அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/25/12

Lattice Window Card with Quilled Red Roses.


                                 Lattice Window Card with Quilled Red Roses.

                                                                             

இந்த வாழ்த்து  அட்டை வெறும் craftknife பயன்படுத்தி வெட்டி 
செய்தது .இந்த மாதிரி விண்டோஸ் வெட்ட die cut machines 
இருக்கு  அது  என்னிடம் இல்லை .

இந்த வெப்சைட்டில் நிறைய கைவினை க்வில்லிங் ,க்ரோஷா
தையல் செய்முறை இருக்கு .ஒவ்வொரு பகுதியும்  பாருங்கள் .

http://www.allcrafts.net/

ஒருவருக்கு மிகவும் பயன்படும் ;))))))))))))))
http://www.allcrafts.net/fjs.htm?url=dollmaker.nunodoll.com/cat/terrycats.htmlframe இப்படி வெட்டி ஓட்டினேன் 
                  இரவு நேரம் படம் சரியாக வரவில்லை        


         இந்தியன் க்ரோசரி கடைக்கு சென்றபோது இவங்க 
          அங்கே சுத்திகிட்டு இருந்தாங்க     .                                                                        
         கீழே படத்தில் ஒருவர் தெரிகிறாரா ??
யாரோ ஒருவர் வளர்த்து விட்டிருக்காங்க எங்க கராஜ் 
பக்கமா பார்த்தேன் பிடிக்கலாம்னா கைக்கு அகப்பட 
மாட்டேங்கறார் .தினமும் காரட் போடுகிறோம் .சாப்பிட்டு 
செல்கிறார் .எப்ப வருவார்னே தெரியாது
.இப்ப இன்னொரு பிரச்சினை இரவு நேரத்தில் ரெண்டு 
சிவப்புநிற குள்ள நரிகளும் எங்க தோட்டம் பக்கம் உலவுவதை 
பார்க்கிறோம் .பயமா இருக்கு .                         
                              
                  Learn from yesterday, live for today, hope for tomorrow.     


படித்ததில் பிடித்தது 

விடியல் உன்கையில் 

இரவின்  மடியில் சாய்ந்து கொண்டு விடியலுக்காக 
காத்திருப்பதை விட இரவின் கைபிடித்து நடைப்பயணம்-
செய்து பார் விடியல் உனக்காக வரவேற்பு கம்பளம் 
விரித்து காத்திருக்கும். 
                          

84 comments:

 1. Replies
  1. உடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்

   Delete
 2. ஹை நானு 2nd!! பூசுக்கு முன்னாடி வந்திட்டேன். ஏஞ்செல் எனக்கு ஆயா வேண்டாம் ஏதாச்சும் வெஜிடேரியன் ப்ளீஸ்

  ReplyDelete
  Replies
  1. முசலார் வெஜிடேரியன்தான், பத்திரமா கூட்டிப்போங்க ஹையோ ஹையோ:))

   Delete
  2. முசலாருக்கு போடும் கேரட் இருக்குமே.. ஹய்யோ.. ஹய்யோ...!! :-)))

   Delete
  3. இங்கே ஒரு அப்பாவி வெஜ் சாப்பாடு கேட்டதுக்கு இப்புடி போட்டு கும்மி அடிச்சு இருக்காங்களே !! கரர்ர்ர் ர்ர்ர்ர்

   Delete
 3. வாழ்த்து அட்டை ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. என்னிக்காச்சும் ஒரு தடவ செஞ்சு பார்க்கணும். போட்டோ ல கிளியர் ஆ தெரியல அது முயல் தானே?

  படித்ததில் பிடித்தது நல்லா இருக்குங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கிரிஜா .உங்களுக்கு வெஜிடபிள் குருமா வித் மஷ்ரூம் fried rice
   ஆமாங்க அது முயலார் தான்

   Delete
 4. ஏஞ்சலின், அழகான வாழ்த்து அட்டை. Well done. Thanks for the links.

