அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/28/12

ஜில் ஜில்!!! ஜிகர்தண்டா மற்றும் கொறிக்க Kadachakka - கடச்சக்க /Bread fruit சிப்ஸ் :))
ஜிகர்தாண்டா ......

                                                                          

முருகன் இட்லிகடையில் இது ரொம்ப பிரபலம் .
ஃபலூடா செய்யும்போது கடல் பாசி மற்றும் சப்ஜா விதைகளை
சேர்ப்பது போல இதற்கு பாதாம் பிசின் சேர்க்க வேண்டும் .

தேவையான பொருட்கள் 

காய்ச்சு குளிரூட்டியில் வைத்த பால் ..... ஒரு கப் 
விருப்பமான எசன்ஸ் ..(இனிப்பு அளவு ஏற்றார்போல சேர்க்கணும்) 
 நான் ரோஸ் எசன்ஸ் சேர்த்தேன் 
FRESH CREAM/ OR பால் காய்த்து வைத்த பின் ஒரு திக் லேயர்
ஆடை இருக்கும் அதை கவனமா எடுத்து ஒரு சிறு கிண்ணத்தில் 
வைச்சுக்கோங்க 
ஃபிரெஷ் க்ரீமுக்கு பதில் இதையே பயன்படுத்தலாம் 
பாதாம் பிசின் ../GOND KATIRA/இதை குறைந்தது 
எட்டு மணி நேரம்ஊற வைக்கணும் .

ஊற வைக்கு முன்
                                                  BOTH (FROM GOOGLE IMAGES .THANKS )
நான் எடுத்த படங்கள் க்ளியரா வரவில்லை
 "ஊறிய பின் இப்படி ஜெல்லி போல இருக்கும்"
                                                                             
ஊற வைக்கு முன் கழுவவும் சிறு மரத்துகள்கள் இருக்கலாம் .
வெனிலா சுவை ஐஸ் க்ரீம் ரெண்டு ஸ்கூப் .
ஊறிய பின் இப்படி ஜெல்லி போல இருக்கும் 
                                                                               ஒரு கோப்பையில் முதலில் ஊற வைத்த பாதாம் பிசின் 
ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து வைக்கவும் அதன் மேலேரெண்டு 
ஸ்பூன் ரோஸ் எசன்ஸ் ஊற்றுங்க அதன் மேல் சில்லுன்னு 
இருக்கும்  பாலை சேர்க்கவும் .
அதற்கு மேல் ரெண்டு ஸ்கூப் vanilla ஐஸை போடுங்க /
ஐஸை போட்டு அதன் மீதும் ரோஸ் எசன்ஸை ஊற்றலாம் 
 ஐஸுக்கு மேலே ஏற்க்கனவே எடுத்து வைத்திருக்கும் 
பால் ஆடை அல்லது FRESH CREAM சிறிது எடுத்து டாப்பிங் 
மாதிரி விடவும் 
THEN பெரிய ஸ்ட்ரா போட்டு குடிங்க 
அவ்ளவுதான் இதுதான் ஜிகர்தாண்டா 
                                                                            

கடச்சக்க (Bread fruit) /ஈர பலாக்காய் CHIPS                                                                                 

                                                              (thanks google )

இது கேரளா ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை பக்கம் ரொம்ப 
பிரபலமான  உணவு .
இங்கே மார்க்கெட்டில் வாங்கியது .
இதில் நிறைய வெரைட்டி ரெசிப்பி இருக்கு ஆனா என் மகளுக்கும்
கணவருக்கும் ரொம்ப பிடித்தது இந்த சிப்ஸ் 


                                                                             

                                                                            

ஈரப்பலாக்காயை  மெல்லியதாக 
வெட்டிக்கொள்ளவும் 


எண்ணெய் சூடானதும் நேந்திரங்கா சிப்ஸ் பொரிப்பதுபோல 
நன்கு பொரித்து எடுக்கவும் .சிறு கிண்ணத்தில் மஞ்சள் 
தூள் மற்றும் நீர் andஉப்பு சேர்த்து பொரிக்கும்போதே 
எண்ணையில் விடலாம் .

