அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/4/12

மீள்சுழற்சி/ QUILLED BIRTHDAY CARD


இனிய புத்தாண்டில் எனது முதல்CRAFT பதிவு !!!!!!!!


                                                                               

                  சில பல காரணங்களால் வலைப்பூவை 
இழுத்து மூடலாமா   என்று யோசித்தேன் ஆனாலும் 
வைராக்கியமெல்லாம் நேற்று இந்த கவரை பார்க்கும் 
வரை தான் !!!!!!!!!!!!  .


    மேலயுள்ள வாழ்த்து அட்டையிலிருக்கும் மலர்கள் 
    இவரிடமிருந்துதான் வந்தவை .என் மகள் பிறந்த 
    நாளுக்கு வந்த வாழ்த்து அட்டை என்வலப் .
    தூக்கி வீச மனமின்றி பத்திரமாக வைத்திருந்தேன் .
   அதில் வெட்டி செய்தது தான் அந்த மலர்கள் .
                        புத்தாண்டில் மீள்சுழற்சி எப்படி இருக்கு .
மார்கழி மாதம் ஊர் நினைவு .அதிகாலையில் இந்த 
பாட்டு எல்லா கோவில்களிலும் கேட்க்கும் .
பாலு சாருக்காக எத்தனை முறையும் கேட்கலாம் .
என்  உள்ளம் கொள்ளை கொண்ட பாடல் .
வீட்டு நினைவு ரொம்ப ஃபீலிங்க்ஸ் .
பதின்ம வயதில் அதிகாலை எழுந்து ஒரு ஃபில்டர் 
காப்பி குடித்து கொண்டே புத்தகத்தை தலை  கீழ  
பிடிச்சுகிட்டே இந்த பாட்டை கேட்டிருக்கேன் .
நீங்களும் கேளுங்க 
                                                                                                                         

33 comments:

 1. தரமான பதிவுகளை தருபவர்கள் எல்லாம்
  திடுமென்று நிறுத்த நினைப்பது என்பது
  கொஞ்சம் மனக் கலக்கம்தான் தருகிறது
  நல்ல வேளை மனம்மாறிவிட்டீர்கள்
  தொடர்ந்து பதிவுகள் தரவேணுமாய்
  அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
  பாடலுடன் பதிவு அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உஸ்ஸ்ஸ் அஞ்சு.. இதென்ன இது எங்கின பார்த்தாலும் இழுத்து மூடுற கதையாகவே இருக்கே... திறக்க பிளான் ஆருக்குமே இல்லை...:(.

  அஞ்சு நானும் அடிக்கடி நினைப்பேன், ஆனா அப்படி இருந்தால் இனும் மூட் அவுட்டாகிடுமே என்றுதான் விடாமல் திறக்கிறேன்...

  “இதுவும் கடந்து போகும்” பலமுறை மனதில் சொல்லுங்க...

  ReplyDelete
 3. அந்தப் பேப்பிள் பூ சூப்பரோ சூப்பர். அதெப்படி சுருட்டி எடுத்தீங்க புரியவில்லையே... சுருட்டி எடுத்து glue போட்டு ஒட்டுவீங்களோ?

  //இனிய புத்தாண்டில் எனது முதல்CRAFT பதிவு !!!!!!!!
  //

  வாழ்த்துக்கள்... விடாதீங்க தொடருங்க.. ஆமா சுண்டெலி எங்க அஞ்சு?:).

  ReplyDelete
 4. ஆயர்பாடி சூப்பர்.... ஆராலுமே மறக்கமுடியாத பாடல்...

  ReplyDelete
 5. //சில பல காரணங்களால் வலைப்பூவை
  இழுத்து மூடலாமா என்று யோசித்தேன்//

  என்னைய மாதிரி நீங்களும் யோசிக்க ஆரம்பிச்சீட்டீங்களா..????? அவ்வ்வ்வ்


  கார்ட் அழகா இருக்கு :-)

  ReplyDelete
 6. அழகான வாழ்த்து அட்டை! வயலட் பூக்கள் சூப்பர் க்யூட்டா இருக்கு!

  /சில பல காரணங்களால் வலைப்பூவை
  இழுத்து மூடலாமா என்று யோசித்தேன்/ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*100000001

  எல்லாருக்கும் வேப்பங்குழை அடிச்சு இந்த யோசனையை ஓட்டிவிடோணும் போல இருக்கே??! ஒழுங்கா இந்த யோசனையை மூட்டை கட்டி அட்டிக்ல போட்டுட்டு மறந்து போயிருங்க,ஓக்கை??

