அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/12/12

Quilling Teddy Bear/ மீள் சுழற்சி

                                                                                   

இந்த வாழ்த்து அட்டை ,உயர்நிலைப்பள்ளி செல்லும் 
எங்க மகளுக்கென செய்தது .
நேற்று எல்லா பள்ளிகளிலும் மாணவர்கள் அவர்களின் புதிய வகுப்பு 
ஆசிரியரை சந்தித்த TRANSITION / INDUCTION DAY.
எங்க  மகள் வேறு பள்ளி செல்கிறாள் ..
எனவே காலையில் பள்ளி செல்லுமுன் இந்த கார்டை அவளுக்கு 
கொடுத்தேன் .
நிறைய படங்கள் ஆங்கில வலைப்பூவில் இணைத்திருக்கிறேன் .
அங்கே பார்க்கவும் 

பிஸ்கட் பாக்கட் உள்ளே இருக்கும் CORRUGATED PAPER LINING 
இருக்குமே அதை வெட்டி செய்தது தான் இந்த டெடி பேர் ,

                                                               

புதிய பள்ளி புதிய சூழ்நிலை என்று அனைத்து மாணவர்களும் 
பல சிந்தனைகளுடன் நுழைவதை காண முடிந்தது .ஒன்றிரண்டு 
பேர் அழதுக்கொண்டும் இருந்தனர் .என் மகள் சொன்னா 
// வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி இருக்கு //
எனக்கு சிரிப்பு வந்தது ஏழாம் வகுப்பிக்கே இப்படியா ??
பிறகு எல்லாம் சரியாகி மாலை  சந்தோஷமா வந்தாள்:))

தொடர்ந்து பின்னூட்டமிட்டு என்னை பாராட்டும் அன்புள்ளங்களுக்கு 
நன்றி .கொஞ்ச நாள் என் வலை பக்கம் மட்டும் வர மாட்டேன் 
செப்டம்பர் வரை .,பள்ளி விடுமுறை .மகள் அவளது ப்ளாகை 
தூசுதட்ட  போறா .நேரமிருக்கும்போது உங்க அனைவர் பக்கமும் 
வருவேன் .

cheers have great week end.

Angelin.

37 comments:

 1. மீள் சுழற்சியில் செய்துள்ள மிக அழகான
  Quilling Teddy Bear மீண்டும் அழகாகக் காட்சி அளிக்கிறார். பாராட்டுக்க்ள், நிர்மலா.

  உங்கள் கைவசம் தொழில் உள்ள்து. அதனால் என்றும் உங்களுக்குக் கவலையே இல்லை.

  பிரியமுள்ள
  கோபு

  ReplyDelete
 2. அஞ்சு!!!
  பிஸ்கற் பேப்பரில் உங்கள் மீள்சுழற்சி ரெடிபேர் பார்த்து வியந்து போனேன்.
  உங்களிடம் எவ்வளவு திறமை இருக்கிறது என்பதை உங்களின் ஒவ்வொரு கைவேலைப்பாடும் நிரூபிக்கின்றது. முகஸ்துதிக்காக சொல்லவில்லை. கிடைக்கிற பொருட்களெல்லாம் உங்கள் எண்ணத்தினாலும் கைகளினாலும் அருமையாக, அழகாக உருப்பெறுகிறது.
  உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது.

  என்னைப் பொறுத்தவரை அபரிதமான அழகியல் தன்மை, கற்பனா சக்தி இயற்கையாகவே உங்களுக்கு உண்டு. ஆகையால்தான் பார்க்கிற எதையும் உடனேயே இத்தனை அழகாக அற்புதமாக செய்யமுடிகிறது.
  மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இளமதி

   // கிடைக்கிற பொருட்களெல்லாம் உங்கள் எண்ணத்தினாலும் கைகளினாலும் //

   எனக்குகொழு மொழு பூஸ் :))ஒன்று பிடித்து தர முடியுமா இளமதி TO UP CYCLE :))

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) இப்படியெல்ல்லாம் நடக்குமெனத் தெரிஞ்சுதான் அம்மம்மா என்னட்டச் சொன்னவ, உடனேயே லைஃப் இன்சூரன்ஸ் எடுத்திடு என:)).

   Delete
 3. நலமா ஏஞ்சலின்...?

  வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கு...

  பட்டாம்பூச்சி போல் பறக்கும் வயது...லேசாய் வயிற்றில் இருந்தால் தப்பில்லை...
  அடுத்த மாதம் எங்கள் மகளும்...அதே நிலை தான்...