நான் அப்படியெல்லாம் செய்யல ..பயம்தான் :)))
பொரித்து எடுத்த பின் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை மற்றும் உப்பு 
தேவையான அளவு சேர்த்து குலுக்கி பிரட்டி எடுத்தேன் .
மேசையில் வைத்து கிச்சனில் போய் வரதுக்குள்ள awwwww
காணோம் .:))))))))


இவர் எங்க பக்கத்துக்கு வீட்டு பெண்ணோட pet ஜேக்கப்
வெயிலுக்கு வெளியில் வந்தார் .அப்ப படம் எடுத்தேன் 
                                                                          
Cheeeeeeeeers !!!!!!!!!!!!!
மீண்டும் சந்திப்போம் :))))))))5/22/12

Birthday Card/ Kitchen Corner

வணக்கம்  நண்பர்களே !!!!!!!!!!!!
இன்றைக்கு லண்டனில் வெயில் கொளுத்துகின்றது .
நண்பி ஒருவருக்கு செய்த பிறந்த நாள் வாழ்த்து அட்டை .
ஸ்டெப் பை ஸ்டெப் பட விளக்கங்களுடன் .

   Materials :  
  card blank ,  mini guillotine paper cutter , 
  double sided tape ,foam tape 
   ready made 3d card topper /design cutting scissors 
  /ink pad for distressing   
   peel off borders                                                                  
                                                                                       
மற்றும் எனக்குமற்றும் உங்க அனைவருக்கும்  மிகவும் பிடித்த 
மணத்தக்காளி வத்தக்குழம்பு ஸ்ப்ரிங் கிரீன்ஸ் /collard green
பொரியல்/பொரித்த பாகற்காய் /அப்பளம் /கத்திரிக்காய் 
உருளை கூட்டு /.
அப்புறம் ரெவரிக்கு பிடித்த சுக்கு காப்பி அத்துடன் வறுத்த கடலை .
அத்தோடு கொஞ்சம் இஞ்சி சேர்த்த வெல்லம் காதி பவனில் 
வாங்கியது . வேர்க்கடலை சாப்பிடும்போது வெல்லத்துடன்
சேர்த்து சாப்பிட்டா வயிறு வலிக்காதாம் .:))))))))))
(மேபிள் சிரப்புடன் யோகர்ட் இதை மட்டும் போட்டோ 
எடுக்கலை :)))
எல்லாரும் அவங்கவங்களுக்கு பிடிச்சதை தாராளமாக 
எடுத்துக்கலாம் .
இரண்டாவது படத்தில் இருக்கும் ஒட்டக சிவிங்கி க்வில்லிங் 
முறையில் செய்தது .ஏற்க்கனவே ஆங்கில வலைப்பூவில் 
பதிவிட்டிருந்தேன் .இப்ப இங்கேயும் போட்டாச்சு .


 மணத்தக்காளி குழம்பு 
மற்றும் சிவப்பரிசி சாதம் :))
                                                                                   
மணத்தக்காளி வற்றல் 
வீட்டிலேயே அரைத்த குழம்பு மசாலா 
(வற்றல் மிளகாய் ,தனியா ,வெந்தயம் ,
கொஞ்சமே மிளகு /சீரகம் /சோம்பு /கடலைபருப்பு 
இவற்றை வறுத்து அரைத்து செய்தது )
ஸ்ப்ரிங் கிரீன் பொரியல் கீதா ஆச்சல் ரெசிப்பி பார்த்து செய்தேன் 
கத்திரி உருளை பொரியல் ஆசியாவின் ரெசிப்பி ,
பாகற்க்காய் பொரியல் ..மெலிதாக அரிந்து தயிரில் 
ஊற வைத்து உப்பு மற்றும் சாம்பார் பொடி பிரட்டி பொரித்து 
எடுத்தேன் .yummilicious!!!!!!


                                                                                
சென்ற சனிக்கிழமை நியூ காசில் வரை சென்றோம் 
போகும் வழியில் மஞ்சள் மஞ்சளாய் rapeseed 
கொள்ளை அழகு !!!! வண்டியிலிருந்தே படம் பிடிச்சேன் .
நான் வழக்கமா நடக்கும் பாதையிலும் மஞ்சள் பூக்கள் 
அதையும் என் காமெராவில் ஒளித்துக்கொண்டேன்!!!!
                                                                            
                                                                

     
எனக்கு திரும்படியும் :))))விருது கொடுத்த கலைக்கு நன்றி .
மீண்டும் சந்திப்போம் அதுவரையில் 
எல்லாரும் எப்பவும் சந்தோஷமா இருங்க .                                                                                  

