அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Thursday, August 30, 2012

வடு மாங்காய்/அம்மாஞ்சி குழம்பு A.k.a அரைச்சு கலந்த குழம்பு .

அம்மாஞ்சி குழம்பு :)) எனக்கு இந்த பெயர்தான்
 ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு .
குறை ஒன்றுமில்லை லக்ஷ்மிம்மா வலைப்பூவில்  
அவர்களின் குறிப்பு பார்த்து செய்தது ..
குழம்பு செய்ய முக்கியமா வடு மாங்கா வேணும் :)
                                                                                     
                                                                                 
சில நாட்கள் முன்புதான் இந்தியன் சூப்பர் மார்க்கட்டில் இந்த சிறிய 
மாம்பிஞ்சுகளை பார்த்து வாங்கி வந்தேன் 
வடு மாங்காய்:P
செய்முறை 

 பிஞ்சு மாங்காய்..... 15
விளக்கெண்ணெய் ...... ஒரு சிறிய ஸ்பூன் .
நான் வெறும் வெஜிடபிள் ஆயில் தான் சேர்த்தேன் 
விளக்கெண்ணை ...உப்பில் ஊற ஆஸ்மாசிஸ் process இற்கு
ஒரு காரணி:)
அதனால் நீங்க செய்யும்போது கண்டிப்பா 
விளக்கெண்ணை சேர்க்கவும் .:))


 மிக்சியில் கீழே கொடுக்கப்பட்ட பொருட்களை 
அரைத்து வைக்கவும் 
பெரிய காய்ந்த வற்றல் மிளகாய்  ...8 or 10 Nos,
ஒரு மேஜைக்கரண்டி கல் உப்பு 
ஒரு தேக்கரண்டி கடுகு ,
ஒரு தேக்கரண்டி பெருங்காயம் 
அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் 
மாம்பிஞ்சுகளை சிறு முனை கொப்புடன் வெட்டி நன்கு கழுவவும் 
பின்பு கிச்சன் பேப்பரில் பரப்பி ஈரம் போக துடைக்கவும் பின்பு 
விளக்கெண்ணை எடுத்து சீராக மாம்பிஞ்சுகளின் மேல் படுமாறு 
தடவி வைக்கவும் .
ஒரு கல் ஜாடி வேண்டும் ஆனா என்னிடம் இல்லாததால் 
கண்ணாடி  ஜாடியில் எண்ணெய் மாஸ்க் போட்ட 
மாம்பிஞ்சுகளுடன் அரைத்த தூள் சேர்த்து கலக்கி மூடி 
போட்டு வைக்கவும் 
மூன்று நாள் கழித்து திறந்து wooden  ஸ்பூனால் கலக்கவும் .
நான் கலக்கவில்லை நன்கு குலுக்கி பிரட்டி  எடுத்தேன்  .
இரண்டு நாளுக்கு ஒரு முறை இப்படி செய்யவும் ஐந்தாறு 
நாட்களில் தூள் ஆக இருந்த கலவை நீரா மாறியிருக்கும் 
மாம்பிஞ்சுகள் உப்பை  உறிஞ்ச ஆரம்பிக்கும் .பத்து நாளில் 
ரெடி ஆகிடும் .அவ்வப்போ வெயிலில் வைத்து எடுத்தா 
வடு மாங்கா ரெடி :))
        
                                                                           
                     கண்ணாடி பாட்டிலில் ரெடியா ஸ்ஸ்ஸ் ஆ ஆ      
                                                                   

இப்படி ஊறிய வடு மாங்காயில் இரண்டு எடுத்து லக்ஷ்மிம்மாவின் 
குறிப்பு பார்த்து இந்த குழம்பு செய்தேன் .குழம்பு டேஸ்ட் 
அருமை அருமை .அதுக்குன்னே வடு மாங்காய் போட ஆசையா 
இருக்கு :))
கொஞ்சம் வேகமாதான் பதிவு போடறேன் :)))
மகளுக்கு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சா ..எனக்கு நண்பர்களின் 
வலைப்பூவுக்குமட்டுமே வர நேரம் கிடைக்கும் ..அதனால் என் 
சமையல் பதிவுகள் டாஷ் போர்டில் இன்னும் சில இருக்கு 
அதையும் பதிவிட்ட பின்    .................ஓய்வு :)))))

