அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/20/12

புத்தாண்டு தீர்மானங்கள் ..............


புத்தாண்டு தீர்மானங்கள் .:  


எனும் தலைப்பில் என்னை தொடர் பதிவெழுத 
சகோதரர் ரெவரி அழைத்திருந்தார் .
இதோ என் தீர்மானங்கள் 
                                                                        


10,  சொல்ல வேண்டிய நேரத்தில் /கோபம்கொள்ள 
        வேண்டிய நேரத்தில் ரௌத்திரம்   பழக வேண்டிய 
       இடத்தில் கருத்துக்களை தைரியமாக சொல்ல 
       வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன் .
        
       (மீன் அரசியல்ல இறங்கபோகுது )
9,    வயலின் கிளாஸ் அல்லது பியானோ கிளாஸ் 
        சேரணும்.
         (சனிக்கிழமை சமையல் வேலையில் இருந்து 
          தப்பிக்க கண்டுப்பிடிச்ச  வழி )


                                                                                                         


8,     பரணில்  தூங்குகிற(  LOFT இல் )       எக்சர்சைஸ் 
        மெஷினை எடுத்து அசெம்பிள் செய்து ...............
        இருங்க கற்பனை குதிரையை ......அவ்ளோ தூரம் ஓட 
        விட கூடாது அது எனக்கில்லை பேப்பர்லபோட்டு 
        விற்கனும்.
7,   ஒரு நாளைக்கு எப்படியாவது ஐந்து கப் கருப்பட்டி காப்பி 
       குடிக்கிறேன் .என் அப்பாவிடம் இருந்து தொற்றிக்கொண்ட 
       இனிய கெட்ட பழக்கம் ..இனி இரண்டு கோப்பை மட்டும் 
       குடிக்க முயற்சி செய்கிறேன் .
6,    இப்பெல்லாம்  ரொம்பவே அதிகம் அசைவம் 
       சமைக்கிறேன் இனி சமைக்கவே கூடாது .
       சைவம் மட்டும் என்று அதிரடி நடவடிக்கை 
       எடுத்துவிட்டேன்  .


       ஏன் ஏன் ஏன் இந்த கொலவெறின்னு ஒரு ஜீவன் 
       கத்துவது கத்துவது கேட்க்குமே .............
      அவர் மிஸ்டர் ஏஞ்சல் தான் 
       நான் இனிப்பு மற்றும் அசைவம் உண்பதில்லை
       ஹா ஹா ஹா

5,     என் மகனுக்கு பெண் பார்க்கிறேன் சரிவர  
        மாட்டேங்குது 
        
        இதோ மாப்பிள்ளை படம் .சகல அம்சம் பொருந்திய 
        பெண் இருந்தா சொல்லுங்க .
                                                                                 


                                                                                              
4,   எனது  பேராசை எப்படியாவது சொந்தமா ஒரு 
      சமையல் குறிப்பு செய்முறை  விளக்கத்துடன் 
      எழுதணும் .
        
      (யாரும் இதுக்கு சிரிக்க கூடாது ஆமா )


3,  இந்த வருடமாவது துருக்கிக்கு ஒரு ட்ரிப் போய் 
      வரணும் .பல வருடமா யோசிக்கிறோம் .


2,    மகளுக்கு  தமிழ்  எழுத  படிக்க  கற்று  கொடுக்கணும் .


1,   இந்த தீர்மானம் எதையாவது செய்ய வேண்டும் என
       நினைத்தால் சாக்கு போக்கு சொல்லாமல் காலம் 
      கடத்தாமல் உடனே செய்து முடிக்கணும் .
        
          (அதாவது நான் கைவினை செய்கிறேன்
         பேர்வழி என்று ஒரு மூட்டை JUNK சேர்த்து 
          வைத்திருக்கேன் அதையெல்லாம் முதலில் 
         வீட்டை விட்டு வெளியேற்றணும் )


          
யாரும் ஓடாதீங்க குறிப்பா 
கிரிஜா /ஜெய் /மியாவ் அதிரா /வானதி /மகி 
உங்க அனைவரையும் இந்த தொடரை தொடருமாறு 
அன்போடு மற்றும் பெருங்கம்போடு கேட்டுக்கொள்கிறேன் .
முடிந்தால் பிப்ரவரிக்குள் எழுதுங்க இல்லாவிடில் 
2013 ஜனவரிக்கு எழுதுங்க .  
       
        
        

       

139 comments:

 1. நன்றி அன்பு சகோதரி ஏஞ்சலின்...என் அழைப்பை ஏற்று எழுதியதற்கு...எல்லாமே நல்ல தீர்மானங்கள் தான்...

  குறிப்பாக...

  ரௌத்திரம்...என் கூட பிறந்தது...
  மகளுக்கு தமிழ்...நாங்க பொண்ணுக்கு கொடுத்த சொத்து...

  Violin soulful...பிடிக்கும்..

  துருக்கி பயணத்துக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. கருப்பட்டி காப்பி...அதுக்கு இணையே இல்லை...அதுவும் அய்யனார் காபி தூள் போட்டு...

  பேஷ்...பேஷ்..சாரி நரசுஸ்...

  நன்றி அன்பு சகோதரி ஏஞ்சலின்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ரெவரி .இங்கே நிறைய பேர் தாய்மொழி தெரியாமலே வளர்கிறார்கள் .எங்கள் ஆலயத்தில் ஒருவர் எண்பத்தைந்து வயதிருக்கும்
   செயின்ட் வின்சென்ட் தீவில் இருந்து வந்தவர் தனது பெயர் ராஜ்குமார் சுண்டராஸ் (அதாவது சுந்தர் ராஜன் என்பதை சுருக்கியிருக்கிறார்கள் )

   நான் இந்தியாவை சேர்ந்தவன் எந்த பகுதி என்று தெரியாது ஆனால் ஒரு படத்தில் நிறைய தென்னை மரங்கள் கடல் எல்லாம் இருக்கும் போட்டோ என் தாத்தா காட்டினார் .உடனே புரிந்துகொண்டேன் அவர் நம் தென் பகுதி
   நாகர்கோவில் அல்லது ராமேஸ்வரம் /கேரளா பகுதியில் இருந்து மைக்ரேட் செய்திருப்பார் .அவருக்கு ஆங்கிலம் தவிர ஒன்றும் தெரியாது .
   தாய்நாடும் தாய்மொழியும் தெரியாமலிருப்பது கொடுமை

   Delete
 3. ஆ...வடை...பாயாசம் :-))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. ஹா...ஹா..ஹா.. விடமாட்டமில்ல.... வடை பாயசம் கிடைக்குதோ இல்லையோ.. ஆயா உங்களுக்குத்தான்... கூட்டிட்டுப் போயிடுங்க...

   அஞ்சு எனக்கு நித்திரை வந்திட்டுது, அவசரமா நான் போகோணும் நல்லிரவூஊஊஊஊஊஊஊஊஊஊஊ.. மீஈஈஈஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))))).

