அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/4/12

வார இறுதி:)))))) News Round


                                                                                 
சில மாதங்களுக்கு முன்பு எங்கள் மகள் ஒரு போட்டியில் 
கலந்து கொள்கிறாள் என்று கூறியிருந்தேன் அல்லவா .
அந்த போட்டியில் 90 படங்கள் வந்திருந்தன அவற்றில்  
பத்து படங்கள் முதலிடத்தில் இருந்ததும் அதில் என் மகள் 
படமும் ஒன்று எனவும் குறிப்பிட்டு இருந்தேன் .
                                                                                     

நான் இந்தியா சென்ற சமயம் பரிசளிப்பு நடைபெற்றது .
எங்க மகளின் கைவண்ணம் மூன்றாவது பரிசுக்கு 
தேர்வாகியிருந்தது .
நியூஸ் பேப்பரில் எல்லாம் அவள் பெயர் வந்திருந்தது .
எனக்குதான் பார்க்க கொடுத்து வைக்கவில்லை அவள் 
அப்பாவுடன் சென்று நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கா .
இங்கே பிள்ளைகளின் புகைப்படத்தை தினசரிகளில் போடும் 
முன் பெற்றோரிடம் ஒப்புதல் வாங்குவார்கள் .
என் கணவர் அந்த ஒப்புதலில் புகைப்படம் பிரசுரிக்க 
வேண்டாம் என்று டிக் செய்திருக்கிறார் அதனால் பெயர் 
மட்டும் வந்துள்ளது .
//More than 90 entries from young people aged between 11 and 16 were received 
for the contest, which challenged people to draw their favourite fictional animal. 
The pictures will be displayed until tomorrow.
Click here to find out more!
First prize went to 15-year-old Victoria Gorrell with a painting of Black Beauty, 
while second prize went to 13-year-old Georgia Walsh for her picture of Bullseye the dog 
from Charles Dickens’ Oliver Twist.
Third prize featured Flag the fawn from the book The Yearling, 
put together by Sharon Hannah  from Primary School, and fourth //

அவள் பெற்ற பரிசு முப்பது பவுண்டுக்கு Hobby craft voucher
AND CERTIFICATE.
************************************************************************************
சமீபத்தில் கலிங்கநாட்டு இளவரசி வாத்து மேய்த்த 
சம்பவத்தை அனைவரும் படித்திருப்பீர்கள் என்று 
நினைக்கிறேன் .
வரலாற்று புகழ் மிக்க சம்பவமல்லவா !!!!!!!!!!!!!!!!!!!!!!!
அதை படித்ததும் எங்க வீட்டில்..................................
பொறுமை பொறுமை !!&
ஹையோ அவசரப்படாதீங்க நான் வாத்து எல்லாம் 
மேய்க்கவில்லை :)))  சில வருடங்களுக்கு முன் ஊருக்கு 
சென்றபோது எடுத்த புகைப்படங்களை பார்த்து ரசிக்க 
தந்துள்ளேன் .இவை மாஸ்கோவி வாத்து குஞ்சுகள் .
நாங்க சென்ற சமயம் வீட்டில் இருந்தவை .
என் குட்டி பொண்ணு நடை போட்டு வரும் படத்தில் 
காணப்படுபவை சாதாரண வாத்துக்கள் 
(அவுக மேய்ச்சாங்களே அதே அதே !!:))))

                                                               

மகியின் ரெசிப்பி பார்த்து செய்த வெஜ் தவா ரைஸ் .
 தோசை .உடனிருப்பது பூண்டு பொடி ,

தவா ரைசில் நான் செலரி ,காரட் , பட்டாணி ,காளான் ,உருளை 
ஆகியன சேர்த்தேன் .                                                                                     
ஒரு டேபிள் ஸ்பூன் வருத்த உளுந்து மற்றும் வறுத்த
கடலை பருப்பு /மற்றும் வறுத்த பச்சைபருப்பு தலா 
ஒரு டீஸ்பூன் மற்றும் காய்ந்த மிளகாய் ,இடித்த பூண்டு /
பெருங்காயத்தூள் இவற்றை மின் அம்மியில் அரைத்தால்
 பூண்டு பொடி ரெடி .
கவனத்தில் கொள்ள வேண்டியது எல்லா பருப்புகளையும் 
மிளகாய்சேர்த்து நன்கு அரைத்த பின் இறுதியில் இடித்த
பூண்டினை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து அரைக்கணும் .
பூண்டை இறுதியில் தான் சேர்க்க வேண்டும் .
செய்து ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம் 
என் மகள் இதை" தொட்டு தொட்டு " என்று சொல்வாள் 
தோசை இட்லியுடன் தொட்டு சாப்பிடுவதால் இந்த பெயராம் .வார இறுதியினை  அனைவரும் சந்தோஷமா கொண்டாடுங்க .
cheeeers !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


106 comments:

 1. Sharon க்கு வாழ்த்துக்கள் ஏஞ்சலின்...

  Proud Mom...

  Have a nice weekend...

  See you in ten days' time...