                

56 comments:

 1. ஐயோ மாவடுவில் குழம்பா:)
  ஸ்ஸ்... இப்படி வாய் ஊற வைச்சிட்டீங்களே;)
  வடுமாங்காய்க்கு, பிஞ்சு மாங்காவுக்கு எங்கை போக? அவ்வ்வ்வ்.....
  அப்பிடி கிடைச்சாலும் இனி இங்கே வெய்யிலும் போயே போச்சு.
  ம்.ம்.. அஞ்சு! அசத்துறீங்க சமையலில்.
  வடுமாங்காய், குழம்பு படங்களே அதன் சுவையை சொல்லுகிறது:)
  நடத்துங்கோ:))) வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இளமதி :))
   சம்மர் முடியுமுன் பதிவை போடணும்னு பப்ளிஷ் செய்தேன் ..
   இங்கும் ஒரே மழை ..வெயில் காணாமலே போய் விட்டது ..
   ..இனிஇங்கே மாம்பிஞ்சுகளும் கிடைக்காது :(

   Delete
  2. அஞ்சூஊஊஊஊ! வடுமாங்கா என்று சொல்லி இங்கே எங்களை அலைய விட்டு வேடிக்கை பார்க்குறீங்க:(
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))))

   Delete
 2. படங்களை பார்க்கும் போதே சுவை உணர்கிறேன்! அருமை!

  BTW, 100 பின்தொடர்பாளர்களை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தம்பி ..வாழ்த்துக்கும் நன்றி
   விரைவில் நூறாவது போஸ்டும் வெளி வரும் :))

   Delete
 3. //அம்மாஞ்சி குழம்பு :)) எனக்கு இந்த பெயர்தான்
  ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.//

  அம்மாஞ்சி என்றால் என்ன தெரியுமா ?
  அது ஒரு உறவு. ஒருவரின் தாயாருடன் கூடப்பிறந்தவரான மாமாவின் [தாய்மாமனின்] பிள்ளைக்குப் பெயர் தான் அம்மாஞ்சி.  ReplyDelete
  Replies
  1. அருமையான விளக்கங்கள் ..மிக்க நன்றி ...நான் முதல் முதலாக வடுமாங்காய் செய்தது ...எனக்கே ஆச்சர்யம் இவ்வளவு அருமையாக வந்தது ..உங்க பின்னூட்டங்கள் மட்டும் தனியே எடுத்து வடுமாங்காய் குறிப்புகள் என்று போடபோறேன் .

   Delete

  2. ///இந்தக்குழம்பு நாங்க அரைச்சு கலக்கின்னுதான் சொல்வோம். ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு பேர் சொல்வாங்க அதில் வேடிக்கையா அம்மாஞ்சி குழம்புன்னும் சொல்வாங்க ஏன் அந்தப்பெயர் வந்ததோ தெரியாது.மாங்காயில் ஏற்கனவே உப்பு இருப்பதால் உப்பு குறைவாக சேர்க்கவும்.//


   மேலேயிருப்பது நம்ம லக்ஷ்மி அம்மா அவர்கள் பதிவில் இருந்தது ..அங்கிருந்துதான் நான் அம்மாஞ்சி குழம்பு என்ற பெயரை கண்டெடுத்தேன் :)))

   Delete
 4. //வடு மாங்காய்/அம்மாஞ்சி குழம்பு A.k.a அரைச்சு கலந்த குழம்பு.//

  இதை இங்கெல்லாம் அரைச்சு கலந்த குழம்பு என்றோ, அம்மாஞ்சிக் குழம்பு என்றோ சொல்வதில்லை.

  வடுமாங்காய் ஊறுகாய் என்று மட்டுமே இதற்குப் பெயர்.

  எல்லா வீடுகளிலும் அந்தக்காலத்தில், நிறைய வடுமாங்காய்களை வாங்கி வந்து, உப்பு+காரம் கலந்து மிகப்பெரிய பீங்கான் ஜாடிகளில் [ஜாடிகள் ஒவ்வொன்றும் திருகு மூடி போட்டு, அகலமாகவும் உயரமாக பென்குயின் போலத் தோற்றமளிக்கும்] ஊறப்போட்டு, அடிக்கடி கிளறி விட்டு, சமயத்தில் வெய்யிலிலும் உலர்த்தி வைத்துக்கொள்வார்கள்.