  ம்ம்ம்ம்...வயதாகிக்கொண்டே போகிறது....உங்களுக்கல்ல..-:)

  ReplyDelete
  Replies
  1. அவ்வவ் .நம்ம யாருக்குமே வயசாகல :)))
   நாம ஒன்லி TWELVE/
   ஸ்வீட் சிக்ஸ்தீன்ல இருக்காங்களே அவங்களுக்குதான் ஹா ஹா

   Delete
  2. ம்ம்ம்ம்...வயதாகிக்கொண்டே போகிறது....உங்களுக்கல்ல..-:)/

   HOPE THIS IS INVISIBLE TO CATS EYES

   Delete
 4. மாலை வணக்கம்,அஞ்சலின்!உடம்பு சரியாச்சா?பொண்ணு பெரீஈஈஈஈஈய ஸ்கூல் போறது சந்தோஷம்.உங்க சந்தோஷத்த எங்க கூட பகிந்துகிட்டது ரெட்டிப்பு சந்தோஷம்!நீங்களும்,லீவா?நடத்துங்க,நடத்துங்க!(ச்சும்மா!)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா .என் மகள் ப்ளாக் லிங்க் ஏற்க்கனவே தந்தேனே அந்த மான் படத்தோடு .எனினும் மீண்டும் அவ புது போஸ்ட் போடும்போது என் ப்ளாகில் லிங்குடன் அழைப்பு விடுப்பேன் .இப்ப நிறைய நிசி ஆகஸ்ட்லருந்து பதிவு போடுவா .நானும் நேசனின் பதிவில் உங்க அனைவரையும் வந்து தேடினேன்

   Delete
 5. மாலை வணக்கம்,ரெவரி!நலமா?நேற்று நேசன் பதிவு காலம் கடந்து(நேரம் கடந்து?)பார்த்தேன்.தேடியது பார்த்தேன்.நன்றி தேடலுக்கு!பார்க்கலாம்.

  ReplyDelete
 6. உங்கள் மகளின் பிளாக்கை நாங்கள் பார்க்க முடியாதா,அஞ்சலின்????

  ReplyDelete
  Replies
  1. http://craftyflower.blogspot.co.uk/

   Delete
 7. அருமையான,அழகான கார்ட்!வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 8. டெடி அழகா இருக்கார்! :) இரண்டாவது படத்தில் இருந்து உருவானதுதான் முதல் படத்தில் இருக்கும் கரடி என நம்பவே முடியலை. ஜூப்பரா இருக்கு!

  Good luck Sharon! :)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மகி .டவ்ட் வரக்கூடாதின்னுதான் படங்களை செய்யும்போதே மற்றும் செய்வதற்கு முன்னும் எடுத்து ஆங்கில வலைப்பூவில் போட்டிடுவேன் :))

   Delete
 9. meeeeeeeeeee the firstuuuuuuuuuuuu...:)

  Our Best Wishes to Your Daughter Anju akka.


  ம்ம்ம்ம்...வயதாகிக்கொண்டே போகிறது....உங்களுக்கல்ல..-:)// repeatu..(HOPE THIS IS INVISIBLE TO CATS EYES.......)Poosar Eyes Very Sharp..:)

  ReplyDelete
  Replies
  1. ஐஸ் மட்டுமோ?:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 10. ஏஞ்சலின் அக்கா காலம்
  மிக வேகமாய்
  கண்ணுக்கு தெரியாமலே போகிறது
  உங்கள் மகள் மென் மேலும்
  சிறந்து விளங்க வாழ்த்துக்கிறோம்

  நேரம் இன்மை அதிகம் வர முடிவது இல்லை அக்கா.

  உங்களுக்கும் இனிய வார விடுமுறை இனிதே அமையட்டும்

  ReplyDelete
  Replies
  1. எப்ப நேரமிருக்கோ அப்ப வாங்க சிவா .நீங்க நலமா இருக்கீங்களா .
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 11. அழகான க்யூட் டெடி. ஆனால் உங்கள் மகள் சொல்வது போல் எனக்கு kipper cartoon இல் வரும் குட்டி piglet ஐ நினைவுபடுத்தியது. அழகோடு அசத்தலான கைவண்ணம். புதிய பள்ளியில் சேர்ந்துள்ள மகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கீதா.என் மகள் என் கைவினைகளுக்கு பெரிய க்ரிடிக் .
   அவதான் நிறைய ஐடியாஸ் தருவா :)))

   Delete
 12. மிகவும் அழகாக இருக்கு அஞ்சு. உங்க மகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
  எல்லாமே தமிழில்!!
  நன்றாக இருக்கு அஞ்சு

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ப்ரியா

   Delete
 13. அழகான மீள் சுழற்சி !