   Delete
  2. சீயா...மியா.... :-)))))))))))))))))))

   Delete
  3. உங்க கடையில் வாடகைக்கு DWARFஹாம்சடர்கிடைக்குமா ????????

   Delete
  4. லேடி பெருச்சாளி இருக்கு வாணுமா? என்னிடமில்ல ஜெய்யிடம்:)))) அவர்தான் புரோக்கர்:))

   Delete
  5. //அவர்தான் புரோக்கர்:))//

   அதீஸ், பரவாயில்லை லண்டன் கிளைக்கு உங்களையே அட்மினா போட்டிடறேன். ஸ்பெஷல் கமிஷனும் தந்திடறேன் பாருங்க இப்பவே ஆர்டர் பிடிக்க ஆரம்பிச்சிட்டீங்க ஹா..ஹா.. :-))))

   Delete
  6. என்னாதூஊஊஊஊஊஊஊஊஊஉ:))) அட்மினாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.... இனியும் நான் பொறுக்க மாட்டேன் சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.. அஞ்சூஊஊஊஊஊஉ இது உங்கட வீடாய்ச்சே எனப் பார்க்கிறேன், இல்லையெனில் நான் இப்போ பிரித்தானிய ஜெயிலுக்குள்ள இருப்பேன் கொலைக்கேசால என்னை உள்ள தள்ளியிருப்பாங்க:)))...

   சே..சே.. நானுண்டு என் பாடுண்டு என, தேம்ஸ்ல திரிகிறேன், விடாம என்னை மானநஸ்ட வழக்குப் போட வைக்கினமே:)))....

   எங்களுக்கு இப்போ ரெளத்திரமும் தெரியுமாக்கும்:)).

   Delete
  7. புளி உச்சி ஏன் பயங்கரமா ஆடுதுன்னு இப்பதான் தெரியுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் .:-)))))

   Delete
  8. என்னாது ஊ ஊ ??????? அட்மினாக பூஸா????????
   எலி பெருச்சாளியை எல்லாம் ஸ்வாஹா பண்ணிடுமே பூஸ் .
   ஜெய் எதுக்கும் யோசித்து முடிவெடுங்க

   Delete
  9. ஹா...ஹா... ஏற்கணவே கொலவெறின்னு சொல்லிட்டாங்க நீங்க வேற கையில வேப்பிலையை குடுத்து ஆட விட்டுடாதீங்க ஹா..ஹா.. :-)))

   Delete
 4. ஐ...... எவ்ளோ நேரம்தான் நானும் காத்திருக்கிறது.. பதிலுக்குப் பதில் ஆயாவைக் கட்டிவிடுவினமோ என்ற பயத்தில 2வதா போவதேயில்லை எனும் முடிவோடு காத்திருந்தேன்:)))).. ஹா..ஹக்..ஹக்..ஹாஆஆஆஆஆஆஆஅ:).. இது ச்ச்சும்மா சிரிப்பு வருது சிரிக்கிறேன்:))

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....கடிச்ச கடிப்பில் ஒரு பல் டான்ஸ் ஆடுது (எனக்கு ) :-))))))))))))

   Delete
  2. எய்தவன் இருக்க அம்பை நோகக்கூடாது ஜெய்:)).. அது இண்டைக்கு உங்கட ராசிப்பலன் அப்பூடி:))... முடிவில அக்காவாக்கிட்டுதே:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

   Delete
  3. சொன்னவங்க இப்போ கொர்ர்ர்ர்ர்ர்ர்... எனக்கு தூக்கம் போச்சேஏஏஏஏ...அவ்வ்வ்வ்வ் ..விதி வலியது :-)))))))))))))))))))

   Delete
  4. உங்க பக்கத்தில் அக்கா .மகள் பக்கத்தில் ஆன்டி ஹா ஹா .ஈஸ்டர் ஹாலிடேஸ் மகள் பக்கம் கமென்ட் பொட்டி திறக்கும் அப்ப பாருங்க

   Delete
  5. //சொன்னவங்க இப்போ கொர்ர்ர்ர்ர்ர்ர்... எனக்கு தூக்கம் போச்சேஏஏஏஏ...அவ்வ்வ்வ்வ் //
   ithukkellaam don't worry Jai. all is fair in blog.

   Delete
 5. //2013 ஜனவரிக்கு எழுதுங்க .//

  இது..இது....இது... நான் 2013 இலயே எழுதுறேனே அஞ்சு குறை நினைச்சிடப்பூடா:)).

  ReplyDelete
  Replies
  1. யப்பாஆஆஆஆஆ...2012 டிசம்பரை மறந்த வரை ஓகே...வாழ்க வளமுடன் :-))))

   Delete
  2. அதை மறப்பதா? அதை நம்பித்தான் இதை எழுதினேன், ஏனெனில், 2013 பார்க்க நாம் இருக்கமாட்டோம் எனும் நம்பிக்கையில்:)).. ஆரும் அடிக்கக் கலைக்கப்பூடா:).

   Delete
 6. //சொல்ல வேண்டிய நேரத்தில் /கோபம்கொள்ள
  வேண்டிய நேரத்தில் ரௌத்திரம் பழக வேண்டிய
  இடத்தில் கருத்துக்களை தைரியமாக சொல்ல
  வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன் .//


  அதே நேரத்துல எதையும் தாங்கும் இதயம் வேணும் பாஸிடிவ் + நெகடிவ் = ஜிரோ :-))

  ReplyDelete
  Replies
  1. ரெளத்திரம் என்பதன் சரியான அர்த்தம் என்ன? ஏனெனில் பூஸ் ரேடியோவில அடிக்கடி சொல்லுது...

   நல்ல ஸ்ரோங் குரலில்..
   “தமிழ் ஒருவருக்கு ரெளத்திரத்தை....யும்... கொடுக்கும்” அப்பூடின்னு.. எனக்குப் புரியுதில்ல.

   Delete
  2. எங்காவது அநீதியைக் பார்க்கும்போது பொங்கியெழுந்து அதை தட்டிக் கேட்பதே ரௌத்திரம்!!
   ஆத்திரம் அறிவற்றது, விவேகத்துடன் கூடிய அழுத்தமான வெளிப்பாட்டின் பெயர்தான் ரௌத்திரம் !!

   Delete
  3. ஓ... இனிப் பாருங்கோ நானும் ரெளத்திரத்தைக் கடைப்பிடிக்கிறேன்... ஆனா கட்டிலுக்குக்கீழ இருந்துதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

   நன்றி ஜெய்.

   Delete
  4. அதே நேரத்துல எதையும் தாங்கும் இதயம் வேணும் பாஸிடிவ் + நெகடிவ் = ஜிரோ :-))//

   இதை நினைச்சாதான் பயம்மா இருக்கு ...எதோ எதோ நீங்கல்லாம் உதவிக்கு வருவீங்க என்ற நம்பிக்கையில் தீர்மானம் எடுத்துட்டேன் ...பாருங்க இப்பவே பூஸ் திரும்பி பாக்காம ஓடுது

   Delete
  5. //ரெளத்திரம் என்பதன் சரியான அர்த்தம் என்ன//
   rowththiraththukku correct aa arththam theriyaama en samaiyala vanthu rowththiram nnu sollittu pona poosukku karrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

   Delete
  6. //ரெளத்திரம் என்பதன் சரியான அர்த்தம் என்ன//

   jeeva nadichcha padam paarkale??

