அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/27/12

மியாவ் மியாவ் :))))))))))))))

மியாவ் மியாவ் :))))))))))))))

                                                                             

                             
கூடை .......  base made with c scrolls    .செய்முறை இங்கே                                     


இரண்டு நாட்களா ஒரு மியாவ் எங்கதோட்டத்தில் 
சுத்துகின்றது .கழுத்தில் பெல் கட்டிக்கிட்டு 
ரொம்ப கியூட் .

       

எங்கள் மகள் செய்த அந்த க்வில்ட் மான் பற்றி குறிப்பிட்டு 
இருந்தேனே .அந்த போட்டிக்கு 90    படங்கள் வந்தனவாம் 
அவற்றுள் முப்பதை தேர்வு செய்து லைப்ரரியில் உள்ள ஆர்ட் 
கேலரியில் வைத்திருக்கிறார்கள் .அதுவும் இவள் செய்தது 
Highly Commended என்ற லேபிளுடன் தனியாக மாட்டி வைக்கப்பட்டு 
இருக்கு .      
2/20/12

புத்தாண்டு தீர்மானங்கள் ..............


புத்தாண்டு தீர்மானங்கள் .:  


எனும் தலைப்பில் என்னை தொடர் பதிவெழுத 
சகோதரர் ரெவரி அழைத்திருந்தார் .
இதோ என் தீர்மானங்கள் 
                                                                        


10,  சொல்ல வேண்டிய நேரத்தில் /கோபம்கொள்ள 
        வேண்டிய நேரத்தில் ரௌத்திரம்   பழக வேண்டிய 
       இடத்தில் கருத்துக்களை தைரியமாக சொல்ல 
       வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன் .
        
       (மீன் அரசியல்ல இறங்கபோகுது )
9,    வயலின் கிளாஸ் அல்லது பியானோ கிளாஸ் 
        சேரணும்.
         (சனிக்கிழமை சமையல் வேலையில் இருந்து 
          தப்பிக்க கண்டுப்பிடிச்ச  வழி )


                                                                                                         


8,     பரணில்  தூங்குகிற(  LOFT இல் )       எக்சர்சைஸ் 
        மெஷினை எடுத்து அசெம்பிள் செய்து ...............
        இருங்க கற்பனை குதிரையை ......அவ்ளோ தூரம் ஓட 
        விட கூடாது அது எனக்கில்லை பேப்பர்லபோட்டு 
        விற்கனும்.
7,   ஒரு நாளைக்கு எப்படியாவது ஐந்து கப் கருப்பட்டி காப்பி 
       குடிக்கிறேன் .என் அப்பாவிடம் இருந்து தொற்றிக்கொண்ட 
       இனிய கெட்ட பழக்கம் ..இனி இரண்டு கோப்பை மட்டும் 
       குடிக்க முயற்சி செய்கிறேன் .
6,    இப்பெல்லாம்  ரொம்பவே அதிகம் அசைவம் 
       சமைக்கிறேன் இனி சமைக்கவே கூடாது .
       சைவம் மட்டும் என்று அதிரடி நடவடிக்கை 
       எடுத்துவிட்டேன்  .


       ஏன் ஏன் ஏன் இந்த கொலவெறின்னு ஒரு ஜீவன் 
       கத்துவது கத்துவது கேட்க்குமே .............
      அவர் மிஸ்டர் ஏஞ்சல் தான் 
       நான் இனிப்பு மற்றும் அசைவம் உண்பதில்லை
       ஹா ஹா ஹா

5,     என் மகனுக்கு பெண் பார்க்கிறேன் சரிவர  
        மாட்டேங்குது 
        
video
        இதோ மாப்பிள்ளை படம் .சகல அம்சம் பொருந்திய 
        பெண் இருந்தா சொல்லுங்க .
                                                                                 


                                                                                              
4,   எனது  பேராசை எப்படியாவது சொந்தமா ஒரு 
      சமையல் குறிப்பு செய்முறை  விளக்கத்துடன் 
      எழுதணும் .
        
      (யாரும் இதுக்கு சிரிக்க கூடாது ஆமா )


3,  இந்த வருடமாவது துருக்கிக்கு ஒரு ட்ரிப் போய் 
      வரணும் .பல வருடமா யோசிக்கிறோம் .


2,    மகளுக்கு  தமிழ்  எழுத  படிக்க  கற்று  கொடுக்கணும் .


1,   இந்த தீர்மானம் எதையாவது செய்ய வேண்டும் என
       நினைத்தால் சாக்கு போக்கு சொல்லாமல் காலம் 
      கடத்தாமல் உடனே செய்து முடிக்கணும் .
        
