அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/2/12

Quilling/ ஒலிம்பிக் ஜோதி/

 வணக்கம் ! வந்தனம் :)))

                                                                                       எங்க நண்பர்கள் மெக்சிகோவை சேர்ந்த Ph. D மாணவர்கள்  இருவர் 
படிப்பு முடிந்து மீண்டும் தங்கள் நாட்டுக்கே செல்கிறார்கள் 
அவங்களுக்கு ஏற்க்கனவே ஒரு குட்டி மகன் ,இப்போ ஒரு சின்ன 
இளவரசியும் பிறந்திருக்கா .அவளுக்கென செய்த வாழ்த்து அட்டை
 இந்த க்வில்ட் baby frock.:))


எங்க ஏரியா பக்கம் இன்று காலை ஏழுமணியளவில் ஒலிம்பிக் ஜோதி 
கொண்டு செல்லப்பட்டது ,நாங்க சென்று cheers செய்தோம் :))
இது தான் நான் முதன் முறை ஒலிம்பிக் ஜோதியை நேரில் அருகில் 
பார்த்தது
கிரி நீங்க பக்கத்தில் இருந்தா -------- தட்ல வச்சு 
ரெண்டு பெரும் சேர்ந்து ஒலிம்பிக் சோதிக்கு ஆரத்தி 
எடுத்திருக்கலாம் .:))))
இது தான் நான் முதன் முறை ஒலிம்பிக் ஜோதியை நேரில் 
அருகில் பார்த்தது .

                                                                             
                                                                              
                                                                                  

சமையல் பக்கம் 

சைவம் 
நான் தயிர் சாதம் ரெடி செய்திட்டேன் :))
நன்றி மனோ அக்கா .
                                                                           
அம்பலத்தார் ஐயாவின் வீட்டம்மா ரெசிப்பி இது
தேங்காய் சாதம் 

தேவையான பொருட்கள் 
உதிரியாக வடித்த சாதம் பாசுமதி 
அல்லது பொன்னி பச்சரிசி    ......இருவர் சாப்பிடுமளவு 
தாளிக்க   
துருவிய தேங்காய் ......   இரண்டு கப் 
முந்திரி பருப்பு ..... பத்து 
கடுகு .....     ஒரு தேக்கரண்டி 
உளுந்து .....  இரண்டு தேக்கரண்டி 
கடலை பருப்பு ஒரு தேக்கரண்டி 
கறிவேப்பிலை ....ஒரு கொத்து 
சிவப்பு வற்றல் மிளகாய் ..... மூன்று 
விரும்பினால் வேர்க்கடலை.... பத்து 
உப்பு தேவையான  அளவு 
தேங்காய் எண்ணெய்...ஒரு மேஜைக்கரண்டி 


செய்முறை 
வாணலியில் எண்ணெய் காயவைத்து அதில் கடுகு ,மிளகாய் மற்றும்
 தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும் .
மிதமான தீயில் தாளிக்கவும் அத்துடன் துருவிய தேங்காய் துருவலை 
சேர்த்து வதக்கவும் உப்பு சரிபார்த்து சேர்க்கவும்  அதனுடன் தயாராக 
இருக்கும் உதிரி சாதத்தை கலந்து உடைபடாமல் பிரட்டவும் 
தேங்காய் சாதம் ரெடி .தேங்காய் சாதம் மற்றும் என் கணவர் சொல்லிகொடுத்த 
tuna fish cutlets .:))))

                                                                                        
மிதி வெடி /உருளை வெடி /Mutton Rolls உபயம் மியாவ்
 அதிரா :))))
 நன்றி ..

                                                                                 
 எங்க வீட்டருகில்  உள்ள கார்டன் சென்டருக்கு சென்றபொழுது :))
நான் சந்தித்த மியாவ் :))
அப்படியே அன்பா என்கிட்டே பழகினாங்க :))
                                                                             
மற்ற குடும்பதலைவிகள் எப்படியோ தெரியாது 
ஆனா நானெல்லாம் கல்யாணமாகி பல வருடங்கள் 
கழித்துதான் சமையலை கற்றுக்கொண்டேன், எனவே 
ஒரு ரெசிப்பி செய்ததும் சந்தோஷம் தாங்காமல் போஸ்ட் 
போட்டிடுவேன் பொறுத்தருள்க:))

                                                                                  
வைக்கோல் காய்ச்சல் :)) Hay Fever  இன்னுமென்னை விடுவதா
தெரியவில்லை .எழுதும்போது இப்ப நிறைய எழுத்து பிழை 
வருகிறது பொறுத்தருள்க:)))


மீண்டும்  சந்திப்போம் :)) 


93 comments:

 1. பகல் வணக்கம்,அஞ்சலின்!அருமை!!!!எங்களுக்குக் கிட்டாத பாக்கியம் உங்களுக்குக் கிட்டியிருக்கிறது.ஒலிம்பிக் தீபத்துக்கு ஆரத்தியா?செய்யலாம்,லண்டன் மாநகருக்கு வரும்போது!எழுத்துப் பிழை?!அதெல்லாம் நாங்கள்(கலையும்)எழுத்துக் கூட்டிப் படிச்சுடுவோம்!எல்லாவற்றையும் தமிழிலேயே எழுத முயற்சிக்கும் உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்!மிதிவெடி/உருளை வெடி எனக்குத் தானே?/னோ?ஹ!ஹ!ஹா!!!!!உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்,கால நிலை மாற்றம் அப்படித்தானிருக்கும்.///"எங்க கார்டன் சென்டருக்கு" சென்றபொழுது......///சொல்லவேயில்ல,எப்போ வாங்கினீங்க?ஹி!ஹீ!ஹீ!!!!!!

