அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/28/12

ஜில் ஜில்!!! ஜிகர்தண்டா மற்றும் கொறிக்க Kadachakka - கடச்சக்க /Bread fruit சிப்ஸ் :))
ஜிகர்தாண்டா ......

                                                                          

முருகன் இட்லிகடையில் இது ரொம்ப பிரபலம் .
ஃபலூடா செய்யும்போது கடல் பாசி மற்றும் சப்ஜா விதைகளை
சேர்ப்பது போல இதற்கு பாதாம் பிசின் சேர்க்க வேண்டும் .

தேவையான பொருட்கள் 

காய்ச்சு குளிரூட்டியில் வைத்த பால் ..... ஒரு கப் 
விருப்பமான எசன்ஸ் ..(இனிப்பு அளவு ஏற்றார்போல சேர்க்கணும்) 
 நான் ரோஸ் எசன்ஸ் சேர்த்தேன் 
FRESH CREAM/ OR பால் காய்த்து வைத்த பின் ஒரு திக் லேயர்
ஆடை இருக்கும் அதை கவனமா எடுத்து ஒரு சிறு கிண்ணத்தில் 
வைச்சுக்கோங்க 
ஃபிரெஷ் க்ரீமுக்கு பதில் இதையே பயன்படுத்தலாம் 
பாதாம் பிசின் ../GOND KATIRA/இதை குறைந்தது 
எட்டு மணி நேரம்ஊற வைக்கணும் .

ஊற வைக்கு முன்
                                                  BOTH (FROM GOOGLE IMAGES .THANKS )
நான் எடுத்த படங்கள் க்ளியரா வரவில்லை
 "ஊறிய பின் இப்படி ஜெல்லி போல இருக்கும்"
                                                                             
ஊற வைக்கு முன் கழுவவும் சிறு மரத்துகள்கள் இருக்கலாம் .
வெனிலா சுவை ஐஸ் க்ரீம் ரெண்டு ஸ்கூப் .
ஊறிய பின் இப்படி ஜெல்லி போல இருக்கும் 
                                                                               ஒரு கோப்பையில் முதலில் ஊற வைத்த பாதாம் பிசின் 
ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து வைக்கவும் அதன் மேலேரெண்டு 
ஸ்பூன் ரோஸ் எசன்ஸ் ஊற்றுங்க அதன் மேல் சில்லுன்னு 
இருக்கும்  பாலை சேர்க்கவும் .
அதற்கு மேல் ரெண்டு ஸ்கூப் vanilla ஐஸை போடுங்க /
ஐஸை போட்டு அதன் மீதும் ரோஸ் எசன்ஸை ஊற்றலாம் 
 ஐஸுக்கு மேலே ஏற்க்கனவே எடுத்து வைத்திருக்கும் 
பால் ஆடை அல்லது FRESH CREAM சிறிது எடுத்து டாப்பிங் 
மாதிரி விடவும் 
THEN பெரிய ஸ்ட்ரா போட்டு குடிங்க 
அவ்ளவுதான் இதுதான் ஜிகர்தாண்டா 
                                                                            

கடச்சக்க (Bread fruit) /ஈர பலாக்காய் CHIPS                                                                                 

                                                              (thanks google )

இது கேரளா ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை பக்கம் ரொம்ப 
பிரபலமான  உணவு .
இங்கே மார்க்கெட்டில் வாங்கியது .
இதில் நிறைய வெரைட்டி ரெசிப்பி இருக்கு ஆனா என் மகளுக்கும்
கணவருக்கும் ரொம்ப பிடித்தது இந்த சிப்ஸ் 


                                                                             

                                                                            

ஈரப்பலாக்காயை  மெல்லியதாக 
வெட்டிக்கொள்ளவும் 


எண்ணெய் சூடானதும் நேந்திரங்கா சிப்ஸ் பொரிப்பதுபோல 
நன்கு பொரித்து எடுக்கவும் .சிறு கிண்ணத்தில் மஞ்சள் 
தூள் மற்றும் நீர் andஉப்பு சேர்த்து பொரிக்கும்போதே 
எண்ணையில் விடலாம் .

நான் அப்படியெல்லாம் செய்யல ..பயம்தான் :)))
பொரித்து எடுத்த பின் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை மற்றும் உப்பு 
தேவையான அளவு சேர்த்து குலுக்கி பிரட்டி எடுத்தேன் .
மேசையில் வைத்து கிச்சனில் போய் வரதுக்குள்ள awwwww
காணோம் .:))))))))


இவர் எங்க பக்கத்துக்கு வீட்டு பெண்ணோட pet ஜேக்கப்
வெயிலுக்கு வெளியில் வந்தார் .அப்ப படம் எடுத்தேன் 
                                                                          
Cheeeeeeeeers !!!!!!!!!!!!!
மீண்டும் சந்திப்போம் :))))))))123 comments:

 1. வெயிலுக்கு இதமான ஜிகர்தண்டா. பார்த்தாலே நாவூறுது. பகிர்வுக்கு நன்றி ஏஞ்சலின். பலாப்பழத்தை வெட்டுமுன் செய்வது போல் இதற்கும் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு வெட்டவேண்டுமா? நான் இதுவரை செய்ததில்லை. அதனால் சந்தேகம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க !! கீதா வாங்க
   வெட்டும்போது பெரிசா கையில் ஒன்றும் ஒட்டவில்லை .இது ஆப்பிரிக்க வகை .
   எதற்கும் நீங்க கொஞ்சம் எண்ணெய் தடவியே வெட்டுங்க .