  அது முயல் தானே!!??? எங்க வீட்டுப்பக்கம் வரும் முயல்களுக்கு காரட் போட்டா மூஞ்சையை திருப்பிட்டு போயிடும். என்னா கொழுப்பு அதுகளுக்கு என்று கோவம் வரும்.
  கோழிகள் ரோட்டில் திரியுதா??

  ReplyDelete
  Replies
  1. வாங்க வானதி .
   ஆமாம் முயல்தான் கிட்ட போய் படம் எடுக்க முடியல பயந்து ஓடிரும்னு தூர இருந்து எடுத்தேன் .அந்த கோழிங்க கடை முன்னாலே சுத்துதுங்க காம்பவுண்ட் உள்ளதான் .கேட் திறந்திருக்கும் எப்பவுமே

   Delete
  2. //எங்க வீட்டுப்பக்கம் வரும் முயல்களுக்கு காரட் போட்டா மூஞ்சையை திருப்பிட்டு போயிடும். என்னா கொழுப்பு அதுகளுக்கு என்று கோவம் வரும்//

   ஹா..ஹா..ஹா... முயலுக்கு, தனிப்பட்ட முறையில ஏதும் கோபமிருக்குமோ வான்ஸ்ஸ்?:))))

   Delete
  3. வான்ஸ்...அதுக்கு ஒரு வேளை ‘புதினா’(கத்திரிகா) சட்னி வச்சி குடுத்திருப்பீங்களோ ஹி..ஹி.. :-)))

   Delete
 5. அச்சச்சோ.. எனக்கு மூடு அவுட்டான நேரம் பார்த்துப் பதிவைப்போட்டு அவ்வ்வ்வ்வ்வ்:))... ஹா..ஹாஅ..ஹா... எனக்கு வடை கிடைக்காட்டிலும் பறவாயில்லை, கிரிசாவுக்கு ஆயா... ஹா..ஹா..ஹா..ஹா... துன்பமெல்லாம் மறந்து சிரிப்பு வந்திட்டுது... ஜெய், இனிப் பயப்பூடாமல் லாண்ட் பண்ணுங்க ...லைன் கிளியர்:)).

  ReplyDelete
  Replies
  1. miyyav poos iv'e given those links especially for
   you .go to those sites :)):))

   Delete
  2. //ஜெய், இனிப் பயப்பூடாமல் லாண்ட் பண்ணுங்க ...லைன் கிளியர்:)).//

   மீ ரிடன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))))

   Delete
  3. எனக்கு அஞ்சு மஷ்ரூம் பிர்ர்ரர்ர்ர்யாணி வித் வெஜிடபள் குர்ர்ர்ருமா கொடுத்து இருக்காங்க ரெண்டு பேரும் மேல பார்க்கலையா ஆஆஆ ஆயா ஒன்லி reserved for ஜெய் . எப்போ வந்தாலும் ஆயா உங்களுக்குத்தான் !!

   Delete
 6. கார்டோடு பகிர்ந்த விஷயம்,படித்ததில் பிடித்தது சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி

   Delete
 7. soft toys making லிக் ரொம்ப நல்லா இருக்கு ஏஞ்சலின்.. எல்லா லிக்கும் பார்த்தேன்.. அருமை, நன்றி

  ReplyDelete
  Replies
  1. அப்படியா ரொம்ப சந்தோசம் faiza.
   இன்னமும் நிறைய லின்க்ஸ் இருக்கு அனுப்ப்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

   Delete
 8. //ஒருவருக்கு மிகவும் பயன்படும் ;))))))))))))))//

  avvvvvvvvvvvvvvv:) பார்த்தனே, முதலாவதுபோல எனக்கு கவிக்காவும் ஒன்று அனுப்பியிருந்தார், அப்படிச் செய்ய ஆசை, முடியுதில்லையே... வீட்டில் ஒரு பக்கம் கொஞ்சம் அடுக்குவம் என வெளிக்கிட்டாலே 2 நாள் ஆகுது முடிக்க... பெரியவரின் முடிச்சிட்டேன், இப்போ சின்னவரின் உடுப்பெல்லாம் எடுத்து வச்சிருக்கிறேன், புறிச்சுப் புறிச்சு அடுக்கவென.. ஒரு வேலைக்குள் இன்னொன்று வந்திடும்... நேரம் போதாது.

