அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

8/21/12

ரசித்து ருசித்தவை ஓட்ஸ் ,ரவை தோசை மற்றும் நெல்லிக்காய் பச்சடி


 நெல்லிக்காய் பச்சடி 


இந்த அருமையான குறிப்பை தந்த காமாட்சி அம்மா 
அவர்களுக்கு மிக்க நன்றி ..


என்ற அவர்களின் வலைப்பூ மகி ப்ளாக் வழியாக 
தெரிந்துகொண்டேன் ..அவங்க ரெசிப்பி எல்லாமே அருமை 
பூசாருக்கு சந்தேகம் வரக்கூடாதின்னு அரைக்கு 
முன் படம் எடுத்தேன்       :))                            
                                                                                 
நெல்லிக்காய் பச்சடி காமாட்சியம்மா அவர்களின் குறிப்பு 
பார்த்து செய்தது .கொஞ்சம் என் சுவைக்கு ஏற்றாற்போலவும் 
மாற்றிக்கொண்டேன் :))
அவர்களின் குறிப்பில் ..சிவப்பு மிளகாய் சேர்த்து தாளிக்க 
சொல்லியிருந்தாங்க ..நான் மோர் மிளகாய் இரண்டு மற்றும்
சுக்காங்காய்  a.k.a  மினுக்கு வற்றல்  வற்றல் இரண்டு சேர்த்து 
தாளித்து சாப்பிட்டேன் ..


                                                                   
இரண்டு நெல்லிக்காய்கள் ,சிறு துண்டு இஞ்சி 1/2 தேக்கரண்டி சீரகம் 
ஒரு பச்சை மிளகாய் இவற்றை சிறிதளவு எண்ணையில் 
வதக்கி இரண்டு தேக்கரண்டி தேங்காய் துருவல்,
சிறிதளவு  உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து பின்பு தயிருடன் 
சேர்த்து கலந்து வாணலியில் மோர் வற்றல் மிளகாய் கடுகு 
சுக்காங்காய்/a.k.a  மினுக்கு வற்றல் வத்தல் , கறிவேப்பிலை சேர்த்து 
தாளித்து கலந்து சாப்பிட்டா !!!!!!!!!!!ஆஹா யம் யம் 
ருசி அருமையாக இருந்தது ..இந்த பச்சடியுடன் 
இட்லி மற்றும் சப்பாத்தி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது 

ஓட்ஸ் ரவை தோசை 


இது ஆமினாவின் குறிப்பு பார்த்து சற்று 
மாற்றி செய்தது .மிகவும் அருமையாக வந்தது .
அருமையான குறிப்பிற்கு நன்றி ஆமினா .

தேவையான பொருட்கள் .
ஓட்ஸ் .......  ஒரு கப் 
ரவை ...         அரை கப் 
புளிப்பில்லாததயிர்   .... அரை கப் 
மீந்த தோசை மாவு ...அரை கப் 
சீரகம் .........   ஒரு தேக்கரண்டி 
உப்பு .........தேவையான அளவு 

செய்முறை 
ஓட்ஸ், ரவை, தயிர் இவற்றை கலந்து அரை மணிநேரம் 
வைக்கவும் 
பின்பு மிக்சியில் அரைத்து அத்துடன் தோசை மாவு மற்றும் 
சீரகம்,உப்பு  கலந்து இருபது நிமிடங்கள் கழித்து தோசையாக 
வார்த்து எடுக்கவும் .
மொறு மொறுவென்று அபார ருசியாக இருந்தது .
நான் இதன் மேலே பூண்டு பொடியை தூவி பொடி 
தோசையாக சுட்டேன் .
    
     மினுக்கு வற்றல் கூகிளில் தேடியபோது 
இவங்க வலைபூ வந்தது 
http://mykitchenpitch.wordpress.com/category/பக்க-உணவு/வற்றல்-வடாம்-வடகம்-அப்பள

இந்த வேகமான ஓட்டம் நூறை தொட :)))                                                                          

68 comments:

 1. ஆஹா..ஆஹா..

  வித்தியாசமா இருக்கே... பொடி தோசை :-) நானும் செய்து பாத்துடுறேன்!

