அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

8/30/12

வடு மாங்காய்/அம்மாஞ்சி குழம்பு A.k.a அரைச்சு கலந்த குழம்பு .

அம்மாஞ்சி குழம்பு :)) எனக்கு இந்த பெயர்தான்
 ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு .
குறை ஒன்றுமில்லை லக்ஷ்மிம்மா வலைப்பூவில்  
அவர்களின் குறிப்பு பார்த்து செய்தது ..
குழம்பு செய்ய முக்கியமா வடு மாங்கா வேணும் :)
                                                                                     
                                                                                 
சில நாட்கள் முன்புதான் இந்தியன் சூப்பர் மார்க்கட்டில் இந்த சிறிய 
மாம்பிஞ்சுகளை பார்த்து வாங்கி வந்தேன் 
வடு மாங்காய்:P
செய்முறை 

 பிஞ்சு மாங்காய்..... 15
விளக்கெண்ணெய் ...... ஒரு சிறிய ஸ்பூன் .
நான் வெறும் வெஜிடபிள் ஆயில் தான் சேர்த்தேன் 
விளக்கெண்ணை ...உப்பில் ஊற ஆஸ்மாசிஸ் process இற்கு
ஒரு காரணியா என்னவென்று புரியல ஏதோ ஒரு காரணம் 
இருக்கணும் 
அதனால் நீங்க செய்யும்போது கண்டிப்பா 
விளக்கெண்ணை சேர்க்கவும் .:))


 மிக்சியில் கீழே கொடுக்கப்பட்ட பொருட்களை 
அரைத்து வைக்கவும் 
பெரிய காய்ந்த வற்றல் மிளகாய்  ...8 or 10 Nos,
ஒரு மேஜைக்கரண்டி கல் உப்பு 
ஒரு தேக்கரண்டி கடுகு ,
ஒரு தேக்கரண்டி பெருங்காயம் 
அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் 
மாம்பிஞ்சுகளை சிறு முனை கொப்புடன் வெட்டி நன்கு கழுவவும் 
பின்பு கிச்சன் பேப்பரில் பரப்பி ஈரம் போக துடைக்கவும் பின்பு 
விளக்கெண்ணை எடுத்து சீராக மாம்பிஞ்சுகளின் மேல் படுமாறு 
தடவி வைக்கவும் .
ஒரு கல் ஜாடி வேண்டும் ஆனா என்னிடம் இல்லாததால் 
கண்ணாடி  ஜாடியில் எண்ணெய் மாஸ்க் போட்ட 
மாம்பிஞ்சுகளுடன் அரைத்த தூள் சேர்த்து கலக்கி மூடி 
போட்டு வைக்கவும் 
மூன்று நாள் கழித்து திறந்து wooden  ஸ்பூனால் கலக்கவும் .
நான் கலக்கவில்லை நன்கு குலுக்கி பிரட்டி  எடுத்தேன்  .
இரண்டு நாளுக்கு ஒரு முறை இப்படி செய்யவும் ஐந்தாறு 
நாட்களில் தூள் ஆக இருந்த கலவை நீரா மாறியிருக்கும் 
மாம்பிஞ்சுகள் உப்பை  உறிஞ்ச ஆரம்பிக்கும் .பத்து நாளில் 
ரெடி ஆகிடும் .அவ்வப்போ வெயிலில் வைத்து எடுத்தா 
வடு மாங்கா ரெடி :))
        
                                                                           
                     கண்ணாடி பாட்டிலில் ரெடியா ஸ்ஸ்ஸ் ஆ ஆ      
                                                                   

இப்படி ஊறிய வடு மாங்காயில் இரண்டு எடுத்து லக்ஷ்மிம்மாவின் 
குறிப்பு பார்த்து இந்த குழம்பு செய்தேன் .குழம்பு டேஸ்ட் 
அருமை அருமை .அதுக்குன்னே வடு மாங்காய் போட ஆசையா 
இருக்கு :))
கொஞ்சம் வேகமாதான் பதிவு போடறேன் :)))
மகளுக்கு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சா ..எனக்கு நண்பர்களின் 
வலைப்பூவுக்குமட்டுமே வர நேரம் கிடைக்கும் ..அதனால் என் 
சமையல் பதிவுகள் டாஷ் போர்டில் இன்னும் சில இருக்கு 
அதையும் பதிவிட்ட பின்    .................ஓய்வு :)))))

