அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/22/12

Birthday Card/ Kitchen Corner

வணக்கம்  நண்பர்களே !!!!!!!!!!!!
இன்றைக்கு லண்டனில் வெயில் கொளுத்துகின்றது .
நண்பி ஒருவருக்கு செய்த பிறந்த நாள் வாழ்த்து அட்டை .
ஸ்டெப் பை ஸ்டெப் பட விளக்கங்களுடன் .

   Materials :  
  card blank ,  mini guillotine paper cutter , 
  double sided tape ,foam tape 
   ready made 3d card topper /design cutting scissors 
  /ink pad for distressing   
   peel off borders                                                                  
                                                                                       
மற்றும் எனக்குமற்றும் உங்க அனைவருக்கும்  மிகவும் பிடித்த 
மணத்தக்காளி வத்தக்குழம்பு ஸ்ப்ரிங் கிரீன்ஸ் /collard green
பொரியல்/பொரித்த பாகற்காய் /அப்பளம் /கத்திரிக்காய் 
உருளை கூட்டு /.
அப்புறம் ரெவரிக்கு பிடித்த சுக்கு காப்பி அத்துடன் வறுத்த கடலை .
அத்தோடு கொஞ்சம் இஞ்சி சேர்த்த வெல்லம் காதி பவனில் 
வாங்கியது . வேர்க்கடலை சாப்பிடும்போது வெல்லத்துடன்
சேர்த்து சாப்பிட்டா வயிறு வலிக்காதாம் .:))))))))))
(மேபிள் சிரப்புடன் யோகர்ட் இதை மட்டும் போட்டோ 
எடுக்கலை :)))
எல்லாரும் அவங்கவங்களுக்கு பிடிச்சதை தாராளமாக 
எடுத்துக்கலாம் .
இரண்டாவது படத்தில் இருக்கும் ஒட்டக சிவிங்கி க்வில்லிங் 
முறையில் செய்தது .ஏற்க்கனவே ஆங்கில வலைப்பூவில் 
பதிவிட்டிருந்தேன் .இப்ப இங்கேயும் போட்டாச்சு .


 மணத்தக்காளி குழம்பு 
மற்றும் சிவப்பரிசி சாதம் :))
                                                                                   
மணத்தக்காளி வற்றல் 
வீட்டிலேயே அரைத்த குழம்பு மசாலா 
(வற்றல் மிளகாய் ,தனியா ,வெந்தயம் ,
கொஞ்சமே மிளகு /சீரகம் /சோம்பு /கடலைபருப்பு 
இவற்றை வறுத்து அரைத்து செய்தது )
ஸ்ப்ரிங் கிரீன் பொரியல் கீதா ஆச்சல் ரெசிப்பி பார்த்து செய்தேன் 
கத்திரி உருளை பொரியல் ஆசியாவின் ரெசிப்பி ,
பாகற்க்காய் பொரியல் ..மெலிதாக அரிந்து தயிரில் 
ஊற வைத்து உப்பு மற்றும் சாம்பார் பொடி பிரட்டி பொரித்து 
எடுத்தேன் .yummilicious!!!!!!


                                                                                
சென்ற சனிக்கிழமை நியூ காசில் வரை சென்றோம் 
போகும் வழியில் மஞ்சள் மஞ்சளாய் rapeseed 
கொள்ளை அழகு !!!! வண்டியிலிருந்தே படம் பிடிச்சேன் .
நான் வழக்கமா நடக்கும் பாதையிலும் மஞ்சள் பூக்கள் 
அதையும் என் காமெராவில் ஒளித்துக்கொண்டேன்!!!!
                                                                            
                                                                

     
எனக்கு திரும்படியும் :))))விருது கொடுத்த கலைக்கு நன்றி .
மீண்டும் சந்திப்போம் அதுவரையில் 
எல்லாரும் எப்பவும் சந்தோஷமா இருங்க .                                                                                  

95 comments:

 1. Birthday Card

  கண்ணுக்கு விருந்து.
  நண்பிக்கு வாழ்த்துகள்.


  Kitchen Corner

  நாக்குக்கு நல்விருந்து.
  பார்த்தாலே பசி தீர்கிறது.

  வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார் .

   Delete
 2. நலமா ஏஞ்சலின்?