          (அதாவது நான் கைவினை செய்கிறேன்
         பேர்வழி என்று ஒரு மூட்டை JUNK சேர்த்து 
          வைத்திருக்கேன் அதையெல்லாம் முதலில் 
         வீட்டை விட்டு வெளியேற்றணும் )


          
யாரும் ஓடாதீங்க குறிப்பா 
கிரிஜா /ஜெய் /மியாவ் அதிரா /வானதி /மகி 
உங்க அனைவரையும் இந்த தொடரை தொடருமாறு 
அன்போடு மற்றும் பெருங்கம்போடு கேட்டுக்கொள்கிறேன் .
முடிந்தால் பிப்ரவரிக்குள் எழுதுங்க இல்லாவிடில் 
2013 ஜனவரிக்கு எழுதுங்க .  
       
        
        

       

2/17/12

Invitation !!!!!!!!!!!!!!!              அன்பு நட்புக்களே எனக்கு ஒரு விருது கிடைத்ததை 
சென்ற பதிவில் எழுதியிருந்தேன் .நானும் அதை சிலருக்கு கொடுக்க எண்ணியபோது ஏறக்குறைய எல்லாருமே அந்த விருதை பெற்றிருந்தார்கள் .அப்படியே மறந்துவிட்டேன் .இரண்டு நாட்களுக்கு முன் என் பதிவை பார்த்த ஒரு மேடம் ஏன் நீங்க எனக்கு அவார்ட் தரல்லை என்று கேட்டாங்க அந்த மேடம் ஆங்கில பதிவு எழுதறாங்க 
நேரம் கிடைக்கும் போது அங்கே சென்று அவங்களை வாழ்த்திடுங்க.
அவர்களின் வலைப்பூ   http://craftyflower.blogspot.com/2012/02/quilled-flag-fawn.html
வார இறுதியை சந்தோஷமாக கொண்டாடுங்க 

2/13/12

விருது + விருது !!!!!!!!!!!!!!!!!


                                                                                     

                                              வருக வருக நண்பர்களே 
எனக்கு VAI.GOPALAKRISHNAN    அவர்களும்   குட்டி 
தங்கை  மகியும்  Liebster  Blog Award      என்ற அவார்டை 
வழங்கியிருக்காங்க !!!!!    .

Thanks Sir ,and Thanks Sis ..

இப்ப அன்பா அவங்க எனக்கு தந்த அவார்டுக்கு எங்க 
வீட்டுக்குள்ள நான் தொட்டியில் வளர்த்த இந்த 
daffodil மலர்களை தொட்டியோடு இருவருக்கும் தருகிறேன் பெற்றுக்கொள்ளவும் .ஆனா ஒரு கண்டிஷன் நீர் ஊற்றாமல்
வளர்க்கணும் .மகி உங்களுக்கு பிடிச்ச மஞ்சள் நிற மலர்கள் .
.பூஸ் பார்ப்பதற்கு முன் எடுத்துக்கோங்க .

                                                                             

                          
                                                                                       
                                                                                         
                                                                               
                                                                                    
                   இந்த மலர்கள் quilled miniatures .ஏற்க்கனவே செய்து 
வைத்திருந்தேன் .

மீண்டும் சந்திப்போம்.

(ரெவரி அடுத்த பதிவில் கண்டிப்பா புத்தாண்டு தீர்மானங்கள் 
எழுதிடறேன் )

                                                                                                                

2/12/12

எங்கள் அன்பு நண்பன் ராஜேஷுக்காக........

எங்களை விட்டு பிரிந்து சென்ற அன்பு
சகோதரன் மாய உலகம் ராஜேஷுக்கு 
நட்புக்களின்  கண்ணீர் அஞ்சலி .

Many People Will Walk 
In and out of our life 
But Only Few 
Like RAJESH Will Leave 
FOOT PRINTS 
in our Hearts                       ஊரிலிருந்து திரும்பியதும் டேஷ் போர்டில் பார்த்து 
அதிர்ந்தேன் இன்னமும் ஜீரணிக்க இயலவில்லை .
எங்களுடன் பழகியது சில மாதங்கள் தான் ஆனால் பலநாள்
சொந்தம்போல் எங்களுடன் அன்பு காட்டினாய் சகோதரா .
உங்களது  வலைப்பூவில் நான் 20 ஆவது follower ஆக
இணைந்தேன்

இன்று உனது வலைப்பூவில் 185 followers.உனது அன்பும்
எல்லாரையும் அரவணைத்து செல்லும் குணமுமே
இதற்கெல்லாம் காரணம் .