  என்னில் ஒரு குணம் எது செய்தாலும் மத்தியானத்துக்கு முன்புதான், பின்னர் எனக்கு வேலை எதுவும் செய்யப் பிடிக்காது.. இதுக்கு ஏதும் மருந்து கண்டு பிடிக்கலாம் என என் நண்பிக்கு ஃபோன் பண்ணினேன்....

  கொடுமை கொடுமை எனக் கோயிலுக்குப் போனா அங்க ஒரு கொடுமை காத்திருந்துதாமே..... அந்தக் கதையா அவ இருந்தா... தானும் அதே கேஸாம் அவ்வ்வ்வ்வ்:)).

  ReplyDelete
  Replies
  1. //ரு குணம் எது செய்தாலும் மத்தியானத்துக்கு முன்புதான், பின்னர் எனக்கு வேலை எதுவும் செய்யப் பிடிக்காது.. இதுக்கு ஏதும் மருந்து கண்டு பிடிக்கலாம் என என் நண்பிக்கு ஃபோன் பண்ணினேன்....//

   அடடா என்னைய மறந்துட்டீங்களே... அவ்வ்வ்வ்

   Delete
  2. ரொம்பவும் சிம்பிள் ...கேட்டுக்கோங்க..
   தவளை குட்டி 2
   ஆமை முட்டை 1
   இதை மிளகாய் அரைச்ச மிக்ஸியில வேப்பெண்னை விட்டு நல்லா அரைச்சு அம்மாவாசை நாளில் இரவு 12.10க்கு தெற்கு பக்கம் பார்த்து வெற்றிலையில் வைத்து விழுங்கனும்..

   மேட்டர் ஓவர் செய்து பார்த்து சொல்லுங்க :-))))))))

   Delete
  3. நாங்க இல்லாத நேரம் பார்த்து வந்து கலக்கிட்டு போயிருக்கீங்க உங்களை ஒருத்தர் தேடிக்கிட்டு இருக்காங்க

   //யாரது என் குழந்தைக்கு// ஆ // கதை லிங்க் தந்ததுன்னு
   விரைவில் பெரிய டீச்சர்எங்கம்மா /நங் /' வைக்க போறாங்க .
   ஹா ஹா ஹா .(எங்க வீட்ல அம்புலி மாமா /சந்தமாமா /டிங்கில் /பஞ்ச தந்த்ரா காமிக்ஸ் ஒன்லி அலவ்ட் )
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க .

   Delete
  4. ஹையோ... என் வெத்தலைக்கும் ஆப்பு வச்சிட்டினமே.... இனி வெத்தலையை எப்பூடி நான் வாயில வைப்பேன்:)))..

   ஆ.......மை முட்டையா? கடவுளே நான் வரல்ல இந்த விஷ விளையாட்டுக்கு... இப்போ துரத்தினால் என்னால ஓடவும் முடியாது:)), றீச்சர் வேற ஜிம்முக்கெல்லாம் போய், ஸ்ரெடியா இருக்கிறாவாம்.. வேகமா ஓட வேற பிரக்டிஸ் பண்ணுறாவாம்... மீ எஸ்ஸ்ஸ் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே...:)).