  ReplyDelete
  Replies
  1. பகல் வணக்கம் அண்ணா :))எங்க கார்டன் சென்டருக்கு" சென்றபொழுது......///சொல்லவேயில்ல,எப்போ வாங்கினீங்க?//


   அவ்வவ் :))) அவசரத்தில் டைப்பிட்டேன் இப்ப சரி செய்திட்டேன் ஆனாலும் ஹைலைட் செய்திருக்கிறேன் பிழைதிருத்தியது தெரியனுமல்லவா

   உங்களுக்குத்தான் மிதி வெடி உருட்டிய உருளை வெடி அப்பப்பா ஒரு மட்டன் ரோல்சை தமிழில் எப்படியெல்லாம் மொழி பெயர்க்க இருக்கு.
   ;)))

   Delete
  2. அதெல்லாம் நாங்கள்(கலையும்)எழுத்துக் கூட்டிப் படிச்சுடுவோம்//

   போச்சுது இன்னிக்கு உங்க மருமக கண்ணில் இது பட்டா அவ்வளவுதான்
   :)))

   Delete
  3. ஆஆஆஆஆஆஆஆஅ நான் பார்த்ட்டுன் படிச்சிட்டேன் ...


   அம்மாடியோ அம்புட்டும் எழுத்துப் பிழை பிழையா இக்குதே ....மீ யும் மாமா வும் எழுத்துக்கு கூட்டி படிசிடுவம் ...பாவம் மற்றவர்கள் ...


   அஞ்சு அக்கா ரீச்சேர் வந்து உங்கள பெஞ்ச் மேல ஏறி நிக்கச் சொல்லப் போறாங்க ...நீங்க அதுக்கு முன்ணாடியே பெஞ்ச் கீழ போய் ஒளிஞ்சி கொள்ளுங்க ...ரிசேர் உங்கல தேடினால் நீங்க இங்க தான் இருக்கீங்க எண்டு சொல்ல மாட்டம்

   Delete
 2. Me the 2nd before miyaavvvvvvvv and all Ke. Kirumis

  ReplyDelete
  Replies
  1. வாங்க கிரி :))
   நமக்குன்னு தனியா அடுத்த போஸ்ட்ல வெஜ் ரெசிப்பிஸ் போடறேன்

   Delete
 3. கிரி நீங்க பக்கத்தில் இருந்தா -------- தட்ல வச்சு
  ரெண்டு பெரும் சேர்ந்து ஒலிம்பிக் சோதிக்கு ஆரத்தி
  எடுத்திருக்கலாம் .:))))//
  கரெக்ட் அஞ்சு ஆரத்தி எடுத்து பூச கொஞ்சம் உசுப்பேத்தி விட்டு இருக்கலாம் :)) ச்சே வடை போச்சே !! எங்களுக்கு ஜூலை 14 அன்னிக்குத்தான் வருது ஒலிம்பிக் ஜோதி.

  ReplyDelete
  Replies
  1. நமக்கெல்லாம் ஒரு வசதி ஸ்கூல் பிள்ளைகளோடு பார்க்கலாம்
   லீவ் என்ஜாய் செய்றவங்க இதயெல்லாம் பாக்கமுடியாது
   அதிரா நான் உங்களை சொல்லல :))

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) இன்னும் நீடிக்கப்போகுது.. நான் ஹே ஃபீவரைச் சொன்னேனாக்கும் அவ்வ்வ்வ்வ்:)))))))))))))).

   Delete
 4. அஞ்சு பேபி frock குவில்லிங் அருமையா இருக்கு. வைக்கோல் காய்ச்சல் இலும் அழகா செஞ்சு இருக்கீங்க!

  டியுனா பிஷ் கட்லெட் அண்ட் மட்டன் ரோல்ல்ஸ் ரொம்ப நல்லா இருக்கு இதை எல்லாம் பூஸ் தான் ஒரு கட்டு கட்ட போறாங்க ன்னு நெனைக்கும் பொது நெஞ்சு பொறுக்குதில்லையே :))

  வான்ஸ் அண்ட் டீச்சர் எங்கிருந்தாலும் வந்து தட்டோட எடுத்து கிட்டு ஓடிடுங்கோ ஓஒ :))

  அஞ்சு அடுத்த தடவ எனக்கு உங்களுக்கு மகி க்கு வெஜ் ரோல்ல்ஸ் அண்ட் கட்லெட் ஓகே ?

  ReplyDelete
  Replies
  1. பூஸ் தான் ஒரு கட்டு கட்ட போறாங்க ன்னு நெனைக்கும் பொது நெஞ்சு பொறுக்குதில்லையே :)) //
   dont worry giri :)))
   யோகா அண்ணா எடுத்துக்கிட்டு போய்ட்டார் நோ சான்ஸ் for miyaaaaaav:))

   Delete
 5. //
  நான் சந்தித்த மியாவ் :))
  அப்படியே அன்பா என்கிட்டே பழகினாங்க :))//

  நம்ம பூசார் மாதிரி கர்ர்ர்ர் சொல்லாம பாசமா பழகினாங்கன்னு தானே சொல்லுறீங்க ???? புரியுது அஞ்சு :))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) திஸ் இஸ் 4 கீஈஈஈஈஈஈஈஈஈஈர்ர்ர்ர்ர்ரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ:)))))).