  ReplyDelete
 2. ஐ...நான்தான் 1ஸ்ட்ட்ட்டூ! :)))))))

  ReplyDelete
 3. MahiMay 4, 2012 12:33 PM

  ஐ...நான்தான் 1ஸ்ட்ட்ட்டூ! :)))))))
  ///// என்று சொல்லவந்தேன், அதுக்குள்ள 2வது கமென்ட் ஆகிருச்சு! இட்ஸ் ஓக்கே!

  கங்க்ராட்ஸ் Sharon! இன்னும் பல பரிசுகள் வாங்க வாழ்த்துக்கள்!

  வாத்துக் குஞ்சுகள் ச்ச்ச்ச்ச்சோஓஓஓ ச்ச்ச்ச்ச்வீட்ட்! உங்க குட்டிப்பொண்ணும் க்யூட்டா இருக்காங்க!

  சமைச்சு அசத்தறீங்க ஏஞ்சல் அக்கா! தவா புலாவ் செகப்பு;) கலரா இல்லையே? பாவ்-பாஜி மசாலா போட்டா சிவப்பா வருமே,யு.கே.ல வேறமாதிரி மசாலா விக்கறாங்களா? :) ராஜ்மா கொழம்பு,தயிர் பச்சடி..ஆஹா! அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு! :P

  தோசையும் சூப்பரா இருக்கு. "தொட்டு-தொட்டு"-வுக்கு பூண்டு எவ்வளவு போடோணும்னு சொல்லவே இல்லை நீங்க? ;)

  ReplyDelete
  Replies
  1. ஐ...நான்தான் 1ஸ்ட்ட்ட்டூ! :)))))))
   ///// என்று சொல்லவந்தேன், அதுக்குள்ள 2வது கமென்ட் ஆகிருச்சு! இட்ஸ் ஓக்கே!

   Delete
  2. Copy cat Girija,this is not fair! ;))

   Delete
  3. மீயும் ...மீயும் அப்பூடித்தான் சொல்ல வந்தேன்...:))) அதுக்குள்ள 30 தாண்டிடிச்சு:))

   Delete
  4. இப்பவாச்சும் பூஸ் ஒத்துகிட்டீங்களே உங்களுக்கு முப்பது வயசாச்சுன்னு ஹாஆஆஆஅ

   Delete
  5. //மீயும் ...மீயும் அப்பூடித்தான் சொல்ல வந்தேன்...:))) அதுக்குள்ள 30 தாண்டிடிச்சு:))//

   சனிக்கிழமையில கேட்டா நீங்க பொய் சொல்ல மாட்டீங்கன்னு தெரியும் ஹா..ஹா.. :-))

   Delete
 4. தவா புலாவ் செகப்பு;) கலரா இல்லையே? பாவ்-பாஜி மசாலா போட்டா//

  நான் ராம் தேவ் பாவ் பாஜிமசாலா தான் சேர்த்தேன் .
  அந்த ரைஸ் எங்க பக்கத்துக்கு வீட்டு பிரிட்டிஷ் அக்காவுக்கு செய்தேன்
  எனவே காரம் குறைத்தே செய்தேன்.
  அந்த கார்லிக் கிளோவ்ஸ் அதை நான் எழுதும்போது சிரித்து கொண்டே எழுதினேன் .பூஸை நான் பூண்டுக்கு பல் இருக்கான்னு டவுட் கேட்டு நேத்து பாடு படுத்திட்டேன் .இப்ப நானே பூண்டு பல் என்று எழுதினா பூஸ் HA HAA HAA ENDRU சிரிப்பாங்க LOL

  ReplyDelete
  Replies
  1. //பூஸை நான் பூண்டுக்கு பல் இருக்கான்னு டவுட் கேட்டு நேத்து பாடு படுத்திட்டேன்//


   அந்த சோகத்துல தான் பூஸ் இன்னிக்கு வாக் போயிட்டு அந்த ஆத்தங்கரையிலையே உக்கார்ந்து பீலிங் போல இருக்கு ஆளையே காணோம்?? வரீங்களா அந்த தவா ரைஸ் எடுத்திகிட்டு ஒரு எட்டு போய் பார்த்திட்டு வரலாம்? தவா ரைஸ் எதுக்கா அப்புறம் இவ்ளோ தூரம் போறோம் நம்ம ரெண்டு பேருக்கும் பசிக்காது அதுக்குத்தான் அந்த பெஞ்சில் இருந்து சாப்பிட்டு வரலாம் என்ன சொல்லுறீங்க ?

   Delete
  2. இதில வேற பெரும்சொதனை இன்னிக்கு பூசால் என் ப்ளாக்ல நுழைய முடியல ,ஏதோ மால்வேர் என்று என் ப்ளாக் வேற அவங்கள பயம் காட்டி இருக்கு :)))))))ஆன ஜெய் கலை எல்லாம் என்டர் செய்தாங்க :))))))

   Delete
  3. /ராம் தேவ் பாவ் பாஜிமசாலா/ may be that's the reason! I use MDH pav-bhaji masala!
   //அந்த ரைஸ் எங்க பக்கத்துக்கு வீட்டு பிரிட்டிஷ் அக்காவுக்கு செய்தேன்
   எனவே காரம் குறைத்தே செய்தேன்.//ஆஹா,அவிங்களுக்கு இதுவே காஆஆஆரமா இருந்திருக்குமே! ;)))

   Delete
  4. இப்போ படத்தை நீக்கியதும் சரியாகிட்டுது அஞ்சு, ஆனா சொமெண்ட் பப்ளிஸ் ஆக கொஞ்சம் ரைம் ஆகுது முன்பு அப்படியில்லை.