எனது ஆங்கில /தமிழ் இரண்டு வலைப்பூவிலும் தவறாமல் 
பின்னூட்டம் வாயிலாக சந்தித்தாய் .
                       
                அதிராவின் பக்கம் எங்களை உன் பின்னூட்டம் மூலம் 
சிரிக்க வைத்தாய் .நாம் அதிகம் அளவளாவியது அங்கேதானே 
போட்டி போட்டுகொண்டு உன்னை இரண்டாமிடம் தள்ளினேன் 
நினைத்து பார்க்கும்போது நீ எனக்காக விட்டு கொடுத்தாய்  
என்பதனை புரிந்துகொண்டேன் .
இனி நான் எப்படி அதிராவின் வலைபூ செல்வேன் .
                             
                                 என் மனம் குற்ற உணர்வில் தவிக்கிறது நண்பா .
ஓரிரண்டு நாட்கள் யாரையேனும் வலைப்பக்கம் காணவில்லை
என்றால் உடனே பின்னூட்டமோ அல்லது மெய்லோ அனுப்பி
விசாரிப்பேன் .என் மனக்கவலைகளால் உன் விஷயத்தில்
கவனக்குறைவாக இருந்து விட்டேன் .

                                                     இந்த ஆறு மாதத்தில் ஒரு சிறு கோபம்
அல்லது ஒரு வெறுப்பு இதுவரை உன்னிடத்தில் இருந்து வெளிப்படவில்லையே தம்பி .உன் பதிவை காபி பேஸ்ட் செய்து
பின் மன்னிப்பு கேட்ட ஒருவரிடம் கூட நீ எவ்வளவு அமைதியாய்
 ""பரவாயில்லை  நன்றாக படித்து தேர்ச்சிபெற இறைவனை
பிரார்த்திக்கிறேன்  "என்றாய் .
                                 புன்னகை பூக்களை மட்டுமே தூவி எங்களை
சந்தோஷப்படுதினாய் .உன் சோகத்தை புன்னகையால்
மறைத்தாயோ என்று எண்ண தோன்றுகிறது .
                                           
                                                   பதிவுலகை விட்டு நீ விலகபோவதாய் 
அறிவித்ததும் .,நான் வேலை நிமித்தம் காரணம் என்று நினைத்து
கொண்டேன் ஆனால் ஒரு நெருடல்.//ஒருவரது மரணத்தின்
பின் அவருக்காக ரத்த சம்பந்தமே இல்லாத நூறு பேர் அழுவது 
மற்றும் எல்லாம் மேலஇருக்கறவன் பார்த்துப்பான் //போன்ற 
வரிகள் எனக்கு கொஞ்சம்நெருடியது ,
     அதிராவையும் கேட்டேன் , அவ்வப்போது வருவாய் என்றார் .
ஆனாலும் நான் விவரம் கேட்டு இட்ட பின்னூட்டத்திற்கு நீங்கள் 
பதிலளிக்கவில்லை தம்பி ,நீங்கள் ஒருநாளும் அப்படி செய்தது
கிடையாது .
விடை தெரியாத பல கேள்விகள் என்னில் ஏன்?????எப்படி ????
எதனால் ????? எதற்கு ?????........................இனி உன் கல கலப்பான
பின்னூட்டங்கள் இனி எங்குமே பார்க்க முடியாது என்பதை
நினைக்கும்போது  மனசு வலிக்கிறது .

அருமையான நற்குணமுள்ள ஒரு சகோதரனையும் மகனையும்
 இழந்த குடும்பத்தாருக்கு அந்த இறைவன்தான் 
ஆறுதலையும் தேறுதலையும் தர வேண்டும் .
.............................................................................................................................


நமது சந்தோசம் மட்டுமே அடுத்தவரை தொற்ற வேண்டும் நமது
 துக்கம் நம்மை சுற்றியுள்ளோரை தீண்ட கூடாது என்ற நல்ல
எண்ணத்தினால் மனதுக்குள் துக்கத்தை வைத்து புழுங்குவதை விட 
நல்ல நட்புக்களுடன் பகிர்ந்து கொண்டால் மன பாரம் குறையும் .*******************************************

சில நாட்கள் ஊரில் இல்லை என்னென்னமோ நடந்திருக்கு .
எங்களை சிரிக்கவைத்த அன்பு நண்பனின் ஆன்மா சாந்தியடைய 
இறைவனை வேண்டுகிறேன் .