அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/26/12

புதிய முயற்சி !!!!!!!!!!!:)) சமையலும் ,கிராஃப்டும்

வணக்கம் நண்பர்களே :)

           
                      அண்டார்டிக் வரை சென்று சுற்றுப்பயணத்தை 
வெற்றிகரமாக முடித்து எங்க நாட்டுக்கு திரும்பியிருக்கும் ,
தானை தலைவி ,அஞ்சா நெஞ்சம் படைத்த பெண் சிங்கம் 
(பூனைதான் )மியாவ் :)))))))))) 
அவர்களை பெஸ்ட் விஷஸ் சொல்லிஅகில உலக டாப் ஸ்டார் 
அதிரா ரசிகர் மன்றம் சார்பாக  வருக வருக என வரவேற்கிறேன் .

                                                                                    

இரண்டொரு நாட்களுக்கு முன்பு தான் நினைவு வந்தது ..

                                                                                   

நான் பதிவுலகம் வந்து ...தமிழில் எழுத  ஆரம்பித்து ஒரு 
வருடம் ஆகிறது .
முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதி கொண்டிருந்த 
என்னை தமிழில் எழுத ஊக்கப்படுத்தியது நம்ம நாட்டாமை 
அந்நியன் அயுப் சகோதரர்தான் .
(எங்கிருந்தாலும் வந்து ஆஜராகவும் )

எனது முதல் போஸ்டில் சமையல் தவிர மற்ற அனைத்தையும் 
பற்றி எழுதுவேன் என குறிப்பிட்டு இருந்தேன் .அதில் ஒரு சிறு 
மாற்றம் :}}}}}}}}}}} 
ஹி ! ஹி!!
வற்றல் மிளகாய்க்கும், மோர் மிளகாய்க்கும் வித்தியாசம் 
தெரியாமல் சமைத்து கொண்டிருந்த என்னையும் சமையலில் 
முன்னேற்றிய சமையல் ராணிகளின் குறிப்பை பார்த்து செய்த 
உணவு வகைகளை பரிமாறப்போகிறேன்..
ஸோ என்ஜாய் . :}}}}}}}}}}}


                                                                   
ஆசியாவின் ஈசி பரோட்டாவும் ,
ஊரெல்லாம் சுற்றி களைத்து !!!!!!!!! இன்னமும் (கொண்டு வராத ) 
அண்டார்டிக் மிட்டாயை தேடிக்கொண்டிருக்கும்  மியாவுக்கு 
என்று செய்தது :))
                                                                                 

என் போன்ற சைவ பிரியர்களுக்கு :}}}}}}

மாங்காய் சாதம் , பிரொக்கோலி காரட் தேங்காய் சேர்த்த கூட்டு 
மற்றும் வற்றல்     .மாங்காய் சாதம் கமலாவின்  அடுப்பங்கரை குறிப்பு பார்த்து 
செய்தேன் .ப்ரொகொலி கூட்டு 

ஜலீலா அவர்களின் குறிப்பு தான் இதுவும் 


இன்னும் நிறைய பகிர்ந்து கொள்வேன் .


அம்மா ... மறக்கவில்லை முடியவில்லை .முயற்சிக்கிறேன் ..
என்னதான் முழுதும் என்னை வேலைகளில் ஈடுப்படுத்திக்
கொண்டாலும்மனதின் ஒரு மூலையில் வலிக்கும் .
நேற்று திடீரென பார்க்கும்போது அம்மாவை க்ளோன் செய்து 
வைத்த மாதிரியே சாயலில் எங்கள் மகள் .
என் கணவரே சொன்னார் .

..............................

மீண்டும் சந்திப்போம் ..

Angelin .