   Delete
  5. En SamaiyalMay 4, 2012 03:17 PM
   //பூஸை நான் பூண்டுக்கு பல் இருக்கான்னு டவுட் கேட்டு நேத்து பாடு படுத்திட்டேன்//


   அந்த சோகத்துல தான் பூஸ் இன்னிக்கு வாக் போயிட்டு அந்த ஆத்தங்கரையிலையே உக்கார்ந்து பீலிங் போல இருக்கு ஆளையே காணோம்?? வரீங்களா அந்த தவா ரைஸ் எடுத்திகிட்டு ஒரு எட்டு போய் பார்த்திட்டு வரலாம்?/////

   கீரிக்கு என்னில எம்பூட்டு அக்கறை?:)) புல்லா அரிச்சிட்டுது:)))... அரிச்சு அரிச்சு முழுவதையும் படிச்சேனா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) திட்டமிட்ட சதி... கூட்டுச்சதி....

   கூப்பிடுங்க அவரை.. இப்பவே நான் கேள்வி கேட்கோனும்... நான் ஆண்டவனைச் சொன்னேனாக்கும்:)))..

   ஆண்டவனைப் பார்க்கனும்..... அவருக்கு தவா ரைஸ் ஊட்டனும்.... அப்ப நான் கேள்வி கேக்கோணும்....

   இதைப் பார்த்தால் பழைய ஞாபகத்தில எங்கட பச்சைப்பூப் பறந்து வருவார் பாருங்கோஓஓஓஓ:))))

   Delete
  6. இன்னிக்கு சைனீஸ் பூண்டு வாங்கி வந்தேனா அதில clovesஇல்லவேயில்ல
   பூஸ் நினைவுதான் வந்தது

   Delete
  7. //இதைப் பார்த்தால் பழைய ஞாபகத்தில எங்கட பச்சைப்பூப் பறந்து வருவார் பாருங்கோஓஓஓஓ:))))//

   ஹி..ஹி... :-)))))))))

   Delete
  8. முன்பு வந்தேன் ஆனா பிளாக் உள்ளேயே வர விடல :-( அப்படியே எஸ்கேப் இப்போ ஓகே :-))))

   Delete
 5. ராஜ்மா கொழம்பு,தயிர் பச்சடி../

  .மகி !!!!!!!!!
  உங்க கண் செம ஷார்ப் .

  ReplyDelete
  Replies
  1. //மகி !!!!!!!!!
   உங்க கண் செம ஷார்ப் //   இத நானும் நெனைச்சு ஆச்சர்ய பட்டு இருக்கேன்

   Delete
  2. ஹிஹிஹி! ரொம்ப டாங்க்ஸ் ஏஞ்சல் அக்கா & கிரிஜா! ஒரு ஃபோட்டோவைப் பார்க்கணும்னா நல்ல்ல்ல்லா ரசிச்சுப் பார்க்கணும், அப்ப படத்தில் இருக்கும் எதுவுமே;) மிஸ் ஆகாது,அந்த மஞ்சக் கலர் ஸ்மைலி உட்பட!

   BTW,ஏஞ்சல் அக்கா, எதுக்கு சம்பந்தமில்லாம தட்டுல ஒரு ஸ்மைலி?? ;))))

   Delete
  3. தாங்ங்ங்ங்ங்க முடியல்லப்பா:)))

   Delete
  4. BTW,ஏஞ்சல் அக்கா, எதுக்கு சம்பந்தமில்லாம தட்டுல ஒரு ஸ்மைலி?? ;))))//

   கொஞ்சம் கிட்ட வாங்க ஒரு சீக்ரட் சொல்றேன் ,,,இப்பதான் நான் போட்டோ எடிட்டிங் கொலாஜ் எல்லாம் செய்றேன் சும்மா ட்ரையல் செய்தேன்

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. ஹா.ஹா..ஹா... உந்தப் பயம் உந்தப் பயம் எப்பவும் இருக்கட்டும்.. பூஸுக்குப் பயந்துதானே போட்ட கொமெண்ட்டை அழிச்சவ வான்ஸ்ஸ்ஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))...


   இப்பூடி அப்பப்ப எதையாவது சொல்லியே இமாவை.. சே.. என்னப்பா இது:) இமேஜை பாதுகாத்துக்கொளோனும்:)))

   Delete
  2. பூஸ் அதுக்குள்ளே அவங்க ’நங்’ ஒன்னு போட்டுட்டாங்களோ என்னவோ ஹா...ஹா.. :-)

   Delete
 7. very cute craft. Congrats. Will be back later. I have to COOK.

  ReplyDelete
  Replies
  1. What are you cooking Vaans? Tawa Rice?

   Delete
 8. ஷரனுக்கு வாழ்த்துக்கள். முன்னமே சொன்ன மாதிரிதான். குட்டி பொண்ணு அம்மாவே மிஞ்சிடுவாங்க போல இருக்கே?

