அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

8/15/12

நெல்லிக்காய் மோர் /ஆம்லா மோர்

நெல்லிக்காய் மோர் /ஆம்லா மோர் 
                                                                                     
நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது ..


                                                                     (Thanks Google )                 
இங்கே ஏசியன் கடைகளில் எப்பவும் கிடைக்கும் ,அதனால் 
எங்க வீட்டில் அடிக்கடி வாங்கி வைப்பேன் 
எப்பவும் போல மோர் செய்யும்போது செய்வதைப்போல 
வீட்டில் இருந்த நெல்லிக்காய்களை சேர்த்து செய்து பார்த்தேன் .  .
அருமையாக வந்தது .
தேவையான பொருட்கள் 
தயிர் /யோகர்ட்    ..... இரண்டு கப் 
நெல்லிக்காய்கள்   .....  மூன்று அல்லது நான்கு அளவை பொறுத்து 
பச்சை மிளகாய் சிறிய அளவு ... ஒன்று 
கறிவேப்பிலை  ......  ஐந்து இலைகள் 
கொத்தமல்லி இலைகள் .......சிறிதளவு 
இஞ்சி ....    ஒரு சிறிய துண்டு 
உப்பு தேவையான அளவு .
செய்முறை 
முதலில் நெல்லிக்காய்களை நன்கு கழுவி விதை  நீக்கி சிறு 
துண்டுகளாக நறுக்கவும் .
அதே போல கறிவேப்பிலை ,கொத்தமல்லி இலை ,இஞ்சி, 
பச்சை மிளகா ஆகியனவற்றையும் நறுக்கி 
சட்னி அட்டாச்மண்டில் ஒரு சுற்று அரைத்து எடுக்கவும் .


                                                                         
பின்பு இந்த கலவையையும் இரண்டு கப் தயிர் மற்றும் தேவையான 
அளவு உப்பு மற்றும் நீர் சேர்த்து ஜூசர் அல்லது விப்பர் ப்ளேட் 
போட்டு மிக்சியில் இரண்டு மூன்று சுற்று போட்டு எடுக்கவும் ..
விருப்பமானால் சிறிய சம்பா வெங்காயத்தை நறுக்கி போட்டு 
அலங்கரித்தும் அருந்தலாம் .


                                                                                       
இது எனது சொந்த கண்டுபிடிப்பு .
நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது பக்கத்துக்கு வீட்டில் ஒரு 
அண்ணா என் கைய பார்த்து சோசியம் சொன்னாங்க ,,

//நீ பின்னாளில் ."புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவாய்"//

பரவாயில்ல பல வருடங்கள் கழித்து வாக்கு பலிக்குதுன்னு நினைக்கிறேன் ,:)))))


எங்கேயோ பார்த்த  ஊசி குறிப்பு //அப்பாடா மழை ஓய்ந்தது //

இல்லை :)))இப்ப புயலாக புறப்பட்டு விட்டது ...
அடுத்த பதிவு விரைவில் :))))))))))))

45 comments:

 1. அட..வித்தியாசமாக உள்ளதே!மிகவும் சத்தான பானம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா .
   நெல்லி மிகவும் உடலுக்கு நல்லது என்று கேள்விபட்டேன் .அடிக்கடி இப்ப எங்க வீட்டு சமையலில் பயன்படுத்தறேன் .

   Delete
 2. அட இது புதுசா இருக்கே
  மிகவும் சத்துள்ள மோர் ரெடி

  எனக்குத்தான் ரெண்டாவது கப்ப்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சிவா உங்களுக்குத்தான் ரெண்டாவது கப் ..நெல்லி கிடைச்சா நீங்களும் செய்து பாருங்க

   Delete
 3. Replies
  1. நாம இப்ப சையன்டிஸ்ட் ஆகிட்டோம்லா ..இனி நிறைய கண்டுபிடிப்புகல்வெளி வரும் ..:))வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 4. வாக்கு பலித்தது... எங்களுக்கு சந்தோசம்....