                

8/29/12

நேந்திரம் பழ பஜ்ஜி &Flower shaped mini Pizza :))

ஓணம் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் .
                                                                                         
நேந்திரம் பழம் இரண்டு நாட்களுக்கு முன் இந்தியன் சூப்பர் 
மார்க்கட்டில் கிடைத்தது ..எனக்கு வீட்டுக்கு கொண்டு வந்து 
வெட்டிப்பார்க்கும் வரை அது நேந்திரம் பழம்தானா ???????? 
என்ற சந்தேகம் வேறு ..:)))
இரண்டு வாழைப்பழங்களில் ஒன்றினை வெட்டி பழம் பொறி 
அதாவது நேந்திரம்பழ பஜ்ஜி செய்தேன் ..இந்த ரெசிப்பி என் 
அப்பாவின் கைப்பக்குவம் .
அப்புறம் மீதமிருந்த வாழைப்பழத்தை ஆப்பிளுடன் சேர்த்து 
ஸ்மூதியாக ப்லன்டரில் அரைத்து குடித்தோம் .இரண்டுமே 
அருமையாக இருந்தது 
ஃபாய்சாவின் ரெசிப்பி பார்த்து செய்த இளநீர் அகர் அகர் ..
நான் சைனீஸ் கடையில் வாங்கிய இந்த டின் இளநீர் சேர்த்து 
செய்தேன் மிக அருமையாக இருந்தது .
நேந்திரம் பழ பஜ்ஜி//   Pazham Pori///

தேவையான பொருட்கள் 
நேந்திரம் வாழை பழம் .... ஒன்று 
மைதா மாவு .....  இரண்டு கப் 
அரிசி மாவு ....  ஒரு ஸ்பூன் 
சர்க்கரை ..... இனிப்பு வேண்டுபவர்கள் தேவையான அளவு 
சேர்த்துக்கொள்ளவும் ..நான் ஒரு ஸ்பூன் சேர்த்தேன் ..
வெனிலா எசன்ஸ் ..... இரண்டு சொட்டு 
மஞ்சள் கலர் ......... ஒரு சிட்டிகை ..
எண்ணெய்...... பொரிப்பதற்கு தேவையான அளவு .
மைதா /அரிசி மாவு /சர்க்கரை இவற்றை நீர் சேர்த்து பஜ்ஜி மாவு 
பதத்துக்கு கலக்கவும் அதில் மஞ்சள் கலர் வெனிலா எசன்ஸ் 
ஆகியவற்றை சேர்த்து மெல்லிய துண்டங்களாக வெட்டிய 
வாழைப்பழங்களை தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும் ..
Flower shaped mini Pizza :))
இது சிநேகிதி ஃபாய்சாவின்  Party Snacks Event  அனுப்புகிறேன் 

                                                                                 

                                                                                           
pastry cutter மலர்  வடிவில் வாங்கியது வீட்டில் இருந்தது ..
நேற்று பிட்சா செய்யும்போது தானாக தோன்றிய யோசனை :))
பிட்சா மாவை தட்டையாக உருட்டியபின் பேஸ்ட்ரி கட்டரால் 
வெட்டினேன் ...பின்பு ஒவ்வொரு மலர் ஷேப்பின் மீதும் 
தக்காளி சாஸ் சிறிது சீஸ் / ஆவியில் வேக வைத்த ப்ரோக்கொலி /
காரட் மற்றும் சிவப்பு சாலட் வெங்காய ,தக்காளி துண்டங்கள் 
மற்றும் ஆலிவ்ஸ் இவற்றால் அலங்கரித்து அவனில் பேக் 
செய்து எடுத்தேன் சிறிய வடிவமாக இருப்பதால் வெறும் சீஸும்
 தக்காளி மற்றும் ப்ரோக்கொலி வைத்து அலங்கரித்தால் போதும் .