   Delete
  2. //நம்ம பூசார் மாதிரி கர்ர்ர்ர் சொல்லாம பாசமா பழகினாங்கன்னு தானே சொல்லுறீங்க ???? புரியுது அஞ்சு :))// ச்ச,ச்ச,என்ன ஒரு விளக்கம், என்ன ஒரு புரிதல்? கற்பூர புத்திங்க உங்களுக்கு! கிரிசா,சும்மா ரவுண்டு கட்டி ;) வெளாடிருக்கீங்க! சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

   அதிராவ், நோ கர் டு மீ! நான் ஒன்னியுமேஏஏஏஏ சொல்லலை! க்கிக்கிக்கீஈஈஈ! :D

   Delete
 6. அச்சோஓஓஓஓஓஓ கீரிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு இப்போ கை வைக்கக்கூட நேரமில்லையே சாமீஈஈஈஈஈஈஈஈ விரைவில் வாறேன்ன்ன் அஞ்சுவின் பி.ஊ பார்த்து ஓடி வந்தேன்ன்ன் மீ மீண்டும் கம்மிங்யாஆஆஆஆஆஆஆ

  ReplyDelete
  Replies
  1. ஓகே :)))அப்படின்னா கால் அல்லது வால் வைக்கலாமே ஹா ஹா :)))
   கிரி எப்பூடி ??
   சத்தமா சிரிக்க கூட முடியல ஹச்சு ஹாச்சும்

   Delete
  2. அவ்வ்வ்வ் தப்பை பிழை திருத்தினாலும் அதுவே ஹைலைட் செய்து காட்டுது .

   Delete
 7. பல தகவல்களுடன் கூடிய அழகான பதிவு.
  பாராட்டுக்கள், நிர்மலா.

  ReplyDelete
 8. உடம்பு சரியில்லை போல... விரைவில் குணமாகும்...ஒய்வு எடுங்கள் ஏஞ்சலின்...

  Felicidades வாழ்த்து அட்டை Nice...நேற்று எங்கள் இல்ல கொண்டாட்டம் மெக்சிகன் உணவகத்தில் தான்...தலையில் சொம்ப்ரீரோ வைத்து...

  இப்போதைக்கு உங்க ஊர் விம்பிள்டன்...கூடிய விரைவில் ஒலிம்பிக்ஸ்...ஜமாயுங்கள்...உங்க ஊருக்காரர் முர்ரே கலக்குகிறார்...

  நான் ஒரு முறை பி டி உஷா ...கபில் தேவ் கொண்டு வரும் போது பார்த்த நினைவு...


  தயிர் சாதம் -:)

  உங்க வீட்டுக்காரர் TUNA கட்லெட் பார்க்க (!!!) நல்லாயிருக்கு...நாங்க FLAT ஆ செய்வோம்...

  அதிரா அக்கா (!) Mutton Rolls...கனடாவில SRILANKAN PLACESல் ரொம்ப பிரசித்தம்...என்ன கிரௌண்ட் மீட் பிடிக்காது...எதுவுமே ஸ்ரெட்டேட் ஆ இருந்தா இன்னும் சுவையா இருக்கும்...

  //கல்யாணமாகி பல வருடங்கள்
  கழித்துதான் சமையலை கற்றுக்கொண்டேன்//

  HAHA...பலநூற்றாண்டுகள் ஆனது போல சொல்றீங்க...-:) same blood....-:)

  Get Well Soon Angeline...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ரெவரி .அலர்ஜி ரொம்பவே படுத்துது .
   ஹாச்சும் வந்தா நான் ஸ்டாப் தான் .மருந்து சாப்பிட்டும் யூஸ் இல்லை
   இங்கே நிறைய பேருக்கு இந்த பிரச்சினை .
   ஆண்டு இறுதி என்பதால் மகள் பள்ளி வைபவங்கள் நிறைய இருக்கு .நோ ரெஸ்ட் .
   தயிர் சாதம் என் பிரிய உணவு .:))))
   கட்லெட் ,என் கணவர் மீன் கட்லெட் உருண்டை /மட்டன் கட்லெட் ஓவல் /வெஜ் கட்லெட் சிலிண்டர் என்ற மூடரு ஷேப்பில் சொல்லித்தந்தார் .
   அதிரா அக்கா :))) உங்க முறையில் சொல்லி பார்த்தேன்
   இந்த ரோல்சிலும் உள்ளே stuffings கணவர் தான் சிறியதாக வெட்டி தந்தார் .என் வேலை சமைப்பது மட்டும் :))
   சாப்பிட்ட அனைவருமே மிகவும் நன்றாக இருந்ததேன்றார்கள்
   தேங்க்ஸ் அதீஸ் didi
   ,

   Delete
  2. HAHA...பலநூற்றாண்டுகள் ஆனது போல சொல்றீங்க...-:) same blood....-:)//

   ஹா ஹா ஹா :)))
   சமையல் மேட்டரில் நான் ஒரு ஜீரோ .
   என்னை விட சின்ன தங்கச்சிஸ் எல்லாம் அருமையா சமைக்கும்போது எனக்கே வெக்கமா இருக்கும்

   Delete
  3. அதிரா அக்கா (!) Mutton Rolls...கனடாவில SRILANKAN PLACESல் ரொம்ப பிரசித்தம்...என்ன கிரௌண்ட் மீட் பிடிக்காது...எதுவுமே ஸ்ரெட்டேட் ஆ இருந்தா இன்னும் சுவையா இருக்கு//

   உண்மைதான் தமிழ் சாப்பாட்டுக் கடைக்குள் போனால் சாப்பிடா விட்டாலும் வாங்கி வந்து பின்பு பிரிஜ்ஜில் கிடந்து இழுபடும், எனக்கு கீரை வடையும் இம்முறை நன்கு பிடித்தது.

   இல்ல ரெவெரி கனடாவில் மட்டின் துண்டுகள்தான் இருக்கும், கிரவுண்ட் மீட் போட்டதை நான் பார்க்கவே இல்லை.