   Delete
 7. மகனுக்குப் பொண்ணு பார்க்கிறீங்களோ?:)) சீர் வரிசை ஏதும் எதிர்பார்ப்பீங்களோ? வெள்ளைப்பொம்பிளைதான் வேணும், குண்டுப்பொம்பிளை வாணாம் என அடம் புடிக்கிறாரோ?:).

  கவலைப்படாதீங்க அஞ்சு.. டிஷம்பருக்கு:) முன் பார்த்திடலாம்.

  ReplyDelete
  Replies
  1. என்னாதூஊஊஊஊ திரும்பவும் வே...முருங்க்ஸ் ஏறுதே...அவ்வ்வ்வ் :-))

   Delete
  2. ஆமாம் அதிரா .இங்கே வாங்கும்போதே ஜோடியாகத்தான் வாங்கனுமாம்
   அப்புறம் போய் கடையில் கேட்டாலும் விற்க மாட்டாங்க .குடுமிபிடிசண்டை நடக்குமாம் .சோ இவர் தனிக்கட்டையாகதான் இருப்பார்னு நினைக்கிறேன்

   Delete
  3. //என்னாதூஊஊஊஊ திரும்பவும் வே...முருங்க்ஸ் ஏறுதே...அவ்வ்வ்வ் :-))//

   Poos itha paarkka munne kizhichchchcudunga anju

   Delete
  4. சே.சே.. சே.. அது எலிக்கு கோல்ட் ஃபிஸ் காவல்:))... இரண்டையும் பார்த்து தூரத்தில நிற்குதாம் பூஸு:)

   Delete
 8. // (அதாவது நான் கைவினை செய்கிறேன்
  பேர்வழி என்று ஒரு மூட்டை JUNK சேர்த்து
  வைத்திருக்கேன் அதையெல்லாம் முதலில்
  வீட்டை விட்டு வெளியேற்றணும் )//

  இதேதான் என் கதியும். ஒரு மூட்டை துணி, பெயிண்டிங், ஊசி, நூல், பட்டின் என ஏராளம் ஏராளம்..கண்டதெல்லாம் வாங்கி வந்திடுவேன், தோடு செய்ய, மாலை செய்ய குரட்டிலிருந்து வாங்கி வந்தேன், இப்போ உங்களைப் பார்த்து கார்ட் செய்ய கிராப்ட் ஷொப் நோக்கிப் பயணம் தொடருது:).. ஆனா தைக்க எதுக்கும் மனசும் நேரமும் ஒத்துழைப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. எதை செய்யாட்டியும் பரவாயில்லை கார்ட் கண்டிப்பா செய்திடுங்க

   Delete
  2. பூஸ் ஒன்று புறப்படுதே... கார்டின் சென்ரரில கண்கவர், கார்ட்ஸ் செய்யும் பொருட்களனைத்தும் இருக்காம்... டொட்ட டொயிங்:))

   Delete
  3. //பூஸ் ஒன்று புறப்படுதே... கார்டின் சென்ரரில கண்கவர்,//

   yaarum garden centre poyidaatheengannu avasaramaa sky news il flash news poda sollanummmm:))

   Delete
  4. ம்ஹூம் எங்கிட்டயேவா... அஞ்சூஊஊஊஊஊஊ.. அஞ்சூஊஊஊஊஊஉ வெற்றி வெற்றி... இரண்டு செட் வாங்கி வந்திட்டேஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்... விரைவில செய்திட்டுப் படம் வரும்:))).. என்னாது புகைவருது கிரிசா பக்கமிருந்து:))).. நாங்க ரெளத்திரமும் பேசுவமாக்கும்...க்கும்..க்கும்:)).

   Delete
  5. athiraa நீங்க சீக்கிரம் செய்து ப்ளாக்ல போடுங்க

   Delete
  6. எது ரெண்டு செட்ட்னு சொல்லுங்க ?????????

   Delete
  7. வழமையா ஜெய்க்குத்தானே சந்தேகம் வரும்:) இப்போ அஞ்சுவுக்குமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:))... அது “நிபி” மாதிரி:).. தனியா வாங்கப்பூடா... ஜோடியாத்தான் வாங்கோணுமாம்:)) அம்மம்மா சொல்லியிருக்கிறா:).

   Delete
  8. ஆஹா !!!!!!!!! நான் எது ரெண்டு செட்டுன்னு கேட்டது வெள்ளை கார்ட் அட்டையா /எம்பெளிஷ்மேன்ட்சா /க்ளூவா /ரைன் ஸ்டோன்சா/ரிப்பனா /
   இல்ல டெகூபாஜ் ஷீட்சா இல்ல க்வில்லிங் பேப்பரா / etc etc etc etc

   Delete
  9. நான் நினைக்கிறேன் பூஸ் இஸ் வெரி பிசி நௌ

   Delete
  10. //நான் நினைக்கிறேன் பூஸ் இஸ் வெரி பிசி நௌ//

   கொமண்ட் பாக்ஸை தேடி தேம்ஸில தூண்டில் போட்டுகிட்டு இருப்பாங்க :-)))

   Delete
 9. //ஒரு நாளைக்கு எப்படியாவது ஐந்து கப் கருப்பட்டி காப்பி
  குடிக்கிறேன் .என் அப்பாவிடம் இருந்து தொற்றிக்கொண்ட
  இனிய கெட்ட பழக்கம் ..இனி இரண்டு கோப்பை மட்டும்
  குடிக்க முயற்சி செய்கிறேன் .//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நானும் அதே ஆனா ரீஈஈஈஈஈஈஈஈஈ:)

  ReplyDelete
  Replies
  1. காலை , மாலை காஃபி சுறுசுறுப்புக்கு கேரண்டி ...நடுவில் குடித்தால் டென்ஷன் ...படபடப்புதான் வரும் நடுவில் டீ ஓகே ..அது வித் ஆர் விதவுட் பால் :-))))))))))

   Delete
  2. எனக்கு காப்பி அல்லது டீ ரெண்டுமே பால் சேர்க்காம குடிக்கத்தான் ஆசை ..அதுவும் இங்கத்திய பதப்படுத்திய /ஃபிரஷ் பால் வாசமே பிடிக்காது .

   Delete
 10. //இந்த வருடமாவது துருக்கிக்கு ஒரு ட்ரிப் போய்
  வரணும் .பல வருடமா யோசிக்கிறோம் .//

  போய்வர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. //பரணில் தூங்குகிற( LOFT இல் ) எக்சர்சைஸ்
  மெஷினை எடுத்து அசெம்பிள் செய்து ...............
  இருங்க கற்பனை குதிரையை ......அவ்ளோ தூரம் ஓட
  விட கூடாது அது எனக்கில்லை பேப்பர்லபோட்டு
  விற்கனும்.//

  இதெல்லாம் நடக்கிற விஷயமோ?:), எங்கட ஒருவருட புது ரெட்மில்லை ஷரட்டி ஷொப்புக்குத்தான் கொடுத்தோம்.