********************************************************************************************************
கீழே இருப்பதும் இவென்டிற்கு அனுப்பலாம்னு யோசிச்சு 
கைவிட்டுட்டேன் :)) இது கிட்ஸ் பார்ட்டி இந்த ஷேப்பை பார்த்ததும் 
சிறு பிள்ளைகள் கும்மி அடிக்கிற விளையாட்டை விளாடினால்
பார்ட்டியில் கீழே கட்லட்டேல்லாம் சிதறி :))))))
                                                                                      
ஏனென்றால் இதை பார்த்ததுமே என் மகளே இரண்டை எடுத்து 
கும்மி விளாடியதால் பயம் வந்தது .
போட்டோ மட்டும் பார்வைக்கு .OVAL SHAPE வெஜிட்டபிள் கட்லட் 
செய்து சோளமாவில் மற்றும் ப்ரெட் தூளில் முக்கி மெல்லிய 
காபி கலக்க வைத்திருக்கும் குச்சிகளை நுழைத்து தவாவில் 
பொரித்து எடுத்தேன் .
தனியே பொரித்தும் பின்பு குச்சிகளை நுழைக்கலாம் 

முக்கிய குறிப்பு :))காபி ஸ்டிக்ஸ் உபயம் >>>>>>>>>> MCDONALDS

8/27/12

வாழ்த்துகிறோம் :))))

சிரிப்பு மற்றும் கல கல பேச்சாலும் எழுத்தாலும்  அனைவரின் 
உள்ளங்களை கொள்ளை கொண்ட பூசாருக்கு  ஸ்பெஷல் post :))
 இன்று திருமண நாள் கொண்டாடும் எங்கள் அன்புக்கினிய 
தோழி அதிராவும் அவரது கணவரும்  பல்லாண்டு எல்லா சந்தோஷத்துடனும் எல்லா ஆசீர்வாதங்களுடனும்  இருக்க இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம் :)))) 


                                            

இளநீர் அகர் அகர் ஜெல்லி 
Thanks Faiza

 மற்றும் மீன் ஷேப் கட்லட் .

                                    அதீஸ் ஷேர் பண்ணி சாப்பிடனும் ஓகே :)அனைவரும் மறவாமல் மொய்ப்பணத்தை
 $ ,£,€  வாக தரவும் :)))

                                                                                
வாழ்த்தும் அன்புள்ளங்கள் 
அகில உலக அதிரா ரசிகர் மன்றம் :))))))
UK,IRELAND ,SCOTLAND ,FRANCE ,GERMANY,NORWAY ,SWEDEN,
DENMARK ,CANADA ,U.S.A ,AUSTRALIA ,INDONESIA , NEWZEALAND ,
U.A.E ,EMIRATES ,DOHA , Kuwait ,SRILANKA ,INDIA ......

(இன்னும் பல கிளைகள் இருக்கு )
{பொறுப்பாளர்/ காசாளர் }
Angelin.

8/25/12

பிறந்த நாள் வாழ்த்து/ தேங்காய் பால் முறுக்கு


எங்கள் பிரியமான அம்முலுவுக்கு(பிரியசகி ப்ளாக் )
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்க நண்பர்கள் 
அனைவரும்  சேர்ந்து வாழ்த்துகிறோம் .

                                                                               
http://www.youtube.com/watch?v=1ZdE7HUAd04
மேலிருக்கும் you tube வீடியோ பார்த்து கொஞ்சம் மாற்றி 
எனது முறையில் செய்தேன் .நான் இரவு நேரங்களில் க்வில்
செய்வதால் படங்கள் தெளிவாக இராது .கீழே இருப்பது எனது 
ஆங்கில வலைப்பூவில் உள்ள  செய்முறை Tutorial .

இதோ எனது பிறந்த நாள் வாழ்த்து அட்டை .
Tutorial

 படம் பார்ப்பது மிக மிக குறைவு :)) சில  பாடல்கள் இசையும் 
குரலும் மிக அருமையாக இருக்கும் 
ஆனா காட்சிகள் ((((ம்ம்ஹூம்  
ஏதோ நினைவுக்கு வந்த பாடல்களை இணைத்திருக்கிறேன் 
 பாடல்களை கேட்டு  நான் செய்த முறுக்கையும் சாப்பிட்டு 
 ரசியுங்கள் ..:))
முறுக்கு மகி ரெசிப்பி பார்த்து செய்த தேங்காய் பால் முறுக்கு 
              


                                                                                                                                                                         

                                               

                                      
           

 எல்லாரும் வார இறுதியை சந்தோஷமா கொண்டாடுங்க  :))                                                                 

8/21/12

ரசித்து ருசித்தவை ஓட்ஸ் ,ரவை தோசை மற்றும் நெல்லிக்காய் பச்சடி


 நெல்லிக்காய் பச்சடி 


இந்த அருமையான குறிப்பை தந்த காமாட்சி அம்மா 
அவர்களுக்கு மிக்க நன்றி ..


