அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

8/18/12

பெரு நாள் வாழ்த்துக்கள் /குணுக்கு..and ..துணுக்கு :)))

ரமலான் கொண்டாடும் அனைத்து சகோதர 
சகோதரிகளுக்கும் 
                                       இனிய பெரு நாள் வாழ்த்துக்கள் ..

எல்லாரும் குணுக்கு எடுத்துக்கோங்க :))


குணுக்கு.இது நாம் எப்பவும் செய்யும் உளுந்து வடை மாதிரிதான் 
ஆனா அரிசி ,துவரம்பருப்பு ,பயற்றம்பருப்பு ,கடலை பருப்பு ,
உடைத்த உளுந்து அனைத்தும் சேர்த்து அரைத்து பொரிப்பது .

தேவையான பொருட்கள் 
இவை ஊற வைத்து அரைக்க 

உளுந்து        .....1/2  கப் 
இட்லி அரிசி ....1/4  கப் 
துவரம் பருப்பு ..1/4  கப் 
கடலை பருப்பு ....1/4  கப் 
பயற்றம் பருப்பு ..1/4  கப் 
சிவப்பு வற்றல்மிளகாய் ...2
மிளகு ....       அரை தேக்கரண்டி 
பெருங்காய தூள் ..அரை தேக்கரண்டி 
மேலேயுள்ளவற்றை சுமார் இரண்டு மணிநேரம் நீரில் 
ஊறவைத்து மின் அம்மியில் அரைக்கவும் 
பின்பு அந்த கலவையுடன் நறுக்கிய 
சின்ன வெங்காயம் ..10
ஒரு ஆர்க் கறிவேப்பிலை ,
நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சிறிதளவு 
நறுக்கிய சின்னத்துண்டு இஞ்சி ,
தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும் ..
பின்பு வாணலியில் எண்ணெய் காய வைத்து மாவை 
ஸ்பூனால் எடுத்து எண்ணையில் இட்டு பொரிக்கவும் 
கர மொரு குணுக்கு தயார் :))).
*********************************************************************************************
   இது பியானோ வாசிக்கும்  பூனை பற்றிய துணுக்கு  :))


40 comments:

 1. அன்பான வாழ்த்திற்கு நன்றி.குணுக்கு சூப்பர்,எங்க ஊரில் கிட்டதட்ட காரவடை இப்படி தான் செய்வோம்.
  அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியா ..
   எனக்கு சமையல் ரெசிப்பி போடும்போது மட்டும் ரொம்ப ஷை ஆகிடுவேன் .:)))

   Delete
 2. ஆஆஆஆஆஆஆஆஅ அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும், இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. எங்களுக்கு, பியானோ, கிட்டார், வயலின், வீணை எல்லாம் அத்டுப்படியாக்கும்.. எங்கிட்டயேவா:)

  ReplyDelete
 4. நோ.. இது அநியாயம், அநீதி... இப்படிப் பதில் போடாமல் விட்டால், நான் தேம்ஸ் கரையில் என் சிஷ்யையோடு உண்ணா விரதமிருப்பேன்ன் சொல்லிட்டேன்ன்ன்:)).. ஹை கோர்ட்டுக்குப் போகவும் தயங்க மாட்டேன்:)

  ஊ.கு:
  இது போன தலைப்புக்கான வன்மையான கண்டனம்:)

  ReplyDelete
  Replies
  1. :)))

   வீக்கென்ட் பிசி ...இதோ எல்லாருக்கும் பதில் தரேன்

   Delete
 5. நுணுக்கு டூப்பர்ர்.. எனக்கும் நல்லாப் பிடிக்கும், இப்பவே செய்து சாப்பிடோணும் போல இருக்கே.. இனித்தான் ரீ டைம், ஹையோ ரீக்கு சூப்பராக இருக்குமே.. ஒரு சட்னியும் செய்தால் இன்னும் சூப்பர் அஞ்சு.....

  அதுசரி இதுவும் புதிய கண்டு/நண்டு பிடிப்போ?:).