   Delete
  5. //ஹையோ... என் வெத்தலைக்கும் ஆப்பு வச்சிட்டினமே.... இனி வெத்தலையை எப்பூடி நான் வாயில வைப்பேன்:)))..//

   பாத்தீங்களா...இப்பவே நினைவு திரும்ப ஆரம்பிச்சிடுச்சி ..இதுதான் வைத்தியத்தின் மகிமையோ மகிமை ஹி...ஹி... :-))))

   Delete
  6. //..இதுதான் வைத்தியத்தின் மகிமையோ மகிமை ஹி...ஹி//

   இதுக்கப்புறமும் பூசுக்கு மூட் அவுட் ஆகும்?

   Delete
 9. அடடா அவர் முசல் பிள்ளையோ, நீங்க கரட் கதை சொல்லாட்டில் நாங்க பூஸ் என்றுதான் நினைச்சிருப்போம்... எப்படியாவது பிடிச்சிடுங்க.. பிடிச்சால் சொல்லுங்க.. நானும் வாறேன்.. தடவி விட ரொம்பப் பிடிக்கும் எனக்கு.. நான் முசலைச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  ReplyDelete
  Replies
  1. பூஸ் இவ்ளோ அமைதியா உக்காந்திருக்குமா ??????????

   Delete
  2. அதுக்கு முன்னால ஒரு கத்தியை காட்டுங்க அழவே ஆழம்பிச்சுடும் நானும் முசலைத்தன் சொன்னேன் ஹா..ஹா... :-))))

   Delete
 10. அந்த பச்சை இலையும் ரோசாவும் நீங்க செய்ததோ இல்ல ரெடிமேட்டோ அஞ்சு? சூஊஊஊஊஊப்பராக இருக்கு, அதை குளோசப்பில எடுத்துப்போட்டிருக்கலாம், அப்பத்தான் செய்முறை விளங்கும். அழகாக இருக்கு கார்ட்.

  ReplyDelete
  Replies
  1. அதிரா நான் செய்தது தான் ரோஸ் பூக்களும் இலைகளும்
   அந்த செய்முறை லிங்கும் அந்த வெப்சைட்ல இருக்கு
   நான் எப்பவும் இரவ்வில்தான் செய்வேன் என் கார்ட்சை நானே செய்யும்போது போட்டோ எடுக்க கடினம் .மயிலறகு செய்யும்போது கூட
   படம் எடுக்க ட்ரை செய்தேன் சரிவரல்ல

   Delete
 11. //இப்ப இன்னொரு பிரச்சினை இரவு நேரத்தில் ரெண்டு
  சிவப்புநிற குள்ள நரிகளும் எங்க தோட்டம் பக்கம் உலவுவதை
  பார்க்கிறோம் .பயமா இருக்கு . //

  இங்கும் எப்பவாவது Golf Club பக்கமிருந்து நரியார் ரோட்டால் போவது தெரியும், அவர் ஒண்ணும் பண்ண மாட்டாராம் சத்தம் கேட்டாலே துண்டைக் காணம் துணியைக் காணமென ஓட்டம் எடுப்பார்:))... பிறகென்ன பண்ண முடியும் அவரால எங்களை?:)).. இங்கத்தைய நரி எல்லாம் குட்டிதானே, பூஸைவிடக் கொஞ்சம் பெரிசு அவ்ளோதான்.

  மான், மரையும் சமர் டைம் வெளியே வருவினம்... ராத்திரி என் கனவிலும் ஒரு “மரை” வரக் கண்டேன்... ராசிப்பலன் பார்க்கோணும்:)).

  ReplyDelete
 12. க்ரோஷா
  தையல் செய்முறை இருக்கு//

  இதுபோல இன்னொரு தையல் இருக்கே அஞ்சு, நெட் போல துணியில சதுரம் சதுரமாக தைப்பது.... பெயர் வாயில வருகுதில்லை, அந்தப் பற்றன் புக் பார்த்திட்டு ஆசையில துணிவாங்கி வந்து 6 மாதமாகப்போகுது இன்னும் ஒரு தையல்கூட ஆரம்பிக்கவில்லை.... இப்படியே அழுதழுது 2012 டிஷம்பரைத் தொட்டால் சரி... அரோகரா... அரோகராத்தான்:)).