என்ற அவர்களின் வலைப்பூ மகி ப்ளாக் வழியாக 
தெரிந்துகொண்டேன் ..அவங்க ரெசிப்பி எல்லாமே அருமை 
பூசாருக்கு சந்தேகம் வரக்கூடாதின்னு அரைக்கு 
முன் படம் எடுத்தேன்       :))                            
                                                                                 
நெல்லிக்காய் பச்சடி காமாட்சியம்மா அவர்களின் குறிப்பு 
பார்த்து செய்தது .கொஞ்சம் என் சுவைக்கு ஏற்றாற்போலவும் 
மாற்றிக்கொண்டேன் :))
அவர்களின் குறிப்பில் ..சிவப்பு மிளகாய் சேர்த்து தாளிக்க 
சொல்லியிருந்தாங்க ..நான் மோர் மிளகாய் இரண்டு மற்றும்
சுக்காங்காய்  a.k.a  மினுக்கு வற்றல்  வற்றல் இரண்டு சேர்த்து 
தாளித்து சாப்பிட்டேன் ..


                                                                   
இரண்டு நெல்லிக்காய்கள் ,சிறு துண்டு இஞ்சி 1/2 தேக்கரண்டி சீரகம் 
ஒரு பச்சை மிளகாய் இவற்றை சிறிதளவு எண்ணையில் 
வதக்கி இரண்டு தேக்கரண்டி தேங்காய் துருவல்,
சிறிதளவு  உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து பின்பு தயிருடன் 
சேர்த்து கலந்து வாணலியில் மோர் வற்றல் மிளகாய் கடுகு 
சுக்காங்காய்/a.k.a  மினுக்கு வற்றல் வத்தல் , கறிவேப்பிலை சேர்த்து 
தாளித்து கலந்து சாப்பிட்டா !!!!!!!!!!!ஆஹா யம் யம் 
ருசி அருமையாக இருந்தது ..இந்த பச்சடியுடன் 
இட்லி மற்றும் சப்பாத்தி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது 

ஓட்ஸ் ரவை தோசை 


இது ஆமினாவின் குறிப்பு பார்த்து சற்று 
மாற்றி செய்தது .மிகவும் அருமையாக வந்தது .
அருமையான குறிப்பிற்கு நன்றி ஆமினா .

தேவையான பொருட்கள் .
ஓட்ஸ் .......  ஒரு கப் 
ரவை ...         அரை கப் 
புளிப்பில்லாததயிர்   .... அரை கப் 
மீந்த தோசை மாவு ...அரை கப் 
சீரகம் .........   ஒரு தேக்கரண்டி 
உப்பு .........தேவையான அளவு 

செய்முறை 
ஓட்ஸ், ரவை, தயிர் இவற்றை கலந்து அரை மணிநேரம் 
வைக்கவும் 
பின்பு மிக்சியில் அரைத்து அத்துடன் தோசை மாவு மற்றும் 
சீரகம்,உப்பு  கலந்து இருபது நிமிடங்கள் கழித்து தோசையாக 
வார்த்து எடுக்கவும் .
மொறு மொறுவென்று அபார ருசியாக இருந்தது .
நான் இதன் மேலே பூண்டு பொடியை தூவி பொடி 
தோசையாக சுட்டேன் .
    
     மினுக்கு வற்றல் கூகிளில் தேடியபோது 
இவங்க வலைபூ வந்தது 
http://mykitchenpitch.wordpress.com/category/பக்க-உணவு/வற்றல்-வடாம்-வடகம்-அப்பள

இந்த வேகமான ஓட்டம் நூறை தொட :)))                                                                          

8/18/12

பெரு நாள் வாழ்த்துக்கள் /குணுக்கு..and ..துணுக்கு :)))

ரமலான் கொண்டாடும் அனைத்து சகோதர 
சகோதரிகளுக்கும் 
                                       இனிய பெரு நாள் வாழ்த்துக்கள் ..