  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 5. நெல்லிக்காயைச் சும்மா சாப்பிட்டாலே தவிர வேறு தெரியாது.இது முழுமையான நெல்லிக்காயின் ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ள நல்ல வழி.அதோடு இப்போ இங்கிருக்கும் வெக்கைக்கு உடம்புக்கும் குளிர்சி தரக்கூடியதாக இருக்கும்.நல்லது ஏஞ்சல்.ஆனால் எங்கே தேடுவேன்...இந்த நெல்லிக்காய்களை எங்கே தேடுவேன் !

  **//நீ பின்னாளில் ."புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவாய்"//**

  பிடியுங்கோ பிடியுங்கோ...நீங்க பிடிக்க நாங்க கட்டி வச்சுக்கொள்றம் !

  ReplyDelete
  Replies
  1. நான் கயிறு கொண்டு வாறன்:)

   Delete
  2. ஹேமா :)) பூசாரை கோணிப்பையில் தானே கட்டி போடுவாங்கா ..கயிறெல்லாம் எதுக்கு :))

   Delete
  3. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா .இங்கே எல்லா இந்தியன் கடையிலும் கிடைக்கும் ...பார்சல் பண்ணட்டா ..நெல்லிக்காயை :))

   Delete
 6. நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது பக்கத்துக்கு வீட்டில் ஒரு
  அண்ணா என் கைய பார்த்து சோசியம் சொன்னாங்க ,,

  //நீ பின்னாளில்"புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவாய்" ஆனால் யாரும் பாராட்ட மாட்டார்கள்,அதுனாலே யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் இருந்திடுமா.//

  //திண்டுக்கல் தனபாலன்August 15, 2012 11:08 PM
  வாக்கு பலித்தது... எங்களுக்கு சந்தோசம்....//

  எனக்கும் சந்தோஷம் கோடை காலத்திற்கு ஏற்ற மோர்.


  ReplyDelete
  Replies
  1. ஆஆ !!!!!!!!!!அந்நியன் அயூப் !!!
   சகோ நலமா ...என்னை தமிழில் எழுத சொல்லி பாப்பிலராக்கி ...ஓகே ஓகே
   கொஞ்சம் பிரபலமாக்கி :))) விட்டது நீங்கதானே ..எங்கே போனீங்க இத்தனை நாளும்.நீங்க உங்க குடும்பத்தார் எல்லாரும் நலமா .
   ரொம்ப சந்தோஷம் நீண்ட நாள் கழித்து சந்தித்ததில் ..

   அதீஸ் ஓடியாங்க :)))))<<<<<<<<< அந்நியன் வந்திருக்கார்

   Delete
  2. ஆஆஆஆஆஆஆ இந்த பேஜ்ஜை ஓஒபின் பண்ணியதும் முதலில் தெரிஞ்சது அந்நியந்தான்ன்ன்ன் பின்புதான் என் பேவரிட் நெல்லிக்காயே தெரிஞ்சுதெண்டால் பாருங்கோவன்:) சரி சரி படிச்ச்சதும் கிழிச்சிடுங்க அஞ்சு:)..

   இப்பூடியே ஆராவது பப்.பூ வையும் தேடித்தந்தால் மோர் கொடுக்கலாம்:) நெல்லிக்காய் போட்டு.

   Delete
  3. //பாப்பிலராக்கி ..//

   நிஜமாவோ?:) சொல்லவேயில்லை:)) சரி சரி இது நமக்குள் இருக்கட்டும்:))).. மக்கள்ஸ் இதைப் படிக்க வேண்டாம்:)

   Delete
  4. இப்பூடியே ஆராவது பப்.பூ வையும் தேடித்தந்தால் மோர் கொடுக்கலாம்:) நெல்லிக்காய் போட்டு.//

   ஆமா அதீஸ் ஏதாவது புதுசா கண்டுபிடிச்சு ரெசிப்பி போடறேன் ..
   அந்த ஆனியன் பஜ்ஜி ட்ரை பண்ணட்டா

   Delete
 7. சிறப்பானதொரு கண்டுபிடிப்பு! வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
  நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
  http://thalirssb.blogspot.in/2012/08/17.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

   Delete
 8. எல்லோரும் நல்ல சுகம் சகோ.