   Delete
  4. ஆமாம் அதீஸ் என் கணவரும் சொன்னார் ஒருமுறை அவர் இங்குள்ள ஒருவர் வீட்டில் ஆர்டர் செய்யதால் தருவாங்க அவங்க மின்ஸ்ட் மீட் சேர்த்தே செய்தாங்களாம் {சிங்களவர் } .

   Delete
 9. உடல் நலக்குறைவில் இருந்து விரைவில் மீண்டு திரும்புக!

  ReplyDelete
  Replies
  1. நன்ன்றி தம்பி வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 10. சின்ன இளவரசிக்கு வாழ்த்துகள் !!

  ReplyDelete
  Replies
  1. சின்ன இளவரசி நாளைக்கு புறப்படரா .வாழ்த்துக்களை கூறுகிறேன் .நன்றிக்க வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 11. நான் சந்தித்த மியாவ் :))
  அப்படியே அன்பா என்கிட்டே பழகினாங்க :))//////:):):):):):):):?!?!?!?!

  ReplyDelete
  Replies
  1. அண்ணாவுக்கு ஏதோ நினைவுக்கு வரணுமே :))))
   ----- சாப்டறாங்க .சரியா

   Delete
 12. akkaa மீ ஊருக்கு போறதுக்கு முதலில் இருந்தே உடம்பு சரி இல்ல ன்னு சொல்லிட்டு இருக்கீங்க ...நானும் ஊரில் இருதே வந்துட்டும் ...இன்னும் அப்புடியே ...


  உடம்பை பார்த்துக்கோங்க அக்கா ..

  ReplyDelete
  Replies
  1. வாடா என் குட்டி செல்ல தங்கையே .இல்லைம்மா உடம்புக்கு என்றால் கண்களில் ஒரு அலர்ஜி இங்கே பலபேருக்கு இருக்கு .காற்றினால் மகரந்தம் பரவும்போது டஸ்ட் அலர்ஜி மாதிரி அதுதான் .மருந்து சாப்பிட்டா தூக்கமா வரும் மற்றப்[அடி ஒன்றுமில்லை .அன்புக்கு நன்றி

   Delete
 13. மிதி வெடி வச்சிருக்கேன்,கத்தாதீங்க!ரெண்டு தான் இருந்திச்சு!ஒண்ணு உங்களுக்கு மத்தது...............

  ReplyDelete
  Replies
  1. அண்ணா நான் நிறைய செய்தேன் எல்லாமே போட்டோ எடுப்பதற்குள் முடிச்சிட்டாங்க.இனிமே படம் புடிச்ச பிறகுதான் தட்டை டேபிளில் வைக்கணும் :))

   Delete
 14. ...........எனக்கு!!!!!!!!!!!

  ReplyDelete
 15. ஆஆஆஆஆஆஆ இப்போதான் வந்தேன்ன்ன்.. யோகா அண்ணனுக்கு வெடி எல்லாம் குடுக்காதீங்கோ.. அவருக்கு தயிர்ச் சாதம் கொடுங்கோ.. வெடிக்கிறதெல்லாம் என்னிடம் தாங்கோ அதுதான் மிதிவெடியைச் சொன்னேன்.

  அஞ்சு அதெப்பூடி தேடிக் கண்டுபிடிச்சு அதேபோலவே செய்தீங்க. சூப்பராக இருக்கு மிதிவெடி. நான் இம்முறையும் கனடாவில் வாங்கிச் சாப்பிட்டோம்மேஏஏஏ....

  ReplyDelete
  Replies
  1. நீங்க சாப்பிட்டது மட்டன் மிதிவேடிதானே :)))
   கண்டுபிடிச்சேன் ,,,மே மே என்று கூறும்போதே தெரியுது ஹா ஹா

   அதீஸ் அடாது விட்டாலும் பதிவில் கமெண்டில் நீங்க லிங்க் தந்தீங்க அந்த நினைவில் ஓடிபோய் பார்த்து செய்தேன்

   Delete
 16. நானும் அம்பலத்தாரின் செல்லமா ஆன்ரியின் உந்தக் குறிப்புச் செய்யோணும் என எப்பவும் எண்ணுவேன் ஆனா செய்ததில்லை, காரணம் என்னைவிட ஆருக்குமே எந்தச் சாதமும் பிடிக்காது வீட்டில்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தயிர்ச்சாதம் கட்லட் சூப்பர்.

   Delete
  2. அதே மாதிரி எங்க சின்ன அத்தை சிவாங்க அதீஸ் தேங்காயை சிறு துண்டாக இடித்தோ வெட்டியோ போட்டு தாளிப்பாங்க .செம டேஸ்ட்
   நீங்க இப்படியான சாதா வெரைட்டி செய்தாலும் அதற்க்கு கிரேவிஸ் செய்து கொடுங்க அப்ப வேகமா சாப்பிடுவாங்க

   Delete
 17. தயிர்ச்சாதம் சொதப்பிட்டீங்களா அஞ்சு? சாதமாக வரவில்லையே? கஞ்சிபோல வந்திருக்கு. இன்னும் கட்டியாக விட்டிருக்கோணும்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹாஹா :)) இல்லை அதீஸ் எங்க வீட்டில் தயிர் சாதம் நான் மட்டும்தான் சாப்பிடுவேன் முந்தைய இரவே பாலில் வேக வைத்த அரிசி
   மற்றும் அடுத்த நாள் தாளிதம் செய்தப்போ தண்ணி கூடிவிட்டது .
   ஆனா எனக்கு எப்பவுமே தயிர்சாதம் வெழுமென பிசைந்தால் தான் சாப்பிட பிடிக்கும் .ஸ்பூனில் அள்ளி சாப்பிடுவேன் :P:)

   Delete
 18. இரவு வணக்கம்,அதிரா!!!!!நல்லாயிருக்கிறியளா?ஏன் இந்தக் கொ..............வெ.......?நீங்கள் தான் கனடாஆஆஆஆஆஆஆவில நிறைய சாப்பிட்டிருப்பீங்களே?உங்க சிஷ்யைக்கும்,எனக்கும் ஆளுக்கு ஒண்டு தானே இருக்கு?

