அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/12/12

எங்கள் அன்பு நண்பன் ராஜேஷுக்காக........

எங்களை விட்டு பிரிந்து சென்ற அன்பு
சகோதரன் மாய உலகம் ராஜேஷுக்கு 
நட்புக்களின்  கண்ணீர் அஞ்சலி .

Many People Will Walk 
In and out of our life 
But Only Few 
Like RAJESH Will Leave 
FOOT PRINTS 
in our Hearts



                       ஊரிலிருந்து திரும்பியதும் டேஷ் போர்டில் பார்த்து 
அதிர்ந்தேன் இன்னமும் ஜீரணிக்க இயலவில்லை .
எங்களுடன் பழகியது சில மாதங்கள் தான் ஆனால் பலநாள்
சொந்தம்போல் எங்களுடன் அன்பு காட்டினாய் சகோதரா .
உங்களது  வலைப்பூவில் நான் 20 ஆவது follower ஆக
இணைந்தேன்

இன்று உனது வலைப்பூவில் 185 followers.உனது அன்பும்
எல்லாரையும் அரவணைத்து செல்லும் குணமுமே
இதற்கெல்லாம் காரணம் .

எனது ஆங்கில /தமிழ் இரண்டு வலைப்பூவிலும் தவறாமல் 
பின்னூட்டம் வாயிலாக சந்தித்தாய் .
                       
                அதிராவின் பக்கம் எங்களை உன் பின்னூட்டம் மூலம் 
சிரிக்க வைத்தாய் .நாம் அதிகம் அளவளாவியது அங்கேதானே 
போட்டி போட்டுகொண்டு உன்னை இரண்டாமிடம் தள்ளினேன் 
நினைத்து பார்க்கும்போது நீ எனக்காக விட்டு கொடுத்தாய்  
என்பதனை புரிந்துகொண்டேன் .
இனி நான் எப்படி அதிராவின் வலைபூ செல்வேன் .
                             
                                 என் மனம் குற்ற உணர்வில் தவிக்கிறது நண்பா .
ஓரிரண்டு நாட்கள் யாரையேனும் வலைப்பக்கம் காணவில்லை
என்றால் உடனே பின்னூட்டமோ அல்லது மெய்லோ அனுப்பி
விசாரிப்பேன் .என் மனக்கவலைகளால் உன் விஷயத்தில்
கவனக்குறைவாக இருந்து விட்டேன் .

                                                     இந்த ஆறு மாதத்தில் ஒரு சிறு கோபம்
அல்லது ஒரு வெறுப்பு இதுவரை உன்னிடத்தில் இருந்து வெளிப்படவில்லையே தம்பி .உன் பதிவை காபி பேஸ்ட் செய்து
பின் மன்னிப்பு கேட்ட ஒருவரிடம் கூட நீ எவ்வளவு அமைதியாய்
 ""பரவாயில்லை  நன்றாக படித்து தேர்ச்சிபெற இறைவனை
பிரார்த்திக்கிறேன்  "என்றாய் .
                                 புன்னகை பூக்களை மட்டுமே தூவி எங்களை
சந்தோஷப்படுதினாய் .உன் சோகத்தை புன்னகையால்
மறைத்தாயோ என்று எண்ண தோன்றுகிறது .
                                           
                                                   பதிவுலகை விட்டு நீ விலகபோவதாய் 
அறிவித்ததும் .,நான் வேலை நிமித்தம் காரணம் என்று நினைத்து
கொண்டேன் ஆனால் ஒரு நெருடல்.//ஒருவரது மரணத்தின்
பின் அவருக்காக ரத்த சம்பந்தமே இல்லாத நூறு பேர் அழுவது 
மற்றும் எல்லாம் மேலஇருக்கறவன் பார்த்துப்பான் //போன்ற 
வரிகள் எனக்கு கொஞ்சம்நெருடியது ,
     அதிராவையும் கேட்டேன் , அவ்வப்போது வருவாய் என்றார் .
ஆனாலும் நான் விவரம் கேட்டு இட்ட பின்னூட்டத்திற்கு நீங்கள் 
பதிலளிக்கவில்லை தம்பி ,நீங்கள் ஒருநாளும் அப்படி செய்தது
கிடையாது .
விடை தெரியாத பல கேள்விகள் என்னில் ஏன்?????எப்படி ????
எதனால் ????? எதற்கு ?????........................இனி உன் கல கலப்பான
பின்னூட்டங்கள் இனி எங்குமே பார்க்க முடியாது என்பதை
நினைக்கும்போது  மனசு வலிக்கிறது .