  ReplyDelete
  Replies
  1. வெய்ட் .அதை விற்று அந்த பணத்தை நான் எங்கள் ஆலயத்தில் சேரிட்டிக்கு என்று தனி காணிக்கை பெட்டி வச்சிருப்பாங்க அதில் போடுவேன்

   Delete
  2. இல்ல அஞ்சு, இந்த நாட்டில எந்தப் பொருளும் வாங்குவது சுலபம், விற்பதென்பது எல்லோராலும் முடியாத ஒன்று, அதுக்கு மினக்கெட வேணும்.

   இங்கொரு டாக்டரின் மனைவி ஈ பேயில் பொருட்கள், உடுப்புக்கள் விற்கிறா. என்னையும் செய்யச்சொன்னா... எனக்கு சரிவராது.. அவ்ளோதூரம் மினக்கெட மாட்டேன்.

   என் கணவர் சொல்வார், என்ன வேணுமெண்டாலும் கேழுங்கோ வாங்கித் தாறேன், ஆனா இந்த விக்கிற வேலை மட்டும் சொல்லிட வேண்டாம்.. சும்மா கொடுத்திடலாம் எங்காவது என்று.... பிச்சைவேண்டாம் நாயைப் பிடித்தாலே போதும் எனும் கதிபோல.

   நீங்க அஞ்சு சேஜ் இலயே கேட்டுப்பாருங்கோ, அவர்கள் எடுத்து, விற்றுப் பணம் எடுக்க மாட்டார்களோ?

   Delete
  3. நீங்க சொல்வது சரிதான் அதனால்தான் அதிரா நான் கார்ட்சைகூட விற்ப்பது இல்லை .

   Delete
 12. //வயலின் கிளாஸ் அல்லது பியானோ கிளாஸ்
  சேரணும்.//

  பரத நாட்டியம் வேணுமெண்டால் வாங்க ஃபிரீயாச் சொல்லித்தாறேன்.

  ReplyDelete
  Replies
  1. பிரியாவா..?????யார் அது புது குழப்பம் ஹா..ஹா.. :-))))))))))))))))))))))))))

   Delete
  2. கொஞ்சம் நில்லுங்க... வாறேன்.. கையோட கூட்டிக்கொண்டு:)) நான் பிரியாவைச் சொன்னேன்.:)).

   Delete
  3. மீனுக்கு பரத நாட்டியம் தெரியும் .பூசுக்கும் தெரியுமா வெரிகுட்

   Delete
  4. பூஸ்..ஃபிஷ்ஷை பார்த்தாலே ஆடுமே ஹா..ஹா.. :-)))

   Delete
  5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

   Delete
  6. //பூஸ்..ஃபிஷ்ஷை பார்த்தாலே ஆடுமே ஹா..ஹா.. :-)))//

   yess ra ra sarasaku ra ra laka laka laka nnu poos night ellaam jangu jangunnu kudhikkurathu inge varaikkum kekkume:))

   Delete
  7. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இண்டைக்கு நைட், கீரி வீட்டு ஜன்னல்ல நிண்டு பாடப்போறேன் ராஆஆஆஆஆ ராஆஆஆஆஆஆஅ சரசக்கா லாலா:))

   Delete
  8. அதீஸ் மகி எங்கே ????????

   Delete
  9. சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போயிட்டா.. ஆனா அதுக்குப் பிறகுதானே என் பக்கத்தில சந்தேகம் அதிகமாகிட்டுது எனக்கு:)).. குட்டி..குட்டி..குடீஈஈஈஈஈஈ:))

   நான் மெயில் அனுப்பேல்லை.. வந்திடுவா என யோசித்தேன் காணேல்லை, தேடிப்பார்ப்பம்.

   Delete
  10. என் தங்கை வந்தாச்சு .அங்கே பாருங்க

   Delete
  11. ஹைபர்நேட்டுன்னா ஃபிரீஸ்தானே..!! சில்லி ஓவரா போயிடுச்சுப்போல ஹா...ஹா... :-))))))

   Delete
 13. எல்லாம் நடக்கச் சாத்தியமான
  தீர்மானங்களாகத் தானே இருக்கிறது
  தீர்மானங்கள் செயல் வடிவமாக வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 14. angelin, நீங்க வேடிக்கையாக சொல்லியிருந்தாலும் தீர்மானங்கள் எல்லாம் சுவாரசியமாக இருக்கு.எல்லா தீர்மானங்களும் நல்ல படியாக நடந்தேற வாழ்த்துக்கள்.
  (வருடக்கடைசில மறக்காம எவ்வளவு நடந்துதுன்னு பதிவும் எழுதுங்க.)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமா
   அட்லீஸ்ட் பாதியையாவது நிறைவேத்திடுவேன்ன் .

   Delete
 15. சூப்பர் தீர்மானங்கள்.உங்க ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியா .
   என் பொண்ணு நான் என்ன சமையல் செய்தாலும் அம்மா இது ஆசியா ஆன்டி ப்ளாக் பாத்து செஞ்சிங்களா இல்ல ஜலீலா ஆன்டி பிளாக் பார்த்து செஞ்சீங்களா இல்ல ஷிவானி அம்மாவா/அக்ஷதா அம்மா ப்ளாகா என்று இல்லாத என் மானத்தை வாங்கறா :D:)))))))))))
   இன்னும் அவளுக்கு மகி ப்ளாக் பத்தி தெரியாது ....

   Delete
 16. ஐந்தாவது தீர்மானம்தான் சுத்தமாக புரியவில்லை ஏஞ்சலின்:(

  ReplyDelete
  Replies
  1. அது என்னவென்றால் இங்கே hamster வாங்கும்போது ஜோடியாக வாங்க வேண்டும் ஒரே நேரத்தில் .ஒன்றை வாங்கி விட்டு இரண்டு நாள் கழித்து போய் இன்ன்று அதற்க்கு இணையாக கேட்டாலும் பெட் ஷாப்பில் விற்க மாட்டாங்க .இரண்டும் ஒன்றோடொன்று சண்டை பிடித்து ரணக்களம் ஆக்கிவிடுமாம் அதான் ஜெய்கிட்ட வாடைக்காவது கிடைக்குமா என்று ஒரு விளம்பரமாக தீர்மானங்களோடு போட்டேன்

   Delete
  2. அந்த தீர்மானம் சும்மா வேடிக்கைக்காக போட்டது

   Delete
  3. //அதான் ஜெய்கிட்ட வாடைக்காவது கிடைக்குமா என்று ஒரு விளம்பரமாக தீர்மானங்களோடு போட்டேன்//

   அட முதலாவது க(ஷ்)ஸ்டமர் உங்களுக்கு இல்லாததா...ஹி..ஹி.... வாடகைக்கு என்ன சீக்கீரமே ஒரு பெட் மெட்ரிமோனியல் ஷாப் வைக்க ப்போகிரேன் .. உங்க கல்யான மாப்பிள்ளையை அங்கே கூட்டி வாங்க :-)))))))))