                                                                                    
                              

84 comments:

 1. ஹைஈஈஈஈஈஈஇ அஞ்சுஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஅ

  ReplyDelete
 2. மீ தி பிர்ஸ்த்தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

  ReplyDelete
  Replies
  1. //பிர்ஸ்த்தூஊஊஊஊ// எனக்கு எல்லா பாஷையும் மறந்து போச் அவ்வ்வ் :-))

   Delete
 3. தானை தலைவி ,அஞ்சா நெஞ்சம் படைத்த பெண் சிங்கம்
  (பூனைதான் )மியாவ் /////////////////

  அமைதிப் புயல்,நட்சத்திர நாயகி இன்னும் நிறைய நிறைய சேர்த்து இருக்கலாமே அக்கா

  ReplyDelete
  Replies
  1. என்னாது அமைதி புயலா ஆஆஆஆஆ .
   நான் பொய் பேச மாட்டேன்

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 4. பெஸ்ட் விஷஸ் சொல்லிஅகில உலக டாப் ஸ்டார்
  அதிரா ரசிகர் மன்றம் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன் //

  நானும் வரவேற்கிறேன்...ஆரத்தி எல்லாம் தயார் ஆ இருக்குதானே ....

  ReplyDelete
  Replies
  1. வெங்காய வெடி ஆயிரம் வாலா இவ்வளவு ஏன் hand grenade கூட இருக்கு

   Delete
 5. நான் பதிவுலகம் வந்து ...தமிழில் எழுத ஆரம்பித்து ஒரு
  வருடம் ஆகிறது ./////////  வாழ்த்துக்கள் அக்கா ...

  ஒரு வருடமா தமிழை கொலை பண்ணிட்டு இருக்கீங்க ன்னு சொல்லுங்க ...

  ReplyDelete
  Replies
  1. இது எனக்கு நல்லாவே தெரியும் உங்க குரு தான் முதல்ல உங்கள அனுப்பி வெள்ளோட்டம் பாக்கிறாங்க .கலை போடற கமண்டுக்கு கலையின் குருவுக்கு இருட்டடி :}}}}}}}}}}}}}

   Delete
  2. //ஒரு வருடமா தமிழை கொலை பண்ணிட்டு இருக்கீங்க ன்னு சொல்லுங்க //

   //கலை போடற கமண்டுக்கு கலையின் குருவுக்கு இருட்டடி :}}}}}}}}}}}}}//

   ஹா...ஹா... நான் சிரிக்கிற வெடிச்சிரிப்புக்கு பக்கத்துல இருக்கிற ஆள் எழுந்து ஓடிட்டான் ஹா..ஹா... :-)))

   Delete
 6. உணவு வகைகளை பரிமாறப்போகிறேன்..
  ஸோ என்ஜாய் . :////////////////


  அய்யயயூ அக்கா நான் இப்போதான் சாப்பிட்டு வந்தினம் ...வேணுமெண்டால் கிரி அக்காவயும் எளிக்குட்டியும் வைத்து டெஸ்ட் பண்ணுங்களேன் ................
  மீ ஈஈஈஈஈ எஸ்கேப் ...குருவே நீங்களும் என் கூடவே ஓடியாந்துருங்கள் ... அயயியூ அஞ்சு அக்கா கூப்பிடுறது கேக்குதே ...நோஒ அஞ்சு அக்கா நாங்கள் பின்னொரு நாளில் விருந்தே சாப்பிடுறோம் ...ப்ளீஸ் எங்களை விட்டுருங்கோ

  ReplyDelete
  Replies
  1. ஹையோ !!!!!!! நான் கலை கிட்ட தனியா மாட்டிகிட்டேனே யாராவது என்னை காப்பாத்துங்களேன் ப்ளீஸ் .

   Delete
 7. நேற்று திடீரென பார்க்கும்போது அம்மாவை க்ளோன் செய்து
  வைத்த மாதிரியே சாயலில் எங்கள் மகள் .
  என் கணவரே சொன்னார் .///

  அம்மா தன அக்கா உங்கட மகள் யுருவில் இருக்கிறாங்க ...

  நீங்க துக்கம் கொள்ளதிங்கோ ..
  உங்க கூடவே தான் அக்கா உங்க அம்மா இருக்கிறாங்க ...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிம்மா கலை குட்டி

   Delete
 8. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))) மீயையும்... மீயையும் ஆராவது காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்ங்கோஓஓஒ:))).