  ReplyDelete
  Replies
  1. //க்ரோஷா
   தையல் செய்முறை இருக்கு//

   யாரது நிரோஷாவா..??? யாரது புதுசா..??? :-)))))

   Delete
  2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன், சொன்னால் வம்பாகிடும்:))

   Delete
  3. //யாரது நிரோஷாவா..??? யாரது புதுசா..??? :-)))))///

   ராதிகா தொங்கச்சி ராம்கி கூட நடிப்பாங்களே அவுங்க தான் ஆஅவ்வ்வ்வ்

   Delete
 13. அதே அதே... எங்கிட்டயேவா:)).

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ரர்ர்ர்ர்cross stitchஅதில ஒரு மியாவ் படம் பார்த்தேன் ஹா ஹா

   Delete
 14. அருமையான கைவேலைப் பாடுகள்
  படங்களும் பதிவும் மிக மிக அருமை
  பகிர்வுக்கு நனறி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

   Delete
 15. ஏஞ்சல் உங்க கை வேலைக்கு சூப்பர் சொல்லி அலுத்துப்போச்சுப்பா.இலண்டனில கோழியாரை இப்பிடி சுதந்திரமா உலாவ விட்டுருக்காங்களே.அதிசயமான சந்தோஷம்.அதுசரி....யாரைப் பிடிக்க கரட்வலை !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா .கேரட் வலை அந்த கொழு மொழு முயலாரை பிடிக்கத்தான்.கோழி அக்காங்க அழகா சுற்றுவதை பார்த்தா வீட்டு நினைவு .எந்த ஊர் நாடா இருந்தாலும் கோழி குணம் அதே ஒன்றன் பின் ஒன்றாக வாக் போறாங்க

   Delete
 16. கிரீட்டிங்க் கார்ட் பிரமாதமாக இருக்கு.கட்டிங் மிஷின் இல்லாமையே மிக அழகாக கட் பண்ணியிருக்கீங்க..

  படித்ததில் பிடித்தது அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமா .அந்த மெஷின் விலையும் அதிகம் நான் கார்ட்ஸ் விற்பனை செய்வது என்றால் வாங்கி பயன்படுத்தலாம் ஆனா மெஷினில் வெட்டினால் மிக இலகுவாக அழகா வரும்

   Delete
 17. இன்றைய கதம்பம் அருமை ஏஞ்சலின்...

  கத்தி இல்லாமலேயே அழகிய ஜன்னல்....ஸ்வீட்...

  முட்டை விலை ஜாஸ்தியானதால் லண்டனிலும் எல்லாரும் கோழி வளர்க்கிறாங்களா?

  விடியல் உன்கையில் ....நம்பிக்கை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரெவரி .
   முட்டை இங்கே ரொம்ப சீப் .சிலநேரம் அறுபது முட்டை இரண்டு பவுண்ட்சுக்கு கூட கிடைக்கும் (caged )

   Delete
 18. கார்ட்ஸை பத்தி கமெண்ட் இல்லைன்னு நினைக்காதீங்க ...வழக்கம் போல A + :-)))

  ReplyDelete
  Replies
  1. //கார்ட்ஸை பத்தி கமெண்ட் இல்லைன்னு நினைக்காதீங்க ...வழக்கம் போல A + :-)))//

   அஞ்சு நல்ல வேளை பச்சை பூவுக்கு குண்டக்க மண்டக்க டவுட் எதுவும் உங்க கார்ட் ல் வரலே :))

   Delete
  2. நிறைய இருக்கு ஃபார் யூன்னு இருப்பதால் பேசாம போறேன்... !!!:-)))