  இங்கேதான் இருந்தேன்,பனியிடத்திலும் கணினியின் தொல்லை இருந்ததினாலே ஒரு ஆறு மாதம் கணினிக்கு விடுப்பு கொடுத்தேன்.

  இனி வலைப் பூவில் தொடர்வோம்...

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ்வ்வ்,... இது அந்நியன் தானோ?.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எங்க போனீங்க இவ்ளோ காலமும்.. :).

   Delete
 9. //நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது பக்கத்துக்கு வீட்டில் ஒரு
  அண்ணா என் கைய பார்த்து சோசியம் சொன்னாங்க ,,//

  இப்போ அந்த அண்ணா மட்டும் என் கைல மாட்டினார்ர்:)))... வாணாம் நான் ஒண்ணுமே சொல்லமாட்டன், ஏனெனில் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே...:)

  ReplyDelete
 10. எங்கட விட்டில இப்பவும் நெல்லிக்காய் இருக்கே:) ஆனா நான் மோருக்குள் போடமாட்டேன், போட்டால் முடிஞ்சுடுமெல்லோ, பின்பு எக்கு போய் வாங்குவதாம்ம்ம்...:)

  ReplyDelete
  Replies
  1. எக்கை// மறக்க மாட்டீங்களே ..ஐ மீன் egg :))))

   Delete
 11. //
  எங்கேயோ பார்த்த ஊசி குறிப்பு //அப்பாடா மழை ஓய்ந்தது //

  இல்லை :)))இப்ப புயலாக புறப்பட்டு விட்டது ...
  அடுத்த பதிவு விரைவில் :)))))))))))//

  இனியும் பாவம் பார்த்தால் சரிவராது, நேரே பிஸ் பிறைதான் இனி:)).....

  மீன் எல்லாம்
  புயலானால்
  பூஸ் எல்லாம்
  கடல்ல
  குதிக்கப்போகுது:)

  ReplyDelete
 12. நோ யுவர் ஆனர், நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன்:)) தன்னிடம் இருந்த நெல்லிகாயைப் படம்பிடிச்சுப் போடாமல், கூகிள்ல தேடிப் போடுவிட்டு, தனிக் கொத்தமல்லியில் மோர் அடிச்சிருக்கிறா:))...

  கை தட்டுங்கப்பா... கெதியாத் தட்டுங்கோவன்:))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர் :)))

   அதான் அரைச்சுட்டேனே ...மிக்சில பாருங்க ..இந்த மாதிரி டவுட் உங்களுக்கு மட்டும் வரும்னே அரைக்கும்போதே பாதில எடுத்து போட்டேன் போட்டோவை

   Delete
 13. அஞ்சூஸ்... என்னது!! உங்களுக்கும் 'அண்ணா' ஒருவர் இருந்தவரோ!!
  கண்டுபிடிப்பு சூப்பர். ஆனால்.. நான் நெல்லிக்காய்க்கு எங்க போக! கர்ர்ர்

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் இருந்தாரா இமா ... பாத்தீங்கல்லா அண்ணாங்க எல்லாம் சரியா நம்மளை எஸ்டிமேட் செய்திருக்காங்க .

   Delete
 14. அனைவருக்கும் நன்றி ...நாளை வந்து பதில் அளிக்கிறேன்

  ReplyDelete
 15. ////நீ பின்னாளில் ."புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவாய்"//

  ஆஹா! மிகச்சரியாகவே சொல்லியிருக்கிறார். தங்களின் இந்தப் புதிய கண்டுபிடிப்புக்கும், அதை அறிமுகம் செய்துள்ளதற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள், நிர்மலா.