   Delete
  4. //உங்க கல்யான மாப்பிள்ளையை அங்கே கூட்டி வாங்க :-)))))))))//

   paiyanukku kalyaanam aana maathiri thaan:))

   Delete
  5. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... தலைகீழ் ஆசனம் முடிச்சூஊஊஊஊஊ.. தலைகீழாக மரத்தில தொங்கீஈஈஈஈஈஈஈஈஈஈ.. புளியில ஏறியிருந்து யூஊஊஊஊஊஊஉம் பண்ணி... சமையல் எல்லாம் பெனாயில் ஊத்திச் செய்துபார்த்தூஊஊஊஊஊஊ... இப்போ கல்யாணப் புரோக்கராமா முடியல்ல சாமீஈஈஈஈஈஈ.. நானும் எவ்ளோ நேரம்தான் கோபத்தை அடக்குவேன்...:))

   புளொக் ஒருவருக்கு(எனக்குத்தான்:)) ரெளைத்திரத்தையு.....ம்ம்ம்ம் கொடுக்கும்... கொடுக்கப்போகுது:)))

   Delete
  6. //இப்போ கல்யாணப் புரோக்கராமா முடியல்ல சாமீஈஈஈஈஈஈ.. நானும் எவ்ளோ நேரம்தான் கோபத்தை அடக்குவேன்...:))//

   ’ஆளும் வளரனும் , அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி’-ன்னு யாரோ பாடினாங்க ஹி..ஹி... :-)))

   Delete
  7. ஷார்ஜா பொண்ணு வேணாம் என் பையனுக்கு சுவிஸ் பொண்ணு பாக்கறாங்க ஹேமா :-)))))))))))

   Delete
  8. ஷார்ஜால பொண்ணா? அவ்வ்வ்வ் என்ன நடக்குதிங்க?:).. சே..சே.. ஜெய் யை அப்பூடியெல்லாம் சொல்லப்பூடாது அஞ்சு:)) அவரிடம் இருப்பதெல்லாம்... மேல் பெருச்சாளிதான்... ஹையோ இது வேற மேல்:))..

   வாணாம் சார்ஜாவும் வாணாம், சுவிசும் வாணாம்... நாங்க ஊரில பொம்பிளை பார்த்துப் ஸ்பொன்ஸர் பண்ணிடலாம் அஞ்சு...:).

   Delete
  9. //நாங்க ஊரில பொம்பிளை பார்த்துப் ஸ்பொன்ஸர் பண்ணிடலாம் அஞ்சு...:).//
   இத மாத்திரம் அப்படியே நிரூபன் பார்க்கணும்

   Delete
  10. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... ஹா..ஹா..ஹா.... அவருக்கு நிபி ஆரெனத் தெரியாது:)... ஆரோ இங்கிலாந்து இளவரசர் என நினைப்பார்:)) அப்பூடியே மெயிண்டைன் பண்ணிடுவம்:)

   Delete
 17. Sothanaiyaa I am unable to type in tamil from work today. Ennaachcho theriyala.

  Resolution ellaam romba suuuuuppper. athula paathikku mela enakkum porunthummm!

  Enakku neenga last paragraphla aetho ezhuthi irukkeengannu theriyuthu aanaa ennannu theriya maattenguthu uuuuuu:)) en computer la ithu theriyaathaammmm !!!

  ReplyDelete
  Replies
  1. சைனீஸ் பாஷையில எழுதினாலும் எங்களுக்கு புரியும் விடமாட்டோமுல்ல ..கடைசி வரியில நீங்க மட்டும் 2 தொடர் எழுதனுமாம் ஹி..ஹி... :-))

   Delete
  2. //Resolution ellaam romba suuuuuppper. athula paathikku mela enakkum porunthummm! //


   ஆஹா நல்லவேளை நமக்கும் தோதா ஒரு ஜோடி இருக்கு ....நேரமிருக்கும்போது எழுதுங்க ...

   Delete
  3. //..கடைசி வரியில நீங்க மட்டும் 2 தொடர் எழுதனுமாம் ஹி..ஹி... :-))//

   thirumbavum tamil la work la type panna mudiyale. Yaaro sadhi siyuraanga!!

   Jai aetho solli irukkeengannu theriyuthu aanaa ennannu thaan thirumbavum computer la theriya maattenguthu aavvvv essss

   Delete
 18. poos pakkaththula irunthu comment box kaanom ? eli thirudittu poyidichchaaaaa???

  ReplyDelete
  Replies
  1. என்னாது கொமெண்ட்ஸ் பொக்ஸைக் காணமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் நினைச்சேன்.... அண்டைக்கே நினைச்சேன்.. ஏதோ ஆகக்கூடாதது ஆகிடப்போகுதென:))... இதோ போகிறேன் பிரித்தானிய நீதிமன்றத்துகு.. கீரிஷா சாட்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ:))

   Delete
  2. கலை யக்கா தோட்டத்து பக்கம் வரும் போதே நினைச்சேன் ரெண்டு பேரும் ஏதோ பேசி கமெண்ட் பாக்ஸை தேம்ஸுல வீசிப்போட்டீக்களோன்னு ஒரு டவுட் :-))))

   Delete
  3. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பா... கண்டு பிடிச்சிட்டேன்.. அதிராஓ கொக்கோ:))... நாளைக்குப் பொருத்திடலாம்:)).

   Delete
  4. எதை கண்டுபிடிச்சீங்க /நானும்தான் கண்டுபிடிச்சிட்டேன் .
   அப்பப்பா ஸ்ஸ்ஸ்ஸ் நல்லவேளை பூஸ் ழ விஷயத்தை பாக்கலை

   Delete
  5. உஸ்ஸ்ஸ்ஸ்... தேம்ஸ் எல்லாம் தடவி, கரையிலதான் என் கொமெண்ட் பொக்ஸ் ஐக் கண்டுபிடிச்சேன்:)).. இது திட்டமிட்டு ஆரோ செய்த சதி:).

   இல்ல இல்ல நான் பார்க்கல்ல ழவைப் பார்க்கலா,.... வேணுமெண்டால் ஜெய் மீது அடிச்சுச் சத்தியம் பண்ணட்டோ?:)

   Delete
  6. //வேணுமெண்டால் ஜெய் மீது அடிச்சுச் சத்தியம் பண்ணட்டோ?:)//

   பண்ணுங்க..பண்ணுங்க ..நல்லா பண்ணுங்க ..இது மாதிரி நடக்குமுன்னு நினைத்துதான் முள்ளம் ப... டிரஸ் போட்டுகிட்டு இருக்கேன் ஹா..ஹா... :-)))))))

   Delete
  7. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:) ஒரு கண்ணை மட்டும் மூடிக் கற்பனை பண்ணிப்பார்த்தேன்:) மு.ப.. ட்ரெஸ்சோட புளியமர உச்சியில:)) முடியேல்லை சாமீஈஈஈஈஈஈ:))

   Delete
 19. கல கலப்பா,சுவாரஸ்யமா சொல்லிருக்கீங்க.பக்கத்தில் உங்கள் கைவண்ணங்களை இணைத்திருப்பது மிக அழகு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆச்சி .இப்பெல்லாம் நான் வை .கோ .சார் சொன்னாரே எந்த சூழ்நிலையிலும் மனசை சில்லுன்னு வச்சிக்கணும்னு அதைதான் ஃபாலோ
   செய்கிறேன் .அதுதான் கொஞ்சம் வேடிக்கை சேர்த்து சிரியஸ் ஆக எழுதினேன்

   Delete
 20. ஏஞ்சல் எல்லாம் சொல்லிட்டு சும்மா இருக்காம செய்திட்டு அப்புறம் ஒரு பதிவு போடுங்க !