  ReplyDelete
 9. சமையல் எல்லாம் சூப்பர் ஆ அசத்துறீங்க அஞ்சு. மகி சொன்னது போல அப்புடியே சாப்புடலாம் போல இருக்கு. தொட்டு தொட்டு எங்க வீட்டுல நான் மட்டும் தான் ஜோ ஜோன்னு :)) சேர்த்து சாப்பிடுவேன் அதனாலே ஒன்லி ஷக்தி இட்லி பொடி தான். வீட்டுல எல்லாம் அரைக்க நான் ஒசிச்சது கூட இல்லே. நீங்க தயங்காம சமையல் குறிப்புகள் போடலாம் அஞ்சு

  ReplyDelete
  Replies
  1. வாங்க கிரிஜா ))) வெல்கம் .
   நீங்க சக்தி பூண்டு சாத பொடி டேஸ்ட் செய்தீங்களா .சூப்பர்ப்பா !!!
   பாக்கெட் பின்பக்கம் இந்த இன்க்றேடியன்ஸ் இருந்ததா அப்புறம் இன்னொரு தோழியும் இப்படிய அரைக்க சொன்னாங்க .
   இப்ப எங்க வீட்ல அடிக்கடி தொட்டு தொட்டு சாப்பிடறோம்

   Delete
  2. //தயங்காம சமையல் குறிப்புகள் போடலாம் அஞ்சு//


   பூஸ் மட்டும் இதை பார்த்தா அவ்ளோதான் :)))))))

   Delete
  3. பூஸ் மட்டும் இதை பார்த்தா அவ்ளோதான்// என்ன இப்படி பயந்துட்டு! be brave ya ம்ம்...

   Delete
  4. கிரி அக்கவின்ர டீளிங்கும் அஞ்சு அக்கவின்ற டீளிங்கும் சூப்பர்...


   இனிமேல் பாருங்க எங்க கம்மெண்டை

   Delete
  5. சமையல் எல்லாம் சூப்பர் ஆ அசத்துறீங்க அதிரா அக்கா ... அப்புடியே சாப்புடலாம் போல இருக்கு. நீங்க தயங்காம சமையல் குறிப்புகள் போடலாம் அதிரா அக்கா

   Delete
  6. கொஞ்சம் பாருங்க வானதி பூஸ் சொல்லித்தருவதை அப்படியே குட்டிபூஸ் எழுதிட்டு போயிருக்கு .

   Delete
  7. ஹா..ஹா... ஃபுல் டிரைண்ட் :-))

   Delete
 10. அஞ்சு, சூப்பரா இருக்கு. உங்கள் மகளுக்கு உங்களின் திறமைகள் அப்படியே இருக்கு. இன்னும் வளர இந்த அக்காவின் ( பூஸார் முறைக்க வாணாம் ), மற்றும் அதிரா, கலை க்ரான்ட்மாக்களின் ஆசிகள்.
  மான் அப்படியே தத்ரூபமா வந்திருக்கு.
  கிரி, தவா ரைஸ் இல்லை. ரைஸ் குக்கர் ரைஸ். எப்பூடி???

  ReplyDelete
  Replies
  1. //தவா ரைஸ் இல்லை. ரைஸ் குக்கர் ரைஸ். எப்பூடி???//வான்ஸ்,வரவர செம ஃபார்ம்ல இருக்கறீங்க போல! ஒரே எதுகை-மோனையா போட்டுத் தாக்கறீங்க! :))))))

   Delete
  2. வான்ஸ்ஸ்ஸ் அக்கா.. அல்லது வான்ஸ்ஸ் யக்கோவ்:)) ஐஐஐ இதுவும் நலாத்தான் இருக்கே:))

   Delete
 11. ஷாரனிடம் என் வாழ்த்துகளைத் தெரிவியுங்கள் ஏஞ்சலின். அந்த மான் செய்ய அவ்வளவு பொறுமை தேவைப்பட்டிருக்கும். அழகா செய்திருக்காங்க.

  குட்டி வாத்துக்குஞ்சுகள் க்யூட்டா இருக்கு, குட்டிப்பாப்பாவும் கூட இருப்பதில் கொள்ளை அழகு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .செய்ய மூன்று நாட்கள் எடுத்தது .
   குட்டி வாத்துக்குஞ்சுகள்..they are muscovy ducklings .நாங்க ஊருக்கு சென்ற அன்று முட்டையில் இருந்து ஒவ்வொன்றா வந்தது கண் கொள்ளா காட்சி

   Delete
 12. முதலில் என் வாழ்த்துக்கள்
  பிறகு சந்தோசங்கள்
  இன்னும் பல பரிசுகள் விருதுகள் பெற்றுவர வேண்டுகிறேன்
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 13. பொடி ரெசிப்பி நன்றி இன்றே பரிசோதனை ஆரம்பம் .
  tips easy and useful thank you anju akka.