  சுக்கு காப்பிய மட்டும் எல்லாருக்கும் விட்டுக்குடுத்திட்டு மத்த எல்லாத்தையும் லபக் செய்கிறேன்...

  மணத்தக்காளி எங்க கிடைக்குது உங்களுக்கு?

  ReplyDelete
  Replies
  1. மிக்க நலம் .சூரியர் நல்லா அழகா பிரகாசிக்கிறார்
   இங்கே ஏசியன் கடையில் எல்லாமே கிடைக்கும் ரெவரி .

   ஊரிலிருந்தும் பார்சலில் வரும்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 3. வாழ்த்து அட்டை மற்றும் செய்முறை அழகு...

  பொண்ணுக்கு பேகிங்ல விருப்பம் நிறைய...உங்க கிராப்ட் வேலையை பார்க்கிறதோட சரி...

  சுக்கு காப்பியும் கருப்பட்டி (ஒரு கிலோ கருப்பட்டி TRANSITல இப்பம் குவைத்ல இருக்கு...அடுத்த மாதம் வந்திரும்) காப்பியும் அடிச்சுக்க வேற எதுவுமே கிடையாது...

  எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்து பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றி ஏஞ்சலின்...

  btw,New Castle + படங்கள் நல்லா வந்திருக்கு...

  ReplyDelete
  Replies
  1. எங்க அப்பா ரொம்ப டேஸ்டியா கருப்பட்டி காப்பி போடுவார் .
   என்னால் இன்னும் விட முடியல
   என் கணவரையும் இதுக்கு பழக்கி வச்சிருக்கேன்

   Delete
 4. வாழ்த்து அட்டையும் சாப்பாட்டு முறையும் சிறப்பாக இருக்கு அஞ்சலின் அக்காள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நேசன் .அடுத்த முறை உங்களுக்கு ஸ்பெஷல் மில்க் காப்பி உண்டு

   Delete
 5. விருதுக்கு வாழ்த்துக்கள் அஞ்சலின் அக்காள்.

  ReplyDelete
  Replies
  1. சந்தோசம் பொயிங்குதே:)).. சந்தோசம் பொயிங்குதே:)) ஏனெண்டு ஆரும் கேக்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

   Delete
  2. எனக்கும்தான் ரொம்ப சந்தோஷம் பொங்கி பொங்கி வழியுது
   தம்பிங்க எல்லாம் இந்த தீவாளி/அட்ஷய திரிதை /மற்றும் எல்லா விழாக்களுக்கும் கையளவு சரிகை வைத்த மஞ்சள் மாம்பழ நிறத்தில் பட்டுபுடவை வாங்கி தராங்களாம் .ஹையோ !!!
   எனக்கு எத்தனை கிடைக்கும் ஜாலி ஜாலி :))))))
   நீங்க தான் வேணாம்னு சொல்லிட்டீங்களே

   Delete
  3. அஆங் !!! அண்ணாகளோட மனைவிமாருக்கு அதாவது அண்ணிகளுக்கு தங்கைஸ் எல்லாம் வைர கம்மல் செய்து தரணுமாம் .எப்படி வசதி அதீஸ் தங்க்ஸ்

   Delete
  4. மீ வெரி கேர் புல் ...ஆள் ஆர் அண்ணாக்கள் ....

   Delete
 6. எனக்குமற்றும் உங்க அனைவருக்கும் மிகவும் பிடித்த
  மணத்தக்காளி வத்தக்குழம்பு///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. why poos ??
   :))))))))))))

   Delete
  2. எனக்கு பிடிச்ச குழம்பைப்... படமாப் போட்டுக் காட்டியதுக்கு.. பார்ஷல் பிளீஸ்ஸ்...

   Delete
  3. //yes டன்// அப்போ பூஸ முடிச்சுடலாங்க்றீங்க :))

   Delete
 7. கார்ட்ஸ் எல்லாமே அழகு....

  அதென்னது வறுத்த கச்சானோ? பக்கத்தில இருப்பது என்ன? சட்னிபோல ஏதோ?