  இதில் பல நாட்கள் ஊறிய வடு மாங்காய்கள், அப்படியே வற்றி, சுருக்கம் சுருக்கமாக ஆகிவிடும்.

  இதில் உள்ள மிளகாய்+உப்புக்கலவை குழம்பு போல நல்ல சிவந்த நிறமாக இருப்பதால், மாங்காய்க் குழம்பு என நீங்கள் அழைக்கிறீர்களோ என்னவோ!

  இதில் ஊறிய பொடிப்பொடியான வடு மாங்காயும், அதன் Essence உம் படு சூப்பராக, வாசனையாக இருக்கும். நினைத்தாலே நாக்கில் நீர் ஊறும். இப்போ இதை டைப்பும்போதே என் நாக்கில் ஒரே நீர்.

  இதை கெடாமல் அவ்வப்போது கிளறி விட்டு பாது காப்போம். இல்லாவிட்டால் பூஞ்சைகாளான் போல ஏதோ அதில் ஒன்று புறப்பட்டு எல்லாவற்றையும் மொத்தமாகக் கெடுத்து விடும்.

  இந்த ஊறிய வடு மாங்காயையும், அதன் காரசாரத் தண்ணியையும் [நீங்க சொல்லும் குழம்பையும்] தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால், மிகவும் பிரமாதமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கோபு அண்ணா ( அண்ணா என்று அனைவரும் அழைப்பதால் நானும் இனி அண்ணா என்றே அழைப்பேன் ):))

   நான் குழம்பை தனியே படம் எடுக்கலை ..கொலாஜில் நாலாவது படம் தாளித்து மிளகாயுடன் இருப்பதே அரைத்து கலந்து என்ற குழம்பு
   நம்ம லக்ஷ்மி அம்மா அவர்கள் குறிப்பில் பார்த்தது ..அவங்க இதற்க்கு அம்மாஞ்சி குழம்பு என்ற இன்னொரு பெரும் இருக்கு என்றாங்க ..நான் வித்யாசமாக இருக்கே என்று அந்த பெயரை சூட்டிட்டேன் :))

   Delete
 5. இதில் வடுமாங்காயில் பலரகங்கள் உண்டு. பார்த்து வாங்கணும். பொறுக்கு வடு என்று ஒரு ரகம் - இது சற்றே விலை மலிவு. ஆனால் சீக்கரமாக அழுகி விடும். கல்லாமணி மாங்காய் என்று ஒரு ரகம். அத்வும் நீண்ட நாட்களுக்குச் சரிப்பட்டு வராது/ பொடிப்பொடிய குண்டாக உருண்டையாக ஒரு ரகம். அதிலும் பச்சரிசி மாங்காய் என்று பெயருள்ளதாகப் பார்த்து, சாம்பிள் சாப்பிட்டுப்பார்த்து வாங்கணும். அது தான் ஜோராக புளிப்பு அதிகம் இல்லாமல் சூப்பராக ருசியாக இருக்கும். நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். முன்பெல்லாம் [1970-1975 இல்] சீசன் நேரத்தில் [வெய்யில் காலமான ஏப்ரில்-மே யில் ஒரு பக்காப்படி பட்டணம் படி [Nearly 1.5 KGs] ஐந்து ரூபாய்க்கு கிடைத்தது. 10 படி அல்லது 20 படி என சீசனில் வாங்கிப் போட்டு விடுவோம். அது ஒரு ஆறு மாதம் வரை ஜோராக ஓடும்.

  இப்போ என்ன விலை தெரியுமா? ஒரு கிலோவே ரூபாய் 100 என விற்கப்படுகிறது. இருந்தாலும் அதன் ருசியோ ருசிக்கு அதை இப்போதும் ஓரளவுக்கு அவரவர் தேவைகளுக்கு ஏற்ப வாங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.