   Delete
 19. //சிவப்புநிற குள்ள நரிகளும் எங்க தோட்டம் பக்கம் உலவுவதை
  பார்க்கிறோம் .பயமா இருக்கு .//

  உங்க கிட்டே எதுவும் ஐடியா கேட்க வந்திருக்கும் ஹா..ஹா.. :-))

  ReplyDelete
 20. //
  ஒருவருக்கு மிகவும் பயன்படும் ;))))))))))))))//

  ஆளை கானோமே ஒரு வேளை டெப்ளட் வேலை செய்யுதோ ஹி..ஹி... :-)))

  ReplyDelete
  Replies
  1. // டெப்ளட்// அடடா என்ன ஒரு தமிழாக்கம்.. குப்புறக்கிடந்து கிட்னியை யூஸ் பண்ணித்தான் கண்டுபிடிச்சேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்:))

   Delete
  2. போகிற போக்கில நானும் ’தெனாலி’ஆகிடுவேன் போல ...அவ்வ்வ்வ்வ் :-)))

   Delete
 21. வாழ்த்து அட்டை மிகவும் அழகு! புதுமையாய் இருக்கிறது!
  சிகப்பு குள்ளநரியைப்பற்றிய செய்தி ஆச்சரியம்!!
  விடியலைப்பற்றிய வாசகம் அருமை!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா .இங்கே காடுகள் இயற்க்கை பகுதிகளை அழித்து வீடு கட்டுவதால் இந்த விலங்குகள் பாவம் இடமின்றி அலைகின்றன .நான் வந்த புதிதில் ஒரு சிவப்பு குள்ள நரியை பார்த்து பயந்து போனேன் ஆனா அதுக்குள்ள என்னை பார்த்து அது ஓடிடிச்சு

   Delete
  2. .//நான் வந்த புதிதில் ஒரு சிவப்பு குள்ள நரியை பார்த்து பயந்து போனேன் ஆனா அதுக்குள்ள என்னை பார்த்து அது ஓடிடிச்சு/

   அவ்வளவு டெரர்ரா angelin!!??

   Delete
  3. தெரியாம உண்மைய சொல்லி மாட்டிகிட்டேனே அவ்வ்வ்வ்

   Delete
 22. //ஒரு சிவப்பு குள்ள நரியை பார்த்து பயந்து போனேன் ஆனா அதுக்குள்ள என்னை பார்த்து அது ஓடிடிச்சு //

  இது யாரு புதுசா டெரரா இருக்கேன்னா ..ஹா..ஹா.. :-)))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா !! இப்படியா உண்மைய பிட்டு பிட்டு வைக்கிறது

   Delete
 23. விண்டோ கார்ட் அழகா இருக்கு ஏஞ்சல் அக்கா! நானும் இதுபோல லேட்டிஸ் வொர்க்-ல பூவில் ஃபில்லிங் தையல் தைச்சிருக்கேன். :) அழகா செய்திருக்கீங்க.

  முயல்,கோழின்னு ஒரே ப்ராணிகள்;) ஸ்பெஷல் பதிவா இருக்கே? சிவப்பு குள்ளநரி வேற வருதா?? அவ்வ்...நானும் ஒரு குட்டிக்கதை சொல்லிட்டுப் போறேன்.

  இந்த நியூ இயர் டைமில ஒரு நேஷனல் பார்க் காட்டுக்குள்ள ஒரு நரியைப் பார்த்தோம்,ரோட்டோரமா கூலா நின்னு போட்டோவுக்கு போஸ் தந்தது(நரியின் கண்ணைப் பார்த்தா பயமா இருந்தது!).காரில் கண்ணாடிய இறக்கிட்டு தெளிவா(!) போட்டோ எடுப்போம்னு நான் தைரியமா கண்ணாடியா இறக்கினேன்.