  ReplyDelete
  Replies
  1. அடடா இது சிவாவோ? ஏன் இண்டைக்கு பார்ஷல் கேட்காம ரொம்ப அமைதியாகப் போறார்? ஒருஏளை திருந்திட்டாரோ? என்னைப்போலவே:))))

   Delete
  2. tips easy and useful thank you anju akka...

   welcome thambi .

   //ஒருஏளை திருந்திட்டாரோ? என்னைப்போலவே:))))//
   garrrrrrrr

   Delete
 14. நோ நோ நோ நோ நோ

  மீ மீ மீ மீ தான் 1ஸ்ட்ட்ட்டூ!

  ReplyDelete
 15. எங்க மகளின் கைவண்ணம் மூன்றாவது பரிசுக்கு
  தேர்வாகியிருந்தது .
  நியூஸ் பேப்பரில் எல்லாம் அவள் பெயர் வந்திருந்தது

  மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள் .. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 16. உங்கள் மகள் Sharon க்கு வாழ்த்துகக்ள்.மேலும் பற்பல பரிசுகளும் விருதுகளும் கிடைக்க வாழ்த்துகக்ள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி ஸாதிகா

   Delete
 17. தோசை இட்லியுடன் தொட்டு சாப்பிடுவதால் இந்த பெயராம் .//

  ருசியான குறிப்பிற்கு நன்றிகள்.

  ReplyDelete
 18. மீ ரிரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..ஒருத்தரும் என்னைப் பற்றிக் கதைக்கேக்கைத்தானே இங்கின:))..

  ReplyDelete
 19. //சில மாதங்களுக்கு முன்பு எங்கள் மகள் ஒரு போட்டியில்
  கலந்து கொள்கிறாள் என்று கூறியிருந்தேன் அல்லவா .//

  நல்லா நினைவிருக்கு அஞ்சு, மூன்றாமிடத்துக்கு வந்தமைக்கு முதலில் என் வாழ்த்துக்கள்...

  Congratulations Sharon.. keep it up.

  ஆனா அஞ்சு உண்மையிலயே அந்த மானை நான் ரொம்பவும் ரசிச்சேன்.. அதுக்கு முதல் பரிசுதான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அவ்வளவு சூப்பராக இருந்தது/இருக்கு.

  ஆனா இதுக்கு மேல 1ம், 2ம் இடத்துக்காக படங்களையும் எங்களுக்குப் படமெடுத்துக் காடியிருக்கலாம் மிஸ் பண்ணிட்டீங்க.

  ReplyDelete
  Replies
  1. அந்த பேப்பர்ல முதலிடம் வந்தா பெண் படம் மட்டும் அவளின் ஆர்ட்டுடன்வந்திருக்கு .ரெண்டாவது வந்த பெண்ணின் ஓவியமும் பேப்பர்ல வரல்லை பெயர் மட்டுமே வந்திருக்கு .நான் அப்போ இங்கிருந்திருந்தேன்னா நிகழ்வை வீடியோவே செய்திருப்பேன் .
   என் கணவர் ரொம்ப பயந்த சுபாவம், போட்டோ கூட எடுக்கலைன்னா பாருங்களேன்

   Delete
 20. எதுக்கு பேப்பரில் படம் போடுவதை கணவர் மறுத்தார்... அதொன்றும் பயமில்லை அஞ்சு இங்கு.. விட்டிருக்கலாமெல்லோ.... இங்கு நாங்கள் எப்பவுமே யெச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)) எண்டுதான் சொல்வோம்... பிள்ளைகள் இருவரின் படங்களும்.. ஏதோ ஒரு சாதனை, அல்லது குரூப் வேர்க் இப்படி பேப்பரில் வந்துகொண்டே இருக்கும், சில சமயம் எமக்குத் தெரியாது, ஆனா ஹொஸ்பிட்டலில் எப்படியும் சொல்லுவார்கள் படம் பார்த்தோம் வந்திருக்கென, உடனே வாங்கிடுவோம்.

  1ம் வகுப்பிலிருந்து இது தொடருது, இப்போ அந்த சின்ன வயதில் நியூஸ் பேப்பரில் வந்த படம் என எடுத்து வைத்து ஆசையாக பார்க்கிறார்கள் அவர்கள்.

  சரன் இம்முறை ஹை ஸ்கூல் போகிறாவோ அல்லது அங்கு மிடில் ஸ்கூல் சிஸ்டமோ? இங்கு டிரெக்ட்டாக் ஹைஸ்கூல்தான்.

  ReplyDelete
  Replies
  1. நான் அப்ப ஊரில் இருந்திருந்தா சொல்லியிருப்பேன் .நௌ டூ லேட் .
   இந்த செப்டம்பர் ஹையர் செகண்டரி செல்கிறாள் இன்னும் ஒரு வாரத்தில் sats எக்ஸாம் எழுதறா

   Delete
 21. உங்கட வீட்டில முட்டை வச்சு வாத்துக் குஞ்சு பொரிச்சதோ? சூப்பர்... பஞ்சுபோல இருக்கு.... முன்பு கோழிமுட்டை வச்சு குஞ்சு பொரிக்கும் வீட்டில் காலையில கீ..கீ... எனச் சத்தம் கேக்கும்.. கண் முழிச்சதும்.. ஓஓஓஓடிப்போய்ப் பார்ப்போம்.... மெத்துமெத்தென கண்களை உருட்டிக்கொண்டு நிற்பினம்....