  கேரளா பாலக்காடு பக்கம் தயாரித்த ரெடிமேடு வடுமாங்காய் ஊறுகாயும், கெட்டியான ப்ளாஸ்டிக் பைகளில் போட்டு விற்கப்படுகிறது. அதுவும் 100-120 ரூபாய் விற்கிறது. அதில் மொத்தமே 10-12 வடுமாங்காய்களும், மிகவும் காரசாரமான Essence ஒரு 100-150 மில்லியும் மட்டுமே இருக்கும்.

  இந்த எல்லாவித வடு மாங்காய்களும் எங்கள் திருச்சியில் நாங்கள் வசிக்கும் பகுதியில் ஏப்ரில் + மே மாதங்களில் மட்டும் கிடைக்கும்.

  இதை நெடுநாள் ஊறப்போட்டு வைத்தால் அதன் பெயர் அழுக மாங்காய் எனப்படும். அதுவும் மிகவும் மிருதுவாக பஞ்சுபோல இருக்கும். பல் இல்லாத தாத்தா பாட்டி போன்றவர்களுக்கு, கடிக்காமல் அப்படியே நெசுக்கி சாப்பிட மிகவும் பதமாக இருக்கும்.

  அல்லது நன்றாக ஊறிய கெட்டியான சுருங்கிய வடுக்களையே, நறுக்கி மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி பல இல்லாதவர்களுக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.

  பொதுவாக இந்த் வடுமாங்காயை வேண்டாம் என வெறுப்பவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல அருமையான விளக்கங்கள் வை.கோ அண்ணன்... இப்போதான் இப்பூடியெல்லாம் இருப்பதை அறிகிறேன்.

   Delete
  2. அண்ணா! வடுமாங்காய்க்கும் அருமையான விளக்கங்கள் தந்திருக்கிறீர்கள்:)
   அதிலும் நளபாகம் சொல்லும்விதம் எங்கே இருக்கும் இந்த வடுமாங்கா என்று தேட வைக்கிறது. மிக்க நன்றி!
   இங்கே அஞ்சு, ஊறிய இந்த வடுமாங்காயைப் போட்டு குழம்பு வைக்க சொல்லியிருக்கா. அந்த புளிப்பு, காரம் அதுவும் சேர்ந்து நல்ல ருசியாக இருக்கும்.
   வடுமாங்காயில் லயித்திருக்கும் என்னைப்போன்றோரை பார்க்கும்போது அன்று நீங்க சொன்ன ”மசக்கைக்காரி” நினைவுக்கு வருகிறது;))))))))

   Delete
  3. அன்பின் இளமதி, நான் நேற்று இரவு தூக்கமின்றி இந்தப் பதிவுக்கு சுமார் 10 பின்னூட்டங்கள் கொடுத்திருந்தேன். அது மூன்று மட்டுமே இப்போது தெரிகிறது. மீதியெல்லாம் ஏதோ கோளாறினால் மறைந்து போய் உள்ளது.

   தாங்களும், திருமதி ஹேமா அவர்களும், திருமதி அதிரா அவர்களும் பாராட்டியுள்ளது மகிழ்வளிக்கிறது. உங்கள் எல்லோருக்குமே என் மனமார்ந்த நன்றிகள்.

   என்னுடைய ஒருசில சமையல் அனுபவங்களை நகைச்சுவை கலந்து ஏற்கனவே எழுதியுள்ளேன். சற்றே பெரிய பதிவாக இருக்கும். நேரம் கிடைக்கும் போது படித்துப்பாருங்கள்.
   இணைப்பு இதோ:

   உணவே வா! உயிரே போ!!
   [சமையல் பற்றிய நகைச்சுவை]
   http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html

   Delete
  4. கோபு சார் மிகவும் அருமையான விளக்கங்கள். தெரியாத விடயங்களை(வடுமாங்கா பற்றி)அறிய தந்தமைக்கு மிகவும் நன்றிகள்.(நான் லேட்டாக கொடுத்துள்ளேன். நெட்டில் பிரச்சனை

   Delete
  5. பரவாயில்லை ப்ரியா ..நேற்றைய கமெண்ட்ஸ் பாதியை ஸ்பாமில் கூகிள் ஒதுக்கியிருந்தது ..இப்ப பாருங்க கோபு அண்ணாவின் தந்துள்ள லிங்கில் நிறைய உணவு பதார்த்தம் வகைகள் இருக்கு ...அவற்றை எல்லாம் தேடி சமைக்கவேனும்

   Delete
 6. வாய் சப்புக்கொட்டுது ஏஞ்சல்.அவ்வளவு புளிக்குது அம்மாஞ்சிக்குழம்பு.புளிக்குது வேணாம் எனக்கு.(எனக்குச் செய்யத் தெரியாதெண்டு சொல்லாம வேணாம் எண்டு நரிபோலச் சொல்லியாச்சு....!