  அப்பறம் தோசைமாவு சேர்க்குறதும் நல்ல டிப்ஸ்! நோட் பண்ணிக்கிறேன்!

  தேங்க்ஸ் மா. செய்து பார்த்து கருத்து சொன்னதோட போட்டோ போட்டு குறிப்பாய் கொடுத்ததுக்கு :-)

  ReplyDelete
  Replies
  1. ஆமினா !! வாங்க வாங்க ..உங்க ரெசிப்பி நான் நிறையா செய்றேன் .
   என் பொண்ணு மற்ற தோசை சாப்பிடுவதை விட இதை இன்னமும் எக்ஸ்ட்ரா கேட்டு சாப்பிட்டா :)) .
   ஓட்ஸ் ஹெல்தியும் கூட ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
  2. //முந்தினநாள் அரைத்து மீந்த தோசை மாவு ...அரை கப் //

   //ஆமினா !! வாங்க வாங்க ..உங்க ரெசிப்பி நான் நிறையா செய்றேன் //

   //என் பொண்ணு மற்ற தோசை சாப்பிடுவதை விட இதை இன்னமும் எக்ஸ்ட்ரா கேட்டு சாப்பிட்டா :)) .//

   எனக்கு ஏன் ஒரே சிரிப்பு சிரிப்பா வருதுன்னு தெரியல ஹி..ஹி...:-)))))).

   Delete
  3. ஜெய் :))) நிஜம்மா ரொம்ப டேஸ்டியா வந்தது ...என் பொண்ணு சாப்பீட்டு சொன்னா ...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..

   ஆமீனா இந்த ஜெய் பாருங்க ரொம்ப சிரிக்கிறார் :)))

   Delete
  4. ஹாஅ...ஹா..ஹா.... எனக்கும் யும்மா யும்மா சிரிப்பு வருதூஊஊஊஊஊ:)).. இப்ப கூப்பிடுங்கோ கூப்பிடுங்கோ ஆமினாவைக் கூப்பிடுங்கோ...:))

   Delete
  5. நான் இனிமே என் தமிழ் டீச்சர் அட்வைஸ் கேட்டு தான் கமெண்டே பப்ளிஷ் செய்வேன் ..கர்ர்ர்ரர்ர்ர்ர் :))


   ஆமீனா இந்த ஜெய் / அதீஸ் இவங்க ரெண்டு பேரையும் பாருங்க ..

   Delete
 2. ஆஹா! நிர்மலா எனக்கு இந்த தங்களின் படங்களைப்பார்த்த பிறகு, இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. உடனடியாக உங்களின் இந்தப்புதிய படைப்புக்களை சூடாக சுவையாக ருசித்துப் பார்க்க ஆசையாக உள்ளது. நான் என்ன செய்ய ??????

  ReplyDelete
 3. //பின்பு மிக்சியில் அரைத்து அத்துடன் தோசை மாவு மற்றும் சீரகம்,உப்பு கலந்து இருபது நிமிடங்கள் கழித்து தோசையாக வார்த்து எடுக்கவும் .

  மொறு மொறுவென்று அபார ருசியாக இருந்தது.//

  போங்க நிர்மலா!

  மொறுமொறுவென்று என்னை உசிப்பி விட்டு விட்டீர்களே! ;)))))

  ReplyDelete
 4. //சுக்காங்காய்/a.k.a மிதுக்கு வத்தல், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கலந்து சாப்பிட்டா !!!!!!!!!!!ஆஹா யம் யம்

  ருசி அருமையாக இருந்தது ..//

  நிர்மலா, இதன் பெயர் ”மினுக்கு வற்றல்”
  இதை இரண்டாக நறுக்கினால் பெண்குழந்தைகளின் ஜிமிக்கி போல இருக்கும். ஜிமிக்கியும் அதன் மினுமினுப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஜிமிக்கி போல இருப்பதால் இதை மினுக்கு வற்றல் என்கிறார்களோ என நினைத்துக்கொள்வேன்.

  துமுட்டிக்காய் வற்றல் என்றும் இதை இங்கு சிலர் அழைக்கிறார்கள்.

  தொடரும்.....

