந்த ஸ்விஸ் ஃபிரான்க் எனக்கு ஓகே ....எலாரும் ரொம்ப விவரமா இருக்காங்களே

   Delete
 22. எங்கே எங்கட குட்டிச் சிங்கம்:).. “வாழ்த்த வயதில்லைக்” ...காரரை இன்னும் காணேல்லை:)))..

  ReplyDelete
  Replies
  1. வருவார் நாளை காலைல ...:)))

   Delete
 23. ஒரு மொய்யும் மிஸ் ஆகிடக்கூடாதின்னு நான் கவனமா உக்காந்திருந்தா பூசாரும் இங்கேயே வட்டமிட்டுகொண்டிருக்கார்

  ReplyDelete
 24. கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது
  மன்னிக்கவும்

  அட நம்ம பூசாரின் மண நாள்
  வாழ்க பல்லாண்டு
  நலமுடன் வளமுடன்
  வாழ்க வாழ்க பல்லாண்டு ...
  1000 ஆண்டு மணி விழா
  கண்டு மகுடம் சூட வாழ்த்துகிறோம்

  ReplyDelete
 25. மொய் பதில் ரெண்டு வைர நெக்லஸ் எழுதிக்கோங்க
  மாணிக்கம் பவளம் பதித்த வைர நெக்லஸ்.

  ReplyDelete
  Replies
  1. ஓகே சிவா பார்சல் செய்தாச்சா :))

   Delete
 26. //பேசாமல் ஒரு வைர நெக்லஸ் போட்டிடுங்க கீரி:))//

  எனக்கு பத்தி என் டம்பி டிவா வைரம் பவளம் மாணிக்கம் வெச்சு நெக்லஸ் போடுறாரு பாருங்க வாங்கிட்டு சமத்தா போயிடுங்க பார்க்கலாம். அஞ்சு வேற இன்னும் மொய் பணத்த எண்ணி முடிக்கலையாம். மகி ,வான்ஸ் & டீச்சர் காணோம் ???? மகி இந்தியன் ருபீஸ் இல் கொடுத்தா வேணாமுன்னு ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லிடுங்க அஞ்சு. டாலர்ஸ் தான் வேணுமுன்னு (பழனி மலை முருகன் டாலர் எ கொடுத்து மொட்டை போட்டுட போறாங்க பார்த்து :))

  ReplyDelete
  Replies
  1. அவங்க வந்து மொய் எழுதாட்டி பங்காளி பிரச்சினை வரும் ..அவங்க வரும் வரை போஸ்ட் இங்கேயே இருக்கும் ஹா ஹா
   அடுத்த போஸ்ட் தற்காலிகமா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

   Delete
  2. இன்னும் யோகா அண்ணாவின் வருகையும் ...வரவும் இருக்கு :)))))))))))
   அண்ணா சீக்கிரம் வாங்க <<<<<<<<<

   Delete
 27. நேத்திக்கு சரியா கவனிக்கல. அகர் அகர் மேல C சூப்பர். அடுத்த தடவை கட்லெட் பூஸ் ஷேப் இல் பண்ணுங்க :))

  ReplyDelete
 28. //உணவெனில் எப்பவும் “எனக்கு 70 உங்களுக்கு30” இதுதான் ரேஷியோ:)).. ஹா..ஹா..ஹா...:))//

  நாட்டி பூஸ் நேத்திக்கு திட்ட கூடாதுன்னு இன்னிக்கு வந்து திட்டிட்டு போறேன் :))

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள்...

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  ReplyDelete
 30. ஏலவே அவர் ப்ளாக்கில்/பதிவில் வாழ்த்தியாயிற்று!எனினும் உங்கள் வாழ்த்துடன்,என் வாழ்த்தும் சேரட்டும்!!!!!(நான் ரொம்ப ஏழை)

  ReplyDelete
 31. ஏற்கனவே "பிளாக்மெயில்" பண்ணியிருந்தேன்!////இது வில்லங்கம் புடிச்ச இடம் போலயிருக்கு!!!!!!கவனமாத் தான் பிழங்க வேணும்.

  ReplyDelete
 32. திருமதி ஆதிராவுக்கும் அவர் கணவருக்கும் அன்பு திருமண நாள் நல்வாழ்த்துகள்... என்ன ரெண்டு நாட்கள் தாமதமா விஷ் பண்ணிட்டேனா? இப்ப தாம்பா பார்த்தேன்.. அதான்.... இறைவன் அருளால் இருவரும் என்றும் நிறைந்த சந்தோஷத்துடன் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் இனிமையுடன் அன்புடன் இணைந்து வாழ அன்பு வாழ்த்துகள்...

  ரெசிப்பி அகர் அகர் ஜெல்லி, கட்லெட் எல்லாம் சூப்பர் தான் அஞ்சு...

  ஆனா மொய் பணம்??? இதெல்லாம் ஆதிரா அக்கவுண்ட்டுக்கு தான் போகுமா? இல்லை அஞ்சு அக்கவுண்டுக்கு போகுதா? :)


  ஓகே நான் ஊருக்கு வரும்போது மொய் பணம் எடுத்துட்டு வரேன்பா... :)

  நீங்களும் மறக்காம ஏர்ப்போர்ட்டு அடுத்த வருஷம் வந்துருங்க... ஆதிராவையும் கூட்டிக்கொண்டு...

  ReplyDelete
 33. இந்த பதிவை இம்பூட்டு நாள் கழிச்சுத்தான் பார்த்தேன்,சாரி! அட்வான்ஸ் அடுத்த திருமணநாள் வாழ்த்துக்கள் டு மிஸ்.மியாவ்&ஃபேமிலி! :)

  ஊருக்கு கிளம்பிய நேரத்தில் வந்த உங்க பதிவுகள் பலதை மிஸ் பண்ணிட்டேன் ஏஞ்சல் அக்கா! இப்பதான் ஒண்ணொண்ணா பார்க்கிறேன். அந்த கடைசி ஃபிஷ் உண்டியல் க்யூட்! :)

  ReplyDelete