  ReplyDelete
  Replies
  1. //அதுசரி இதுவும் புதிய கண்டு/நண்டு பிடிப்போ?:)//

   அமெரிக்காகாரன் வலைப் பூவிற்கு போனால் விஞ்ஞானத்தைப் பற்றி கதை சொல்றான்.

   ஐரோப்பாக்காரன் வலைப் பூவிற்கு போனால் வளரும் நாடுகளைப் பற்றி கண்ணோட்டம் போடுகிறான்.

   ரஷ்யாகாரன் வலைப் பூவிற்கு போனால் அணு ஆயுதத்தையும் கையில் பிடிக்கலாம் என்று தத்துவம் பேசுறான்.

   சரி ஒன்னும் வேணாம்னு ஜப்பான் நாட்டுக்காரன் வலைப் பூவிற்கு போனால் பெட்ரோலே இல்லாமல் வண்டி ஓட்டுறான்.

   பிறகு எங்கே போகலாம்னு மண்டையைப் போட்டு கடைஞ்சு நம்ம இந்தியக்காரன் வலைப் பூவிற்கு வந்தால்...

   கம...கமன்னு சாம்பார் வாடையும் செம..செம பிரியாணி வாடையும் தூக்கி அடிக்குது.

   வாழ்க இந்தியா !

   Delete
  2. வாழ்க அந்நியன் நெம்பர் ரூஊஊஊ:)))

   Delete
  3. அவங்க கண்டுபிடிச்சதைஎல்லாம் நாம உக்காந்து ரிலாக்ஸ்டா ரசிக்கும்போது கொறிக்க ஏதாவது வேணுமே ...அதான் நம்ம கண்டுபிடிப்பு .:))வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ .

   Delete
  4. அதுசரி இதுவும் புதிய கண்டு/நண்டு பிடிப்போ?:).//

   இல்லையில்லை :)))பாதி நம்ம ஐடியா மீதி அடை குணுக்கு ரெசிபி

   Delete
 6. குணுக்கு + துணுக்கு = சூப்பர்

  எப்படியெல்லாம் யோசிக்கின்றீர்கள் ரொம்ப நன்றி சகோ.

  ReplyDelete
 7. ரம்லான் பண்டிகை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்§

  ReplyDelete
 8. வடை போல இருக்கு குணுக்கு விடுமுறையில் செய்து பார்க்கின்றேன்!ம்ம்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நேசன்.இதை செய்வது சுலபம் .செய்து பாருங்க .

   Delete
 9. துணுக்கும் பூனையின் துடுக்கும்
  மிக மிக அருமை
  பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .

   Delete
 10. கர மொரு குணுக்குக்கு நன்றி...

  அனைவருக்கும் இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க .

   Delete
 11. தங்களின் குணுக்கு படா ஜோர் ..... நிர்மலா !

  இதை பொதுவாக நாங்கள் உளுத்தம் போண்டா என்போம்.

  குணுக்கு என்பது வேறு முறையில், ஆமவடைக்கான மாவை, சின்னச்சின்னதாகக் கிள்ளிப்போட்டு எண்ணெயில் பொரித்து செய்வோம். தூள் பக்கோடா போன்ற கலரில் கரகரப்பாக காரசாரமாக இருக்கும்.

  எதுவாக இருந்தால் என்ன? ஏந்தப்பெயரில் அழைத்தால் என்ன? சாப்பிட வாய்க்கு ருசியாக இருக்க வேண்டும். தங்களுடையதைப் படத்தில் பார்க்கும் போதே ருசியோ ருசியாக உள்ளது.

  அன்புடன்
  கோபு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபு சார் .
   தோழி ஒருவர் அடை மாவில் செய்திருந்தாங்க ..நான் அதே முறையில் வடையாக சுட்டுவிட்டேன்

   Delete
 12. குணுக்கு சமையல் குறிப்பு பிரமாதம்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா .

   Delete
  2. //என் சிஷ்யையோடு உண்ணா விரதமிருப்பேன்ன் சொல்லிட்டேன்ன்ன்:)).. ஹை கோர்ட்டுக்குப் போகவும் தயங்க மாட்டேன்:)//

   கலை :)) நீங்களும் உண்ணா விரதமா ?? ஆன்லைன்ல மொகல் பிரியாணி அனுப்பலாம்னு யோசிச்சேன் அப்பா கலைக்கு வேணாம் ஆர்டர் கான்சல்

   Delete
 13. வாழ்த்திற்கு நன்றி கூடவே சுவையான குணுக்குவுடன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா.