  ReplyDelete
  Replies
  1. புரிஞ்சிட்டேன்ன்ன் புரிஞ்சிட்டேன்ன்ன்:)))

   Delete
  2. //அதென்னது வறுத்த கச்சானோ? பக்கத்தில இருப்பது என்ன? சட்னிபோல ஏதோ?//


   ஹா..ஹா... மேலே குழம்பு ன்னு சொல்லிட்டு அடுத்த கமெண்ட் சட்னியா ஹா..ஹா... ஹய்யோ..ஹய்யோ :-)))

   Delete
 8. வாழ்த்து அட்டை சாப்பாடு எல்லாம் சூப்பெரோ சூப்பர் அஞ்சு. திரும்படியும் :)) விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள். நானும் பாகற்காய் வறுவல் இப்படி தயிரில் ஊறவைத்து தான் பண்ணுவேன். யம்மி !! வெயில் கொழுத்தோ கொழுத்துன்னு கொழுத்துது. மகனை கிரிக்கெட் மாட்ச் கூட்டிக்கிட்டு போறேன். அப்புறமா வரேன் பை

  ReplyDelete
  Replies
  1. கீரி மட்டும்தேன்ன்ன் என்னைப்போல ஒயுங்கான பிள்ளை... ஏனெண்டால்ல்ல் ஒரே நேரத்தில தலைப்புப் போட்டு என்னை ஓடிப்போய் முருங்கில ஏறப் பண்ணல:))

   Delete
  2. வாங்க கிரி .சீக்கிரமே வந்து இந்த பூஸ் மேடத்தை கொஞ்சம் ஒரு கை கவனிங்க :))))))

   Delete
  3. இல்ல, கீரி இப்போ வரமாட்டாவாம்ம்.. அவ ஒரு ரெண்டுல்கரை உருவாக்கப் போயிட்டிருக்கிறாவாம்ம்.. சொல்லேலாது ஒருநளைக்கு கீரியிடம் ரிக்கெட் வாங்கோணும் நான் மச் பார்க்க.. எதுவும் நடக்கலாம்...

   Delete
  4. giri akkaa aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

   Delete
  5. Yessssssssssssssssssssssssssssssssssssssssssss Kalaiiiiiiiiiiiiiiiiiiiii

   Delete
 9. வேர்க்கடலை சாப்பிடும்போது வெல்லத்துடன்
  சேர்த்து சாப்பிட்டா வயிறு வலிக்காதாம் .:))))))))))//

  எனக்க்கும் ஆரோ சொன்னார்கள்.. ஏனெனில் நானும் அதிகம் சாப்பிடுவேன்... ஆஆ அது வெல்லமோ?

  ReplyDelete
  Replies
  1. ஆமா .பனைவெல்லம் உங்கூர் கித்துள் வெல்லம் மாதிரி இருக்கும் சைசில் .இதில் காய்ந்த இஞ்சி சேர்த்திருக்கு

   Delete
  2. //எனக்க்கும் ஆரோ சொன்னார்கள்.. ஏனெனில் நானும் அதிகம் சாப்பிடுவேன்... ஆஆ அது வெல்லமோ?//

   எனக்கு மட்டும் வலிக்கவே இலை ஏன்னா நான் ரெண்டுமே ஒரே நேரம் சாப்பிடுவதில்லை ஹி..ஹி.. :-))

   Delete
 10. நான் வழக்கமா நடக்கும் பாதையிலும் மஞ்சள் பூக்கள்
  அதையும் என் காமெராவில் ஒளித்துக்கொண்டேன்!!!!/////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எப்போ காட்டப்போறீங்க?

  ReplyDelete
  Replies
  1. அங்கே கொல்லாஜில் இருக்கு பாருங்க

   Delete
  2. பூஸுக்கு கண் போஸ்ட் போட்டதிலிருந்து விஷன் குறைவுன்னு யாரோ எங்கேயோ சொன்னாங்களே உண்மையா. மீன்..!! :-))))

   Delete
  3. அஞ்சூஊஊஊஉ யெல்ப் மீஈஈஈஈ:)) பப்பூவைப் பிடிச்சுத் தாங்கோ இண்டைக்கு நான் பாவ புண்ணியம் பார்க்க மாட்டேன்ன்ன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ரெயிட்டா தேம்ஸ்தேன்ன்ன்ன்:))

   Delete
  4. yes jai thats true i mean it:)))))))