அருமையான நற்குணமுள்ள ஒரு சகோதரனையும் மகனையும்
 இழந்த குடும்பத்தாருக்கு அந்த இறைவன்தான் 
ஆறுதலையும் தேறுதலையும் தர வேண்டும் .
.............................................................................................................................


நமது சந்தோசம் மட்டுமே அடுத்தவரை தொற்ற வேண்டும் நமது
 துக்கம் நம்மை சுற்றியுள்ளோரை தீண்ட கூடாது என்ற நல்ல
எண்ணத்தினால் மனதுக்குள் துக்கத்தை வைத்து புழுங்குவதை விட 
நல்ல நட்புக்களுடன் பகிர்ந்து கொண்டால் மன பாரம் குறையும் .



*******************************************

சில நாட்கள் ஊரில் இல்லை என்னென்னமோ நடந்திருக்கு .
எங்களை சிரிக்கவைத்த அன்பு நண்பனின் ஆன்மா சாந்தியடைய 
இறைவனை வேண்டுகிறேன் .


16 comments:

  1. நாங்களும் அதிர்ந்துதான் போவிட்டோம்.

    // மனதுக்குள் துக்கத்தை வைத்து புழுங்குவதை விட
    நல்ல நட்புக்களுடன் பகிர்ந்து கொண்டால் மன பாரம் குறையும் .//

    உண்மைதான் angelin.

    ReplyDelete
  2. அருமையான நற்குணமுள்ள ஒரு சகோதரனையும் மகனையும்
    இழந்த குடும்பத்தாருக்கு அந்த இறைவன்தான்
    ஆறுதலையும் தேறுதலையும் தர வேண்டும் .

    ReplyDelete
  3. அஞ்சு, நான் உடனே உங்களைத்தான் நினைத்தேன்.. மாயாவோடு போட்டி போடுவோம்... பின்னூட்ட எண்ணிக்கை எல்லாம் கணக்குப் பார்ப்போம்... அனைத்தும் கண்முன்னே வரத் தொடங்கிட்டுது...

    நீங்க ரெஸ்ட் எடுட்திட்டு வாங்க... என்ன செய்வது, நாங்கள் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்துகொண்டிருக்கிறோம், நீங்க இப்போதானே அறிகிறீங்க... வெளியே வர நாளாகும்... மனதைத் தேற்றிக்கொள்ளுங்கோ.

    ReplyDelete
  4. அஞ்சுவின் தலைப்பை இன்று மீண்டும் பார்த்ததும் மனம் கனத்துவிட்டது மீண்டும்:(.

    ReplyDelete
  5. உங்க பதிவில்தான் அவரது நட்பான்,நகைச்சுவை,கலாய்ப்புகளை நான் படித்துள்ளேன்,எனக்கு அவரிடம் பரிச்சயம் இல்லையெனிலும் அவர் பின்னூட்டங்களை விரும்பி படிப்பேன்.எனக்கே அவர் பிரிவு இன்னும் வேதனையாக உள்ளது ஏஞ்சலின்.உங்கள் பதிவு கண்ணீரை வர வைத்துவிட்டது.

    ReplyDelete
  6. மனதை தேற்றி கொள்ளுங்கள்.வேறு வார்த்தைகள் இல்லை.:((((..

    ReplyDelete
  7. வாங்கோ ஏஞ்சல்.மாயாவின் மறைவு இன்னும் தாங்கிக்கொள்ள முடியவில்லைத்தான்.என்ன செய்ய !

    ReplyDelete
  8. உங்களுக்கு ஆறுதல் சொல்லி துயரம் நீக்க முடியாவிட்டாலும் பகிர்ந்துகொண்ட வேதனையை நாங்களும் பங்கிட்டுக்கொள்கிறோம். அவருடைய நட்பு எனக்கு வாய்க்கப்படாவிட்டாலும், ஒரு நல்ல நட்பு எப்படி இருக்கவேண்டுமென்று ஒரு உதாரணமாய் வாழ்ந்துள்ளார்.

    மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் ஏஞ்சலின்.

    ReplyDelete
  9. மிகவும் வருத்தம் தரும் நிகழ்ச்சியே. ;(

    ReplyDelete
  10. இன்னும் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை! :-(

    ReplyDelete
  11. நண்பரின் இழப்பு நெஞ்சை கனக்க வைத்துவிட்டது ..

    ReplyDelete
  12. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்....:(

    ReplyDelete
  13. மீண்டும் சகோதரன் மாயாவிற்கு உங்கள் பதிவு வாயிலாக எம் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

    ReplyDelete
  14. படிக்கையில் கஷ்டமாக உள்ளது ஏஞ்சலின்.

    ReplyDelete