எல்லாரும் குணுக்கு எடுத்துக்கோங்க :))


குணுக்கு.இது நாம் எப்பவும் செய்யும் உளுந்து வடை மாதிரிதான் 
ஆனா அரிசி ,துவரம்பருப்பு ,பயற்றம்பருப்பு ,கடலை பருப்பு ,
உடைத்த உளுந்து அனைத்தும் சேர்த்து அரைத்து பொரிப்பது .

தேவையான பொருட்கள் 
இவை ஊற வைத்து அரைக்க 

உளுந்து        .....1/2  கப் 
இட்லி அரிசி ....1/4  கப் 
துவரம் பருப்பு ..1/4  கப் 
கடலை பருப்பு ....1/4  கப் 
பயற்றம் பருப்பு ..1/4  கப் 
சிவப்பு வற்றல்மிளகாய் ...2
மிளகு ....       அரை தேக்கரண்டி 
பெருங்காய தூள் ..அரை தேக்கரண்டி 
மேலேயுள்ளவற்றை சுமார் இரண்டு மணிநேரம் நீரில் 
ஊறவைத்து மின் அம்மியில் அரைக்கவும் 
பின்பு அந்த கலவையுடன் நறுக்கிய 
சின்ன வெங்காயம் ..10
ஒரு ஆர்க் கறிவேப்பிலை ,
நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சிறிதளவு 
நறுக்கிய சின்னத்துண்டு இஞ்சி ,
தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும் ..
பின்பு வாணலியில் எண்ணெய் காய வைத்து மாவை 
ஸ்பூனால் எடுத்து எண்ணையில் இட்டு பொரிக்கவும் 
கர மொரு குணுக்கு தயார் :))).
*********************************************************************************************
   இது பியானோ வாசிக்கும்  பூனை பற்றிய துணுக்கு  :))


8/15/12

நெல்லிக்காய் மோர் /ஆம்லா மோர்

நெல்லிக்காய் மோர் /ஆம்லா மோர் 
                                                                                     
நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது ..


                                                                     (Thanks Google )                 
இங்கே ஏசியன் கடைகளில் எப்பவும் கிடைக்கும் ,அதனால் 
எங்க வீட்டில் அடிக்கடி வாங்கி வைப்பேன் 
எப்பவும் போல மோர் செய்யும்போது செய்வதைப்போல 
வீட்டில் இருந்த நெல்லிக்காய்களை சேர்த்து செய்து பார்த்தேன் .  .
அருமையாக வந்தது .
தேவையான பொருட்கள் 
தயிர் /யோகர்ட்    ..... இரண்டு கப் 
நெல்லிக்காய்கள்   .....  மூன்று அல்லது நான்கு அளவை பொறுத்து 
பச்சை மிளகாய் சிறிய அளவு ... ஒன்று 
கறிவேப்பிலை  ......  ஐந்து இலைகள் 
கொத்தமல்லி இலைகள் .......சிறிதளவு 
இஞ்சி ....    ஒரு சிறிய துண்டு 
உப்பு தேவையான அளவு .
செய்முறை 
முதலில் நெல்லிக்காய்களை நன்கு கழுவி விதை  நீக்கி சிறு 
துண்டுகளாக நறுக்கவும் .
அதே போல கறிவேப்பிலை ,கொத்தமல்லி இலை ,இஞ்சி, 
பச்சை மிளகா ஆகியனவற்றையும் நறுக்கி 
சட்னி அட்டாச்மண்டில் ஒரு சுற்று அரைத்து எடுக்கவும் .


                                                                         
பின்பு இந்த கலவையையும் இரண்டு கப் தயிர் மற்றும் தேவையான 
அளவு உப்பு மற்றும் நீர் சேர்த்து ஜூசர் அல்லது விப்பர் ப்ளேட் 
போட்டு மிக்சியில் இரண்டு மூன்று சுற்று போட்டு எடுக்கவும் ..
விருப்பமானால் சிறிய சம்பா வெங்காயத்தை நறுக்கி போட்டு 
அலங்கரித்தும் அருந்தலாம் .