  ReplyDelete
  Replies
  1. ஹா.. ஹா..ஹா... யோகா அண்ணன் இங்கதான் இருக்கிறீங்களோ? இல்ல யோகா அண்ணன், நல்லதைத்தானே மற்றாக்களுக்குக் கொடுக்கோணும், அதனாலதான் வெடி... என இருப்பதால அது உங்களுக்கு வாணாமே எனச் சொன்னேன்ன்.. எப்பூடி?:)

   Delete
  2. இல்லையண்ணா ஆங்கிலத்தில் மட்டன் ரோல்ஸ் என்று இருக்கு ஸோ டோன்ட் வொர்ரி :))))

   Delete
 19. athira said.....
  உங்கள் தயிர்ச்சாதம் கட்லட் சூப்பர்.////எல்லாத்தையும் நீங்களே தனிய சாப்பிட்டா எப்பிடி?

  ReplyDelete
  Replies
  1. யோகா அண்ணனுக்கு சைவம்தானே பிடிக்கும்?

   Delete
  2. ஆஅ இல்ல அக்கா ...மாமா க்கும் அசைவமும் பிடிக்கும் ...

   Delete
 20. ஒலிம்பிக் சூப்பர். கொடுத்து வைச்சிட்டீங்கள். எங்கள் ஏரியாவுக்கும் வந்தது அன்று நல்ல மழை அதனால் போக முடியவில்லை. ஆனா அந்த ஒலிம்பிக் டோச்சைத்தான் பிள்ளைகளின் ஸ்போர்ட் மீட்டின்போது கொண்டுவந்து பிளே கிரவுண்டில் சுத்தி ஓடினார்கள்.

  நான் நினைக்கிறேன் 2007 ம் ஆண்டு எங்கள் சிட்டியில் ஒருநாள் போவோர் வருவோருக்கெல்லாம் ஒவ்வொரு ஒலிம்பிக் bagகும் அதனுள் ஒலிம்பிக் 2012 என அடிச்ச ரீ ஷேட்டும் வச்சு தந்தார்கள். எம் பிள்ளைகளுக்கும் கிடைத்தது. அதெல்லாம் போட்டு முடிச்சிட்டினம்.

  ReplyDelete
  Replies
  1. இங்கே இன்றைக்கு உண்மையில் நாங்க லக்கிதான் ஒலிம்பிக் தீபம் பார்த்து பள்ளி திரும்பிய நேரத்தில் இருந்து இப்ப வரைக்கும் மழை மழை .காலையில் வானம் க்ளியரா இருந்ததால் தப்பித்தோம்

   Delete
 21. Baby Frock கார்ட் சூப்பர் அஞ்சு... ஒருவித குறையும் இல்லாமல் அழகாக இருக்கு.

  ReplyDelete
 22. நான் சந்தித்த மியாவ் :))///

  அச்சு அசலா மீயைப்போலவே எவ்ளோ அடக்க... ஒடுக்கமாக இருக்கெனப் பாருஞ்கோவன்:))


  அப்படியே அன்பா என்கிட்டே பழகினாங்க :))////

  ச்ச்ச்ச்ச்ச்சோஓஓ சுவீட்ட்.. அதிராவைப் போலவே....:)) ஹையோ ஏன் எல்லோரும் முறைக்கினம்ம்ம்ம்ம்ம்ம்?:))) அஞ்சூஊஊஊஊ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சேஃப் மீஈஈஈஈஈஈ:)

  ReplyDelete
  Replies
  1. அதீஸ் உங்களோடு பழக ஆரம்பித்ததில் இருந்து எங்கே போனாலும் மியாவ் கூட்டம் என்னையே சுற்றி வராங்க .அன்னிக்கு பார்க்கில் ஒன்று மடியில் ஏறி அமர்ந்து கொண்டது :)))

   Delete
  2. நான் போற இடத்தில (பூச்சி பிடிக்க போன )இருக்கிற மியாவ் எல்லாம் என்னை பார்த்தாலே முறைக்குது அவ்வ்வ்வ் :-). ஒரிஜினல் மியாவ் பார்த்தால் கடிச்சே வச்சிடும் போல ஹா..ஹா...:-)

   Delete
  3. ஆஆஆஆஆஆஆஆஅ ஜெய் அண்ணா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ///

   இது கனவா ஆஆஆஆஆஆஅ இல்ல நினைவா ஆஆஆஆஆஅ .....

   Delete
  4. அதீஸ் !!!!!!!!!!!!!! மிதி வெடி வேலை செயுது ஆஆ ஓடியாங்கோ ஓ

   Delete
 23. ஆஆஆஆஆஆஆஅ எல்லாரும் இங்க தான் இருக்கீங்களா

  ReplyDelete
 24. அக்கா ஆ பேபி பரோக் செம அழகு ...அம்மாடி எவ்வளவு நேரம் எடுக்கும் அது எல்லாம் செய்து முடிக்க ...