   Delete
  5. //பூஸுக்கு கண் போஸ்ட் போட்டதிலிருந்து விஷன் குறைவுன்னு யாரோ எங்கேயோ சொன்னாங்களே உண்மையா//

   எஸ் எஸ் மாலை கண் :))

   Delete
 11. மணத்தக்காளிக்குழம்பு இருக்குது okay.. ஆனா மணத்தக்காளி எங்ங்ங்கே?:)))

  ReplyDelete
  Replies
  1. குழம்பில் தான் இருக்கு மிளகு மாதிரி கருப்பு கலர்ல இருக்கே

   Delete
  2. அவ்ளோ குட்டியாவா இருக்கும்? கர்ர்ர்ர்ர்ர்:)) நான் கொஞ்சம் உருண்டை உருண்டையா இருக்குமென நினைச்சேன்ன்ன்.....

   Delete
  3. எங்கே என் குட்டி செல்ல தங்கை மகி .சீக்கிரமா வந்து பூஸாரை கவனிங்க :))))))))

   Delete
  4. //அவ்ளோ குட்டியாவா இருக்கும்? கர்ர்ர்ர்ர்ர்:)) நான் கொஞ்சம் உருண்டை உருண்டையா இருக்குமென நினைச்சேன்ன்ன்.....//
   ச்சே..ச்சே.. தக்காளி பழ சைசில இருக்கும் ஹி..ஹி... :-))

   Delete
  5. ஜெய்... நீங்க ஒரு மணத்தக்களி சமையல் குறிப்பு போடுங்க.. நல்ல பெரிய சைஸ்ல வாங்கி:)) ஸ்டெப் பை ஸ்டெப் படங்களோடு:))

   Delete
 12. இரவு வணக்கம்,சகோதரி angelin
  !காலையில் பார்க்கவில்லை,மன்னிககவும்.அழகாக இருக்கின்றது,எல்லாமே!

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா .நான் மதியம்தான் போஸ்ட் பப்ளிஷ் செய்தேன்.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 13. ...பின்னே என்னங்க?... எல்லாரும் [என்னையும் சேர்த்துத்தான்..]ஒரே நாளில ஒரே நேரத்தில போஸ்ட் பப்ளிஷ் பண்ணினா ஒரு மனுஷி(நாந்தேன்..:)) என்னதான் பண்ணறது,சொல்லுங்க?

  வானதி,கிரிசா,ஏஞ்சல், மகி இப்படி 4இன்1 பதிவுகளா ரிலீஸ் ஆகியிருக்கு இன்னிக்கு! எ.கொ.ச.இ.?? பூஸை நினைச்சாத்தான் ரொம்பவுமே பாவமா இருக்குது..அமேரிக்காவுக்கும்,ஐரோப்பாவுக்குமா ஓஓஓஓஓ....ஓஒ....ஓடிக் களைச்சிருப்பாங்க!ஹாஹ்ஹா! :)

  கார்டு அழகா இருக்கு. நீங்க போட்டிருக்கும் ஸ்டெப் பை ஸ்டெப் படமும் எனக்கு தலையும் புரில, வாலும் புரியலை! அது நம்ம(!) ஏரியா இல்லைங்கறதாலையோ?;)
  வழக்கம்போல சாப்பாடு-பிங்க் கலர் வத்தல்[பூஸ் இதைக் கவனிக்கலை போல!], கூட்டு, வறுவல், பொரியல்...சூப்பரு! :P :P

  மணத்தக்காளி பத்தி றீச்சர் மணிக்கணக்கா க்ளாஸ் எடுத்தாலும் பூஸ் "விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பனா?" என்று கேட்ட கதைதான்! எல்லாம் சொல்லி முடிச்சப்பறம் வேஏஏஏற ஏதாச்சும் கேப்பாங்க ஏஞ்சல் அக்கா...அவ்வ்வ்வ்! ஏற்கனவே என் ப்ளாக்ல வந்து என்னை பிறாண்டிட்டு(!?!) வந்திருக்காங்க, இங்க வேற நான் இன்னும் கொஞ்சம் கடுப்பேத்தறேன்! திருப்பதி வெங்கடாசலபதி, என்னையக் காப்பாத்து!!!!