  பாருங்கோ கோபால் ஐயா எவ்வளவு விளக்கம் தாறாரெண்டு.அவருக்கே இவ்வளவு தெரிஞ்சிருக்கு.வெறும் சோரும் கறியும்தான் நான் தெரிஞ்சு வச்சிருக்கிறன் !

  ReplyDelete
 7. மாங்காய் பிஞ்செடுத்து ஊறுகாய் மாதிரிப் போட்டிட்டு பிறகு அதை எடுத்துக் குழம்பு வைக்கிறதா ஏஞ்சல்.நான் விளங்கிக்கொண்டது சரியா ?

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஹேமா ஊறிய வடு மாங்காய்களை எடுத்து தேங்காய் ,பச்சை மிளகாய் இவற்றுடன் அரைத்து தாளித்து சாப்பிடனும் ,இது மோர்க்குழம்பு மாதிரியே இருக்கு

   Delete
 8. படங்களைப் பார்த்தபடியே
  சாப்பிட்டுவிடலாம் போல உள்ளது
  நானும் மாவடு ரசிகன்தான்
  எப்போதும் வீட்டில் மாவடு ஊறுகாய் ஸ்டாக் இருக்கும்
  இந்த ஞாயிறு முயற்சிக்கலாம் என இருக்கிறோம்
  படங்களுடன் விளக்கமும் அருமை
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்கஅண்ணா வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி ..லக்ஷ்மிம்மா குறிப்பு பார்த்ததில் இருந்து செய்யனும்னு ஆவல் செய்தாச்சு ,நீங்களும் செய்து பாருங்க

   Delete
 9. பேரைக் கேட்டாலே வாயூறும். இதில் அழகாப் படத்தை வேறு போட்டு வச்சி ஆசையை உண்டாக்கிட்டீங்க. நான் இப்போ எங்க போவேன் மாவடுவுக்கு? சமையலில் பிரமாதமா தேறிட்டீங்க ஏஞ்சலின். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. கீதா :)) வாங்க வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி ..

   Delete
 10. மிக்க நன்றிங்க... மாங்காய் கிடைத்தால் செய்து பார்ப்போம்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

  ஐயா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் கருத்துரை சூப்பர்... நன்றி சார்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி ..

   ஆமாங்க .நிறைய விஷயங்கள் அவரிடம் கற்றுக்கொள்ள வேணும் நாமெல்லாம்

   Delete
 11. அம்மாஞ்சி குழம்பு...பெயரே புதுமையாக அல்லவா இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. லக்ஷ்மி அம்மாவின் குறிப்பில் இந்த பெயர் இருந்தது சாதிகா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 12. டொய்ங்ங்... //வடு மாங்காய்:P// ம். ம். ;))))))))))

  ReplyDelete
  Replies
  1. உங்க ஊரில் கிடைக்குமா இமா இந்த மாம்பிஞ்சுகள் .கிடைச்சா செய்து பாருங்க ...டொட்டடைங்:)) நல்லா இருக்கு :)):PPPP

   Delete
 13. ஆஆஆஆஆஆ அஞ்சூஊஊஊ அம்மாஞ்சி குழம்பு சூப்பர்ர்... எனகு உப்படி மாங்காய் கிடைத்தால், குழம்பு எங்க வைக்கிறது:) சாப்பிட்டே முடிச்சிடுவேன்ன்:))..

  மாங்காயில் வற்றல் இதுவரை கண்டதில்லை... புளியம்பழத்தையே விட்டுவைக்காத நான் மாங்காய் வற்றலை எல்லாம் விடுவனோ.. கறிவைக்க சான்ஷே இல்லை:)).