  காருக்குள்ளே இருந்த எல்லாரும் டெரர் ஆகி கத்த ஆரம்பிச்சாங்க,ஆனாலும் நான் தகிரியமா ஒரு போட்டோ புடிச்சேன்.டென்ஷனான நரி காருக்கு பக்கத்தில் வர ஆரம்பிச்சது.அந்நேரம் முன்னால பின்னால கார்களும் எதுவும் இல்லை, எங்காத்துக்காரர் காரை நகர்த்தாம உட்கார்ந்திருக்கார்..நரி வருது,காரை எடுங்கன்னு கத்தினாலும் அசையலை! நீதானே ஆசைப்பட்டே,நிதானமா போட்டோ எடுன்னு கடுப்பேத்தறார் மை லாற்ட்!! ;))

  எல்லாருமா கத்தினதும் ஒருவழியா காரை ஸ்டார்ட் பண்ணார்,ஒரே ஓட்டமா ஓடியாந்துட்டோம். இங்கே நரிகள்,கரடி எல்லாம் அப்பப்ப சாதுவா போட்டோவுக்கும் போஸ் குடுக்கும்,ஆனா தாவி வந்து கார் கண்ணாடியவும் ஒடைக்கும்,ரிஸ்க் எடுக்காதீங்கன்னு கூட வந்த நண்பர் எச்சரிக்கை பண்ணினார் அப்புறமா.....

  கதையும் முடிந்தது,கத்தரிக்கா காய்ச்சது..டாட்டா,பை! ஹேவ் எ நைஸ் வீகென்ட்! :) BTW, "For You!!" கார்ட் யாருக்காக பண்ணினீங்கன்னு கடேசி வரை சொல்லவேஇல்லையே???? ;)

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி .நீடில் வர்க்ல நீங்க க்வீன் ஆயிற்றே .எனக்கு கொஞ்சம் ஊசின்னா பயம் .அடுத்த போஸ்ட்ல நரி படம் போடுங்க,
   கரடி கூட வருமா ஆஆ !! .உங்களுக்கும் ஹாப்பி வீகென்ட்.பூசை எங்கியும் காணோம் .?????
   கார்ட் ...கார்ட் ,,,,ரெட் ரோசெஸ் யாருக்கு தருவாங்க ???
   அதே அதே அதே

   Delete
  2. நேற்று கிராப்ட் கடை தேடினேன், அந்த மோலில் இல்லை, வெளிலதான் இருக்குதுபோல, நல்ல மழை அதனால பேசாமல் விட்டிட்டேன்... பார்ப்போம்.

   Delete
  3. //நீதானே ஆசைப்பட்டே,நிதானமா போட்டோ எடுன்னு கடுப்பேத்தறார் மை லாற்ட்!! ;)) // ஆகா ஒரு முடிவோடதான் கெளம்பி இருக்காங்க போல இருக்கு மிஸ்டர் மகி ?? இருந்தாலும் உங்க ஆர்வக்கொளாருக்கு ஒரு அளவே இல்லே . அஞ்சு சொன்னது போல சீக்கிரம் நரியார் பதிவ போடுங்க

   Delete
 24. விண்டோவுடன் கூடிய வாழ்த்து அட்டை அழகா இருக்கு ஏஞ்சலின்! செய்த கைகளுக்கு வாழ்த்துக்கள் :)

  //இரவு நேரத்தில் ரெண்டு சிவப்புநிற குள்ள நரிகளும் எங்க தோட்டம் பக்கம் உலவுவதை பார்க்கிறோம்//

  நரி என்றாலே தந்திரமாகதான் வேலை செய்யும். லண்டனில் பயந்தாங்கொள்ளிபோல கண்டதும் ஓடி, ஓடிப் போகும் ஒரு வழக்கமான நரி, வென்டிலேட்டர் வழியே ஒருநாள் வீட்டுக்குள் இறங்கி தூங்கிக் கொண்டிருந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை தூக்கிவிட்டு சென்றுவிட்டதாம் :(( வெகுநேரம் கழித்து அந்த தாய் கதறியடித்து தேடியபிறகே நரி தூக்கிச் சென்றதை கண்டுபிடித்துள்ளனர்! :(