  கோயிங் ஸ்ட்ரெய்ட் டு வானதிஸ்!!! ;)

  ReplyDelete
  Replies
  1. 5 in one posts.
   சாதிகா அக்காவின் போஸ்டும் ஒரே நேரத்தில் ,பூஸ் இந்தியாக்கும் இடைவெளில ட்ராவல் செய்து களைச்சு போய்ட்டாங்க :)))))))

   Delete
  2. பிங்க் கலர் வத்தல்[பூஸ் இதைக் கவனிக்கலை போல!], //


   ஹையோ !!!:))) பூஸ் இந்தாங்க உங்களுக்கு பிங்க் டிஷ்யூ

   Delete
  3. //பூஸ் "விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பனா?"///

   அப்போ அவர் சித்தப்பா இல்லையா?:)) என்ன இது புதுக்கதையாக்கிடக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))... பூஸ் ஒன்று புறப்படுதே. என் பழைய தமிழ் றீச்சரைத்தேடிப் போறேன்ன்ன்:)))

   Delete
  4. //என் பழைய தமிழ் றீச்சரைத்தேடிப் போறேன்ன்ன்:)))// ...ஹ்ம்ம்ம், ஒன் பெட்டர் ஐடியா சொல்லட்டே அதிராவ்?! ;)

   புயலாப் புறப்பட்ட பூஸ் டைரக்ட்டா த்ரேதா யுகத்துக்கேஏஏஏஏஏஏஏ போயி ராமபிரானையே கேட்ச் பண்ணி, "நீங்க சீதாப் பிராட்டிக்குச் சித்தப்பாவா,பெரியப்பாவா??" என்று டெரராக் கேட்டுட்டு மறக்காம கலியுகத்துக்கு (இந்த யுகம்தேன்,,,ஹிஹி!) வந்துருங்கோஓஓஓஓஓ!

   :D :D :D
   :D :D
   :D

   Delete
  5. ஓஒ அங்கின விம் பார் கேட்டதுக்கு இங்கின விளக்கம்ம்ம்ம் இப்போ பிரிஞ்சிடிச்சு ஊஊ

   Delete
 14. கண்ணுக்கு விருந்தாக வாழ்த்து அட்டையும்
  நாவுக்கு ருசியாக ரெசிப்பியும் கொடுத்தமைக்கும்
  விருது பெற்ற்மைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
  (தங்கள் அழகிய பதிவுக்கு வ்ந்தாலே சந்தோஷம்
  பற்றிக் கொள்வது நிஜம்)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா மிக்க சந்தோஷம்

   Delete
 15. அருமையான வாழ்த்தட்டை,சுபையான் அறுசுவை விருந்து பரிமறி விட்டீர்கள்.

  இங்கிருந்தே சிகப்பரிசி எல்லாம் உபயோகிக்காமல் இருக்கிறோம்.நீங்கள் என்னவென்றால் அங்கிருந்து கொண்டு சிகப்பரிசியில் சாதம் செய்து மணதக்காளி வற்றலுடன் மணக்க மணக்க சாப்பிடுகின்றீர்கள்.:)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா .
   புளி சேர்த்த எந்த குழம்பாக இருந்தாலும் மீன் குழம்பு உட்பட ,இந்த சிவப்பு மாட்டா அரிசியுடன் சேர்த்து சாப்பிட்டா நல்ல டேஸ்ட் .
   என் பொண்ணுதான் கொஞ்சம் முனகுவா.எப்படியோ சாப்பிட வச்சிடுவேன் ..

   Delete
 16. வாழ்த்து அட்டைகள் சூப்பர். மகி மேடம் சொன்னாப் போல எனக்கும் எதுவும் பிரியலை. மணத்தக்காளி, கடலை, படங்கள் எல்லாமே அழகு. டீச்சர் விடிய விடிய பாடம் நடத்தி, படங்கள் கிறிஸ் அண்ணாச்சியோடு ( மணத்தக்காளி குப்பைக்குள் போகாமல் ) சண்டை போட்டு எடுத்து, கதறி கதறி விளக்கம் சொன்ன பிறகும் இங்கே வந்து மணத்தக்காளி பலாப்பழம் சைஸில் அல்லவா இருக்கும் என்று சொன்ன பூஸாருக்கு டீச்சர் வந்து 4 குட்டு வைங்கோ.