  ReplyDelete
  Replies
  1. அதிரா! ஞானும்தேன்:))))))

   Delete
  2. புளியம்பழத்தையே விட்டுவைக்காத //

   ஒஹோ இதுதான் அடிக்கடி மர உச்சி மர உச்சிக்கு ஏறுகிறது காரணமா :))

   Delete
 14. கலக்கிட்டேள் அஞ்சூஊஊஊ... புட்டுக்கு இடியப்பத்துக்கு சூப்பராக இருக்கும்.


  இது, இன்று அஞ்சுவுக்காக ஹோம் வேர்க்:-

  //மாம்பிஞ்சுகள் உப்பை உறிய ஆரம்பிக்கும் .பத்து நாளில்
  ரெடி ஆகிடும் .அவ்வப்போ வெயிலில் வைத்து எடுத்தா
  வடு மாங்கா ரெடி :))
  ///
  ///வாசிச்சுக் கண்டு பிடிங்க அஞ்சு, ஏன் அதிரா இதைப் போட்டவ என:)).

  ReplyDelete
  Replies
  1. //அவ்வப்போ வெயிலில் //   மியாவ் அது இங்கில்லை ..நம்ம ரெசிப்பி உலகம் பூராவும் பார்ப்பாங்க இல்லையா :)) அதில் வெயில் இருக்கும் நாட்டில் வசிப்போருக்கு
   அவ்வ்வ்வ் :))

   Delete
 15. /////வாசிச்சுக் கண்டு பிடிங்க அஞ்சு, ஏன் அதிரா இதைப் போட்டவ என:)).//

  அதிராவுக்கு வேலை ஒண்ணும் இல்லையாம் அதுதான் இப்புடி நீங்க டைப் பண்ணினதா காபி பேஸ்ட் பண்ணி இருக்காங்க அஞ்சு :))

  ReplyDelete
 16. வடு மாங்கா ரெசிபி அருமையோ அருமை அஞ்சு அப்புடியே ஒரு அரை பாட்டல் போஸ்ட் பண்ணிடுங்க இந்த பக்கம். அதீஸ் சொன்னது போல் மாங்காய் வாங்கினா எங்கே கொழம்பு வைக்குறது உப்பு மிளகாய் தூள் போட்டு அப்புடியே சாப்பிடுவேன் :))

  நூறாவது பதிவு சீக்கிரம் போடுறதுக்கு வாழ்த்துக்கள் அஞ்சு. பூஸ் போல மொய் எல்லாம் கேக்க மாட்டீங்க இல்லே?

  ReplyDelete
  Replies
  1. நாமெல்லாம் மொய் வைக்கிரமாதிரியா பழகறோம் கிரி ...காசுபணம்லாம்வேணாம் பீட்ரிக்ஸ் பாட்டர் காட்டேஜில் பத்துநாள் ஹாலிடே STAY புக் பண்ணி கொடுத்திடுங்க

   Delete
  2. ஹும்ம்ம் எல்லாம் வெவரமாத்தேன் இருக்கீங்க :))

   Delete
 17. சூப்பர் அஞ்சு.ஜெட் வேகம்தான்.
  எனக்கும் மாங்கா கிடைத்தால் சாப்பிட்டுமுடித்துவிடுவேன்.இப்போ என்னிடம் அம்பிர்லங்காய்??(பெயர் சரியா எழுதினேனா தெரியவில்லை.கொழும்பு பக்கம் கிடைக்கும் என நினைக்கிறேன்.ஆனா எனக்கு இது புதிசு) என்று கணவர் வாங்கி வந்தார். அது சரியா மாங்கா மாதிரிதான்.சாப்பிட்டு முடித்தே விட்டேன்.ஒருவித புளிப்பும்,இனிப்பும் சேர்ந்தது.

  //மாம்பிஞ்சுகள் உப்பை உறிய ஆரம்பிக்கும் .பத்து நாளில்
  ரெடி ஆகிடும் .அவ்வப்போ வெயிலில் வைத்து எடுத்தா
  வடு மாங்கா ரெடி :))//
  மாம்பிஞ்சுகள் உப்பை உறிஞ்ச ஆரம்பிக்கும். இதுதான் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அது ஆம்ப்றேல்லா என்று நினைக்கிறேன் ..வினிகர் /உப்பு மிளகு சேர்த்து சாப்பிட்டு பாருங்க ஸ்ஸ்ஸ் :))

   உப்பை உறிஞ்ச ஆரம்பிக்கும்// SHALL CORRECT IT :))

   Delete
 18. :))))))))

  ஆஆஆஆ :)))) நான் தூங்கும்போது எல்லாரும் கலந்து கலகலன்னு இருந்திருக்கே :))

  அனைவருக்கும் நன்றி ..