  ஆனா திறந்துவிடும்போது கண் முன்னாலேயே சிலசமயம் பிராந்து லபக்கென தூக்கிச் செல்லும், தாய்க்கோழி சற்றுத்தூரம் பறந்து கொத்தி ஆர்ப்பரிக்கும்.... எமக்கு நெஞ்செல்லாம் அடைத்து உயிர்போய் வருவதுபோல இருக்கும்....

  ReplyDelete
  Replies
  1. எங்க வீடுfarm house மாதிரி அதிரா .நிறைய கோழி இருக்கும் .திடீரென்று காணாம போகும் இருபது நாட்கள் கழித்து பத்து பதினைந்து குஞ்சுகளோடு வரும் .
   அதுவும் சில கோழிகள் வாத்து முட்டையை அடைகாத்து பொரித்தபின் வாத்து குஞ்சுகளை விநோதமமா பார்க்கும் அப்புறம் அவற்றையும் சேர்த்து கொண்டு உலா வரும் .அதெல்லாம் மறக்கமுடியா நினைவுகள்

   Delete
  2. //உங்கட வீட்டில முட்டை வச்சு வாத்துக் குஞ்சு பொரிச்சதோ? சூப்பர்... பஞ்சுபோல இருக்கு.... முன்பு கோழிமுட்டை வச்சு குஞ்சு பொரிக்கும் வீட்டில் காலையில கீ..கீ... எனச் சத்தம் கேக்கும்.. கண் முழிச்சதும்.. ஓஓஓஓடிப்போய்ப் பார்ப்போம்.... மெத்துமெத்தென கண்களை உருட்டிக்கொண்டு நிற்பினம்...// எனக்கு ஏகபட்ட டவுட்டா வருது எதை கேக்குறது அவ்வ்வ்வ்வ் :-)))

   Delete
 22. வெடி சொடி... எனக்குத் தவா ரைஸ் வாணாம்.. அதுக்குள்ள ஆடு கத்தும் சத்தமே இல்லை:))).. அதை கீரிக்கும் மகிக்கும் வான்ஸ்க்கும் கூட்டிக்குறைசுப் பிரிச்சுக் கொடுத்திடுங்க:)))..

  பாருங்க, ஆடு கத்திக் கேட்டிருந்தா, பச்சை ரோசா ஓடிவந்திருப்பார் பங்கு கேட்டு:))

  ReplyDelete
  Replies
  1. அதானே ...அந்த ரைஸ் உள்ளே வெளியே ஒரு அ கொ மு கூட இல்லை :-)))

   Delete
 23. //ஒரு டேபிள் ஸ்பூன் வருத்த உளுந்து மற்றும் வறுத்த
  கடலை பருப்பு /மற்றும் ///

  ஆஆஆஆஆஅ.றீச்சர் ஓடிவாங்க.. அஞ்சு ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டா.... “வருத்த”ம் வந்த உழுந்தைச் சமைக்கலாமோ? அவ்வ்வ்வ்வ்வ்:))))).

  எங்கே என் சிஷ்யையை இங்கின காணவில்லையே..... மிகுதியை அவ தொடர்வா மீ எஸ்கேப்ப்ப்ப்.. வெளியில சூப்பர் வெயில் தெரியுது இன்னும் திறந்து பார்க்கேல்லை கேர்ட்டினை நான்:))

  ReplyDelete
 24. ஷரோன் செல்லத்துக்கு வாழ்த்துக்கள்,ஒவியம் மிக அழகு...!! இட்லி பொடி பெயர் சூப்பர்ர்ர்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேனகா ....வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .
   இட்லி பொடி நல்ல டேஸ்ட் .அதே டேஸ்டில் தான் சக்தி பூண்டு சாதபொடியும் இருக்கும் .உங்க அரைத்த லைம் ஊறுகாயும் செய்திட்டேன் விரைவில் பதிவிடுகிறேன்

   Delete
 25. ஷரோன் குட்டி செல்லத்துக்கு என்னோட வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. எங்க அஞ்சு அக்கா மாறிஎ ஷரோன் இருந்துடுவாலோ எண்டு பயப்பட்டிணன்...

  ஷரோன் ஐ மாமா வைப் போலவே புத்திசாலி பொண்ணா படச்சிட்ட முருகா!

  முருகா முருகா இதுக்க்காய் வள்ளி தேவானைக்கு வடை மாலை சாத்துரன் முருகா ...

  ReplyDelete
  Replies
  1. யப்பா யப்பா !!!!!!!!! இது ஆண்டவனுக்கே அடுக்காது ரெண்டு பேருமா சேர்ந்து ஆவ்வ்வ்வவ்வ்வ்வவ் இப்படி ஏமாத்தகூடாது
   வடை மாலையாம் இருங்க இருங்க ...................
   ஆஞ்சநேயருக்கு தானே வடை மாலை சாத்துவாங்க:)))))))))))))))))௦

   Delete
  2. செயின் நெக்லஸா இருந்தா நான் பங்கு கேட்டுடுவேன்னு வடையாம் வடை அவ்வ்வ்வ் :-))))

   Delete
 27. ஹையோ அவசரப்படாதீங்க நான் வாத்து எல்லாம்
  மேய்க்கவில்லை :))) ////


  வாத்து தான் உங்களை மேய்த்து இருக்கும் ..பாவம் வாத்து

  ReplyDelete
 28. வரலாற்று புகழ் மிக்க சம்பவமல்லவா !!!!!!!!!!!!!!!!!!!!!!!////


  அப்பனா அடுத்த வருஷம் ஹிஸ்டரி புக் ள என் பெயர் கண்டிப்பா வரும்ல ....