  ரொம்ப சிரமம் அக்கா ...நீங்க கிரேட்

  ReplyDelete
 25. ஆனா நானெல்லாம் கல்யாணமாகி பல வருடங்கள்
  கழித்துதான் சமையலை கற்றுக்கொண்டேன், எனவே
  ஒரு ரெசிப்பி செய்ததும் சந்தோஷம் தாங்காமல் போஸ்ட்
  போட்டிடுவேன் பொறுத்தருள்க:))///
  \

  ஆஆஆஆஆஆ குருவே ஓடி வாங்க இங்க இலக்கணப் பிழை சந்திப் பிழை சந்திக்காத பிழை எல்லாம் உள்ளது ....

  கற்றுக் கொண்டேன் கடந்த காலம் ...நீங்கள் ப்ரெசென்ட் கண்டினுஒஸ் டேன்ஸ் தானே வரணும் .... கற்றுக் கொண்டே இருக்கிறேன் என்று தானே இருக்கனும் ....மற்ற வர்களை ஏமாற்றின மாறி என்னை எல்லாம் ஏமாற்றா முடியாதக்கும் ....

  ReplyDelete
  Replies
  1. அக்கா உனக்கு ஸ்பெஷல்லா pheni ஸ்வீட் செய்து தாரேன் .ஓகே .நல்லபிள்ளை
   இவ்ளோ விவரமா இருக்ககூடாது presentcont //அவ்வ்வ்வ்
   அக்கா பாவமில்லையா பிழைச்சு போட்டேன் விட்டிடுமா :)))

   Delete
 26. ஆஆஆஆஆஆஆஆஅ என்ன இது நான் வந்தவுடனே நீங்க எல்லாருமே எஸ்கேப் ஆகி போய்டீங்களா

  ReplyDelete
  Replies
  1. காக்கா........நானும் இப்பத்தான் வந்து மிதிவெடிக்காக குந்தியிருக்கிறன்.தராட்டி போகமாட்டன் சொல்லிட்டன் !

   Delete
 27. எனக்கில்லையோ ஏதாச்சும்.எப்பவும் கடைசிப்பந்திக்குத்தான் வாறன்.யோகா அப்பா ,அதிரா,கலை,ஏதாச்சும் பிச்சுப் போடுங்கோவன்.உந்தச் சாதம் எல்லாம் வேண்டாம் ஏஞ்சல்.மிதிவெடி......ஆஹா நல்ல பெயர்தான்.ஆர் அதிராவோ வச்சுது.அப்ப சரியாத்தான் இருக்கும்.எனக்கு அந்த மிதிவெடிதான் வேணும்.இல்லாட்டி இதிலயே குந்தியிருப்பன்.தாங்கோ தாங்கோ மிதிவெடி !

  என்னைப்போல உங்களுக்கும் ”வைக்கோல் காய்ச்சல்”.....எப்பிடி ஏஞ்சல் உந்தப் பெயரெல்லாம் மொழி பெய்ர்க்கிறீங்கள்.

  ஒலிம்பிக் ம்ம்ம்ம்....சந்தோஷம்தான் !

  ReplyDelete
  Replies
  1. ஊக்குவிப்பார் ஊக்குவித்தால் என்று ஒரு பொன்மொழி நம்ம கலை போட்டிருக்கா பாருங்க அத மாதிரிதான் நானும் மொழிபெயர்ப்பெல்லாம் ஆரம்பிச்சுட்டேன் :)))
   ஸ்வைன்ஃப்ளூ ...பன்றிக்காய்ச்சல்

   அந்த மாதிரி இது வைக்கோல் காய்ச்சல் :))

   Delete
 28. எழுத்துப்பிழையெல்லம் ஒரு பெரிய விஷயமேயில்லை ஏஞ்சல்.நாங்கள் எல்லாரும் கலையின்ர தமிழையே அகராதி வச்சு மொழி பெயர்த்து பிச்செடுக்கிறோமாக்கும் !

  ReplyDelete
  Replies
  1. இப்ப பாருங்க ஹேமா வசமா மாட்டிக்கிட்டாங்க கலைகிட்ட :)))

   Delete
 29. இரவு வணக்கம்,ஹேமா!நான் வச்சுப்(மிதி வெடி)பாத்துக் கொண்டிருந்தன்.கொஞ்ச நேரம் வச்சிருக்க,பாத்துப்,பாத்து வீணி அதுக்கு மேல ஊத்துண்டு போச்சு!எச்சி பட்டத மகளுக்குக் குடுக்கவோ ஏண்டி யோசிச்சுப் போட்டு............................ஸ்வாகா பண்ணீட்டன்,ஹி!ஹி!ஹி!!!!

  ReplyDelete
  Replies
  1. எல்லாத்தையும் சாப்பிட்டுப்போட்டு நல்ல சமாளிப்புத்தான் !

   Delete
 30. This comment has been removed by the author.

  ReplyDelete
 31. பின்க் வர்ண பின்னனியில் Quilling ரொம்ப அழகாக உள்ளது.தயிர்சாதாம் டுனா கடலட்,மட்டன் ரோல் அனைத்தும் பிரமாதம்.உங்கள் வீட்டருகே வந்த பூஸை மறக்காமல் படம் எடுத்து போட்டு விட்டீர்களே.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸாதிகா :))
   என்ன வென்றே தெரில்ல இப்ப அடிக்கடி நிறைய பூஸ் என்னை சுற்றி வராங்க .வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 32. ஏஞ்சலின், உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்க. இதோடு க்வில்லிங்கும் சமையலும் செய்து அசத்துறீங்க... பிரமாதம். பாப்பாவின் சட்டை கண்ணிலேயே நிக்குது. உங்க தயவால் மட்டன் ரோல் செய்யக் கத்துகிட்டேன். லிங்க் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. அழகாய் செய்யச் சொல்லிக்கொடுத்த அதிராவுக்கு என் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா .மட்டன் ரோல் அதிரா முறையில் செய்தப்போ எனக்கு ஈசியா வந்தது .இது தான் முதல் முறை ஆனல்லும் எல்லா புகழும் மியாவ் அதிராவுக்கே :))

   Delete
 33. அஞ்சு! உங்கள் பதிவை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.