  ReplyDelete
 19. அஞ்சலின் கைமுறையும் கோபாலகிருஸ்ணன் ஐயாவின் விளக்கமும் வடுமாங்காய் தேடவைக்கின்ற அருமையான பகிர்வு!

  ReplyDelete
 20. கோபு ஐயா சொன்னதுபோல பாலக்காட்டில் தையில் போகும் போது வாங்கி வந்துவிட்டாள் நேரம் மிச்சம் அஞ்சலின்!ஹீ வெளிநாட்டு நிலமை அஞ்சலின் அறியும் அன்றோ!ஹீ

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் :) நேசன் அவர் சொன்னபடி பாலக்காட்டில் வாங்கி வந்திடுங்க ..
   நீங்க புறப்படுமுன் நான் இப்படியான பொருட்கள் இன்னும் சொல்றேன் ..வற்றல் வடகம் இவை ...கொண்டு வந்தா குறைந்தது ஆறு மாதம் வரைக்கும் உபயோகிக்கலாம்

   Delete
 21. தயிர் சாதத்திற்குப் அருமையான பக்கவாத்தியமான
  வடுமாங்காய் பற்றி பக்காவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க :)) அக்கா ..இங்கே கோபு அண்ணாவின் பின்னூட்டங்கள் அனைவரும் ரசித்த ஒன்று வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

   Delete
 22. காலை,வணக்கம் அஞ்சலின்!வடு மாங்காய்........................நமக்கு எதுக்கு இதெல்லாம்?வாய் நம,நமங்குது.சரி,////மகளுக்கு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சா ..எனக்கு நண்பர்களின்
  வலைப்பூவுக்குமட்டுமே வர நேரம் கிடைக்கும்.////சப்பாத்தி வேற சுடணும்,ஹ!ஹ!ஹா!!!!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க :)) அண்ணா வணக்கம் ..
   அப்ப ..உங்களுக்கு ஒரு போர்ஷன் ஊறுகாய் அனுப்பலாம்னு இருந்தேன்
   ஓகே ..கலையே அதையும் சாப்பிடட்டும் ..

   ஹாஆ அவ்வவ் சப்பாத்தி ...என் பொண்ணு மூணு வேளையும் அதைகுடுத்தா சாப்பிட்டிடுவா ...

   Delete
  2. பரவாயில்லை விடுங்க!அப்புறம்,கலை தொல்லை இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்காதுன்னு உங்க கிட்ட சொல்ல சொன்னா!ஹ!ஹ!ஹா!!!!!!!

   Delete
  3. ஹா :)) அண்ணா கலையை பயப்பட வேணாம்னு சொல்லுங்க .....(வடு மாங்கா பார்சல் அனுப்பறேன்னதும் ஆளாளுக்கு பயப்படறாங்களே ):))

   Delete
 23. அவ்வ்வ்வவ்..வடுமாங்கா கூட கிடைக்குதா லண்டன்ல? என்சொய்..என்சொய்!

  பின்னூட்டங்கள் படிக்க நேரமில்லை, அப்புறமா படிக்கிறேன் ஏஞ்சல் அக்கா..குழம்பு சூப்பர்!

  ReplyDelete
 24. ஏஞ்சலின் வந்துட்டேனே. படங்களும் குறிப்பும் நல்லா இருக்கு.

  ReplyDelete
 25. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
 26. ஆஹா இப்போ நாக்குல ஜலமா ஊத்துது இப்ப நான் என்ன செய்வேன்..செம சூப்பரா இருக்குப்பா..

  ReplyDelete
 27. வலைசர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் அஞ்சு...:) வடு மாங்காய் படத்துல நல்ல கலரா இருக்கு. நான் போன மாதம் மாவடு போட்டேன் ஆனா உங்க மாவடு கலர்ல இல்லை.. அடுத்த முறை விளக்கென்னெய் போட்டு செய்து பார்க்கணும்.

  ReplyDelete