   Delete
 2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))) ஜஸ்ட்டு மிஸ்ட்டாகிட்டனே:((((((

  ReplyDelete
  Replies
  1. மியாவ் நேற்றே உங்க பின்னூட்டத்தில் உங்களுக்கு கொடுத்தேன் நீங்க தான் படத்தை பார்க்கலை

   Delete
  2. இல்ல நீங்க ஒரு படம் போட்டிருந்தீங்க, அது வரவில்லை, நான் லிங்கைக் கொப்பி பண்ணி கூகிளில் தேடினேன், அப்பவும் படம் வரவில்லை, அதனால விட்டுவிட்டேன்

   Delete
  3. ஆனா இன்னமும் எனக்கு தெரியுதே பேஜ் refresh செய்தா வரும்

   Delete
  4. என் பக்கத்தைப் பற்றித்தான் நான் கதைக்கிறேன், நேற்று நீங்க போட்ட படம். இன்றும் போட்டீங்களோ? நான் இன்னும் என் பக்கம் போகவில்லை, உங்கள் தலைப்பு மேலே கண்டேன்ன்ன் ஒரே ஓட்டத்தில இங்கு வந்து குதித்தேன்ன்ன்....

   நல்லவேளை பப்பூ நித்திரைபோல:))... இனி வரட்டும்:).. பாவம் அஞ்சு ஒரு:)) சிப்ஸ் ஆவது ஒளிச்சு வச்சுக் கொடுத்திடுங்க:))

   Delete
  5. அவருக்கு ஸ்பெஷல் எடுத்து வச்சிருக்கேன் ஏற்க்கனவே
   குண்டூர் மிளகா கொடுத்து பாவம் :))))))))

   Delete
  6. //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))) ஜஸ்ட்டு மிஸ்ட்டாகிட்டனே:((((((//

   அஞ்சு உங்க ப்ளாக்ல ரெண்டாவதா வர்றவங்களுக்கு ஆயா இல்லையா ???

   Delete
 3. எனக்கு ஜிகதண்டா வேணும்ம்ம்ம்.. எங்கட ஊர் சர்பத் மாதிரி இருக்கு....

  ReplyDelete
  Replies
  1. ஆம்மாம் அதிரா .இதை ஐஸ் சேர்க்காம பால் சர்பத் என்றும் விற்ப்பாங்க

   Delete
  2. இலங்கை யாழ்ப்பாணத்தில் சில கூல் பார்கள் பேமஸ். லிங்கம், றியோ... இப்படி.

   கனடாவில் நின்றபோது ஒரு தமிழ்ப் புரோகிராம் நடந்துது, அங்கு கடைகளும் போட்டவர்கள்.. அதே லிங்கம், றியோ என....

   சந்தோசம் பொயிங்கிட்டுது... சர்பத்தும், ஸ்பெஷல் ஐஸ்கிரீம்(யாழில் ஃபேமஸ்) வாங்கிச் சுவைத்தோம்... ஆனால் ஊரில் குடித்த ரேஸ்ட் வரவில்லை.

   அதுக்கு இன்னொரு காரணம், ஊரில் வெயிலுக்கு குடிக்க இதமாக இருக்கும், நாம் கனடாவில் குடித்தபோது குளிர்க் காலநிலை.

   Delete
  3. அது மட்டுமில்லை அதீஸ் நம்மூர் பால் தனி டேஸ்ட் .அதில் செய்யும்போது ருசி நல்லா இருக்கும்

   Delete
 4. பால் காய்த்து வைத்த பின்////

  றீஈச்சர் ஓடிவாங்கோஓஓஓஓஓ:)

  ReplyDelete
  Replies
  1. அஞ்சு அக்கா என்ன இது கேட்டப பயக்கம் கேல்விலாம் கேட்டுகிட்டு .


   பெஞ்ச்சி மேல ஏறி முதலில் நில்லுங்கோ ....

   Delete
  2. இதைப் படிச்சதும் ஓஓஓஓஒடிட்டா அஞ்சு:))) ஹா..ஹா...ஹா....

   ///angelin28 May 2012 04:18
   கொஞ்ச நேரம் கழித்து வரேன் :))))))/////

   Delete
  3. குருவுக்கேற்ற சிஷ்யை :)))

   Delete
  4. //பால் காய்த்து வைத்த பின்//

   அஞ்சு வாட் இஸ் திஸ்? தப்பு பண்ணலாம் ஆனா ரெண்டு பூஸ் கண்ணுலயும் படுற மாதிரி தப்பு பண்ணி இருக்கீங்களே :))

   Delete
  5. //பெஞ்ச்சி மேல ஏறி முதலில் நில்லுங்கோ ....// குட்டி பூஸ் , இந்த மாதிரி ஒரு மிசுடேக் உக்கு எல்லாம் அஞ்சு அக்காவ பெஞ்சுல ஏத்தினா நீங்க எல்லாம் பெஞ்சுலையே தான் நிக்கோணும் சொல்லிட்டேன் :))

   Delete
  6. தப்பு செய்துட்டேன் .இனிமே கரக்ட் செய்தா அது நேர்மையா இருக்காது so லெட் தெம் என்ஜாய் :))))

   Delete
  7. இந்த இடத்தில அஞ்சு அக்காவின்ற நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சி இக்குது .....