  உங்கள் க்வில்ட் baby frock அவ்வளவு அழகாகவும் மிக நேர்த்தியாகவும் இருக்கு. கண்ணைக்கவரும் விதமா கலர் செலக்‌ஷனும் செய்திருக்கிறீர்கள்.
  மேலும் மேலும் என்னை பிரமிக்க வைக்கிறீங்கள் அஞ்சு!வாழ்த்துக்கள்!

  சமையலும் அலங்காரமாகவும் அசத்தலாகவும் இருக்கு. எனக்கும் பிடித்த தயிர், தேங்காய் சாத வகைகள்.
  ம்..சுவையாகவும் இருந்திருக்கும்!!!
  இந்தவகை தயிர்சாத ரெசிப்பி நான் அறிந்திருக்கவில்லை. மனோ அக்கவுக்கும் நன்றி!
  உருளைவெடி! செய்யவேண்டுமென ஆவலை தூண்டுகிறது:)

  ஒலிம்பிக்ஜோதி, பூஸாரின் படங்களும் அருமை.
  பூஸார் உங்களுடன் ரொம்பவே அன்பா இருக்கிறா(ர்). உங்கள் கையில் தலை சாய்த்து.. அவ்வளவு நெருக்கமா இருக்கிறதை பார்க்கவே தெரியுதே:))

  உங்கள் உடல் நலக்குறைவிலும் அருமையான பதிவைத்தந்திருக்கிறீர்கள்.பகிர்வுகள் அத்தனைக்கும் மிக்க நன்றி!

  அஞ்சு! உங்கள் உடல்நலனில் அக்கறை கொள்ளுங்கள்.விரைவில் நலம் பெறப் ப்ரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி :))

   பூசார் ரொம்ப செல்லம் கொஞ்சினார் .எனக்கு சிறுவயதில் இருந்தே அனிமல்ஸ் மீது ரொம்ப பிரியம் .
   உருளை வெடி மிதிவெடி ...பாராட்டுக்கள் அதிரா மியாவை சேரும்
   தயிர் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்படி செய்து சாப்பிட்ட நல்ல டேஸ்டா இருக்கும் நீங்களும் செய்து பாருங்க

   Delete
 34. very interesting blog! cheers!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Ashok .

   Delete
 35. ஏஞ்சல் அக்கா, க்வில்லிங் ஃப்ராக் சூப்பர்! அழகா லட்சணமா இருக்கு! :)

  தயிர்சாதம், சேம் பின்ச்! :))) எனக்கும் மனோமேடம் ரெசிப்பி பார்த்ததில் இருந்தே டெம்ப்டிங்-கா இருந்தது. ஆனா அந்த மெதட்படி செய்யலை நான்! பார்க்கவே வெள்ளைவெளேர்னு சூப்பரா இருக்கு. செய்து பார்க்கணும்.

  மிதிவெடி...பாத்தீங்களா? நான் சொன்னப்ப அது வெடிகுண்டுன்னீங்களே?! இப்ப நீங்களே பாம் மேக்கர் ஆகிட்டீங்க?! ;)))) அடுத்து சீக்கிரம் வெஜிடேரியன் குண்டு;) ரெடி பண்ணி குடுங்க, சொல்லிட்டேன்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  தேங்காசாதம்--லிங்க் குடுக்கலையோ? நல்லா இருக்கு. ஃபிஷ் கட்லெட்...அவ்வ்வ்! அதுவும் மினிகுண்டு;) மாதிரி இருக்கே?! இமாவும் இந்த ஷேப்பில்தான் கட்லட் செய்திருந்தாங்க எப்பவோ! உருண்டையும் ஒரு வித்யாசமான அழகா இருக்கு. அடுத்தமுறை எனக்கு இதே ஷேப்ல சைவ கட்லெட் வேணும்னு உங்க ஆ.காரர் காதில போட்டு வைங்கோ,சரியா?! ;)))))

  ம்ம்ம்..மெயின் ஏரியாவை முடிச்சாச்சு, இனி மத்ததை(!) பார்ப்போம்! :))))

  ஒலிம்பிக் ஜோதி படங்கள் சூப்பரா இருக்கு. நாங்க இங்கே டீம் யு.எஸ்.-ஐ செலக்ட் பண்ணற ட்ரையல் பார்த்துட்டு இருக்கோம், நீங்க டார்ச்சையே பார்த்துட்டீங்க, என்சாய்!