5/4/12

வார இறுதி:)))))) News Round


                                                                                 
சில மாதங்களுக்கு முன்பு எங்கள் மகள் ஒரு போட்டியில் 
கலந்து கொள்கிறாள் என்று கூறியிருந்தேன் அல்லவா .
அந்த போட்டியில் 90 படங்கள் வந்திருந்தன அவற்றில்  
பத்து படங்கள் முதலிடத்தில் இருந்ததும் அதில் என் மகள் 
படமும் ஒன்று எனவும் குறிப்பிட்டு இருந்தேன் .
                                                                                     

நான் இந்தியா சென்ற சமயம் பரிசளிப்பு நடைபெற்றது .
எங்க மகளின் கைவண்ணம் மூன்றாவது பரிசுக்கு 
தேர்வாகியிருந்தது .
நியூஸ் பேப்பரில் எல்லாம் அவள் பெயர் வந்திருந்தது .
எனக்குதான் பார்க்க கொடுத்து வைக்கவில்லை அவள் 
அப்பாவுடன் சென்று நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கா .
இங்கே பிள்ளைகளின் புகைப்படத்தை தினசரிகளில் போடும் 
முன் பெற்றோரிடம் ஒப்புதல் வாங்குவார்கள் .
என் கணவர் அந்த ஒப்புதலில் புகைப்படம் பிரசுரிக்க 
வேண்டாம் என்று டிக் செய்திருக்கிறார் அதனால் பெயர் 
மட்டும் வந்துள்ளது .
//More than 90 entries from young people aged between 11 and 16 were received 
for the contest, which challenged people to draw their favourite fictional animal. 
The pictures will be displayed until tomorrow.
Click here to find out more!
First prize went to 15-year-old Victoria Gorrell with a painting of Black Beauty, 
while second prize went to 13-year-old Georgia Walsh for her picture of Bullseye the dog 
from Charles Dickens’ Oliver Twist.
Third prize featured Flag the fawn from the book The Yearling, 
put together by Sharon Hannah  from Primary School, and fourth //

அவள் பெற்ற பரிசு முப்பது பவுண்டுக்கு Hobby craft voucher
AND CERTIFICATE.
************************************************************************************
சமீபத்தில் கலிங்கநாட்டு இளவரசி வாத்து மேய்த்த 
சம்பவத்தை அனைவரும் படித்திருப்பீர்கள் என்று 
நினைக்கிறேன் .
வரலாற்று புகழ் மிக்க சம்பவமல்லவா !!!!!!!!!!!!!!!!!!!!!!!
அதை படித்ததும் எங்க வீட்டில்..................................
பொறுமை பொறுமை !!&
ஹையோ அவசரப்படாதீங்க நான் வாத்து எல்லாம் 
மேய்க்கவில்லை :)))  சில வருடங்களுக்கு முன் ஊருக்கு 
சென்றபோது எடுத்த புகைப்படங்களை பார்த்து ரசிக்க 
தந்துள்ளேன் .இவை மாஸ்கோவி வாத்து குஞ்சுகள் .
நாங்க சென்ற சமயம் வீட்டில் இருந்தவை .
என் குட்டி பொண்ணு நடை போட்டு வரும் படத்தில் 
காணப்படுபவை சாதாரண வாத்துக்கள் 
(அவுக மேய்ச்சாங்களே அதே அதே !!:))))

                                                               

மகியின் ரெசிப்பி பார்த்து செய்த வெஜ் தவா ரைஸ் .
 தோசை .உடனிருப்பது பூண்டு பொடி ,

தவா ரைசில் நான் செலரி ,காரட் , பட்டாணி ,காளான் ,உருளை 
ஆகியன சேர்த்தேன் .                                                                                     
ஒரு டேபிள் ஸ்பூன் வருத்த உளுந்து மற்றும் வறுத்த
கடலை பருப்பு /மற்றும் வறுத்த பச்சைபருப்பு தலா 
ஒரு டீஸ்பூன் மற்றும் காய்ந்த மிளகாய் ,இடித்த பூண்டு /
பெருங்காயத்தூள் இவற்றை மின் அம்மியில் அரைத்தால்
 பூண்டு பொடி ரெடி .
கவனத்தில் கொள்ள வேண்டியது எல்லா பருப்புகளையும் 
மிளகாய்சேர்த்து நன்கு அரைத்த பின் இறுதியில் இடித்த
பூண்டினை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து அரைக்கணும் .
பூண்டை இறுதியில் தான் சேர்க்க வேண்டும் .
செய்து ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம் 
என் மகள் இதை" தொட்டு தொட்டு " என்று சொல்வாள் 
தோசை இட்லியுடன் தொட்டு சாப்பிடுவதால் இந்த பெயராம் .வார இறுதியினை  அனைவரும் சந்தோஷமா கொண்டாடுங்க .
cheeeers !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


5/2/12

விருதும் !! சிறு விருந்தும் :))))

                                                                                   


நம்ம கிரிஜா எனக்கு ஒரு அவார்ட் கொடுத்திருக்காங்க .
                                                                                   
http://kaathodupesava.blogspot.co.uk/
Thanks Girija :)))))
விதிமுறைகளின் படி நம்மைப்பற்றிய சில விஷயங்களை 
 பகிர வேணுமாம் .