  ReplyDelete
  Replies
  1. ஆமா .படத்தை பார்த்தும் டவுட் வரகூடாது நாலுக்கு பக்கத்தில் ஒரு ஜீரோ போட்டு நாற்பது குட்டு கொட்டுங்க

   Delete
  2. நோ..நோ றீச்சருக்கு கை நோவாம்:)) அதனால அவவால குட்ட முடியாதே:)))

   Delete
  3. அவக்கு கை முடியலை என்றால் என்ன நாங்கள் எல்லாம் நல்லா குட்டுவோமே!!!!

   Delete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) எங்க போனாலும் அடிக்கிறாங்கப்பா பூஸை:))

   Delete
  5. //

   அவக்கு கை முடியலை என்றால் என்ன நாங்கள் எல்லாம் நல்லா குட்டுவோமே!!!!// எஸ் எஸ் நான் பச்சை கல் மோதிரம் போட்டு இருக்கேன் நல்ல் ஆஆஅ குட்டுவேன்;))

   Delete
 17. வாழ்த்து அட்டைகள் எல்லாம் அருமை....!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ .ஊரில் எல்லாரும் நலமா .
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 18. அன்ஜூஊஊஊஊஊஊஊஉ அக்காஆஆஆ ..எப்பம் பதிவு போட்டீன்கள் ..என்கிட்டே ஒரு வார்த்தைக் கூட சொல்லலா

  ReplyDelete
  Replies
  1. வாத்தார் , ஆடார் எல்லாம் ஓவர் சவுண்ட் குடுத்ததால உங்களுக்கு கேட்டிருக்காது ஹா..ஹா.. :-)))

   Delete
 19. வணக்கம் நண்பர்களே !!!!!!!!!!!!///


  வயிக்கம் யக்கா

  ReplyDelete
  Replies
  1. யோகா அண்ணா ..பாருங்க இதுக்கு யாருக்கு அடி என்றால் வயக்கத்தை சொல்லி கொடுத்த குருவுக்கு தான் அடி

   Delete
 20. ஜூப்பர் ஆஆஆஆஆஆஆ ஈக்குது அக்கா ...கலக்குரிங்கள் போங்க ...அந்த கார்ட் செய்த கைக்கு என் மாமா கிட்ட சொல்லி ஒருக காப்பு வாங்கிக் கொடுக்கிறேன் அக்கா ....ஹேமா அக்காளுக்கு செய்துக் கொடுத்த காப்பு மாதிரியே உங்களுக்கும் செய்து கொடுப்பம்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா !!! அதில சிவப்பு கல்லும் முத்தும் பதிசிருக்கணும்!! ஆமா .சொல்லிட்டேன் :)))

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் காப்பு இன்னும் கைக்கு வரல்ல அதுக்குள் அஞ்சுவுக்கும் காப்புப் போடப்போறாவோ என் சிஷ்யை.... வரட்டும் இண்டைக்கு... இதுக்கொரு முடிவு கட்டோணும் நான்:)))

   Delete
  3. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் காப்பு இன்னும் கைக்கு வரல்ல//

   ஸ்பெஷல் ஆர்டர் ஸ்காட்லான்ட் யார்ட் போலிஸ் கிட்டே சொல்லி இருக்கோம் காப்பு வந்து கிட்டே ஏ ஏ இருக்கு :))

   Delete
 21. மஞ்சப் பூ ரொம்ப அயகா இருக்கு அக்கா ....எனக்குப் பிடிச்சி இருக்கு நு சொல்லிடுங்கோ அடுத்த தரம் அவை பார்க்கும் போது

  ReplyDelete
  Replies
  1. ஓகே சொல்லிடறேன் :)))

   Delete
 22. எனக்கு திரும்படியும் :))))விருது கொடுத்த கலைக்கு நன்றி .//


  திரும்படீஈஈஈஈஈஈஈஈஈஈ யும் கொடுப்பேன் செல்ல அக்காக்கு .....நான் விருதை சொன்நேனாக்கும் அக்கா ...