   கலக்குறிங்க அஞ்சு அக்கா

   ஜில் ஜில்!!! ஜிகர்தாண்டா மற்றும் கொறிக்க கடச்சக்க/////


   குருவே இதையும் கொஞ்சம் செக் பண்ணிப் போடுங்களேன் ....அவ்வவ் அஞ்சு அக்கா மீ எசகேப்

   Delete
  8. குட்டி பூஸ் , இந்த மாதிரி ஒரு மிசுடேக் உக்கு எல்லாம் அஞ்சு அக்காவ பெஞ்சுல ஏத்தினா நீங்க எல்லாம் பெஞ்சுலையே தான் நிக்கோணும் சொல்லிட்டேன் :))///


   கிரி அக்கா பல காலமாய் பெஞ்ச்சி மேல தான் குடித்தனம் பண்ணிட்டு இருக்குறோம் என்ககிட்டையேவா ....


   கிரி அக்கா என்ர டமிலுக்கு நேற்று பாராட்டு பத்திரம் ஒரு பெரிய புலவர் கைல இருந்து வாங்கினன்னாக்கும் .....

   அஞ்சு அக்கா எங்க அதைப் பற்றி நீங்க கிரி அக்கா கிட்ட சொல்லலையா .....

   Delete
  9. நான் அதை கண்ணால் பார்க்கவேயில்லை இல்லை ல்லை லை ய்

   Delete
  10. This comment has been removed by the author.

   Delete
  11. குறிப்பில முதலாவது சொல்லே... ம். அங்க இப்பிடித்தான் சொல்லுவினமாக்கும் என்று இமா க.கா.போ அதீஸ். ;D

   Delete
 5. மீ அட்டேண்டேஸ் போட வந்திணன் ...

  ReplyDelete
  Replies
  1. வாம்மா குட்டி பெண்ணே .ஜூஸ் அன்ட் சிப்ஸ் எடுத்துக்கோ

   Delete
  2. ஐ.. குருவும் சிஷ்யையும் இப்போதானே வகுப்பு முடித்து வந்தோம்:))).. கலை நலமா?

   Delete
  3. ஐ குருவும் அஞ்சு அக்காவும் ....   குருவே வகுப்பில் இண்டு நிறைய பாடம் படிச்சி கொடுத்தீங்க; ...ஒரே டயர்ட் ஆ இக்குது ....   ஹைஈ அஞ்சு அக்கா ...என்னாது சூசா அப்போ அதுக்கு பேரு சிகருதண்டா சொன்னதுலாம் பில்டப்பா ...

   Delete
  4. ரயேர்ர்டோ கலை, இந்தாங்க உங்களுக்கு 30 எனக்கு 70:)) நான் ஜிகதர்ண்டாவைப் புறிச்சேன்:))

   Delete
  5. ஹைஈ அஞ்சு அக்கா ...என்னாது சூசா அப்போ அதுக்கு பேரு சிகருதண்டா சொன்னதுலாம் பில்டப்பா ...//


   அய்யாங் ஆங் ஆங்க் (பொரண்டு பொரண்டு அழுறேன் )

   Delete
  6. //ஐ.. குருவும் சிஷ்யையும் இப்போதானே வகுப்பு முடித்து வந்தோம்:))).. கலை நலமா?//

   this is poos much :)))))))))
   இப்பதானே பாடம் கற்று கொடுத்து வரீங்க அப்ப என்ன கேள்வி நலமான்னு .
   கர்ர்ர்ரர் .:)))))))))

   Delete
  7. அக்கா பாடம் படிச்சி கொடுக்குற வரைக்கும் மீ நலம் ...அப்புறம் அஞ்சு அக்கான்ர ப்ளாக் வந்து சூசை குடிச்செனா ...அதான் எநாக்கு என்னாச்சோ எண்டு பதறிப் போய் குரு கேகுரான்கள் கலை நலமா எண்டு ...   குருவே !மீ சூப்பர் ஆ இரூக்கினான் ...அஞ்சு அக்கா கொடுத்த சூசை மீ ஜெய் அண்ணா க்கு கொடுத்துப் போட்டேன் ...

   Delete
  8. //அய்யாங் ஆங் ஆங்க் (பொரண்டு பொரண்டு அழுறேன் )//

   இந்தாங்க மஞ்சள் டிஷ்யு (பிங்க் கொடுத்தா பூஸ் பொராண்டும்:)) கண்ண தொடச்சுக்கோங்க. இதெல்லாம் ஒண்ணுமே இல்லே குட்டி பூஸ் என் சமையல்ல வந்து பொறாண்டு பொறாண்டு ன்னு பொறாண்டி யும் நான் எல்லாம் எவ்ளோ ஸ்டெடியா இருக்கேன் பாருங்க ;))

   Delete
  9. //அஞ்சு அக்கா கொடுத்த சூசை மீ ஜெய் அண்ணா க்கு கொடுத்துப் போட்டேன் ...//

   அடடா இதெல்லாம் தெரியாம பச்சை பூவு ஸ்லீபிங்:))

   Delete
 6. பாதாம் பிசின் எனப் போட்டிருக்கிறீங்களே.... அது கடல்பாசிபோல எல்லோ இருக்கு. நான் கனடாவில் ஒரு சைனீஸ் கடையில்ல் பெயர் ஆங்கிலத்தில் இல்லை சைனீஸ் எழுத்திலேயே இருந்துது, நான் அது கடல்பாசிதான் என வாங்கி வந்தேன்ன்.. ஜல் அக்காவின் குறிப்பில் நிறைய செய்து காட்டியிருக்கிறா, செய்வோமே என.