                                                                                       
இது எனது சொந்த கண்டுபிடிப்பு .
நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது பக்கத்துக்கு வீட்டில் ஒரு 
அண்ணா என் கைய பார்த்து சோசியம் சொன்னாங்க ,,

//நீ பின்னாளில் ."புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவாய்"//

பரவாயில்ல பல வருடங்கள் கழித்து வாக்கு பலிக்குதுன்னு நினைக்கிறேன் ,:)))))


எங்கேயோ பார்த்த  ஊசி குறிப்பு //அப்பாடா மழை ஓய்ந்தது //

இல்லை :)))இப்ப புயலாக புறப்பட்டு விட்டது ...
அடுத்த பதிவு விரைவில் :))))))))))))

8/2/12

Thanks A Bunch :) Quilled Cards /Kokeshi Dollவணக்கம் நண்பர்களே ,நலமாக இருக்கின்றீர்களா :))
இருவருக்கு நன்றி சொல்வதற்காக மற்றும் சந்தோஷத்தை
பகிர்ந்து கொள்வதற்காகவும்  கோடை விடுமுறையில் இருந்து 
கொஞ்ச நேரம் உங்களுடன் பேச வந்திருக்கிறேன் .
                                                                 
                                                           Thanks a Bunch(முன்பு கூறியிருந்தேனே அதே பிஸ்கட் டின் உள்ளிருக்கும் corrugated
paper கொண்டு உருவானவர் இந்த டெடி :)))))

 எனக்கு சன் ஷைன்  ப்ளாகர் விருது கொடுத்திருக்கிறார் 
வை .கோபாலகிருஷ்ணன் அவர்கள் ..
அடுத்தவர் சௌந்தர் ...இவர் என்னையும் எனது சொந்த சமையல் ..
(ப்ளீஸ் நோட் திஸ் பாய்ன்ட்.).குறிப்பான நெல்லிக்காய் ரசத்தையும் 
வலைசரத்தில் அறிமுகம் செய்திருக்கிறார் அவங்க இருவருக்கும்
 நன்றி :))
கிரி மற்றும் மகி இருவருக்கும் வாழ்த்துக்கள் 
நன்றின்னு சொல்லும்போதே மனசுக்குள்ளே பல நினைவுகள் வந்து
சைக்கிள் வீல் சுற்றுவதை போல அந்த நாள் நினைவுகளை தட்டி 
எழுப்பியது மிளகையும் சீரகத்தையும் அரைக்காமல் முழுதாக  
போட்டு ரசம் செய்தது /இலங்கை தமிழர் கடையில் வாங்கிய பட்டூ 
என்கிற காயில் சாம்பார்செய்து கணவரை திக்கு முக்காட
செய்தது 
4 பேர் குடிக்கும் டீக்கு பனிரெண்டு டீ பாக்ஸ் போட்டு எனது 
மைத்துனர்களை மயங்கி விழ வைத்தது ..
இதெல்லாம் சாம்பிள்ஸ் மட்டுமே :))எப்படி இருந்த நான் இப்ப
எவ்ளோ முன்னேரியிருக்கேன் சமையலில் ...
ஊக்குவிப்பார் ஊக்குவித்தால் ...அதுக்கு மேலதெரியல  :))
கலை  ஹெல்ப் .Please:)))

இனி நமது சமையல் குறிப்பு முயற்சிகள் செப்டம்பரில் இருந்து 
தங்கு தடையின்றி வெளிவரும் /தொடரும் என்பதை 
சந்தோஷத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் 


இடைப்பட்ட நேரத்தில் எனது ஆங்கில வலைப்பூவை கவனித்து 
வருகிறேன் அங்கே போட்ட கிராப்ட்ஸ் இங்கே உங்கள் பார்வைக்கும்.
இது kokeshi எனப்படும் ஜப்பானிய பொம்மைகள். லீலா கோவிந்த் 
அவர்கள்செய்த CROCHET பொம்மைகள் பார்த்து நான் 
க்வில்லிங்கில் செய்தது .
2D  Baby Kokeshi Doll and open petal quilled flowers
                                                                               


3D Kokeshi Doll
                                                                             
 மீண்டும் செப்டம்பரில் அனைவரையும் சந்திக்கின்றேன் 
வித விதமான சமையல் குறிப்புகளுடன் :))