  உங்க மகனுக்கு நானும் பொண்ணு பார்க்கிறேன்.சுவிஸ் பொண்ணுன்னா கொஞ்சம் கூடுதலா சீதனம் தருவினம்.நான் வேலை செய்ற ஸ்டோர் ரூம் பொறுப்பானவரிட்ட நாளைக்கே உங்கட மகன் போட்டோ போகுது !

  ReplyDelete
  Replies
  1. //ஏஞ்சல் எல்லாம் சொல்லிட்டு சும்மா இருக்காம செய்திட்டு அப்புறம் ஒரு பதிவு போடுங்க !//


   வாங்க ஹேமா காப்பி /ஜன்க்/எந்த விஷயத்தில் இல்லேன்னாலும் அந்த அசைவம் விஷயத்தில் நான் கொஞ்சம் தீவிரம் காட்ட போகிறேன் .
   ஜெய் பாருங்க !அதிரா!! பாருங்க ஹேமா பொண்ணு பாக்கறாங்கலாம்.
   ஹைய்யோ ஹைய்யோ இதை நிரூபன் படிக்கவே கூடாது .
   பொண்ணு வீட்டார்கிட்ட சொல்லிடுங்க என் மகனுக்கு தனி வீடு மற்றும் எல்லா வீடுசாமானும் இருக்கு .பொண்ணு அவ சாபிடற தட்டு மட்டும் கொண்டாந்தா போதும்

   Delete
  2. //பொண்ணு அவ சாபிடற தட்டு மட்டும் கொண்டாந்தா போதும்//

   என்னால முடியல...ஹா..ஹா... நான் உருண்டு பிரண்டு சிரிப்பதை ஒரு மாதிரிய பார்க்குறான் என் ரூம் மேட் ஹா....ஹா... :-)))))))))))))))))))))))))))

   Delete
  3. mee too laughing haa haa haaaaaaaaaaaaaaaaaaaaaaa

   Delete
  4. அதில்ல ஜெய் அண்ட் கிரிஜா //:-)))))))))))))))))))))))))))
   இப்ப எனக்கே பயங்கரமா சிரிப்பு வருது

   Delete
  5. ஹா....ஹா..ஹா.... எனக்கு சிரிப்பு வரல்ல... சிரிக்க சிரிக்க சிரிப்பு வரல்ல.. ஹா..ஹா...ஹா...:))

   Delete
  6. அஞ்சு, பொம்பிளை பகுதிக்கு.. மாப்பிள்ளை எழும்பி நிற்கிற படமா வேணுமாம்... உது இருக்கிற படமெல்லோ.. கால்ல ஏதும் பிரச்சனை இருக்குமோ எனச் சந்தேகப்படுகினம்:)).

   Delete
  7. கர்ர்ர்ரர்ரர்ர்ர்ர் ...........எனக்கு சுவிஸ்மருமகளே போதும் . நான் விடியோவே எடுத்திருக்கேன் விரைவில் போஸ்ட்ல போடறேன்

   Delete
 21. ஒரு நாளைக்கு எப்படியாவது ஐந்து கப் கருப்பட்டி காப்பி
  குடிக்கிறேன் .என் அப்பாவிடம் இருந்து தொற்றிக்கொண்ட
  இனிய கெட்ட பழக்கம் ..இனி இரண்டு கோப்பை மட்டும்
  குடிக்க முயற்சி செய்கிறேன் .
  ///avv,,,அஞ்சு காப்பியா??? நான் 2 குடிச்சுட்டே குற்ற உணர்வில் புழுங்கிட்டு இருக்கிறன்.
  எக்ஸர்சைஸ் மெஸின் எம்பூட்டு விலைக்கு விற்கப் போறீங்க??? பூஸாருக்கு வாங்கி குடுக்க நினைக்கிறேன்.

  என் மகனை தமிழ் வகுப்பில் சேர்த்து விட்டேன். வெள்ளிக் கிழமை இரவு தான் வகுப்பு. பெரிசுங்களுக்கே தூக்கம் சும்மா தூக்கி அடிக்கும். என் மகன் 1st grade எப்படி கவனம் செலுத்துவார். தூங்கி வழிவது பார்க்க பொறுக்காமல் நிப்பாட்டி விட்டேன். ஒரு புது மொழி கற்கும் போது இப்படி நேரம், காலம் தெரிவு செய்வது சரியல்ல. நான் சொல்லி யார் கேட்பார்கள்???

  ReplyDelete
  Replies
  1. என் பொண்ணு நல்லா தமிழ் பேசுவா வானதி .வீட்டில் தாய்மொழியில் மட்டுமே பேசுங்க அப்படீன்னு சிறு வயதிலேயே எங்களுக்கு சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் சொன்னாங்க .நானும் ஊரிலிருந்து வரும்போது நிறைய புக்ஸ் கொண்டுவந்தேன் .இ மட்டும் எழுதவே வர மாட்டேங்குது ,
   அப்புறம் முக்கியமா இது பூஸ் காதில /கண்ணில படக்கூடாது என் மகளுக்கு// ழ // வர மாட்டேங்குது
   அளகு/வாளைபளம் ...இப்படிதான் சொல்றா ......
   நான் விட மாட்டேன் எப்படியும் தமிழ் சொல்லி கொடுத்திடுவேன்
   அந்த/ ழ // மட்டும் :(
   யாராவது தங்க்லீஷ் கமென்ட் போட்டா சரியா வாசிக்கும் .என் ப்ளாக் கமென்ட் படிக்கரதுக்குன்னே தமிழ் படிக்கபோறேன்னு சொல்றா

   Delete
  2. //அப்புறம் முக்கியமா இது பூஸ் காதில /கண்ணில படக்கூடாது என் மகளுக்கு// ழ // வர மாட்டேங்குது //


   இன்னு அங்கே games ”விழையாடுதல்-”ன்னுதான் போடிருக்காங்க ஹய்யோ..ஹய்யோ :-))

   Delete
  3. பூசுக்கு நான் அடுத்த பதிவு போடும் வரைக்கும் //ழ // மேட்டர் கண்ணில் படக்கூடாது .