  ReplyDelete
 5. இந்த மினுக்கு வற்றல் எனப்படும் துமுட்டி வற்றலை, லேசாக எண்ணெயில் பொன் நிறத்தில் [அதிகம் கருத்துப்போகாமல்] வறுத்து சாப்பிட்டாலே ஜோராக இருக்கும்.

  வறுத்த அதைப் போட்டு காரசாரமாக வற்றல் குழம்பு வைத்து, உளுந்து அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். A1 ஆக இருக்கும்.

  தயிர் சாதத்திற்கு அந்த மினுக்கு வற்றல் போட்ட வற்றல் குழம்பை தொட்டுக்கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். அதைவிட படு ஜோராக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வறுத்த அதைப் போட்டு காரசாரமாக வற்றல் குழம்பு வைத்து, உளுந்து அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். A1 ஆக இருக்கும்.//

   சரியாக சொன்னீங்க ..எங்க அம்மா அப்படிதான் செய்வாங்க ..அதன் ருசியே அபாரம்

   Delete
 6. //நான் மோர் மிளகாய் இரண்டு தாளித்து சாப்பிட்டேன் ..//

  அடடா, எனக்கு மிகவும் பிடித்தமான மோர் மிளகாய் வேறா? எனக்கு அழுகையாக வருகிறது, நிர்மலா.

  நாளைக்குக் காலையில் எல்லாவற்றையும் செய்யச் சொல்லி சாப்பிட்டால் தான் எனக்கு திருப்தியாகும். இன்று இரவு பூராவும் மசக்கைக்காரி [பிள்ளைத்தாச்சி] போலத்தான் என் நிலைமையும்.

  ReplyDelete
  Replies
  1. நான் பார்சல் அனுப்பினா லேட்டாகும் ...சோ நாளைக்கே செய்ய சொல்லி சாப்பிடிடுங்க ...இனி பெயர் களில் ஏதாவது சந்தேகம் வந்தா உங்களுக்கு மெய்ல் செய்கிறேன்

   Delete
 7. வித்தியாசமா இருக்கு... நன்றி சகோ...
  வீட்டில் குறித்துக் கொண்டார்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன்.வருகைக்கும் கருத்துக்கும் ...

   Delete
  2. மிக்க நன்றி தனபாலன் .வாழ்த்துக்கள் நீங்க தான் நூறாவது ஃபாலோவர்

   Delete
 8. என் சார்பிலும், ரசித்து ருசித்து மகிழ்ந்த நிர்மலாவுக்கும், அவர்களுக்குத் திருப்தியளித்த ஓட்ஸ், ரவை தோசை மற்றும் நெல்லிக்காய் பச்சடிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  நிர்மலாவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  மெயில் மூலம் தகவல் அளித்ததற்கு நன்றிகள் ....
  நிர்மலா.

  அன்புடன்
  கோபு

  ReplyDelete
  Replies
  1. மினுக்கு வற்றல் //
   பெயர் காரணம் சுவாரஸ்யமா இருக்கு :))... இப்ப கரெக்ட் செய்திட்டேன்
   நான் பெயரை தவறா எழுதிருக்கேன் .பாக்கெட்டில் சுக்காங்காய் என்று இருந்தது அதுதான் துமுட்டி காயா ??

   மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ....

   Delete
 9. அருமையான சமையற்குறிப்புகள்! அன்பு நன்றி ஏஞ்சலின்! பின்னூட்டங்கள் அதையும் விட சுவாரஸ்யம்!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா ..சமையலில் .நிறைய புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன் அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

   Delete
 10. பார்க்க ந‌ன்றாக இருக்கு.ஏற்கனவே நிறைய ரெசிப்பி ரிஸேர்வ் ல இருக்கு.எதைச்செய்ய என தடுமாறிக்கொண்டிருக்கிரேன். அதற்குள் இன்னொன்றா.
  ஓ.கே ஒவ்வொரு நாளும் செய்யவேண்டியதுதான்.
  சில பெயர் புரியவில்லை. அதென்ன துமுட்டிக்காய்??
  100ஐ தொட அட்வான்ச் வாழ்த்துக்கள். எல்லாம் ஈசியா,நன்றாக இருக்கு அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. //மினுக்கு வத்தல் (aka மிதுக்கு வத்தல்): குட்டிக் குட்டியாய் கோவக்காய்(அல்லது கோவைக்காய்?) மாதிரி நீளமாக இருக்கலாம். ராமநாதபுரம் பகுதிகளில் கிடைக்கும் இதை ‘தும்டிக் காய்’ என்று சொல்வார்கள். இரண்டு மூன்றாக நறுக்கிக் காய வைக்கலாம்.//