   Delete
 14. angelinAugust 19, 2012 6:05 AM
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி/////

  உண்ணாவிரதம் 4 ஆவது நாளகத் தொடர்கிறது... எனக்கு உப்பூடி நன்றி சொல்லாமைக்காக கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

  ReplyDelete
  Replies
  1. ஆஅவ்வ்வ்வ் கர்ர்ர்ரர்ர்ர்ர் கிர்ர்ரர்ர்ர்ர் ....வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி/////

   :<>{{{{{{{{{{ நன்றி ஈஈ ஈஈ எஈ எஈ ஈ ஈ நன்றி ஈஈ ஈஈ எஈ எஈ ஈ ஈ நன்றி ஈஈ ஈஈ எஈ எஈ ஈ ஈ நன்றி ஈஈ ஈஈ எஈ எஈ ஈ ஈ நன்றி ஈஈ ஈஈ எஈ எஈ ஈ ஈ :)))

   Delete
 15. இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரம்ழான் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. துணுக்கு அண்ட் குணுக்கு ஜூப்பர் அஞ்சு. அந்த பக்கம் போனா நம்ம பப்பூ வோட தேன் குரல் கானா ஆகா :))நீங்க சொல்லலேன்னா மிஸ் பண்ணி இருப்பேன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரிஜா :)) நாங்க எல்லாம் நாலு அஞ்சு நாள் உண்ணாவிரதம் எல்லாம் இருக்க மாட்டோம் நாங்களே எங்களுக்கு நன்னி சொல்லிப்போம் :))

   Delete
  2. ஆஅ ஆ ..கிரி ... //தேன் குரல் கானா ஆகா//.
   :))நம்மாலான உதவி ...
   நானே போடணும்னு யோசிச்சேன் ஜஸ்ட் மிஸ்ட் :))))

   Delete
  3. நாலு அஞ்சு நாள் உண்ணாவிரதம் எல்லாம் இருக்க மாட்டோம் நாங்களே எங்களுக்கு நன்னி சொல்லிப்போம் :))//


   சும்மாவாச்சுக்கும் பூசார் ...உண்ணாவிரதமாவதுஹா ஹா :))

   Delete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. அதென்ன குணுக்குச் அமையல் குறிப்பு.சின்னதா எண்டு அர்த்தமாக்கும்.நான் நினைக்கிறன் வடைபோல டேஸ்டா இருக்கும்போல.கட்டாயம் ட்ரை பண்ணுவன் ஏஞ்சல்....எல்லாம் சரி அம்மியில் அரையுங்கோ போட்டதுக்கு கண்டனங்கள்.அதிரா ’அம்மி’யைக் கவனிக்கேல்லப்போல........ !

  பூஸார் சூப்பரா பியானோ வாசிக்கிறார்.அனைத்து இஸ்லாமியச் சகோதரிகளுக்கும் பெருநாள் வாழ்த்துகள் !

  ReplyDelete
 19. சின்னதா எண்டு அர்த்தமாக்கும்.நான் நினைக்கிறன்//


  அதே அதே !!
  இன்னும் சின்னதா நான் கிள்ளி விட்டாற்போல் பொரித்திருக்கலாம்..

  அதீஸ் உண்ணா விரதமாம் கண்ணையும் மூடிதான் :))
  mixie ...மின் அம்மி இல்லையா ஆ ஆஅ

  ReplyDelete
 20. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

  ReplyDelete
 21. குணுக்கு + துணுக்கு
  பதிவுக்கு நன்றி

  அனைவருக்கும் இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 22. குணுக்கு ருசியாக இருந்தது. நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 23. பெருநாள் வாழ்த்திற்கு மிக்க நன்றி
  குணுக்கு மிக அருமை.
  நான் வடை போல் சுட்டெடுப்பது.

  எனக்கு ரொம்ப பிடிக்கும்

  ReplyDelete