   Delete
  4. இது நாள் வரைக்கும் பூசுக்கு இந்த விஷயம் தெரியாது .
   நான் தமிழ் அழகா உச்சரிப்பேன் எப்படீஈ .என் பொண்ணுக்கு// ழ //வரல்லைன்னுதான் விளங்கல?????????

   Delete
  5. //இன்னு அங்கே games ”விழையாடுதல்-”ன்னுதான் போடிருக்காங்க ஹய்யோ..ஹய்யோ :-))//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஒரு நல்லபிள்ளையைப்(அது நாந்தேன்ன்ன்ன்:)) பார்த்து கதைக்கிற கதையைப் பாருங்கோ.. அதுவும் நான் இங்கின இல்லை என்பதைக் கன்ஃபோம் பண்ணிக்கொண்டு..:).

   Delete
  6. ”கடற்கரையில உரல் உருளு:)து(டவுட்:)), கண்ட புலிக்குத் தொண்டை கறுக்குது” இதைக் கடகடவென, ஸ்பீட்டாச் சொலுங்கோ... ழ, ள என்ன... சொர்க்கமே தெரியும்:)).

   Delete
  7. அஞ்சு மகளை என்னிடம் ரியூசனுக்கு அனுப்புங்கோ, நான் ழ.... நல்ல வடிவாச் சொல்லிக்குடுக்கிறன்... நோ தங்கியூ.. பீஸ் எல்லாம் வேண்டாம்:))

   Delete
  8. //நான் சொல்லி யார் கேட்பார்கள்???//

   ஏன் வான்ஸ்? ஒபாமாகூட கேட்க மாட்டாராமா?:))

   Delete
  9. ஆலூ பரத்தாஸ் செய்யபோறேன் பை பை அதீஸ்

   ஆலூ பரத்தாஸ் செய்யபோறேன் பை பை அதீஸ்
   ஏழைகிழவன் வியாழக்கிழமை வாழைபழம் தின்றான் .
   இதை சொன்னீங்கன்னா டியூஷன் அக்ரீட்:)):))

   Delete
  10. அண்டைக்கு நான் செஞ்சனான்.. சூப்பர்.

   இண்டைக்குப் புட்டும் மாம்பழமும்... புட்டை அவித்தபடியேதான் ரைப் பண்ணுறேன்.. (விரும்பினால் ஃபிஸ் கறியும் இருக்கு).

   Delete
 22. என் பெயரும் தொடர்பதிவில் இருக்கே. டைம் தாங்கோ ஆறுதலா எழுதுகிறேன்.

  ReplyDelete
 23. அழகாக உங்கள் தீர்மானங்களை சொல்லியிருக்கிறீங்க angelin.உங்க தீர்மானங்கள் நிறைவேற‌ வாழ்த்துக்கள்.

  //இந்த வருடமாவது துருக்கிக்கு ஒரு ட்ரிப் போய்
  வரணும் .பல வருடமா யோசிக்கிறோம்//
  இந்த வருடம் கண்டிப்பா போங்க.நல்ல இடம்.அதுவும் antaliya தான் டூரிஸ்ட் ஏரியா.அதனுடன் alanya,side இந்த இடங்களும் சூப்பர்.கடற்கரைப்பக்கம்.நாங்கள் கடந்தவருடம்போயிருந்தோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்முலு .சைட்ல நீங்க சொன்ன படம் சேர்த்துட்டேன் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .ஒவ்வோர் முறையும் ஏதாவது அலுவல் வருது அங்கே அந்த சுடு நீர் ஊற்று இருக்கே அதை பாக்கனும்னு ரொம்ப நாள் ஆசை

   Delete
 24. புத்தாண்டு திர்மானங்கள் சூப்பர். உங்களுக்கு அழகிய மருமகள் கிடைக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மின்சார தட்டுப்பாடு இருக்கும் நேரத்திலும் தவறாமல் வருகை தந்ததற்கு நன்றி ராஜி .சீக்கிரமே ஸ்விஸ் மருமக வரப்போறா .ஹா ஹா .

   Delete
 25. என் மகனுக்கு பெண் பார்க்கிறேன் சரிவர
  மாட்டேங்குது

  இதோ மாப்பிள்ளை படம் .சகல அம்சம் பொருந்திய
  பெண் இருந்தா சொல்லுங்க .

  அழ்கான மகனுக்கு விரைவில் சகல அம்சம் பொருந்திய மணமகள் கிடைக்க வாழ்த்துகள்....

  ReplyDelete
 26. வாழ்நாளில் முதல் தடவையாக சதம் அடிச்சிட்டா அஞ்சூஊஊஊஊஊஊஊ..... எலி பாபகியூ போட்டுக் கொண்டாடலாம் வாங்கோஓஓ:))

  ReplyDelete
  Replies
  1. //எலி பாபகியூ போட்டுக் கொண்டாடலாம் வாங்கோஓஓ:))//

   ஏன்ன்ன்ன்ன் நல்லாதானே போய்கிட்டிருக்கு ஹி...ஹி... :-))))

   Delete
  2. அவ்வ்வ்வ்வ்வ்வ் எலி என்றதும் காதில கேட்டிட்டுதே?:))... ஓமோம் நல்லாத்தானாம் இருக்கும் நான் எலி பாபகியூவைச் சொன்னேன்:)

   Delete
  3. ம்...புட்டுக்கூட வச்சி சாப்பிட்டா டேஸ்டாதான் இருக்கும் ஹய்யோ..ஹய்யோ...!!! :-)))))))))))

   Delete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) புட்டைக்கூட நிம்மதியாச் சாப்பிட விடாமல் எலியின் நினைவே வரப்போகுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

   Delete
 27. அன்புச் சகோதரி!
  உங்களின் இவ்வலைப்பூவுக்கு இடையிடையே வந்துபோயிருக்கிறேன். உங்கள் ஆக்கங்கங்கள் அனைத்தும் நன்றாக பார்ப்போர் மனதில் பதிவனவாக மிக அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள். மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி!!

  அனைத்துப் பதிவுகளையும் பார்த்திட இன்னும் நேர அவகாசம் தேவையாக இருக்கிறது. ஒவ்வொன்றாக பார்த்து வருகிறேன். பின்னூட்டமிடவும் முயல்கிறேன்.

  உங்களின் இவ்வலைப்பூவின் முக்கிய ஒரு பதிவாளரின் பிறந்ததினம் இன்று 22.02.
  அவரை தேடிக்களைத்து வந்து பார்த்தால் தனது வலைப்பூவை பூட்டிவைத்துவிட்டு இங்கு வந்து கொட்டமடிக்கிறார். யாரென தெரிந்து கொண்டிருப்பீர்கள் :)

  எமது அன்புக்குரிய அதிராவின் பிறந்ததினம் இன்று.

  நாள் முடியப்போகிறது. இருந்தாலும் உங்கள் பின்னூட்டப் பதிவில் அதிராவை வாழ்த்துவதில் உங்களுக்கு ஆட்சேபனை இருக்காதுதானே.

  அன்புச்சகோதரி அதிரா!!!