   தாளிக்கும் ஓசை வலைப்பூவில் இப்படிதான் இருக்கு .ப்ரியா
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 11. //மனோ சாமிநாதன் August 21, 2012 8:52 AM

  அருமையான சமையற்குறிப்புகள்! அன்பு நன்றி ஏஞ்சலின்!

  *****பி ன் னூ ட் ட ங் க ள்
  அ தை யு ம் வி ட
  சு வா ர ஸ் ய ம் ! !***** //

  வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷிப்பட்டம் கிடைத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது, மேடம்.

  மிக்க நன்றி,

  இப்படிக்கு தங்கள் அன்பு சகோதரன்
  VGK
  [சாப்பாட்டு ராமன்]

  ReplyDelete
 12. ஒட்சு தோசை சாப்பிடனும் போல இருக்கு !! அஞ்சலின் பொறுமைசாலிதான் இது எல்லாம் தேடி பகிர்வதுடன் செய்தும் ரசிக்கும் நல்ல திறமைசாலி! நான், இனித்தான் இது எல்லாம் சொல்லணும் வீட்டுக்காரியிடம்! அஞ்சலின் குறிப்பு இதுகள் என்று!ம்ம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் சீக்கிரமே உங்க வீட்டம்மாவையும் எங்க ப்ளாகுக்கு அறிமுகப்படுத்துங்க ..அவங்ககிட்டருந்தும் நாங்க ரெசிப்பிஸ் கற்றுக்கொள்கிறோம்

   Delete
 13. விதம் விதமாய் சமைச்சு ரசிச்சுச் சாப்பிடுங்கோ.நல்லா வயிறு வலிக்கட்டும்.....வேற என்ன செய்ய நான்.சரி ஓட்ஸ் தோசை சுட்டுப் பாக்கிறன் !

  பச்சை நெல்லிக்காயும் வாங்கலாம்தான்....ஏஞ்சல்.ஆனால் போனமுறை நீங்க சொன்னதுபோல ஊறவிட்டோ காய்ந்தோ இங்கே கிடைப்பதில்லை !

  ReplyDelete
 14. நீங்க சொன்னதுபோல ஊறவிட்டோ காய்ந்தோ இங்கே கிடைப்பதில்லை //

  ?????????? ஊறவிட்டோ அல்ல காய்ந்தோ !!! அது நான் நெல்லியை சொல்லல அது காய்ந்த எலிமிச்சை காய்.. அது வேற ரெசிப்பி .
  இங்கே எப்பவும் ஃபிரஷ் நெல்லி கிடைக்கும் ..
  வருகைக்கும் கருத்துக்கும்நன்றி ஹேமா ..வாங்களேன் லண்டன் பக்கம் நான் சமைத்து அசத்தறேன்.. அப்புறம் அந்த ஓட்ஸ் தோசை செம டேஸ்ட் கண்டிப்பா செய்து பாருங்க

  ReplyDelete
 15. //பூசாருக்கு சந்தேகம் வரக்கூடாதின்னு அரைக்கு
  முன் படம் எடுத்தேன் :)) ///

  ஹா..ஹா..ஹா... நாம திருந்துறமோ இல்லையோ:) நாட்டு மக்களைத் திருத்துவது நம் கடமையாச்சே:)) மீ எஸ்ஸ்ஸ்... நாளை வருகிறேன்ன்ன்...