  ReplyDelete
  Replies
  1. நோ நோ !!! நீங்க சாப்பிட்டே ஆகணும் கஷ்டப்பட்டு ஒரு வாரமுன் செய்தது .ஃப்ரிட்ஜ்ல கூட வைக்கல .எவ்ளோ ஃப்ரஸா இருக்கு பாருங்க

   Delete
 9. //என் போன்ற சைவ பிரியர்களுக்கு :}}}}}}//

  படித்ததும் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

  //அம்மா ... மறக்கவில்லை முடியவில்லை .முயற்சிக்கிறேன் .
  என்னதான் முழுதும் என்னை வேலைகளில் ஈடுப்படுத்திக்
  கொண்டாலும்மனதின் ஒரு மூலையில் வலிக்கும் .
  நேற்று திடீரென பார்க்கும்போது அம்மாவை க்ளோன் செய்து
  வைத்த மாதிரியே சாயலில் எங்கள் மகள் .
  என் கணவரே சொன்னார் .//

  இது தான் இயற்கை நமக்கு அளிக்கும் ஒரே ஆறுதல்.

  நீண்ட நாட்களுக்குப்பின் தங்கள் பதிவைப்பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோபு சார்

   Delete
 10. வாழ்த்துக்கள் ஏஞ்சலின்...on your Anniversary...

  அம்மா ... மறக்கவில்லை முடியவில்லை...//Hang in there...You will get through this phase...

  வாழ்த்துக்கள்...உங்கள் தானை தலைவிக்கும்...

  பசிக்குது...வேறென்ன பண்ண...ஜொள்ளு விட்டுக்கொண்டே இத்துப்போன சாண்ட்விச்சை சாப்பிட்டுக்கொள்கிறேன்...ம்ம்ம்ம்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரெவரி .
   வேணும்னா பார்சல் செய்யட்டா ?:}}}}}.

   Delete
 11. நான் பதிவுலகம் வந்து ...தமிழில் எழுத ஆரம்பித்து ஒரு
  வருடம் ஆகிறது ./////////

  வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்... இன்னும் பல வருடம் காண வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அதிரா !!!!!!!! களைப்பு எல்லாம் தீர்ந்ததா இல்லை இன்னும் ஜெட் லாகா

   Delete
  2. முடியேல்லை அஞ்சு, வந்திறங்கியவுடனேயே எல்லாம் ஆரம்பித்துவிட்டமையால் உடலுக்கு ஓய்வும் இல்லை, நித்திரையும் இல்லை. நைட் பிளைட்டில் தூங்க முடியாது, கண்களை உருட்டியபடியே வந்து சேர்ந்தேன்... அது பாடாய்ப் படுத்துது.....

   Delete
  3. குறைந்த இடைவெளியில் இரண்டு முறை சென்று திருபி வந்ததாலோ என்னவோ எனக்கு களைப்பு இம்முறை இல்லை .ப்ளைட்ல சாப்பிடக்கூட இல்ல .நான் நல்லா தூங்கிட்டேன்

   Delete
  4. நல்லா படுத்து தூங்குங்க .ரெஸ்ட் எடுத்தா நல்லது

   Delete
 12. முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதி கொண்டிருந்த
  என்னை தமிழில் எழுத ஊக்கப்படுத்தியது நம்ம நாட்டாமை
  அந்நியன் அயுப் சகோதரர்தான் .
  (எங்கிருந்தாலும் வந்து ஆஜராகவும் )///

  நானும் சேர்ந்து தேடிட்டிருக்கிறேன், ஆஜராகுங்கோ அய்யூப்.....

  ReplyDelete
 13. //ஊரெல்லாம் சுற்றி களைத்து !!!!!!!!! இன்னமும் (கொண்டு வராத )
  அண்டார்டிக் மிட்டாயை தேடிக்கொண்டிருக்கும் மியாவுக்கு
  என்று செய்தது :))//

  தங்கூஊஊஊஊஊஊ தங்கூஊஊஊஊஊஊ... நல்ல வேளை பச்சைப்பூ இங்கின இல்லாமல் வதனப் புத்தகத்தில் கலக்கிறபடியால்(கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) என்னுடன் பங்குச் சண்டை போட ஆருமே இல்லை... அனைத்தும் எனக்கே எனக்கா?:)).. என் சிஷ்யையும் சைவம் போல:))).