  எல்லாப் புகழும் மீ குருவுக்கே

  ReplyDelete
  Replies
  1. யூ மீன் ஹிஸ்டரி :)))))))அஜித் குமார் நடித்த படம் :)))
   ///எல்லாப் புகழும் மீ குருவுக்கே//
   awwwwwwwww garrrrrrrr

   Delete
  2. இதுக்குத் தான் மழை பெய்யும் போதாவது பாட சாலை பக்கம் போகனுமேண்டு சொல்வாங்க ...

   Delete
 29. தவா ரைசில் நான் செலரி ,காரட் , பட்டாணி ,காளான் ,உருளை
  ஆகியன சேர்த்தேன் .////


  எல்லாம் நல்லாத்தான் சேர்த்ததா சொல்லுரிங்கள் அக்கா ..பார்க்க நல்லத் தான் இருக்கு ...ஆனா ஆரு ரிஸ்க் எடுத்து சாப்பிட ரெடி

  ReplyDelete
  Replies
  1. என்றாவது ஒருநாள் என்கிட்டே நீங்க மாட்டாம போக மாட்டீங்க

   Delete
  2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...சரி விடுங்கள் அக்கா இதுக்கு போய் டென்ஷன் ஆகி இப்புடிலாம் சாபம் கொடுக்கதிங்கள் ...பாவமல்லோ நானு

   Delete
 30. எங்கே என் சிஷ்யையை இங்கின காணவில்லையே..... மிகுதியை அவ தொடர்வா மீ எஸ்கேப்ப்ப்ப்.. வெளியில சூப்பர் வெயில் தெரியுது இன்னும் திறந்து பார்க்கேல்லை கேர்ட்டினை நான்:))/////////

  இதோ வந்துப் போட்டேன் குருவே !!
  என்னது ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆ ...டீச்சர் சீக்கிரம் ஓடி வாங்கள் ...உங்கள் கருக்கு மட்டைக்கு நிறைய வேலை வைத்து இருக்கினம் ...


  ப்ளீஸ் டீச்சர் அஞ்சு அக்காவை ரொம்ப நேரம் அடிக்கதிங்கள் ...கொஞ்சம் மட்டும் அடித்துவிட்டு முட்டிக் கால் போடச் சொல்லுங்கள் பென்ச் மேல் ஏறி நிக்கச் சொல்லுங்கள் அப்புறம் அசைன்மென்ட் நிறைய நிறைய கொடுங்கள் ரிச்சேர்

  ReplyDelete
  Replies
  1. குருவும் சிஷ்யையும் மிஸ்டேக்கை கண்டுபிடிக்கரீங்களான்னு
   டெஸ்ட் டெஸ்ட் டெஸ்ட் வைத்தேன் .
   எல்லாம் என் நேரம் :))))))))))))))))))
   எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு

   Delete
  2. குருவே அஞ்சு அக்கா எப்புடி சமாளிக்கிறாங்க பாருங்க ....


   கிரேட் அஞ்சு அக்கா ...


   குரு வோட ட்ரைனிங் கிளாஸ் நல்லா வொர்க் அவுட் ஆகுது ....

   Delete
 31. எங்க மகளின் கைவண்ணம் மூன்றாவது பரிசுக்கு
  தேர்வாகியிருந்தது.

  நியூஸ் பேப்பரில் எல்லாம் அவள் பெயர் வந்திருந்தது

  மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள் .. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கோபு சார்

   Delete
 32. வணக்கம் அஞ்சு மேம்!!!பரிசு பெற்ற குட்டிக்கு வாழ்த்துக்கள்!அதென்ன குட்டிக்கு தலையில் இரண்டு கொம்பு முளைத்திருக்கிறது,ஹ!ஹ!ஹா!!!!

  ReplyDelete
  Replies
  1. ஹைஈ மாமா ...

   வாங்கோ மாமா ...

   வரும்போது கருக்கு மட்டை எடுத்துட்டு வாங்கள் ...இங்க நிறைய பேர் ஸ்பெல்லிங் மிஸ்டேக்....

   Delete
 33. அம்மா அப்போ என் மகளுக்கு ரெண்டு குடுமி போட்டு விட்டாங்க .
  இப்ப கொம்பு ponytail ஆக மாறிடிச்சு :))
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா .

  ReplyDelete
 34. கலை.......

  ஹைஈ மாமா ...

  வாங்கோ மாமா ...