  ReplyDelete
  Replies
  1. கடல் பாசி என்பது சைனா கிராஸ் அல்லது அகர் அகர்
   இது இங்கிலீஷ் பெயர் gond katira

   Delete
  2. இங்க விற்கிற சைனா க்ராஸ்... வேமிசிலி மாதிரி மொத்தமா, ஆனால் கோணல்மாணலாக இருக்கு அதீஸ். இது மரத்தில இருந்து எடுக்கிற பிசின் போலதான் இருக்கு.

   Delete
  3. அவ்வ்வ்வ்வ் நான் வாங்கி வந்தது பளபளவென ஆனா நூடில்ஸ் மாதிரி.

   Delete
 7. கடவுளே... நான் அஞ்சுவின் பதில் இங்கு பார்த்தேன்.. அதுற்குள் புளொக் ஒரு ஆட்டம் ஆடிச்சுது:)) பார்த்தால் கொமெண்ட்டைக் காக்கா தூக்கிட்டு ஓஓஓஒடிடித்து:))) கர்ர்ர்ர்ர்ர்:))

  பால் காய்ச்சி:))

  ReplyDelete
  Replies
  1. ஆனா இன்னமும் எனக்கு தெரியுதே பேஜ் refresh செய்தா வரும்

   Delete
  2. மீக்கும் இப்போ தெரியுது.. தெரியுது:))).. அது வோக் போய் வந்தேனா.:)) கண்ணு தெரியுதில்லை:)) ஹையோ உளறிட்டேனோ?:)

   Delete
  3. பாதாம் பிசின் எனப் போட்டிருக்கிறீங்களே.... அது கடல்பாசிபோல எல்லோ இருக்கு.//


   இதற்கு என் தங்கைகள் மகி வான்ஸ்.கிரி இவங்கதான் பதில் கொடுக்கணும்

   Delete
  4. என்னாது அவங்கல்லாம் உங்களுக்கு தங்கையா அவ்வ்வ்வ் ...

   Delete
  5. ஆமாம் கலை எனக்கு ஒரே ஒரு அக்கா //உங்க குருதான்
   மீதிபேரேல்லாம் தங்கைஸ் ஹா ஹா ஹா .
   awwwwwwww இன்னிக்கு நான் செத்தேன்
   நான் ஊர்ல இல்ல இல்லை பூமியிலேயே இல்லை விண்வெளி போயிட்டேன்னு உங்க குருகிட்ட சொல்லிடுங்க

   Delete
  6. என்ன்னது குரு உங்களுக்கு அக்கா முறையா ...

   குருவே என்னாலேயே இதை தாங்கிக்க முடியலையோ ...


   அய்யகோஒ குரு இதை பார்த்தல் மயங்கி விழுந்து விடுவான்களே ....

   Delete
  7. ஸ்வீட் சிக்ஸ்டீன் ல இருக்கும் என் குருவை பார்த்து அக்கா எண்டு சொல்லும் அஞ்சு அக்காக்கும் எனது வன்மையான கண்டனங்கள் ....

   Delete
  8. என் தங்கைகளின் முறையில் உங்க குரு அக்கா ஆ ஆ ஆ
   !!!:))))))) அப்பாடி எப்படி எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு
   வெயில் தாங்க முடியல

   Delete
  9. // அது வோக் போய் வந்தேனா.:)) கண்ணு தெரியுதில்லை:))// ஓ ஓ இப்போ காலையிலயும் தெரிய மாட்டேங்குதா ?? ச்சோ பாவம் பூஸ் :))

   Delete
  10. இதற்கு என் தங்கைகள் மகி வான்ஸ்.கிரி இவங்கதான் பதில் கொடுக்கணும்// அஞ்சு இது தெரியல சாரி

   //
   என்னாது அவங்கல்லாம் உங்களுக்கு தங்கையா அவ்வ்வ்வ் ...// கலை அஞ்சு சொன்னா கேட்டுக்கணும் நோ கிராஸ் குவேஷன் :))

   //ஆமாம் கலை எனக்கு ஒரே ஒரு அக்கா //உங்க குருதான்
   மீதிபேரேல்லாம் தங்கைஸ் // அஞ்சு நானும்ம்ம்ம் தங்கையா பூஸ் இன்னிக்கு தேம்சில் குளிக்க:)) போறாங்க ஹா ஹா

   //நான் ஊர்ல இல்ல இல்லை பூமியிலேயே இல்லை விண்வெளி போயிட்டேன்னு // பூஸ் உக்கு கண்ணு இப்பெல்லாம் தெரிய மாட்டேங்குது டோன்ட் வொர்ரி அஞ்சு இதை எல்லாம் பார்க்க மாட்டாங்க :))

   Delete
  11. மணத்தக்காளி மேட்டரே இன்னும் முடிவுக்கு வரல்ல
   அதுக்குள்ளே பாதம் பிசினும் கடல் பாசியும் பற்றி டவுட் கேக்கிறாங்க பூஸ் .அந்த தைரியத்தில்தான் நானும் கமென்ட போட்டுட்டேன்