  ReplyDelete
 14. //அம்மா ... மறக்கவில்லை முடியவில்லை .முயற்சிக்கிறேன் ..
  //

  எப்படி முடியும்? எதற்காக மறக்க வேண்டும், அவ உடலால்தான் மறைந்தாவே தவிர உங்களோடுதான் இருக்கிறா, அவ ஊரில் இருக்கிறா என நினையுங்கோ, மனமும் உடலும் தென்பாக இருக்கும்...

  மீண்டும் பதிவெழுத ஆரம்பித்தது மகிழ்ச்சியே.... இனிமேல் இப்படியே தொடர்வோம்.

  என்னால முடியவே முடியேல்லை, ஆனா இப்படியே எத்தனை நாட்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்க முடியும், இனி எல்லோர் வீட்டுக்கும் போய் விட்டுத்தான் முகுதி.

  இங்கிருந்து போய் அங்கிறங்கினால்.... ஓடர்:)) போடப் போட எல்லாம் கைக்கு வரும்(ரீ, etc....:)) ஆனா இங்கு நாமேதான் ரீ ஊத்தோணுமெல்லோ?:)))

  ReplyDelete
  Replies
  1. ////அம்மா ... மறக்கவில்லை முடியவில்லை .முயற்சிக்கிறேன் ..
   //

   எப்படி முடியும்? எதற்காக மறக்க வேண்டும், அவ உடலால்தான் மறைந்தாவே தவிர உங்களோடுதான் இருக்கிறா, அவ ஊரில் இருக்கிறா என நினையுங்கோ, மனமும் உடலும் தென்பாக இருக்கும்... // ரிப்பீட்ட்ட்

   Delete
 15. ஆமாம் அதிரா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை .

  ReplyDelete
 16. ஏஞ்சலின் நல்ல பகிர்வு.சமைத்து அசத்தியமைக்கு சந்தோஷம்பா.உங்கள் மகள் அம்மா வடிவில் எனும் பொழுது மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா .பரோட்டா ரொம்ப டேஸ்டியாக இருக்குன்னு என் மகள் சொன்னா .
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 17. கொஞ்சம் லேட்டா வந்திருக்கேன் போல! சமைத்து அசத்திட்டீங்க..சூப்பரு! எல்லா ஐட்டங்களும் அருமையா இருக்கு. ப்ரோக்கலி-கேரட் கூட்டு நான் செய்ததில்லை,ஏஞ்சல் அக்கா..என் பேரைத் தூக்கிருங்க. ;)

  வலைப்பூவுக்கு ஒரு வயதானதற்கு வாழ்த்துக்கள்! இன்னும் பலவருடங்கள் காண வாழ்த்துக்கள்! :)

  அம்மா...ஈடு செய்ய முடியாத இழப்புதான்! ஆனால் உங்க வயிற்றிலேயே பிறந்திருக்கிறார் என்று நினைச்சுக்குங்க, மனசு ஆறிடும். இதுவும் கடந்து போகும்!

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை மகி :}.கதம்பம் மாதிரி எல்லார் ரேசிப்பியையும் கலந்து
   கட்டி செய்திருக்கேன் என்று நினைக்கிறேன் .அடுத்தது உங்க தவா ரைஸ் படம் எல்லாம் எடுத்துட்டேன் .நிச்சயம் என் சொந்த ரெசிப்பியா இருக்க முடியாது இந்த பிரொக்கோலி கூட்டு .