  /அதெப்படி சுருட்டி எடுத்தீங்க புரியவில்லையே... சுருட்டி எடுத்து glue போட்டு ஒட்டுவீங்களோ?////அதிரா,அதான் க்வில்லிங்-ஆம்!!இவ்வளவு நாள் கவனிக்கேல்லையோ?! சுண்டெலிநினைவிலேயே திரிஞ்சா எப்படி??? ;)

  ReplyDelete
 7. குட்டி எலியை யாரோ தேடிய மாதிரி தெரியுதே....:-))))))))))))))

  ReplyDelete
 8. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏஞ்சல் அக்கா! இந்த ஆண்டில் அட்லீஸ்ட் (63*2=)126 பதிவாவது போடணும் நீங்க! :):)

  ReplyDelete
 9. /குட்டி எலியை யாரோ தேடிய மாதிரி தெரியுதே..../ உங்களை வேற யாருங்க தேடுவாங்க..பூஸார்தான் தேடியிருக்காங்க..உங்களுக்கு பல்லி மிட்டாயெல்லாம் வெயிட்டிங்காம் அங்க. சாப்ட்டாச்சா??? :)

  ReplyDelete
 10. எஸ் பி பி வாய்ஸ் தாலாட்டுற மாதிரியே இருக்கும் அழகான பாடல்

  ReplyDelete
 11. //உங்களுக்கு பல்லி மிட்டாயெல்லாம் வெயிட்டிங்காம் அங்க. சாப்ட்டாச்சா??? :) //

  பூஸார் கமெண்ட் பெட்டியை தலையை சுத்தி தேம்ஸ்ல எறிஞ்சிட்டாங்களாமே ...எனக்கு தண்ணியில கண்டமாம் அதனால நான் தேம்ஸுக்கு(ள்ளே) போக மாட்டேனே

  ReplyDelete
 12. வணக்கம் அக்கா,
  நல்லா இருக்கீங்களா?
  நீங்க ப்ளாக் எழுதாமல் நிற்கிறதா?

  ஹே...ஹே...வீடு தேடி வந்திடமாட்டோம் என்று நான் சொன்னா என்ன நம்பவா போறீங்க?
  நான் கொஞ்சம் பிசியாகிட்டேன் அக்கா. அதால ப்ளாக் பக்கம் வர முடியலை!

  பிந்திய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் உரித்தாகட்டும்!

  ReplyDelete
 13. மீள் சுழற்சி அலங்காரமும் நன்றாக இருக்கிறது அக்கா.

  ReplyDelete
 14. /பூஸார் கமெண்ட் பெட்டியை தலையை சுத்தி தேம்ஸ்ல எறிஞ்சிட்டாங்களாமே .../இங்கதான் கண்டுபுடிச்சேன்..குட்டி எலி யாருன்னு!! பச்சை..ச்சை,ச்சை..வாய் குழறுதுப்பா..நான் அப்புறமா வாரேன்! ;) ;)

  ReplyDelete
 15. காகிதத்தை தூக்கி எறிய மனமில்லாமல் மறுசுழற்சிக்குத் தயாராக்கும்போது நம் திறமைகளை வீணாக்கலாமா? மனத்தையும் மறுசுழற்சி செய்து புதுப்பித்துக் கொள்ளுங்கள் ஏஞ்சலின். உற்சாகமான மீள்வரவை எதிர்நோக்குகிறேன். வாழ்த்து அட்டை அருமையா இருக்கு.

  ReplyDelete
 16. க்வில்லிங் கார்ட் அழகா இருக்கு ஏஞ்சல்.

  'ஆயர்பாடி மாளிகையில்' பாடலைப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா!

  மகீ... ;)

  ReplyDelete
 17. “இதுவும் கடந்து போகும்” பலமுறை மனதில்
  சொல்லுங்க....REPEATU...

  ReplyDelete
 18. ஏஞ்சலின், சூப்பரா இருக்கு. ஒரு முறை வீடியோ பார்த்தேன் இந்த க்ராஃப்ட் செய்முறை. ஏதோ ஒரு ஸ்பெஷல் டூல் பாவிக்கிறார்கள். அது கட்டாயம் தேவையா என்று சொல்லுங்கள்.
  என்ன இது எல்லோரும் போறேன், போறேன் என்று சொல்லிட்டு. கொஞ்சம் ப்ரேக் எடுத்துட்டு திரும்ப வரோணும். சரியா.

  ReplyDelete
 19. திறக்க பிளான் ஆருக்குமே இல்லை...:(....YES YES YES..

  ReplyDelete
 20. அழகான கார்ட் ஏஞ்சல்.
  அற்புதமான பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
  //புத்தாண்டில் மீள்சுழற்சி எப்படி இருக்கு//அழகானது. உங்க முடிவு உட்பட.
  "ஆக்குவது கஷ்டம்,அழிப்பது சுலபம்.

  ReplyDelete
 21. @Ramani said...//

  அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா .

  @athira said...//
  ஆம்மாம் அதிரா இதுவும் கடந்து போகும் என்று நினைத்துதான் ஒவ்வொருநாளும் கடக்கிறேன் .

  @ஜெய்லானி said...//
  வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி
  நான் மட்டும்தான் இப்படி யோசித்தேன் என்று பார்த்தா நட்பு வட்டத்தில் பலருக்கும் இதே நிலை.

  @ மகி said...//
  வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மகிம்மா .

  @கீதா said...//
  என்னை உற்சாகமூட்டியதர்க்கு நன்றி கீதா .