  ReplyDelete
 14. அழகான கார்ட். ஹா..ஹ..ஹா.. அவவுக்கு பட்டாம்பூச்சி பறக்குதாமோ? எனக்கும் இப்படிப் பறக்கிறது சிலநேரம்:).

  ஷரனுக்கு எம் வாழ்த்துக்களைச் சொல்லிடுங்கோ அஞ்சு.

  எங்கட மகனின் பிறைமறி ஸ்கூல் கடசி நாளில்(27.06.2012) கேர்ள்ஸ் எல்லோரும் அழுதவையாம்.

  அப்போ உங்களுக்கு கவலை இல்லையா எனக் கேட்டேன், இலையாம் ஹை ஸ்கூலை நினைத்ததும் அந்த சந்தோசத்தில், இந்த கவலை பெரிதாகத் தெரியவில்லையாம்:)... இதுதான் சின்னக்கோடு பெரியகோடு:).

  ReplyDelete
 15. காலை வணக்கம்,அஞ்சலின்!"கண்" நோவு சரியாயிடுச்சுன்னு சிம்பாலிக்கா கண்ணாடி இல்லாம..................பேஷ்,பேஷ்!!!!!ஹ!ஹ!ஹா!!!!!

  ReplyDelete
 16. ரொம்ப நல்லா இருக்கே. மகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 17. சூப்பரா இருக்கு கார்ட். மகளுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. ஏஞ்சல் நான் ஓரளவு சுகம்...அன்புக்கு நன்றி.குட்டி ஏஞ்சலுக்கு என் வாழ்த்துகள்.மெல்ல மெல்லத் தேறி வர முயற்சிக்கிறேன்.அன்புக்கு நன்றி தோழி !

  ReplyDelete
 19. ஆஆஆஆஆஆஆஆஅ அஞ்சு அக்காஆஆஆஆஆஆஆ

  ReplyDelete
 20. ப்ளாக் சுப்பெரா இருக்கு ...சீக்கிரமா ஓபன் ஆகுது அக்கா ....கமெண்ட்ஸ் போடுறதும ஈஸி யா இருக்குற மாறி இருக்கு அக்கா ....

  கிரீட்டிங் கார்ட் சுப்பெரா இருக்கு ...மீ யும் செய்ய மடேரியால் வாங்கினான் ..ஆனால் செய்ய நேரமில்லாம இருக்கு ..

  குட்டிஸ் ஷெரோன் ஏழாம் வகுப்பு போறதுக்கு வாழ்த்துக்கள் அக்கா ...குட்டிசின் ப்லோக்ஸ் கொடுங்கோலன் ...நாங்க லாம் சேர்ந்து கும்மி அடிப்பம் ல ....

  தூள் பார் பக்கத்துல ஏதோ குட்டி டிசைன் லாம் புதுசா போட்டு இருக்கீங்களே ....அழகா இருக்கு அக்கா ...

  நீங்களும் செப்டம்பர் வரமாடீன்களா ....அக்கா மீ க்கு அப்போ பர்த்டே கிரீட்டிங் லாம் கொடுக்க மாட்டீங்களா ....ஆஆஆஆஅ மீ க்கு உங்க கையாள கிரீட்டிங் விஷேஸ் வேணும் ..இப்போவே சொல்லிட்டேன் ...இல்ல எண்டால் உண்ணா நோன்பு இருப்பேன் ,,,,

  ..அக்கா எனக்கும் கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு ...இனிமேல் ப்ளாக் வருவது சந்தேகம் தான் ...முடியும் போது வருவேன் உங்களை எல்லாம் புகல ,,,,

  ReplyDelete
 21. வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி இருக்கு //
  ?///

  ஷெரோன் உனக்காவது வயிற்றுக்குள்ள மட்டும் தான் அப்படி இருக்கு எனக்கு மனசுக்குள்ள எல்லாம் அப்புடி தான் இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....

  ReplyDelete
 22. நல்ல செயல் + யோசனை. அனைவரும் இப்படி செய்தால் சூழல் மாசு போன்றவை எவ்வளவோ குறையும். அப்படியே நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வந்துட்டுப் போகலாமே?

  http://newsigaram.blogspot.com

  ReplyDelete