   Delete
  12. நான் இதுக்காகவே கனடாவில இருந்து வட்டுக்கத்தரி வாங்கி வந்து படமும் எடுத்து வைத்திருக்கிறேன், போடுவேன் பாருங்கோ.. அது எந்தாப்ப்ப்ப்ப்ப் பெரிசூஊஊஊஊ:)

   Delete
  13. ///நான் ஊர்ல இல்ல இல்லை பூமியிலேயே இல்லை விண்வெளி போயிட்டேன்னு // பூஸ் உக்கு கண்ணு இப்பெல்லாம் தெரிய மாட்டேங்குது டோன்ட் வொர்ரி அஞ்சு இதை எல்லாம் பார்க்க மாட்டாங்க :))///

   இனிமேல் இதையே மெயிண்டைன் பணிட வேண்டியதுதான்:)).. உஸ்ஸ்ஸ் யப்பா.. கண்ணுதெரியல்ல அதனால பின்னூட்டமும் போட முடியல்ல எனச் சொல்லிச் சொல்லிக் கொஞ்சக் காலத்தை ஓட்டுவோம், அதுக்குள் டிஷம்பர் வந்திடும்:))

   Delete
  14. MIYAAV!! AAV AAV :)))))))))))))))0

   Delete
 8. செய்முறை பெருசா இருக்குங்க அக்கா ....

  மதுரை ஜிகர்தண்டா தான் ரொம்ப சூப்ப்பேர் டாஸ்ட்....

  ReplyDelete
 9. கொஞ்ச நேரம் கழித்து வரேன் :))))))

  ReplyDelete
  Replies
  1. சரிங் அக்கா ..ட்டாட்டா

   Delete
  2. நீங்க போயிட்டு வாங்க அஞ்சு, நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டுத்தான் போவேன்:)).. கலையும் எஸ்ஸ் ஓ? எங்க இருக்கிறீங்க கலை?

   Delete
  3. இதோ வந்திட்டேன்

   Delete
  4. வாங்கோ வாங்கோ வேல்கம் அக்கா ...


   வருகைக்கு மிக்க நன்றி!

   Delete
  5. குருவே மீ போயிட்டு போயிட்டு வாரினான் ....எங்க ஊரில் ஒரே புயல் காற்று கடும் மழை வேற ...


   நெட் யும் அடிக்கடி மக்கர் பண்ணுது ...


   கடும் புயலிலும் மழையிலும் இடியிலும் மின்னளிலும் இப்புடியான இன்னலகளுக்கிடையிலும் மீ வந்து அஞ்சு அக்கவின்ற ப்லோக்கில் அமைதியா இறுக்கினான் .....

   நேற்று தான் மாமா சொன்னாங்க வாயக் குறை அமைதியா இரு எண்டு ...அவ்வவ் ...முடியலையே மாமா முடியலையே என்ன செய்ய ......

   Delete
 10. ஈரப்பலாக்காய் இங்கையில் சிங்களப் பகுதியில்தான் அதிகம் பேமஸ்.. எனக்க்கு அதன் கறி.. 200 வீதம் பிடிக்கும், ஆனா சிங்களவர்கள் சமைக்கும் விதமே வேற, அது சூப்பரோ சூப்பர். இங்கு ரின்களில்தான் கிடைக்குது, பறவாயில்ல, வாங்கிச் சமைக்கலாம்.

  ஆனால் வாழ்க்கையில் முதல் தடவையாக கேள்விப்படுகிறேன், இதில் சிப்ஸ் செய்வதென... சூப்பர்.. இனி ஃபிரெஷ்சாக் கிடைச்சால் செய்வேன்.

  ReplyDelete
  Replies
  1. இது கேரளாவிலும் ரொம்ப famous
   kadachakka recipe என்று கூகிளில் டைப் செய்தா நிறைய ரெசிப்பிஸ் வரும்

   Delete
  2. அதீஸ்... !!! உண்மையாவோ சொல்லுறீங்கள்!!!! ;))

   எங்கட பக்கமும் ஃபேமஸ்தான். வீட்டில மரமே இருந்துது.

   சிப்ஸ்... நானும் எப்பவோ குறிப்பு எழுதி அங்க அனுப்புவம் என்று வைச்சது படம் நல்லா வராமல் அனுப்பேல்ல.

   இலங்கைக் கடைல பாருங்கோ பக்கட்ல சிப்ஸ் விற்பாங்கள்.

   Delete
  3. சிப்ஸ்... நானும் எப்பவோ குறிப்பு எழுதி அங்க அனுப்புவம் என்று வைச்சது படம் நல்லா வராமல் அனுப்பேல்ல. //

   வருகைக்கும் என்னை காப்பாற்றியதற்கும் மிக்க நன்றி இமா .
   //வாழ்க்கையில் முதன் முதலான்னு சிப்ஸ் //பூஸ் சொன்னதும் பயந்தே போயிட்டேன்

   THIS BREAD FRUIT IS KNOWN AS KADACHAKKAA IN KERALA .

   Delete
  4. ஈரப்பலாக்காய் இங்கையில் சிங்களப் பகுதியில்தான் அதிகம் பேமஸ்.. எனக்க்கு அதன் கறி.. 200 வீதம் பிடிக்கும், ////////

   பூஸார் சிங்கள ஆக்கள் வைக்கிற சொதி, கட்டைச் சம்பல் இதெல்லாம் சாப்பிட்டிருக்கிறீங்களோ?