  ReplyDelete
  Replies
  1. பூஸ்..இது இவங்க சாப்பிட்டு ருசி பார்த்ததா..? இல்லை டெஸ்டிங்கான்னும் முருங்கை மேலே ஏறி பார்த்திடுங்கோவ் :-))))

   Delete
  2. ஆஆஆஆஆஆஆஆ கடவுள் நம்மளைக் கை விடேல்லை:)).. காணாமல் போய் மீண்டு வந்த ஜெய்ய்ய் இப்போ பூஸுக்கு சப்போர்ட் பண்ணத் தொடங்கிட்டார்ர்... இல்லாட்டில் நம்மளுக்கு ஆருமே சப்போர்ட் பண்ண மாட்டேங்கிறாங்க.... ஜெய்.. உங்களுக்கு நாளையிண்டைக்கு மட்டின் பிர்ராணி பார்ஷல் அனுப்புறேன்ன்ன்ன்.. புளிக்குக் கீழ காத்து வாங்கிக்கொண்டிருந்து சாப்பிடுங்கோ:))..

   Delete
 16. படித்து ருசித்து படமாக போட்டுயிருக்கிங்க.. பார்க்கவே நல்லா இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. நன்றி நன்றி வருகைக்கும் கருத்துக்கும் Faisa

   Delete
 17. ஓட்சும் ரவையும் புதுமையும் பழமையும்
  கலந்த மாதிரி வித்தியாசமாக இருக்கே
  செய்து பார்த்துவிடுகிறோம்
  பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் .உடலுக்கு மிக்க நல்லது இந்த குறிப்பு செய்து பார்த்து சொல்லுங்க

   Delete
 18. எனக்குத்தான் தோசை...ME THE FIRSTU
  இதோ வந்துட்டேன்
  படமும்
  தோசையும்
  பதிவும் ஆரோக்கியமானதக
  இருக்கு

  ReplyDelete
  Replies
  1. வாங்க சிவா :)) உங்களுக்குத்தான் முதல் தோசை ..

   Delete
 19. நெல்லிக்காய் பச்சடி சூப்பர் நாவூறுது

  ஓட்ஸ் ரவா தோசை யில் கொஞ்ச்ம மிளகு தட்டி போட்டு கேரட்டும் துருவி சேர்த்து வார்த்து பாருங்கள் ருசி இன்னும் பிரமாதமாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. அடுத்த முறை நீங்க சொன்னதைப்போல மிளகு கேரட் சேர்த்து செய்யறேன் ஜலீக்கா.. பாருங்களேன் இந்த ஜெய்,என்னைய கிண்டல் செய்வதை நான் உங்க மாணவிதானே கண்டிப்பா ஓரளவுக்காச்சும் சமைப்பேனே ..:))

   நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 20. ஏஞ்சலின் நெல்லிக்காய் பச்சடியை,செய்து, ரஸித்து உன் வலைப்பூவில் பகிர்ந்ததற்கு மிகவும் ஸந்தோஷம். உன் ஃபாலோவர்களுக்கு சொல்லுகிறேனை அறிமுகப்படுத்தியிருக்கிறாய்.
  அவர்கள் வரவை வரவேற்கிறேன் ஓட்ஸ் ரவா தோசையும் ரொம்ப டேஸ்டாக இருக்கு. அடிக்கடி வா. ஸந்தோஷமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிம்மா உங்க அன்பான வருகைக்கு ..உங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் ..இன்னமும் நிறைய குறிப்பு செய்திருக்கேன்

   Delete
 21. சுவையான பதிவு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
  ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சுரேஷ் வருகைக்கும் கருத்துக்கும் .கண்டிப்பா உங்க பக்கமும் வரேன்

   Delete
 22. தோசையும் பச்சடியும் அருமையான ரெசிப்பிகள்.
  இந்தத் தோசை செய்ததுண்டு ஆனால் முந்தினநாள் அரைத்து மீந்த தோசை மாவு சேர்த்துச் செய்ததில்லை. இனி செய்யும்போது இப்படி செய்து பார்க்கிறேன்.

  நெல்லிக்காய் எப்படி இப்படி உங்களுக்கு???
  கடைக்காரர்கிட்ட மொத்தமா வாங்கி வந்துடுவீங்களோ?
  அப்போ மற்றவங்களுக்கு???
  சரி சரி நான் ச்சும்மா:)

  நெல்லிக்காய் பச்சடியும் அருமையான குறிப்பு. ஆனால் அதில் சேர்த்திருக்கும் //மினுக்கு வற்றல்// இதுதான் புரியவில்லை. அதன் சுவை எப்படி இருக்கும்? இனிப்பு, புளிப்பு.......
  குறிப்புப் பகிர்வுக்கு மிக்கநன்றி!
  விரைவாக வளர்கிறீர்கள் அஞ்சு;) சமையலில்:))) வாழ்த்துக்கள்!!!