  @இமா said...//
  வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிஇமா
  @siva sankar said...//

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி siva

  @vanathy said...//
  வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.#

  @ammulu said...//
  வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

  @நிரூபன் said...//
  வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி
  குட்டி எலி said..//
  thank you so much kutti eli .


  கால நிலை மாற்றம் மற்றும் அம்மா சுகமில்லதிருப்பதலும் ரொம்பவே குழப்பமாகவும் அலுப்பாகவும் இருந்தது .இதுவும் கடந்து போகும் என்று
  ஒருவாறு நார்மலுக்கு வர தயார் செய்து கொள்கிறேன் .அடிக்கடி ஊர் நினைவு வந்து விடும் என்னை உற்சாகமூட்டிய பின்னூட்டங்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 22. அடுத்த பதிவில் க்வில்லிங் பற்றி இன்னும் சொல்கிறேன்

  ReplyDelete
 23. மனம் நிம்மதியில் இருக்கும்போது பதிவுகளைத் தொடருங்கள்.வின்ட்டர் ஹாலிடேஸ் இப்ப வந்திருக்குமே .அம்மாவை பார்த்துவிட்டு வாருங்கள்.

  ReplyDelete
 24. யோசிக்காதீங்க ஏஞ்சல்.உங்க அம்மா சீக்கிரமே நலமாகிவிடுவாங்க.
  அம்மாவுக்காக பிரார்த்திக்கிறேன்.
  கவலையைவிடுத்து,உங்கள் கைவேலையில் மனதை ஈடுபடுத்துங்கள்.

  ReplyDelete
 25. ///பூஸார் கமெண்ட் பெட்டியை தலையை சுத்தி தேம்ஸ்ல எறிஞ்சிட்டாங்களாமே .../இங்கதான் கண்டுபுடிச்சேன்..குட்டி எலி யாருன்னு!! பச்சை..ச்சை,ச்சை..வாய் குழறுதுப்பா..நான் அப்புறமா வாரேன்! ;) ;) //

  நான் அங்கே கை ரேகை ஜோசியம் சொன்னா இங்கே காலை வாறிட்டீங்களே மஹி அவ்வ்வ்வ் :-)))

  ReplyDelete
 26. //கால நிலை மாற்றம் மற்றும் அம்மா சுகமில்லதிருப்பதலும் ரொம்பவே குழப்பமாகவும் அலுப்பாகவும் இருந்தது .இதுவும் கடந்து போகும் என்று
  ஒருவாறு நார்மலுக்கு வர தயார் செய்து கொள்கிறேன் .அடிக்கடி ஊர் நினைவு வந்து விடும் என்னை உற்சாகமூட்டிய பின்னூட்டங்களுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி //

  எனக்கும் சில நேரம் உலகமே வெறுத்துப்போகும் ...புலி வாலை பிடித்த கதையா விட முடியாமல் தொடரவும் முடியாமல் தவித்திருக்கிறேன் ... :-)) . இங்கே வந்தால் சில பல கவலைகள் விட்டுப்போகுது .. நீங்களும் தேவைப்பட்டால் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு வாங்க .. :-). விட்டுப்போக வேண்டாம் :-).

  ஊர் நினைவை மறக்கவே நானும் இந்த பக்கம் அதிகம் சுற்றுவது . :-)

  ReplyDelete
 27. உடல் நிலை சரியாக நானும் பிராத்திக்கிரேன் :-)

  ReplyDelete
 28. என்ன ஏஞ்சல்...வருஷ முதல் பதிவு.கலகலன்னு இருங்க.எதையும் புதுப்பிக்கும் உங்களால் உங்களைப் புதுப்பிக்க முடியாதா.எல்லாம் சும்மா.
  இதுதான்.இதுவும் கடந்துபோகும் தோழி !

  ReplyDelete
 29. / நான் அங்கே கை ரேகை ஜோசியம் சொன்னா இங்கே காலை வாறிட்டீங்களே மஹி அவ்வ்வ்வ் :-)))
  / ஆ...நான் என்ன சொன்னேன்?? ஜெய் அண்ணா,நான் ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊ...பிறக்க 6வருஷம் முன்பிருந்தே!!! ;)))))))))

  ஏஞ்சல் அக்கா,அம்மா சீக்கிரம் குணமடைந்துடுவாங்க,டோன்ட் வொர்ரி!

  ReplyDelete
 30. அம்மாவின் உடல் நிலை சரியாக நானும் பிராத்திக்கிரேன்.

  ReplyDelete
 31. அம்மாவின் உடல் நிலை சரியாக
  விரைவில் நலம்பெற
  அனைவரும் வேண்டுகிறோம்.

  ReplyDelete
 32. வணக்கம் Angelin முதலில் தாமதமான நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. என்ன இது வலப்பூவை இழுத்துமூடுகிறேன் என புதுக்கதைவிடுகிறியள்.ஆளாளாளுக்கு இஸ்டத்து இழுத்துமூட்டினால் அப்புறம் நாங்க எல்லாம் என்ன செய்கிறது எதைப்படிக்கிறது.

  ReplyDelete