  நெல்லிக்காய் + மோர் இரண்டுமே எனக்குப்பிடித்த ஐட்டங்கள் தான். இரண்டையும் சேர்த்து அடிக்க வேண்டும் என்ற தங்களின் கண்டு பிடிப்பு மிகவும் மகத்தானது தான். நன்றி.

  இந்த நெல்லிக்காய்ப் பதிவு என் கண்களில் படாமல் எங்கோ உருண்டு ஓடிப்போய் விட்டது. இப்போது தான் பார்க்க நேர்ந்தது.
  அத்னாலேயே என் வருகையில் தாமதம். இணைப்பை மெயிலில் அனுப்பியிருந்தால் பார்த்துவிட்டு ஓடி வந்திருப்பேன்.

  அன்புடன் vgk

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்ல கோபு சார் ..ஆனாலும் நீங்க டைமுக்கு வந்திட்டீங்க :)
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 16. i want to try this when i go home...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.சீக்கிரமே செய்து பார்த்து சொல்லுங்க :)

   Delete
 17. புதுசா இருக்கே.. செய்துபார்க்க ஆவல் வருகிறது..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிFaisa, செய்து பார்த்து சொல்லுங்க :)

   Delete
 18. அஞ்சு! என்னதிது எல்லாரும் சம்மர் விடுமுறை ஓய்வுன்னுட்டு இப்படி ரகசியமாய் ...... அதிலும் எனக்கு ரொம்பவே பிடிக்கும் நெல்லிக்காய் ஐட்டங்களாய் போட்டு தாக்குறீங்க.
  இந்த சுய கண்டுபிடிப்பு நிச்சயம் நல்லா இருக்கும்.;) வாழ்த்துக்கள்!!!
  ஆனால் நானும் நெல்லிக்காய்க்கு எங்கினைபோக???

  ReplyDelete
  Replies
  1. நான் தரட்டே யங்மூன்:)) உப்புத்தண்ணிக்குள் போட்டு பிரிஜ்ஜில 12 வச்சிருக்கிறன், ஒரு சந்தோசம் என்னவெனில், வீட்டில ஆரும் போட்டிக்கு வராயினம்:)) அதனால ஒளிக்காமல் வச்சுச் சாப்பிடுவன்:)..

   Delete
  2. இளமதி வேணாம் :)) ரிஸ்க் எடுக்காதீங்கா ....
   //அதனால ஒளிக்காமல் வச்சுச் சாப்பிடுவன்:)..//

   அப்ப ப்ரிட்ஜுக்குள்ள ஏன் வைக்கணும் வெளிலே வக்கலாமேன்னு கேளுங்க யங் மூன் :))

   Delete
  3. இந்த சுய கண்டுபிடிப்பு நிச்சயம் நல்லா இருக்கும்.;) வாழ்த்துக்கள்!//

   எல்லாரும் சேர்ந்து என்னை உசிப்பி உசுப்பி
   இப்ப நான் நிறையா ஆராய்ச்சில இறங்க போறேன் ..
   கடவுளே பூஸாரை :) தவிர அனைவரையும் காப்பாற்றுங்க

   Delete
 19. karrrrrrrrrrrrrrrrrr:)) அஞ்சுவுக்கு இன்னமும் “நாளை” ஆகவில்லைப்போலும்:)

  ReplyDelete
 20. இந்த தட்வை (சரியான சூடு, வெயில் அதிகம்) ஈத் துக்கு சமைத்து கொண்டிருக்கும் போது இடையில் இஞ்சி பச்சமிளகாய்,கொத்துமல்லி சேர்த்து மோர் அடித்து குடித்தோம். இனி நெல்லிக்காய் கிடைத்தால் சேர்த்து கொள்ளவேண்டிய்துதான்...

  ReplyDelete