  ReplyDelete
  Replies
  1. வாங்க அஸ்மா .ஆமாம்பா .லண்டன்ல இரட்டை குழந்தைகளை கடிச்சும் போட்டிருக்குஅப்போ பெற்றோர் டிவி பார்த்திட்டு இருந்திருக்காங்க .
   இவை கார்பேஜ் பின் குப்பை கிளற வந்த நரிகள் வீட்டு கதவு திறந்திருந்ததால் அந்த ஏரியாவில் அடிக்கடி அட்டகாசம் செய்கின்றன .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 25. Wow!,Superbly done well crafted roses Dear.Thanksfor sharig this Window Quilled Card.

  ReplyDelete
  Replies
  1. Thanks a bunch for your lovely comments Christy .

   Delete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. படித்ததில் பிடித்ததும் காட்டும் மிக அருமை. அதில் யன்னல் மிக அழகு. அது எனக்கும் பிடிக்கும். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா

   Delete
 28. இனிய மாலை வணக்கம் ஏஞ்சலின் அக்கா,
  நல்லா இருக்கிறீங்களா?
  இதோ படிச்சிட்டு வாரேன்

  ReplyDelete
  Replies
  1. இந்த ரீப்ளே வசதி எப்படி ஒர்க் பண்ணுது என்று டெஸ்ட்டிங் பண்ணிப் பார்க்கிறேன்.

   அவ்வ்வ்வ்வ்

   Delete
  2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிரூபன்

   Delete
  3. ரிப்ளைக்கே ரிப்ளையா ஹா ஹா .இந்த நியூ டைப் கமென்ட் பாக்ஸ் தானா இங்கே வந்து உக்காந்திருக்கு .அப்படியே விட்டுட்டேன்

   Delete
 29. அன்ஜெலின் கமெராவும் கையுமாகவே சுத்துகிறியளோ? படங்களும் கருத்துக்களும் நன்றாகவே இருக்கு.

  ReplyDelete
 30. lattice window கட்டிங் சூப்பரா இருக்கு அக்கா.

  ReplyDelete
 31. உங்க கவலை நியாயமானதுதான் நரியளை ஒரேயடியாக விரட்டுங்கோ. எங்க வீட்டிலை பால்கனியில குளிர்காலத்தில் பாவமே குருவிகல் என்று தானியங்கள் நிறைத்து தொங்க விட்டிருக்கிறன். சில நாட்களுக்கு முன் என் கண்புன்னாடியே சாப்பிட வந்த ஒரு குருவியை பக்கத்துவீட்டு பூனை பிடித்துக்கொண்டு ஓடிவிட்டது. ரொம்ப கவலையாகிவிட்டது. இப்போ பூனைக்கு எட்டாமல் மேலும் உயரமாக தொங்கவிட்டிருக்கிறன். ஏனோ தெரியவில்லை இப்பொழுது ஒரு குருவிகளும் வருவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்பலத்தார் .எங்க வீட்டு பக்கமும் ரெண்டு பூனைகள் ரொம்ப அட்டகாசம் .birdfeeder wooden house மேலேயே தான் வந்து உக்காரும்

   Delete
 32. இரவின் மடியில் சாய்ந்து கொண்டு விடியலுக்காக
  காத்திருப்பதை விட இரவின் கைபிடித்து நடைப்பயணம்-
  செய்து பார் விடியல் உனக்காக வரவேற்பு கம்பளம்
  விரித்து காத்திருக்கும். //

  ஆகா..இந்த தத்துவம் சூப்பரா இருக்கிறதே.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் மிகவும் பிடித்துப்போனது .நன்றி நிரூபன்

   Delete