  உங்களுக்கு என் இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

  நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியமுடன் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

  மிக்க நன்றி அஞ்சலின்!!!

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி .பூஸ் அடிக்கடி யங்மூன் அப்படீன்னு கூப்பிடுவாங்களே .
   பூஸ் மற்றும் எங்க நண்பர் கூட்டம் எல்லாரும் ஒண்ணா ஒரே இடத்தில இருப்போம் .பிறந்தநாள் மேட்டர் இன்னிக்கு தான் பார்த்தேன் .
   பரிசு எதுவும் தரதா இருந்தா என்கிட்டே கொடுங்க .அடிகொடுக்கறதா இருந்தா மட்டும் பூஸ்கிட்டே கொடுக்கலாம் .நேற்றே தெரிஞ்சிருந்ததுன்னா
   கலக்கிருப்போம் .THANKS FOR THE INFO

   Delete
  2. அஞ்சலின்! யங்மூன் என்று அதிரா கூப்பிடும் இளமதி நானேதான். வரவேற்பிற்கு நன்றி.
   உங்கள் வலைப்பூவுக்கு வந்து பின்னூட்டமிடணும் என்று எப்பவோ நினைச்சிருந்தும் செயல்படுத்த வேளை வரவில்லை. நேற்று பொதுவா அறிமுகமும் உங்களுக்கு வாழ்த்தும் சொல்ல வந்தபோதுதான் எலியைத் தேடி பூஸ் வந்திருந்ததைக் கண்டேன்:) உடனேயே இங்கேயே அதிராவுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் சொல்லிவிட்டேன்.
   இதனால் அதிராவை வாழ்த்த மட்டும் வந்தேன்னு நினைச்சிடாதேங்கோ ப்ளீஸ்......

   உங்கள் பதிவுகளுக்கான பின்னூட்டங்களை அவ்வப்போது தருவேன் அஞ்சலின். எனக்கு நேரம் கிடைப்பதுதான் மிக முக்கியமானது.

   Delete
 28. உங்க புத்தாண்டு தீர்மானங்கள் எல்லாமே நல்லாயிருக்குங்க...விரைவில் எல்லாமே நிறைவேறட்டும்.

  ReplyDelete
 29. Athiraa I am seeing the message only now. Belated birthday wishes to you. Hope you had a lovely birthday yesterday. Bless you with a healthy, peaceful and prosperous life.

  Is this the reason why no comment box in your blog?? karrrrrrrrrrrr

  solli irunthaa naanga mela thaalaththoda birthday kondaadi iruppom ille??

  ReplyDelete
  Replies
  1. //solli irunthaa naanga mela thaalaththoda birthday kondaadi iruppom ille??//

   I WOULDVE PLACED AN ORDER FOR HELLO KITTY CAKE AND SHARED IT WITH MAGI/ GIRJA /JAI AND ALL

   Delete
 30. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹலோ கிட்டி கேக்கை ஓடர் பண்ணி அவிங்களோட ஷெயார் பண்ணியிருப்பாவாம்.... அப்போ பூஸுக்கு ஃபோட்டோ மட்டும்தானா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  நன்றி யங்மூன்.

  இல்ல கீரி, அஞ்சு....இம்முறை மாயாவின் மறைவால்தான் இந்த பெப்ரவரியில் எந்த வாழ்த்தும் வேண்டாம் என எண்ணியே கொமெண்ட் பொக்ஸை மூடினேன். என்னதான் கதைச்சுப் பேசினாலும், சிரிச்சாலும் மனதின் மூலையில் ஒரு உறுத்தல் இருக்குதுதானே... அதனால்தான் யாருக்குமே தெரியாமல் போயிடும் என் பினூட்டத்தை மறைத்தால் என எண்ணினேன்....

  அது யங்மூனுக்கு கிட்னி ஷார்ப்பூ:)) அதுதான் இங்கின வந்து உடைத்திட்டா:))... அங்கயும் ஆரோ பச்சைப்பூவோட நிற்பது தெரிஞ்சுது... பின்பு வாறேன்:).

  ReplyDelete
 31. என்னதான் கதைச்சுப் பேசினாலும், சிரிச்சாலும் மனதின் மூலையில் ஒரு உறுத்தல் இருக்குதுதானே... //

  அதேதான் அதிரா எனக்கும் .வலி ஆற இன்னும் நாளெடுக்கும்

  ReplyDelete
 32. மாப்பிள்ளையின் வீடியோவும் பார்த்தாச்சு:)) இனிப் பார்க்க வேண்டியது கல்யாண வீடியோத்தான்.

  ஆனா மாப்பிள்ளை ஓரிடத்தில் இருக்கிறார் இல்லையே?:)) இவரை நம்பி எப்படியாம் பொண்ணு கொடுப்பது?:)))

  ReplyDelete
 33. புத்தாண்டுத் தீர்மானங்கள் நல்லா இருக்கு,வருடம் முழுக்க வெற்றிகரமாகத் தொடர வாழ்த்துக்கள்! நீங்க பெருங்கம்போட வந்தாலும் எழுதறதுக்கு எங்கிட்ட சரக்குத் தேறாது,ஹிஹி! அவ்வளவு யுனீக் கேரக்டர் நானு! :)

  எலிஜிபிள் பேச்சலர் அழகா இருக்காரு,ஆனா இம்புட்டு சூட்டிப்பா ஒரு இடத்தில நிக்காம ஓடிட்டே இருக்காரே,இவரை எப்படி கலியாணமேடையிலே நிக்க வைப்பீங்க??? :)) பொண்ணு கூட கிடைச்சிருச்சு போல?? அதுவும் ஸ்விஸ்...ஹ்ம்,அப்புடியே பொண்ணு வீட்டிலயே ஹனிமூனையும் முடிச்சிட்டுவரச் சொல்லுங்க. மாமியார் கொடுமைல்லாம் பண்ணாம மருமகள கண்ணுங்கருத்துமாப் பாத்துக்கோணும்,சரியா????

  ReplyDelete
 34. //அதுவும் ஸ்விஸ்...ஹ்ம்,அப்புடியே பொண்ணு வீட்டிலயே ஹனிமூனையும் முடிச்சிட்டுவரச் சொல்லுங்க. மாமியார் கொடுமைல்லாம் பண்ணாம மருமகள கண்ணுங்கருத்துமாப் பாத்துக்கோணும்,சரியா????//

  நோ..நோஒ... ஹனிநிலவு:) மாப்பிள்ளை வீட்டிலதான் நடத்தப்போறோம், சுவிஸ் எண்டால் நாங்களெல்லாம் எப்பூடியாம் போய்ப் பார்க்கிறது:)).. முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈஈ:))

  ReplyDelete
  Replies
  1. //:)).. முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈஈ:))//

   ROFL ROFL ROFL :))))))))))))))

   இந்த கலியாணம் /பொண்ணு பாக்கற மேட்டர்..etc etc etc எல்லாம் நிரூபன் பாக்காத வரைக்கும் நல்லது .அடுத்த போஸ்ட் உடனடியா போடணும்

   Delete