  நன்றிக்கு நன்றி அக்கா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கலை வருகைக்கும் கல கல பின்னூட்டத்துக்கும்

   Delete
 23. அட இந்த போஸ்ட் எனக்கு தெரியவே இல்லையே .. பின்னேரம் வரேன் :-)

  ReplyDelete
  Replies
  1. ஜெய் வாங்க .இப்ப கம்ப்யூட்டர் சரியாகிடுச்சி

   Delete
  2. அவ்வ்வ்வ்வ்வ்.. இன்னுமா பின்னேரம் ஆகல்லயாம் பாலைவனத்தில:)))..

   ஆ,,, அஞ்சு சரியாகிட்டுதோ? அவ்வ்வ்வ்வ் பச்சைப்பூவோ ?:)

   Delete
 24. வாவ்! அருமையான வாழ்த்து அட்டையும் சமையல் பகிர்வும் மனதை கொள்ளை கொள்கிறதே!தொடர்ந்து கருத்து லூட்டியும் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. Thanks for your kind comments Asiya

   Delete
 25. கார்ட் சூப்பர்ப் அஞ்சூஸ்.

  கமண்ட்ஸ் எல்லாம் படிக்க பிறகு வாறேன். (பூஸ் நிற்குது, எப்ப என்று சொல்ல மாட்டன்.) ;D

  ReplyDelete
  Replies
  1. நோ.. நோ.. பூஸ் இஸ் சிட்டிங்:)) அண்டர் த பெட்:))

   Delete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா .வரும்போது மறக்காம அந்த மோதிரம்ஸ் எல்லா விரலிலும் போட்டு வாங்க குட்டும்போது வசதியா இருக்கும் :))))))))

   Delete
 26. வணக்கம் அக்கா, அருமையான ஆர்ட் வேர்க். ரசித்தேன். நியூகாஸ்ட்டில் படத்தினைப் பார்ப்பதற்காய் வெயிட் பண்றேன்.

  ReplyDelete
  Replies
  1. வெளிப்புற காட்சிகள் படம் எடுக்கலை நிரூபன் .நாங்க சென்றது ஒரு ப்ரோக்ராமுக்கு .அடுத்த முறை படத்துடன் போடுகிறேன்
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 27. Good Morning,SISTER ANGELIN!!!!!!

  ReplyDelete
 28. கார்ட்ஸ் ரெம்ப அழகா இருக்கு. உங்க மூலமா நானும் க்விலிங் செய்துகிட்டு இருக்கிறேன்.முதன் முதல் செய்ததே மகள் செய்த குட்டி வாத்து!!
  ப்ரசன்ட் செய்த விதம் அழகாக இருக்கு.மணத்தக்காளி கொண்டுவந்திருக்கிறேன் இனிமேலதான் செய்யணும் குழம்பு.
  என் ஓட்டு ஒட்டகச்சிவிங்கிக்குதான்.அழகாய் இருக்கு.

  ReplyDelete
 29. க்வில்லிங் செய்றீங்களா .மிக்க சந்தோஷம் .
  பேப்பர் ஸ்ரெட்டர் கொண்டும் வெட்டி செய்யலாம்
  எனக்கு காட்டுங்க செய்து முடித்ததும்

  ReplyDelete
  Replies
  1. போட்டோ எடுத்து வைத்திருக்கிறேன்.எப்படி அனுப்புவது எனத்தெரியவில்லை.அதை அனுப்பி உங்க பதில் தெரிய மிக ஆவலாக இருக்கிறேன்.

   Delete
 30. ஏஞ்சல்...மன்னிச்சுக்கொள்ளுங்கோ.வேலை பதிவு எண்டு ஒரே ஓட்டம்தான்.அதனால உங்களைப்போல எல்லோரடயும் கலகலப்பா கதைக்க நேரமில்லாமல் இருக்கு.பதிவுகளைக்கூடத் தவறவிடுறன்.

  மணத்தக்காளி எங்க கிடைக்குது உங்களுக்கு?ஊரில் எப்பவோ சாப்பிட்டது.இன்னும்வாசனி நாசியில.வாய் அவிஞ்சால் நல்லதெண்டு அம்மா வெறும் இலையைச் சப்பிச் சாப்பிடச்சொல்லுவா !

  ReplyDelete
 31. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  www.ChiCha.in

  ReplyDelete