  மியாவ்--கார்டன் சென்டர்ல என்ன செய்யறாங்க? பார்ட்-டைம் வொர்க் ஏதும் பண்ணறாங்களா? வெள்ளைக் கலர்ல குட்டியா ஒரு கதிரை வேற போட்டு உட்கார்ந்திருக்காங்க போல?! அதிராவ்...சொல்ல்ல்ல்ல்ல்லவே இல்ல? நீங்க அக்கவுன்டன்ட் என்றெல்லோ நினைச்சிருக்கேன்?! ;))))

  ReplyDelete
 36. /கிரி நீங்க பக்கத்தில் இருந்தா -------- தட்ல வச்சு
  ரெண்டு பெரும் சேர்ந்து ஒலிம்பிக் சோதிக்கு ஆரத்தி
  எடுத்திருக்கலாம் .:))))/ ஹாஹ்ஹா! சிரிச்சுசிரிச்சு சிரிச்சுசிரிச்சு....அவ்வ்வ்வ்! சிரிக்கவே தெம்பில்லாமப் போச்! :)))) அந்த டாஷ்ல வரது மூணெழுத்துப் பேர்தானே? முதல் எழுத்து அ...கடைசி எழுத்து ரா! இடைல ஒரே ஒரு எழுத்துதான் இருக்குது. என்னான்னு எல்ல்ல்ல்ல்ல்ல்லாருக்குமே நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாத் தெரியும்! அதிரா, அம் ஐ ரைட்?! :))))))))

  ReplyDelete
  Replies
  1. மகி !!!!தேங்காய் சாதம் ரெசிப்பி இப்ப போஸ்ட்ல சேர்த்திட்டேன்
   பாருங்க

   Delete
  2. அடுத்தமுறை எனக்கு இதே ஷேப்ல சைவ கட்லெட் வேணும்னு உங்க ஆ.காரர் காதில போட்டு வைங்கோ,சரியா?! ;))))) //


   விரைவில் உங்க ஆசை நிறைவேறும் நமக்குன்னே தனியா வெஜ் ரோல்ஸ் வெஜ் கட்லட் செய்யறேன் மகி :))
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகி

   Delete
  3. ஆரத்தி தட்டில மியாவ் நினைக்கும்போதே சிப்பு சிப்பு ,,,அவ்வவ் சிரிக்க கூட முடியலா கஷ்டப்பட்டு சிரிக்கிறேன் :))))))

   Delete
  4. /தேங்காய் சாதம் ரெசிப்பி இப்ப போஸ்ட்ல சேர்த்திட்டேன் / தேங்க் யூ! :) நான் வெங்காயம் சேர்க்காம தாளிச்ச சாதம் செய்யவே மாட்டேன், தேங்கா சாதமும் அதுக்கு எக்ஸப்ஷன் இல்லை! ஒருமுறை இந்த ரெசிப்பி படி செய்து பார்க்கிறேன்.

   /விரைவில் உங்க ஆசை நிறைவேறும்/ தேங்க்ஸ் எகெய்ன் ஃபார் கன்ஸிடரிங் மை words! :)

   மியாவ் இஸ் ஸோ பிஸி வித் மினி-மியாவ்ஸ்! ;) ஆளையே காணோம் பாருங்க! :))

   Delete
  5. மகி ,,இந்த மாதிரி சாதத்துக்கு நான் வெங்காயம் சேர்த்ததில்லை:))
   நெல்லிக்கா சாதம் இன்று செய்தேன் அதுவும் இப்படிதான் வேங்காயமில்லாமதான் செய்தேன் .
   ஒரு சேஞ்சுக்கு நான் உங்கள மாதிரி வெங்காயம் சேர்த்து சஐய்கிறேன்
   அடுத்தமுறை :)))
   //மியாவ் இஸ் ஸோ பிஸி வித் மினி-மியாவ்ஸ்! ;) ஆளையே காணோம் பாருங்க! :))//


   yes yes :)))

   Delete
 37. ஏஞ்சல் அக்கா, ப்ரொஃபைல் போட்டோ சேஞ்ச் ஆகிருக்கு? அட...ஸம்மர் ஸ்பெஷலுக்கு கூலிங் க்ளாஸ் போட்ட கோல்ட் ஃபிஷ் போட்டோவா?! :)) சூப்பர் போங்க!

  உருளை வறுவல் செய்துபார்த்துட்டீங்களா அதுக்குள்ள?! நன்றீ,நன்றி,நன்றி! நானும் நீங்க சொன்னது மாதிரி ப்ளூகலர் போட்டு அகர்-அகர் ஸ்டார் செய்தேன். அழ....கா வந்திச்சு..விரைவில் இங்க்லீஷ் ப்ளாகில் போஸ்ட் பண்ணுவேன், பிறகு லிங்க் தரேன். :)))

  ReplyDelete
 38. நீங்க கொடுத்த ரெசிப்பியை(தயிர்சாதம்) செய்திட்டு உங்களுக்கு கொமன்ட் எழுதுவம் என இருந்துவிட்டேன். 3தரம் கொஞ்சம் சேன்ஞ் செய்து செய்துபார்த்துவிட்டேன்.சூப்பரா இருந்தது.

  க்விலிங் உங்களை யாரும் மிஞ்சமுடியாது. ப்ராக் சூப்பரா இருக்கு.
  கொடுத்துவைத்தவர்கள் நீங்கள் ஒலிம்பிக்பார்த்துவிட்டீர்கள்.

  ReplyDelete
 39. ஐந்து வாரத்துக்கு மேல் எங்கேயும் எவருக்கும் விடுமுறை கிடையாது.நானே இருபத்தைந்து நாட்களில் திரும்பி விட்டேன்,அதனால் உடன் சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்!

  ReplyDelete
  Replies
  1. வெல்கம் வெல்கம் அண்ணா :))..நான் ஆகஸ்ட்ல கூட ஒரு போஸ்ட் போட்டேனே ...என் பொண்ணும் போஸ்ட் போடுவதால் கொஞ்சம் நேரக்குறைவு மற்றபடி எல்லா இடமும் தவறாமல் விசிட் செய்றேன் அண்ணா

   Delete
 40. காலை வணக்கம்,அஞ்சலின்!எதிலும் ஒன்ற முடியாமல் ...................மன்னிக்கவும்!உங்களை வேறு சங்கடத்தில்....................பார்க்கலாம்!

  ReplyDelete