  அஞ்சு...... வை.கோபாலகிருஷ்ணன் அண்ணாவின்
  //நாளைக்குக் காலையில் எல்லாவற்றையும் செய்யச் சொல்லி சாப்பிட்டால் தான் எனக்கு திருப்தியாகும். இன்று இரவு பூராவும் மசக்கைக்காரி [பிள்ளைத்தாச்சி] போலத்தான் என் நிலைமையும்.//
  பின்னூட்டம் வாசித்து சிரிப்பை அடக்கமுடியாமல் சத்தமாக சிரித்தே விட்டேன். அவரின் பின்னூட்டங்களும் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. //ஆனால் முந்தினநாள் அரைத்து மீந்த தோசை மாவு சேர்த்துச் செய்ததில்லை. இனி செய்யும்போது இப்படி செய்து பார்க்கிறேன்.//

   பாவம் வீட்டுக்காரர் :-))))))))))))

   Delete
  2. ஜெய்லானி வாங்கோ! யாரோடை வீட்டுக்காரர்ர்ர்ர்ர்ர்ர்ர்? ஐ மீன் ஹவுஸ் ஓனர்:)
   உங்க வீட்டுக்காரரா? எங்க வீட்டுக்காரரா? அஞ்சு வீட்டுக்காரரா
   ஹா ஹா ஹா.....
   என் பாட்டுக்குக்கு எசப்பாட்டு பாடினீங்களா அதான் கேட்டேன்.
   தப்பா நினைச்சிடாதீங்க:)))

   Delete
  3. இன்னிக்கு கொஞ்சம் வெளியில் சென்று வந்தேன் அதற்குள் இங்கே நல்ல கல கல என்று இருந்திருக்கே ..:))


   ஜெய் ஆஆ ..அதீஸ் ,நான் எல்லாம் உங்களை தேடிட்டிருந்தோம் ..புதுசா ஒரு சொந்த:)) ரெசிப்பி போட்டு தான் உங்கள வரவைக்கனும்னு இருந்தேன் தப்பினீங்க

   Delete
  4. இளமதி இங்கே லண்டனில் நெல்லிக்காய் நிறையவே கிடைக்குது
   ஆனா வாழைத்தண்டு மட்டும் கிடைக்கல ..அமெரிக்கா துபாய்ல எல்லாம் கிடைக்காம் .
   நெல்லிக்கா சீசன் இருக்கும்போது நான் இப்படி வாங்கி செய்திடறேன்
   காற்றுள்ளபோதே பயன்படுத்திக்கணும் :))

   Delete
 23. வெரி...வெரி சாரி.

  கொஞம் பிஸி அதான் வருவதற்கு தாமதம் ஆகி விட்டது சமையலை பற்றி மிக அழகாக பதிவு இடுகின்றீர்கள் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. நன்றி நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ...இப்ப ஒரு ஃப்ளோவில் ஒரே சமையல் குறிப்பா வருது :)))

   Delete
 24. Nice recipes..keep rocking Angel akka! :)

  ReplyDelete
 25. இளமதி August 22, 2012 7:25 AM To Angelin

  *****அஞ்சு...... வை.கோபாலகிருஷ்ணன் அண்ணாவின்
  //நாளைக்குக் காலையில் எல்லாவற்றையும் செய்யச் சொல்லி சாப்பிட்டால் தான் எனக்கு திருப்தியாகும். இன்று இரவு பூராவும் மசக்கைக்காரி [பிள்ளைத்தாச்சி] போலத்தான் என் நிலைமையும்.//

  பின்னூட்டம் வாசித்து சிரிப்பை அடக்கமுடியாமல் சத்தமாக சிரித்தே விட்டேன். அவரின் பின்னூட்டங்களும் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.*****

  வணக்கம் மேடம். தங்களின் ரசனைக்கு மிக்க நன்றி, மேடம்.

