அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/20/12

புத்தாண்டு தீர்மானங்கள் ..............


புத்தாண்டு தீர்மானங்கள் .:  


எனும் தலைப்பில் என்னை தொடர் பதிவெழுத 
சகோதரர் ரெவரி அழைத்திருந்தார் .
இதோ என் தீர்மானங்கள் 
                                                                        


10,  சொல்ல வேண்டிய நேரத்தில் /கோபம்கொள்ள 
        வேண்டிய நேரத்தில் ரௌத்திரம்   பழக வேண்டிய 
       இடத்தில் கருத்துக்களை தைரியமாக சொல்ல 
       வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன் .
        
       (மீன் அரசியல்ல இறங்கபோகுது )
9,    வயலின் கிளாஸ் அல்லது பியானோ கிளாஸ் 
        சேரணும்.
         (சனிக்கிழமை சமையல் வேலையில் இருந்து 
          தப்பிக்க கண்டுப்பிடிச்ச  வழி )


                                                                                                         


8,     பரணில்  தூங்குகிற(  LOFT இல் )       எக்சர்சைஸ் 
        மெஷினை எடுத்து அசெம்பிள் செய்து ...............
        இருங்க கற்பனை குதிரையை ......அவ்ளோ தூரம் ஓட 
        விட கூடாது அது எனக்கில்லை பேப்பர்லபோட்டு 
        விற்கனும்.
7,   ஒரு நாளைக்கு எப்படியாவது ஐந்து கப் கருப்பட்டி காப்பி 
       குடிக்கிறேன் .என் அப்பாவிடம் இருந்து தொற்றிக்கொண்ட 
       இனிய கெட்ட பழக்கம் ..இனி இரண்டு கோப்பை மட்டும் 
       குடிக்க முயற்சி செய்கிறேன் .
6,    இப்பெல்லாம்  ரொம்பவே அதிகம் அசைவம் 
       சமைக்கிறேன் இனி சமைக்கவே கூடாது .
       சைவம் மட்டும் என்று அதிரடி நடவடிக்கை 
       எடுத்துவிட்டேன்  .


       ஏன் ஏன் ஏன் இந்த கொலவெறின்னு ஒரு ஜீவன் 
       கத்துவது கத்துவது கேட்க்குமே .............
      அவர் மிஸ்டர் ஏஞ்சல் தான் 
       நான் இனிப்பு மற்றும் அசைவம் உண்பதில்லை
       ஹா ஹா ஹா

5,     என் மகனுக்கு பெண் பார்க்கிறேன் சரிவர  
        மாட்டேங்குது 
        
        இதோ மாப்பிள்ளை படம் .சகல அம்சம் பொருந்திய 
        பெண் இருந்தா சொல்லுங்க .
                                                                                 


                                                                                              
4,   எனது  பேராசை எப்படியாவது சொந்தமா ஒரு 
      சமையல் குறிப்பு செய்முறை  விளக்கத்துடன் 
      எழுதணும் .
        
      (யாரும் இதுக்கு சிரிக்க கூடாது ஆமா )


3,  இந்த வருடமாவது துருக்கிக்கு ஒரு ட்ரிப் போய் 
      வரணும் .பல வருடமா யோசிக்கிறோம் .


2,    மகளுக்கு  தமிழ்  எழுத  படிக்க  கற்று  கொடுக்கணும் .


1,   இந்த தீர்மானம் எதையாவது செய்ய வேண்டும் என
       நினைத்தால் சாக்கு போக்கு சொல்லாமல் காலம் 
      கடத்தாமல் உடனே செய்து முடிக்கணும் .
        
          (அதாவது நான் கைவினை செய்கிறேன்
         பேர்வழி என்று ஒரு மூட்டை JUNK சேர்த்து 
          வைத்திருக்கேன் அதையெல்லாம் முதலில் 
         வீட்டை விட்டு வெளியேற்றணும் )


          
யாரும் ஓடாதீங்க குறிப்பா 
கிரிஜா /ஜெய் /மியாவ் அதிரா /வானதி /மகி 
உங்க அனைவரையும் இந்த தொடரை தொடருமாறு 
அன்போடு மற்றும் பெருங்கம்போடு கேட்டுக்கொள்கிறேன் .
முடிந்தால் பிப்ரவரிக்குள் எழுதுங்க இல்லாவிடில் 
2013 ஜனவரிக்கு எழுதுங்க .