   சாப்பிட்டால் விடமாட்டியள்!

   நான் சாப்பாட்டைச் சொன்னேன் :-))))

   Delete
  5. //இலங்கைக் கடைல பாருங்கோ பக்கட்ல சிப்ஸ் விற்பாங்கள்.///

   இல்ல இமா நான் பார்த்ததே இல்லை, இனி செக் பண்ணுவேன்.

   Delete
  6. பூஸார் சிங்கள ஆக்கள் வைக்கிற சொதி, கட்டைச் சம்பல் இதெல்லாம் சாப்பிட்டிருக்கிறீங்களோ?

   சாப்பிட்டால் விடமாட்டியள்!

   நான் சாப்பாட்டைச் சொன்னேன் :-))))////

   கர்ர்ர்ர்ர்ர்:)) சாப்பிட்டிருக்கிறேன், அதுவும் கதிர்காமம் போகேக்கை.... ஊப்பரோஓ ஊப்பர்ர்ர்ர்:))

   Delete
 11. ஜேக்கப் கொள்ளை அழகு, சாம்பல் நிறத்தில தகதகவென மின்னுறார்ர்:)....

  வெள்ளை நிறத்தொரு பூனை
  எங்கள் வீட்டில் வளருது கண்டீர்..

  பிள்ளைகள் பெற்றதப் பூனை
  அவை பேருக்கொரு நிறமாகும்...

  சாம்பல் நிறமொரு குட்டி....

  இப்பாடல் நினைவுக்கு வந்துது...

  ReplyDelete
  Replies
  1. ஆமா அதீஸ் .ஜேக்கப் ரொம்ப அழகு .pedigree வெரைட்டி mixed பூனை
   வீட்டை விட்டு வெளியே வராது

   Delete
  2. இது எந்தப் ப்டத்தில் வரும் பாட்டு? பா.விஜய் எழுதியதா? :-)))

   Delete
  3. குட் கொஷன் :))) இப்படிதான் எல்லாரும் பூசாரை மட்டும் நிறைய கேள்வி கேக்கணும்

   i think its gaana ulaganathan

   Delete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தெரிஞ்சுகொண்டே தெரியாதமாதிரி கேள்வியெல்லாம்:)))

   Delete
 12. ஜில் ஜில்!!! ஜிகர்தாண்டா மற்றும் கொறிக்க கடச்சக்க /Bread fruit சிப்ஸ் :))

  கடைசி பூனையார் ஜேக்கப் உள்பட எல்லாமே அருமை.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு சார் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
   சிப்ஸும் ஜிகர்தாண்டாவும் எடுத்துக்கோங்க :)))

   Delete
 13. இங்கேயும் நூறுக்குள்ளே வந்திட்டேன்ன்ன்ன். அஞ்சு முந்த நாள் ஜிகர் தண்டா கமெண்ட் இல் போட்ட ஒடனே ஆசை வந்திடிச்சா? அழகா செஞ்சு காமிச்சு இருக்கீங்க. நான் இந்த ஈர பலாக்காய் செஞ்ச தில்லே ஆனா எங்க இலங்கை நண்பர்கள் வீட்டில் இதுல சைட் டிஷ் சாப்பிட்டு இருக்கேன். கட் பண்ணி விக்குறாங்களா? நான் இங்கே பார்த்த தில்லே. லண்டன் போகும் போது பார்த்திருக்கேன்.

  பாதாம் பிசின் எனக்கு தெரியலையே அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. பாதாம் பிசின் எல்லா பஞ்சாபி குஜராத்தி கடைலயும் கிடைக்கும் .gond katira டெஸ்கோவிலும் கிடைக்கும்
   நான் இங்கே பிரெஷ் மார்கெட்டில் பாதி வெட்டி வச்சிருந்தாங்க அந்த ப்ரெட் ஃப்ரூட் தான் வாங்கி செய்தேன்

   Delete
  2. பாதாம் பிசின் இதைதான் பால் சர்பத்திலும் சேர்ப்பாங்க கிரி .பாரிஸ் கார்னர் பக்கம் இல்லன்ன புரசை பக்கம் நாட்டு மருந்து கடைல கிடைக்கும் .இங்கே எல்லா இந்தியன் ஷாப்பிலும் கிடைக்கும் Natco/ east end brand

   Delete
 14. ஓகே மீதி கும்மிக்கு அப்புறம் வரேன்:))

  ReplyDelete
 15. எழுதிய விதமும், சங்கதிகளும் மிக சுப்பர். நல்வாழ்த்து சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா

   Delete
 16. வணக்கம் அஞ்சலின் நல்ல ஒரு ஜிகர்தாண்டா பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்§

  ReplyDelete
 17. என்னைக் கவர்ந்தது ஈரப்பலாக்காய்தான் அஞ்சூஸ். இங்கு கடையில் எப்படி 'ஃப்ரெஷ்' என்றாலும் பால்வற்றலாகத்தான் கிடைக்கிறது. ;(

  ப.கு
  மகள் செய்த க்வில்லிங் பறவைகள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி இமா .க்வில்லிங் விஷயத்தில் என் பொண்ணுதான் எனக்கு குரு :))

   Delete
  2. தெல் சரியான சொல் தானே:)) .இதில் இன்னும் நிறைய ரெசிப்பி இருக்கு
   உங்க கை மணத்தில் குறிப்பு தாங்களேன்