   Delete
 18. எலும்பு சூப் நம்பியெல்லோ குடிச்சனான்:)))... இப்போ ஆடு கத்துவதுபோல ஒரு சவுண்டு வருதே வயிற்றுக்குள் இருந்து... ஹையோ.. ஜெட் லாக் உடன் இது வேற பிரச்சனையா இருக்கே:))..... தேம்ஸ்ஸ் வெயா ஆ யூஊஊஊஊஊ:))

  ReplyDelete
  Replies
  1. ஃப்ரீயா கிடைக்குதுன்னு பகிர்ந்த சாபிடாமல் அவசர அவசரமா எலும்போட விழுங்கினா இப்படிதான் ஆடு கத்தும் :}}}}}}}}]நாளைக்கு ஆட்டு குட்டியும் கத்தும் ஹா ஹா ஹா

   Delete
 19. ஏஞ்சல்...அசத்திட்டீங்க முதல் வருஷக் கொண்டாட்டத்துக்கு சூப்பும் பரோட்டாவும் தந்து.வாழ்த்துகள்.ஆனா அதிரா சொல்றதைக் கேக்க எனக்கும் வயித்துக்க செய்யுது !

  அம்மா...எப்போதும் உங்களை வழிநடத்திக்கொண்டேயிருப்பா.மீண்டும் உங்கள் எழுத்தைக் கண்டதே பெருமகிழ்ச்சி ஏஞ்சல்.வாழ்வைப் பக்குவப்படுத்தப் பழகிக்கொள்வோம் !

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஹேமா .உங்களுக்கெல்லாம் உடனே சுட சுட செய்து தருவேன் .அப்படியெல்லாம் பயப்படக்கூடாது .பூசாருக்கு மட்டும் ஸ்பெஷலா
   பத்து நாள் முந்தையது :}}}}}}}}}}}}}}}}}}}}

   வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 20. nooooooooooooo mmmmmmmmmeeeeeeeeeeeee the firstuuuuuuuuuu

  ReplyDelete
 21. அடடா கொஞ்சம் லேட்
  ம் முதலில் வாழ்த்துக்கள்
  ஒரு வருடம் வெற்றிகரமாக முடிந்து தொடர்ந்து இன்னும் பல வருடம்
  கொண்டாட வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. புது ரேசெப்பி எல்லாம் கொடுக்க போறீங்க
  ம் பயன் படும் என்று நினைக்றேன்

  ReplyDelete
  Replies
  1. நோ நோ நான் ரெசிப்பி தரல்லை .செய்து காட்டிருக்கேன் அவ்ளோதான் :}}}}}}}}.

   Delete
 23. கடவுளே கடவுளே இந்த கலை ஆன்ட்டி கொஞ்சமாவது மனசாட்சிய கொடு எனக்கு சுத்தமா தமிழ் மறந்து விடும் போல இருக்கே..அவ்வவ்

  ReplyDelete
  Replies
  1. அதே அதே அ ஃ தே:}}}}}}}}}}}}}}}

   Delete
 24. அகில உலக டாப் ஸ்டார் என்றால் அது பவர் ஸ்டார் தானே..

  ReplyDelete
 25. வணக்கம் அக்கா,
  பதிவுலகில் முதலாமாண்டு நிறைவினை கொண்டாடுவதற்கு வாழ்த்துக்கள்.

  புதிய முயற்சி களை கட்டட்டும்.

  படிக்க காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி வாங்க நிரூபன் .அப்ப பரோட்டா உங்களுக்கு வேணாமா .அக்காவை அழ வைக்க கூடாது .எவ்ளோ கஷ்டப்பட்டு செய்திருக்கேன் டெஸ்ட் பண்ணாம போறீங்களே !!!!!!!!!!

   Delete
 26. வலைப்பூவின் முதல் வருட நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  அம்மா உருவில் இருக்கும் மகளை நினைத்து மனதை தேற்றிக் கொள்ளுங்கள்.....எல்லாம் சரியாகி விடும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி ஆதி .நீங்க சொல்வது சரியே .மகளை பார்த்து தான் நான் ஆறுதல் அடைகிறேன் .

   Delete
 27. மீண்டும் உங்களை இங்குக் காண்பதில் மகிழ்ச்சி ஏஞ்சலின். அம்மாதான் உங்களை மறுபடியும் எழுத வைக்கிறாங்க. அதனால் கலங்காதீங்க.