  தங்களின் வலைத்தளத்திற்கு வருகை தந்து FOLLOWER ஆகலாமா என சற்றே முயற்சித்தேன். ஆனால் என்னால் முடியவில்லை.
  கீழ்க்கண்ட பதில் வந்தது.
  ============================
  சுயவிவரம் கிடைக்கவில்லை
  நீங்கள் கோரிய Blogger சுயவிவரத்தை காண்பிக்க முடியாது. பெரும்பாலான Blogger பயனர்கள், அவர்களுடைய சுயவிவரத்தை பொதுவில் பகிர்வதை தேர்ந்தெடுப்பதில்லை.

  நீங்கள் Blogger இன் பயனராக இருந்தால், உங்கள் சுயவிவரத்துக்கான அணுகலை இயக்க பரிந்துரைக்கிறோம்.
  ============================
  என்னை உள்ளே அனுமதிக்கவே இல்லை. இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

  என் வலைத்தளத்தில் உள்ள பல சிறுகதைகளைப் படித்தால் தாங்கள் மேலும் வயிறு குலுங்கச் சிரிக்க முடியும்.

  உதாரணமாக ஒரு சில சிறுகதை இணைப்புகள்:

  1] http://gopu1949.blogspot.in/2011/11/blog-post.html
  ஜாங்கிரி

  2] http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_12.html
  ஜாதிப்பூ

  3] http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_1908.html
  பூபாலன்

  4] http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_8.html
  எல்லோருக்கும் பெய்யும் மழை

  5] http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_13.html
  உண்மை சற்றே வெண்மை

  6] http://gopu1949.blogspot.in/2011_11_01_archive.html
  காதல் வங்கி

  7] வரம்
  http://gopu1949.blogspot.com/2011/08/blog-post_21.html

  8] கொட்டாவி
  http://gopu1949.blogspot.com/2011/09/blog-post.html

  9] பெயர் சூட்டல்
  http://gopu1949.blogspot.com/2011/10/blog-post.html

  10] பிரமோஷன்
  http://gopu1949.blogspot.com/2011/10/blog-post_09.html

  11] எட்டாக்க[ன்]னிகள்
  http://gopu1949.blogspot.com/2011/10/blog-post_6168.html

  12] ஜாதிப்பூ
  http://gopu1949.blogspot.com/2011/09/blog-post_30.html

  13) ஏமாற்றாதே! ஏமாறாதே !!
  http://gopu1949.blogspot.com/2011/09/blog-post_22.html

  நேரம் கிடைக்கும்போது எல்லாவ்ற்றையும் பொறுமியாகப் ப்டித்துவிட்டு த்யவுசெய்து கருத்துக் கூறுங்கள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 26. வணக்கம் அண்ணா!
  என்னை மேடம்னு எல்லாம் சொல்லவேண்டாமே. சாதாரணமா இளமதின்னாலே போதும்.

  உஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா கதையுங்கோ. ப்ளொக் பற்றிக் கதைத்தால் இங்கே என்னை பிய்த்துப் பிறாண்டிட:) பல பேர் உள்ளனர்:)))
  எனக்குன்னு ப்ளொக் ஒண்ணும் இல்லை. அது எப்பவோ ஏதோ தெரியாமல் தொடங்கியது. பூட்டு போட்டு சாவியை எங்கோ எறிஞ்சாச்சு:))

  தேடி அலுக்கவைத்தமைக்கு வருந்துகிறேன்.
  உங்கள் ப்ளொக் வரணும். வருவேன்.

  ஓ இத்தனை சிறுகதைகளா?
  தலைப்புகளை தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி அண்ணா!

  கால நேரங்கிடைக்கும்போது படித்து, நிச்சயம் பின்னூட்டமிடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. உடன் பதில் அளித்த அன்புத்தங்கை இளமதிக்கு நன்றிகள்.

   //எனக்குன்னு ப்ளொக் ஒண்ணும் இல்லை. அது எப்பவோ ஏதோ தெரியாமல் தொடங்கியது. பூட்டு போட்டு சாவியை எங்கோ எறிஞ்சாச்சு:))//

   நிம்மதியாப்போச்சு. சந்தோஷம். இதைப் படித்ததும் நானும் சிரித்து விட்டேன். முதலில் என் வலைத்தளத்துக்கு வந்து follower ஆகி, ஏதாவது ஒரு சில கமெண்ட் கொடுங்கோ.