   Delete
 18. ஜிகர் தண்டா நான் ருசித்ததே இல்லை ஏஞ்சல் அக்கா.பார்க்க அழகா இருக்கு! சுவை எப்படி இருக்கும்னு குடிச்சுப் பார்த்துத்தான் சொல்லமுடியும்! ;) ;)

  சிப்ஸ் நல்லா இருக்கு. எனக்கு இந்தக் காயில் இப்படிதான் பண்ணனும்னு தெரியாம, ஒரு முறை நார்மல் பொரியலா செய்து அது இனிப்பாப் போன காமெடி நடந்திருக்கு. அதுக்கப்பறம் கரெக்ட்டா சமைக்கணும்னு நினைக்கிறேன், ஆனா பட்டர் ஃப்ரூட் கிடைக்க மாட்டேன்னுது!

  பிறகு...ஜேக்கோப்;) அயகா இருக்கார். ஆனா எனக்கு கருப்பு பூனைன்னா கொஞ்சம் அலர்ஜி! நம்ம மியாவ் மாதிரி ஒரேஞ்/பிங்க்/ஒயிட் கலர் பூனைகள்னா ரொம்ப பிடிக்கும்! ;);)

  கமென்ட் படிக்க நேரமில்லை..மெதுவா வாரேன்.

  ReplyDelete
  Replies
  1. //நம்ம மியாவ் மாதிரி ஒரேஞ்/பிங்க்/ஒயிட் கலர் பூனைகள்னா ரொம்ப பிடிக்கும்! ;);)////

   அதுதானே பார்த்தேன்ன்.. பிராண்ட முன் சரண்டர்:)))

   Delete
 19. ஜிகர் தண்டா நான் ருசித்ததே இல்லை ஏஞ்சல் அக்கா.//

  இந்த காய் ஆப்பிரிக்கர் கடையில் வாங்கி பாருங்க மகி நல்லா இருக்கும் .
  ஜிகர்தண்டா நல்லாவே இருக்குன்னு மூணு கப் குடிச்சவர் தெம்பா வேலைக்கும் சென்ற திரும்பியாச்சு ,அடுத்த முறை ட்ரான்சிட் UK வாங்க
  செய்தே தரேன் :)))

  ReplyDelete
 20. தெல் / ஈர்ப்பாலாக்காய் சரிதான் எஞ்சலின் அந்த சிப்ஸ் நல்ல சுவை நானும் கண்டியில் இருக்கும் போது சுவைத்து இருக்கின்றேன் அதவிட கறி இன்னும் சுவையாக இருக்கும் சாப்பிட !ம்ம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
   அதில் நிறைய வகைகள் செய்யலாம் ரெசிப்பி இருக்கு விரைவில் வெளி வரும்:)))

   Delete
 21. அடடா ரொம்ப ME romba லேட்டா..

  its okk mee the firstuuu

  ReplyDelete
  Replies
  1. நான் முதலிலேயே தனியா ஒரு கப் எடுத்து
   வச்சேன் சிவாவுக்கு .சோ நீங்க தான் ஃபர்ஸ்ட் .
   வருகைக்கும் கருத்துக்கும் அந்த நாய்க்குட்டியை ரசித்ததற்கும் நன்றி சிவா

   Delete
 22. ஜில்ஜில் ஜிகர்தண்டா குடித்துவிட்டேன்
  சிப்ஸ் கொஞ்சம்
  ம் சூப்பர்

  ReplyDelete
 23. அப்புறம்
  வரவேற்கும் அந்த குட்டி நாய்க்குட்டி அழகு
  கருப்பு பூனை அழகு

  ReplyDelete
 24. வணக்கம் ஏஞ்சலின் அக்கா! நல்லதொரு சகுனத்தில் தான் வந்திருக்கேன் போல! இங்கு செம வெயில்! நல்ல தாகம்! எனக்கும் ஒரு கப் ஜிகர்தண்டா கிடைக்குமோ?

  ReplyDelete
  Replies
  1. welcome:)))
   ஒன்றென்ன ரெண்டு கப் எடுத்துக்கோங்க .
   இங்கே இன்னிக்கு வெதர் மாறிடுச்சு .very gloomy

   Delete
 25. அக்கா ஒரு டவுட்! இங்கு பாரிஸில் ஈரப்பலாக்காய் இல்லை! சாதரண பலாக்காய் தான் இருக்கு! ஸோ, சாதரண பலாக்காய்க்கு தண்ணீரைத் தெளித்து ஈரமாக்கினால் அது ஈரப் பலாக்காய் தானே! அப்படிச் செய்துவிட்டு பிறகு, சிப்ஸ் செய்யலாம் எல்லோ? ஹவ் இஸ் மை கிட்னி??? :-)))

  ReplyDelete
  Replies
  1. எனக்கு நல்லா தெரியும் எல்லாம் அந்த பூசார் கொடுக்கும் கோச்சிங் !!!!பன்முனை தாக்குதலா இருக்கே அவ்வ்வ்வ் :)))

   நிஜம்மா அங்கே இதெல்லாம் கிடைக்காதா ?.
   நாங்களும் ஜெர்மனியில் இருக்கும் வரைக்கும் இந்த மாதிரி வெரைட்டி காய்கறிகள் பார்த்ததில்லை .இங்கே எல்லாமே கிடைக்குது .