  முதல் வருடப் பிறந்தநாளை அழகாக் கொண்டாடிட்டீங்க. வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுதுங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா .வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி .அம்மா இப்போ என் மகளாய் .அதே நிறம் குணம் .பேசுவது என்று .மலைத்து போகிறேன்

   Delete
 28. வாங்க வாங்க ஏஞ்சலின்.ஒருவயதுக்கு வாழ்த்துகக்ள்.

  வற்றல் மிளகாய்க்கும், மோர் மிளகாய்க்கும் வித்தியாசம்
  தெரியாமல் சமைத்து கொண்டிருந்த என்னையும் சமையலில்
  முன்னேற்றிய சமையல் ராணிகளின் குறிப்பை பார்த்து செய்த
  உணவு வகைகளை பரிமாறப்போகிறேன்// அடேங்கப்பா!!காத்திருக்கிறோம் ஆவலுடன்.

  ReplyDelete
  Replies
  1. யாருமே கவனிக்காததை சாதிகா கண்டுபிடுசிட்டாங்க :)))))))) மோர் மிளகா /வற்றல் மிளகாய்வைத்தான் சொல்றேன் .உண்மைதான் சாதிகா. ஜலீலா ஆசியா மேனகா கீதா ஆச்சல் மகி ஆகிய அறுசுவை அரசிகளால்தான் நான் கொஞ்சமேனும் சமையலில் முன்னேரியிருக்கேன் .அந்த சந்தோஷத்தை தான் செய்து பகிரபோகிறேன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

   Delete
 29. Anju welcome back and congratulations on the 1st anniversary. Romba peter vidarennu thittaadheenga. en neram en computer il ellaam maari poyindhi!! gmail settings ellaam maari poyi naan ennikku itha ellaam therinjukittu kummi adikka varrathu?? en blogula mahi yin kummikku innum pathil podale. athukkulle kutti poos vera enna pottu thaakkittu irukkaanga. All of you waitees varen .....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சீக்கிரம் சரி செய்துட்டு வாங்க கிரிஜா .இந்த குட்டி பூஸ்
   எங்கிருந்தாவது என்னை நோட் பண்ணி அட்டாக் செய்து .பூனை பொறி ரெடி பண்ணனும் .பெரிய பூஸ் வசமா மாட்டிக்கிச்சு .இப்பெல்லாம் மியாவ்னு கத்துறதுக்கு பதில் மே மே மே ன்னு தான் கத்துறாங்க :}}}}}}}}}]

   Delete
 30. நான் பதிவுலகம் வந்து ...தமிழில் எழுத ஆரம்பித்து ஒரு
  வருடம் ஆகிறது


  வலைப்பூவின் முதல் வருட நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்கா

   Delete
 31. மேஏஏ...........ம்ம்ம்மேஏஏஏஏஏஏ.... மேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ... ம்மேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ:)))

  ReplyDelete
  Replies
  1. "ஆடு ஒன்று புறப்பட்டதே "
   சிச்சுவேஷன் சாங் :)))))))))

   Delete
  2. இது ஆட்டு குட்டி சவுண்டூஊஊஊ :-))

   Delete
 32. அது எப்பிடிக் கத்தினாலும் உங்களுக்காக 3 நாள் முன்னால வராது அதீஸ். தொண்டை அடைக்கப் போகுது, கவனம்.

  ReplyDelete
 33. வலைப்பூவுக்கு முதலாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏஞ்சல்.

  காலம் எல்லா வலிகளையும் ஆற்றும். என் பிரார்த்தனைகள்.

  //மாங்காய் சாதம் , பிரொக்கோலி காரட் தேங்காய் சேர்த்த கூட்டு மற்றும் வற்றல்// மற்றும் அதன் மூக்கு, முழி, வாய், கால்! மற்றும் ஹேர் ஸ்டைல் அனைத்தும் அழகு. ;) நியூஸிக்கு ஒரு ப்ளேட் குரியர் ப்ளீஸ்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இமா .
   இதோ உடனே பார்சல் செய்யறேன் .