   அப்போது தான் அடுத்த விருது என்னிடமிருந்து உங்களைத்தேடி வரும். வலைத்தளம் இருக்க வேண்டும். எழுத வேண்டும் என்ற அவசியம் ஏதும் கிடையாது. இது ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் அன்புக்கான பரிசு தான்.

   அன்புடன்,
   vgk

   Delete
  2. உஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா கதையுங்கோ. ப்ளொக் பற்றிக் கதைத்தால் இங்கே என்னை பிய்த்துப் பிறாண்டிட:) பல பேர் உள்ளனர்:)))//

   என் கண்ணுக்கு இது மட்டும் தெளிவா தெரியுது ..
   இமா அதீஸ் அம்முலு ஓடியாங்கோ ..:))))))))

   Delete
  3. கோபு சார், நானும் நன்றி சொல்றேன் ..நானும் நிறைய கதைகள் மிஸ் பண்ணிருக்கேன் விரைவில் படித்து பின்னூட்டம் தரேன் அனைத்திற்கும்

   Delete
  4. என்னாது யங்மூன் புளொக் வச்சிருந்தவவோ?:)) நிஜமாலுமோ?:))

   எங்ஙேஞேஙேஙே?:)) ... பூஸ் ஒன்று புறப்படுதே...

   Delete
 27. ஆஆஆஆஆஆஆஅ அஞ்சுவும் முன்னேறிட்டாஆஆஆஆஆ இப்போ அஞ்சுட கையும் தெரியுதே எனக்கூஊஊஊஊஊஊ:)). அஞ்சு தேம்ஸ் கரைக்கு பொழுது சாயமுன் வாங்கோ சாத்திரம் சொல்லுறேன்ன்ன்ன்:))..

  ReplyDelete
  Replies
  1. அஞ்சலின்!போங்கோ,ஆனா அவதானமா இருக்க வேணும்!!!!!

   Delete
  2. ஹா :)) ஹா ))..ஆமாம் அண்ணா என்னை பிடிச்சு தள்ள முயற்சி நடக்கலாம்


   Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) ஒரு ஆசையில:) கூப்பிட்டதுக்கு இப்பூடியா:)))

   Delete
 28. வணக்கம் அஞ்சலின்!அருமை!!!!எனக்கு எங்கே இதுவெல்லாம் செய்து பார்த்து ருசிக்க நேரம்?அப்பப்போ நீங்கள் செய்வதில் எனக்கும் கொஞ்சம்(பூஸுக்குத் தெரியாமல்)அனுப்பி விடுங்கள்,நன்றி!!!!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா..ஹா... அஞ்சு நல்லா றப் பண்ணி அனுப்புங்கோ.. இல்லாட்டில் என் கண்ணுக்கு எல்லாமே தெரியுமாக்கும்:).

   Delete
 29. hi dear, Inviting you to join my event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

  ReplyDelete
 30. 65 ஆவது கருத்து..
  பதிவு .மிக சிறப்பாக உள்ளது.
  நெல்லிக்காயும் மிகப் பிடிக்கும்.
  நாவில் ஜலம் ஊறுதே!
  நன்றி.
  நம்ம பக்கம் வரவே மாட்டீங்களோ?
  (ரெம்பப் பொண்ணுங்க இப்படித்தான் இருக்கிறாங்களே!)

  ReplyDelete
 31. ஒன்று சொல்ல மறந்தே போயிட்டேன் அஞ்சு, கொஞ்ச நாட்களாக நானும் அவதானித்தேன்ன் 99 ஃபலோவர்ஸ் உடன் இருந்தீங்க, நான் போய் இணையட்டோ மீண்டும் 100 ஆக என்றெல்லாம் எண்ணியிருக்கிறேன், ஆனா 100 ஆனதைக் கவனிக்காமல் விட்டிட்டன்... நீங்க சொல்லித்தான் பார்த்தேன்..

  ReplyDelete