  வரும்போது கருக்கு மட்டை எடுத்துட்டு வாங்கள் ...இங்க நிறைய பேர் ஸ்பெல்லிங் மிஸ்டேக்....///வந்துட்டேன்!பெரிய பூஸ்,சின்ன பூஸ்,அஞ்சு மேம் எல்லாருக்கும் அடி போடணும்,எங்கே என் மூத்தவ?கொண்டு வாம்மா கருக்கு மட்டைய,ஹ!ஹ!ஹா!!!!!!

  ReplyDelete
  Replies
  1. கொஞ்ச நாள் நான் லீவில் இருப்பேன் அதுவரைக்கும் கலைக்குட்டி உங்க பொறுப்பு அண்ணா .
   உங்க மருமக நான் இல்லாததால் ஜாலி ஜாலின்னு குதிக்ககூடாது சொல்லிட்டேன் :))))))))))

   Delete
 35. மிக நல்ல பதிவு angelin. உங்க மகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
  படங்கள் அழகாக இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமா

   Delete
 36. குட்டி ஏஞ்சலுக்கு என் அன்பு வாழ்த்துகள்.கடைசியா வந்திருக்கேன்னு தோசை தராம விடக்கூடாது.பூண்டுப் பொடியும் தோசையும் ..... நினைச்சாலே வாயூறுது.

  ஆகா....கருவாச்சி வாத்துக்காரியான கதை இப்பிடி காத்தில பறக்குதே.காக்காஆஆஆஆஆஆ !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா.
   //கருவாச்சி வாத்துக்காரியான கதை இப்பிடி காத்தில பறக்குதே//:))))))))))))))))

   Delete
 37. மீன் குஞ்சுக்கு நீந்த சொல்லித் தர வேண்டுமா என்ன?
  மிக மிக அழகாக வரைந்துள்ள குட்டி ஏஞ்சலுக்கு
  எனது மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .

   Delete
 38. வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் .
  என் மகளுக்கு எக்ஸாம் மற்றும் எனக்கும் சில அலுவல்களின் நிமித்தம்
  சில காலம் வலைப்பக்கம் வர இயலாது .நேரம் கிடைக்கும்போது கண்டிப்பா அனைவரையும் சந்திக்கிறேன் .
  BYE BYE :))))))))))

  ReplyDelete
 39. வாழ்த்துக்கள் ...வாழ்த்துக்கள்...இன்னும் பல பரிசுகள் வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! :-)

  ReplyDelete
 40. இது போல பல பரிசுகளும் விருதுகளும் உங்கள் மகளுக்கு எதிர்காலத்தில் வந்தடைய மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 41. ஏஜ்ஜலின் ரொம்ப ஸந்தோஷமாக இருந்தது. உன் பெண் பெயர் ஷரோன். பரிசு பெற்றதற்கு ஷரோனிற்கும் உனக்கும் என்
  பாராட்டுகள். அடிக்கடி தொடர்பு கொள்ள நினைக்கிறேன். உனக்கு வரும் கமென்ட்ஸ் படித்தாலே ரொம்ப ஸந்தோஷமாகவும்,எல்லோருடனும் பேசினாற்போல த்ருப்தியாகவும் இருக்கு. அன்புடன் சொல்லுகிறேன்

  ReplyDelete
 42. ஆஹா சூப்பரானா விருந்துடன் , உஙக்ள் மகளையும் பார்த்தாச்சு
  இவ்வளோ சின்ன பொண்ணா அழகான ககிராஃப்ட் வொர்க் செய்வது

  நேரம் கிடைக்க்கும் போது எப்படியாவது இங்கிருந்து ஒரு கைவினையாவது கத்துக்கனும்

  ReplyDelete
 43. காலை வணக்கம் angelin!!!பிள்ளைகள் கல்வியே பெற்றோருக்கு முதன்மையானது.மகள் பரீட்சை நன்றாக எழுதி,நல்ல பெறுபேறு பெற ஆண்டவன் துணை இருப்பான்.வாழ்த்துக்கள் முன்கூட்டியே!!!சில நாடுகளில் அன்னையர் தினமாம்,வாழ்த்துக்கள் உங்களுக்கும் !!!

  ReplyDelete
 44. தங்கள் மகளுக்கு வாழ்த்துகள் மேலும் பல பரிசுகள் பெறட்டும். சிறந்து வாழட்டும் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 45. அந்ஜூஊஊஊஊஊஊ அக்கா ஆஆஆஆஅ செல்லமே ...உங்களுடன் விருதை பகிர்ந்துள்ளேன் ...வாங்கிக் கொண்டால் மீ ரொம்ப ஜாலி ஆவேன்

  ReplyDelete
 46. முதல் படம் தானா மகள் படம்...

  மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்

  ReplyDelete
 47. வாழ்த்துக்கள் ஷரோன். மான் குட்டி அழகாக இருக்கு.
  சிம்பிள் அண்ட் சுவீட்டாக குறிப்புகளை எழுதியிருக்கிறீங்க அஞ்சு. அதில் பச்சைப்பருப்பு என்பது என்ன?.

  ReplyDelete
 48. வாங்க அம்முலு .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .பச்சை பருப்பு
  பாசி பருப்பு /moongdhal

  ReplyDelete
 49. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  www.ChiCha.in

  ReplyDelete