   Delete
  2. //ஹவ் இஸ் மை கிட்னி??? :-)))///

   வர வர ரொம்ப ஷார்ப்பாகுதாம் எனச் சொல்லுங்கோ அஞ்சு:))

   Delete
 26. வணக்கம் சகோதரி,அஞ்சலின்!செய்முறை விளக்கம் எல்லாம் அருமை!செய்து பார்க்கத்தான்............பொழுதில்லை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி .நான் செய்து பார்சல் அனுப்பட்டா .

   Delete
 27. ஜில் ஜில் ஜிகர்தண்டாவும் கடச்சக்கயும் சூப்பர்.அருமையான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
   சமையலில் நீங்க ஜலீலா எல்லாரும்தானே எனக்கு குரு

   Delete
 28. ஹாய் அஞ்சலின் நலமா இருக்கிறீங்களா? இந்த வெயிலுக்கு இதமாக இருக்கு உங்க ஜிகர்தண்டா.நான் மதுரை ஜிகர்தண்டாவும் டேஸ்ட் செய்தாயிற்று. உண்மையில் சூப்பர் டேஸ்ட்தான்.
  ஈரப்பலாக்காய் சிப்ஸ் நல்ல டேஸ்ட்.இப்போதான் சாப்பிட்டுவந்தேன். ஊரில‌ இம்முறை கறி,சிப்ஸ் என வெளுத்துகட்டியாச்சு.
  இங்கு(ஜேர்மனியில்)பாதாம்பிசின் கண்டிருக்கிறீங்களா?
  நீங்களும் (நீங்க செய்யும்)சமையல் குறிப்புகள் படத்துடன் போடுவது நன்றாக இருக்கிறது.தொடரவும் இம்முயற்சியை.
  சின்னதா ஒரு வேண்டுகோள் "ஊறிய பின் இப்படி ஜெல்லி போல இருக்கும்"இந்த வசனத்தை படத்துக்கு கீழ் போடலாம் என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்முலு
   பாதம் பிசின் இந்திய கடைகளில் கிடைக்கும் .ஃப்ரன்க்போர்ட் போனீங்கன்னா நிறைய இந்திய பாகிஸ்தான் இய கடைகளில் இது கிடைக்கும் இல்லன்னாலும் கடல் பாசி சேர்த்தும் செய்யலாம் .i have added the sentence tnx.

   //நீங்களும் (நீங்க செய்யும்)சமையல் குறிப்புகள்// ஹையோ ரொம்ப ஷையா இருக்கு :)))

   Delete
  2. தாங்க்ஸ் அஞ்சு.

   Delete
 29. இது அதிராவுக்கு... நீங்க சொன்ன லிங்கம் ,றியோ எல்லாவற்றிலும் விதம்விதமாக சுவைத்தாயிற்று.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 30. நலமா ஏஞ்சலின்?

  மதுரையில் இது பிரபலம்...போன முறை குடித்தேன்...பிடிக்கவில்லை...

  உங்க செய்முறையில் பார்ப்போம்...

  சக்க சிப்ஸ் கேரளாவில ரொம்ப பிரபலம்...எனக்கு பழக்கொட்டை சுட்டு சாப்பிடத்தான் ஆசை...

  கிளிக் செய்த படங்கள் தூள்...

  ReplyDelete
 31. வாங்க ரெவரி .அடுத்த பதிவில் பாருங்க என் மகளோட pet வரப்போகுது :))
  .மதுரை ஜிகர்தண்டா தான் ரொம்ப டேஸ்ட் என்று எல்லாம் சொல்றாங்க
  பலாபழ சிப்ஸும் பழக்கொட்டை சுட்டு both என் விருப்ப ஸ்நாக்ஸ்

  ReplyDelete
 32. angelin29 May 2012 12:51

  வாங்க அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி .நான் செய்து பார்சல் அனுப்பட்டா?///ப்ரீ தானே????ஹி!ஹி!ஹி!!

  ReplyDelete
 33. jigarthandanna kelvi pattu iruken.. but kudichathu illa... thanks for sharing the recipe...

  Learning-to-cook
  Regards,
  Akila

  ReplyDelete
  Replies
  1. Thanks for your kind comments Akila

   Delete
 34. ஜிகர்தாண்டா ..பெயரே வித்தியாசமா இருக்கு ஏஞ்சல்....எங்க இந்த வருஷம் ஐரோப்பாவில் வெயில் காலம் குறைவா இருக்கே.மழையும் குளிரும் குறையிறதாயில்லை.வஎஇல் வந்தால் செய்து பாக்கிறேன் !

  உந்த சிப்ஸ் சாப்பிட்டிருக்கிரன்.ஆனால் ஈரப்பிலாக்காய் எண்டு தெரியேல்ல எனக்கு...ஒண்டையும் விட்டு வைக்கிறேல்ல ஹஹாஹா !

  எனக்கு வேலை,வீட்டு வேலை அது இதெண்டு சரியான நேரக்குரைவு ஏஞ்சல்.அதோட 2 புளொக்...கொஞ்சம் சோர்ந்தாலும் உற்சாகப்படுத்தும் நண்பர்கள்.....இதானல உங்கள் எல்லோரடயும் கலந்து சிரிச்சுக் கதைக்க நேரமில்லமல் இருக்கு.பொறாமையாய்க்கூட இருக்கு !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா .எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப வந்து போங்க .

   Delete
 35. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  www.ChiCha.in

  ReplyDelete