   இமா இங்கே ஒரு farmer அவரோட செம்மறியாட்டை காணோம்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருக்கார் .யாரோ ஆட்டை ஆட்டைய போட்டுட்டாங்களாம் .ஒரு பக்கம் போனாலே "மே மே மே " இன்னு சத்தம் கேக்குது :))))))))))

   Delete
  2. ஹேர் ஸ்டைல் சின்ன வயசு நினைவில் செய்தது ,ரசித்ததற்கு நன்றி இமா

   Delete
  3. என்னாது ஆட்டைக் காணல்லியாமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்:)) அதுதான் பச்சைப்பூ ஒளிச்சிட்டார்... தேடிக் கண்டு பிடியுங்கோஓஓஓஓ:)) இது வேற கண்டு பிடிக்கிறது:)))

   Delete
 34. ஆஆ!!! அஞ்சு, நீங்க சமைப்பீங்களோ??? கடைசியா வந்தபடியால் சட்டி, ப்ளேட் கூட மிச்சம் இல்லை. அவ்வ்வ்....
  எல்லாமே சூப்பரோ சூப்பர்.
  தானைத் தலைவிக்கு ஏன் இவ்வளவு ஆரவாரம் என்று விளங்கவில்லை. ஏதாவது போருக்கு போய் ( தோற்றுப் போய் ) வந்தபடியாலோ????!!!! புஷ், முறைக்கப்படாது. கூல் பேபி கூல்.
  அஞ்சு, நீண்ட நாட்களின் பின்பு பதிவு பார்த்தது மிகவும் சந்தோஷமா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கோ. ஒக்கேவா?

  ReplyDelete
 35. இப்ப எனக்கு வெக்கம் வெக்கமா வருது .ஏதோ சமைப்பேன் வானதி ,
  பூசாருக்கு போட்டியா அடுத்தது ஆப்பம் செய்யப்போறேன்

  ReplyDelete
 36. ஏஞ்செல் உங்க கூட ஒரு விருதை பகிர்ந்து உள்ளேன். ப்ளீஸ் வந்து வாங்கிக்குங்க

  ReplyDelete
 37. //நான் பதிவுலகம் வந்து ...தமிழில் எழுத ஆரம்பித்து ஒரு
  வருடம் ஆகிறது //

  வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்... இன்னும் பலப்பல வருடம் நீடித்து நிலைக்க வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 38. நான் இதை பார்க்க்வே இல்லையே, என் மட்டன் எலுப்பு ச்சூப்,புரோகோலி பொரியல் எல்லாம் செய்து பார்த்தது மிக்க மகிழ்சி.


  அப்பவே வந்து சொல்லி இருக்கலாமே முன்னமே வந்து இருப்பேன்
  ரொம்ப சந்தோஷம்
  நேரமின்மை++ கை வலி காரணமாக போஸ்ட் ட்ராஃப்டில் பப்லிஷ் கொடுத்துட்டேன், நிறைய இடுகைகளுக்கு பதிலே போடவில்லை,.

  ReplyDelete
 39. லேட்டான) வாழ்த்துக்கள் அஞ்சலின்.
  "இன்னும் நிறைய பகிர்ந்து கொள்வேன்"//
  எதிர்பார்க்கிறோம்.
  க்விலிங்) கார்ட்(பூஸார்) அழகா செய்திருக்கிறீங்க.
  சமையல் குறிப்புக்கள் பகிர்வதற்கு நன்றிகள்.
  உங்க மாங்காய்சாதம் அழகாக‌ டெக்ரேட் செய்திருக்கிறீங்க.

  ReplyDelete
 40. http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html?showComment=1388105779571#c1927188437863207263
  இன்றைய வலைச்சரத்தில்
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 41. வணக்கம்
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_27.html?showComment=1388106172450#c4072647375032658530
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 42. வணக்கம்
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_27.html?showComment=1388106172450#c4072647375032658530
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 43. வலைச்சர அறிமுகத்துக்கு
  வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்..!!

  ReplyDelete
 44. அஞ்சு வலைச்சரத்தின் பாராட்டுதல்களுக்கு பாராட்டுதல்கள்.
  உன் வலைப்பூவின்முதலைமாண்டு நிறைவுக்கும் ஆசிகள். அன்புடன்

  ReplyDelete