அதான் எல்லாருக்குமே தெரியுமே என்னைப்பற்றி 
அமைதியான !அறிவான !
அழகான! (ச்ச் ச்ச் சும்மா) ஒகே ஒகே 
( இதுக்கெல்லாம் கோபம் கொள்ள கூடாது :))))))))
அப்படீன்னுதான்  எல்லாரும் சொல்றாங்க .
ராஜா ராணி குட்டி இளவரசின்னு சின்ன குடும்பம் எங்களது .

நான் சைவம் . ஆனா கணவருக்கும் மகளுக்கும் அசைவம்
 சமைப்பேன் .
AVON நதியோரம் ஜாலியா நாங்க ரெண்டு பேரும் நடந்து 
போவது .மற்றும் CANAL BASIN ஓரமிருக்கும் 
வாத்துகளுக்கு ப்ரெட் போடுவது பிடிக்கும்.


                                                                            


இத்தனை நாள் மீள் சுழற்சி செய்யறேன்னு நிறைய JUNK
சேர்த்து வச்சிருந்தேன். நான் கொஞ்சம் ஊருக்கு போயிட்டு 
வரதுக்குள்ள எங்க வீட்டு ராசா வீட்டை கிளீன் செய்றேன்னு  
எல்லா குப்பையையும் தூக்கி வீசிட்டார் .
அப்ப இனிமே எப்படி ப்ளாக் ஓட்டறதுன்னு தூக்கம் வராம 
யோசிச்சப்ப உதிச்சது புதிய முயற்சி சமையலும் கிராஃப்டும்.

இந்த விருதை நான் எல்லாருடனும் WITH ALL MY FRIENDS 
பகிர்ந்து கொள்கிறேன் .

இந்தாங்க எல்லாரும் PITTA BREAD PIZZA மற்றும் SALAD
செஞ்சிருக்கேன் சாப்பிடுங்க :}}}}
இதை ஜலீலா அவர்களின்  சமையல் event ற்கு அனுப்புகிறேன் 
http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html
துருவிய சீஸ் ,மொசரெல்ல,ஆலிவ் எண்ணையில் 
வதக்கிய பூண்டு ,மஷ்ரூம்ஸ் ,சிவப்பு மற்றும் பச்சை 
குட மிளகா ,வெங்காயம் ,தக்காளி 
ஒரிகனோ /தக்காளி சாஸ் இவற்றை PITTA ப்ரெடில் 
அரேஞ் செய்து முச்சூடு செய்த அவனில் பத்து நிமிடம்
 வைத்து எடுத்தேன் .

                 BEFORE                                                    
                                                                                     
                   AFTER                                                                  
செலரி ,வெங்காயம் ,வெள்ளரி,தக்காளி .கேரட் ,லெட்டிஸ்,
ரெட் பெல் பெப்பர் இவற்றுடன் 
SALAD TOPPING POLISH கடையில் வாங்கியது 
மற்றும் சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து செய்தது ,

இந்த சாலட் டாப்பிங் ஜெர்மனி ஃபிரான்ஸ் சுவிஸ் 
இங்கெல்லாம் ரொம்ப பிரபலம் (நான் கொஞ்சமாக தான் 
சேர்ப்பேன் உப்பு தன்மை அதிகமா  இருக்கும் .  )                                                              
                                                                                       
                         

மீண்டும் சந்திப்போம் .

நண்பர்களே உங்கள் சிலரின் வலைப்பக்கம் வந்தால் flash, flicker அடித்துக்கொண்டே இருக்கு .ரெவரி மற்றும் ராஜேஸ்வரி அக்காவின் சமீப பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியல .இந்த பிரச்சினை இன்னும் சில வலைபூக்களுக்கும் இருக்கு .என் கணினியில் ஏதேனும் பிரச்சினையா ??தெரிந்தவர்கள் கூறவும் .